Jump to content

மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு - தெலுங்கு கவிதையின் தமிழாக்கம்


Recommended Posts

how_CI.jpg

மாட்டுக்கறி எங்கள் பண்பாடு

மாட்டுக்கறி - எங்களது வாழும் பசுமை

வாழ்க்கையின் பன்முகம்

எங்கள் ஆன்மாவின் உயிர்மூச்சு

"மாட்டுக் கறி உண்ணாதீர்கள்"

நான் உன்னை கேட்கிறேன் - "எப்படி உண்ணாமல் இருப்பது?"

நீ யார் எனக்கு அறிவுரை கூற, எங்கிருந்து வந்தவன்?

எனக்கும் உனக்கும் என்ன உறவு?

நான் கேட்கிறேன்.

இன்று வரைக்கும்

நீ ஒரு ஜோடி காளை மாடுளை வளர்த்திருப்பாயா?

ஒரு ஜோடி ஆடுகளையாவது?

ஒரிரண்டு எருமைகளை?

அவைகளை மேய்த்த அனுபவமுண்டா?

குறைந்தபட்சம் கோழியாவது வளர்த்ததுண்டா?

இவைகளுடன் ஆற்றில் இறங்கி

அவற்றை தேய்த்துக் குளிப்பாட்டியதுண்டா?

காளையின் காதை அறுத்து துளையிட்டதுண்டா?

இல்லை, அவற்றின் பற்களைப் பிடித்து பார்த்திருக்காயா?

அவற்றுக்கு பல்வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

அவற்றின் கால் குளம்புகள் புண்ணானால்?

உண்மையில் உனக்கு என்னதான் தெரியும்?

"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்வதை தவிர?

பாலூட்டும் தனது மகளுக்கு, பிள்ளைப் பெற்று

கொஞ்சநாட்கள் கூட ஆகாத அவளுக்கு

எப்படியாவது

நன்கு பதப்பத்தப்பட்ட மாட்டிறைச்சித் துண்டுகளை

சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று

கவலையுடன் அலைகிறாள் யெல்லம்மா.

மாட்டின் ஈறல் சுரக்கும் சாறு - அது லேசில் கிடைக்காது

அதைப் பெற மாலா செட்டம்மாவின் கூரை பலகை

மாடிகா எல்லம்மாவின் எறவானம்

என்று வீடுவீடாகச் தேடிச் செல்வாள்.

குழந்தையின் வயிற்று கடுப்பைத் தணிக்க

பெரியவர்களின் கைகால் வலியை போக்க

மாட்டீறல் சுரக்கும் கடுஞ்சாற்றையே

அவர்கள் நம்பி இருப்பர்.

அப்படிப்பட்டவர்களைப் பார்த்து

"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்ல

உனக்கு எத்தனை துணிச்சல்?

ஜாக்கிரதை - அவர்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்.

ஓடு, அவர்கள் வருவதற்குள்...

மாலா மக்களும் மாடிகா மக்களும்

மாட்டுக் கறித் உண்பவர்கள் மட்டுமல்ல, தம்பி.

மண்ணை உழுவதற்காக

காடுகளை பராமரிப்பவர்கள்

எருமைகளை, ஏர் ஒட்டிச் செல்லும் எருதுகளை 

பழக்குபவர்கள்

யுகயுமாக அவர்கள் இந்த பசும்வயல்களை உழுதுள்ளனர்

தலைமுறை தலைமுறையாக கன்றுகளை வளர்த்து வந்துள்ளனர்.

எமது மாட்டுச் சந்தைகள் - அவற்றின் பண்பாடு

பத்து மைல்களுக்கு ஒரு சந்தை

இந்த தக்காணம் முழுக்கவும்

தெலுங்கானா, ஆந்திரம், மகராட்டிரம், கர்நாடகம்

மலநாடு, மங்களூரு, சித்தூரு, நெல்லூரு,

ஓங்கோளு, அவுரங்காபாத் -

போய்ப் நின்று பார் -

கண்ணுக்கு எட்டும் திசைகளிசெல்லாம் சந்தைகள்

பசுமாடுகள், கன்றுகள், காளைகள், எருதுகள்

அமெரிக்க திரைப்படங்கள் கொண்டாடும்

மாடு பிடிக்கும் குதிரை வீரர்களை உலகமறியும் -

ஆனால் இந்தச் சந்தைகளை?

