Jump to content

வழுக்கை தலைமுடியா ? அமெரிக்காவில் தீர்வு வந்தாச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
head-baldn190814-150-healthy.jpg

தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவது ஆண்களை மிகவும் கவலை அடைய செய்கிறது. குறிப்பாக இளைஞர்களை அது பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. வழுக்கையை போக்க பல விதமான எண்ணைய்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தும் அதற்கு முழுயைமான தீர்வு காண முடியவில்லை. அனால் தற்போது வழுக்கை தலையில் முடி வளரக்கூடிய வகையில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் சென்டர் ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர். தலையில் வழுக்கை விழுதல் ஒரு நோயாகும்.

  

மயிர் காம்புகள் அழிவதால் இந்த வழுக்கை உருவாகின்றன. எனவே இது குறித்து சுண்டெலிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மயிர்க்காம்புகளை அழிக்கும் 'டி'செல்கள் கண்டறியப்பட்டன. அந்த செல்களை அழித்து புதிய தலைமுடிகள் வளர செய்யும் வகையில் மருந்து கண்டு பிடித்துள்ளனர். அதற்கு 'ஜாக்' என பெயரிட்டுள்ளனர். இந்த மருந்தை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் போதும். அந்த இடத்தில் 5 மாதத்தில் மீண்டும் முடி வளருகிறது. சோதனை முறையில் இது பலருக்கு முழுமையாக பலன் அளித்துள்ளது என ஆராய்ச்சி குழுவின் தலைவர் ரபேல் கிளைனெஸ் மற்றும் ஏஞ்சலா கிறிஸ்டியானோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=115240&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடம்பில் முடிகளே இருக்கக்கூடாது.அது அசிங்கம். இதுதான் இப்ப பாஷன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடி இழந்த கரடிகளிடம் சோதனை செய்தாலாவது பரவாயில்லை. முடியில்லாத சுன்டெலிகளில் சோதித்து என்னத்த...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் போனாப்பிறகு மருந்து வந்தென்ன விட்டென்ன

 

இதென்ன  கோதாரிக்கிடக்கு?

தலைமயிர் போனதைப்பற்றித்தானே  பேச்சு.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் போனாப்பிறகு மருந்து வந்தென்ன விட்டென்ன

 

சுத்திவளைச்சு எங்கை வாறியள் எண்டு சொன்னியளெண்டால் நாலுபேருக்கு நன்மை பயக்குமெல்லே  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட தலைக்கு மேல உள்ளதை சொன்னேன்.ஒளிவட்டம் போய் முழு நிலவே வந்தாச்சு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.