Jump to content

வருங்கால தொழில்நுட்பம் 18 : ஜடப்பொருட்கள் பேசக் கேட்போம், எதிர்கால யதார்த்தம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானமும் , தொழில்நுட்பம் வியக்க வைக்கின்றன. அவற்றின் முன்னேற்றம் அதை விட அதிமாக வியக்க வைக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகள் சோதனை என்ற நிலையில் இருந்து நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் அன்றாட வாழ்வில் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன.

புதிதாக அறிமுகமாகும் நவீன தொழில்நுட்பங்கள்  புதிய வசதியை அளிப்பதுடன் நடைமுறை பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் அமைந்துள்ளன. கம்பூட்டர் , ஸ்மார்ட் போன்கள், இணைய சேவை  என ஏற்கனவே தொழில்நுட்பம் பல விதங்களில் நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட நிலையில் எதிர்காலத்தில் மேலும் பல நுட்பங்கள் நம் வாழ்வில் இணைய காத்திருக்கின்றன.

கம்ப்யூட்டர்களையே ஆடையாக அணியலாம் என்கின்றனர். எங்கும் சென்சார்கள் நிறைந்து எல்லாமே விழிப்புணர்வு பெற்றிருக்கும் என்கின்றர். கார்கள் தானாக இயங்கும் என்கின்றனர். எண்ணத்தை புரிந்து கொண்டு செயல்படும் நுட்பங்களும் சாத்தியமாகலாம் என்கின்றனர். இதனிடையே இயந்திர மனிதர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற எச்சரிக்கையும் செய்யப்படுகிறது.

இன்று ஆய்வுக்கூடங்களில் உள்ள பல நுட்பங்கள் நாளை நம் வாழ்வில் இணைந்து நினைத்து பார்க்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இத்தகைய வருங்கால தொழில்நுட்பங்களை இந்த தொடர் மூலம் உலகம் முழுவதும் உள்ள  4தமிழ்மீடியா வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்கிறேன் என்கிறார் கட்டுரையாளர்  இரா.நரசிம்மன். 

இரா.நரசிம்மனை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் பத்திரிகையாளர், தொழில்நுட்ப வலைப்பதிவாளர் மற்றும் ’இணையத்தால் இணைவோம்’ புத்தக ஆசிரியர் . இணையம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து ஆர்வத்துடன் எழுதி வரும் சைபர் சிம்மனை நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள், வாசித்திருப்பீர்கள்.

விகடன்.காம், சுட்டி விகடன், தமிழ் இந்து, தமிழ் கம்ப்யூட்டர் உள்ளிட்ட இதழ்களிலும் இவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளன. சைபர்சிம்மன் வலைப்பதிவில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் இணையம் சார்ந்து எழுதி வருகிறார். இவரது முதல் புத்தகமான ’இணையத்தால் இணைவோம்’,  இணைய பயன்பாட்டிறகு வழிகாட்டும் வகையில் மிகச்சிறந்த இணையதளங்கள் பற்றிய விரிவான அறிமுகங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. 

புதிய தொழில் நுட்பங்கள் தொடர்பாக தமிழில் அழகாகவும், சிறப்பாகவும், எழுதி வரும் சைபர் சிம்மனின் "வருங்கால தொழில்நுட்பம்" இந்தப் புதிய தொடர், 4தமிழ்மீடியா வாசாகர்களுக்கு மட்டுமல்லாது தமிழர்கள் அனைவருக்குமே புதிய விடயங்களை அறிமுகம் செய்து தரும் எனும் பெரு நம்பிக்கையுடன் உங்கள் முன், அவரை அழைத்து வருகின்றோம்.- 4Tamilmedia Team

1. சென்சார்களால் உயிர்பெறும் நாளைய நகரங்கள்

 ஸ்மார்ட்!

இனி வரும் காலங்களில் இந்த ஆங்கில வார்த்தையை தான் அதிகம் பயன்படுத்த இருக்கிறோம். ஏனெனில் எல்லாமே ஸ்மார்ட்டாகி வருகின்றன. அல்லது எல்லாவற்றையும் ஸ்மார்ட்டாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாதாரண செல்பேசி ஏற்கனவே ஸ்மார்ட் போனாகி விட்டது. செல்போன் ஆதிக்கத்தால் தேவையின்றி வழக்கொழிந்து போகும் என்று சொல்லப்பட்ட கைகடிகார்ங்கள் ஸ்மார்ட் வாட்சாக மறு அவதாரம் எடுத்துள்ளன. கார்கள் ஸ்மார்ட் கார்கள் என வர்ணிக்கப்படுகின்றன. இணைய இணைப்பு உள்ளிட்ட வசதிகள் கொண்ட தொலைக்காட்சிகள் ஸ்மார்ட் டிவி என கொண்டாடப்படுகின்றன. ஸ்மார்ட் அடைமொழி கொண்ட பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன. உடல்பயிற்சி செயல்பாட்டை கண்கணித்து ஆலோசனை வழங்கும் ஸ்மார்ட் பட்டைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சரியான நேரத்தில் மாத்திரை சாப்பிட நினைவூட்டும் தன்மை கொண்ட ஸ்மார்ட் மாத்திரை பாட்டில்கள் உருவாகப்பட்டுள்ளன.

smart-citi.jpg

இந்த வரிசையில் நகரங்களும் சேர்ந்திருக்கின்றன. ஆம், ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்கால நகரங்கள் ஸ்மார்ட் நகரங்களாகவே இருக்கும் என்று தொழில்நுட்ப கணிப்பும் எதிர்பார்ப்புகள் வலுவாகவே இருக்கிறது. 2050 ம் ஆண்டு வாக்கில் முழுவீச்சிலான ஸ்மார்ட் நகரங்களால் இந்த பூமியே மாறிவிடலாம் என்கின்றனர். நகர நிர்வாகிகளும் திட்டமிடுபவர்களும் நவீன் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் நகரங்களை உருவாக்குவதில் ஈடுபாடு காட்டுகின்றனர். தொழில்நுட்ப வல்லுனர்களும் இவர்களோடு கைகோர்த்து நாளைய நகரங்களை வடிவமைத்து வருகின்றனர்.

ஸ்மார்ட் போனோ ஸ்மார்ட் நகரமோ, ஸ்மார்ட் என்பது வெறும் அடைமொழி அல்ல. ஸ்மார்ட் என்பது ஒரு கருத்தாக்கம் . மேம்பாட்டையும் செயல்திறனையும் குறிக்கும் கருத்தாக்கம். முக்கியமாக பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும் ஆற்றல் படைத்த கருத்தாக்கம்.

செல்போனையே எடுத்துக்கொள்வோம். பழைய போனுக்கும் ஸ்மார்ட போனுக்குமான வேறுபாடு எளிதாகவே புரியக்கூடியது. செல்போன் அறிமுகமான காலத்திலேயே உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டதாக வர்ணிக்கப்பட்டாலும் உண்மையில் ஸ்மார்ட் போனின் வருகையே அதை சாத்தியமாக்கியுள்ளது. செல்போன்கள் அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்குமே பிரதானமாக பயன்பட்ட நிலை மாறி நவீன ஸ்மார்ட் போன்கள் என்னனவோ மாயங்களை செய்து காட்டுகின்றன. உள்ளங்கையிலேயே இணையத்தை கொண்டு வந்திருக்கிறது. இமெயில், வரைபட வழிகாட்டி ,மின்வணிகம் என்று எல்லாமே ஸ்மார்ட்போன் தொடு திரை அசைவில் சாத்தியமாகிறது.

இதே போலவே எரிபொருள் அளவை கண்காணிப்பது உட்பட பல செயல்பாடுகளை தானாகவே மேற்கொள்ளும் திறன் படைத்த நவீன கார்கள் ஸ்மார்ட் காராக வசீகரிக்கின்றன.எல்லாம் சரி கருவிகளும் சாதனங்களும் ஸ்மார்ட் எனும் அடைமொழியோடு சேர்த்து குறிப்பிடப்படுவது அவற்றின் செயல்திறன் மேம்பாட்டின் தன்மையாக புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு நகரம் எப்படி ஸ்மார்ட்டாக முடியும் ?

இந்த கேள்விக்கான பதிலாக தற்போதுள்ள நவீன நகரங்களை விட தொழில்நுட்ப நோக்கில் மேம்பட்ட நகரங்களை ஸ்மார்ட் நகரம் என சுட்டிக்காட்டுவதாக புரிந்து கொள்ளலாம். தொழில்நுட்ப அம்சங்களை நவீன நகரங்களில் இப்போதே கூட பார்க்கலாம். ஆனால் ஸ்மார்ட் நகரங்களில் தொழில்நுட்பம் என்பது முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டதாக  இருக்கும். நகரின் வடிவமைப்பு உள்ளிட்ட எல்லா அம்சங்களுலும் தொழில்நுட்பம் ஊடுருவி இருக்கும். இப்படி தொழில்நுட்பம் நிக்கமற நிரைந்திருக்கும் தன்மையே ஸ்மார்ட் நகரின் முக்கிய அம்சம். இவற்றுக்கு அடிநாதமாக இருப்பது உணரும் தன்மை கொண்ட சென்சார்கள் . இவை தான் ஸ்மார்ட் நகரங்களை உயிரோட்டம் மிக்கவைவாக ஆக்குகின்றன. உணர்வுள்ளவையாகவும் ஆக்குகின்றன. ஆம், ஆச்சர்யமாக இருந்தாலும் ஸ்மார்ட் நகரம் என்பது வியக்க வைக்கும் தொழில்நுட்பம் கொண்டது மட்டும் அல்ல, நகரத்தில் வாழ்பவர்களின் பிரச்ச்னைகளை புரிந்து கொண்டு செயல்படகூடிய அளவுக்கு உணர்வு பூர்வமானவை.

ஸ்மார்ட் நகரம் சோதனை முயற்சியாகவும் முழு நோக்கிலான தொலைநோக்கிலும் என பல விதங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் துவங்கி நார்வேயின் ஆஸ்லோ வரை பல நகரங்கள் ஸ்மார்ட் நகரங்களாக குறிப்பிடப்படுகின்றன. என்றாலும் ஸ்மார்ட் நகருக்கான அழகான உதாரணமாக சொல்லப்படுவது சாங்டோ!

 

இந்த நகரம் தென்கொரியாவில் தலைநகர் சியோலுக்கு அருகே அமைந்துள்ளது. சிறு கோட்டில் இருந்து என்று சொல்வார்களே அப்படி சொல்லும் வகையில் ஆரம்ப புள்ளியில் இருந்து முற்றிலுமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் சாங்டோ. நகரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதில் எந்த புதுமையும் இல்லை தான். ஆனால் சங்டோ திட்டமிடப்பட்டதிலும் வடிவமைக்கப்பட்டதிலும் புதுமை இருக்கிறது. அதன் மரபணுவிலேயே மேம்பட்ட தொழில்நுட்பம் கலந்திருக்கிறது என வல்லுவர்கள் வர்ணிக்கின்றனர்.

சாங்டோ சென்சார் மயமாக இருக்கிறது. இந்த சென்சார்கள் எதற்காக தெரியுமா? பருவநிலை, எரிபொருள் பயன்பாடு, போக்குவரது நெரிசல், குடிநீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம் என எல்லாவற்றையும் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்காக ! நகரத்தில் வசிப்பவர்களின் தேவையை புரிந்து கொண்டு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தகவல் அளிக்கும் ஆற்றல் கொண்டவையாக இவை வடிவமைப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது எப்போது ஒருவருக்கான பஸ் வரும் என்று தகவல் தெரிவிக்க வல்லவை என்கின்றனர். அதே போல நகரின் எந்த மூளையிலாவது பிரச்சனை என்றால் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் ஆற்றலும் கொண்டவை என்கின்றனர்.  இவை தவிர எங்கும் வயர்லெஸ் இணைய வசதி, உடனடி அறிவிப்புகள் ஆகியவையும் இருக்கும்.

 

சாங்டோவின் சிறப்பம்சம் என்ன என்றால் சுற்றுச்சூழலை மனதில் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது தான். நீடித்த வளர்ச்சியை சாத்தியமாக்கும் வகையில் நகரம் உருவாக்கப்பட்டுள்ளதால் மற்ற நவீன நகரங்களுக்கு மாறாக இதில் வெளிபுற பகுதிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கட்டிடங்கள் பெரும்பகுதி இருந்தாலும் வெளிப்புற பகுதிகளுக்கு 40 சதவீத இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விளைவு நகரின் மையபகுதியில் பசுமையான சூழல் கொண்ட பூங்காவை பார்க்கலாம்.

அதே போல எலெக்டிரி கார்களுக்கான சார்ஜிங் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீருக்கான மறுசுழற்சி முறை நல்ல நீர் குடிநீராக மட்டுமே பயன்படுத்தப்பட வழிசெய்கிறது. கழிவறைகளில் நல்ல நீரை பயன்படுத்தி வீணடிப்பது எல்லாம் நடக்காத கதை. தண்ணீரை வீண்டிப்பதே கூட நடக்காத கதை தான். எல்லாவற்றையும் சென்சார் கண்காணித்து ஒழுங்குபடுத்தும்.

பரவசம் அளிக்ககூடிய இன்னொரு முக்கிய அம்சம் நகரில் எங்குமே குப்பையையும் பார்க்க முடியாது. குப்பைத்தொட்டியும் இருக்காது. அப்படி அழகாக கழிவுகளுக்கான வெளியேற்றும் முறை உருவாக்கப்படுள்ளது. வீடுகளில் சேரும் குப்பைகள் எல்லாம் சமையலறை வழியே பூமிக்கு அடியிலான வலைப்பின்னலால் உறிஞ்சப்பட்டு மைய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படும்.

சாங்டோ வியக்க வைக்கிறதா?

தென்கொரியாவில் ஸ்மார்ட் நகரம் என பெயர் வாங்குவது என்றால் எளிதானதா என்ன? இந்த சின்னஞ்சிறிய தேசம் அதன் தொழில்நுட்ப பயன்பாட்டிற்காக டிஜிட்டல் தேசம் என அழைக்கப்படுகிறது. இதன் தலைநகர் சியோ அதன் நவீன தன்மைக்காக ஸ்மார்ட் நகரம் என கூறிப்பிடப்பட்டு வருகிறது. சியோலை மிஞ்சக்கூடிய வகையில் உண்மையான ஸ்மார்ட் நகராக சாங்டோ உருவாகி இருக்கிறது. இதன் ஸ்மார்ட் தன்மையை மீறி இன்னும் இந்நகரம் பெரிய அளவில் நிறுவனங்களையும் மக்களையும் கவரவில்லை என்று சொல்லப்படுவது வியப்பானது தான்.

சாங்டோ இப்போது தானே உருவாகி வருகிறது. புதுமையும் மிரள வைக்கதானே செய்யும். சாங்டோவில் இருந்து கால்ப்ந்து சொர்கபூமியான பிரேசிலுக்கு வருவோம். அதன் முக்கிய நகரமான ரியோ டி ஜெனிரோவும் ஸ்மார்ட் நகரம் என்றே வர்ணிக்கப்படுகிறது. 2013 ம் ஆண்டு ஸ்மார்ட் நகரங்களுக்கான கண்காட்சியில் சிறந்த ஸ்மார்ட் நகரம் என விருது பெற்ற நகரம் இது.

 

சாங்டோ புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் நகரம் என்றால் ரியோ புதிதாக வடிவமைத்து மேம்படுத்தப்படும் பழைய நகரம். ரியோ , ஃபேவல்லா என்று சொல்லப்படும் குடிசைப்பகுதிகள் நிறைந்த நகரம். நெரிசலும் பரபரப்புமே இவற்றின் அடையாளம். இந்த பகுதிகளை மாற்றியமைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் உதவி நாடப்பட்டது. சர்வதேச அமைப்பான யூனிசெப்-டன் உள்ளூர் அமைப்பு ஒன்று இணைந்து மேற்கொண்ட இந்த திட்டத்தில் குடிசைப்பகுதிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் வரைபடமாக்கப்பட்டு முக்கிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் காற்றாடி மூலம் காமிராக்களை பறக்கவிட்டு நெரிசலான இடங்களை படம் பிடித்தனர்.

 

இந்த புகைப்பட விவரங்கள் ஜி.பி.எஸ் அம்சங்களோடு இணையதளம் ஒன்றில் சேர்க்கப்பட்டு அலசி ஆராயப்பட்டன. இந்த ஆய்வின் அடிப்படையில் நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தீர்மானித்து செயல்படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு இடியும் நிலையில் இருந்த மழலையர் பள்ளியின் பால்கனி இடியும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நகரில் எங்கெல்லாம் குப்பைத்தொட்டிகள் தேவை என்றும் தீர்மானிக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு மாற்று வழிகள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

 

அது மட்டும் அல்ல நகரின் மனநிலையை அறிவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரின் மையத்தில் உள்ள செயல்பாட்டு மையத்தில் 80 மீட்டர் பிலாஸ்மா சுவர் இருக்கிறது. நகரில் 900 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள காமிராவில் இருந்து காட்சிகள் இதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த விவரங்கள் கூகுலின் நகர வரைபடத்தின் மீது பொருத்தப்பட்டு அலசப்படுகின்றன. புயல மழை மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை விரைவாக திறம்ப்ட மேற்கொள்ளவும் இந்த தொழில்நுட்பம் உதவும் என்று நம்புகின்றனர். இது கண்கானிப்புக்கு நிகரானது என்ற விமர்சனமும் இருக்கிறது.

ஆனால் அதிக விபத்து நடக்கும்  பகுதி போன்றவற்றை அறிய இந்த முறை உதவி வருகிறது. அதே போல நகரில் நடைபெற்ற போராட்டங்களும் இதில் பதிவாயின. அப்போது அவசரமாக காமிராக்கள் நிறுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

ரியோ நகரை ஸ்மார்ட் நகரமாக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இவை அமைந்துள்ளன. ஆனால் இந்த முயற்சிகள் மீது விமர்சனமும் வைக்கப்படுகின்றன. மூழுவிச்சிலான திட்டமாக இல்லாமல் உலககோப்பை கால்பந்து மற்றும் ஒலிம்பிக் போட்டியை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்டவை என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரியோ தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளதை மறுப்பதற்கில்லை.

 ஸ்மார்ட் நகரம் சாத்தியமாக்க கூடிய அற்புத்ததை இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நார்வேயின் ஆஸ்லோவுக்கு செல்ல வேண்டும்.

 

ஸ்மார்ட் நகரம் என்றால் சுவர்களில் பேனகள் பதிக்கப்பட்டு உடைகளிலும் கண்ணாடிகள்லும் சென்சார்கள் பொறுத்தப்பட்டு எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதோ அல்லது வீட்டில் இருந்தபடி ஒரு ஹோலோகிராம் மூலம் டாக்டரை பார்த்து பேசுவதோ மட்டும் அல்ல. மாறாக நகரங்களில் வசிக்கும் மக்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பது. அந்த வகையில் ஆஸ்லோ நகரில் வசிக்கும் வயதானவர்களின் பிரச்சனைகளுக்கு நவீன தொழில்நுட்பம் தீர்வையும் ஆறுதலையும் வழங்கி வருகின்றன. வீட்டிலேயே இருக்கும் வயதானவர்களை பாரமரிப்பது என்பது குடும்பத்திற்கும் சரி அரசுக்கும் சரி சவாலான செயல் தான். கவலை அளிக்கும் செயலும் கூட.

 

இதற்கு தீர்வாக தான் அலிபியா எனும் நிறுவனம் வீடுகளில் சென்சார் தொழில்நுட்பம் மூலமான கண்காணிப்பு வசதியை அமைத்து தருகிறது. இந்த சென்சார்கள் வீட்டில் திடிரென கதவு திறக்கப்பட்டலோ அல்லது குளிர் அதிகமானலோ அதை உணர்ந்து தகவல் தெரிவிக்கிறது. நார்வேயில் குளிர் நடுங்க வைக்கும் தன்மை கொண்டது என்பதால் சில நேரங்களில் கடுங்குளிர் வயதானவர்களுக்கு ஆபத்தாக முடியலாம். இது போன்ற நேரங்களில் சென்சார் விழித்துக்கொண்டு வெப்ப கருவியை இயக்கும். அல்சைமரஸ் எனும் வயோதிக மரதி நோயால் பாதிக்கப்படுபவர்களை பாதுக்காக்கவும் இந்த கண்காணிப்பு தொழிநுட்பம் கைகொடுக்கிறது.

இப்படி இல்லங்கள் சென்சார்கள் மூலம் இணைக்கப்பட்டு அதில் உள்ளவர்களின் தேவைகள் உணரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதும் ஸ்மார்ட் நகரின் முக்கிய குணமாக சொல்லப்படுகிறது. இவை தான் ஸ்மார்ட் நகரங்களை உணர்வுள்ளவை என்று சொல்ல வைகின்றன; இவ்வளவு ஏன் வீட்டில் உள்ளவர்களின் நடை பழக்கத்தை கண்காணித்து  புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி தேவைப்படும் போது தகவல் தரும் மாய கமபளங்களும் கூட உருவாக்கப்பட்டு வருகின்றன. வீட்டின் தரையில் போடப்படக்கூடியது போன்ற இந்த கம்பளங்களில் உள்ள கண்ணாடி இழைகள் அதன் மீது நடப்பவர் தடுக்கி விழப்போகிறார் என்றாலும் அதை முன்கூட்டியே அறிந்து சொல்லக்கூடிய அளவுக்கு புத்திச்சாலியானவை.

இதே போலவே இத்தாலி நகரான போல்சானவோவிலும் வயதானவர்களை மனதில் கொண்டு வீட்டுச்சூழலை கண்காணிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆக வீட்டில் எரிவாயு கசிவோ, வேறு பிரச்சனையோ ஏற்பட்டால் சென்சார் எச்சரிக்கை செய்துவிடும்.

ஸ்மார்ட் நகரம் என்பது இணைய வசதி கொண்ட பிரிட்ஜை கொண்டிருப்பது அல்ல. அந்த பிரிட்ஜை வீட்டில் இருப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு திறந்தால் அவர்கள் வழக்கமாக இருக்கிறார்கள் என தெரிந்துகொள்ள வைக்கும் தன்மை கொண்டதாகும். அதனால் தான் ஸ்மார்ட் நகர கருத்தாக்கத்தை கொண்டாட வேண்டியிருக்கிறது

இன்னமும் அறிவோம்...

4தமிழ்மீடியாவிற்காக: சைபர் சிம்மன்

ட்விட்டர்: https://twitter.com/iamcybersimman

http://www.4tamilmedia.com/knowledge/information/24174-cybersimman1

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால தொழில்நுட்பங்கள் 2 : உடலுக்குள் ஒரு டாக்டர்

chip2.jpg

 

வருங்காலத்தில் மாத்திரையுடன் சேர்த்து ஒரு சின்ன கம்ப்யூட்டரையும் விழுங்கினால் எப்படி இருக்கும்? கம்ப்யூட்டர் என்றால் முழு கம்ப்யூட்டர் அல்ல, ஒரு சின்ன கம்ப்யூட்டர் சிப். இந்த சிப் மாத்திரைக்குள் ஒளிந்திருக்கும். அதை மாத்திரையோடு விழுங்க வேண்டியது தான்.

அதன் பிறகு இந்த சிப் உடலுக்குள் உட்கார்ந்து கொண்டு அல்லது நீந்திக்கொண்டு விசுவாசமாக தனது பணியை செய்து கொண்டிருக்கும். எதிர்கால மருத்துவம் இப்படி தான் இருக்கப்போகிறது என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள். மாத்திரைக்குள் சிப்கள் பொறுத்தி அனுப்பப்படுவதும், உடலுக்குள் சென்சார்களையும், குட்டி குட்டி ரோபோக்களையும் அனுப்பி வைப்பது பயன்பாட்டிற்கு வரலாம் என்கின்றனர். இந்த வகை சிப்களும் ,சென்சார்களும் மருத்துவத்தையே மாற்றி அமைக்கலாம் என்றும் ஆருடம் சொல்கின்றனர். மருத்துவதுறையில் இவற்றால் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும் என்றும் சொல்கின்றனர். இன்னொரு பக்கத்திலோ உடலுக்குள் சிப்களை உலாவ விடுவது அந்தரங்க உரிமை சார்ந்த மீறல்களையும் ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கையும் முன் வைக்கப்படுகிறது. இந்த விவாதம் இன்னும் தீவிரமாகும் வாய்ப்பும் இருக்கிறது.

சரி, மாத்திரையில் சிப்பையோ சென்சாரையோ வைத்து ஏன் உடலுக்குள் செலுத்த வேண்டும் ? என கேட்கலாம். நோயாளிகளை உள்ளுக்குள் இருந்த கண்காணிப்பதற்காக தான் அதி நவீன ஏற்பாடு. இந்த இடத்தில் கண்காணிப்பு என்பதை மருத்துவ நோக்கிலான கவனிப்பு என்று புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ஸ்மார்ட் பில் என்று குறிப்பிடப்படும் இந்த வகை மருந்துகள் தொடர்பாக பல்வேறு ஆய்வில் மருந்தக நிறுவனங்களும் பல்கலைக்கழக ஆய்வகங்களும் ஈடுபட்டு வருகின்றன. இவற்றின் நோக்கமும் பயன்பாடும் வேறுப்பட்டவை என்றாலும் அடிபடையில் இந்த அதி நவீன மாத்திரைகளின் வேலை என்ன என்றால் , நோயாளிகள் ஒழுங்காக குறித்த நேரத்தில் மாத்திரையை எடுத்துக்கொண்டனரா? எனும் தகவலை டாக்டருக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவிப்பது தான்.chip3.jpg

 

மாத்திரையும்,மறதியும் உடன்பிறவா இரட்டை சகோதரர்கள் தான் இல்லையா? நம்மில் பலருக்கே கூட மாத்திரையை சரியான நேரத்தில் சாப்பிடாமால் மறந்த அனுபவம் ஏதாவது ஒரு கட்டத்தில் இருக்கலாம். மாத்திரையை ஒழுங்காக சாப்பிடாமல் மறப்பது சகஜமானது தான் என்றாலும், சில நேரங்களில் இது விபரீதத்தை ஏற்படுத்தலாம்.குறிப்பாக வயதான நோயாளிகள் மற்றும் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டிய மருத்துவ நிர்பந்தம் உள்ளவர்கள் விஷயத்தில் இது உயிருக்கே கூட ஆபத்தாக அமையலாம். எனவே குடும்பத்தினரோ,உறவினர்களோ நோயாளிகள் சரியான நேரத்தில் மாத்திரை எடுத்துக்கொண்டனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக கண்ணும் கருத்துமாக நோயாளிகளை கவனிக்க வேண்டும். பரபரப்பான உலகில் இது சவாலானது தான். அது மட்டும் அல்ல, அல்சைமர்ஸ் போன்ற வயோதிக கால மறதி நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் விஷயத்தில் யாரேனும் அருகாமையில் இருந்தாக வேண்டும். நோயாளிகள் மருந்துகளை சரியான நேரத்தில் சாப்பிட்டனரா என்று அறிந்து கொள்வதில் டாக்டர்களுக்கும் அக்கரை உண்டு. மருந்தின் செயல்பாடு மற்றும் சிகிச்சையின் முன்னேற்றம் குறித்து அறிய இது மிகவும் அவசியம். நோயாளிகளை பார்க்கும் போது டாக்டர்கள் கேட்கும் முதல் கேள்வி ஒழுங்காக மருந்தை சாப்பிடுகிறீர்களா? என்பதாக தான இருக்கும். ஆனால் இதை உறுதி செய்து கொள்வது எப்படி?

இந்த இடத்தில் தான் கம்ப்யூட்டர் மாத்திரை வருகிறது!. அதாவது சிப் கொண்ட மாத்திரை. சிப் என்றதும் செல்போன் சிப் அளவுக்கு இருக்குமோ என நினைத்து மிரள வேண்டாம். மாத்திரை என்றால் நடுங்குபவர்கள் பிறகு சிப்பையும் சேர்த்து இரட்டிப்பாக நடுங்குவார்கள். இந்த சிப் கடுகை விட சின்னதாக இருக்கும். ஒரு மனல் துகள் அளவு என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஒரு சதுர மீ.மீ அளவு என்கின்றனர். ஆனால் இந்த சிப்புக்குள் சென்சாரோ பேட்டரியோ கிடையாது. இது ஒரு ஹைடெக் சுயம்பு. தானாகவே இயக்கி சுயமாக இயங்கி கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஆம், இந்த சிப் உடலுக்குள் சென்றவுடன் , வயிற்றுக்குள் இருக்கும் சில வகை அமிலங்கள் மற்றும் ரசாயனங்களுடன் கலந்ததுமே செயல்படத்துவங்கும். தனக்கு தேவையான ஆற்றலையும் இந்த வினையாக்கம் மூலமே பெற்றுக்கொள்ளும்.

 

 

உடலுக்குள் இருந்து கொண்டு இந்த மாத்திரை சிப் என்ன செய்யும்? முதலில் இந்த சிப் தனியானது இல்லை. அதற்கு ஒரு கூட்டாளி உண்டு. மாத்திரையை எடுத்துக்கொள்ளும் நோயாளி உடல் மீது ஒட்டிக்கொள்ளும் பேண்டெய்டு போன்ற பட்டை தான் அதன் கூட்டாளி. சிப் இந்த கூட்டாளியை தொடர்பு கொண்டு தகவல் அனுப்பும். என்ன தகவல்? குறிப்பிட்ட அந்த நபர் மாத்திரையை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொண்டாகி விட்டது எனும் தகவல் தான். இந்த பட்டைக்கும் ஒரு கூட்டாளி உண்டு. அது தான் செயலி (ஆப்). பட்டை பெற்றுக்கொள்ளும் தகவல் செயலியின் மூலம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் கம்ப்யூட்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை பார்த்தே டாக்டர் அல்லது குடும்பத்தினர் நோயாளியின் நிலை பற்றிய தகவலை தெரிந்து கொள்ளலாம்.

ஆக, அன்புக்குறியவர்கள் மாத்திரை சாப்பிட்டார்களா? இல்லையா என்று கவலைப்படும் நிலை இருக்காது. டாக்டர்களும் நோயாளிகளின் உடல் முன்னேற்றம் பற்றிய தகவலை தங்கள் பணி சூழல் பாதிக்காத வகையில் தெரிந்து கொள்ளலாம்.மாத்திரை சாப்பிட்டாச்சா இல்லையா என்று அறிய முடிவது ஆரம்ப பயன்பாடு தான். இந்த சிப்கள் மூலம் மேலும் எண்ணற்ற வகையில் நோயாளிகளை கவனித்துக்கொள்ளலாம்..

ஆனால் இதை உறுதி செய்யவே மருத்துவ உலகம் அதிக அளவில் பணம் மற்றும் நேரத்தை செலவிட்டுக்கொண்டிருப்பதால் இதன் மூலமான பயனே குறிப்பிடத்தக்கது என்கிறனர். பல நிறுவனங்கள் இந்த ஆய்வில் ஈடுப்படிருந்தாலும், ப்ரோடியஸ் டிஜிட்டல் ஹெல்த் (Proteus Digital Health ) எனும் நிறுவனம் இதில் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இது தொடர்பாக தீவிர சோதனை மற்றும் ஆய்வில் ஈடுப்பட்டு வரும் இந்நிறுவனம் அமெரிக்க மருத்து கட்டுப்பாடு அமைப்பிடம் இருந்து இதை பயன்படுத்துவதற்கான அனுமதியும் பெற்றுள்ளது. அதே போல ஐரோப்பிய ஒன்றியத்திலும் அனுமதி பெற்றுள்ளது. மாத்திரைக்குள் சென்சாரை பொறுத்தி பயன்படுத்துவது பாதுகாப்பானது என உறுதி செய்து கொண்ட பிறகே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதல் கட்டமாக இந்த சிப்பை வெற்று மாத்திரையுடன் தான் பயன்படுத்த முடியும். அதாவது மாத்திரையுடன் சேர்த்து இந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இது தகவல் அனுப்பும். அடுத்த கட்டமாக உண்மையான மருத்து கொண்ட மாத்திரையுடனேயே சென்சாரை பொறுத்தும் முயற்சியும் ஆய்வும் நடைபெற்று வருகிறது. இத்தகைய மாத்திரைகள் வந்தால் அவர் உயிர் காக்கும் அற்புதமாக இருக்கும் என்கின்றனர். ஆனால் இதற்கு எதிர் கருத்தும் இல்லாமல் இல்லை.