அவற்றுக்காக வேர்க்கவிறுவிறுக்க உழைப்பவர்களை?

ஓங்கோளு காளைகள், தீட்டிவிட்ட கொம்புகளைக் கொண்ட எருதுகள்

பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த கொம்புளுடைய மாடுகள்

தக்கணத்துக்குப் பெருமைச் சேர்க்கும் பன்னிரண்டு அடி காளைகள்

இவற்றை பற்றியெல்லாம் உனக்குத் தெரியுமா?

நாங்கள் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளை பிறர் ஓட்டிச் சென்றது,

வளர்த்த கைகளிலிருந்து மாடுகள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட சம்பவங்கள் -

இவை பற்றியெல்லாம் தெரியுமா, தெரியாதா?

அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை,

எருது பூட்டிய வண்டிகள் போய்

குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகள் வந்த நாளை

எங்களால் மறக்க முடியுமா என்ன?

பசுக்களை, காளைகளை

நாங்கள் காடு, கரைகளில் ஓட்டிச் செல்வோம்

மண்ணை அவை உழுது போட வேண்டுமானால்

உணவு வேண்டுமே -

எங்களுக்கு இதைச் செய்ய தெரியும் -

ஒன்றை மறந்துவிடாதே

மண்ணை உழுவதற்கே மாடுகளை வளர்க்கிறோம்.

மண்ணை விட்டு, மந்தைவெளியை விட்டு நீங்கியும்

மாட்டுக் கறித் தின்னும் கூட்டம் என்று எங்களை ஏசுகிறாய்-

பழைய பாட்டையேத் திரும்ப திரும்ப பாடுகிறாய்

உனது ஊத்தைபற்களைக் காட்டி காட்டி.

இப்படி அங்கலாய்க்கும் நீ, நீ என்னதான் செய்கிறாய்?

கோமாதா என்று கும்புடுகிறாய்

பாலை கறந்து கறந்து பலகாரம் செய்கிறாய்.

நாங்கள் பசுவை கறப்பதில்லை.

கோமாதா என்று வணங்குவதுமில்லை

கோமூத்திரத்தை குடிப்பதுமில்லை.

கன்றை கட்டி வைத்து

பசுவை கறக்கும் ஆட்கள் அல்ல நாங்கள்.

பசுவின் மடியில் கன்று - அது குடித்து

நன்றாக வளர வேண்டும்

மண்ணை உழுவதற்கு அதற்கு வலிமை தேவை

வேளாண்மை செழிக்க எங்களுடைய மாடுகள்

யானைகள் போல்

குன்றுகளாக

நிற்க வேண்டும்.

காளை ஈனும் பசுவை மதிப்பவர்கள் நாங்கள்

பச்சை புற்கட்டுகள், சோளத் தட்டு, அரிய புண்ணாக்கு

கன்று ஈன்ற பசுவுக்கு இவற்றை நாங்கள் அளிப்போம்

அதனை வேலை வாங்கமாட்டோம் -

பசுக்களை உன் வீட்டுக்கு கூட்டி வந்து

வாசலில் நிறுத்தி வித்தைக் காட்டி

பிழைப்பவர்கள் இல்லை நாங்கள்.

அவற்றை நன்றாக மேய்த்து வளர்ப்போம்

அவை நல்ல கன்றுகளை ஈன்றளிக்க,

மண் செழிக்க அவற்றை பராமரிப்போம்.

அவ்வப்போது நாங்கள் இளைபாறும் போது 

ஆனந்தமாக இருக்கையில் -

இந்த நாளை கொண்டாடினால் என்ன என்று

பணம் வசூல் செய்து

சந்தைக்கு செல்வோம்.

ஆரோக்கியமான, நல்ல பசுவை தேர்ந்தெடுத்து வருவோம்

அதை வெட்டி, கறியாக்கி பகிர்ந்துண்ண -

நாங்கள் விருந்துண்ணும்

அந்த மாலை வேளையில்

எங்கள் ஊரை

களிப்பின் வாடை குளிப்பாட்டும்.

தலைமகனுக்கு தரப்படும் மரியாதையும் பொறுப்பும்

எங்கள் வீட்டு எருதுகளுக்கும் - அவற்றுக்கு

பிடித்தமான பெயர்கள் சூட்டி மகிழ்வோம்

ராமகாரு, அர்ஜூனகாரு, தருமகாரு...

