Jump to content

உக்ரேனிய பிரதமர் பதவி விலகல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
உக்கிரேனிய பிரதமர் அர்ஸெனி யட்ஸெனியுக் வியாழக்கிழமை பதவி விலகியுள்ளார்.
 
88945_c4185dee0a3b318b4cd0092eeda38f9f_eசக்தி வளத்துறையின் கட்டுப்பாட்டை பொறுப்பேற்பதற்கான சட்டமொன்றை அந்நாட்டு பாராளுமன்றம் நிறைவேற்ற தவறியதையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார்.
 
அதேசமயம் அவரின் பதவி விலகல் இடம்பெறுவதற்கு முன்னர் அன்றைய தினம் இரு கட்சிகள் ஆளும் கூட்டமைப்பில் இருந்து விலகியிருந்தன.
 
ரஷ்யாவின் முகவர்களாகவுள்ள உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து அகற்றும் வகையில் புதிய தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு வழிவகை செய்யும் முகமாகவே அந்த கட்சிகள் விலகியிருந்தன.
 
மேற்படி, கட்சிகளின் நடவடிக்கைக்கு உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ வரவேற்பளித்துள்ளார்.
 
பிரதமர் அர்ஸெனியின் பதவி விலகலானது கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போருக்கு நிதிவசதி அளித்தல் மற்றும் 298 பேர் பலியாவதற்கு காரணமான மலேஷிய எம்.எச். 17 விமான அனர்த்தத்துக்கு பின்னரான நிலைமைகளை கையாளுதல் என்பன தொடர்பில் போராடி வரும் உக்ரேனின் தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளை பெரிதும் பாதிப்பதாக அமைவதாக கூறப்படுகிறது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.