உடலுக்குள் சிப்பை அனுப்புவது விபரீதமாகலாம் என்று அந்தரங்க உரிமை ஆர்வலர்கள் சொல்கின்றனர். அதிலும் சிப்பை அகற்றும் உரிமை அல்லது ஆற்றல் இல்லாத நிலையில் இது எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர். ஆனால் ஒன்று மாத்திரையில் இருக்கும் சென்சாரால் பிரச்சனை கிடையாது. அது எந்த பாதிப்பையும் உண்டாக்காது. இந்த சிப் பயன்படுததக்கூடிய விதம் தான் கேள்விகளை எழுப்ப வைக்கிறது. நோயாளிக்கு வேறு மாத்திரை தரப்பட வில்லை என்பதை எப்படி உறுதி செய்வது என்று கேட்கின்றனர். ஆய்வுக்காக சோதனை மருந்துகளை கொடுத்தால் என்ன செய்வது என்றும் கேட்கின்றனர். இருப்பினும் மருத்துவ துறையினரோ இதில் எந்த தவறும் இல்லை என்கிறனர். கார்களில் சென்சாரை வைத்து கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்யும் போது மருத்துவத்திலும் சென்சாரை பயன்படுத்துவதில் என்ன தவறு என்று கேட்கிறார் எரிக் டோபல். இவர் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வுக்கூட இயக்குனர். இந்த வகை சிகிச்சை பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார்.

 

 

உண்மையில்தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இதை சாத்தியமாக்கியுள்ளது. சென்சார்களை அளவில் சிறியதாக குறைந்த செலவில் உருவாக்க கூடிய ஆற்றலே இதற்கு முக்கிய காரணம். இந்த வகை நேனோ சென்சார்கள் என்றும் சொல்லப்படுகின்றன. இவற்றின் பயன்பாடு பற்றிய ஆய்வுகளும் முயற்சிகளும் வியக்க வைக்கும். இந்த வகை சென்சார்களை சருமத்துக்குள்ளும் பொருத்த முடியும். அப்போது அவை உற்றத்தோழன் போல உடனிருந்து கண்காணித்து உரிய நேரத்தில் வேண்டிய தகவல்களை தெரிவிக்கும். அதே போல, நோய்க்கூறுகளை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கும் சென்சார்களும் இருக்கின்றன. இந்த சென்சார்கள் உடலுக்குள் நீந்திக்கொண்டு இருக்கும் போது எச்சில் பொன்றவற்றில் கிடைக்கும் ரசாயன தகவல்கள் மூலம் மாரடைப்பு ஏற்படப்போகிறதா என்ற தகவலை முன்கூட்டியே பெற்று நடவடிக்கை எடுக்கலாம். இதே போலவே உடலுக்குள் காமிராவை அனுப்பி புற்றுநோய் செல்களை கண்டறியும் சாத்தியமும் உள்ளது.

இவ்வளவு ஏன் ஒரு சின்ன சிப்பை உடலுக்குள் பொருத்திக்கொண்டு அதன் மூலம் கருத்தடை மருந்தை செலுத்திக்கொள்ளும் வசதியும் கூட அறிமுகமாகி உள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசிப்ஸ் ( MicroCHIPS ) எனும் நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளது. கருத்தடை வேண்டாம் என்றால் இந்த சிப்பை ரிமோட் மூலமும் இயக்கி மருத்தை நிறுத்திக்கொள்ளலாம்.நாளை இதே முறையில் தேவையான மருத்துகளை ரிமோட் மூலமே இயக்கி கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இவை எல்லாம் மருத்துவ துறையில் வளர் நிலையில் இருக்கும் நவீன முயற்சிகள். இவற்றின் எதிர்மறையான பயன்பாடு பற்றிய சந்தகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொறுப்பும் ஆய்வாளர்களுக்கு உள்ளது.

சரி, பல் துலக்குவதற்கும் கூட இதே போன்ற ஸ்மார்ட் பிரெஷ் உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா? அதே போல ஸ்மார்ட் உள்ளாடைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.அவை பற்றியும் தொடர்ந்து பார்ப்போம்...

 

http://www.4tamilmedia.com/knowledge/information/24305-tec

4தமிழ்மீடியாவிற்காக: சைபர் சிம்மன்

ட்விட்டர்: https://twitter.com/iamcybersimman

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால தொழில்நுட்பம்-3 : காலை எழுந்ததும் தொழில்நுட்பம்

 

 

இந்தக்காட்சியை கற்பனை செய்து பாருங்கள். காலையில் பல் துலக்க தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் செல்போனை எங்கே வைத்தீர்கள் என்று தெரியவில்லை. டூத் பிரஷை கையில் வைத்துக்கொண்டே சற்றே பதற்றமாக செல்போனை தேடுகிறீர்கள். நல்லவேளை செல்போன் கிடைத்து விட்டது. இப்போது பல துலக்கத்துவங்குகிறீர்கள், செல்போனை பார்த்தபடியே !.

இது போன்ற காட்சியை கற்பனை செய்வது விசித்திரமாக இருக்கலாம். குழப்பத்தையும் அளிக்கலாம். 
பல் துலக்குவதற்கும் செல்போனுக்கும் என்ன தொடர்பு? பல் துலக்க பக்கத்தில் செல்போன் ஏன் இருக்க வேண்டும் என்றும் கேட்கத்தோன்றலாம்.

ஏனெனில் நீங்கள் வைத்திருப்பது ஸ்மார்ட் டூத் பிரெஷ் என்பது தான் இந்த கேள்விகளுக்கான பதில். மாயாஜால கதைகளில் மந்திரவாதியின் உயிர் கிளியின் வயிற்றுக்குள் இருப்பதாக சொல்லப்படுவது போல இந்த ஸ்மார்ட் டூத் பிரெஷின் இயக்கம் செல்போனுக்குள் இருக்கும் செயலிக்குள் ( ஆப்) இருக்கிறது. பல் துலக்கலின் ஒவ்வொரு அசைவையும் அந்த செயலி கண்காணிக்கும் குறிப்பெடுக்கும்.உங்களுக்கு அறிக்கை தரும். ஆகவே தான் பல் துலக்கும் போது செல் போன், அதிலும் ஸ்மார்ட் போன் தேவைப்படுகிறது.

 

 

நிச்சயமாக பல் துலக்குவது இந்த அளவுக்கு நுட்பமானதாக, தொழில்நுட்பம் சார்ந்தததாக ஆகும் என்று நினைத்துப்பார்த்திருக்க மாட்டோம். இது நுட்பமானதா ? இல்லை சிக்கலானதா? ஆலங்குச்சியிலும் வேலங்குச்சியிலும் பல் துலக்கியவர்கள் தான் நாம். பின்னர் டூத் பிரெஷ் அறிமுகிமானது. ஆலாங்குச்சியுடன் ஒப்பிட்டால் டூத் பிரெஷே கூட நவீனமானது தான். அதன் பின்னர் மின்சார டூத் பிரெஷ்கள் அறிமுகமாயின. அதானது தானியங்கி டூத் பிரெஷ்கள். மேலும் கீழாக தானாக பல் தேய்த்துவிடும் இந்த வகை டூத் பிரெஷ்கள் 1950 களில் அறிமுகமாயின.

1954 ல் சுவிட்சர்லாந்து நாட்டைச்சேர்ந்த பிலிப் கய் வூக் (Philippe-Guy Woog.  ) எனும் டாக்டர் பிராக்ஸ்டண்ட் (  Broxodent) எனும் பெயரில் மின்சார டூத்பிரெஷை உருவாக்கினார். ஆரம்பத்தில் கைகளை சுதந்திரமாக அசைக்க முடியாத உடலியக்க குறைபாடுகள் கொண்ட நோயாளிகளுக்காகவே இது அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இவை  வர்த்தக நோக்கிலும் அறிமுகமாயின. 1960 களில் ஜெனரல் எல்க்ட்ரிக் நிறுவனமும் மின்சார டூத்பிரெஷை சந்தைக்கு கொண்டு வந்தது. இந்த மின்சார டூத் பிரெஷ்கள் எதிர்பார்த்த அளவுக்கு பிரபலமாகவில்லை.

21 ம் நூற்றாண்டில் இப்போது டூத் பிரெஷ்கள் ஸ்மார்ட் டூத் பிரெஷ்களாக அவதாரம் எடுக்க காத்திருக்கின்றன. வெறும் தொழில்நுட்ப புதுமை என்பதை கடந்து இந்த நவீன பிரெஷ்களை நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்மார்ட் பிரெஷ் என்றால் சென்சார்கள் பொருத்தப்பட்டவை. அவற்றுக்கென உருவாக்கப்பட்ட செயலியுடன் தொடர்பு கொள்ளக்கூடியவை. இந்த தொடர்பு மூலம் ஒருவர் பல் துலக்கும் விதத்தை கண்காணித்து அதை மேம்படுத்த உதவக்கூடியவை. டேட்டா ,டேட்டா ( தரவுகள்) என்று சொல்கின்றனரே , அவை பல் துலக்குவதிலும் உண்டு. அந்த விவரங்களயும் நுப்டங்களையும் சேகரித்து ,அலசி ஆய்வு செய்து மேலும் சிறப்பாக பல் துலக்க வழி காட்டுவது தான் ஸ்மார்ட் பிரெஷ்ஷின் பணி.

பல் துலக்குவதில் என்ன நுட்பம் இருக்ககூடும் என்று கேட்பதற்கில்லை.

 

 

நாம் சாதாரணமாக நினைத்தாலும் பல் துலக்குவதற்கு ஒரு சரியான முறை இருக்கிறது. குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்களாவது பல் துலக்க வேண்டும். மேலும் கீழும் தேய்ப்பது போல் துலக்க வேண்டும். பல்லின் நான்கு பகுதிகளிலும் இப்படி சராசரியாக தல 30 விநாடிகளை செலவிட வேண்டும். பல் வலிக்காக மருத்துவரிடன் போகும் போது தான் இந்த முறையின் அருமை தெரியும்.
இந்த நுப்டங்களையும் பலரும் உணர்வதில்லை. பின்பற்றுவதும் இல்லை.

இந்த குறையை போக்க தான் ஸ்மார்ட் பிரெஷ்கள் வந்திருக்கின்றன.

இந்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்காவின் லெஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட கோலிப்ரி (Kolibree ) டூத் பிரெஷ் இந்த ரகம் தான். பார்ப்பதற்கே நவீன தோற்றம் கொண்ட கோலிபிர் டூத் பிரெஷ் பல சென்சார்களை கொண்டது. வேகமாணி, கெய்ராஸ்கோப் ,டிஜிட்டல் காம்பஸ் என பல வகை சென்சார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு வேலை இருக்கிறது. அதாவது பல் துலக்குபவர்  எவ்வள்வு நேரம் பல் துலக்குகிறார், வாயின் நான்கு பகுதிகளிலும் துலக்குகிறாரா? மேலும் கீழுமாக சரியான வித்த்தில் பல துலக்குகிறாரா என்பதை இந்த சென்சார்கள் குறிப்பெடுத்து ப்ளுடூத் மூலம் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பி வைக்கும். அதில் உள்ள செயலி இந்த விவரங்களை எல்லாம் சேமித்து கொள்ளும். மாத இறுதியில் , அந்த நபர் ஒழுங்காக பல் தேய்த்தாரா? இல்லையா? என்பதை இந்த செயலில் அறிக்கையாக தயாரித்து தந்துவிடும். நடுவே எப்போது பல் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதையும் இந்த செயலியே நினைவூட்டும். பல துலக்கும் விதம் மோசமாக இருக்கிறதா? அது பற்றியும் செயலியே எச்சரிக்கை செய்யும்.

பல் டாக்டரிடம் செல்லும் போது அவரிடம் எதையுமே சொல்ல வேண்டாம். செயலியை பார்த்து அவரே புரிந்து கொண்டு விடுவார். பல் வலிக்கான தொடர் சிகிச்சை எடுத்து கொள்ள நேர்கிறதா? இந்த செயலியை பல் ,மருத்துவரின் போனிலும் இணைத்து விடலாம். அதன் வழியே அவர் நோயாளி பல் துலக்கும் வித்த்தை கண்காணித்து தேவையான ஆலோசனைகளை வழங்குவார்- செயலி மூலம் தான். 
ஆக, சோம்பலாலோ ,அலட்சியத்தாலோ தப்பும் தவறுமாக பல துலக்கும் செயலுக்கு இந்த வகையான நவீன பிரெஷ்கள் முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டூத் பிரெஷ்ஷே கண்காணிக்கும் என்பதால் எப்படி பல் துலக்க வேண்டுமோ அப்படி துலக்கலாம் – அப்படி தான் நம்பச்சொல்கிறார் பிரெஞ்சு பொறியாளரான தாமஸ் செர்வால் (Thomas Serval) . இவர் தான் கோலிப்ரி டூத் பிரெஷ்ஷை வடிவமைத்து உருவாக்கியிருப்பவர்.

எல்லோரும் செய்யும் பல் துலக்குவது போன்ற வழக்கமான செயல்களுக்கு இப்படி அலட்டிக்கொள்வது தேவையா எனும் கேள்வி இயல்பானது தான். இந்த கேள்விக்கான பதில் என்ன என்றால் வழக்கமான செயலை மேலும் சுவாரஸ்யமானதாகவும் சீரானதாகவும் ஆக்குவது என்பது தான் !

பலரும் ஒழுங்காக பல் தேய்ப்பதில்லை என்பது பல் மருத்துவர்களின் ஆதங்கம். குறைந்த பட்சம் குழந்தைகள் விஷயத்தில் இதை தாராளமாக பெரியவர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் பிள்ளைகளை சீராக பல் துலக்க வைப்பது எப்படி? பல் தேய்க்கும் செயலையே ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக ஆக்கி விட்டால் என்ன? இதை தான் செர்வால் செய்திருக்கிறார். சென்சார்கள் கொண்ட பிரெஷ் பல துலக்கும் விதத்தை புள்ளிவிவரங்கள் மூலம் அழகாக படம் பிடித்து காட்டிவிடுவதால் பிள்ளைகளும் சரி பெரியவர்களும் சரி அதில் ஆர்வம் கொள்வார்கள். தினசரி பழக்கத்தால் பல் துலக்குவதில் ஏற்படக்கூடிய சுணக்கத்தை இந்த பிரெஷ் சுட்டிக்காட்டி திருத்தும். 
அது மட்டுமா? ஒழுங்காக பல் துலக்குவதை ஒரு சாதனையாகவும் இதன் செயலி முன்னிறுத்தும். மாதம் முழுவதும் தினமும் சரியாக இரண்டு நிமிடம் பல் துலக்கியிருக்கிறீர்கள் என்று செயலி அறிக்கை தரும் போது சாதித்த உணர்வு இருக்காது ? ஸ்மார்ட் போன் மூலம் இந்த விவரத்தை பேஸ்புக்கிலும் கூட பகிர்ந்து கொள்ளலாம். நான் ஒழுங்காக பல் துலக்குகிறேன், நீங்கள் எனும் கேள்வியுடன் ! 
பிள்ளைகள் விஷயத்தில் இது கூடுதல் உற்சாகத்தை தரலாம். பெரியவர்களை பொறுத்தவரை பல துலக்கும் போது செயலியில் அன்றைய தின செய்திகளை படித்துக்கொள்ளலாம். இவ்வளவு ஏன் , இந்த டூத் பிரெஷில் செயல்படக்கூடிய பிரத்யேக செயலிகளும் கூட உருவாக்கப்படலாம். அப்போது காலை நேர பல துலக்கல் இன்னும் சுவாரஸ்யம் மிக்கதாக மாறும். யோசித்திப்பாருங்கள் தூங்கி வழிந்து கொண்டு சோம்பலோடு பல துலக்குவதற்கு மாறாக செய்திகளை படித்துக்கொண்டு , செயலிகளோடு உரையாடிய படி , பல் துலக்கும் புள்ளி விவரத்தின் மீதும் ஒரு கண் வைத்திருப்பது எப்படி இருக்கும் என்று!

இந்த பிரெஷ்ஷை வடிவமைத்த டாக்டர். செர்வால் தனது பிள்ளைகளை நன்றாக பல் துலக்க வைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்த போது , இந்த வழக்கத்தையே ஸ்மார்ட் போனுடன் இணைத்து சுவாரஸ்யமானதாக மாற்றினால் என்ன எனும் யோசனை பளிச்சிட்டதாக சொல்கிறார். அப்படியே மின்சார டூத்பிரெஷ்களை சரியாக பயன்படுத்த வைப்பதற்கான சரியான வழியாகவும் இது இருக்கும் என்று சொல்கிறார்.

இதே போலவே டூத் பிரெஷ் தயாரிப்பில் புகழ் பெற்ற ஓரல் பியும் ஸ்மார்ட் டூத் பிரெஷை உருவாக்கியுள்ளது. ஓரல் பி ஸ்மார்ட் பிரெஷ்ஷில் ஆறு வகையான செயல்களை அமைத்துக்கொள்ளலாம் என்கிறது . இதற்கு முன்பாகவே பீ ம் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒரு ஸ்மார்ட் பிரெஷை அறிமுகம் செய்த்து. ஆனால் அது மின்சார பிரெஷ் அல்ல. இருந்தும் செயலியுடன் இணைக்கப்பட்டு பல் துலக்கும் செயல்பாட்டை கண்காணிக்க கூடியது.

 

 

இந்த டூத் பிரெஷ்கள் வியக்க வைக்கலாம்.மலைக்க வைக்கலாம். இவற்றில் விலையும் தலை சுற்ற வைக்கலாம். கோலிப்ரியின் டூத் பிர்ஷ் 100 முதல் 200 டாலர் வரை விலையிலானது. இந்த ஆண்டு இறுதிவாக்கில் இந்த பிரெஷ் வர்த்தக் நோக்கில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை எந்த அளவுக்கு தினசரி வாழ்வின் அங்கமாகும் என்பது பதில் தெரியாத கேள்வி தான் என்றாலும், தொழில்நுட்பம் எந்த அளவுக்கு அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்து விட காத்திருக்கிறது என்பதன் அடையாளமாகவே இவை இருக்கின்றன. இதற்கு இன்னொரு உதாரணம் வேண்டும் என்றால் ஸ்மார்ட் கரண்டிகளை சொல்லலாம். ஹேப்பிஃபோர்க் என்னும் பெயரில் இந்த கரண்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பிரெஷ் பல் துலக்குவதை கவனிப்பது போல இந்த ஸ்மார்ட் போர்க், சாப்பிடும் பழக்கத்தையும் வேகத்தையும் கண்காணிக்கிறது.

சாப்பிடும் போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர் அல்லவா? இந்த ஆலோசனையை கச்சிதமாக கடைபிடிக்க வைப்பதும் இந்த ஸ்மார்ட் போர்க்கின் நோக்கம். ஒருவர் எந்த வேகத்தில் சாப்பிடுகிறார், மொத்தம் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார், ஒவ்வொரு கவளம் சாப்பிவதற்கும் இடையே எடுத்துக்கொள்ளும் நேரம் என்ன? போன்ற விவரங்களை இந்த போர்க் கவனித்து சொல்கிறது. இந்த விவரங்கள் இணையத்தில் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படலாம். இதற்கான பிரத்யேக செயலிகளும் இருக்கின்றன.

உணவு பழக்க குறைபாடு, ஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் இந்த போர்க் உதவியாக இருக்கும். உடல் எடை குறைக்கும் இலக்கிலும் இது கைகொடுக்கும். சரியான நேரத்தில் சரியான முறையில் சாப்பிட வழிகாட்டுவதாக இந்த ஸ்மார்ட் போர்க் பின் உள்ள ஹாப்பிபேப்ஸ் தெரிவிக்கிறது.

 

 

இதே போல லிப்ட்லேப்ஸ் எனும் நிறுவனம் பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஸ்மார்ட் போர்க்கை உருவாக்கி காட்டியது. பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் உண்டாகும் நடுக்கத்தை பெருமளவு சமன் செய்து நிலையான தன்மையை இவை அளிக்கும் திறன் கொண்டவை.

தினமும் செய்யும் சாதாரண செயல்களை தொழில்நுட்பத்தின் உதவியோடு உற்று கவனிப்பதும் மேம்படுத்துவதும் சாத்தியத்தை இவை உணர்த்துகின்றன. தொழில்நுட்ப மிகை என்று சிலர் இவற்றை கருதலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் இந்த வகை தொழிநுட்பங்கள் உண்டாக்கும்கூடிய பயன்கள் அளவில்லாதவை.

இவை பல வித வடிவங்களில் நம் வாழ்வில் நுழைய காத்திருக்கின்றன. உடற்பயிற்சியை கண்காணித்து முறைப்படுத்தும் ஸ்மார்ட் பட்டைகள் இருக்கின்றன. இவை பொதுவாக இண்டெர்நெட் ஆப் திங்ஸ் எனும் கருத்தாக்கத்தின் கீழ் வருகின்றன. இன்னொரு பக்கம் வியரபில்  கம்ப்யூட்டங் எனப்படும் அணி கண்ணி தொழில்நுப்டமும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.வீடுகளில் உள்ள எல்லா பொருட்களும் இணையத்துடன் இணைக்கப்படலாம் என்கின்றனர். வீடே கூட ஸ்மார்ட் வீடாகும் என்கின்றனர்.

இப்படி வீட்டுக்குள்ளும், வாழ்க்கைக்குள்ளும் நுழைய தயாராக உள்ள தொழில்நுட்பங்களை தொடர்ந்து பார்ப்போம். பிரம்மிப்போம்.

கட்டுரைக்கான இணைப்புகள்;
 1. http://www.kolibree.com/
2. http://connectedtoothbrush.com/
3. http://www.hapi.com/products-hapifork.asp

http://www.4tamilmed...ation/24305-tec4தமிழ்மீடியாவிற்காக: சைபர் சிம்மன்

ட்விட்டர்: https://twitter.com/iamcybersimman

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால தொழில்நுட்பம் - 4: சுய தொடர்தலும், சுய கண்காணிப்பும்

s-5.jpeg

 

ஜார்ஜ் ஆர்வெல் தனது கல்லறையில் புன்னகைத்துக்கொண்டிருக்கலாம். அல்லது கவலையால் நெளிந்து கொண்டிருக்கலாம். கற்பனையில் தொலைநோக்கின் எல்லையை தொட்டு அவர் எழுதிய 1984 நாவலில் விவரித்திருந்த கண்காணிப்பு சமூக்ததை நவீன தொழில்நுட்பம் நிதர்சனமாக்கி கொண்டிருக்கிறது.

எல்லோரும் எல்லா நேரங்களிலும் கண்காணிக்கப்படும் தனது கற்பனை இந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமாகும் என்று ஆர்வெல்லே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அவரது நாவலில் கண்ணுக்கு தெரியா சக்தியாக அச்சுறுத்திய பெரியண்ணன் ( பிக் பிரதர்) நவீன வாழ்க்கையில் எந்த எந்த மூளையில் இருந்தோ எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறார். அரசு அமைப்புகள் பிரஜைகளின் செயல்களை கண்காணிக்கின்றன. இணைய நிறுவனங்கள் பயனாளிகளின் ஒவ்வொரு அசைவையும் குறித்து வைத்துக்கொள்கின்றன. இமெயில் வாசகங்கள் ஆராயப்படுகின்றன. ஒருவரின் இருப்பிடம் மிக எளிதாக அடையாளம் காணப்படுகிறது. ஒருவரின் எந்த செயலும் சுதந்திரமானதல்ல என்று சொல்லக்கூடிய அளவுக்கு எல்லாமும் எதாவது ஒரு விதத்தில் கண்காணிக்கப்படுவது சாத்தியமாகி இருக்கிறது. எவரையும் தொடர்வது சுலபமாகி இருக்கிறது. மக்கள் செயல்கள் விவரங்களாக சேகரிக்கப்பட்டு பிக்டேட்டாவாக தொகுத்து வைக்கப்படுகின்றன.

இந்த பிக் டேட்டா தனிநபர்களின் தேவையையும் விருப்பத்தையும் தீர்மானித்து அவர்களே எதிர்பார்த்திராத தேவைகளை அவர்களுக்கு ஏற்றதாக கண்டறிந்து சொல்கின்றன. சூப்பர் மார்க்கெட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் கூடுதலாக நின்று உற்றுப்பார்த்ததை வைத்து குறிப்பிட்ட ஒருவர் குறிபிட்ட ஒரு வகை பொருளை விரும்புவதாக புரிந்து கொண்டு வர்த்தக நிறுவனம் அவரை குறி வைத்து தாக்குகிறது. அந்தரங்க உரிமை என்பது கண்ணுக்குத்தெரியாத ஊடுருவல்களாலும் கண்காணிப்பாலும் கேள்விக்குறியாகி இருக்கிறது. 

இந்த கண்காணிப்புக்கு அரசுகள் பாதுகாப்பை காரணம் காட்டுகின்றன. இணைய நிறுவனங்கள் பயனாளிக்கேற்ற பிரத்யேக சேவை அளிக்கும் முயற்சி என்கின்றன. ஆனால் வல்லுனர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இவற்றை அந்தரங்க உரிமையின் பாதிப்புகளாக எசரிக்கின்றனர்.

இவற்றின் உண்மையான பாதிப்பையும் விபரீத்தையும், கண்காணிப்பில் இருந்து தற்காத்தல் உண்டா என்பதையும், வருங்காலத்தில் தான் முழுமையாக உணரப்போகிறோம்.தொழில்நுட்பம் மூலமான கண்காணிப்பின் மிரட்டும் அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த கண்காணிப்புக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது தான் சுய கண்காணிப்பும் சுய தொடர்தலும்! இந்த இன்னொரு முகத்தை ஜார்ஜ் ஆர்வெல்லே கூட கற்பனை செய்திருக்கவில்லை. கைப்பட்டைகளாகவும், கைகடிகாரங்களாகவும் ,கழுத்தணிகளாகவும் இந்த கண்காணிப்புக்கான சாதனங்கள் உருவாக்கப்பட்டு நம்மை நாமே பின் தொடர வழி செய்து கொண்டிருக்கின்றன.

இன்று உடற் பயிற்சி செய்தேமா ? அதை கண்காணித்து சொல்ல ஒரு சாதனம் இருக்கிறது. இன்று எத்தனை அடிகள் எடுத்து வைத்தோம் ,அதை சொல்லவும் ஒரு சாதனம் இருக்கிறது. ஒழுங்காக தூங்கினோமா ? அதை அளந்து சொல்லவும் ஒரு சாதனம் இருக்கிறது. இன்னும் எதற்கெல்லாம் சாதனங்கள் வேண்டும். கேளுங்கள் அதற்கும் சாதனங்கள் தயாராக இருக்கின்றன.

இந்த சாதனங்கள் பல வடிவங்களில் வருகின்றன. பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன. பல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. ஆய்வுக்கூடங்களில் இன்னும் பல அறிமுக அவதாரம் எடுக்க காத்திருக்கின்றன. இந்த சானங்களின் அடிப்படை செயல்படு அவற்றை அணிபவரின் செயல்களை கவனித்து கணக்கெடுத்து சொல்வது. இவற்றின் மூலம் ஒருவர் தன்னைத்தானே தொடரலாம் . அதாவது சுய கண்காணிப்பில் ஈடுபடலாம்.

 

இவற்றில் மிகவும் பிரபலமாக இருப்பதும் பரவலாக பயன்படுத்தப்படுவதும் பிட்னஸ் டிராக்கர் என சொல்லப்படும் உடற்பயிற்சி கண்காணிப்புக்கான அணி பட்டைகள் . ஃபிட்பிட்டில் துவங்கி நைக் கைவிட்ட ஃபியல்பேண்ட் வரை இவற்றை பலவிதங்களில் கைகளில் அணிந்து கொள்ளலாம். அலங்காரத்துக்கு அணியும் பட்டை போல் தோன்றினாலும் இவை அதற்கும் மேலானவை. சின்னஞ்சிறிய சென்சார்கள் பொறுத்தப்பட்ட இந்த பட்டைகள் அசைவுகளையும் ஓட்டத்தையும் கவனித்து உணரும் நுண்ணறிவு கொண்டவை. தன்னை அணிந்து கொண்டிருப்பவர்கள் ஒரு நாளில் எத்தனை அடி எடுத்து வைக்கின்றனர், எவ்வளவு தூரம் நடக்கின்றனர் அல்லது ஓடுகின்றனர் என்று குறித்து வைத்து தகவல் தருகின்றன. உண்ட உணவு முறையாக செரிக்கும் அளவுக்கு தேவையான நடமாட்டம் இருந்ததா ? உணவின் கலோரிகள் முற்றிலுமாக பயன்பட்டனவா?என்றும் இவை சொல்கின்றன.

இந்த பட்டைகள் உடலோடு ஒட்டிக்கொண்டிருந்த படி ஓட்டத்தையும் நடையயும் சேகரிக்கின்றன. இந்த பட்டைகளுக்கு ஒரு கூட்டாளியும் உண்டு .நமது பாக்கெட்டிலேயே இருக்கும் ஸ்மார்ட் போன் தான் அந்த கூட்டாளி. ப்ளுடூத் மூலம் போனுக்கு இவை சேகரிக்கப்பட்ட தகவல்களை பொறுப்பாக அனுப்பி வைக்கின்றன. போனுக்குள் இதற்காகவே காத்திருக்கும் பிரத்யேக செயலிகள் தகவல்களை அலசி ஆராய்ந்து, பயனாளிக்கு அறிக்கை அளிக்கின்றன. ’நீங்கள் இன்று தேவையான அளவு நடந்துள்ளீர்கள், நன்று!’ என சொல்லி ஊக்குவிக்கின்றன. இல்லை இன்று போதுமான உடற்பயிற்சி செய்யவில்லை, கவனம் நான்காவது நாளாக இலக்கை கோட்டை வீட்டுள்ளீர்கள் என்பது போல எச்சரிக்கை செய்யலாம். இப்படி தான் இந்த பட்டைகள் செயல்படுகின்றன.

 

சுய மேம்பாட்டிற்கு ஆசைப்படும் பலரும் இந்த தொழில்நுட்ப பட்டைகளை விரும்பி பயன்படுத்தி தங்களைப்பற்றி தாங்களே கோட்டைவிடும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். நினைத்தபடி நடை பயிற்சியிலும் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டோமா என்பதை அறிய தங்களை தாங்களே கண்காணித்துக்கொள்ள உடன் படுகின்றனர். இதற்கு சுய தொடர்தல் (self-tracking) என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. ஆச்சர்யப்படக்கூடிய வகையில் இந்த சுய தொடர்தல் , ஒரு இயக்கமாகவே உருவாகி இருக்கிறது. இந்த இயக்கம் மதிப்பிடப்பட்ட சுயம் (Quantified Self) என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒருவரது தினசரி வாழ்க்கை செயல்பாடுகள் பற்றிய தகவல்களை தொழிட்நுட்பம் மூலம் சேகரிப்பது என்று பொருள். நம்மை நாமே அறிதலுக்கு ஆன்மிகம் ஆயிரம் வழி சொல்கிறது என்றால் , அறிவியல் காட்டும் வழி இது. பாடி ஹேக்கிங் , மனிதநேய அறிவு என்றெல்லாமும் இவை அழைக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் மூலமான சுய கண்காணிப்பு வழியே சுய அறிவை பெறுவது என்றும் இந்த கருத்தாக்கம் வல்லுனர்கள் விவரிக்கப்படுகிறது.

எந்த பெயரில் அழைத்தாலும் இவற்றின் அடிப்படை செயல்பாடு என்னவோ சென்சார் மூலம் ஒருவரது செயலை அளந்து குறித்து வைத்து, சாப்ட்வேர் மூலம் அலசிப்பார்த்து முன்னேற வழி சொல்வது. இதெற்கெல்லாம் கூடவா தொழில்நுட்பம் என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் இதை தொழில்நுட்ப ஜனநாயகமாக்கல் என்று சொல்லலாம். இதன் பின்னே வர்த்தகமயமாக்கலும் உண்டு!

தடகள வீர்ர்களும் விளையாட்டு வீர்ர்களும் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள அவர்கள் ஒவ்வொரு செயலையும் ஆய்வு செய்து கொள்ளும் தேவை ஏற்பட்ட்து. ஆரம்பத்தில் பயிற்சியாளர் தரும் ஆலோசனையே இதற்கு போதுமானதாக இருந்தாலும் பின்னர் புதிய இலக்கை அடைய கூடுதல் துல்லியத்துடன் தகவல்கள் தேவைப்பட்டன. ஆரம்பத்தில் இந்த சாதனங்கள் பெடோமீட்டர் என்று குறிப்பிடப்பட்டன. பெரும்பாலும் இவை இடுப்பில் அணியப்பட்டன. மின்னணு அல்லது மின்னணு இயக்கவியல் மூலம் இவை செயல்பட்டன. தடகள் வீர்ர்களும் சைக்கிள் பந்தைய வீர்ர்களும் தங்கள் உடல் திறனை மேலும் செதுக்கி கொள்ள இவை தரும் தகவல்கள் கைகொடுத்தன. தொழில்நுட்பம் வளர்ந்து சென்சார்கள் அளவில் சிறியதாகி அவற்றைன் உற்பத்தி செலவும் பெருமளவு குறைந்த நிலையில் இவை கைப்பட்டைகளாக அழகிய வடிவம் எடுத்து அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக பரவலாகி இருக்கின்றன. 

