Jump to content

இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவன்: 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்றார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Kurinchikan-va;veddidurai-uk-220714-200-

இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன்! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.

  

அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புை அமைப்பை வடிவமைத்திருந்தார். அதனால் இவரது பாடசாலை முதலாவது இடத்தைப் பெற்று �150,000 பெறுமதியான பரிசினைத் தட்டிக்கொண்டது.இளைய தலைமுறையினரிடையே எரிவாயு சேமிப்பு, பசுமை பேணல் என்பன சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இங்கு ஐந்நூறுக்கு மேற்ப்பட்ட பாடசாலைகள் பங்கு பங்குபற்றியிருந்தன . ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர் . முழுமையாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். அவர்களில் ஆறு பேர் முதற்சுற்றில் தெரிவு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் இவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவரது இச்சாதனையால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக எம்தமிழ் சமூகமும் பெருமைகொண்டு குறிஞ்சிகனை வாழ்த்துகின்றது.

http://www.seithy.com/breifNews.php?newsID=113606&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து லட்சம் மாணவர்கள் பங்கு பற்றிய போட்டியில்..... 

முதலிடம் பெற்ற குறிஞ்சிகன்,

எமக்கும் பெருமையை ஏற்படுத்தி விட்டார்.
மேலும்... சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் குறிஞ்சிகன்...! மேலும் பல வெற்றிகள் காணவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

தொடர்ந்து வெற்றிகள் பல பெற்று மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டுக்கு அண்மையில் தான் இந்தப் பள்ளி இருக்கிறது. வாழ்த்துக்கள் குறிஞ்சிகனுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குறிஞ்சிகன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குறிஞ்சிகன்..!

 

 

உனது பெயரில் தமிழ் நிலத்தின் மணம் கமழ்கிறது! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து வெற்றிகள் பல பெற்று மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் குறிஞ்சிகன். அதுசரி தம்பி தமிழ் கதைப்பாரா? அல்லது தெரியுமா?  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் அனேகமாக எக்காரணம்கொண்டும்  யாரையும் வாழ்த்தும்பழக்கம் எனக்கில்லை. என்றாலும் சுற்ருச்சூழல் விடையத்தில் ஒரு சிறுவன் இவ்வளவு ஆர்வத்துடனும் சிந்தனைத் திறத்துடனும் இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவன் பரிசாகப்பெற்றுக்கொண்ட பணத்தொகை ஒரு பெரிய விடையமே இல்லை.

 

உண்மையில் நாம் வாழும் பூமியும் எமது சூழலும் எமக்கு உரிமையல்லாதது, அது எமது அடுத்துவரும் சந்ததிக்கானது, அதனை எவ்வித கெடுதலும் இல்லாது அவர்களிடம் ஒப்படைப்பது எமது கடமை. இதில் எங்களில் ஒவ்வொருத்தருக்கும் பொறுப்பிருக்கின்றது.

 

இந்த மாணவனுக்கு நீங்கள் ஏதாவது பிரதியுபகாரம் செய்ய விரும்பினால் இன்றிலிருந்தே நீங்கள் வாழும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருக்கும் சிறிய முயற்சியாவது செய்யுங்கள்.

 

நீ னல்லாய் வருவாயடா தம்பி குறிஞ்சிகா.

 

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். மலைகளே எமது பூமியினது எல்லாத்தேவைகளயும் நிறைவேற்ருவதில் முதலிடம் வகிக்கின்றது, ஆகவே அம்மலைபோல் உயரங்களைத்தொட எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

ஆங்கில அறிவின்மையா..... அல்லது.....
 
 
இப்படி எல்லாம் ஏன் எழுத வேண்டும் ???    :huh:
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆங்கில அறிவின்மையா..... அல்லது.....
 
 
இப்படி எல்லாம் ஏன் எழுத வேண்டும் ???    :huh:
 
 

 

 

Pupils from across the country have danced their way to a greener future, winning the British Gas Generation Green Energy Performance 2014.

 

The national competition saw students from schools across the country submit a design for their ultimate eco-house, with the hope being invited down to the finals in London which took place yesterday. The six finalists, chosen from over 500 entries, competed on a specially commissioned dance floor, which captures the energy created by students’ dance steps and harvests it to generate electricity. Beecholme Primary School in Mitcham, Alford Primary School in Aberdeenshire and Okehampton College in Devon triumphed against their competitors to win Energy Makeovers worth up to £150,000 each.

