Jump to content

என்றும் அழியாத அச்சுக்கலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ல்யாணம் தொடங்கி கட்சி பொதுக்கூட்டம் வரை அனைத்திற்குமே பத்திரிக்கை அடிக்கும் கலாச்சாரம் உருவாகிவிட்டது...இன்றைய சூழலில் ஆப்செட் பிரிண்டர்ஸ்,டிஜிட்டல் பிரிண்டர்ஸின் அதிவேக வளர்ச்சியில் தன் முகவரியை இழந்து- வருகிறது பழைய  ட்ரடில் பிரிண்டிங் மிஷின் அச்சகங்கள் இன்னமும் அந்த முறையில் பிரிண்ட் செய்யும் சில அச்சகங்களை இன்னமும் நாம் காணலாம்.இதில் அச்சடிக்கப்படும் பத்திரிக்கைகள் காலத்தால் அழியாதவை காரணம் அதில் பயன்படுத்தப்படும் மை யின் தரம் அப்படிபட்டது...இப்போது உள்ள மையில் எல்லாம் அப்படிபட்ட தரம் இல்லை என கூற ஆரம்பித்தார் இன்னமும் பழைய அச்சுமுறையை பயன்படுத்தி புதுக்கோட்டையில் அச்சகம் நடத்தி வரும் அம்பாள் அச்சக உரிமையாளர் இராமையா.
 
press(1).jpgமுன்னாடியெல்லாம் நிறைய பிரிண்டிங் பிரஸ்கள் இந்த முறையை பின்பற்றிவந்தன. இப்போது இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. இந்த மிஷினை கண்டிபிடித்தவரின் பெயர் ஜான் கூட்டன் பெர்க். கட்சி போஸ்டர்ல ஆரம்பிச்சு காதுகுத்து வரைக்கும் எல்லாத்துக்குமே கம்போஸிங் பண்ணி பிரிண்ட் பண்ணுற இந்த முறைல தான் எல்லாரும் பத்திரிக்கை அடிச்சுகிட்டு இருந்தாங்க.ஆனா இப்போ கம்ப்யூட்டர் வந்ததுனால வீட்டுலயே டிசைன் பண்ணி பிரிண்டுக்கு மட்டும் பிரஸுக்கு வர்ற கலாச்சாரம் உருவாகிடுச்சு...
 
டிரிடில் மிஷின்ல பிரிண்ட் பண்ணனும்னா முதல்ல கம்போசிங் பண்ணனும் அது ஒண்ணும் அவ்வளவு சாதாரண காரியம் அல்ல...கம்போசிங் பண்ண எழுத்துக்கள் வேணும் எழுத்துக்கள் எல்லாம் ஈயத்தால் வார்க்கப்பட்டவை எல்லா எழுத்துக்களும் 0.918செ.மீ என்ற அளவில் இருக்கும். கணினியில் உள்ளது போல் இதற்கும் font size உள்ளது.6 முதல் 48 வரை பயன்படுத்தலாம், அதை நம்ம தேவைக்கு ஏற்ற மாதிரி அடுக்க வேண்டும்.எல்லாம் அடுக்கி முடிஞ்ச பிறகு அத மிஷினில் எழுத்திற்குனு இருக்குற இடத்தில் பொருத்தியதும் மிஷினின் மேல்புறம் உள்ள வட்ட வடிவ பகுதியில் மையை தடவ இதில் உள்ள உருளை போன்ற அமைப்பு மையை எடுத்து சென்று எழுத்தில் பூச அது அப்படியே நாம் வைக்கும் பேப்பரில் பிரிண்ட் ஆகும் என கூறி முடித்தார்.
 