இவற்றின் பின்னே இருப்பது வெறும் தொழில்நுட்பம் மட்டும் அல்ல; ஊக்கம் தரும் உளவியலும் இதனுள் மறைந்திருக்கிறது.

 

ஆர்வமும் , விருப்பமும் மனித இயல்பு போல சோம்பலும் மறதியும் உடன் பிறந்த குணமாக இருக்கிறது அல்லவா? இவற்றை தொழில்நுட்பம் வழியே வெற்றி கொள்வது தான் , கைப்பட்டை போன்ற அணி கண்காணிப்பு சாதங்களின் நோக்கமாக இருக்கிறது.

இந்த தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் யாருக்கு தான் இல்லை. சுறுசுறுப்பான செயல்பாடு மூலம் உடலை சீராக வைத்திருக்க வேண்டும் என்ற வேட்கையும் தான் பலருக்கு இருக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டிலும் எத்தனை பேர் உத்வேகத்துடன் உடற்பயிற்சிக்கான உறுதி மொழி எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் அதை தொடர்வது தானே சவாலாக இருக்கிறது. தினமும் குறித்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தான் எத்தனை சிக்கலாக இருக்கிறது. நாளடைவில் சோம்பல் அல்லவா ? வெற்றிகொள்கிறது.

இந்த நிலையை தவிர்க்க தான் , பிட்னஸ் பேண்ட் என்று சொல்லப்படும் கைப்பட்டை கண்காணிப்பு சாதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை அணிந்து கொண்டால், நடப்பதற்கும் ஓடுவதற்கும் நாமே மறந்தால் இவை நினைவூட்டும் என்று நம்ப படுகிறது. அதாவது நம்மை நாமே நம்ப முடியாத போது நம்மை வெற்றிக்கொள்ள தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.இந்த சானங்கள் தரும் தகவல்கள் மூலம் உடற்பயிற்சி திசையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோமா என்பதை தெரிந்து கொள்ளலாம். தினமும் இலக்கை பூர்த்தி செய்வதை பார்த்தால் நமக்கே உற்சாகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அல்லது இலக்கை தவற விட்டிருப்பதை பார்த்தும் நம்மை சரி செய்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமா? ஸ்மார்ட் போன் மூலம் இந்த தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இது ஒரு கூட்டு முயற்சியாக அமையும். இலக்கை கோட்டை விட்டால் நண்பர்கள் கேலியாக நினைக்கலாம் . அல்லது நண்பர்கள் ஊக்கம் அளித்து முடுக்கி விடலாம்.

கைப்பட்டைகளை தயாரிக்கும் வரத்தக நிறுவனங்கள் இப்படி எல்லாம் தான் சொல்கின்றன.

உடற்பயிற்சிக்கும் உடல் இளைப்பதற்கும் மட்டும் இவை பயன்படவில்லை. நடையை கண்காணிப்பது போலவே , ஒருவரது இதயத்துடிப்பையும் இவை கண்காணிக்க முடியும் என்பதால் மருத்துவ நோக்கிலும் இவை பயன்படலாம். இரத்த அழுத்தம் போன்றவற்றை கண்காணிக்கவும் பயன்படலாம். அது மட்டுமா? ஒருவர் நன்றாக தூங்குகிறாரா? என கண்காணிக்கவும் கூட இவை பயன்படலாம். இவை ஸ்லீப் டிராக்கர் எனப்படுகின்றன. தினமும் காலையில் கண் விழித்த்தும் , நனறாக தூங்கினோமா? என்பதை ஸ்மார்ட் போனை பார்த்து தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக தான் இருக்கும் இல்லையா?

ஆனால் தூக்கம் பற்றிய அறிவியல் பெரிய துறையாக இருக்கும் போது இதை அலட்சியப்படுத்துவத்ற்கில்லை தான்.

இவ்வளவு ஏன், ஸ்பைய எனும் நிறுவனத்தின் கைப்பட்டை கண்காணிப்பு கருவி ஒருவரது மனநிலையையும் கண்காணித்து சொல்வதாக கூறப்படுகிறது தெரியுமா? அதாவது அணிபவரின் இதய துடிப்பு போன்றவற்றை கண்காணித்து அவர் பதற்றம் அடைந்துள்ளாரா என கண்டுபிடித்து கொஞ்சம் இழுத்து மூச்சு விச்சு ஆசுவாசம் கொள்ளவும் என இந்த பட்டை ஆலோசனை சொல்லும் என்கிறனர். விநோதமா ?வியப்பா?

 

ஆக சுய கண்காணிப்பு பழக்கம் சூடு பிடித்திருக்கிறது. ஆனால் இந்த கைப்பட்டைகள் நடைமுறையில் எதிர்பார்த்த பலன் தரவில்லை ,இவற்றை வாங்கிவர்கள் பலரும் இதை கிடப்பில் போட்டு விடுகின்றனர் என்றும் சமீபத்திய போக்குகள் சொல்கின்றன. ஆனால் , வர்த்தக நிறுவன்ங்களோ போட்டி போட்டுக்கொண்டு புதிய கைப்பட்டைகளை அறிமுகம் செய்கின்றன. கூகிள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவன்ங்களுக்கும் இதில் ஆர்வம் உள்ளன .சமீபத்தில் கூட சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் குறைந்த விலையில் புதிய கைப்பட்டை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது மட்டுமா பல தொழில்நுட்ப தளங்களும் பத்திரிகைகளும் பிட்னஸ் டிராக்கர்களில் எது சிறந்தவை என்று பட்டியல் போட்டு அவற்றின் குறை நிறைகளை அலசிக்கொண்டிருக்கின்ற்ன. மிகச்சிறந்த கைப்ப்ட்டைகள் எனும் பட்டியலும் கூட பல தளங்களில் இடம் பெற்றுள்ளன.

இதனிடையே இந்த கைப்பட்டைகள் தொழில்நுட்பத்தில் எந்த குறையும் இல்லை.ஆனால் அவற்றின் வடிவமைப்பில் மாற்றம் தேவை என்னும் கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இந்த கைப்பட்டைகள் அணிவதற்கு ஏற்ற வகையில் நேர்த்தியாக இருப்பது அவசியம் என்று சொல்கின்றனர். இத்தகையை அழகியல் மட்டும் அல்ல, இவற்றுக்கு நாம் அணியும் சட்டை ,டீசட்டை போல அணியும் தன்மையும் தேவை என்கின்றனர்.

ஆம், அணியக்கூடிய தன்மை தான் இவற்றின் பயன்பாட்டை முழுமையாக உணர வைக்கும் என்று வல்லுனர்கள் சொல்கின்ற்னர்.

அணியக்கூடிய தன்மை என்பது , அணி கணிணி அதாவது வியரபில் கம்ப்யூட்டிங் என்று சொல்லப்படுகிறது. ஆய்வு கூட அளவிலேயே இருந்த இந்த தொழில்நுட்பம் நடைமுறை வாழ்க்கையில் ஊடுருவத்துவங்கியிருக்கிறது. இவை வருங்காலத்தில் நாம் ஆடை அணியும் வித்தையே மாற்றலாம். ‘அணி கணிணி துறையையும் அதன் தொடர்புடைய பல ஆச்சர்ய அம்சங்களையும் ஆய்வுகளையும் தொடர்ந்து பார்க்கலாம்.

 

4தமிழ்மீடியாவிற்காக: சைபர் சிம்மன்

ட்விட்டர்: https://twitter.com/iamcybersimman

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால தொழில்நுட்பம் 5: ப்ளூடூத் காதணிகளும் வயர்லெஸ் வளையல்களும்.

 

எதிர்காலத்தில் நம்முடைய துணிகள் நம்முடைய சாதனங்களுக்கு பதிலாக அமைந்திருக்கும். பிரபல தொழில்நுட்ப பத்திரிகையான வயர்டு 2013 மே மாத இதழின் கட்டுரை ஒன்றின் ஆரம்ப வரி.

பருத்தியால் ஆன டிரான்சிஸ்டர்களை உருவாக்கி வருகிறோம். இந்த துணி ரகம் மின்னணு சாதனமாக இருக்கும். - ஜுவான் ஹைனஸ்ட்ரோசா, கார்னெல் பல்கலை ஆய்வாளர்.

ஸ்மார்ட் போன்கள் சர்வ சகஜமாகிவிட்டன. ஸ்மார்ட் வாட்ச்களும் இந்த வரிசையில் சேர தயாராகி வருகின்றன. ஸ்மார்ட் வாட்ச்கள் உண்மையில் ஸ்மார்ட் போன்களின் தோழர்கள் போல தான். போனில் வரும் செய்தியையும் தகவல்களையும் , கையை தூக்கி வாட்சிலேயே பார்த்துக்கொள்ளாமம். இரண்டும் ப்ளுடூத் மொழில் பேசிக்கொண்டு நம்முடைய வேலையை எளிதாக்கும்.

ஸ்மார்ட் வாட்ச் சரி, ஸ்மார்ட் மோதிரம் ,ஸ்மார்ட் சங்கிலி என ஸ்மார்ட் நகைகளும் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? ப்ளுடூத் காதணி மட்டும் அல்லாமல் ஆடைகளிலேயே ஸ்மார்ட் ஆடைகளும் உருவாக்கப்பட்டு பலவேறு வடிவங்களில் சோதனை செய்யப்பட்டு வருவதும் உங்களுக்குத்தெரியுமா?

 

ஸ்மார்ட் ஆடையிலேயே ஸ்மார்ட் உள்ளாடைகளும் ஆய்வில் இருக்கின்றன. இன்னும் ஒரு படி மேலே போய் ஆடைகளின் அடிப்படையான துணி ரகத்தையே ஸ்மார்ட் தன்மை கொண்டாதாக உருவாக்கும் ஆய்வுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவை தவிர இருக்கவே இருக்கின்றன கடந்த வாரம் பார்த்த பிட்னஸ் டிராக்கர்கள் என குறிப்பிடப்படும் கைப்பட்டைகளும், கூகிள் கிளாஸ் நவீன மூக்கு கண்ணாடியும் . இந்த நவீன மூக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டால் அதுவே புகைப்படம் எடுக்கும். பார்வையிலேயே இணையத்தில் உலா வரலாம். இன்னும் பல அறிவியல் புனைகதை சங்கதிகளும் சாத்தியமாகலாம். மேட்ரிக்சும், மைனாடரிட்ட ரிப்போர்ட்டும் ஹாலிவுட்டின் அதீத கற்பனை மட்டும் அல்ல; அவை வருங்கால சாத்தியங்கள்; அந்த வருங்காலமும் விரைந்து வந்து கொண்டிருக்கின்ற எனகின்றனர் ஆய்வாளர்களும் , தொழில்நுட்பவியலாளர்களும்.

ஆம் ,அணி கணிணி யுகம் எனும் அற்புதம் நம்மை எல்லாம் அரவணைக்க வந்து கொண்டிருக்கிறது.ஆங்கிலத்தில் வியரபில் கம்ப்யூட்டங் (Wearable Computing )  என்று பொதுவாக குறிப்பிடப்படும் அணி கணிகளை பற்றி பார்ப்பதற்கு முன் முதலில் ஸ்டீவ் மன்னிற்கு ( Steve Mann)  ஒரு தொழில்நுட்ப வணக்கம் சொல்லி விடுவோம்.

ஸ்டீவ் மன் தொழில்நுட்ப பேராசிரியர்,கண்டுபிடிப்பாளர்,விஞ்ஞானி, வடிவமைப்பாளர்,ஆய்வாளர், கலைஞர் என்று இன்னும் பல அடைமொழிகளுக்கு சொந்தக்காரர் . அவரைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால் நவீன லியானார்டோ டாவின்சி. அதைவிட முக்கியமான விஷயம் ஸ்டீன் மன் தான் அணி கணியியலின் முன்னோடி.

 

ஸ்மார்ட் வாட்ச் எல்லாம் வருவதற்கு முன், கூகிள் கிளாஸ் அறிமுகமாவதற்கு பல ஆண்டுகள் முன்பாக, ஸ்மார்ட் போன்களின் காலத்திற்கு முன்பே , ஹாண்ட் ஹெல்டு என்று சொல்லப்படும் கையடக்க கம்ப்யூட்டர்கள் காலத்திலேயே மனிதர் தலையில் காமிராவை மாட்டிக்கொண்டு திரிந்த மனிதர். ஞானக்கிறுக்கனான ஸ்டீவ் மன் அணி கணி யுகத்தின் தீர்கதரிசி. அணி கணிணி பயன்பாடு தொடர்பாக பல வித சோதனைகளை ஆய்வு நோக்கில் மேற்கொண்டு வரும் மன், அணி கணிகளுக்கான கருத்தாகக்ததையும் தெளிவாக முன் வைத்தவர்.

மன் பற்றி தனியாக இன்னும் விரிவாக பார்ப்போம், இப்போது அணி கணிணி பற்றி பார்ப்போம். அணி கணிணி அதாவது வியரபில் கம்ப்யூட்டர் என்றால் என்ன? இதற்கான எளிதான் பதில் அணியக்கூடிய கம்ப்யூட்டர். ஆனால் உண்மையில் அணி கணிணி என்றால் எப்போதும் உடன் இருக்கும் கம்ப்யூட்டர் என்றும் பொருள் கொள்ள வேண்டும் என்கின்றனர். அணிவது சுலபத்தன்மையின் அடையாளம் என்றால் உடன் இருப்பது என்பது நமது வாழ்க்கையில் கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்பத்தை நீக்கமற நிறைந்திருப்பதாக ஆக்குவதை குறிக்கிறது. கம்ப்யூட்டருக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு இன்னும் நெருக்கமாவதையும் குறிக்கிறது. கணிணியும் நாமும் துணை கொள்வதால் புதிய வகையான அறிவும் சாத்தியாகும் என்கின்றனர்.

ஸ்மார்ட் வாட்ச்களை தொழில்நுட்ப சாதனங்களாக மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த கருத்தாக்கங்கள் வியப்பை அளிக்கலாம். நவீன சாதனங்களை தேவையில்லாத தொழில்நுட்ப இடைஞ்சல் என கருதுபவர்களுக்கு , இந்த சாதனங்கள் நம்முடைய அங்ககங்களின் நீட்டிப்பு என்று அணி கணிணி ஆய்வாளர்கள் சொல்வது நிச்சயம் யோசிக்க வைக்கும். அணி கணிணிக்குள் ஆழமாக அடியெடுத்து வைப்பதற்கு முன் இதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

நாம் நினைக்க கூடியது போல அணி கணிணிகள் அல்லது அணியக்கூடிய கம்ப்யூட்டர்கள் என்பது ஏதோ இந்த நூற்றாண்டு போன நூற்றாண்டு சங்கதி அல்ல. சொல்லப்போனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் கணக்குகளை எளிதாக கழுத்தில் அணித்து கொண்ட அல்லது கைவிரலில் மாட்டிக்கொண்ட அபாகஸ் சாதனமே முதல் அணி கணிணி என்கின்றனர். 1500 களில் நேரம் பார்ப்பதை எளிதாக்கிய கைகடிகாரங்களும் கூட ஒரு வகையில் அணி கணிணி தான் என்கிறனர்.

w-4.jpg

அதன் பிறகு மெயின் பிரேம் கம்யூட்டர்கள் உருவாக்கப்பட்டும் , தொடர்ந்து பிசி என்ப்படும் பர்சனல் கம்ப்யூட்டர் யுகம் ஆரம்பமான போது அறிமுகமான லேப்டாப்களும், பாம் டாப்களும் கூட ஒரு வகையில் அணி கணிணியின் முன் வடிவங்கள் என்கிறனர். கம்ப்யூட்டரில் இருந்து அணியக்கூடிய கம்யூட்டருக்கான பாய்ச்சலில் இந்த கையடக்க சாதனங்கள் இடைப்பட்ட பாலமாக இருந்தன. சென்சார்களை காதணிக்குள் வைத்து காதில் தொங்க விட்டுக்கொள்வது போல இவை சுலபமாக இல்லாவிட்டாலும் , தொழில்நுட்பத்தை கையில் எடுத்துச்செல்ல இவை வழி செய்தன என்பது முக்கியமானது. அணிணி கணிணியின் முக்கியமான அம்சமும் இது தான். தொழில்நுட்பம் எப்போதும் உடன் இருக்க வேண்டும்.

மெயின்பிரேம் கம்ப்யூட்டரிலும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் வீட்டிலும் அலுவலகத்திலும் தான் கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும். ஆனால் லேப்டாபை கையிலேயே வைத்திருக்கலாம் அல்லவா? இருந்தாலும் லேப்டாப்பை நடமாடும் போது இயக்குவது கடினமானது அல்லவா? மேலும் லேப்டாப்பை பயன்படுத்த அவற்றை ஆன் செய்ய வேண்டும் ஆப் செய்ய வேண்டும் அல்லவா? மாறாக நம்முடன் இருக்கும் கம்யூட்டர் என்பது எப்போதுமே இயக்கத்தில் இருக்க வேண்டும். அவற்றை ஆன் செய்து ஆப் செய்யும் அவசியம் இருக்க கூடாது. (இன்னொரு வித்த்தில் பார்க்க்ப்போனால் உலகின் முதல் அணி கணிணி என்று மகாபாரத்த்தில் வரும் கர்ணணின் கவச குண்டலத்தை கூட சொல்லலாம். கர்ணணின் கவசத்திற்கு கணக்கிடும் ஆற்றல் இல்லாவிட்டாலும் கூட எப்போதுமே கர்ணணின் உடலோடு இருந்தது என்ற வகையில் அது அணி கணிணி தான்.  )

எல்லாம் சரி , கம்ப்யூட்டரை லேப்ட்டாப்ப்பாகவோ ஸ்மார்ட் போன் வடிவிலோ கையில் கொண்டு செல்வது சரி, ஆனால் கம்ப்யூட்டரை ஏன் நம்முடனேயே வைத்திருக்க வேண்டும் – அணிகலனாக ? முதல் தேவை பயன்பாட்டு எளிமை. ஸ்மார்ட்போனை பாக்கெட்டில் இருந்து பார்ப்பதை விட கையில் கட்டியுள்ள கடிகாரம் மூலம் கையை உயர்த்தி பார்ப்பது சுலபம் இல்லையா? ப்ளு டூத் காதணியாகவோ அல்லது ஸ்மார்ட் மோதிரமாகவோ கையில் அணிந்திருக்கும் போது புதிய  இமெயில் பற்றிய அறிவிப்பை ஒரு சின்ன ஒளி விளக்கு சிரிப்பில் அறிந்து கொள்ளலாம்.

இன்னொரு முக்கியமான விஷ்யம் தொழில்நுட்ப சாதனங்கள் தனியே துருத்துக்கொண்டு இல்லாமல் நம்முடைய உடல் அங்கத்தின் இன்னொரு நீட்டிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அதாவது தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு நமது செயல்ப்பாட்டுக்குள் இரண்டறக் கலந்து விட வேண்டும் என்கின்றனர்.

w-8.jpg

இப்போது சைக்கிள் ஓட்டுவதை நினைத்துப்பாருங்கள். சீரான வேகத்தில் சைக்கிளில் செல்லும் போது நீங்கள் சைக்கிளில் ஓட்டுவதையே மறந்து விட்டு மிக இயல்பாக ஓட்டிச்செல்கிறீர்கள் அல்லவா? அப்போது ஏறக்குறைய சைக்கிளும் உங்கள் உடலின் நீட்டிப்பு போல ஆகி விடுகிறது. இதே போல தான் கம்ப்யூட்டரின் பயன்பாடும் இருக்க வேண்டும் என்கின்றனர் ஸ்டீவ் மன் போன்ற அணி கணிணி ஆய்வாளர்கள். ஆனால் சைக்கிளில் என்ன பிரச்சனை என்றால் செல்லுமிடம் வந்து விட்டால் சைக்கிளை தனியே விட்டுச்செல்ல வேண்டும். அணி கணிணி அப்படி இருக்க கூடாது எப்போதும் உடன் இருக்க வேண்டும். இருப்பதே தெரியக்கூடாது. ஆனால் தேவையான போது எளிதாக பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். இப்படி எல்லாம் அணி கணிணிக்கு இலக்கணம் இருக்கிறது.

அணி கணிணி என்பது பயனாளியின் தனிப்பட்ட வெளியில் பொதிந்திருப்பது. பயனாளியால் இயங்கக் கூடியது. தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் தொடர்பு கொள்ளக்கூடிய தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று ஸ்டீவ் மன் அணி கணிணிக்கு விளக்கம் சொல்கிறார். அணி கணிணி என்பது எப்போதும் இயங்க கூடியதாக ,எந்த நேரத்திலும் அணுக கூடியதாக இருக்க வேண்டும் எனபதும் ஸ்டீவ் மன் சொல்லும் முக்கியமான கோட்பாடு.

எப்போதும் பயன்பாட்டுக்கு தயாராக இருப்பது, அடிப்படை பணிகளை தாண்டி பயனாளிகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவது போன்ற அம்சங்களையும் ஸ்டீவ் மன் குறிப்பிடுகிறார். அந்தரங்க தாக்கம் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். கண்காணிப்பு யுகத்தில் நமக்கு தேவையான தகவல்களை வடிகட்டிக்க்கொள்ள இவை உதவும் என்கிறார் மன்.

w-6.jpg

பயனாளியின் கவனத்தை முழுவதும் ஆதிக்கம் செலுத்தாமல், இடையூறு செய்யாமல், தேவைப்பட்டால் கவனத்தை ஈர்க்கும் வகையில்,செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ,சுற்றுப்புறம் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அணி கணிணியின் குணங்களை மேலும் பட்டியல் போடுகிறார் ஸ்டீவ் மன்.எல்லாவற்றுக்கும் மேல் அவை பயனாளி தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார். இவை உடலின் ஒரு பகுதியாகவே மாறிவிடும் தன்மை பற்றியும் குறிப்பிடுகிறார். அது தனி கிளை .பிறகு பார்க்கலாம்.

ஸ்டீவ் மன் போன்றவர்கள் அணி கணியின் சாத்தியங்கள் பற்றி தொலைநோக்குடன் சிந்தித்து ஆய்வு செய்து வந்த போது அவர்களுக்கு ஹார்ட்வேர் சவால் இருந்தன. சாதனம் எப்போதும் உடன் இருக்க வேண்டும் என்றால் அவற்றை இயக்கும் பேட்டரி சக்தியை நீட்டிக்க வைப்பது எப்படி? உடலோடு ஒட்டு உறவாடக்கூடிய கம்ப்யூட்டர்களை உருவாக்குவது எப்படி என்ற கேள்விகள் இருந்தன. ஆனால் இன்று கம்ப்யூட்டர் செயல்பாடுகளை மிக அழகாகவும் துல்லியமாகவும் சின்னஞ்சிறிய சென்சார்களில் கொண்டு வர முடிவதும், நீடித்த ஆயுள் கொண்ட பேட்டரிகளும் அணி கணிணியை நடைமுறை சாத்தியமாக்கி உள்ளன.

அதனால் தான் துணி இழைகளுக்குள்ளேயே சென்சார்களை நெய்து தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் ஆடைகள் சாத்தியமாக இருக்கின்றன. காதணிகளாகவும் கையணிகளாகவும்  கம்ப்யூட்டர் திறன் கொண்டவற்றை அணிவது சாத்தியமாகி உள்ளது. இதனிடையே அணி கணிணி என்பது சக்தி வாய்ந்ததாக இருந்தால் மட்டும் போதாது அவை அணிவதற்கு ஏற்றதாக அழகியல் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்கின்றனர். அணி கணிணியை இன்றியமையாததாக ஆக்க, பேஷன் துறையினரும் வடிவமைப்பு நேர்த்தியை தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வந்து அணிந்து மகிழும் அணி கணிகளை உருவாக்க முயன்று வருகின்றனர். ஒரு வித்த்தில் பேஷன் துறை தான் அணி கணிணியை பொது மக்கள் மத்தியில்கொண்டு சேர்க்கும் என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

w-7.jpg

ட்விட்டர் குறும்பதிவுகளை ஆடையில் மின்னச்செய்யும் ட்விட்டர் ஆடையை இதற்கு உதாரனமாக சொல்லாம். இன்னும் சுவாரஸ்யமான புதுமையான உதாரணங்கள் பல இருக்கின்றன. ஸ்மார்ட சங்கிலி ஒன்று குறிப்பிட்ட நேரம் பார்த்து வாசனை திரவியத்தின் நறுமணத்தை பரவச்செய்யக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. அணிபவரின் உடல் வெப்பம், இரத்த அழுத்தம் போன்ற்வற்றை கண்காணிக்கும் காலுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லாம் சரி, அணி கணிக்கு ஏன் இத்தனை ஆர்ப்பட்டம். நாம் ஏன் கம்ப்யூட்டர் சாதனங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். கணிணிகளை அணிந்து கொண்டிருப்பதால் என்ன பயன்? இதற்கான தேவை என்ன? 

இந்த கேள்விகளுக்கான பதில்களையும், அணி கணிணியின் நடைமுறை பலன்களையும் தொடர்ந்து பார்ப்போம்.

-

 கட்டுரை இணைப்பு ; 

1. அணி கணிணி முன்னோடு ஸ்டீவ் மன் இணையதளம்: http://wearcam.org

2. அணி கணிணி பற்றிய வயர்டு இதழ் கட்டுரை; http://www.wired.co.uk/news/archive/2013-05/20/fashion-and-technology

 

4தமிழ்மீடியாவிற்காக: சைபர் சிம்மன்

ட்விட்டர்: https://twitter.com/iamcybersimman

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால தொழிநுட்பம்-6 : அணி கணிணிகளால் ஆன பயன்!

sensoree.jpg

 

" மனிதர்களால் அணியக்கூடிய கம்ப்யூட்டர் சாதங்களின் பயன்பாடு, லேப்டாப் சாதனத்தை நின்று கொண்டே பயன்படுத்தி பார்த்துள்ளவர்களுக்கு எளிதில் புரியும் " - ஸ்டீவ் மன், (ஆய்வாளர், அணி கணிணி முன்னோடி)

வியரபில்ஸ் என்று பொதுவாக குறிப்பிடப்படும் அணி கணிணிகள் துறையில் நடந்து வரும் ஆய்வுகளும் ,தயாரிப்பு நிலையில் உள்ள அணி சாதனங்களும் நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும். அதிலும் அணி கணிணிகள் பல்லாண்டு கால ஆய்வுலக சிறைவில் இருந்து விடுபட்டு யதார்த்த வாழ்க்கையில் இரண்டர கலக்க தயாராகி உள்ள நிலையில், உடலோடு அணியக்கூடிய டிஜிட்டல் சாதனங்கள் விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கின்றன. அணி கணிணி துறையில் வர்த்தக நிறுவனங்கள் காட்டிவரும் ஆர்வமே இதற்கு சான்று.

 

ஆப்பிள், சாம்சங்க், கூகிள் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், அணி கணிணி சார்ந்த பிரத்யேக நிறுவனங்களும் இந்த துறையில் ஈடுபாடு காட்டி வருகின்றன. கழுத்தில், காதில், கைகளில் என உடலின் எல்லா பகுதிகளிலும் அணியகூடிய அணி சாதனங்கள் தயாரிப்பு நிலையில் இருக்கின்றன. ஸ்மார்ட் வாட்ச் போன்றவை ஏற்கனவே சந்தையில் அறிமுகமாகி விட்டன. காலுறை மற்றும் உள்ளாடைகளும் கூட அணி கணிணித்தன்மை கொண்டதாக உருவாக்கப்பட்டு வருவது தொழில்நுட்ப உலகில் என்ன நடக்கிறது எனும் மலைப்பை ஏற்படுத்தலாம்.

அணி கணிணி என்பது உடலோடு அணியக்கூடிய வகையில் அணிபவருக்கு சுமையில்லாமல் அமைந்து, எப்போதும் இயக்க கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று அணி கணிணியின் ஆதார கோட்பாட்டை முன் வைக்கும் ஆய்வாளர் ஸ்டீவ் மன் ,நிச்சயம் இந்த முன்னேற்றங்களை பார்த்து மகிழ்ச்சி கொள்வார். அணி கணிணியின் தன்மையே எப்போதும் நம்முடன் அணிந்திருக்க கூடியதாக இருப்பது தான் என்றாலும் ,அழகுக்கு அணிந்த காதணிகளும், வளையல்களும் ப்ளுடூத் காதணிகளாகவும், ஸ்மார்ட் பிரேஸ்லெட்டாகவும் உருமாறி உள்ள நிலையில் அணி கணிணிகள் வியக்க வைத்தாலும், எல்லாம் எதற்காக எனும் கேள்வியை எழுப்பாமல் இருக்காது.

அணி கணிணிகள் ஏன்? அணி சாதனங்கள் ஏன்? 

கம்ப்யூட்டர் சாதனங்களை உடலோடு அணிந்து கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் என்ன? கம்ப்யூட்டர் திறன் கொண்ட சாதனங்களை சின்னனஞ்சிறியதாக்கி கைவிரல் மோதிரத்திலோ அல்லது கழுத்து சங்கிலியிலோ பொருத்திக்கொள்வதை தொழில்நுட்பம் சாத்தியமாக்கி இருப்பதாலயே நாம் அணி சாதனங்களை அணிந்து கொள்ள வேண்டுமா? இந்த போக்கு வெறும் தொழில்நுட்ப புதுமையின் பாதிப்பு தானா? 

அணி கணிணிகளால் என்ன பயன்?

jewelry_5-100246337-medium.jpgதற்போது பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் அணி கணிணிகளிலேயே இந்த கேள்விக்கான பதில் இருக்கிறது. புதிய அணி கணிணிகளை பார்ப்பதற்கு  முன் ஆரம்ப கால அணி கணிணிகளை திரும்பி பார்ப்பதும் கூட பொருத்தமாக இருக்கும். ஸ்டீவ் மன் போன்றோர் அணி கணிணி சோதனையில் ஈடுபட்ட போது அவை உண்மையில் சோதனை முயற்சியாக தான் இருந்தன. அதாவது அணி கணிணியின் நடைமுறை பயன்பாட்டை சோதித்து பார்ப்பது என்பது பெரும் சுமையாக தான் இருந்தது. ஸ்டீவ் மன் பயன்படுத்திய ஐடேப் (eyetap. ) சாதனத்தை அவர் ஏதோ நடமாடும் சோதனைக்கூடம் போல மாட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. முதல் அணி கணியை பயன்படுத்தியதாக சொல்லப்படும் அமெரிக்க கணித ஆய்வாளர்கள் எடுவர்ட் தோர்ப் மற்றும் கிளாடெ ஹனான் ஆகியோர்  காசினோ சூதாட்டத்தில் ரகசியமாக தகவல் சேகரிக்க ஷூவுக்குள் சிறிய கம்ப்யூட்டர் சாதனத்தை மறைத்து கொள்ள வேண்டியிருந்தது. இந்த வகையான அணி கணிணிகள் சோதனை கூடத்தை தாண்டி ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. 

இவை எல்லாம் கீக் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப பித்தர்களுக்கான சங்கதி எனும் கருத்தே பிரதானமாக இருந்தது.தொழில்நுட்ப பித்தர்கள் எதையாவது செய்து கொண்டு போகட்டும், நமக்கென்ன எனும் கருத்தே பொது மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அணி கணிணி இப்படி தங்கள் கைகளிலும் கழுத்திலும் தவழும் வகையில் பரவலாகும் என நினைத்திருக்க மாட்டார்கள். இருப்பினும் இப்போது பார்ப்பது ஒன்றுமேயில்லை, நாளை அணி கணிணிகள் மேலும் பல வடிவம் எடுக்கப்போகின்றன. வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத வகையில் எல்லாம் நீக்கமற நிறையப்போகின்றன. பரிசோதனை நிலையில் இருந்து பயன்படுத்தக்கூடிய தன்மைக்கு வந்திருப்பது தான் அணி கணிணிகளின் பெருக்கத்திற்கு காரணம் . இதை சாத்தியமாக்கியது பனித்துளிக்குள் பனை மரத்தை பாரப்பது போல், கடுகளவு சென்சாருக்குள் கம்ப்யூட்டிங் ஆற்றலை சிறை பிடிக்க முடிந்த தொழில்நுட்ப மாயம் தான் என்றாலும் அணி கணிணியின் தேவையை ஏற்படுத்தியிருப்பது அவற்றால் ஏற்படக்கூடிய நடைமுறை பயன்பாடுகள் தான்.