பசுக்கள், எருமைகள், கன்றுகள் - இவற்றுடன் குடும்பமாக வாழ்வோம்

அழகுப் பெயரிட்டு அழைப்போம் -

ரங்கசானி, தம்மரமோக, மல்லெச்செண்டு...

ஏன் மாடுகளுக்காக திருவிழா எடுப்போம் - யெரோன்கா

கேள்விபட்டதுண்டா?

தெரியுமா உனக்கு -

அந்த திருநாளில்

எங்களுடைய காளைகளை, எருதுகளை, பசுக்களை

தெளிந்த நீரோடைகளுக்கும் குளங்களுக்கும் ஓட்டிச் சென்று

தேய்த்து தேய்த்து குளிப்போட்டுவோம்.

ஆண் எருமைகளையும் பசுவின் கன்றுகளையும்தான்.

அவற்றின் வேறு வேறு வண்ணங்களுக்கும் நிறங்களுக்கும் ஏற்ப

கோலம் தீட்டி அழகு செய்வோம்

சாயம் தோய்த்த சணல்கயிற்களாலான

குஞ்சங்களை நெற்றிகளில் கட்டி

அவை அசைந்தாட பார்த்து மகிழ்வோம்.

மணிகள் அடுக்கிய மாலைகளை

அவற்றின் கழுத்துகளில் அணிவிப்போம்.

கம்பு, அரிசி, வெல்லம் என்று உணவளிப்போம்

பச்சை முட்டைகளையும் கள்ளையும் அவற்றின் வாய்களில் ஊற்றுவோம்.

ஊர் முழுக்க ஊர்வலமாக அழைத்துச் செல்வோம்.

நீ எப்போதும் பசுவை பற்றி மட்டும் பேசுகிறாய்.

உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

எருதுகளை பற்றி பேசுவதில்லை

அவை மண்ணை உழுவதைப் பற்றி பேசுவதில்லை

களி மண் குவியல்களை மிதித்து மிதித்து

எங்கள் வீட்டுச் சுவர்களை பூச தேவையான மண்ணை

எங்களுக்கு பதமாக ஆக்கித் தருவதைக் குறித்து பேசுவதில்லை.

ஒரு காலத்தில் கோட்டைகளை கட்ட தேவைப்படும் களிமண்ணைக்கூட

இவைதான் மிதித்தளித்ததாக வரலாறு உண்டு -

யார் தந்த அதிகாரத்தில் "மாட்டுக் கறி உண்ணாதே?" என்று கூறுகிறாய்?

"எருதுகளை கொல்லாதே" என்கிறாய்,

ஆனால் செத்த மாட்டை உண்ணச் செய்கிறாய்எ-

எங்களை தீண்டத்தகாதவர்கள் என்கிறாய்

நிலமற்றவராக வைத்திருக்கிறாய்

நீ செய்யத் தயங்கும் அழுக்கான வேலைகளை

எங்களைச் செய்ய சொல்கிறாய்

ஊர்த் தெருக்களில் விழுந்து கிடக்கும் செத்த மாடுகளை

அகற்றச் சொல்கிறாய்.

மாடுகன்றுகளை பராமரித்து

அளவாக அவற்றை கட்டி வளர்த்து

எருதையும் காளையையும் அம்மனுக்கு படையலிட்டு உண்பது

எங்கள் பண்பாடு

எங்களை தடுத்து நிறுத்த நீ யார்?

பௌத்தர்கள் பேசுவது போல நீ பேசப் பார்க்கிறாய்.

எங்களுக்கு என்ன பௌத்தம் தெரியாதா?

"மனிதர்களை கொல்லாதே" என்று சொன்னது பௌத்தம்.

நீயோ, "ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, வெங்காயம், பூண்டு உண்ணாதீர்கள்"

என்று சொல்லிக் கொண்டு மனிதர்களை வெட்டிச் சாய்க்கிறாய்.

விலங்குகளை பற்றி பேச நீ யார்?

மனிதம், நாகரிகம் தெரியாத நீ?

எருது, பசு, காளை, எருமை

எங்கள் குடும்பத்தினர்.

அவற்றின் தேவையறிந்து வளர்ப்போம்

வலியறிந்து மருந்தளிப்போம்

காயடித்து வேலைக்கு தயாராக்குவோம்.

