Jump to content

பிரிட்டனிலிருந்து பிரியுமா ஸ்கொட்லாந்து? செப்டெம்பர் 18 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு


Athavan CH

Recommended Posts

6838map.jpg
 
பிரித்­தா­னிய ஐக்­கிய இராச்­சி­யத்­தி­லி­ருந்து ஸ்கொட்­லாந்து பிரிந்து செல்­லப்­போ­கி­றதா? உலக அரங்கில் தற்­போ­தைய மிகப்­பெ­ரிய கேள்­வி­களில் ஒன்று இது.
 
ஸ்கொட்­லாந்து பிரிந்து தனி நாடாக வேண்­டுமா? என்­பது தொடர்­பான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் எதிர்­வரும் 18 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஸ்கொட்­லாந்து மக்கள் வாக்­க­ளிக்­க­வுள்­ளனர். இதில் ஆம் என அதி­க­மானோர் வாக்­க­ளித்தால் இரு வரு­டங்­க­ளுக்குள் ஸ்கொட்­லாந்து சுதந்­திர தனி நாடா­கி­விடும்.
 
இங்­கி­லாந்து, ஸ்கொட்­லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்­லாந்து ஆகி­ய­ன­வற்றை இணைத்­துதான் ஐக்­கிய இராச்­சியம். முன்னர் அயர்­லாந்தும் பிரிட்­ட­னுடன் இணைந்­தி­ருந்­தது. ஆனால் 1922 ஆம் ஆண்டு அயர்­லாந்து சுதந்­திரம் பெற்று தனி நாடா­கி­யது. அயர்­லாந்து தீவின் வட­பி­ராந்­தி­ய­மான வட அயர்­லாந்து பிரிட்­ட­னுடன் இணைந்­துள்­ளது.
 
இந்த 4 பிராந்­தி­யங்­க­ளையும் இணைத்த சமஷ்டி நாடான ஐக்­கிய இராச்­சி­யத்தின் முழுப் பெயர் பெரிய பிரித்­தா­னியா மற்றும் வட அயர்­லாந்து ஐக்­கிய இராச்­சியம் (United Kingdom of Great Britain and Northern Ireland) என்­ப­தாகும்.
 
பிரித்­தா­னிய தீவின் வட­ப­கு­தி­யி­லுள்ள ஸ்கொட்­லாந்து சுமார் 78,387 சது­ர­கி­லோ­மீற்றர் பரப்­ப­ளவைக் கொண்­டது. சுமார் 5,327,700 மக்கள் ஸ்கொட்­லாந்தில் வசிக்­கின்­றனர்.
 
ஸ்கொட்­லாந்தும் தனி­யான அர­சாட்­சிக்­குட்­பட்ட நாடாக இருந்­தது. 1707 ஆம் ஆண்டு இங்­கி­லாந்­துடன் ஸ்கொட்­லாந்து இணைக்­கப்­பட்­டது.
அதன்­பின்­னரும் பல தனித்­து­வங்­களை ஸ்கொட்­லாந்து கொண்­டி­ருந்­தது. தனி­யான கல்­வி­மு­றைமை, தனி­யான நீதித்­துறை, சர்­வ­தேச போட்­டி­க­ளுக்­கான தனி­யான விளை­யாட்டு அணிகள் ஆகி­ய­வற்றை ஸ்கொட்­லாந்து கொண்­டுள்­ளது.
6838camaron.jpg
 
ஒட்­டு­மொத்த பெரிய பிரித்­தா­னி­யாவின் வளர்ச்­சியில் அந்­நாட்டின் பல பிராந்­தி­யங்­களைச் சேர்ந்த மக்­களும் பங்­க­ளிப்பு செய்­துள்­ளனர். ஸ்கொட்­லாந்தை சேர்ந்­த­வர்­களும் பிரிட்­டனின் உயர் பத­வி­களை வகித்­துள்­ளனர். 2007 ஜூன் முதல்  2010 மே மாதம் வரை பிரித்­தா­னிய பிர­த­ம­ராக பதவி வகித்த கோர்டன் பிர­வுணும் ஸ்கொட்­லாந்தை சேர்ந்­த­வர்தான்.
 
ஆனாலும்  பிரிட்­ட­னி­லி­ருந்து செல்­ல­வேண்டும் என்ற எண்ணம் ஸ்கொட்­லாந்து மக்­களின் ஒரு பகு­தி­யி­ன­ரி­டையே நீடித்து வந்­தது உண்மை. ஸ்கொட்­லாந்தின் முத­ல­மைச்­ச­ராக தற்­போது பதவி வகிக்கும் அலெக்ஸ் சல்மன்ட் இதில் முக்­கி­ய­மா­னவர்.
 