அணி கணிணியின் கோட்பாட்டை வரையறை செய்த ஆய்வாளர் ஸ்டீவ் மன்னே அணி கணிகளின் பயன்பாடு பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். சொல்லப்போனால் அணி கணிணி பயன்பாடுகளை ஸ்டீவ் மன்னை விட வேறு யாராலும் அழகாக எடுத்து வைக்க முடியாது. 

கையடக்க கம்ப்யூட்டர், லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் தனிப்பட்ட உதவி சாதங்களில் (பிடி.ஏ) அணி சாதன்ங்கள் முற்றிலும் வேறுபட்டவை என்கிறார் மன். இவற்றின் எப்போதும் இயங்கும் தன்மை, மனிதர்கள் மற்றும் கம்ப்யூட்டருக்கு இடையே புது வகையான இணக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் அவர்.

அணி கணிணிகள் எப்போதும் பயனாளியுடனே இருப்பதால் பயனாளி நடந்து கொண்டோ அல்லது மற்ற வேலைகள் செய்து கொண்டோ அவற்றை இயக்க முடிவது பல்வேறு சாதகங்களை மனித குலத்திற்கு அளிக்கிறது என கொண்டாடுகிறார் அவர். நுகர்வோர் தொழில்நுட்பம் பொது மக்களுக்கு எப்போதுமே ஒருவித அதிகாரமளித்தலை வழங்கி வந்திருப்பதாக கூறும் மன், இப்போது நாம் கிட்டத்தட்ட மறந்து விட்ட ஆடியோ காசெட்டை இதற்கு உதாரணமாக காட்டுக்கிறார். கேசெட் வர்த்தக நிறுவனங்களால் இசை நம் மீது திணிக்கப்பட நிலையை மாற்றி நாம் விரும்பிய பாடல்களை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் கேட்க வழி செய்தது. அதே போல அணி கணிணிகள் புகைப்பட நினைவாற்றல் ( எல்லாவற்றையும் காமிராவில் பதிவு செய்து கொள்ளலாம்), பகிர்வு நினைவாற்றல், கூட்டு மனித அறிவு, தனிப்பட்ட பாதுகாப்பு, நடமாடும் கம்ப்யூட்டர் செயல்பாடு உள்ளிட்ட பலன்களை அளிக்கக்கூடியது என்கிறார் மன்.

Steve-Mann.jpg

Steve-Mann

இவை பற்றி எல்லாம் அவர் விரிவாக சிந்தித்தும் பேசியும் இருக்கிறார். கோட்பாடுகளை வகுத்திருக்கிறார். ஸ்டீவ் மன் உற்சாகத்தோடு பேசிய அணி கணிணிதன்மை தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நிதர்சனமாகி நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு விதங்களில் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. அணி கணிணிகளுக்கு அணிகலன்களை விட பொருத்தமானவை வேறு என்ன இருக்க முடியும்? ஆம், காதணி போன்ற அணிகலன்கள் கணிணி ஆற்றல் கொண்டவையாக உருவாக்கப்பட்டு அழகுக்கு ஆற்றல் சேர்க்கின்றன. இதற்கான அழகிய உதாரணம் ரிங்லி; இது ஒரு மோதிரம். ப்ளுடூத் மோதிரம். இதற்கு துணையாக ஒரு செல்போன் செயலியும் உண்டு. கைவிரலில் அணிந்து கொண்டால் செல்போனில் அழைப்பு, இமெயில் மற்றும் குறுஞ்செய்தி போன்றவை வரும் போது இந்த மோதிரம் அது பற்றி ஒளி அறிவிப்பு செய்யும். ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் செல்போன் நடுவே அலறி தரும் சங்கடத்திற்கு தீர்வாக ரிங்லி ,அழைப்பு வந்திருப்பதை அழகாக மின்னும் வண்ணத்தில் குறிப்பால் உணர்த்தும். பயனாளிகள் தங்கள் தேவைக்கேற்ப இதன் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளலாம். ரிங்லியின் நேர்த்தியான நவீன தோற்றம் பேஷன் உலகையும் கவர்ந்திருக்கிறது.

ringly-connect-660x512.jpg

இதே போல் இங்கிலாந்தின் சிப் தயாரிப்பு நிறுவனமான சி.எஸ்.ஆர் பேஷன் மற்றும் தொழில்நுட்பம் இணைந்த பலவகையான ப்ளுடூத் அணிகலன்களை உருவாக்கியுள்ளது. இந்த அணிகலன்கள் செல்போன் சாதங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடியவை. செல்போன் மூலமான அறிவுப்புகளை பெறுவதோடு மேலும் பலவிதங்களிலும் இவற்றை பயன்படுத்தலாம். கஃப் லிங் (CuffLinc,) நிறுவனமும் 18 வகையான அணிகணிணிகளை உருவாக்கி உள்ளது. ப்ளுடூத் மூலம் செல்போன் அழைப்புகளை இதன் வலைப்பின்னலில் உள்ளவர்களோடு இருவழி தொடர்பு ஆற்றல் கொண்டது. வலைப்பின்னலில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள முயன்றால் அது பற்றிய தகவலை குறிப்பால் உணர்த்தும். இதற்காக என்றே பிரத்யேக செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆபத்து காலத்தில் உதவி கோரிக்கை அனுப்பும் ஆற்றலையும் இது உள்ளடக்கியிருக்கிறது. அதே போல எந்த செய்தியையும் எளிதாக பரிமாறிக்கொள்ளலாம். அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது இரண்டு முறை அழுத்தினால் போதும் கனவரின் போனுக்கு மனைவி வருகையை செய்தியாக தெரிவிக்கும்.

பர்ஸ்ட் சைன் எனும் ஹேர் கிளிப் பாதுகாப்பு அம்சம் கொண்டது. ஜிபிஎஸ் திறன் கொண்ட இந்த கிளிப் அதன் பயனாளிகள் ஏதேனும் ஆபத்தில் சிக்கி கொண்டால் காவல் துறை மற்றும் நெருக்கமானவர்களுக்கு எச்சரிக்கை செய்து உதவிக்கு அழைப்பு விடுக்கும். சம்பவ இடத்தை புகைப்படம் எடுத்து ஆதாரமாகவும் சேர்த்து வைத்துக்கொள்ளும். ரிங்லி போலவே வேறு சில மோதிரங்களும் இருக்கின்றன. இவற்றை கையில் மாட்டிக்கொண்டால் கையசைவுகளாலேயே வீட்டில் உள்ள சாதன்ங்களை எல்லாம் இயக்கலாம். கை வளையங்களும் இதே போல ப்ளு டூத் திறன் மூலம் பல்வேறு பயன்பாடுகளை கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட அணிகலன்கள் , கணிணிகளின் ஆற்றலை கொண்டிருப்பது நவீன வாழ்க்கையில் எண்ணற்ற தாக்கங்களையும் மேம்பாடுகளையும் கொண்டு வர உள்ளது. ஆனால் அணி கணிணிகள் என்பது காதணிகளையும் வளையல்களையும் கைப்பட்டைகளையும் தாண்டி விரிவடைந்துள்ளது. அணி கணிணி தன்மை கொண்ட காலுறைகளும் , உள்ளாடைகளும் கூட உருவாக்கப்பட்டுள்ளன. சென்சார்களின் தன்மை கொண்ட காலுறை உடலின் வெப்பத்தையும், இரத்த ஓட்டத்தையும் கண்காணித்து தகவல் அளிக்கும் திறன் கொண்டது. தடகள வீரர்கள் மற்றும் உடல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உதவுவதோடு மருத்துவ நோக்கிலும் இது உதவக்கூடியது.

GalaxyDress_0001_detail_em.jpg

அணி கணிணிகள் மற்ற சாதனங்கள் மற்றும் புற சூழல்களில் இருந்து தகவல்களை பெற உதவுவதோடு புற சூழலுடன் புதிய தொடர்பு கொள்ளவும் வழி செய்பவை. பயனாளிகளின் உணர்வுகளையும் புதுமையான முறையில் வெளிப்படுத்த உதவுபவை. இந்த திசையில் அணி கணிணியின் பயன்பாடுகள் சுவாரஸ்யமானவை. கியூட் சர்க்யூட் எனும் நவீன பேஷன் நிறுவனம் உருவாக்கியுள்ள கைனட்டிக் டிரெஸ் மற்றும் ட்விட்டர் டிரெஸ் ஆகியவை இதற்கான உதாரணங்கள். கைனட்டிக் டிரெஸ் அதை அணிந்திருப்பவரின் மன நிலை மற்றும் அசைவுகளுக்கு ஏற்ப இந்த ஆடை வெவ்வேறு வண்ணங்களில் ஒளிரும் திறன் கொண்டது. டிவிட்டர் ஆடை அதற்கு அனுப்பப்படும் குறும்பதிவுகளை தன் மீது தோன்றச்செய்யும் திறன் கொண்டது.

இதே நிறுவனம் உருவாக்கிய ’ஹக் ஷர்ட்’ , சென்சார்களின் தொடு உணர்வு மூலம் செல்போன் வழியே எங்கோ தொலைவில் உள்ள அன்பானவர்களுக்கு கட்டியணைக்கும் உணர்வை ஏற்படுத்தக்கூடியது. இந்த ஆடையை அணிந்திருப்பவர் தனக்கு நெருக்கமானவரிடம் அன்பை தெரிவிக்க விரும்பினால் ஒரு பட்டனை அழுத்திலாம் போதும் பல ஆயிரம் கி.மீ  தொலைவில் உள்ளவரும் அந்த ஆடை மூலம் அந்த உணர்வை பெற முடியும். அணிபவரின் மன நிலையை வண்ண ஒளி மூலம் பிரதிபலிக்கும் ஆடைகலை சென்சோரி எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

a.jpeg

நாளைய உலகில் பனியன்களும் உள்ளாடைகளும் கூட இதே தன்மை கொண்டதாக இருக்ககூடும். மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை முறையில் இத்தகைய ஸ்மார்ட் பிரா ஒன்றை உருவாக்கி ஆய்வு செய்து பார்த்த்து. சென்சார் மூலம் பயனாளிகளின் உணர்வுகளை கிரகித்துக்கொண்டு அவர்களின் உணவு பழ்க்கத்தை கண்காணிக்கக்கூடிய வகையில் இது அமைந்திருந்தது. ஸ்மார்ட் உள்ளாடைகள் பற்றி ஸ்டீவ் மன்னும் உற்சாகமாக குறிப்பிடுகிறார். ஸ்டீவ் மன்னை பொருத்தவரை அணி கணிணிகள் என்பது எப்போதும் அணிந்திருக்க கூடியவை அல்லவா? அலுவலகம் செல்லும் போது ஸ்மார்ட் ஜாக்கெட் அணிந்து செல்கிறோம்.வீட்டுக்கு திரும்பியதும் கழற்றி வைத்து விடுகிறோம். இரவு தூங்கும் போது நாம் ஸ்மார்ட் உள்ளாடை அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார் ஸ்டீவ் மன். வெப்பத்தை உணரும் ஆற்றல் கொண்ட இந்த உள்ளாடைகள் தூக்கத்தின் போது அறையின் வெப்பத்தை கண்காணித்து அதேற்கேற்ப அறையின் உஷணம் அல்லது குளிர்ச்சி வசத்தை கூட்டவோ குறைக்கவோ வல்லதாக இருக்கும்.

மெல்லிய மின் அதிர்வுகளை உருவாக்க கூடிய ஸ்மார்ட் உள்ளாடைகள் உடல்நல பாதிப்பால் படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகளுக்கு அவ்வப்ப்பொது தேவையான மெல்லிய மின் அதிர்வுகளை வழங்குவது படுக்கை சோர்வை போக்க கூடியது. இவை தவிர ஆடையில் நெய்யப்படும் துணி இழையிலேயே சென்சார் ஆற்றல் கொண்ட்தாக அமைக்கும் ஆய்வுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவை ஸ்மார்ட் துணிகள் என குறிப்பிடப்படுகின்றன. மருத்துவ பயன்பாடு இவற்றின் சிறப்பம்சம். இந்த ரக துணிகள் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கும் மருத்துவர் என்கின்றனர்.

அணி கணிணிகளின் உலகம் மேலும் விரிவடைய காத்திருக்கிறது. இத்தகைய தொழில்நுட்ப சாதனங்கள் நாம் அறிந்த யதார்த்தத்தையே மாற்றி அமைக்கக்கூடியவையாக இருக்கின்றன. எப்படி என தொடர்ந்து பார்க்கலாம்.

-----------------------------------------------------------------------------------------

கட்டுரை இணைப்பு;ஸ்டீவ் மன்னின் அணி கணிணி சோதனைகள் பற்றி அறிய: http://www.eyetap.org/

4தமிழ்மீடியாவிற்காக: சைபர் சிம்மன்

ட்விட்டர்: https://twitter.com/iamcybersimman

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால தொழில்நுட்பம்-7: எல்லாம் வல்ல (ஸ்மார்ட்) ஆடைகள்

 

இன்றைய சாதாரண ஆடைகளுக்கு நாளைய அணி சாதனங்களாகும் அபிரிமிதமான ஆற்றல் இருக்கிறது - அணி கணிணிகள் பற்றிய லைவ் சயின்ஸ் இதழ் கட்டுரை ஒன்றின் அறிமுகம்.

வரும் முன் காப்போம் என்கிறது மருத்துவம். இதை நடைமுறையில் சாத்தியமாக்கி காட்ட தொழில்நுட்பம் தயாராகி கொண்டிருக்கிறது என்பது தான் மகிழ்ச்சியான விஷயம். இந்த தொழில்நுட்பம் நாம் அணியக்கூடிய ஆடைகளில் தான் பின்னிப்பினைந்திருக்க போகிறது என்பது தான் சுவாரஸ்யமான விஷயம்.

உள்ளூர ஜுரம் அடிக்கிறதா? அதை உடல் வெப்பத்தின் மாற்றம் மூலம் உங்கள் ஆடையே அறிந்து கொண்டு , மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கலாம். இதயத்துடிப்பு வழக்கத்துக்கு விரோதமாக இருக்கிறதா? நீங்கள் அணிந்திருக்கும் சட்டையே அதற்கான அறிகுறியை தெரிந்து கொண்டு மாரடைப்புக்கு முந்தைய முதலுதவியை கோரலாம். ஈ.சி.ஜி எடுக்கும் சேலை. வியர்வையை உறுஞ்சி குளுரூட்டும் வேட்டி இவை எல்லாம் சாத்தியமாகலாம். மனச்சோர்வை புரிந்து கொண்டு ஊக்கம் தரும் பாட்டை தானாக ஸ்மார்ட் போனில் ஒலிக்கச்செய்யும் உணர்வு மிக்க டி-ஷர்ட் ,இப்படி இன்னும் நிறைய அற்புதங்கள் நாம் அணியும் ஆடையில் நிகழ காத்திருக்கின்றன. சாதாரண ஆடைகள் ஸ்மார்ட் ஆடைகளாக மாற இருக்கின்றன. அணி கணிணிகளில் நிகழும் அடுத்த கட்ட பாய்ச்சலாக இவை அமைந்துள்ளன.

1-s.jpgஇந்த பாய்ச்சலின் பயனை தினசரி வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்க்க ஆயவாளர்களும், விஞ்ஞானிகளும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். கூடவே தொழில்நுட்ப தொலைநோக்கு கொண்ட பேஷன் வல்லுனர்களும் கைகோர்த்துள்ளனர். விளைவு மானம் காப்பதற்காக மனித குலம் அணியத்துவங்கிய ஆடைகள்  வருங்காலத்தில் உணர்வுள்ள ஆடைகளாக அவதாரம் எடுக்க இருக்கின்றன. அவை உயிர் காக்கவும் செய்யும். 

அணி கணிணிகள் கருத்தாக்கத்தில் அவற்றின் அணியக்கூடிய தன்மையே பிரதானமாக குறிப்பிடப்படுகிறது. அணி கலன்கள் விஷயத்தில் இவை எப்படி கச்சிதமாக பொருந்துகின்றன என்று கடந்த வாரம் பார்த்தோம். அணி கலன்கள் போலவே ஆடைகளுடனும்  சென்சார்கள் கைகோர்க்கத்துவங்கியிருப்பதால் ஏற்பட்டு வரும் அற்புதங்களை விரிவாகவே பார்க்கலாம் வாருங்கள்.

தொழில்நுட்ப திறன் கொண்ட ஆடைகள் ஒன்றும் புதிய விஷயமல்ல.  இந்த ஆடைகள் ராணுவத்தில் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்கப்படுகின்றன. மருத்துவ  உலகிலும் நோயாளிகள் மீது எப்போதுமே ஒரு கண் வைத்திருக்க ஆடைகள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்போது அடுத்த கட்டமாக அன்றாட வாழ்க்கையில் இணையச் செய்வதற்கான படலத்தின் ஆரம்ப அடிகள் வெற்றிகரமாக எடுத்து வைக்கப்படுகின்றன.

இந்த போக்கின் முக்கிய அம்சம், சென்சார்கள் தனித்து நிற்காமல் ஆடைகளுடன் பின்னிப்பினைந்திருக்க வேண்டும் என்பது தான். தொழில்நுட்பமும் அதற்கு ஏற்ப வளைந்து கொடுக்கத்துவங்கியிருக்கிறது என்பது தான் விசேஷம். இவையே ஸ்மார்ட் ஆடைகளாக அவதாரம் எடுத்திருக்கின்றன.ஆனால், ஸ்மார்ட் வாட்ச் போல, ஸ்மார்ட் நகைகள் போல ஸ்மார்ட் ஆடைகள் எளிதானதல்ல; அவற்றுக்கு புதிய தொழில்நுட்பம் மட்டும் அல்லம் புதிய தொலைநோக்கும் தேவைப்படுகிறது.

பொதுவாக சாதாரண பொருளுக்கும், ஸ்மார்ட் பொருளுக்கும் என்ன வேறுபாடு? தனக்கான பாத்திரத்தை விட கூடுதலான இரு பயனை தானாகவே செய்யும் ஆற்றல் கொண்ட பொருட்களே ஸ்மார்ட் அடைமொழிக்கு தகுதி பெறுகின்றன. நேரம் மட்டும் காட்டினால் அது கைகடிகாரம். அதே கடிகாரம், ப்ளுடூத் உபயத்தால் செல்போன் அழைப்பு பற்றி அறிவிப்பு கொடுத்தால் அது தான் ஸ்மார்ட் கடிகாரம். அணிகலன்களுக்கும் இது பொருந்தும். ஆனால் ஆடைகள் மீது ஒரு சென்சாரை பொருத்துவதால் மட்டுமே அவை ஸ்மார்ட் ஆடைகளாகிவிடாது. உண்மையில் இந்த ஒட்டுவேலை ஒரு சுமையாகவே இருக்கும்.
 
1-s9.jpegஒரு உதாரணம் பார்ப்போம். ,மெல்லிய எல்.இ.டி விளக்குகளாக ஒளிரக்கூடிய அதி நவீன இழைகளை ஆடைகளின் மீது பொருத்தலாம் அல்லது ஆடைகளுக்கு நடுவே கூட நெய்து விடலாம். இந்த ஆடைகள் அவ்வப்போது ஏதேனும் செய்தியை மின்னச்செய்யலாம். ஆனால் ஆரம்ப புதுமை மறைந்த பிறகு இந்த ஆடைகளின் சுவாரஸ்யமும் குறைந்து போகலாம். வெறும் ஒளிரும் இழைகளை ஒட்ட வைத்துக்கொள்வதால் என்ன பயன் என்று கேட்கத்தோன்றும். அணிபவருக்கு கூட இதில் அதிக உற்சாகம் இருக்காது. இது போன்ற எண்ணற்ற புதுமைகளையும் சோதனைகளையும் கடந்து இன்று ஆடைகள் சார்ந்த ஆய்வு அடுத்த கட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

தொழில்நுட்ப உணர்வு ஆற்றல் கொண்ட சென்சார்களை ஆடைகள் மீது ஒட்ட வைப்பதற்கு பதில் , ஆடைகளை தயார் செய்ய பயன்படும் இழைகளையே சென்சார்களின் ஆற்றல் கொண்டதாக உருவாக்குவது தான் இதன் ஆதார அம்சம். இது வரை பருத்தியாலும் பட்டாலும், பாலிஸ்டர் போன்ற செயற்கை இழைகளாலும் தான் ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் புதுயுக ஆடைகள் மின்னணு ஆற்றல் கொண்ட இழைகளால உருவாகி வருகின்றன. இந்த ஆடைகளை உணர்வுள்ளதாக ஆக்க சென்சார்கள் தேவையில்லை. மாறாக அவற்றின் மெல்லிய இழைகளே சென்சார்களாக இருக்கும்.  இவை தான் உண்மையான ஸ்மார்ட் ஆடைகள். இவை தான் ஸ்மார்ட் துணிகள் என்றும் ஸ்மார்ட் இழைகள் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

'சென்சார்களை எங்கு வேண்டுமானாலும் பொருத்தலாம்’ என்கிறார் சென்சார்களை இழைகளாக நெய்து ஸ்மார்ட் ஆடைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நியூசிலாந்து நிறுவனமான புட்பால்ஸ் அண்ட் ஹார்ட்பீட்ஸ் (Footfalls and Heartbeats ) நிறுவனத்தைச்சேர்ந்த சைமன் மெக்மாஸ்டர். மக்கள் அன்றாடம் அணியும் வகையில் செய்தால் தான் அணி கணிணிகளுக்கு உண்மையான பயன் இருக்கும் எனும் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்களில் இவரும் ஒருவர்.

இதே போலவே பிரிட்டனில் உள்ள ஸ்மார்ட் லைப் நிறுவனமும் ஸ்மார்ட் ஆடை தயாரிப்புக்கான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. துணி இழைகளே சென்சார் திறன் கொண்டதாக இருக்கும் போது, இவை அணிவதற்கு சுகமாகவும், மென்மையாகவும் இருக்கும் என்கிறார் இந்நிறுவன ஆய்வாளர் மார்க் பெட்லே. அதைவிட முக்கியமாக இவை துவைத்து பயன்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். மிகப்பெரிய விஷயம் தான் இல்லையா?

1-s6.jpg

தைவானைச்சேர்ந்த ஏஐகியூ ( AiQ ) நிறுவனம் உருவாக்கும் பயோ மேன் துணி ரகம் , ஜெர்மனியின் பருன்ஹோபர் சட்டை(Fraunhofer FitnessSHIRT) போல இன்னும் பல முயற்சிகள் உற்சாகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கனடாவின் ஓம் சிக்னல் (OMsignal ) நிறுவனம் ஸ்மார்ட் டீஷர்ட் ஆய்வில் ஈடுபாடிருக்கிறது. பிரபல சில தயாரிப்பு நிறுவனமான இண்டெலும் இதே போன்ற சோதனையில் ஈடுப்பட்டிருக்கிறது. சென்சார் ஆற்றலோடு, தேவை ஏற்பட்டால் தங்களுக்கான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளகூடியதாகவும் இந்த ஆடைகள் இருக்கின்றன. 

சரி, இந்த ஹைடெக் ஆடைகள் என்ன செய்யும்? இ.சி.ஜி சென்சார்கள் மூலம் இதயத்துடிப்பை ஆய்வு செய்யும். உடல் வெப்பத்தை கணக்கிடும். மூளையின் செயல்பாட்டையும் குறித்துக்கொள்ளும். மூச்சு விடும் தன்மை, மார்பு பகுதியின் அசைவு, உடல் இயக்கம் என்று இன்னும் பல விஷயங்களை இவற்றால் கண்காணித்து தகவல் சேகரிக்க முடியும். உடல் வெப்பத்தில் ஏற்படும் மாற்றங்களையும் இவற்றால் உணர முடியும். அதிகப்படியான வியர்வை சுரப்பு போன்றவற்றையும் இவை கண்டுபிடித்திவிடும். 

1-s2.jpgஇந்த விவரங்களை எல்லாம் கவனமாக சேகரித்து பொறுப்பாக ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டருக்கு தகவல் அனுப்பும். மாதாந்திர செக் அப் செய்து கொள்வதற்கு பதில் எந்நேரமும் உடல் இயக்கத்தின்  முக்கிய அம்சங்களை கண்காணித்துக்கொண்டே இருக்கலாம். எல்லாம் சரியாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஆரோக்கிய நோக்கில் மட்டும் பழக்க வழக்கத்தில் மாற்றம் தேவையா என பார்த்துக்கொள்ளலாம். ஆனால் உடலில் ஏதேனும் கோளாறு என்றால் இவை முன்கூட்டியே உணர்ந்து உரிய நேரத்தில் தகவல் தெரிவித்து மருத்துவ உதவியை கோர வைக்கும். ஏதேனும் பிரச்சனை என்றால், உங்களை கூட தொல்லைபடுத்தாமல் நேராக உங்கள் மருத்துவரின் போனுக்கு விவரத்தை அனுப்பி வைத்துவிடும் . அதன் பிறகு அவர் உங்களுக்கு போன் செய்து, உங்கள் இதயத்துடிப்பின் போக்கு சரியில்லை, கொஞ்சம் கிளினிக் பக்கம் வந்து வீட்டு போகீறீர்களா என்று கேட்கும் அளவுக்கு மருத்துவ சோதனையும் சிகிச்சையும் சுலபமாகலாம்.

தனிநபர்களிடம் நோய்க்கூறுகளை கண்டறிய உதவுதோடு, ஒட்டுமொத்தமாக தகவல்களை அலசி ஆராய்ந்து பரந்த அளவில் பரவும் நோய்களையும் முன்கூட்டியே உணரலாம் என்கிறனர் மருத்துவ ஆய்வாளர்கள். இததகைய கண்காணிப்புகளுக்கு என்று தனியே சாதங்களை அணிந்திருப்பதை விட உடலோடு ஒட்டியிருக்கும் ஆடைகளுக்கு இந்த ஆற்றல் இருப்பது செயல்திறன் மிக்கதாக இருக்கும் என்கின்றனர்.

அது மட்டுமா, நோயாளிகளை அல்லது உடல் நலக்கோளாறு கொண்டவர்களை சில மணி நேரம் மட்டும் சோதனைக்கு உட்படுத்தி அதன் மூலம் நோய் பாதிப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு பதில் நோயாளிகள் பற்றிய தகவல்களை இயல்பாக சேகரித்து , அதன் வைத்து ஆய்வு செய்து கொள்ளலாம் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இந்த கண்காணிப்பை விட நோய்கூறுகளை வரும் முன் கணித்து செல்வதே இவற்றின் உண்மையான பயனாக இருக்கும் என்றும் சொல்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் மாரடைப்பை முன் கூட்டியே உணரக்கூடிய தன்மை கொண்ட ஆடைகளி உருவாக்குவதற்கான மைஹார்ட் எனும் ஆய்வு திட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த அளவுக்கு ஆடைகள் உணர்வு மிக்கவையாகவும், நீக்கமற நிறையக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் ஆடைகள் தற்போதுள்ள ஆடைகளுக்கு மாற்றாக வர வேண்டும் என்கின்றனர். 1-s7.jpegஇதற்கு பருத்தி இழைகளுக்கு பதில் ஸ்மார்ட் இழைகள் மூலமே டி ஷர்ட்களையும் ஜீன்ஸ்களையும் தயாரிக்கும் நிலை வர வேண்டும் எனும் நோக்கத்தில் ஆய்வுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆக திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் ஸ்மார்ட் பனியன்களை தயாரித்து தள்ளக்கூடிய காலமும் எதிர்காலத்தில் வரலாம். பட்டுச்சேலையில் தங்க இழைகளை ஜரிகையாக நெய்வது போல ஹைடெக் இழைகளும் சட்டைக்குள் தைக்கப்படலாம்.

மனிதர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடை பற்றிய உணர்வே இல்லாத அளவுக்கு அணி கணிணி தன்மை கொண்ட ஆடைகள் இருக்க வேண்டும் என்கிறார் கனடாவின் இயற்பியல் விஞ்ஞானி மக்சிம் ஸ்கோரோபோகவட்டி(Maksim Skorobogatiy). தனக்குதானே சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட அதி நவீன ஆடைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இகோலு பாலிடெக்னிக் (Ecole Polytechnique ) நிறுவனத்தை சேர்ந்த இவர், ஸ்மார்ட் ஆடைகள் தேவையில்லாத சுமையாக இல்லாமல் இயல்பானதாக இருக்க வேண்டும் என்கிறார். ஏறக்குறைய டச் ஸ்கீரின் ஆற்றல் கொண்ட துணி ரகங்களை உருவாக்கும் ஆய்விலும் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.

தொழில்நுட்பம் 1-s5.jpgஎன்னவோ தயாராக இருக்கிறது,ஆனால் அதை கொண்டு புதிய ஆடைகளை முயல்வதற்கான உளவியல் நோக்கிலான தடை தான் ஜவுளி நிறுவனங்களுக்கு இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த தடையை அகற்ற பேஷன் வல்லுனர்கள் கைகொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் ஆடைகளின் பயன்பாட்டை உணர்த்தக்கூடிய வகையில் புதுமையான வடிவமைப்பில் தொலைநோக்கு கொண்ட வடிவமைப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அணி கணிணி ஆடை வடிவமைப்பில் முன்னோடியாக சொல்லப்படும் கியூட் சர்க்யூட் நிறுவனம், டிஷர்ட் ஓஎஸ் எனும் நவீன டிஷர்ட்டை வடிவமைத்துள்ளது. கம்ப்யூட்டர் போல திறன் கொண்ட இந்த டி ஷர்ட் , பேஸ்புக் செய்திகளையும், டிவிட்டர் குறுஞ்செய்திகளையும் வெளிப்படுத்தக்கூடியது. பிடித்த பாடலை ஒலிபரப்பக்கூடியது. ரசித்த புகைப்படங்களை காண்பிக்கக் கூடியது.

அதே போல மற்றொரு நிறுவனம் உருவாக்கியுள்ள லேசர் சட்டையில் , லேசர் கதிர்களை கொண்டு சித்திரங்களை வரைந்து காட்டலாம். பிரிட்டனில் ஆய்வு நோக்கில் நோனோ இழைகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ஆடை அனிபவரின் மனநிலையை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற பாடல்களை ஒலிபரப்பக்கூடியது. வியர்பில் ஆப்சன்ஸ் (Wearable Absence ) எனும் கலைநோக்கிலான திட்டமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக எல்.இ.டி மற்றும் ஆடியோ கொண்டதாக இந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கத்தில் நோனோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அணி கணிணி திறன் கொண்ட ஆடைகளை உருவாக்கும் ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பேராசிரியர் ஹினேஸ்ட்ரோசாவா  (Juan Hinestroza) ஜவுளிகளே எதிர்காலத்தில் சென்சார்களாக இருக்கும் என்கிறார். நோய்த்தொற்று மற்றும் கெட்டுப்போன உணவுகளின் பாதிப்பை கூட இந்த ஆடைகள் கண்டுபிடித்து சொல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்கிறார் அவர். அடுத்த 5 ஆண்டுகளில் நேனோ தொழில்நுட்பம் நாம் பயன்படுத்தும் பல பொருட்களை மாற்றிவிடும் என்கிறார் இவர்.

எதிர்காலம் மாயங்களையும் அற்புதங்களையும் தினசரி வாழ்க்கைக்கு கொண்டு வர காத்திருக்கிறது.

அணி கணிணிகள் தொடர்பான வலைப்பதிவு: http://www.talk2myshirt.com/blog/

- 4தமிழ்மீடியாவிற்காக: சைபர்சிம்மன்


வருங்கால தொழில்நுட்பம்- 8: நாளைய மனிதர்கள் சைபோர்க், வருகிறார்கள்.

 

* 2100 ம் ஆண்டில் மனிதர்கள் காந்த அலைகள் (சிக்னல்) மூலமே ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதை பார்க்கலாம். தொலைபேசி போன்ற பழைய சாதங்கள் தேவைப்படாது . நாம் உடலில் பொருத்தப்பட்ட சாதனங்கள் வழியே ஒருவருக்கு ஒருவர் சிந்தித்துக் கொள்வோம். 
-கெவின் வார்விக்; புகழ்பெற்ற சைபர்னடிஸ் பேராசிரியர், உலகின் முதல் சைபோர்க்.

* தொழில்நுட்பத்தை ஒரு சாதனமாக பயன்படுத்துவதை நாம் நிறுத்திக்கொண்டு ,தொழில்நுட்பத்தை உடலின் ஒரு பகுதியாக பயன்படுத்த துவங்குவோம். இது அடுத்த சில ஆண்டுகளிலேயே பரவலாகத்துவங்கும் என நினைக்கிறேன் 
- நீல் ஹர்பைசன் ; சைபோர்க் கலைஞர், வண்ணங்களை கேட்பவர்.