போ, மாலா, மாடிகா மக்களிடம் போய்க் கற்றுக் கொள்ள

நாங்கள் நாகரிகம் உருவாக்கியவர்கள்

எமது தேசம் எங்கள் இருப்பிடங்களில்தான் பிறந்தது

என்பதை மறந்தவிட்டாயா?

சுற்றுசூழல், நாகரிகம் - எங்களுக்கு இயல்பானவை

போர், அழிவு - உனது பண்பாடு

பசுவுக்கும் உனக்குமான உறவு லேசானது -

பால், இனிப்பு, மரக்கறி உணவு, இவ்வளவுதான்.

ஆத்தாவை கும்பிடும் திருநாளில்

காளையையும் கிடாவையும் காணிக்கையாக செலுத்தி உண்போம்.

எங்கள் வழியில் குறுக்கிட்டால் ...

எங்களுடைய மைசம்மா, ஊரெட்டம்மா, போச்சம்மா, போலெரம்மா எல்லாம்

"ஏய், எனக்கு எருது வேண்டும்... காளை வேண்டும், கிடா வேண்டும்"

என்பார்கள்.

அவர்களுக்கு நேர்ந்து விடுவதற்காக இவற்றை பார்த்து பார்த்து வளர்ப்போம்

இது நாங்கள் செலுத்த வேண்டிய கடன்.

நீ யார் எங்களுக்கிடையே வருவதற்கு?

தன் பாதையில் குறுக்கிடுபவனை மைசம்மா சும்மா விடமாட்டாள்.

மாட்டுக்கறி எங்களது பண்பாடு. ஜாக்கிரதை.

-கோகு ஷியாமளா

(ஆந்திராவின் முக்கியமான தற்கால தலித் பெண் கவிஞர், சிறுகதையாசிரியர், பெண்ணிய ஆய்வாளர், செயற்பாட்டாளர். சாதி/எதிர்ப்பு, தெலுங்கானா போராட்டங்களில் தொடர்ந்து செயலாற்றி வருபவர்)

ஆங்கிலம் வழி தமிழில் - வ. கீதா

(இந்தக் கவிதை இடம் பெற்ற சஞ்சிகை: தற்கால அரசியல் செய்தி மடல், செப்டம்பர் 2012, பெண்ணிய படிப்புக்கான அன்வேஷி ஆய்வு மையம், ஹைதராபாத் வெளியீடு)

(இக்கவிதை "பூவுலகு" மார்ச் - ஏப்ரல் 2013 பெண்கள் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளது

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111668/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

மாட்டுக் கறி இன்னும் சாப்பிட முடியுதே சந்தோசப் பட்டுக்குங்க..இங்கே மிருக வதைனு சொல்லி பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஜல்லிகட்டையே தடை பண்ணியாச்சு ..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

1907836_1489302831328786_858747649152280

 

மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது?

மிருதுவான மாட்டிறைச்சியை சாப்பிட்டுள்ளீர்களா?

அது வேறொன்றும் இல்லை. பல நேரங்களில்
கர்பமுற்ற பசுக்களை வெட்டும் போது அதன்
வயிற்றில் முழுவதும் வளராத கன்றுக்குட்டியின்
கறி. அதை தான் நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.

மிளகாய் பொடி கண்ணில் தேய்கப்பட்டு;
மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை லாரியில்
நிற்க வைக்கப்பட்டு; நீரும் புல்லும்
மறுக்கப்பட்டு; கூட்ட நெரிசலில் கொம்புகள்
குத்தி கண் இழந்து; கால்கள் தளர்ந்து,
முறிவுற்று; பின்னர் லாரியில்
இருந்து இறக்கப்பட காலில்
கயிறு கட்டி இழுக்கப்பட்டு; மண்டையில்
சுத்தியல் கொண்டு பலமுறை அடிவாங்கி,
இரும்பு கம்பி மூளையில் செலுத்தப்பட்டு;
தலைகீழாக தொங்கவிடப்பட்டு;
உயிரோடு கழுத்தை அறுத்து... இதற்கு மேலும்
நான் சொல்ல வேண்டுமா?

மாட்டிறைச்சி உடல் சூட்டையும், உடல்
துர்நாற்றத்தையும் அதிகரிக்கும்.