கம்போசிங் பண்ண இப்ப ஆளே இல்லனு தான் சொல்லணும்.அது ரொம்ப கஷ்டமான வேலை கூட முதல்ல அந்த வேலை பாக்குறவருக்கு 247 எழுத்தும் எங்க இருக்குனு தெரிஞ்சிருக்கணும்னு சொல்ல ஆரம்பித்தார் அம்பாள் அச்சகத்தின் அச்சு கோப்பாளரான சண்முகம்.40 வருஷமா இந்த வேலை தான் பாக்குறேன்.எனக்கு எல்லா எழுத்தும் எங்க இருக்குனு கரெக்டா தெரியும் அப்படி தெரிஞ்சா தான் சீக்கிரமா வேலை முடியும்.முன்னாடி புதுக்கோட்டைல இந்த எழுத்துக்கள் தயாரிக்கறதுக்குனே ஒரு நிறுவனம் இருந்துச்சு இப்ப இந்த மிஷின பயன்படுத்துறவங்க எண்ணிக்கை குறைஞ்சு போனதால அந்த நிறுவனத்த மூடிட்டாங்க.எங்களுக்கே இப்ப எதாவது எழுத்து தேவைனா மதுரை,திருச்சிக்கு தான் போக வேண்டி இருக்கிறது.
 
என்ன தான் இன்னிக்கு 1000 பத்திரிக்கை ஒரு மணி நேரத்துல பிரிண்ட் பண்ணி கொடுத்தாலும்,இந்த மிஷின்ல பிரிண்ட் பண்ணுற மாதிரி வராது.உதாரணம் டூரிங் டாக்கிஸ் சினிமா போஸ்டர் பாத்திருப்பீங்க அது மழைல நனைஞ்சாலும் சாயம் போகாது.எழுத்துக்களும் அப்படியே இருக்கும்.அதெல்லாம் இந்த மாதிரி முறைல பிரிண்ட் பண்ணுறது தான் என்றார்.
 
press1.jpgpress2.jpg
 
20 வருஷத்துக்கு முன்னாடி ஐ.டி.ஐ ல இது ஒரு தொழில் படிப்பாவே இருந்துச்சு.1000 பத்திரிக்கை பிரிண்ட் பண்ண குறைஞ்சபட்சம் ஒரு நாள் ஆகும் ஏன்னா இதில் ஒவ்வோரு பிரிண்டுக்கும் பேப்பர நாம தான் மாத்தணும்.இதுக்கு ஆகுற செலவுனு பாத்தா 400ல இருந்து 500 வரைக்கும் ஆகும் அதுவும் அளவ பொருத்து.எவ்வளவு தான் தொழில்நுட்பம் மாறினாலும் இன்னமும் பழைய முறைல தான் பிரிண்ட் பண்ணனும்னு வர்றவங்க இருக்காங்க.அது மட்டுமில்லாம பெரிய போஸ்டர்,ஆபீஸ் லெட்ஜருக்கெல்லாம் இதுல பிரிண்ட் பண்ணுறது தான் சிறந்தது.ஏதோ நாங்க இருக்கற வரைக்கும் தான் இந்த முறை இருக்கும்...இன்றைய தலைமுறைக்கு இத கத்துக்குற ஆர்வம் இல்ல...அடுத்த தலைமுறைல இந்த கலையே அழிஞ்சு போனாலும் ஆச்சரிய படுறதுக்கில்லை.
 
 
ஆனாலும் இந்த முறையில் அச்சிடப்படும் போஸ்டர்களும் சரி, பத்திரிக்கைகளும் சரி அழியாத வகையில் அச்சிடப்படுவதால் உங்களது பதிவுகளை ஆழமாக பதிவு செய்வதில் இந்த அச்சுகலை என்றும் அழியாத ஒன்றாக உள்ளது. இது முழுக்க முழுக்க மனிதன் கட்டுப்பாட்டில் உள்ள இயந்திரம்...ஆனால் இன்றைக்கு மனிதன் முழுக்க இயந்திர கட்டுப்பாட்டுக்கு போய்விட்டான்.கணினி விசைபலகையின் விரல் பதிவால் தன் பதிவை இழந்து வருகிறது இந்த அச்சுக்கலை. சினிமா போஸ்டர்களிலும், கிராமத்து கல்யாண பத்திரிக்கை, திருவிழா அழைப்பிதழ்கள் போன்றவற்றில் இந்த அச்சுக்கலை இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
 
ச.ஸ்ரீராம்
படங்கள் பா.காளிமுத்து
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.