* இரண்டு வகையான எதிர்காலங்கள் இருக்கின்றன. விருப்பத்தின் எதிர்காலம்.விதியின் எதிர்காலம். மனித அறிவால் இந்த இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை.
- ஜான் டெஸ்மண்ட் பெர்னல்; மனிதன் மற்றும் இயந்திரங்கள் சங்கமம் பற்றிய கருத்துக்க்ளை முன்வைத்த ஆங்கிலேய விஞஞானி.

இந்த கட்டுரையை படிக்கத்துவங்குவதற்கு முன் ஒரு நிமிடம், கற்காலத்து மனிதர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று நினைத்துப்பார்த்துக்கொள்ளுங்கள். குகையே வீடு, வேட்டையாடுதலே தொழில், இலைகளே ஆடை என அலைந்து திரிந்த நம் முன்னோர்களில்  இருந்து நாம் மிகவும் முன்னேறி வந்திருப்பது புரியும். ஆதி மனிதனை விடுங்கள் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த நம் முன்னோர்களை எண்ணிப்பாருங்கள். கையில் ஸ்மார்ட் போன், காதுகளில் ப்ளுடூத் சாதனம், ஷூவிலும், காலணியிலும் நடமாட்டத்தை கண்காணிக்கும்  டிராக்கர் என அவர்களை இக்கால மனிதர்கள் எங்கேயே வந்திருப்பதும் புரியும். 

இப்போது நாளைய மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்! இது உங்கள் கற்பனைக்கு சவால் விடும் கேள்வி அல்ல. தொழில்நுட்பமும், மனித உடலும் இன்னும் நெருக்கமாக பின்னிப் பிணைந்திருக்க கூடிய நாளைய யதார்த்த்திற்கு உங்களை அழைத்துச்செல்வதற்கான கேள்வி.

cyborgs.jpg

இந்த கேள்விக்கான பதில் நாளைய மனிதர்கள் சைபோர்களாக இருப்பார்கள் என்பது தான்! பல வகையான சைபோர்குகள்.(cyborgs). காத்திருக்கும் இந்த யதார்த்தம் ஸ்மார்ட்போனுக்கு பழகிய தலைமுறையை கூட கொஞ்சம் மிரள வைக்கவே செய்யும். எண்ணங்களால் பேசிக்கொள்வதும், நினைப்பது மூலமே சாதனங்களை இயக்குவதும் இந்த உலகில் சாத்தியமாகும். மனித பரிபாஷைகள் போல மனித- இயந்திர பரிபாஷைகள் சாத்தியமாகும். நீங்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே தானாக கதவு திறந்து விளக்கு எரிவது போன்ற மாயங்கள் சர்வ சாதாரணமாகலாம். படுத்த படுக்கையாக இருப்பவர் எண்ணங்கள் மூலமே சாதங்களையும் கருவிகளையும் இயக்கலாம் .மற்றவர்களோடு தொடர்பு கொள்ளலாம். வயோதிக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தலைக்குள் ஒரு சாதனத்தை பொருத்திக்கொண்டு நினைவாற்றலை மீட்டுக்கொள்ளலாம்.கவிஞர் ஆத்மாநாமின் கவிதை வாசகம் போல் இன்னும் பல போல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.  இன்னும் பல நம்ப முடியாத அற்புதங்கள் ஆனால்,  எதிர்கால நிஜங்கள் ( ஆத்மாநாம் கவிதையில் குறிப்பிட்ட எதிர்கால நிஜம் போல் அல்ல) எல்லாமே உடலில் பொருத்திக் கொள்ளகூடிய சிப்களாலும் தொழில்நுட்ப சாதனங்களாலும் சாத்தியமாகலாம். ’சிப்’ இல்லாமல் நாமில்லை என்று சொல்லும் நிலையும் வரலாம். 

உடலுக்குள் சிலிக்கான் சிப்பை பொருத்திக்கொள்ளும் நாளைய மனிதர்களை இப்போது அறிமுகம் செய்து கொள்வோம். அவர்கள் தான் சைபோர்குகள்! 

இன்று உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய சைபோர்க் மனிதர்கள் தான் இருக்கின்றனர். ஆனால் இனி வரும் காலத்தில், சைபர்னெட்டிக் ஆய்வாளர் மற்றும் உலகின் முதல் சைபோர்க் என அழைக்கப்படும் ஆங்கிலேயே பேராசிரியர் கெவின் வார்விக் (Kevin Warwick ) சொல்வது போல் அடுத்த நூற்றாண்டில் நாம் நுழையும் போது, மின்காந்த அலைகள் மூலம் பேசிக்கொள்ளும் புதிய யதார்த்தம் நமக்காக காத்திருக்கலாம். அதற்கு முன்பாகவே அதாவது 2050 ம் ஆண்டு வாக்கிலேயே கம்ப்யூட்டர் மற்றும் இயந்திரங்கள் மிகவும் புத்திசாலிகளாகிவிடும். ஒரு கட்டத்தில் இயந்திரங்கள் யோசித்து எடுக்கும் முடிவு அப்பாவி மனிதர்கள் மீது தாக்கம் செலுத்தலாம் என்றும் பேராசிரியர் வார்விக் சொல்கிறார். இதற்கான தீர்வாக தான் , மனிதர்களை இயந்திரங்களுடன் இணைத்து, பாதி மனிதம், பாதி இயந்திரம் சேர்ந்த கலைவையாக சைபோர்கை உருவாக்குவது என்கிறார் வார்விக்.

kevin_warwick_320x220.jpgயார் இந்த வார்விக் என்று தொழில்நுட்ப உலகை அறிந்தவர்கள் கேட்க வாய்ப்பில்லை. வார்விக் தானே ஒரு சைபோர்க் தான் - உலகின் முதல் சைபோர்க்.  எதிர்கால சாத்தியங்களை கண்டறிவதற்காக அவர் தன்னைத்தானே சோதனைக்கூடமாக்கி கொண்டு அந்த ஆய்வின் பலன்களை உலகுடன் பகிர்ந்து கொண்டு வரும் வார்விக் 1998ல் தனது கையில் ஒரு சிறிய சிலிக்கான் சிப்பை பொருத்திக்கொண்டார். ரேடியோ அலைகள் மூலம் செயல்பட்ட அந்த சிப் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது என்ன நடந்தது தெரியுமா? வயர்டு பத்திரிகை கட்டுரையில் வார்விக்கே இதை விவரிக்கிறார். 

‘என் கையில் சிலிக்கான் சிப் பொருத்தப்பட்டு, 1988 முதல் நான் பேராசிரியராக இருக்கும் மேற்கு லண்டன் அருகே உள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தின் சைபர்னட்டிக்ஸ் துறை அலுவலகத்திற்குள் எனது அசைவுகளை கண்காணிக்கும் வழி செய்தது. எனது இம்ப்லாண்ட் ( உடலில் பொருத்தப்பட்ட சாதனம் ) ரேடியோ அலைகள் மூலம் துறை முழுவதும் உள்ள ஆண்டனாக்களுடன் தொடர்பு கொண்டன. இவை எனது செயல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்த கம்ப்யூட்டருக்கு தகவல் அளித்தன. பிரதான வாயிலில் கம்ப்யூட்டரால் இயக்கப்பட்ட குரல் பெட்டி நான் நுழைந்ததும் ஹலோ என்று வரவேற்பு சொல்லும். எனது அசைவுகளை உணர்ந்து கொண்ட கம்ப்யூட்டர் ஆய்வுக்கூடத்தை நெருங்கியதும் கதவை திறந்துவிட்டு விளக்குகளை ஒளிரச்செய்தது. இந்த சிப் இருந்த 9 நாட்களுக்கு குறிப்பிட்ட திசை நோக்கி நடப்பது மூலமே நான் மாயம் போன்ற செய்கைகளை செய்தேன். இந்த பரிசோதனையின் நோக்கம் இம்பிலாண்ட் மூலம் தகவல்களை தெரிவித்து பெற முடியுமா? என்பது தான். இதில் வெற்றி பெற்றதுடன் மட்டும் அல்லாமல் இந்த சோதனை சைபர்னட்டிக்ஸ் பின்னே உள்ள கோட்பாடுகள் நிஜவாழ்க்கையில் எப்படி செயல்படும் என்பதையும் உணர்த்தின.’

வார்விக் குறிப்பிடும் சைபர்னடிக்ஸ் தான் அவரது ஆய்வுத்துறை. அவரது பேச்சும் மூச்சு எல்லாமும் என்றும் சொல்லலாம். சைபர்னெட்டிக்ஸ் பலவிதங்களில் அர்த்தம் சொல்லப்பட்டாலும், செயற்கை அறிவு, மனித -இயந்திரங்கள் இணைந்த செயல்பாடு என்ற அளவில் புரிந்து கொள்ளலாம். வார்விக் போன்றவர்களைப் பொருத்தவரை சிலிக்கான் சிப் போன்ற சாதனங்களை உடலில் பொருத்திக்கொண்டு, மூளையில் இருந்து புறப்படும் சிந்தனை அலைகளை புற உலகுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்துவதற்கான முயற்சியாகவும் புரிந்து கொள்ளலாம்.

வார்விக் முதல் முறையாக சிப்பை பொருத்திக்கொண்டு சைபோர்க் ஆன பிறகு அடுத்த சில ஆண்டுகளில் மேலும் மேம்பட்ட சிப்பை பொருத்திக்கொண்டு தனது எண்ண அலைகள் மூலம் இயந்திட கையை இயக்கி காட்டினார். அவரது துணைவியும் அவரைப்போலவே சிப் பொருத்திக்கொண்டார். இதன் பயனாக மனைவியின் அசைவுகளையும் அவரால் சிப் மூலமே உணர முடிந்தது. இது போன்ற முயற்சிகள் மூலம், அடுத்த நூற்றாண்டியில் எண்ணங்களால் பரஸ்பரம் தொடர்பு கொள்வது சாத்தியமாகலாம் என்றும் அவர் சொல்கிறார்.

warvick2.jpg

வார்விக் சொல்வதை எல்லாம் கேட்டால், டெர்மினேட்டர் படத்தில் வரும் இயந்திர மனிதர்கள் எல்லாம் அறிவியல் புனைகதை பூச்சுற்றல்கள் அல்ல என்று தோன்றும். இது நிஜம் தான். ஆனால் விஞ்ஞானம் சாத்தியமாக்குவது அழிவுக்கு வித்திடும் இயந்திர மனிதர்கள் அல்ல. அறிவியிலின் விழைவு மேம்பட்ட மானிடர்களை உருவாக்குவது!.

ஆம், தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் செயல்பாடு மற்றும் ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதை தான் சைபோர்க் கருத்தாக்கத்தின் நோக்கம். இது பலவிதங்களில் வெளிப்பட்டாலும் மனிதர்களை மேம்படுத்திக்கொள்வது தான் பிரதானம். ரோபோக்கள் ஒரு கட்டத்தில் மனிதர்களை மிஞ்சும் ஆற்றல் பெற்று மனித குலத்தையே அடிமைப்படுத்தி ஆட்டிப்படைக்கலாம் எனும் கருத்தாக்கம் பலவிதங்களில் முன் வைக்கப்படுகிறது அல்லவா? மனிதர்களுக்கு எதிராக இயந்திரங்களை நிறுத்திப்பார்க்கும் இந்த சிந்தனைக்கு மாறாக மனிதர்கள் மற்றும் இயந்திரங்கள் ஆற்றலை ஒன்றுடன் ஒன்று பொருத்தி பார்ப்பது தான் சைபோர் கருத்தாக்கத்தின் மையம்.

உடலில் சிப் போன்ற சாதனங்களை பொருத்திக்கொண்டால் நமது குறைகளை இட்டு நிரப்பிக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிட்ட திறனை பலமடங்கு மேம்படுத்திக்கொள்ளாம் என்றும் இந்த துறை ஆய்வுகள் உணர்த்துகின்றன. கெவின் வார்விக் போன்றவர்கள் மேற்கொள்ளும்  சோதனைகளையும் ஆய்வுகளையும் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். இவை விபரீதமோ என யோசிக்க வைக்கும். ஏன் இந்த தேவையில்லாத விஷப்பரிட்சைகள் என்றும் கூட கேடக்த்தோன்றலாம். ஆனால் இவை வெறும் அறிவியல் புதுமைகள் மட்டும் அல்ல. இவை ஆய்வுக்கூட சோதனைகளுடனும் நின்றுவிடப்போவதுமில்லை. சிப்கள் மூலம் தொடர்பு கொள்வதும், மூளையின் எண்ண அலைகளை தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் சாத்தியமாகும் நிலையில் மனித உடலும் தொழில்நுட்பமும் கைகோர்பது தவிர்க்க இயலாத்தாக மட்டும் அல்ல, இயல்பான வளர்ச்சியாகவும் இருக்கிறது. 20 ம் நூற்றாண்டின் மனது இதை ஏற்க தயங்கலாம். ஆனால் சாதன்ங்களை உடலுக்குள் பொருத்திக்கொள்வது ஒன்றும் அந்நியமான விஷ்யம் இல்லை தானே. இதயத்தின் ஆற்றல் பலவீனமாகும் போது இதயத்துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கரும் இயந்திரம் தானே. உடல் உறுப்புகளை இழக்கும் போது நாடும் செயற்கை உறுப்புகளும் தொழில்நுட்பம் சார்ந்தது தானே. இவற்றின் அடுத்த கட்டம் தான் உடலுக்குள் தொழிநுட்ப சாதனங்களை பொருத்திக்கொள்வது. இதனால் என்ன பயன்? இப்படி சாதாரணமாக கேட்டுவிடக்கூடிய கேள்வி அல்ல இது.

cy-neil.jpg

சைபோர்க் தன்மை நினைத்துபார்க்க முடியாத பலவித அணுகூலங்கள் இருக்கின்றன. எதிர்கால சாத்தியங்கள் ஒரு புறம் இருக்க நிகழ்கால மருத்துவ பலன்கள் நெகிழ வைப்பவை. இதற்கு நீல் ஹர்பைசன் அழகான உதாரணம். உலகின் முதல் சைபோரெ கலைஞர் என வர்ணிக்கப்படும் நீல், பிறவியிலேயே வண்ணங்களை உணரும் இல்லாதவர். ஆனால் தலைக்குள் ஒரு சிப்பை பொருத்திக்கொண்டு நிறங்கலை ஒலிகளாக உணரும் ஆற்றல் பெற்றிருக்கிறார். தலையில் ஆண்டனாவுடன் காட்சி தரும் நீல்லின் தோற்றம் வியக்க வைக்கலாம் .ஆனால் அவரது வாழ்க்கை அனுபவம் அதைவிட வியக்க வைப்பவை. அது மட்டுமா மனிதர் சைபோர்க் சங்கத்தையும் நடத்தி வருகிறார். சைபோர்க் ஆக விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டுவதும் சைபோர்க் ஆக ஊக்குவிப்பதும் தான் இந்த சங்கத்தின் குறிக்கோள். அவரது அனுபவத்தையும் சைப்போர்க் சாத்தியமாக்க கூடிய இன்னும் பல அற்புதங்கள், இந்த கருத்தாக்கத்தின் தோற்றம் மற்றும் தேவை ஆகியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

இணைப்புகள்; பேராசிரியர் கெவிவ் வார்விக் இணையதளம்; http://www.kevinwarwick.com/index.asp

சைபோர்க் அறக்கட்டளை; http://www.cyborgfoundation.com/

 - 4தமிழ்மீடியாவிற்காக: சைபர்சிம்மன்


வருங்கால தொழில்நுட்பம் 9:வண்ணங்களை கேட்கும் மனிதர்- சைபோர்க் கலைஞர்!

 

அணி கணிணிகளின் (வியரபில் கம்ப்யூட்ட்டர்ஸ்) சாத்தியங்களை அறியும் போது ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்று வரலாம். சென்சார் திறன் கொண்ட கைப்பட்டைகளையும், காதணிகளையும், ஆடைகளையும் அணிந்து கொள்வதன் மூலம் நமது செயல்பாடுகளையும் உடல் இயக்கத்தையும் கண்காணிக்கலாம், தகவல் சேகரிக்கலாம், ஆபத்துகளையும் நோய்க்கூறுகளையும் முன்கூட்டியே அறியலாம். இன்னும் பல ஆச்சர்யங்களும் அற்புதங்களும் அணி கணிணிகள் மூலம் சாத்தியமாகும் வாய்ப்பு இருக்கிறது தான். ஆனால் அணி கணிகளை விட ஆச்சர்யமளிக்க கூடியதாக சைபோர்க் கருத்தாக்கம் இருப்பதை கடந்த வாரம் பார்த்தோம்.

அணி கணிணிகளில் சென்சார்களை ஆடையாகவும் அணிகலனாகவும் அணிந்து கொள்ளத்தானே செய்கிறோம். சென்சார்களை ஏதாவது ஒரு வடிவில் மனித உடலுக்குள்ளேயே பொருத்திக்கொண்டால், மனித உடலின் ஆற்றல் இன்னும் மேம்படும் அல்லவா? இந்த மனித- இயந்திர சங்கமத்தை தான் சைப்போர்க் கருத்தாக்கத்தின் மையம் என்கின்றனர்.

சைபோர்க் என்பது , சைபர்னெட்டிக் ஆர்கனிஸம் என்பதன் சுருக்கமாக கொள்ளப்படுகிறது. சைபர்னெட்டிக்ஸ் என்பது கொஞ்சம் சிக்கலான துறை. சைபர்னட்டிக்சுல் நுழையாமல், சைபோர்க் என்றால் தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தப்பட்ட மனிதர்கள் என்று புரிந்து கொள்வோம்.

பயிர்களில் இரண்டு ரகங்களின் மேம்பட்ட தன்மையை கொண்டவற்றை ஹைப்ரிட் என்று சொல்வது போல, இயந்திர ஆற்றல் இரண்டர கலந்த மனிதர்களை ஹைப்ரிட் மனிதர்கள் என்று ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் குறிப்பிடுகின்றனர். இயந்திரத்துடன் கலந்த மனிதர்கள் என்று சொல்லப்படுவதை கேட்டால் மிரட்சியாக இருக்கலாம். ஆனால் நாளை உலகில் இத்தகைய கலப்பு மனிதர்கள் சர்வ சகஜமாக உலாவ இருக்கின்றனர்.

சைபோர்க் என்று சொல்லப்படுவதை மனிதன் பாதி இயந்திரம் மீது என்றும் புரிந்து கொள்ளலாம். ஆனால் உடலின் பாதியை இயந்திரத்திடம் கொடுக்க வேண்டியதில்லை. சின்னதாக ஒரு சிப்பை உடலுக்குள் பொருத்திக்கொண்டால் கூட போதும். அந்த சிப்பை நேரடியாக மூளையின் விசுவாச ஊழியர்களான நியூரான்களுடன் இணைத்து மனதின் கட்டளைக்கேற்ப செயல்பட வைக்கலாம். இப்படி தொழில்நுட்பம் மூலம் நம்முடைய ஆற்றலை மேம்படுத்திக்கொள்வது தான் சைபோர்கின் அடிப்படை. அதே நேரத்தில் உடல்ரீதியான குறையையும் தொழில்நுட்பம் மூலம் ஈடு செய்து கொள்ளலாம். இந்த ஆற்றலுக்கான நடமாடும் உதாரணமான சைபோர்க் கலைஞர் நீல் ஹார்பைசன் பற்றி பார்க்கலாம் என கடந்த வாரம் குறிப்பிட்டிருந்ததை பார்த்து உங்களில் பலருக்கும் நீல் பற்றி அறிய ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம்.

1Neil-Harbisson-011.jpgநீல்லின் தொழில்நுட்ப சுயசரிதைக்குள் நுழைவதற்கு முன் முதலில் கொஞ்சம் பிளேஷ்பேக்கில் சென்று சைபோர்க் சரித்திரத்தை சுருக்கமாக பார்த்து விடலாம். சைபோர்க் எனும் வார்த்தை முதலில் அறிமுகமானது 1960 களில்! 

இன்று தொழில்நுட்ப உலகின் கனவு வார்த்தைகளில் ஒன்றாகி மனித குலத்தின் எதிர்கால சாத்தியங்களுக்கான வியக்க வைக்கும் அடையாள சொல்லாகவும் மாறி இருக்கும் இந்த வார்த்தையை உருவாக்கிய பிரம்மாக்கள் மான்பிரட் கிலைன்ஸ் ( Manfred Clynes) மற்றும் நாதன் க்லைன் ( Nathan Kline, ). இந்த இருவரும் சேர்ந்து சமர்பித்த அறிவியல் கட்டுரையில் தான் முதல் முதலில் சைபோர்க் எனும் பதம் பயன்படுத்தப்பட்டது. மான்பிரட் கிலைன்ஸ் பிரதான ஆசிரியராகவும் க்லைன் துணை ஆசிரியராகவும் சமர்பித்த அந்த கட்டுரையை சமர்பித்திருந்தனர். இருவருமே அமெரிக்காவின் ராக்லான் மாநில பல்கலைகழகத்ச் சேர்ந்தவர்கள். மான்பிரட் கிலைன்ஸ் சைபர்னெட்டிக்ஸ் கணித துறையில் ஆய்வில் ஈடுப்பட்டிருந்தார்.

மருந்துகள், விண்வெளி மற்றும் சைபர்னெட்டிக்ஸ் (Drugs, Space, and Cybernetics ) எனும் தலைப்பில் வெளியான அந்த ஆய்வுக்கட்டுரையில் சைபோர்க் என்ற வார்த்தை அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இன்று நாம் கண்டு வியக்கும் வகையிலான பயன்பாடுகள் தொடர்பாக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. இரு ஆய்வாளர்களும் விண்வெளி ஆய்வு நோக்கிலேயே இந்த வார்த்தையை பயன்படுத்தியிருந்தனர். 

அந்த கால கட்டம் அப்பல்லோ யுகம் என்பதை இங்கே நினைத்து பார்ப்பது பொருததமாக இருக்கும். விண்வெளி பயணத்துக்கான ஆய்வுகளும் முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் இருவரும் விண்வெளி பயணம் எத்தனை சவாலானதாக இருக்கும் என்றும் அதை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தெல்லாம் அந்த கட்டுரையில் அலசியிருந்தனர். இந்த அலசலின் மையமாக விண்வெளியின் சவாலான சூழலில் மனிதர்கள் தாக்குபிடிக்க வேண்டும் என்றால் அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். நீண்ட நேரம் தூக்கம் இல்லாமல் இருக்க வேண்டிய கட்டாயம், புவியீர்ப்பு விசை இல்லாத நிலை உள்ளிட்ட இன்னும் பல சவால்களுக்கு மனித உடல் பழகி கொள்ள வேண்டும் என்றால் அதனை மேம்படுத்திக்கொள்வதே முக்கியம் என்பது தான் அவர்களின் முக்கிய கருத்தாக இருந்தது.

இந்த மேம்பட்ட மனிதர்களை குறிப்பிட தான் சைபோர்க் எனும் வார்த்தையை பயன்படுத்தி இருந்தனர். ”சைபோர்கின் நோக்கம்...,ரோபோ போன்ற பிரச்சனைகள் எல்லாம் தானாக, ஆழ்மனதின் நிலையிலேயே நிறைவேற்றப்பட்டு, மனிதர்களுக்கு சிந்திக்கவும், படைக்கவும், உணரவும் தேவையான சுதந்திரத்தை அளிப்பது” என்று அதில் இருவரும் குறிப்பிட்டிருந்தனர். அதாவது மற்ற கோள்களில், பாதுகாப்பு கவசம் இல்லமாலேயே அங்குள்ள சூழலில் வாழும் திறன் பெற்றிருக்கும் மேம்படுத்தப்பட்ட மனிதர்களையே சைபோர்குகளாக உருவாக்க வேண்டும் என கனவு கண்டனர். ஆனால் சென்சார்களின் வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் ,நியூரான்களின் பரிபாஷையை சென்சார்கள் உணரச்செய்வதன் சாத்தியமும் இன்று மனித உடலுக்குள் சிலிக்கான் சிப்பையும், சென்சார்களையும் பொருத்திக்கொள்வதை கைகூட வைத்திருக்கிறது. 

இந்த விஞ்ஞான வளர்ச்சியின் இன்னொரு பக்கத்தில் தொழில்நுட்பம் மூலம் மனிதனை மேம்படுத்தும் செயலுக்கான கருத்தாக்கமும் வளர்ந்து சைபோர்காக விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது. தொழில்நுட்பத்தை ஒரு சாதனமாக பயன்படுத்துவதில் இருந்து அடுத்த கட்டத்துக்கு சென்று தொழில்நுட்பத்தை உடலின் ஒரு பகுதியாக, உடல் உறுப்பின் நீட்டிப்பாக பார்க்கச்சொல்கிறது இந்த கருத்தாக்கம். இதை மனித–இயந்திர கூட்டு என்றும் சொல்கின்றனர்.

இதை தான், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக அல்லது அணி சாதங்களாக அணிந்து கொள்வதற்கு பதிலாக நாமே தொழில்நுட்பமாக மாறிவிடுவோம் என்கிறார் நீல் ஹர்பைசன். சைபோர்க் என்பவர் தொழில்நுட்பத்தை தன் உயிரியலின் ஒரு அங்கமாக கருதுபவர் என்றும் அவர் சொல்கிறார். இவர் தான் உலகின் முதல் அதிகாரபூர்வ சைபோர்க். உலகின் முதல் சைபோர்க் கலைஞரும் கூட!

வடக்கு அயர்லாந்தை சேர்ந்தவரான, ஹர்பைசனை பார்த்தால் கொஞ்சம் விசித்திரமாக தோன்றும். மனிதர் தலையில் சின்னதாக ஒரு ஆண்டனாவை பொருத்திக்கொண்டிருக்கிறார். தலையில் இருந்து முன்நெற்றியை நோக்கி அந்த ஆண்டனா வளைந்திருக்கும். அது தான் அவரை சைபோர்க்காக ஆக்கியிருக்கிறது. ஹர்பைசன் ஒருவிதமான பார்வை குறைபாட்டுடன் (achromatopsia )  பிறந்ததால் அவரால் நிறங்களை பார்க்க முடியாது . எல்லாம் நிழல் போல தான் தெரியுமே தவிர அவரால் வண்ணங்களை புரிந்து கொள்ள முடியாது. இந்த குறையை போக்கி கொள்ள அவர் 2004 ம் ஆண்டில் தனது தலைக்குள் வண்ணங்களை உணரும் ஆண்டனாவை பொருத்திக்கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு மருத்துவ துறையின் அனுமதி இல்லாத நிலையில் ஒரு மருத்துவர் ரகசியமாக அவருக்கு இந்த ஆண்டனாவை பொருத்தினார். இதன் பயனாக அவரால் வண்ணங்கலை ஒலி வடிவில் கேட்க முடியும். ஆண்டனா மூலம் மனிதர்கள் பார்க்கும் வண்ணங்களை என்னால் கேட்க முடிவதுடன், மனிதர்களால் கேட்க முடியாத நுட்பமான வண்ணங்களையும் கேட்க முடியும் என்கிறார் அவர். இன்பிரா ரெட் மற்றும் அல்ட்ரா ஒயிலெட் வண்ணங்களையும் தனது கேமிரா மூலம் உணர முடியும் என்கிறார் அவர். கடந்த ஆண்டு நீல் தனது ஆண்டாவுடன் ப்ளுடூத் வசதியையும் இணைத்துள்ளார். இதனால் ஸ்மார்ட்போன் மூலம் அனுப்படும் படங்களையும் அவரால் ஆண்டனா மூலம் கேட்க முடியும். எதிர்காலத்தில் செயற்கைகோள் மற்றும் விண்வெளியில் இருந்து ஒளியை தன்னால் கேட்க முடியும் என அவர் உற்சாகமாக சொல்கிறார்.

ஹர்பைசன் ,ஆண்டானாவோடு தானிருக்கும் புகைப்படத்துடன் பிரிட்டன் அதிகாரிகளுடன் போராடி தனக்கு பாஸ்போர்ட்டும் வாங்கி வைத்திருக்கிறார். இது தான் அவருக்கு உலகின் முதல் அதிகாரபூர்வ சைபோர்க் எனும் அடைமொழியை பெற்றுத்தந்துள்ளது.
எப்போதும் ஆண்டனாவுடன் இருக்கும் ஹர்பைசன், இதை சாதனமாக பார்க்காமல் தனது உடலின் அங்கமாக பார்ப்பதாக சொல்கிறார். 
இவர் அணிந்திருக்கும் ஆண்டனா ஐபோர்க் (eyeborg) என குறிப்பிடப்படுகிறது. அதாவது மின்னணு கண் என்று பொருள். பத்தாண்டுகளுக்கு முன் முதன் முதலில் இதை பொருத்திக்கொண்ட போது அவர் தலையில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு அதை லேப்டாப்புடன் இணைத்திருக்க வேண்டும். ஆனால் அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் சிலிக்கான் சிப் நேரடியாக அவரது தலைக்குள் , அதாவது மண்டை ஒட்டுக்குள் பொருத்தப்பட்டுவிட்டது. 

aneil.jpegஇவர் தனது சைபோர்க் அனுபவத்தை விவரிப்பதை கேட்பது வியக்கை வைக்கும்; ‘ஆரம்பத்தில் ஒவ்வொரு வண்ணத்திற்கும் தரப்படும் பெயர்களை நான் மனப்பாடம் செய்ய வேண்டியிருந்த்து. நான் குறிப்புகளை மனப்பாடம் செய்து கொண்டேன்.  ஆனால் போகப்போக இந்த தகவல்கள் புரிதல் உணர்வாக மாறிவிட்டன’. நான் வண்ணங்களில் கனவு காணத்துவங்கிய போது சாப்ட்வேரும் நானும் ஒன்றாகி விட்ட்தாக உணர்ந்தேன் என்றும் அவர் சொல்கிறார்.
 
ஹர்பைசன் இசையில் ஆர்வமும் பயிற்சியும் உள்ளவர். இசையை முறைப்படி பயின்றிருக்கிறார். இசை உணர்வு மற்றும் சைபோர்க் ஆற்றல் இரண்டையும் இணைத்து அவர் புதுமையான கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அவரால் சித்திரங்களை ஒலிகளாக மாற்ற முடியும் என்பதால் அவர் தனது நிகழ்ச்சிகள் மூலம் ஓவியங்கள் போன்றவற்றை கேட்க வைத்து வருகிறார். அவர் மனித ஒலிகளில் இருந்து சித்திரங்களையும் உருவாக்கி வருகிறார். மருத்துவ துறையில் எதிர்காலத்தில் இத்தகைய பயன்பாடுகளை அதிகம் பார்க்க வாய்ப்பிருக்கிறது. பார்வை குறைபாடு கொண்டவர்கள் உடலுக்குள் பொருத்தப்பட்ட சிப்கள் மூலம் பார்க்கும் ஆற்றலை பகுதி அளவு மீட்டுக்கொள்ளலாம்.

1Moon-Ribas-and-Neil-Harbi-009.jpg

இவரது சிறுவயது தோழியான மூன் ரிபாசும் ஒரு சைபோர்க் தான். ரிபாஸ் தனது கையில் கம்ப்யூட்டர் சிப்பை  பொருத்திக்கொண்டு அதன் மூலம் பூமியில் நிகழும் பூகம்ப அதிர்வுகளை எல்லாம் உணர்கிறார். இந்த உணர்வுகளை அவர் மேடையில் புதுமையான நிகழ்கலையாகவும் படைத்து வருகிறார். இதை தன்னுடைய சீஸ்மிக் உணர்வு என்று அவர் சொல்கிறார். 

ஹார்பைசன் மற்றும் ரிபாஸ் இணைந்து சைபோர்க் அறக்கட்டளை அமைப்பை நடத்தி வருகின்றனர். மனித உடலுக்குள் தொழில்நுட்பத்தை வரித்துக்கொள்வதன் மூலம் புதிய வகையான புரிதல் மற்றும் உணர்வுகளை பெறுவது தொடர்பான ஆய்வுகள் மற்றும் திட்டங்களில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. சைபோர்க் ஆக விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டவும் செய்கிறது. சைபர்னெட்டிக்சை மனித உடலின் அங்கமாக கொள்ளவும் சைபோர்க் உரிமையை வலியுறுத்துவதும் தான் எங்கள் நோக்கம் என்கிறது இந்த அமைப்பு.
 