உலகளவில் இதய சம்பந்தப்பட்ட
நோய்களுக்கு மாட்டிறைச்சியே பிரதான காரணமாக
கூறப்படுகிறது.

புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது.
எவ்வளவு வேக வைத்தாலும் மாட்டிறைச்சியிலுள்ள
Beef Tapeworm என்னும்
புழு பலநேரங்களில் அழிக்கப்படுவதில்லை.

அதே போல E coli என்னும் கிருமியின் புதிய
வகை (new toxic strain); dioxin எனப்படும்
நச்சுப்பொருள்; மனித மூளையை பாதிக்கும்
கிருமி என்று ஒரு பெரிய
பட்டியலே மாட்டிறைச்சியில் உண்டு.

இயற்கை, உணவிற்காக
ஒரு விலங்கை கொடுத்திருந்தால் அது கண்டிப்பாக
மனித
உடலுக்கு இவ்வளவு பாதிப்புகளை கொடுக்காது.

மாடுகளை வதைப்பவர்களை நாம் ஒன்றும்
செய்ய முடியாமல் போனாலும்,
மாட்டிறைச்சியை சாப்பிடுவதை தவிர்ப்பதின்
மூலம் சந்தையில் அதற்கான
வரவேற்பை குறைக்க முடியும்....

Link to comment
Share on other sites

1907836_1489302831328786_858747649152280

 

மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது?[/size]

மிருதுவான மாட்டிறைச்சியை சாப்பிட்டுள்ளீர்களா?[/size]

அது வேறொன்றும் இல்லை. பல நேரங்களில்[/size]

கர்பமுற்ற பசுக்களை வெட்டும் போது அதன்

வயிற்றில் முழுவதும் வளராத கன்றுக்குட்டியின்

கறி. அதை தான் நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.

மிளகாய் பொடி கண்ணில் தேய்கப்பட்டு;

மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை லாரியில்

நிற்க வைக்கப்பட்டு; நீரும் புல்லும்

மறுக்கப்பட்டு; கூட்ட நெரிசலில் கொம்புகள்

குத்தி கண் இழந்து; கால்கள் தளர்ந்து,

முறிவுற்று; பின்னர் லாரியில்

இருந்து இறக்கப்பட காலில்

கயிறு கட்டி இழுக்கப்பட்டு; மண்டையில்

சுத்தியல் கொண்டு பலமுறை அடிவாங்கி,

இரும்பு கம்பி மூளையில் செலுத்தப்பட்டு;

தலைகீழாக தொங்கவிடப்பட்டு;

உயிரோடு கழுத்தை அறுத்து... இதற்கு மேலும்

நான் சொல்ல வேண்டுமா?

மாட்டிறைச்சி உடல் சூட்டையும், உடல்

துர்நாற்றத்தையும் அதிகரிக்கும்.

உலகளவில் இதய சம்பந்தப்பட்ட

நோய்களுக்கு மாட்டிறைச்சியே பிரதான காரணமாக

கூறப்படுகிறது.

புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது.

எவ்வளவு வேக வைத்தாலும் மாட்டிறைச்சியிலுள்ள

Beef Tapeworm என்னும்

புழு பலநேரங்களில் அழிக்கப்படுவதில்லை.

அதே போல E coli என்னும் கிருமியின் புதிய

வகை (new toxic strain); dioxin எனப்படும்

நச்சுப்பொருள்; மனித மூளையை பாதிக்கும்

கிருமி என்று ஒரு பெரிய

பட்டியலே மாட்டிறைச்சியில் உண்டு.

இயற்கை, உணவிற்காக

ஒரு விலங்கை கொடுத்திருந்தால் அது கண்டிப்பாக

மனித

உடலுக்கு இவ்வளவு பாதிப்புகளை கொடுக்காது.

மாடுகளை வதைப்பவர்களை நாம் ஒன்றும்

செய்ய முடியாமல் போனாலும்,

மாட்டிறைச்சியை சாப்பிடுவதை தவிர்ப்பதின்

மூலம் சந்தையில் அதற்கான

வரவேற்பை குறைக்க முடியும்....[/size]

இவ்வாறு எழுதுபவர்களுக்காகத்தான் :மாட்டுக்கறி எங்கள் வாழ்வு என்பது பதிலாக எழுதப்பட்டுள்ளது:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.