 

வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும்.. மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 

விளம்பரதாரரான.. அமெரிக்காவில் Texas.. மற்றும் மெக்சிகோ வளைகுடாவை நாசம் பண்ணிய Beyond Petroleum - BP (இப்பவும் தமிழ் ஆக்கள் British Petroleum எண்டு தான் சொல்லிக் கொண்டு திரியினம்.).. தனது எண்ணெய் கிண்டும் தரத்தை அதிகப்படுத்துவதை செய்வது மிக முக்கியம். உலகில் இன்னும் பழைய கருவிகளை வைச்சுக் கொண்டு சுற்றுச் சூழலுக்கு ஆபத்தான வகையில் எண்ணெய் கிண்டும் நிறுவனங்களில்.. BP.. அடிக்கடி விபத்துக்களை சந்தித்த பின் குற்றச்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

-----------------------------

அதையேன் பேசுவான். எப்படித்தான் உந்த தமிழ் லோயர் மார் அசைலம் கேஸ் எல்லாம் வெற்றி பெறுறாங்களோ தெரியல்ல. அவங்கட அறிவுக்கு..??! :lol:

 

இங்க எல்லாம்.. கோவில் திருவிழாவை ஏன் நடத்திறது. பிள்ளையை ஆட விட்டிட்டு.. அது எந்தப் பள்ளில என்ன படிக்குது.. இல்ல எந்த யுனில என்ன படிக்குது.. என்று விளம்பரப்படுத்திறது தான் முக்கியமே. அது எந்த வகையில்.. ஆடினாலும்.. பரிசும்.. சான்றிதழும் உண்டு.

 

ஊர் பறுவாயில்லை. அங்கிணை திறமை இருந்தால் தான் சான்றிதழே கிடைக்கும்.

 

ஊரில ஒரு காலத்தில கம்பஸ் போறாராம் என்றால் அவரை தலைல தூக்கி வைச்சு ஆடுவாங்கல்ல. அதே கனவோட அது முடியாம.. நாட்டை விட்டு ஓடியாந்திட்டு.. இப்ப அதை பிள்ளைகளின் தலையில் கட்டிவிடுறது.

 

ஆனால்.. இது ஊர் இல்ல. மேற்கு நாடுகளில்.. கம்பஸ் கல்வி என்பது கிட்டத்தட்ட எல்லாருக்கும் என்றாக்கியாச்சு. கம்பஸ் போகாதவன்... போனவனை விட அதிகம் உழைக்கக் கூட வாய்ப்பிருக்குது.. என்பதை இந்த நாடோடி மன்னர்கள் புரிஞ்சிக்கினம் இல்லையே.

 

இப்பவும்.. என்ர மகள் டாக்டர்.. என்ர மகன் இஞ்சுனியர்.. என்று சொல்லுறதில தான்.. தமிழ் பெற்றோர் பிள்ளை பெத்து வளர்க்கினம். அது ஒருவகையில்.. கல்வியில் அக்கறையை ஏற்படுத்தினாலும் கூட.. பிள்ளைகள் விரும்பியதை தேவையானதைப் படிக்க உதவுதான்னதுதான் கேள்வி...???!

 

(ஊரில 1000 பேருக்கு 0.7 டாக்டர். அந்த வகையில் அங்க அதுக்கு மதிப்பு. இங்க.. 1000 பேருக்கு 2.7 டாக்டர். இஞ்ச எவனும் அவங்களை பெரிசா மதிக்கிறதில்ல. இதே போலந்தில.. 2.1. அங்கின போய் தான் இஞ்ச படிக்க முடியாதவை டாக்டர் ஆகினம். இதை எல்லாம் புரிஞ்சுக்குதா நம்ம சமூகம்..???! டாக்டர் தொழிலில் விருப்பமுள்ளவன்.. படிக்கலாம்.. அதை தொழிலா செய்யலாம். அது சமூக அந்தஸ்துன்னு நினைச்சா அது தப்புங்கோ..!! ) :lol:

 

http://www.dailymail.co.uk/news/article-2533698/Britain-just-2-71-doctors-1000-people-fewer-Latvia-Estonia-Lithuania.html

 

http://data.worldbank.org/indicator/SH.MED.PHYS.ZS

 

ஆங்கில அறிவு மட்டுமல்ல பிரச்சனை.... திருந்தி.. திருத்தி.. வாழவும் நம்மவர்களுக்குத் தெரியவதில்லை. :lol:

Link to comment
Share on other sites

தொடர்ந்து வெற்றிகள் பல பெற்று மேலும் பல சாதனைகள் படைக்க குறிஞ்சிகனுக்கு வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து வெற்றிகள் பல பெற்று மேலும் பல சாதனைகள் படைக்க குறிஞ்சிகனுக்கு வாழ்த்துக்கள் !

நல்லதொரு பெயர்  குறிஞ்சிகன்
வீரம் செறிந்த மண்ணின் புதல்வன்
வாழ்க  வளமுடன்
Link to comment
Share on other sites

தொடர்ந்து வெற்றிகள் பல பெற்று மேலும் பல சாதனைகள் படைக்க குறிஞ்சிகனுக்கு வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் குறிஞ்சிகன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.