118mkwa8eo6qrtjpg.jpg

உலகில் வேறு பல சைபோர்க் மனிதர்களும் இருக்கின்றனர். ஜெரி ஜலவா (Jerry Jalava  )  என்பவர் விபத்து ஒன்றில் துண்டான தனது கைவிரலில், யுஎஸ்பி டிரைவை பொருத்திக்கொண்டுள்ளார். ஆக கைவிரலிலேயே அவரால் டிஜிட்டல் தகவல்களை சேமிக்க முடியும்.

1RobotEye.jpg

பிறவு பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஜென்ஸ் நுவெமன் (Jens Naumann) மின்னணு கண்னை பொருத்திக்கொண்டுள்ளார். அவரது மின்னணு கண் நேராக மூளையின் பார்வைக்கான பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

சைபார்க் என்பது இன்றைய நிலையில் தொழில்நுட்ப புதுமையாக தான் இருக்கிறது. ஆனால் வருங்காலத்தில் நிஜ வாழ்க்கைக்குள் சைபோர்க் தொழில்நுட்பம் நுழைவதற்கான வாய்ப்புகள் பற்றி தொழில்நுட்ப தீர்கதரிசனம் மிக்கவர்கள் புதுமையான கோட்பாடுகளை முன்வைத்து வருகின்றனர்.

1cybook.jpegஎடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானி மற்றும் தத்துவ சிந்தனையாளருமான ஆண்டி கிளார்க், மனித குலம் இயற்கையாகவே சைபோர்க் தன்மை கொண்டவர்கள் எனும் கருத்தை முன்வைக்கிறார். இந்த கருத்தை வலிறுத்தி அவர் Natural-Born Cyborgs: Mind, Technologies, and the Future of Human Intelligence." புத்தகத்தை எழுதியிருக்கிறார். சைபோர்க் மனிதர்களை மனித குலத்தின் இயல்பான வளர்ச்சி என்கிறார் கிளார்க். கருவி அல்லது சாதனங்கள் சார்ந்த நீட்டிப்புக்கு நாம் பழகியிருக்கிறோம் என்கிறார் அவர். இந்த நீட்டிப்பு போலவே, சைபோர்க் தன்மையையும் நமது நீட்டிப்பாக கருதலாம் என்பது அவரது வாதம்.

டிஜிட்டல் மீடியா அறிஞரான  ஜார்ஜ் லாண்டோ (George Landow ) ஆடை மற்றும் குடைகளை பயன்படுத்துபவர்கள் கூட சைபோர்க் தான் என்று சொல்கிறார். பேச்சு மற்றும் எழுத்தை பயன்படுத்துவது போல தான் இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கியிருப்பதும் என்கிறார் லாண்டோ. இந்த அறிஞர்களின் கருத்துக்கள் சைபோர்க் தொடர்பான தொழில்நுட்ப மிரட்சியை கடந்து அதை புதிய கோணத்தில் புரிந்து கொள்ள உதவும். இதே போல சைபோர்க் அறிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

செயற்கை அறிவு தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருக்கும் எதிர்காலவியல் விஞ்ஞானியான ரே குர்ஸ்வைல் (Ray Kurzweil) மனித சிந்தனை மற்றும் உணர்வுகளை இயந்திர மூளைக்குள் ஏற்றி அதை என்றென்றும் கம்ப்யூட்டர் வலைப்பின்னலுக்கல் நிலைத்து நிற்கச்செய்யும் என்னும் கருத்தை முன் வைத்து வருகின்றனர். தொழில்நுப்டம் வியக்க வைக்கிறது. ஆனால் மிரளவும் வைக்கிறது. சைபோர்க் தன்மை அந்தரங்க மீறல் தொடர்பான சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் சொல்கின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்டாப் த சைபோர்க் (http://stopthecyborgs.org/about/) எனும் அமைப்பும் செயல்பட்டு வருகிறது. 
 

நீல் ஹர்பைசன் சைப்போர்க் அனுவம் தொடர்பான வீடியோ இணைப்பு:

 

 - 4தமிழ்மீடியாவிற்காக: சைபர்சிம்மன்pro3.jpg


வருங்கால தொழில்நுட்பம் 10 : பார்வையை மீட்கும் பயோனிக் விழிகள்!

 

சைபோர்க் மனிதர்கள் பற்றி படிக்கும் போது நிச்சயம் வியப்பாக இருக்கும். நம்ப முடியாமலும் இருக்கும். இவை எல்லாம் விபரீத முயற்சிகளோ என்றும் கூட தோன்றலாம்.

விஞ்ஞானம் தொழில்நுட்ப சாத்தியங்களின் எல்லையை விரிவாக்கி கொண்டே செல்லும் நிலையில் அதன் பயன்பாடு மனித வாழ்வில் மேலும் மேலும் நெருக்கமாக ஊடுருவுவது இயல்பாகி கொண்டிருக்கிறது. இருந்தாலும் கூட, தொழில்நுப்டத்தை மனிதர்கள் பயன்படுத்துவது எனும் நிலையில் இருந்து பெரும் பாய்ச்சலாக தொழில்நுட்பத்தால் மனிதர்கள் தங்களை மேம்படுதிக்கொள்ளும் சைபோக் கருத்தாக்கம் இதற்கெலாம் என்ன அவசியம் என்ற கேள்வியை எழுப்பலாம். சிலிக்கான் சிப்பை உடலுக்குள் பொருத்திக்கொள்வதன் மூலம் மனித ஆற்றலை மேம்படுத்திக்கொள்வது பற்றியும் , பார்வை குறைபாடு போன்றவற்றை வெல்லக்கூடிய சாததியங்கள் பற்றியும் ஏற்கனவே பார்த்தோம். சிலிக்கான சிப் மூலம் மூளையின் பரிபாஷையை தாங்கியிருக்கும் நியூரான்களோடும் தொடர்பு கொண்டு மனித -இயந்திர கூட்டு செயல்பாட்டை சாத்தியமாக்கலாம் என்பதன் அடிப்படையிலேயே இந்த திசையிலான ஆய்வுகளும் முயற்சிகளும் அமைந்துள்ளன.

 

இப்போது சைபோர்கின் இன்னொரு வடிவமான பயோனிக் மனிதர்களை பார்க்கலாம். பயோனிக் மனிதர்கள் என்றால் செயற்கை உறுப்புகளை பொருத்திக்கொண்டு  உடல் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளும் அல்லது அதில் உள்ள குறைகளை ஈடு செய்து கொள்ளும் மனிதர்கள் என்று புரிந்து கொள்ளலாம். இந்த செயற்கை பாகங்கள் உடல் இயக்கத்துடன் ஒருங்கிணைந்திருக்கும் வகையில், உயிரியல் நோக்கிலான செயல்பாடுகளை பெற்றிருப்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். அந்த வகையில் இவை வழக்கமான செயற்கை உறுப்புகளில் இருந்து மாறுபட்டவை ,மேம்பட்டவை. இந்த செயற்கை உறுப்புகளை எண்ணங்களால் இயக்க முடியும் என்பது தான் இன்னும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் செயற்கை உறுப்புகளை பொருத்திக்கொள்ளும் போது தோற்றத்தில் ஈடு செய்யப்படுகிறதே தவிர, இயக்கத்தில் இழந்த செயல்களை பெறுவது சாத்தியமில்லை. ஆனால் உடல் உறுப்புகள் எப்படி மூளையின் கட்டளை கேட்டு மனதின் விருப்பத்திற்கு ஏற்பட செயல்படுகிறதோ அதே போல எண்ணங்களால் ஓரளவேனும் இயக்க கூடிய வகையிலான ஆற்றலை கொண்டிருக்கும் அதி நவீன செயற்கை உறுப்புகள் தான் பயோனிக் எனும் வரம்.

பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வையை மீட்டுத்தரும் பயோனிக் விழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எண்ணங்களால் இயங்கும் பயோனிக் கை , கால்களை பொருத்திக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளில் சர்க்கரை அளவை துல்லியமாக கணித்து தேவைக்கேற்ற இன்சுலின் சுரக்கச்செய்யும் பயோனிக் கணையம் உருவாக்கப்பட்டுள்ளது . இவ்வளவு ஏன் சென்சார்களின் ஆற்றல் கொண்ட பயோனிக் சருமமும் ஆய்வில் இருக்கிறது. இன்னும் பயோனிக் அற்புதங்கள் காத்திருக்கின்றன.

அடுத்த 50 ஆண்டுகளில் உடல்ரீதியிலான குறைபாட்டையே இல்லாமல் செய்து விடலாம் என்கிறார் எம்.ஐ.டி மீடியாலேப் ஆய்வாளர் ஹூஜ் ஹெர் (Hugh Herr).

இவை எல்லாம் எப்படி சாத்தியம்?

எல்லாம் இயற்கையை நகலெடுப்பதன் மூலம் தான்! 

எப்படி? என பார்ப்பதற்கு முன், சைபோர்க் ஆய்வு தொடர்பாக வல்லுனர்கள் சிலர் சொல்லும் கருத்தை கேட்டுக்கொள்ளலாம். சைபோர்க் என்றவுடன் ஏதோ புது யுக மனிதர்கள் போல, முற்றிலும் அந்நியமானவர்கள் போல  தோன்றினாலும், நம்மில் பெரும்பாலானோர் ஒரு விதத்தில் பகுதி அளவு சைபோர்க் தான் என்கின்றனர்.

நாம் காலணி அல்லது ஷூ அணிகிறோம். இதன் மூலம் நமது செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்கிறோம். கண்ணாடி போட்டுக்கொள்கிறோம். இதே போல தான் சிலிக்கான் சிப்பை அல்லது பயோனிக் உறுப்பை பொருத்துக்கொள்வதும் என்கின்றனர்.

2064 ம் ஆண்டு வாக்கில் சைபோர்காக இருப்பது மிக இயல்பாக, புத்திசாலித்தனமானதாக இருக்கும் என்கிறார் பயோனிக் ஆய்வாளர் தியோடர் பெர்ஜர் (Theodore Berger).

ஆக, முதல் பார்வைக்கு தோன்றுவது போல சைபோர்க் செயல்பாடோ அல்லது பயோனிக் முயற்சிகளோ முற்றிலும் அந்நியமானதல்ல!

சைபோர்க் எனும் கருத்தாக்கம் சைபர்னெட்டிக் ஆர்கனிசம் என்பதில் இருந்து உருவானது போல பயோனிக் எனும் பதம் பயோனிகல் கிரியேட்டின் எஞ்ஜினியரிங் என்பதில் இருந்து வருகிறது. அதாவது இயற்கையில் காணும் உயிரியல் முறை மற்றும் அமைப்புகளை பொறியியல் வடிவமைப்பு மற்றும் நவீன் தொழிலுநுட்பத்திற்காக பயன்படுத்திக்கொள்வது !

பயோனிக் எனும் வாரத்தை முதன் முதலில் ஜேக் ஸ்டீலியால் (Jack E. Steele )1958 ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. பியான் எனும் கிரேக்க சொல்லுடன் ஐசி எனும் முடிவுச்சொல் சேர்ந்து பயோனிக் எனும் வார்த்தையானதாக கருதப்படுகிறது. பெரும்பாலும் அறிவியில் உலகில் மட்டுமே அறியப்பட்ட இந்த சொல்லை 1970 களில் ஒளிபரப்பான சிக்ஸ் மில்லியன் டாலர் மேன் மற்றும் பயோனிக் உமன் ஆகிய அறிவியல் புனைகதை தொலைக்காட்சி தொடர்கள் வெகுஜன கலாச்சாரத்திலும் பிரபலமாக வழிவகுத்தது. பயோமெட்ரிக் மற்றும் பயோமிமிக்ரி சார்ந்தும் இந்த சொல் பயன்படுகிறது. இவை எல்லாம் குறிப்பது இயற்கையில் நுட்பத்தை அப்படியே பின்பற்றுவதாகும். அதாவது வெகு கவனமாக இயற்கையில் உயிரியல் நுட்பம் எப்படி இயங்குகிறது என கவனித்து, குறிப்பெடுத்து அதை அப்படியே மிக நுணுக்கமாக செயற்கையாக அல்லது இயந்திர வடிவில் பிரதியெடுப்பது தான் ஆய்வாளர்களின் நோக்கமாக இருக்கிறது.

இதை தான் மருத்துவ நோக்கில் பயன்படுத்தி வருகின்றனர். உடல் உறுப்பு அல்லது உடல் பகுதியை உயிரியலை ஒத்த இயந்திர பகுதியை பொருத்துவதன் மூலம் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள இந்த நுட்பம் வழி செய்கிறது.

இந்த செயற்கை உறுப்புகள் மனிதர்களுக்கு புனர்ஜென்மம் அளிக்ககூடியதாக இருக்கின்றன. இதற்கு அழகான உதாரணம் , பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்க்கும் திறனை மீட்டுத்தரும் பயோனிக் விழிகள்.

 

பரவலாக கண்களை பாதிக்கும்  நோய்களால் பார்வையை இழந்து நிற்பவர்களுக்கு மீண்டும் பார்க்கும் திறனை பயோனிக் விழிகள் வழங்குகின்றன. பயோனிக் விழிகளை டிஜிட்டல் காமிரா கொண்ட கண்ணாடி என்று சொல்லலாம். பார்க்கும் திறனை இழந்தவர்களுக்கு ஒளியை காமிரா மூலம் படம் பிடித்து அதை மூளையில் உள்ள பார்வைக்கான அணுக்கள் உணரச்செய்வதன் மூலம் பயோனிக் விழிகள்  செயல்படுகின்றன.  ஆனால் இதன் பின்னே உள்ள செயல்பாடு சிக்கலானது, நுட்பமானது. விழிப்பார்வை எலக்ட்ரோட்களால் உயிர்பெறும் அற்புதம் இது.

இந்த அற்புத்த்தை அட்லாண்டிக் பத்திரிகையின் பயோனிக் விழிகள் தொடர்பான அறிமுக கட்டுரை அழகாக  விவரிக்கிறது.

"அறிவியல் ரீதியாக பார்த்தால் விழிகள் ஆன்மாவுக்கான ஜன்னல்கள் அல்ல; அவை மூளைக்கான ஜன்னல்கள். நீங்கள் காதலிப்பவரின் கண்களை நோக்கும் போது உண்மையில் நீங்கள் பார்ப்பது விழித்திறையை. இது விழிகளுக்கு பின்னே சுவரோவியம் போல இருக்கும் மூளை திசுக்களின் நீட்டிப்பை தான் பார்க்கிறீர்கள். காகிதம் போன்ற இந்த உயிரணுக்கள் தான் பார்வை எனும் மாயத்தை சாத்தியமாக்குகிறது. இந்த அணுக்கள் ஒளியை உள்வாங்கி கொண்டு அவற்றை மூளைக்கு புரியும் மொழியில் தெரிவிக்கும் போது கண்ணில் காட்சி தெரிகிறது”.

விழித்திரைக்கும் மூளைக்கும் இடையிலான இந்த உரையாடல் ஏதேனும் காரணத்தில் பாதிக்கப்பட்டால் விழி அதன் பயனான பார்க்கும் திறனை இழந்து விடுகிறது.

 

இந்த இழப்பு பல காரணங்களினால் ஏற்படலாம். இந்த பாதிப்பை சரி செய்யும் மருத்துவ முயற்சியாக தான் பயோனிக் விழிகள் வருகின்றன. அதாவது மூளைக்கும்  காட்சி குறியீடுகளுக்கும் இடையிலான பள்ளத்தை இட்டு நிரப்பும் செயலை இந்த செயற்கை விழிகள் செய்கின்றன. இதை” சாப்ட்வேர் (மூளைக்கு புரியும்) உயிரியல் மொழியில் பேசுகிறது” என்கிறார் டாக்டர் மார்க் ஹுமாயூன் (Mark Humayun ) . இவர் தான் பயோனிக் விழிகளுக்கான ஆய்வில் பத்தாண்டுகளுக்கும் மேல் ஈடுபட்டு அதன் பயனாக ஆர்கஸ் விழி அமைப்பை உருவாக்கிய மருத்துவ ஆய்வாளர். செகண்ட் சைட் நிறுவனம் மூலம் இதனை அவர் உருவாக்கியிருக்கிறார்.

ஹுமாயுன் பத்தாண்டுகளுக்கு முன் தனது பாட்டி பார்வையை இழந்து தவிப்பதை பார்த்து அதற்கு எந்த தீர்வும் இல்லாமால் இருப்பதை பார்த்து மனம் வருந்திய போது மருத்துவத்தில் தனது பாதையை மாற்றிக்கொண்டு பார்வையை மீட்டுதருவதற்கான ஆய்வில் ஈடுபடத்துவங்கினார். அதன் பயன் தான் ஆர்கஸ்.

ஹுமாயூனுக்கு கேட்கும் திறனை மீடபதற்கான கோக்லியர் இம்லாண்ட் (cochlear implant) முன்னுதாரணமாக இருந்தது. இந்த அமைப்பு, ஒலி அலைகளை மூளைக்கு புரியும் மின்சார அதிர்வுகளாக மாற்றி கேட்கும் திறனை உண்டாக்கியது. ஆனால் செவிகளை விட விழிகள் சிக்கலான செயல்பாடுகளை கொண்டிருந்தது தான் பெரும் சவாலாக இருந்தது.

செவியில் 30,000 உயிரணுக்கள் தான் இருக்கின்றன. ஆனால் விழிகளில் பத்து லட்சம் கேங்கிலியன் அணுக்கள் இருக்கின்றன. இவை தான் ஒளியை பிக்சல்களாக மாற்றுகின்றன. ஒளியை உள்வாக்கி கொண்டு அவற்றை பிக்சல்களாக புரிந்து கொள்ள மூளக்கு இவை எப்படி செய்திகளை அனுப்பி வைக்கின்றனவோ அதே முறையில் சிலிக்கான் சிப்பை செயலபட வைப்பது என்றால் எத்தனை நுணுக்கம் தேவைப்படும்?

கண்ணே மணியே என்று சொல்லி பழக்கப்பட்டாலும் கூட விழிகளை நாம் சாதாரணமாக நினைத்து  விடுகிறோம். விழிகளின் செயல்பாட்டின் நுட்பத்தை, பரிணாம கோட்பாட்டை கண்டுபிடித்த விஞ்ஞானியான சார்லஸ் டார்வின் சரியாக உணர்ந்து வியந்திருக்கிறார். பல்வேறு தொலைவில் இருக்கும் பொருட்களுக்கு ஏற்ப கவனத்தை மாற்றிக்கொண்டு, அதற்கேற்ற ஒளி அளவை தீர்மானித்து காட்சியை சாத்தியமாக்கும் விழிகளின் அற்புதம், இயற்கை தேர்வினால் மட்டுமே நிகழ்ந்திருக்கும் என்று சொல் வருவது அபத்தமாக இருக்கிறது என்பது போல் டார்வின் தனது ஆர்ஜின் ஆப் ஸ்பிசியஸ் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த சந்தேகம் விழிகளின் அசாத்தியமான திறனுக்கு டார்வின் அளித்த மரியாதை. மற்றபடி அவர் இயற்கை தேர்வில் இருந்து மாறுபடவில்லை. டார்வினையே யோசிக்க வைத்த விழிகளின் செயல்பாட்டை அப்படியே பின்பற்றுவது என்பது தொழில்நுட்பத்திற்கு எத்தனை பெரிய சவலாக இருக்கும் நினைத்துப்பாருங்கள்! ( டார்வின் மேற்கோள் அட்லாண்டிக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது).

அது மட்டும் அல்லாமல் மிகவும் நுட்பமான விழித்திரைக்கு பின் சிப்பை பொருத்த வேண்டும். தூங்கும் போதோ மற்ற நேரத்திலோ இந்த சிப் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். இந்த சவால்களை எல்லாம் எதிர் கொண்டு ஆர்கஸ் விழி உருவானது. 20 ஆண்டுகால் உழைப்பின் பலனாக இதை மனிதர்களில் பயன்படுத்துவதற்கான மருத்துவ அனுமதியும் கிடைத்தது. 

பார்வை பாதிக்கப்பட மனிதர்களில் விழித்திரை அணுக்கள் செயலிழந்து போய்விடுகின்றன; அவற்றின் பணியை எல்க்ட்ரோட் கொண்டு செய்து மூளைக்கு செய்தி அனுப்பும் தடைப்பட்ட பணியை மீண்டும் தொடர்வது தான் பயோனிக் விழியின் சாகசம்.

ஆர்கஸ் பயோனிக் விழி, டிஜிட்டல் காமிரா, மைக்ரோசிப், ரேடியோ டிரான்ஸ்மிட்டர், ரேடியோ ரிசிவர் மற்றும் விழித்திரைக்கான சிப் ஆகிய பகுதிகளை கொண்டிருக்கின்றன.  டிஜிட்டல் காமிரா தான் இதில் கண்ணால் நோக்கும் செயலை செய்கிறது. மூக்கு கண்ணாடி முன் பொருத்தப்படும் இந்த சின்னஞ்சிறிய காமிராக்கள் பொருட்களின் மீதான் ஒளியை உள்வாங்கி அந்த தோற்றத்தை மைரோசிப்புக்கு அனுப்பி வைக்கிறது. தனியே ஒரு சாதனத்தில் இருக்கும் மைரோசிப் இந்த தோற்றங்களை மின் அதிர்வு வடிவில் ஒளி மற்றும் இருள் பிக்சல் அமைப்பில் மாற்றி கண்ணாடியில் உள்ள டிரான்ஸ்மிட்டருக்கு அனுப்புகிறது. இவை ரிசிவரை சென்றடைகின்றன. ரிசவர் கண்ணுக்கு கீழபகுதியில் பொருதப்பட்டிருக்கும். ரிசிவர் மெல்லிய கம்பி மூலமாக விழித்திரையில் பொருத்தப்பட்டுள்ள சிப்பில் இருக்கும் எல்க்ட்ரோட்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

பிக்சல் அதிர்வுகள் விழித்திரை சிப்பை அடையும் போது அவற்றின் தன்மைக்கு ஏற்ப எலக்ட்ரோட் இயக்கம் பெறுகின்றன. அதாவது விழித்திரை எப்படி காட்சிகளின் தோற்றத்தை கிரகித்துக்கொள்கிறதோ அதே விதத்தில் எலக்ட்ர்ரோட்கள் செயல்பட்டு இதற்கான செய்திகளை மூளையின் காட்சி பகுதிக்கு நியூரான்களின் வடிவில் சென்றடைகின்றன. உடனே மூளை காட்சியை புரிந்து கொண்டு, நீங்கள் பார்ப்பது மரம், நீல வானம் என கட்டளை பிறப்பிக்கிறது. நாம் பார்க்கிறோம்.

பயோனிக் விழிகள் மூளைக்கான காட்சி தகவல் செல்லும் தடைப்பட்ட பாதையில் புதிய பாலம் அமைத்து கண் முன் தோன்றுக் காட்சிக்கான ஒளி குறிப்புகளை அதற்கு புரியும் மொழியில் மாற்றி அனுப்புகிறது. இதன் மூலம் தான் மீண்டும் பார்வை சாத்தியமாகிறது.

 

ஆனால், எல்லோரும் பார்ப்பது போன்ற காட்சி என்று சொல்லிவிட முடியாது. இவை கோட்டோவியம் போல இருக்கும். பொருட்களின் சுற்றுவட்ட தோற்றம் மற்றும் அசைவுகளை உணரலாம். இதற்கே கூட பயிற்சி தேவைப்படும். ஆனால் எல்லாமே இருண்டு போனவர்களுக்கு இந்த பகுதியளவு பார்வையே கூட நினைத்துப்பார்க்க முடியாத மாயம் தான். ஆனால் இந்த வரம்பு பிக்சல்களை மொழிபெயர்க்கும் எல்க்ட்ரோட்களின் எண்ணிகை சார்ந்தது. முதல் கட்ட ஆய்வில் வெற்றி பெற்று பயோனிக் விழிகளை சாத்தியமாக்கிய நிலையில் , பார்வை துல்லியத்தை அதிகமாக்கும் முயற்சியில் ஹுமாயூன் போன்ற ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஏறக்குறைய இதே முறையில் நீரிழிவு நோயாளிகளின் உடலில் கணயத்தின் செயலை பிரதியெடுக்கும் பயோனிக் கணையம் உருவாக்கப்பட்டுள்ளது. பயோனிக் சாத்தியங்களை உணர்த்தும் பயோனிக் மனிதன் காட்சி திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடல் குறைபாட்டை சரி செய்யும் பல்வேறு முயற்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பயோனிக் அற்புதங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

1. பயோனிக் விழி செயலாடு விளக்கம் : http://health.howstuffworks.com/medicine/modern-technology/bionic-eye.htm

2. பயோனிக் விழி பற்றிய அட்லாண்டிக் கட்டுரை;http://www.theatlantic.com/health/archive/2014/08/a-bionic-eye-that-restores-sight/378628/

3. பயோனிக் விழி இணையதளம்: http://www.2-sight.com/

  - 4தமிழ்மீடியாவிற்காக: சைபர்சிம்மன்


வருங்கால தொழில்நுட்பம் -11: பயோனிக் கனையமும், பயோனிக் கரங்களும் !

 

 பயோனிக் கனையம் என்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவுக்கு பொறுபேற்றுக்கொள்ளும் சாதனம். இந்த சாதனம் உங்களை அறிந்து கொள்கிறது)  - எட்வர்ட் டாமியானோ , பயோமெடிகல் பொறியியல் பேராசிரியர் .

காலம் காலமாக ஓவியர்களுக்கு கை வந்த கலையாக இருப்பது விஞ்ஞானிகளுக்கு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கைவரத்துவங்கியிருக்கிறது. அது, இயற்கையை அப்படியே பிரதியெடுக்கும் கலை. அதாவது இயற்கையின் செயல்பாடுகளை நகலெடுப்பது! ஓவியர்கள் இயற்கையின் அற்புதங்களை அதன் நுட்பங்களோடு மிக அழகாக தத்ரூபமாக காட்சிகளாக்கி வியக்க வைக்கின்றனர். பயோனிக் துறையை சேர்ந்தவர்களும் இதை தான் செய்ய முயல்கின்றனர்.

 

ஓவியர்கள் இயற்கையை படம் பிடிப்பது போல பயோனிக் துறையில் இயற்கையில் உயிரியலின் செயல்பாடுகளை உற்று கவனித்து அதன் நுணுக்கங்களை செயற்கை முறையில் பிரதியெடுக்க முயல்கின்றனர். இதை பயோ மிமிக்ரி என்றும் சொல்கின்றனர். இயற்கை செயல்படுவதை பின்பற்றி அப்படியே செய்ய முயல்வது. ஆனால் ஓவியர்கள் செய்வது போல் இயற்கையை அப்படியே பிரதியெடுப்பது விஞ்ஞானிகளுக்கு அத்தனை சுலபமானது அல்ல. உயிரினங்களின் இயற்கையான செயல்பாடுகளை உருவாக்குவது என்பது சவால்கள் நிரம்பியது. 

மிகச்சிறிய உயிரினத்தின் செயல்பாட்டை மறு உருவாக்கம் செய்வதே பெரும் சவால் .அப்படி இருக்க, மனித உறுப்புகள் செயல்படும் விதத்தை பின்பற்றி செயல்பட முடிவது எத்தனை சவாலானது என்று புரிந்து கொள்ளலாம். இருப்பினும் இந்த சவாலில் வெற்றி காண்பது மூலம் மருத்துவ நோக்கில் பல அற்புதங்களை சாத்தியமாக்கும். இயற்கையை போலவே செயல்படும் செயற்கை உறுப்புகளை உருவாக்கி மனித உடல் செயல்பாட்டில் உண்டாகும் நோய் பாதிப்புகளுக்கு தீர்வு காணலாம். முக்கியமாக உடல் உறுப்பு செயலிழப்புக்கு இவை தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது.

இதற்கு  உதாரணமாக பயோனிக் விழிகளை பார்த்தோம். இன்னொரு அழகான உதாரணமான பயோனிக் கனையம் பற்றி இப்போது பார்க்கலாம்.


இயற்கையை பின்பற்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட சாதனத்தை தான் பயோனிக் கனையம் என்று சொல்கின்றனர். கனையம் மனித உடலில் ஜீரன செயல்பாட்டின் மையாக இருக்கும் சுரப்பி. இரத்ததில் சர்க்கரையின் அளவை தேவையான அளவில் சீராக வைத்திருக்கும் மாபெரும் பொறுப்பு இதனிடம் தான் இருக்கிறது. கனையத்தில் சுரக்கும் இன்சுலின் தான் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த மிகவும் முக்கியம். இன்சுலின் சர்க்கரை ஈ குளுகோஸ்) உடல் அணுக்களுக்குள் நுழைவதற்கும் வழி செய்கிறது. குளுகோஸ் தான் உயிரணுக்களுக்கான எரிபொருள். இவை இல்லாவிட்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. 

நீரிழிவு நோயாளிகளுக்கு கனையத்தின் அருமை நன்றாகவே தெரியும். 

கனையத்தில் இன்சுலின் சுரப்பது தடைபடும் போது நீரிழிவு நோய் உண்டாகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதற்கு ஈடு செய்ய செயற்கையான முறையில் இன்சுலினை பயன்படுத்த வேண்டும். இதற்கு மாத்திரை மருந்துகளுடன் உணவு கட்டுப்பாட்டு முறைகளும் இருக்கின்றன. உடற் பயிற்சி முறைகளும் வலியுறுத்தப்படுகிறது. நீரிழிவில் வகைகள் இருக்கிறது. இவற்றில் டைப் 1 என்று சொல்லப்படும் நீரிழிவு நோய் பெரும்பாலும் பிள்ளை பருவத்தில் அல்லது பதின் பருவத்தில் உண்டாகலாம் என கருதப்படுகிறது. இந்த பாதிப்புக்குள்ளானவர்களின் கனயம் இன்சுலின் சுரப்பை நிறுத்திக்கொண்டு விடுகிறது அல்லது மிகவும் குறைவாக சுரக்கச்செய்கிறது. எப்படி இருந்தாலும் பிரச்சனை தான். ஏனெனில் இரத்ததில் சர்க்கரை அளவை முறையாக கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

 


டைப் 1 நீரிழிவு நோயாளிகள் இந்த பாதிப்பை சரி செய்ய தேவையான போது இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு உதவுவதற்காக இன்சுலின் பம்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இன்சூலின் ஊசியை விட இது மேம்பட்டது என்றாலும் தொடர்ச்சியான கவனமும் கண்காணிப்பும் தேவை. கூடவே இன்சுலின் அளவை கணக்கிடவும் வேண்டும். இந்த சிக்கலுக்கு தீர்வாக தான் டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு கைகொடுப்பதற்காக பயோனிக் கனையம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பயோனிக் கனையம் என்றவுடன் கனையத்திற்கு பதிலாக பொருத்தக்கூடிய மாற்று கனையம் என்று நினைத்து விடுவதற்கில்லை. இது அடிப்படையில் ஏற்கனவே உள்ள நீரிழிவு சாதனங்களின் தொகுப்பு. ஆனால் கனையத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட குறையை இட்டு நிரப்பக்கூடியது. இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்ட கனையத்துக்கு துணையாக இருக்க கூடியது.கனையத்தின் செயல்பாட்டை கச்சிதமாக செய்யக்கூடிய ஆற்றலுக்காக இதை பயோனிக் கனையம் என்கின்றனர். அமெரிக்காவை சேர்ந்த ஆய்வுக்குழுவினர் இதனை உருவாக்கியுள்ளனர். போஸ்டன் பலகலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் எட்வர் டாமியானோ தலைமையிலான குழு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

பயோனிக் கனையம் மூன்று முக்கிய அமைப்புகளை கொண்டிருக்கிறது; குளுகோஸ் மானிட்டர், ஐபோன் செயலி மற்றும் இன்சுலின் பம்ப் ஆகியவை உள்ளன. குளுகோஸ் மானிட்டர் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை கண்காணித்து தகவல் தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் இந்த தகவல் சேகரிக்கப்படும். இதற்கான ரிசிவர் மூலம் தகவல்கள் பெறப்பட்டு அதனடிப்பைடயில் செயலி, இரத்த சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கிறதா என கணக்கிட்டு, இன்சுலின் எந்த அளவு தேவை, எப்போது தேவை என்று தீர்மானத்து, இன்சூலின் பம்பிற்கு உத்தரவு பிறப்பிப்பிக்கிறது. புளுடூத் மூதல் இந்த ஆணைகள் பிறப்பிக்கப்படுகிறது. 

 

ஆக, இந் சாதனம் கனையம் எப்படி வேலை செய்யுமோ அதே முறையில் செயல்படுகிறது. கனையத்தின் பணி இரத்த சர்க்கரயை கண்காணித்துக்கொண்டே இருந்து, அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப சர்க்கரையின் அளவை சீராக்க இன்சூலின் சுரப்பை முறைப்படுத்துகிறது.


