Jump to content

ஹக்கீம் நானா சொல்லுறத கேட்டால் ஆத்தில குளத்திலதான் விழவேணும்?: யாழ்ப்பாணத் தம்பி


Recommended Posts

hakeem_CI.jpg

அழுத்கம பேருவளையில நடந்த வன்முறைச் சம்பங்களில மூட்டப்பட்ட நெருப்பு ஆறேல்ல பாருங்கோ... அது இன்னும் புகையுது. புகையிற நெருப்பை நிரந்தரமா அனைக்க சரியான ஒரு நிலைப்பாடட்டயோ சரியான எதிர்வினையையோ ஆற்றாமல் அரசாங்கத்த அசளகரியப்படுத்த விரும்பேல்ல எண்டு சொன்ன, நீதி கெட்ட நாட்டின்ட நீதி அமைச்சர் ஹக்கீம் இப்ப முஸ்லீம் மக்கள தேர்தல் காலத்தில சூடேத்திறாருங்கோ...

ஊவாவில அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்கப் போறாராம்..

தேர்தலில வெண்டு எடுக்கிற வோட்டோட போய் பேரம் பேசி அரசாங்கத்தில ஒட்டீண்டு இருக்கிறதுக்கு பேர் அதிர்ச்சி வைத்தியமோ??? போங்க சார்... நல்ல நீதி அமைச்சர் தானுங்கோ நீங்கள்..

ஓ.. அப்ப கிழக்கில தேர்தல் காலத்தில முஸ்லீம் தேசியம் பேசீ அங்க உள்ள பெடி – பெட்டையள உசுப்பேத்தி வெண்டு போட்டு என்னங்கோ செய்தனியல்???? அப்பிடி ஒரு அதிர்ச்சி வைத்தியம் தான் குடுக்கப் போறியலோ?

இந்த நாட்டில இணைஞ்சு போராட வேண்டியவை தமிழர்களும் முஸ்லீம்களும். அதுக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நல்ல ஒரு சந்தர்ப்பமாய் வந்திச்சு. முதலமைச்சுப் பதவிய நீங்கள் எடுங்கோ எண்டு கூட்டமைப்பும் கேட்டது. அதுக்காக அவை முழுக்க முழுக்க சரியானவை எண்டு சேட்டிவிக்கட் கொடுக்க யாழ்ப்பாணத் தம்பி வரல்ல... ஆனா கிழக்கு தேர்தலில இப்படித்தான் அரசுக்கு எதிராய் முஸ்லீம் தேசியம் பேசிப் பேசி வெண்டு, வோட்டுப் போட்ட அப்பாவி சனங்களுக்கு தானே அதிர்ச்சி வைத்தியம் செஞ்சனீங்க...

நீதியே இல்லதா நாட்டின்ட  நீதி அமைச்சரா இருக்கிற சுகத்தை விட விரும்பாம, ஓம்... அழுத்கம சம்பத்தில அரசாங்கத்தை அசௌகரியப்படுத்த விரும்பேல்ல என்று சொல்லியதும் ஒரு வகை அதிர்ச்சி தானுங்கோ ஹக்கீம் சார்.....

ஒரு  அசளகரியப்படுத்தாத அமைச்சர்.... எண்டுதான் எங்கட தெருவில இருக்கிற ஒரு முஸ்லீம் தாத்தா சொல்லுறவர். பிறனென்ன? வீடு பத்தி எரியேக்குள்ளயும் நாங்கள் அரசை அசௌகரிளயப்படுத்தேல்ல. ஆனால் அவங்கள் எங்கட மக்கள நல்லா அசௌகரியப்படுத்தலாம் எண்டுற மாதிரித்தானே பேசினவையள். அமைச்சுப் பதவியத் துறந்துபோட்டு என்ன செய்யிறது? எண்டும் கேட்டவர்.

சரி....

இப்ப எதுக்கு இந்த வீராவேசம்?

எப்பிடித்தான் இருந்தாலும் சிங்கள அரசில அமைச்சராய் இருக்கப் போறியள் தானே...; ஊவாவில ஒரு முஸ்லீம வெண்டாலும் அவரைக் கொண்டு போய் ஆளும் சிங்களப் பேரினவாத அரசோட இருத்தத்தானே போறியள்? அதுக்கேன் உந்த வீர ஆவேசம்? இதக் கேட்டால் கடுப்பாகி.. நாங்கள் இந்த அரசாங்கத்தோட கடுமையாய் போராடுறம். முரண்பட்டுக் கொண்டிருக்கிறம். எண்டு பல்லவியை பாடத் தொடங்குவீங்க ஹக்கீம் நானா.

கொஞ்சம் உட்காந்து யோசிச்சு பாருங்க.. ஐ.நாவில நாங்கள் அரசாங்கத்துக்கு துணையிருப்பம் எண்டீங்க... போர்க்குற்றவாளியாக மகிந்தவ மின்சாரக் கதிரையில இருத்த விடாமட்டம் எண்டீங்க. ஊதை மட்டும் சொன்னாலும் பறவாயில்ல ஹக்கீம் சார்... அளுத்கமவுக்கு ஐ.நா போவம். முள்ளிவாய்க்கால் விசயத்தில மகிந்தவ காப்பாற்றுவம் எண்டு னெ;டெல்லாம் சொல்லி எத்தனை அதிர்ச்சி வைத்தியங்களை செங்சனியல்????

அதெல்லாம் சரி.. ஆனால் இன்னும் நீங்கள் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்கிறம், லேகியம் குடுக்கிறம் எண்டு சொல்லுறத கேட்டு நாங்கஎல்லாம் ஆத்தில குளத்தில விhழமல் இருக்கிறதே அதிர்ச்சிதான்...

பாத்து ஹக்கீம் நானா...

மகிந்த உங்களுக்கு எப்ப அதிர்ச்சி வைத்தியம குடுக்கப் போறாரோ???

யாழ்ப்பாணத் தம்பி

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111069/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.