Jump to content

கொழும்பு செல்லக் காத்திருந்த பஸ் மீது நேற்றுமாலை கல்வீச்சு! - கண்ணாடிகள் நொருங்கி, பயணிகள் மூவர் காயம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கொழும்பு செல்லக் காத்திருந்த பஸ் மீது நேற்றுமாலை கல்வீச்சு! - கண்ணாடிகள் நொருங்கி, பயணிகள் மூவர் காயம். 
[Tuesday 2014-09-02 07:00]
jaffna-bus-stoned-200-news.jpg
யாழ். பண்ணை தனியார் பஸ் நிலையத்தில் இருந்து கொழும்பு செல்லத் தயாராக இருந்த பஸ் மீது நேற்றுமாலை கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில், பஸ்ஸின் கண்ணாடிகள் உடைந்ததுடன் அதில் பயணம் செய்வதற்காக ஏறியிருந்த பயணிகள் மூவரும் காயமடைந்தனர். அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கடந்த மூன்று நாள்களாக தொடரும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு இடையிலான தொழில் போட்டி காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
  
சனிக்கிழமை தனியார் பஸ் ஒன்றின் மீது இடம்பெற்ற கல்வீச்சில் பெண் ஒருவர் காயம் அடைந்தார். அத்துடன் பஸ் வண்டியின் கண்ணாடிகளும் உடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினமிரவு பண்ணையில் இருந்து புறப்பட இருந்த பஸ்களை மறித்து, கொழும்பு பயணத்தை மேற்க்கொள்ள விடாது தடை செய்யக்கோரி வழித்தட அனுமதிப்பத்திரமற்றவர்கள் பஸ்களை வீதியின் குறுக்கே நிறுத்தி போராட்டம் ஒன்றை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் - கொழும்பு பாதையில் சேவையில் ஈடுபட்ட நாற்பது பஸ்களுக்கு அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடாது என்ற அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
இதன் எதிரொலியாக நேற்று மாலையில் பண்ணையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த தனியார் பஸ் மீது கல்வீச்சு இடம்பெற்றுள்ளது இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மூவரை பொலிஸார் தேடி வருகின்றனர் எனவும் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
jaffna-bus-stoned-020914-seithy%20(1).jp
Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த பஸ் ஒன்று மீது பண்ணைப் பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை (01) இரவு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி;கப்பட்டுள்ளனர்.

வழித்தடங்கல் அனுமதிப்பத்திரம் பெற்ற பஸ் வண்டியொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ள முயன்ற போதே இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வழித்தடங்கல் அனுமதிப்பத்திரம் பெறாத பஸ் உரிமையாளர்கள் மூவரே இச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்றும் இம்மூவருக்கு வலை வீசப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்களைச் சேவையில் ஈடுபட அனுமதிக்கவில்லையென்ற கோபத்திலேயே அவர்கள் இந்த  கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ் - கொழும்பு வழித்தடங்கல் பஸ் சேவையில், வழித்தடங்கல் அனுமதியில்லாதவர்கள் சேவையில் ஈடுபடமுடியாது என யாழ்ப்பாணப் பொலிஸார் திங்கட்கிழமை (01) பகல் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/33574/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.