கனையம் பாதிக்கப்படும் போது இந்த சீரான செயல்பாடும் பாதிக்கப்படுகிறது. இதற்கு ஈடு கொடுக்க செயற்கையாக இன்சூலின் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்சூலின் சுரப்பு மட்டும் அல்ல, குளுகோகான் சுரப்பியும் சரியாக இருக்க வேண்டும். இது சர்க்கரையின் அளவு குறையும் போது அதை அதிகரிக்கச் செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை உயர்ந்தாலும் பிரச்சனை, ஒரேடியாக குறைந்தாலும் பிரச்ச்னை. எனவே இந்த இரண்டு சுரப்பிகளின் செயல்பாடும் சீராக இருக்க வேண்டும். பயோனிக் கனையம் இந்த இரண்டுக்குமே பொறுப்பேற்கிறது .

நோயாளிகளின் உடலில் பொருத்தப்படும் குளுகோஸ் மானிட்டர் மூலம் இந்த பணியை செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை இது கண்காணித்து சொல்வதற்கேற்ப செயலி கணக்கு போட்டு, இன்சூலின் மற்றும் குளுக்கோகான் அளவை தீர்மானித்து அவற்றை செலுத்த ஏற்பாடு செய்கிறது. வழக்கமாக இதை நோயாளிகளே கணக்கிட்டாக வேண்டும். இது சிக்கலான பணி. இதற்கு தொடர் கண்காணிப்பு தேவை என்பதோடு கணக்கிடும் கடினமான பணி. கிட்ட்த்தட்ட ஒருவருக்கான இரண்டாவது வேலை போல் தான் இதுவும். அலட்சியப்படுத்த முடியாத வேலை!
இந்த பணிச்சுமையில் இருந்து பயோனிக் கனையம் விடுவிக்க கூடியதாக இருக்கிறது. இது கண்காணிப்பு மற்றும் கணக்கீட்டை தன் கையில் எடுத்துக்கொண்டு கனையம் போலவே செயல்படுகிறது.

 

டைப்1 நீரிழிவு நோயாளிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் அளிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கனையத்தில் உள்ள சாதனங்கள் இப்போது தனிதனியாக இருந்தாலும் இவை அனைத்து ஒட்டுமொத்த தொகுப்பாக முதல் முறையாக இணைக்கப்பட்டிருப்பது தான் இதன் சிறப்பு. மேலும் இது இன்சூலின் அளவை கணக்கிடுவதில் உள்ள அனுமானங்களையும் விலக்கி துல்லியத்தை அளிக்கிறது. ’பயோனிக் கனையம் உங்கள் இரத்த சர்க்கரை அளவுக்கு பொறுபேற்றுக்கொள்ளும் சாதனம். இந்த சாதனம் உங்களை அறிந்து கொள்கிறது’, என்கிறார் பேராசிரியர் எட்வர்ட் டாமியானோ.

2010 ம் ஆண்டு முதல் இதை மருத்துவமனை சூழலில் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிஜ வாழ்க்கை சூழலில் இது எப்படி செயல்படுகிறது என்பதில் தான் உண்மையான சவால் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது டைப்1 நீர்ழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயோனிக் கனையம் பொருத்தப்பட்டு ஐந்து நாட்களுக்கு அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். மேலும் இதே காலத்தில் கோடை முகாம் ஒன்றில் டைப்1 நீரிழிவு பாதிப்பு உள்ள 32 பதின்பருவத்தினருக்கு இந்த சாதனம் வழங்கப்பட்டு அவர்களிடம் இருந்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த ஆய்வில் பயோனிக் கனையம் எதிர்பார்த்த்தை விட அற்புதமாக செயல்பட்ட்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை இது அருமையாக கட்டுப்படுத்தியது என்று பேராசிரியர் டாமியானோ உற்சாகமாக கூறியிருக்கிறார். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் மத்தியிலும் இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இதே போன்ற சாதனம் பிரிட்டனிலும் பரிசோதனையில் இருக்கிறது. மருத்துவ துறையினர் மத்தியில் இந்த ஆய்வு முடிவுகள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

செயல்பாட்டு அளவில் பயோனிக் கனையம் இயற்கையான கனைத்தை ஒத்திருக்கிறது. ஆனால் இது பயன்பாட்டிற்கு வர இன்னும் பல கட்ட சோதனைகள கடந்தாக வேண்டும். எனினும் ஆய்வுக்குழுவினர் இதில் நம்பிக்கையுடன் உள்ளனர். எதிர்காலத்தில் இந்த பயோனிக் கனையத்தை பொருத்திக்கொண்டு டைப் 1 நீரிழிவு நோயாளிகள் சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ உலகம் நம்புகிறது. பயோனிக் கனையம் ஒரு மருத்துவ சாதனை மட்டும் அல்ல; இதன் பின்னே நெகிழ வைக்கும் கதையும் இருக்கிறது. இது ஒரு மருத்துவ கண்டுபிடிப்பு என்பதோடு ஒரு தந்தையின் பாசத்தின் வெளிப்பாடும் கூட!.

பயோனிக் ஆய்வில் முக்கிய பங்கு வகித்த பேராசிரியர் டாமியானோவின் மகன் சிறு குழந்தையாக இருந்த போது டைப் 1 நீரிழிவு நோயின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது அவர் மகன் டேவிட் 11 மாத குழந்தை. அதன் பிறகு அவர் மகனின் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஒரு பாசமிகு தந்தையாக செயல்பட்டு வருகிறார். நள்ளிரவு நேரங்களின் மகனின் சர்க்கரை அளவு குறித்து கவலைப்பட்டு கண் விழித்து கண்காணித்திருக்கிறார். மகன் வளர்ந்து பெரியவானான பிறகு அவனது செயல்பாடு சதா சர்வகாலமும் இன்சூலின் பற்றிய கண்காணிப்பினால் பாதிக்கப்படலாம் என்ற கவலையும் அவருக்கு இருந்தது. மகனின் இளமைத்துடிப்பானா இயக்கத்திற்கு இது தடையாக இருக்க கூடாது என்றும் அவரது தந்தை உள்ளம் ஏங்கியது. டாமியானோ தந்தையின் ஏக்கத்துடன் நின்றுவிடவில்லை. அவர் பயோமெடிகல் பொறியியல் பேராசிரியரும் கூட!. போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். உயிரியல் அடிப்படையிலான செயல்பாடு மற்றும் அவற்றை பின்பற்றும் ஆய்வில் ஆர்வம் உள்ள பேராசிரியர் தனது மகனின் பிரச்சனைக்கு தீர்வு காணவும், மகனை போல பாதிப்பு கொண்ட லட்சக்கணக்கானவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் டைப் 1 நீரிழிவுக்கு தீர்வாக அமையக்கூடிய பயோனிக் கனையம் உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு இதில் முதல் கட்ட வெற்றியும் பெற்றுள்ளார்.

மகன் கல்லூரியில் சேர்வதற்கு முன் இந்த கனையத்தை முழு வீச்சில் உருவாக்கி இதற்கு மருத்துவ அனுமதியையும் பெற்று இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர அவர் முயன்று கொண்டிருக்கிறார். அவரது மகனும் தந்தையால் இது முடியும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார். பொதுவாக பயோனிக் உறுப்புகள் தொடர்பான நம்பிக்கைக்கும் இந்த கண்டுபிடிப்பு வலு சேர்த்திருக்கிறது.

பயோனிக் கரங்கள் போன்ற ஆய்விலும் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுப்படிருக்கின்றனர். பயோனிக் கரம் என்பது இழந்த கையில் பொருத்தப்படும் செயற்கை கரத்தில் ஓரளவுக்கேனும் உணர்வுகளை திரும்பி அளிக்கும் முயற்சியாக இருக்கிறது. செயற்கை கை பொருத்தப்பட்டவர் தனது எண்ணம் மூலமே அந்த கையை இயக்க முடிவதே பயோனிக் கரத்தின் சாதனையாக இருக்கிறது. மூளையில் அசைவுகளை கட்டுப்படுத்தும் மோட்டார் கார்டெக்ஸ் பகுதியுடன், கையில் மூளையின் கட்டளைகளை பெறக்கூடிய நரம்புகளை இணைப்பதன் மூலம் இந்த கரம் செயல்படுகிறது. மூளையில் இருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகள் விபத்து போன்றவற்றில் கையை இழந்தவர்கள் உடலில் துண்டிக்கப்பட்ட இடத்துடன் நின்று விடுகின்றன. விளைவு செயற்கை செயலிழந்த கையாகவே இருக்கிறது. பயோனிக் கரமோ முளையின் சமிக்ஞ்சைகளை புரிந்து கொள்ளகூடியதாக இருக்கிறது. இதனால் செயற்கை கையை அசைப்பது, அதன் மூலம் பொருட்களை பற்றுவது ,ஓரளவு தொடு உணர்வு போன்றவற்றை பெறுவதும் சாத்தியம்.’’


சில ஆண்டுகளுக்கு முன் கிளாடிய மிட்சல் (Claudia Mitchell ) எனும் பெண்மணிக்கு இத்தகைய பயோனிக் கரம் பொருத்தப்பட்டது. அவர் உலகின் பயோனிக் கரம் பெற்ற முதல் பெண்மணியாக கருதப்படுகிறார். மேலும் சிலர் பயோனிக் அங்கங்களை பெற்றுள்ளனர். இந்த திசையில் மேலும் பல வியக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் வரை மனிதகுலத்தை மாற்றக்கூடும் என நம்ப படுகிறது. அவற்றை தொடர்ந்து பார்த்து வியக்கலாம். அவற்றுடன் பயோனிக் சருமம் மற்றும் பேரிடர் காலங்களில் கைகொடுக்கும் பயோனி பூச்சிகள் பற்றியும் பார்க்கலாம்.

கட்டுரைக்கான இணைப்பு; 
1.    பயோனிக் கனையம் பற்றி அறிய : http://sites.bu.edu/bionicpancreas/
2.    பயோனிக் கரத்தின் செயல்பாடு விளக்க வீடியோ;

 

  - 4தமிழ்மீடியாவிற்காக: சைபர்சிம்மன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால தொழில்நுட்பம் -12: பயோனிக் சருமம் !

விழிகளை விடத் துல்லியமாக பார்க்கக் கூடிய காமிராக்களை உருவாக்க இயலும் போது நம்முடைய சருமத்தை விட மேம்பட்ட உணரும் ஆற்றல் கொண்ட சூப்பர் சருமத்தை ஏன் உருவாக்க கூடாது? - டகாவோ சோமேயா, பயோனிக் சரும ஆய்வாளார்.

 

 

சமீபத்தில் சாண்டிஸ்க் நிறுவனம் 512 ஜிபி திறன் கொண்ட மெமரி கார்டை அறிமுகம் செய்த செய்தியை நீங்கள் படித்திருக்கலாம். சராசரி கம்ப்யூட்டரை விட கூடுதலான ஆற்றலை விரல் நுனியில் அடங்க கூடிய சின்ன மெமரி கார்டில் கொண்டு வந்திருப்பது ஆச்சர்யம் தான். பத்தாண்டுகளுக்கு முன் 512 எம்பி திறன் கொண்ட மெமரி கார்டே பெரிய விஷயமாக இருந்தது என்பதை நாம் பெரும்பாலும் உணராமலே சர்வசாதாரணமாக மெமரி கார்டை பாட்டு கேட்கவும் வீடியோ கோப்புகளை சேமிக்கவும் பயன்படுத்துகிறோம். இப்போது 512 ஜிபி திறன் ஒரு மெமரி கார்டில் அடங்கி கிடக்கிறது. பிரம்மாண்டமான மெயின்பிரேம் கம்ப்யூட்டர்கள் பர்சனல் கம்யூட்டராக சுருங்கி நம் மேஜை மீது அமர்ந்து கொண்டது. அதன் பின் பர்சனல் கம்ப்யூட்டர் மேலும் சுருங்கி உள்ளங்கைக்கு ஸ்மார்ட் போனாக வந்திருக்கிறது. ஆனால் மூர்த்தி தான் சுருங்குகிறதே தவிர கீர்த்தி என்னவோ பெருகி கொண்டே தான் இருக்கிறது.

மெமரி கார்டு மாயம் ஒருபுறம் இருக்கட்டும், சிலிக்கான் சிப்பின் மின்னணு ஆற்றலை காகிதத்திலும் மெலிதான பொருட்களுக்கு விஞ்ஞானிகள் கொண்டு வந்திருக்கின்றனர் தெரியுமா? இந்த ஆய்வு மூலம் மனித தோலை மிஞ்சக்கூடிய பயோனிக் சருமத்தை அதாவது செயற்கை தோலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மனித தோலை மிஞ்சக்கூடிய என்னும் பயன்பாட்டை படிக்கும் போது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் நிஜத்தில் இது சாத்தியமாவது என்பது இப்போதைக்கு மனித ஆற்றலுக்கு எட்டியதாக இருக்கவில்லை. மனித மூளையாக உருவாக்க முடிந்த தொழில்நுட்படங்களால் சாத்தியமாக கூடியதாகவும் இல்லை. ஆனால் விஞ்ஞானிகள் இந்த இலக்கை நோக்கி ஆரம்ப அடிகளை எடுத்து வைத்து பாய்ச்சல்களை நிகழ்த்தி வருகின்றனர்.

அந்த பாய்ச்சல்களில் ஒன்று தான் காகிதம் போல கசக்கி எறிந்தாலும் செயல்பாடு பாதிக்கப் படாத நுணுக்கமான சிப்கள் பதிக்கப்பட்ட மெல்லிய பிளாஸ்டிக் ஷீட்கள்! விஞ்ஞான நோக்கில் இந்த கண்டுபிடிப்பின் மகத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் கற்பனையை துணைக்கு அழைத்தாக வேண்டும். செல்போனில் இருக்கும் சிம் கார்டை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அதை கோபத்தில் உடைப்பது போல இரண்டாக உடையுங்கள். அந்த இரண்டு துண்டும் தானாக ஒட்டிக்கொண்டு சிம் கார்டு எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டும் செயல்பட்டால் எப்படி இருக்கும்? இது போல ஒட்டிக்கொள்ளும் சிம் கார்டோ மெமரி கார்டோ இன்னும் நடைமுறையில் சாத்தியமாகவில்லை என்றாலும் கோட்பாட்டளவில் இது சாத்தியமாகிவிட்டது. மெல்லிய பாலிமர்களில் ஓரளவு நடைமுறையிலும் சாத்தியமாகி இருக்கிறது.

இத்தகைய பாலிமர்களை தனக்குதானே குணமாக்கி கொள்ளும் தன்மை கொண்ட பொருட்கள் என குறிப்பிடுகின்றனர். தனக்குத்தானே குணமாக்குதல் என்றால் மருத்துவ அற்புத்ததை நினைத்து கொள்ளக்கூடாது. ஒரு பொருள் அதன் தன்மையில் இருந்து மாற்றப்பட்ட பிறகும் மீண்டும் அதுவே தனது பழைய இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய தன்மையை தான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இதற்கு அழகான உதாரணம் ரப்பர் பேண்ட். இழுக்க இழுக்க நீள்வது இதன் தன்மை.ஆனால் ஓரளவுக்கு மேல் இழுத்தால் அறிந்துவிடும். அதன் பிறகு பழைய நிலைக்கு அதனால் திரும்ப முடியாது. இதற்கு மாறாக என்ன தான் செய்தாலும் ஒரு பொருள் அதன் பழைய இயல்பு நிலைக்கே திரும்பக்கூடியதாக இருந்தால் எப்படி இருக்கும்? அத்தகைய ஆற்றல் கொண்ட பாலிமர்களையும் , இன்னும் பிற பொருட்களையும் உருவாக்க முயன்று வருகின்றனர் மெட்டிரியல் சயன்ஸ் விஞ்ஞானிகள்.

skin1.jpg

இது முழுவீச்சில் சாத்தியமானால் , ஜப்பானிய பேராரிசியர் டகாவோ சோமேயா கனவு காண்பது போல சூப்பர் சருமத்தை உருவாக்கி விடலாம் தான்! இது கொஞ்சம் மகத்தான இலக்கு தான்! ஆனால் பேராசிரியர் சோமேயா போன்றவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர் . இதற்கு ஆதாரமாக ஆரம்ப வெற்றிகளையும் பெற்றிருக்கின்றனர். பேராசிரியர் உருவாக்க முயற்சிப்பது நமக்கான பயோனிக் போர்வைகளை . மின்னணு சருமம் (e-skin ) அல்லது பயோனிக் சருமம் என்றும் இது குறிப்பிடப்படுகிறது. எளிதாக புரிந்து கொள்ள செயற்கை தோல் என்று குறிப்பிடலாம். இது ஏதோ தனி ஒரு விஞ்ஞானிக்கோ அவரது குழுவினருக்கோ சாத்தியமாக கூடியதல்ல. ஒரு கூட்டு முயற்சியாக இதற்கு பலவித அறிவியல் மாயங்கள் கைகூட வேண்டியிருக்கிறது. வளைந்து கொடுக்கும் மின்னணுவியல், நீளும் தன்மை கொண்ட சென்சார்கள், மைக்ரோபிராசஸர்களை அச்சிடும் ஆற்றல் , புதிய தன்மை கொண்ட பொருட்கள், இன்னும் பல இத்யாதி நுட்பங்கள் எல்லாம் தேவைப்படுகின்றன. பேராசிரியர் சோமேயா பயோனிக் சருமத்தை உருவாக்கும் முயற்சி பற்றி எழுதியுள்ள கட்டுரையில் இந்த துறையின் முக்கிய பங்களிப்புகளையும் இதன் சவால்களையும் குறிப்பிட்டுள்ளார்.

skin2.jpg

பயோனிக் சருமம் என்றால் மனித சருமத்தை போன்ற தன்மையையும் செயல்பாடுகளை கொண்ட மின்ணனு சருமத்தை உருவாக்குவது! மனித சருமம் ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல; அதன் தொட்டால்சிணுங்கி தன்மை அதன் பலம் . மெல்லிய தொடுதலை கூட அதனால் புரிந்து கொள்ள முடியும். வெப்ப நிலையையும் அதனால் உணர் முடியும். அதற்கு மின் கடத்தல் திறனும் இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து தான் சருமத்தை உலகிற்கும் நமக்கும் இடையிலான இடைமுகமாக ஆக்கியிருக்கிறது. தொடு உணர்வு அல்லது வெப்ப நிலையை உணர்ந்து கொண்டு அது உடனடியாக மூளைக்கு மின் அலைகளாக செய்தி அனுப்புகிறது. அதற்கேற்ப மூளை செயல்படுகிறது. இதே தன்மை கொண்ட மின்னணு சருமத்தை உருவாக்குவதில் உள்ள முதல் சவால் மெல்லிய மின்னணுவியலை உருவாக்குவது. இது கிட்டத்தட்ட சாத்தியமாகிவிட்டது. கம்ப்யூட்டரின் மைய்மாக இருக்கும் டிரான்சிஸ்டர்களை கடுகளவு சுருக்கி இப்போது காகிதம் போன்ற பரப்புகளின் மீது பொருத்தும் நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர்.

ஆக மெல்லிய பொருள் மீது சென்சார்களை ஒட்ட வைத்து அவற்றுக்கு தொடு உணர்வு மற்றும் வெப்ப உணர்வு கொடுத்து விடலாம். இந்த இரண்டும் இருந்தால் மின்னணு சருமம் தயார் தானே என நினைக்கலாம்! ஆனால் உண்மையான சவாலே இதற்கு பின் தான் இருக்கிறது. ஸ்மார்ட்போனில் சாத்தியமாகும் டச் ஸ்கிரீன் வசதியை மேம்படுத்தி மிக மிக மெல்லிய ஸ்க்ரீன்களை உருவாக்கினால் கூட அவற்றால் மனித சருமத்தின் ஆற்றலுக்கு அருகே கூட வர முடியாது. ஏன் தெரியுமா? அதற்கு முதலில் அவை வளைந்து கொடுக்கும் தன்மையை பெற்றாக வேண்டும். அதாவது கை கால்களை நீட்டி மடக்கும் போது எப்படி சரும்ம் அதற்கு ஈடு கொடுக்கிறதோ அதே போல மின்னணு சருமமும் மடங்கினாலும் வளைந்தாலும் செயல்பட்டாக வேண்டும். பிக்சல் கூட்டங்களாக டிரான்சிஸ்டர்களை பொருத்தி விடலாம் .ஆனால் அவை பொருத்தப்பட்ட பரப்பு வளையும் போது டிரான்சிஸ்டர்கள் உதிர்ந்து விழாமலும் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும். அதோடு தொடு உணர்வையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள சிப்கள் எல்லாம் கம்ப்யூட்டர் ,லேப்டாப் போன்ற கடினமான மற்றும் நிலையான பரப்புகளில் பயன்படுத்த மட்டுமே ஏற்றவை. வளையும் தன்மை கொண்ட டிஸ்பிளேக்கள் வந்திருந்தாலும் அவை நிலையான பரப்புகளுக்கானவை தான். இரண்டாக மடிக்கும் போது தாக்கு பிடிக்ககூடியவை அல்ல. இப்போது புரிகிறதா சருமம் போன்றதொரு பரப்பை செயற்கையாக உருவாக்குவதில் உள்ள சிக்கல்!

ஆனால் இந்த முதல் சவாலில் முதல் கட்ட வெற்றி மெல்லிய இழை டிரான்சிஸ்டர்களால் கைவசமாகி இருப்பதாக பேராசிரியர் சோமேயா தெரிவிக்கிறார். கை கால் மூட்டுகளிலும், விரல்களிலும் கச்சிதமாக பொருந்து அவற்றின் வளைவு நெளிவுகளுக்கு ஓரளவு ஈடு கொடுக்க கூடிய மின்னணு சருமத்தை உருவாக்க கூடிய சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது. என்ன இதற்கு பொருத்தமான பொருளை தேர்வு செய்ய வேண்டும். இந்த பொருட்களை எல்லாம் ஆய்வு செய்து பாலிமர்கள் இதற்கு ஏற்றது என பேராசிரியர் குழு முடிவு செய்தது. பிளாஸ்டிக் இழைகள் மெலிதானவை. அவற்றை இழுக்கலாம். வளைக்கலாம்.- எல்லாவற்றுக்கும் ஈடுகொடுக்கும். செலவும் குறைவானவை. முக்கியமாக, மெல்லிய மின்னணுவியலுக்கான நவீன உற்பத்தி முறைக்கு மிகவும் பொருத்தமானவை. ஆக, பிளாஸ்டிக் பரப்பின் மீது மெல்லிய இழை டிரான்சிஸ்டர்களை பொருத்தி சருமம் போன்ற ஒன்றை உருவாக்கிவிடலாம். இந்த சருமம் ஓரளவுக்கு மனித சருமத்தை போலவே செயல்படக்கூடியதாக இருக்கும். 

மனித சருமமானது 20 லட்சம் ஜோடி உணர்வான்களை கொண்டிருக்கிறது. இதே அளவு சென்சார்களை பொருத்த வேண்டும் என்றால் அது அடுத்த பெரும் சவால். இதற்கு அச்சிடும் முறையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் பேராசிரியர்.

2003 ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியரின் ஆய்வுக்கூடம் மெல்லிய ஆர்கனிக் இழை டிரான்சிஸ்டர்கள் மூலம் மாதிரி மின்னணு சருமத்தை உருவாக்கியது. இந்த சருமம் கை வளைவுகளிலும் செயல்படும் திறன் கொண்டிருந்தது. ஆனால் இது போதாது என்கிறார் பேராசிரியர் சோமேயா. வளந்து கொடுத்தால் மட்டும் போதுமா? நீளும் தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் அவர். மனித சருமம் இதை தினந்தோறும் சர்வ சாதாரணமாக செய்து காட்டுகிறது. இருந்தாலும் டிரான்சிஸ்டர்கள் பொருத்தப்பட்ட பரப்பை இழுத்தால் அவை தாக்குபிடிப்பது கடினம் தான். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக்த்தை சேர்ந்த சிக்ருட் வாக்னர் இதற்கான விடையை தனது ஆய்வு மூலம் அளித்திருப்பதாக பேராசிரியர் குறிப்பிடுகிறார். இவை ரப்பர் போல வளைந்து கொடுத்து ,நீளும் தன்மை கொண்ட மின்னணு நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்.

skin4.jpg

ஆனால் இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. மனித உடல் எளிமையான வளைவுகளுக்கு மட்டும் உள்ளாவதில்லை. அது அறுங்கோணங்களிலும் இஷ்டம் போல வளையும் தன்மை கொண்டது. இதற்கு நவீன மின்னணு நுட்பங்கள் ஈடு கொடுக்க இன்னும் பல ஆய்வு தடைகளை கடந்தாக வேண்டும். பேராசிரியர் ஆய்வுக்குழு, 1 மைக்ரோமீட்டர் அகலம் கொண்ட மெல்லிய பாலிமரின் மீது ஆர்கானிக் டிரான்சிஸ்டர்கள் மற்றும் சென்சார்களை பொருத்து இந்த முயற்சியில் அடுத்த கட்டத்தை எட்டிப்பிடித்துள்ளது. மின்னணு சருமத்தின் உணர்வு திறனை மேம்படுத்த ஸ்டான்போர்ட் பலகலை ஆய்வாளார் ஜெனான் போவோ, உருவாக்கியுள்ள வளைந்து கொடுக்கும் செயற்கை பரப்பு நுட்பம் உதவும் என்று பேராசிரியர் நம்புகிறார். அழுத்த்தை உணரும் ஆற்றலை இந்த நுட்பம் அளிக்கிறது. இது சருமத்திற்கு மிகவும் அவசியமானது. இதே போல பெர்கிலியில் கலிப்போர்னிய பல்கலை ஆய்வாளர் அலி ஜேவி குழு உருவாக்கி உள்ள நானோ ஒயர்களை அச்சிடும் நுட்பமும் செயற்கை சருமத்தின் ஆற்றலை அதிகரிப்பதில் பெருமளவு கைகொடுக்கும்.

இவை எல்லாம் கூட்டு சேர்ந்து பயோனிக் சருமத்தை வருங்காலத்தில் சாத்தியமாக்கலாம் என்றாலும் அது முழுமை பெற இன்னொரு முக்கியமான அம்சம் வேண்டும். அது தான் தானே குணமாக்கி கொள்ளும் ஆற்றல். சருமம் சென்சார்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடக்கூடிய உணர்வு பெற்றிருப்பதுடன் அதன் செல்கள் பழுதானால் தானே சரி செய்து கொள்ளும் திறனும் பெற்றிருக்கிறது. இதை எட்டிப்பிடிப்பதறகாக தான் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் பாலிமர் ஆய்வில் மும்முரமாக சில விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இது பயோனிக் சருமத்தில் இன்றியமையாத்தாக இருக்கும் என்பதுடன் சருமத்தின் செயல்பாட்டை பின்பற்றி முற்றிலும் புதிய வகை பொருட்களை உருவாக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இது கைகூடினால் வருங்காலத்தில் இரண்டாக பிரித்து போட்டாலும் தானே ஒட்டிக்கொண்டு செயல்படும் சிப்பும் சாத்தியமாகலாம். சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால் இந்த வகையான சருமத்தை முதலில் ரோபோவுக்காக தான் உருவாக்க முற்பட்டனர். மனிதர்கள் போலவே செயல்படக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஒரு அங்கமாக அவற்றுக்கு நம்மை போலவே தொடு உணர்வு இருக்க வேண்டும் என உணரப்பட்ட்து. மனிதர்களோடு கை குலுக்கும் போது ரோபோ எந்திரத்தனமாக இருக்காமல், கைகுலுக்கலின் இதத்தை புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு அவை உணர்வு பெற்றிருக்க வேண்டும் என கருத்தப்பட்டது.

skin3.jpg

இதற்காக தான் மின்னணு சரும ஆய்வானது. மெட்டிரியல் சயன்ஸ் நுட்பங்கள், செமிகண்டக்டர் நுட்பங்கள் மற்றும் நோனோ நுட்பம் ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி இந்த ஆய்வையும் தீவிரமாக்கியது. ஒரு கட்ட்த்தில் பேராசிரியர் சோமேயா போன்றவர்கள் ரோபோக்களுக்கு மட்டும் அல்லாமல் மனித உடலில் பொருந்தக்கூடிய தனமையிலான பயோனிக் சரும ஆய்விற்கு மாறினர்.

பயோனிக் சருமத்தால் என்ன பயன்?

எலக்ட்ரோமையோகிராபி சாத்தியம் என்கிறார் பேராசிரியர். அதாவது தசையில் உண்டாகும் மின் அதிர்வுகளை உணர்ந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு இதயத்தை சுற்றியுள்ள தசையின் மின் அதிர்வு சமிக்ஞ்சைகளை கொண்டு மாரடைப்பு அபாயத்தை முன் கூட்டியே உணரலாம். நுட்பமான சென்சார்களை மின்னணு சருமம் உடலில் ஏற்படும் மாற்றங்களை கிரகித்துக்கொண்டு அது பற்றிய தகவலை தெரிவிக்க கூடியதாகவும் இருக்கும். இவை எல்லாம் எதிர்கால சாத்தியங்கள். மனித சரும்மே மிகச்சிறந்த இடைமுகமாக இருக்கும் நிலையில் அவற்றை போல செயல்படக்கூடிய பயோனிக் சருமம் மனித உடலுடன் வெளி உலகிற்கான இன்னும் மேம்பட்ட இடைமுகமாகவும் விளங்கும் வாய்ய்பு இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் அலி ஜேவி போன்ற ஆய்வாளர்கள் மனித சருமத்தை மாதிரியாக வைத்துக்கொண்டு வெளி உலகில் முற்றிலும் புதிய வகையில் தொடர்பு கொள்ளகூடிய இடைமுக பரப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர் தொட்டால் ஒளிரும் தன்மை கொண்ட மின்னணு பரப்பை உருவாக்கி உள்ளார்.

skin5.jpg

இதன் மூலம் சுவர் மற்றும் கார் டாஷ்போர்ட் உள்ளிட்ட எந்த பரப்பையும் நாம் தொடர்பு கொள்ளக்கூடிய இடைமுகமாக மாற்றலாம். இந்த இடைமுகங்களை தொடக்கூட வேண்டால், கையசைதாலே போதும் அவை புரிந்து கொண்டு செயல்படும்; இவை மனித –கம்ப்யூட்டர் இடைமுகம் எனும் இயற்கையும் செயற்கையும் கலந்த புதுவகையான இடைமுகத்திற்கான முயற்சிகளாகப் பரிணமித்திருக்கின்றன. அவை பற்றியும் பயோனிக் துறையில் இன்னும் கொட்டிக்கிடக்கும் அற்புதங்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

1.பயோனிக சரும கட்டுரை: http://spectrum.ieee.org/biomedical/bionics/bionic-skin-for-a-cyborg-you

2.பயோனிக் சரும விளக்க வீடியோ:

3.பேராசிரியர் சோமேயா இணையபக்கம் : http://www.jst.go.jp/erato/someya/en/project/

- 4தமிழ்மீடியாவிற்காக: சைபர்சிம்மன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உலகில் ஊனமுற்றோர் என்று ஒருவரும் இல்லை; ஊனமுற்ற தொழில்நுட்பம் தான் இருக்கிறது. - ஹூயுஜ் ஹெர் , பயோனிக் ஆய்வாளர், பயோனிக் மனிதர், பயோனிக் சாதனையாளர்

ஹீயூஜ் ஹெர் (Hugh Herr ) மிகவும் அபூர்வமான மனிதர்! அவரை நீங்கள் அவசியம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். ஹெர்ரை பற்றி தெரிந்து கொண்டால் தானாக நம்பிக்கை பிறக்கும். ஊக்கம் உண்டாகும். மனித குலத்தின் ஆற்றல் மீதும் நம்பிக்கை ஏற்படும். வருங்கால தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை நினைத்தும் வியக்கத்தோன்றும். வரம்புகள், வரையரை, தடைகள் பற்றி எல்லாம் கவலைப்படாமால், புதிய எல்லைகளை தொடுவதற்கு உதாரணமாக இருக்கிறார் ஹெர்.

மலையேறும் வீரராக இருந்த ஹெர் 17 வயதில் தனது இரு கால்களையும் இழந்த நிலையில் இன்று பயோனிக் கால்களை பொறுத்திக்கொண்டு இயல்பான மனிதராக வலம் வந்து கொண்டிருப்பதோடு, பலவிதங்களில் இயல்பான மனிதர்களை மிஞ்சும் ஆற்றலையும் பெற்றிருக்கிறார். விதிவசத்தால் விபத்தில் கால்களை இழந்ததை நினைத்து முடங்கி விடாமல் பயோனிக் கால்களுடன் உற்சாகம் மிக்க மனிதராக சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருக்கிறார். கால்களை இழந்ததால் அவர் மலையேறும் ஆர்வத்தையும் இழந்துவிடவில்லை. மலையேறுவதையும் விட்டுவிடவில்லை. பயோனிக் கால்களோடு மலையேறுகிறார். காரோட்டுகிறார். எல்லாம் செய்து வருகிறார்.

