Jump to content

நீதிபதி பதவி நீட்டிப்புக்காக தி.மு.க அமைச்சர்கள் சந்தித்து உண்மைதான்: முன்னாள் அமைச்சர் தகவல்


Recommended Posts

 நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க. அமைச்சர்கள் தம்மைச் சந்தித்துப் பேசியது உண்மைதான் என சட்டத்துறை முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அதிரடியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நீதிபதி பதவி நீட்டிப்புக்காக தி.மு.க அமைச்சர்கள் சந்தித்து உண்மைதான்: முன்னாள் அமைச்சர் தகவல் இந்த நிலையில் சட்டத்துறை முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், சர்ச்சையில் சிக்கிய நீதிபதி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பதவியில் தொடருவதை மார்க்கண்டேய கட்ஜூ விரும்பவில்லை என, தன்னைச் சந்தித்த தி.மு.க. அமைச்சர்கள் முறையிட்டதாகவும், இந்த விவகாரத்தில் தி.மு.க உறுப்பினர்கள் தரப்பில் எந்தவித நெருக்கடியும் அளிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதியின் ஒப்புதலைத் தொடர்ந்தே சம்பந்தப்பட்ட நீதிபதியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை, தமிழக எம்.பி. ஒருவர், ஆட்சியைக் கலைத்து விடுவோம் என மிரட்டியதாக முன்னாள் தலைமை நீதிபதி கட்ஜூ கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த பரத்வாஜ், பிரதமர் இருந்த விமான நிலையத்தில் கட்ஜூ இருந்தாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் புகழை சீர்குலைக்கும் வகையில் முன்னாள் தலைமை நீதிபதி கட்ஜூ நடந்து கொள்வதாகவும் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/now-ex-law-minister-bhardwaj-says-dmk-sought-extension-hc-judge-206594.html

SC shame: Katju's allegation damns integrity of three Chief Justices of India
Katju clarifies on timing of corruption allegations  / hindu

 

Link to comment
Share on other sites

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்சு அவர்களின் குற்றச்சாட்டு கவனிக்கதக்கது. நீதிபதி

நியமனங்களில் முன்பு காங்கிரசு அரசும் தலையிட்டிருக்கிறது. இப்போது பா.ஜ க அரசும்

அதனைச் செய்கிறது. இந்திய நீதித்துறையின் அலங்கோலம் இப்படி அம்பலத்திற்கு

வருகிறது.உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் சிறப்பு இது!

 

தமிழர்களாகிய நாம் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டிய விடயம் இந்த நீதிபதி நியமன

விடயத்தில் கருணாவின் திமுகவும் ஈடுபட்டது என்பதேயாகும். வெளிவந்துள்ள

தகவல்களின்படி சம்பந்தப்பட்ட தமிழகநீதிபதி பல ஊழல்களில் ஈடுபட்டவர்.ஆனால்

கருணாவிற்கு நெருக்கமானவர்.இவரின் ஊழல்கள்பற்றிய அறிக்கையை இந்திய

உளவுத்துறையினர் பிரதமநீதியரசரிடம் கையளித்தனர்.எனினும் பதவி நீடிப்பு

வழங்கப்பட்டது. இதைச் செய்யாவிடின் சோனியா அரசை கவிழ்க்கப்போவதாக

திமுக பயமுறுத்தியதாகத் தெரிகிறது. முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளை

நிறுத்துவதற்கு தமது செல்வாக்கைப் பயன்படுத்தாத திமுக கட்சி ஓர் ஊழல்

நீதிபதிக்காக முனைந்து நின்றதென்பது கவனிக்கதக்கது. தமிழின மக்களின் அழிவுக்கு

அவர்கள் வழங்கிய முக்கியத்துவம் அவ்வளவுதான்! இதனை உணர்ந்த தமிழகமக்கள்

இந்த தமிழினத்துரோகிகளை தமிழ்நாட்டிலிருந்து முற்றாக அகற்றி  ஒழிக்கவேண்டும்.

 

மேலும் கூடிய தகவல்களை அறிந்துகொள்ள மேலே தரப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.