6838alex.jpg
 
அவரின் ஸ்கொட்­லாந்து தேசிய கட்சி 2011 ஆம் ஆண்டு ஸ்கொட்­லாந்து நாடா­ளு­மன்றத் தேர்தல் (ஸ்கொட்­லாந்­துக்கு என தனி­யான நாடா­ளு­மன்றம் உள்­ளது) பெரும்­பான்மை ஆச­னங்­களை வென்­றது. அதை­ய­டுத்து ஸ்கொட்­லாந்து பிரிந்து செல்­வ­தற்­கான  பிர­சா­ரங்கள் தீவி­ர­ம­டைந்­தன.
 
6838miliband.jpg
 
இது தொட்­பாக ஸ்கொட்­லாந்து மக்­க­ளிடம் சர்­வ­ஜன வாக்­கெ­டப்பு நடத்­தி தீர்வு காண்­பது என கடந்த வருடம் மார்ச் மாதம் ஸ்கொட்­லாந்து மாநில அர­சுக்கும் பிரித்­தா­னிய அர­சுக்கும் இடையில் இணக்­கப்­பாடு ஏற்­பட்­டது. இந்த வாக்­கெ­டுப்பை 2014.09.18 ஆம் திகதி நடத்­து­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
 
ஐக்­கிய இராச்­சி­யத்­தி­லி­ருந்து ஸ்கொட்­லாந்து பிரிந்து செல்ல வேண்­டுமா? வாக்குச் சீட்டில் கேட்­கப்­பட்­டி­ருக்கும்.
 
பிரித்­தா­னிய பிர­ஜைகள், 52 பொது­ந­ல­வாய நாடு­களின் பிர­ஜைகள் அல்­லது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் 27 நாடு­களைச் சேர்ந்த பிர­ஜை­களில் ஸ்கொட்­லாந்து பிராந்­தி­யத்தில் வசிப்­ப­வர்கள் இந்த வாக்­கெ­டுப்பில் பங்­கு­பற்­றலாம்.
இதன் பெறு­பே­றுகள் எதிர்­வரும் 19 ஆம் திகதி வெளி­யாகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
 
6838brown.jpg
இதில் "இல்லை" என அதா­வது பிரிட்­ட­னி­லி­ருந்து ஸ்கொட்­லாந்து பிரிந்து செல்ல வேண்­டாமென ஸ்கொட்­லாந்து வாக்­கா­ளர்­களில் பெரும்­பா­லானோர் வாக்­க­ளித்தால் ஐக்­கி­ய­ராச்­சி­யத்தில் அனைத்தும் தற்­போ­துள்­ள­படி நீடிக்கும். அதே­வேளை ஸ்கொட்­லாந்­துக்கு மேலும் அதி­கா­ரங்­களை பர­ல­வ­லாக்கம் செய்யும் திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும். 2016 ஆம் ஆண்டில் ஸ்கொட்­லாந்து தனி­யான வரு­மான வரி விகி­தங்­களை வகுக்­கவும் அனு­ம­திக்­கப்­படும்.
 
ஆனால், "ஆம்" என, அதா­வது ஸ்கொட்­லாந்து பிரிந்து செல்ல வேண்­டு­மென பெரும்­பா­லான ஸ்கொட்­லாந்து மக்கள் வாக்­க­ளித்தால், 2016 மார்ச் 24 ஆம் திகதி ஸ்கொட்­லாந்து புதிய சுதந்­திர நாடா­க­விடும்.
 
 ஆனால், பிரிட்­ட­னி­லி­ருந்து ஸ்கொட்­லாந்து பிரிந்து செல்­லக்­கூ­டாது என  ஸ்கொட்­லாந்து மக்­களை வாக்­க­ளிப்­ப­தற்கு தூண்­டு­வ­தற்­கான இறு­திக்­கட்ட பிர­சா­ரங்­களில் பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கெமரூன் எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட், முன்னாள் பிர­தமர் கோர்டன் பிரவுண் உட்பட ஐக்கிய இராச்சியத்துக்கு ஆதரவானோர் ஈடுபட்டுள்ளனர்.
 
இப்பிரசாரங்களுக்கு ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவரும் பிரித்தானிய முன்னாள் அமைச்சருமான அலிஸ்டயர் டார்லிங்  தலைமை வகிக்கிறார்.
 
ஒருகாலத்தில் உலகின் பல பாகங்களை தன்வசம் வைத்திருந்தது. எதிர்காலத்தில் பிரித்தானிய பெருநிலப்பரப்பிலிருந்தே ஒரு முக்கிய பிராந்தியம் தனி நாடாக பிரிந்துசென்றுவிடுமா என்பது எதிர்வரும் வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.      
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.