Jump to content

ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்! டக்ளஸின் கண்டுபிடிப்பு!!


Recommended Posts

யுத்த அவலத்தை தாங்கி நிற்கும் மக்களிடையெ தனது மலின அரசியலை முன்னெடுத்து வரும் அரச அமைச்சர் டக்ளஸ் இலங்கை அரசினால் சர்வதேச நிதி உதவியினில் வழங்கப்படும் ஒதுக்கீடுகளை தனது பிரச்சாரங்களிற்கே பயன்படுத்தி வருகின்றார்.அவ்வகையினில் விதவைகள் மற்றும் வறுமை கோட்டின் கீழ வாழ்பவர்களை கூட அவர் விட்டு வைப்பதில்லை.
 

daglus_meet.2.png

இதனிடைய அத்தகைய நிகழ்வொன்றினில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர் வடமாகாண அபிவிருத்திக்கு அரசும், ஆளுநரும் தடையாக இருப்பதாக கூட்டமைப்பினர் கூறிவருகின்றமை ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

கைதடியில் அமைந்துள்ள வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வடக்கு மாகாண முதலமைச்சர் உரையாற்றும் போது ஹெலியில் வருபவர்களால் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது என தெரிவித்திருந்ததாக யாழிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
 

daglus_meet.1.png

ஆனால் வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் சென்று வருவதற்கு இலவசமாக ஹெலியின் உதவியை கூட்டமைப்பினர் கேட்டிருந்ததையும் டக்ளஸ் அப்போது சுட்டிக்காட்டினார்.

வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயலாபத்திற்காக விஷமப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் இக்கூற்றானது ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில் நடவடிக்கைகளால் எமது கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் வளங்கள் அழிக்கப்படுவதையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் நான் எடுத்து விளக்கியிருந்த நிலையில் இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடனான கலந்துரையாடலின் போது இந்தியப் பிரதமர் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் அதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்திருந்தார்.ஆனால் அண்மையில் இந்தியப் பிரதமரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்திருந்தபோது அவர் கேட்டுக் கொண்டதற்கமைவாக கால அவகாசத்தை வழங்குவதாக கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதன்காரணமாக தற்போது வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான இந்திய மீனவர்களின் தொழிற்துறை நடவடிக்கைகளால் எமது மீனவர்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கால அவகாசம் வழங்கியதே முக்கிய காரணமென்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்; வாழ்வின் எழுச்சி திணைக்கள பணிப்பாளர் அனுர எஸ் வீரரத்ன, வாழ்வின் எழுச்சி திணைக்கள உதவி ஆணையாளர் மகேஸ்வரன், திட்ட இணைப்பாளர் ரகுநாதன், தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி அஞ்சலிதேவி, யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச இணைப்பாளர் சாள்ஸ், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் உள்ளிட்டோர்; உடனிருந்தனர். http://www.pathivu.com/news/33578/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்படி எத்தினை மேடையில ஆடிட்டார்.

 

ஆரம்பத்தில் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழ மேடை.

 

அப்புறம் இந்திய அமைதிப்படையுடன் இணைந்து வடக்குக்கிழக்கு மாகாண சபை மேடை.

 

அப்புறம் ஒட்டுக்குழு காட்டிக்கொடுப்பு மேடை.

 

பின்னர் சிங்கள அரசவையில் அமைச்சர் மேடை.

 

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி மேடை.

 

இப்போ.. 13 மேடை.

 

இவருக்கு அடிப்படையில் தன்ர குடும்ப வியாபாரம் செழித்தால் போதும். அவர் எந்த மேடையிலும் அதுக்காக ஏறுவார் ஆடுவார். கொள்கை கோட்பாடு ஒன்றும் அதுக்குக் கிடையாது. எல்லாரும் அப்படியா..??! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.