Jump to content

மாதகல் கோணாவளை: மக்கள் எதிர்ப்பால் நிலஅளவை பணி கைவிடப்பட்டது


Recommended Posts

60(22)(1).JPG-எம்.றொசாந்த்

கடற்படை முகாம் அமைப்பதற்காக மாதகல் கோணாவளை  (ஜே - 150) பகுதியிலுள்ள 4 ஏக்கர் காணிகளை பொலிஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையொன்று உருவாகியது. 

மக்களின் கடும் எதிர்ப்பால் நிலஅளவையாளர்கள் அளவிடும் பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

மாதகல், கீரிமலை, சேந்தான்குளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் கடற்படை முகாம் அமைக்கும் நோக்கில் பொலிஸ் பாதுகாப்புடன் காணி அளவீடு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்தின், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், உறுப்பினர்கள் கந்தை சர்வேஸ்வரன், பாலச்சந்திரன் கஜதீபன் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் பொதுமக்களுடன் அவ்விடத்திற்கு சென்றிருந்தனர்.

கோணாவளை பகுதிக்கு நிளஅளவையாளர்கள் காணி அளவீடு செய்வதற்காக வருகை தந்திருந்த போது, பொதுமக்கள் நிலஅளவையாளர்களது நிலஅளவை உபகரணங்கள் அடங்கிய வாகனத்தை சுற்றிவளைத்து நிலஅளவை மேற்கொள்வதை தடுத்தனர்.

இதனையடுத்து, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியது. அவ்விடத்தில் 100 இற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர். 

பொதுமக்களுக்கு சொந்தமான மேற்படி காணியானது இராஜராஜேஸ்வரி கிராமிய மீனவ சங்கத்திற்கு நன்கொடையாக பொதுமக்களால் வழங்கப்பட்ட காணியாகும். அக்காணியில் மீன்வாடியொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், 43 மீனவர்களின் படகுகள் அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காணிகள் சுவீகரிக்கப்பட்டால் தங்களின் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்படையும் என பொதுமக்கள் கூறினார்கள்.

இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் கருத்துக் கூறுகையில், 

நிலஅளவை மேற்கொள்ளும் நிலஅளவையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நிலஅளவையாளர் திணைக்களத்தினால் தங்களிடம் கோரப்பட்டதாகவும், அதற்கிணங்க நிலஅளவையாளர்களின் பாதுகாப்புக்காக தாங்கள் அங்கு சென்றதாக கூறினார்கள்.

அத்துடன், அரச அதிகாரிகள் அவர்களது சொத்துக்களை சேதம் விளைவிப்பதை தடுக்கும் பொருட்டே தாங்கள் பாதுகாப்பிற்கு சென்றதாக கூறினார்கள். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/127594-2014-09-19-06-02-01.html

 

maatakal%20545652632.jpg

 

மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் தனியார் காணியை பொலிஸாரின் உதவியுடன் அளவிட வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பால் அந்தப் பணிகளை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.
 
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. மாதகல் பகுதியில் தனியார் காணியில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் இயங்கி வந்தது. இந்த இடத்திலேயே 40 இற்கும் மேற்பட்ட மீன் பிடிப் படகுகள் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்த நிலையில் குறித்த காணியை கடற்படையினருக்காக சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று அளவீட்டுப் பணிகளுக்காக அங்கு வந்திருந்தனர்.
 
இதை அறிந்து அங்கு சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறிதரன், வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், க.சர்வேஸ்வரன் மற்றும் பிரதேச உறுப்பினர்கள் ஆகியோர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
 
நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுக்குத் துணையாக பெருமளவான பொலிஸாரும் கடற்படையினரும் அங்கு பிரச்சன்னமாகியிருந்தனர். எனினும் மக்கள் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பால் இன்று அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டன
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.