நிச்சயம் இதுவே ஒரு சாதனை தான் - ஆனால் காலம் ஏற்படுத்திய பாதிப்பால் நிலைகுலைந்து விடாமல் எதிர்த்து போராடி எழுந்து நின்று மன உறுதியின் அடையாளமாக நிற்கும் அசாதரணமான மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர். ( பயோனிக் கால்களுடன் ஒலிம்பிக்கில் பங்கேற்க முற்பட்ட தென்னாப்பிரிக்க தடகள வீரர் ஆஸ்கர் போஸ்டோரியஸ் ஒரு உதாரணம் ). ஹெர்ரின் நெஞ்சுரத்திற்கும் விடாமுயற்சிக்கும் நிகரான சாதனையாளர்கள் பலர் இருந்தாலும், ஹெர்ரை இன்னும் ஒரு படி மேலே உயரச்செய்யும் ஒரு விஷயம் இருக்கிறது - அது தொழில்நுட்பம்!br1.jpg

ஆம், ஹெர் தனக்கு ஏற்பட்ட நிலையில் இருந்து மீண்டு வரும் உத்வேகத்தையும் போரட்ட குணத்தையும் பெற்றிருந்ததுடன் அதற்கு தேவையான தொழில்நுட்பதையும் தானே உருவாக்கி கொண்டார். அவர் தொழில்நுட்பத்தின் பயனாளி மட்டும் அல்ல, அதை தானே உருவாக்கி கொண்ட கண்டுபிடிப்பாளரும் கூட. அதனால் தான் அவர் அபூர்வமானவர். தனக்கான குறையை போக்கி கொள்ளும் தொழில்நுட்பத்தை படைக்கும் ஆய்வில் ஈடுபட்டவர் தன்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய ஆற்றலை வழங்கியிருப்பதுடன் மனித குலத்தின் எதிர்காலத்தையே மாற்றக்கூடியவராகவும் இருக்கிறார்.

அதனால் தான், அவரால் “அடுத்த ஐம்பது ஆண்டுகளில் உடல் ஊனம் என்பதையே இல்லாமல் செய்துவிட முடியும்” என்று சொல்ல வைக்கிறது. 2064 ம் ஆண்டில் நரம்பியல் பொறியாளர்கள் உடலியக்கத்தை கட்டுப்படுத்தும் மூளையின் மொழியை பிரிந்து கொண்டு அவற்றை சரளமாக பிரதியெடுக்க கற்றுக்கொண்டு மனித உடலில் ஏற்படும் குறைகளை சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

ஹெர் புதிய மருத்துவம் பற்றி பேசுகிறார். அவரே அந்த மருத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்கிறார். புதுயுக விஞ்ஞானியான் ஹெர் பற்றியும் அவரது ஆய்வு பற்றியும் அறிவதற்கு முன் , ஒரு பழைய விஞ்ஞானியை நினைத்துப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். அவர் 18 ம் நூற்றாண்டில் வசித்த இத்தாலிய விஞ்ஞானி லூயிகி கால்வனி (Luigi Galvani ).

இவர் தான் உடலுக்கும் மின்சாரத்திற்கும் இடையிலான தொடர்பை முதன் முதலில் உலகிற்கு கண்டறிந்து சொன்னவர். மின்வசதி கண்டறியப்பட்ட காலத்தில் தவளையை கொண்டு செய்த சோதனையின் மூலம் மின் அதிர்வுகளால் இறந்த தவளையின் கால்கள் துடிப்பதை கண்டுபிடித்தார். இதன் தொடர்ச்சியாகவே மூளையின் நியூரான்களில் இருந்து மின் அதிர்வுகளே உடல் இயக்கத்திற்கான கட்டளைகளாக மாறும் உண்மையும் தெரியவந்தது.

இந்த கண்டுபிடிப்பு மூளையின் செயல்பாடு மட்டும் உடல் இயக்கத்தை அது கட்டுப்படுத்தும் வழிகளை புரிந்து கொள்வதற்கான துவக்கமாக இருந்தது. இந்த புரிதல் பயணம் இன்னும் தொடர்கிறது. மூளையின் செயல்பாட்டு நுட்பங்களின் மகத்துவத்தை புரிந்து கொள்ள இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்த பயணத்தின் வழிகாட்டியாக பல ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் ஒரு முக்கிய அங்கமாக ஹியூஜ் ஹெர் ஆய்வு அமைகிறது.

உடல் உறுப்பு இழப்பு ஏற்படும் போது பொருத்தப்படும் செயற்கை உறுப்புகள் உடலோடு இணைந்து இருக்கின்றனவே தவிர மூளையுடன் தொடர்பில்லாதவையாக இருக்கின்றன. ஆகையால் உணர்வில்லாமல் இருக்கின்றன. மூளையில் இருந்து பிறக்கும் கட்டளைகள் அவற்றை வந்தடைவது, இல்லை. நியூரான்களின் மொழி அதற்கு புரிவதும் இல்லை.

ஆனால் பயோனிக் பாகங்கள் இத்தகைய ஜடங்கள் அல்ல. டைட்டானியம் போன்ற நவீன உலோகம் மற்றும் பாலிமர்களின் கலைவையான அவை மேம்பட்டவை மட்டும் அல்ல, அதைவிட முக்கியமாக மூளையின் நியூரான்கள் சொல்லும் செய்தியை பெற்றுக்கொள்ளகூடியவையாக இருக்கும். ஆக, மற்ற உறுப்புகளை இயக்குவது போலவே பயோனிக் உறுப்பையும் இயக்கலாம். 

பயோனிக் அங்கங்களில் பொருத்தப்படும் சென்சார்கள் மற்றும் மூளையில் பொருத்தப்படும் சிலிக்கான் சிப்கள் மூலம் இந்த அற்புதம் சாத்தியமாகிறது.

எண்ணமாக அறியப்படும் மூளையின் மொழியை சிலிக்கான் சிப்கள் புரிந்து கொண்டு சென்சார்களுக்கு தகவல் அனுப்புகிறது என இதை எளிதாகவும் சுருக்கமாகவும் புரிந்து கொண்டாலும் மூளையின் நுப்டங்களையும் , மெல்லிய மின் அதிர்வுகளால் சரளமாக பரிமாறிக்கொள்ளும் பரிபாஷையை புரிந்து கொள்வதும் அத்தனை சுலபம் அல்ல. மூளையின் ஒரு சிறு குறிப்பை கண்டறிய விரிவான ஆய்வுகளும் அதன் சூட்சமத்தை சென்சாருக்கு புரிய வைக்க நுட்பமான நிரல்களும் தேவைப்படுகின்றன.

இப்போதைக்கு இதில் சின்ன அற்புதங்கள் விஞ்ஞானிகளுக்கு கைகூடியிருக்கிறது. இவற்றின் மூலம் எண்ணங்களை கொண்டே கம்ப்யூட்டர் மவுசை அசைப்பது போன்ற சிறு சிறு மாயங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்த ஆய்வுகளின் நோக்கமும் தளமும் மாறுபட்டவை என்றாலும் அடிப்படை ஒன்று தான். மூளைக்கும் , இயந்திரத்துக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்துவது தான் அது. ஹெர்ரை பொருத்தவரை இந்த ஆய்வின் மூலம் பயோனிக் அங்கங்களுடன் அதை அணிபவர் உடலின் நரம்புகளுடன் நேரடியாக இணைப்பது சாத்தியமாகும் என்கிறார். இந்த அமைப்பு மூளையின் கட்டளைகளை பயோனிக் அங்கம் புரிந்து கொள்ள செய்வதுடன் , அதன் சென்சார் உணரும் செய்திகளையும் மூளைக்கு திருப்பி அனுப்பக்கூடியதாக இருக்கும்.

செயற்கை அங்கம் பொருத்தப்பட்டவர் உடலுடன் இணைக்கப்பட்டதை உணரும் சாத்தியம் உண்டாகும் போது அவர்கள் தொழில்நுட்பத்தை பார்க்கும் விதமே மாறும் என்று உற்சாகமாக் சொல்கிறார் ஹெர். "இவ்வாறு நிகழும் போது செயற்கை அங்கம் எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்பது ஒரு பொருட்டல்ல, அது உங்களின் ஒரு அங்கமாக இருக்கும்." என்கிறார் அவர்.

ஹெர்ரின் பயோமெக்ட்ரானிக்ஸ் குருப் இந்த மாயை தான் செய்ய முயல்கிறது.

’பொதுவாக ஒருவர் நோயின் பாதிப்பு அல்லது மோசமான விபத்திற்கு ஆளாகும் போது வழக்கத்திற்கு விரோதமான உடன் அல்லது மனநிலையுடன் மீண்டு வருகின்றனர். – இங்கு ஊனம் எனும் வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை ஆனால் மருத்துவ உலகம் அப்படி தான் சொல்கிறது. இப்போதைய தொழில்நுட்பத்தால் இவ்வளவு தான் முடியும் என்கிறது’ என்று கூறும் ஹெர் இது மோசமானது என்கிறார். மனிதர்களை ஊனமுற்றவர்கள் என்று சொல்வதைவிட தொழில்நுப்டம் ஊனமுற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். மறுவாழ்வுக்கு நாம் அளிக்கும் தொழில்நுப்டம் போதுமானதல்ல” என்கிறார்.

br4.jpg

இந்த தொழில்நுட்ப போதாமையை ஈடு செய்யும் முயற்சியில் அவரே ஈடுப்பட்டு வருகிறார். தன் கையே தனக்கு உதவி என்பது போல தனக்கு ஏற்பட்ட போதாமையில் இருந்து மீண்டு வரும் வேட்கையின் துவக்கமாக உண்டான முயற்சி! 1982 ம் ஆண்டு அந்த வேதனையான அனுபவம அவருக்கு உண்டானது. அப்போது அவருக்கு 17 வயது. இளமைத்துடிப்புடன் சிறந்த மலையேறும் வீரராக இருந்தார். சிகரங்களை ஏறுவது தான் அவருக்கு பொழுதுபோக்கு. ஒருமுறை தனது நண்பர் ஜெப் பாஸ்டருடன் வாஷிங்டன்னில் உள்ள மவுண்ட் வாஷிங்டன் மலைச்சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தார்.

குளிர்காலம். மோசமான வானிலை நடுவே பனிப்புயல் வீசி இருவரையும் சாய்த்த்து. பனிப்பாறைகளில் சிக்கியபடி 5 நாட்கள் உயிருக்கு போராடினர். ஹெர் மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்கப்பட்டார். ஆனால் பனியில் சிக்கியிருந்த்தால் இரண்டு கால்களையும் தொடைக்கு கீழ் இழக்க வேண்டியிருந்தது. உடல் அளவிலும் மனதளவிலும் சாகசக்கார்ராக விளங்கிய ஒருவர் இரு கால்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும்?

வாஷிங்டன்னில் மலையேறும் போது செய்த தவறை நினைத்து வருந்தியவர் தனது வாழ்க்கையை மறுசீரமைக்க தீர்மானித்தார். மீண்டெழுவது மட்டும் அல்ல தன்னால் மீண்டும் மலையேற முடியும் என்றும் உணர்த்த விரும்பினார். சில மாதங்களிலேயே செயற்கை கால்கள் பொருத்திக்கொண்டு அவர் மலையேறும் பயிற்சியை துவக்கி விட்டார். மலையேறாவிட்டால் அவர் மனசோர்வுக்கு ஆளாகிவிடுவார் எனும் அச்சத்தில் குடும்பத்தினரும் இதற்கு அனுமதித்தனர். ஹெர் கூறுவது போல அவரைப்போன்றவர்களுக்கு செயற்கை கால் தொழில்நுட்பம் போதாமையுடன் இருந்தது. அதன் வலி அவருக்கு தானே தெரியும். ஆனால் இந்த போதாமையை ஏற்க அவர் மனம் தயாராக இல்லை. துவண்டு போகவும் இல்லை. இருப்பவற்றை விட மேம்பட்ட செயற்கை கால்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் தானே அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார். கடந்த 30 ஆண்டுகளாக தொடரும் இந்த முயற்சியில் அவரும் முன்னேறி வந்திருக்கிறார். செய்ற்கை தொழில்நுட்பத்தையும் முன்னேற வைத்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே வார்ப்பு உருவாக்கத்தில் அனுபவம் இருந்தது. அதை கொண்டு பலவேறு வகையான மலையேற்றத்திற்கு ஏற்ற வகையில் கால்களை மாற்றி வடிவமைத்தார். இதன் பயனாக அவரால் முன்பைவிட சிறப்பாக மலையேறுதலில் ஈடுபட முடிந்த்து. மற்றவர்களை விட சிறப்பாக மலையேற முடிந்தது. நீள வாக்கில் மேம்பட்ட கால்களை உருவாக்கிய பிறகு அதன் பக்கவாட்டு அசைவில் கவனம் செலுத்தினார். இதனிடையே கல்வியும் தொடர்ந்த்து. கல்லூரியில் அவர் இயற்பியல் பாடம் படித்தார். இயற்பியலின் அடிப்படை அவருக்கு செயற்கை கால் வடிவமைப்பு மேம்பாட்டில் பெருமளவு உதவியது. முதல் கட்டமாக அணிவதற்கு வசதியான காலை வடிவமைத்தார். இதற்கான காப்புரிமையும் வழங்கப்பட்டது. ஆய்வை தொடர்ந்த நிலையில் எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் மெக்கானிகல் பொறியியல் பட்டம் பெற்றவர் அடுத்த்தாக ஹாவர்டு பலகலையில் ப்யோ பிசிக்சில் பிஎச்டி பட்டம் பெற்றார். இந்த கல்வியும் அனுபவமும் அவரது ஆய்விலும் கைகொடுத்தது. இதன் பயனாக ரீயோ நீ (Rheo Knee ) செயற்கை காலை சந்தைக்கு கொண்டு வந்தார். இதில் காந்த மண்டலம் மூலம் விஸ்காசிட்டி கட்டுப்படுத்தப்பட்ட்து மிகவும் இயல்பான அசைவுகளை கொடுத்தது.

அடுத்த கட்ட மேம்பாட்டிற்காக அவர மனித கால்கள் செயல்படும் விதத்தை நன்றாக உள்வாங்கி கொள்ள முற்பட்டார். நாம் எல்லோரும் நடக்கின்றோம் . ஆனால் எத்தனை பேர் நடையின் மகத்துவத்தை உணர்ந்திருக்கிறோம்? நடப்பதை நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பொதுவாகவே மனிதகுலம் உயிரியல் நோக்கில் நடையை நன்றாக புரிந்துகொள்ளவில்லை என்கிறார் ஹெர். மனித உடலில் வடிவமைப்பு படி பார்த்தால் நடப்பது செயல்திறனற்றதாக இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. முட்டியை வலிக்கவும் தசைகளை இயக்கவும் ஆற்றலை தேவைப்படுகிறது என்றாலும் உடல் இந்த ஆற்றலை மறு சுழற்சி செய்து சேமித்து கொள்கின்றது. ஸ்பிரிங் போன்ற அமைப்புகளும் தசைகளின் செயல்பாடும் இதற்கு உதவுகின்றன. ஆக ஆற்றல் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மிக அழகாக மாறிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் நடக்கும் போது நாம் அதிக ஆற்றலை வீணாக்கமல் எளிதாக் நடக்கிறோம். இயற்கையின் வடிவமைப்பு அதிசயம் இது.

பெரும்பாலான செயற்கை கால்களில் உடல் செலுத்தும் ஆற்றல் வீணாகி விடுகிறது. அவை மீண்டும் சேமிக்கப்படுவதில்லை. இதை சரி செய்யும் வகையில் அவர் மேம்பட்ட செயற்கை காலை வடிவமைத்தார். கால்களின் அசைவுக்கு ஏற்ற வகையில் இருந்ததுடன் தானே ஆற்றலை சரி செய்து கொள்ளும் தன்மையும் பெற்றிருந்தது. பவர்புட் ஒன் எனும் பெயரிலான இந்த செயற்கை காலை அவர் 2006 ம் ஆண்டு முதல் ஐ-வாக் எனும் நிறுவனம் மூலம் வர்த்தக ரீதியாக தயாரித்து வருகிறார். மோட்டார், ஸ்பிரிங் மற்றும் சென்சார்கள் எல்லாம் கொண்ட்தாக இருப்பதால் நடக்கும் போது ஆற்றல் மாற்றத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. நடக்கும் பரப்பு, நடப்பவரின் தன்மை, மாடிப்படிகள் போன்றவற்றுக்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொள்ளும் புத்திசாலித்தனமான காலாக இது இருக்கிறது. ஒருவர் காலை தொங்க போட்டுக்கொள்ளும் போது இது இயற்கையாக தொங்கி கொண்டிருக்கவும் செய்யும். மாற்றுத்திறனாளிகள் இதை முதன் முதலாக பயன்படுத்தும் போது இது தரும் உணர்வால் கண்கலங்கி விடுவதும் உண்டு என்கிறார் ஹெர். அவர்கள் இழந்த உணர்வை மீட்டுத்தருவதால் இந்த நெகிழ்ச்சி.

ஹெர் தானும் இந்த செயற்கை கால்களை பயன்படுத்துகிறார். ஆனால் நாம் பல ஜோடி காலணி வைத்திருப்பது போல அவர் பல கால்களை வைத்துள்ளார். மலையேற ஒரு ஜோடியை பயன்படுத்துகிறார். நடப்பதற்கு வேறு ஜோடி கால்களை பயன்படுத்துகிறார். 3 சிப்கள், 12 சென்சார்கள் ஆகியவை மூலம் இந்த கால்கள் பலவிதமான அசைவுகளை கவனித்து தேவைப்படும் ஆற்றலை உணர்ந்து நடக்கும் பரப்பிறகு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது. ப்யோனிக் கால்களை மேலும் மேம்படுத்த முடியும் என்று ஹெர் தீர்மானமாக நம்புகிறார். இதற்கான ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார். வரும் ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளில் குறையை பயோனிக் தொழில்நுட்பம் ஈடு செய்து விடும் என்று நம்புகிறார். ஊனம் என்பதே இல்லாமல் போகும் நிலை வரும் என்று கூறுபவர், நன்றாக இருப்பவர்கள் கூட பயோனிக் அங்கங்களை பொருத்த்க்கொள்ளலாம் என்கிறார். மனிதருக்கும் இயந்திரத்தும் இடையிலான இடைவெளி வெகுவாக குறைந்து போகும் என்றும் கூறுகிறார். இந்த வகை ஆய்வில் ஹெர் போலவே மேலும் பலரும் ஈடுபட்டுள்ளனர். மின்னணு சார்ந்த அமைப்புகள் மூலம் மனித நரம்பு மண்டலத்துடன் நேரடியாக தொடர்பு கொள்வதை அடிப்படையாக கொண்ட இந்த ஆய்வுகள் மருத்துவத்தையே மாற்றி அமைக்க உள்ளன. வலிப்பு பாதிப்பு முதல் அல்சைமர்ஸ் நோயின் மறதி பாதிப்பு வரை இந்த முறையில் தீர்வு காணும் ஆய்வுகளை தொடர்ந்து பார்க்கலாம். சைபோர்க் யுகத்தில் மருத்துவம் எப்படி எல்லாம் இருக்கும் என கண்டு வியக்கலாம்.

- 4தமிழ்மீடியாவுக்காக : சைபர் சிம்மன்

ஹீயூஜ் ஹெர் ஆய்வு பற்றி அறிய :

1.http://www.media.mit.edu/people/hherr

2. https://www.ted.com/speakers/hugh_herr

3. http://biomech.media.mit.edu/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1brain-implant-hippocampus-usc-640x424.j


வருங்கால தொழில்நுட்பம் - 14 : நியூரான்களுடன் பேசும் கம்ப்யூட்டர்கள்

SUNDAY, 05 OCTOBER 2014 12:22
 

1brain-implant-hippocampus-usc-640x424.j

இராமாயண காலத்தில் இராவணனுக்கு பத்துத் தலைகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.

இது கற்பனையா? நிஜமா? எனும் ஆய்வை விடப் பத்துத் தலை இராவணனன் எழுப்பக்கூடிய சுவாரஸ்யமான கேள்விகளைப் பார்க்கலாம். இராவணனின் பத்துத் தலைகளிலும் மூளை இருந்ததா? பத்து தலையின் கண்களும் தனித்தனியே காட்சிகளைக் கண்டனவா? பத்து தலை காதுகளும் ஒரே ஒலிகளை கேட்டனவா? தனித்தனி ஒலிகளை கேட்டனவா? நடைமுறையில் பத்து தலைகளின் பலன்கள் என்னவாக இருந்தன? இன்னும் பல கேள்விகளை கேட்கலாம். பத்து தலைகள் செயல்பட்ட விதம் என்னவாக இருந்தாலும் அவற்றின் கட்டுப்பாடு மையம் தலையின் மூளையில் இருந்திருக்க  வேண்டும்.

அல்லது பத்து தலைகளிலும் மூளை இருந்து அவற்றுக்கு இடையே அசாதரணமான ஒருங்கிணைப்பு இருந்திருக்க வேண்டும். ஏனெனில் கண்ணால் காண்பவை, காதால் 
கேட்பவை தொடுதலால் உணரப்படுபவை என எல்லாமே மூளையால் தான் கட்டுப்படுத்தப் படுகின்றன. மூளையின் நியூரான்களிடையே நிகழும் மின் அதிர்வு பரிமாற்றங்களும் நியூரான்களில் இருந்து உடலுக்குள் பரவும் கட்டளைகளும் தான் நமது புரிதலுக்கும் இயக்கத்திற்கும் பின்னே இருக்கின்றன. ஒரு கம்ப்யூட்டர் அதன் நிரலுக்கு ஏற்ப செயல்படுவது போல் நாமும் இயற்கை ஏற்படுத்தி தந்துள்ள உயிரியல் நிரலுக்கு ஏற்பவே செயல் படுகிறோம். அதாவது நாம் ஒரு தலை இரண்டு கைகள் இரண்டு கால்கள் என உணர்வதற்காகவே பழக்கப் பட்டிருக்கிறோம். மனித உடலின் செயல்பாடு தொடர்பாக உள்ளுக்குள் ஒரு உடல் வரைபடம் பதிவாகி இருப்பதாக நரம்பியல் வல்லுனர்கள் சொல்கின்றனர். உடல் வரைபடத்திற்கு ஏற்பவே மூளை செய்திகளை உள்வாங்கி கொள்ளும் விதமும் அமைந்திருப்பதால் நம்மால் மூன்றாவது 
கையையோ நான்காவது கையையோ உணர முடியாது. இது உயிரியல் வரம்பு என்று சொல்லப்படுகிறது.

 

ஆனால் ஸ்வீடனின் கரோலின்ஸ்கா கழகத்தில் உள்ள ஸ்வீடன் மருத்துவ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மூளை விஞ்ஞானிகள் ஒரு மாயத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். 
அவர்கள் மனிதர்களால் மூன்றாவது கரத்தை உணர முடியும் எனக் காட்டியுள்ளனர். ஆய்வு கூடத்தில் கட்டுப் படுத்தப்பட்ட சூழலில் ஒரே நேரத்தில் மூன்று கைகள் இருப்பதை உணரச் செய்வது சாத்தியம் என்று அவர்கள் உணர்த்தியுள்ளனர். இந்தப் பரிசோதனையின் போது பங்கேற்பாளர்களின் கை அருகே ஒரு ரப்பர் கையும் வைக்கப்பட்டது. அது இயற்கை கரத்திற்கு மாற்றாக விளங்க கூடிய புரோஸ்தட்டிக் கை. பங்கேற்பாளர்கள் மூன்று கைகள் இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நினைத்தால் போதுமா? மூளை அந்த கூடுதல் கையை உடலின் அங்கமாக ஏற்க வேண்டாமா? மூன்றாவது கையும் சொந்தக் கை தான் எனும் உணர்வை ஏற்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் இரண்டு கைகளையும் (செயற்கை மற்றும் இயற்கை வலது கரங்கள்) சிறிய பிரஷ்ஷால் அவற்றுக்கு தொடர்புடைய இடங்களில் 
தொட்டிருக்கின்றனர். இந்த செய்கை கிடைத்ததும் மூளை இரண்டு வலது கைகளில் எது நிஜம் என குழப்பமடைந்து பின்னர், நிஜ கையையே சொந்த கையாக ஏற்கும் என எதிர்பார்க்கப் பட்டதற்கு பதிலாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில் மூளை இரண்டு வலது கைகளையுமே ஏற்றுக்கொண்டது. விளைவு பங்கேற்பாளர்கள் மூன்று கரம் இருப்பதாக உணர்ந்துள்ளனர்.

ஆக, புராணங்களில் அவர் பத்துத் தலைகளும் எட்டு கரங்களும் உண்மையா என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட கரங்களின் ஆற்றலை பெற வேண்டும் என்றால் மூளையில் உடலின் வரைபடம் அதற்கேற்ப தயாராகி இருக்க வேண்டும். மூளையின் செயல்பாடு மாயம் பற்றிய புதிருக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடைத்து வரும் நிலையில் விஞ்ஞானிகள் மூளைக்குள் கைவைத்து அவற்றின் பரிபாஷயை இடைமறித்து உடல் ரீதியான கோளாறுகளையும், பாதிப்புகளையும் சரி செய்ய முயன்று வருகின்றனர். மூளைக்குள் கை வைப்பது என்றால் சிலிக்கான் சிப்களை பொருத்துவது. இது இம்ப்லாண்ட் என்று சொல்லப் படுகிறது. மூளையில் உள்ள நியூரான்கள் மெல்லிய மின் அதிர்வுகள் வழியே கட்டளைகள் பிறப்பிக்கின்றன. பசுமையான காட்சியை பார்த்ததும் விழித்திரையில் அந்த காட்சி பிக்சல்க்ளாக பதிவாகிறது. சமபந்தப் பட்ட நியூரான்கள் அந்த பிக்சல்களை உள்வாங்கிக் கொண்டு தேவையான கட்டளைகளை விழிகளுக்கு அனுப்பியதும் அடடா அற்புதமான காட்சி என மனம் உணர்கிறது.

 

உடலின் ஒவ்வொரு அசைவும் மூளையால் புரிந்து கொள்ளப் படுகிறது. மூளையால் கட்டுப் படுத்தப் படுகிறது. ஏதோ ஒரு காரணத்தால் மூளையின் குறிப்பிட்ட செயல்பாடு அல்லது கட்டளைகள் வந்தடையும் விதம் பாதிக்கப் பட்டால் சிக்கல் உண்டாகிறது. இந்த சிக்கல்கள் மருந்து மாத்திரைகளுக்கு எல்லாம் கட்டுப் படாவிட்டால் விதியை நினைத்து சும்மாயிருக்க முடியுமா? அதனால் தான் மருத்துவ விஞ்ஞானிகள் மூளைக்குள் கைவைக்கத் துணிந்து விட்டனர். மூளைக்கும் உடலுக்கும் இடையே ஏற்படும் இடைவெளியை அல்லது தகவல் தொடர்பின்மையை கம்ப்யூட்டர் சிப்கள் மூலம் இட்டு நிரப்ப முடியுமா? என முயன்று வருகின்றனர். இந்தத் திசையில் பல்வேறு வகையான ஆய்வுகள் பல கட்டங்களில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லாவற்றிலும் சின்ன சின்னதாக முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பார்வைக் குறைபாட்டை போக்கக் கூடிய பயோனிக் விழிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இழந்த திறனை மீட்டு தரக்கூடிய பயோனிக் அங்கங்கள் எல்லாம் இவற்றின் 
அடையாளங்கள் தான். உடலுக்குள் சிலிக்கான் சிப்பை பொருத்திக் கொள்ளும் சைபோர்க் காலத்தில் மருத்துவம் இந்த வகையில் தான் இருக்கும் என்கின்றனர். உலகம் முழுவதும் மருத்துவ விஞ்ஞானிகள் அல்லது உயிரி பொறியாளர்கள் மனித உடலில் நரம்பு மண்டலத்தில் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான வழிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த முயற்சிகள் புதுவகையான மருத்துவ தீர்வுகளுக்கும் வழிவகுத்து வருகின்றன.

இவை எல்லாமே மூளை நியூரான்கள் மூலம் பேசும் மின்சார மொழியை புரிந்து கொண்டு சிப்கள் மூலமே அதே மொழியைப் பேசுவதில் தான் இருக்கின்றன. ஸ்வீடன் மருத்துவ விஞ்ஞானிகளின் மூன்று கை சோதனையையே எடுத்துக் கொள்வோம். மூன்றாவது கையை மூளை உணரச் செய்தல், பக்கவாத பாதிப்பிற்கு உள்ளாகிறவர்களுக்கு மூன்றாவது கையாக பயோனிக் கையை பொருத்து அதை சிப் உதவியுடன் இயக்குவது சாத்தியமாகலாம் என்கிறனர். தீயணைப்பு வீரர்கள் போன்றவர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுபவர்கள் உயிர்களை காக்க இதே முறையில் கூடுதல் கரங்களை பயன்படுத்துவதும் சாத்தியமாகலாம் என்கின்றனர்.
மூளையில் எற்படும் மாற்றங்களை அப்படியே பிரதியெடுப்பதன் மூலம் பல மாயங்களை செய்யலாம் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒரு உதாரணம் பார்க்கலாம்; நரம்பியல் விஞ்ஞானிகள் நியூரான்களின் செயல்பாட்டை மெல்லிய மின் அதிர்வுகளால் மாற்றலாம் என கண்டறிந்து வைத்துள்ளனர். இந்த  அறிவை இப்போது நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றனர். அதீத மனச்சோர்வு என்பது மூளையின் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் பாதிப்பால் நிகழ்வதாக  கருதப்படுகிறது. எனில் மூளைக்குள் ஒரு பேஸ்மேக்கரை பொருத்தி அதன் மூலம் பாதிகப்பட்ட நியூரான்கள் உள்ள இடத்திற்கு சரியான மின் அதிர்வுகளை அனுப்பினால்  மனச்சோர்வை சீராக்கி விடமுடியும் என்று நம்பப்படுகிறது. இதே முறையில் ஏற்கனவே பார்கின்சட்ஸ் நோய் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனச் சோர்வுக்கான இந்த பரிசோதனை அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் வியக்கத்தகு முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு இதற்கான கிளினிகல் சோதனைக்கான அனுமதி விலக்கி கொள்ளப்பட்டது, இந்த திசையில் இருக்கும் சவால்களை சுட்டிக் காட்டினாலும் மருத்துவ உலகம் நம்பிக்கையுடன் உள்ளது.

மூளைக்குள் சிப்களைப் பொருத்துவது என்பது கோட்பாடு அளவில் எளிதாக இருந்தாலும் இதற்கான தொழில்நுட்ப சவால்கள் அதிகம். மூளைக்குள் பொருத்தக் கூடிய அளவிலான சிறிய சிப்களை தொழில்நுட்பம் சாத்தியமாக்கி இருந்தாலும் கூட மூளையின் சுற்றுப் பகுதியில் அவற்றை இணைப்பது சுலபமாக இருக்கிறது, ஆனால் மூளையின் மைய பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அவற்றால் மூளையின் திசுகக்கள் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் நியூரான்கள் வெளிப்படுத்தும் மின் அதிர்வுகளை கிரகித்து அவற்றுக்கான அர்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை 
துல்லியமாகப் பிரதியெடுக்கும் வகையில் சிப்கள் செயல் பாட்டிற்கான நிரல்களை உருவாக்க வேண்டும். மருத்துவ உலகம் இந்த சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதனிடையே மூளையின் செயல்பாடு பற்றிய நமது புரிதலும் சொற்பமாக இருப்பதாகக் கருதப் படுகிறது. எனவே மூளையின் நுப்டங்களை மேலும் சரியாக புரிந்து கொள்ள மக்கதான திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இதற்கான பிரைன் திட்டம் (The BRAIN Initiative ) செயல்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் மனித மூளை திட்டம் (Human Brain Project ) செயல்பாட்டில் இருக்கிறது. இந்த திட்டங்கள் மூளையின் மொழியை புரிந்து கொள்வதற்கான நமது சொல்வங்கி வளமாகும் போது மூளையின் செயலை பிரதியெடுக்கும் முயற்சியிலும் மேலும் முன்னேற்றம் காணலாம் என கருதப்படுகிறது.

 

தியோடர் பெர்ஜரை (Theodore Berger) பொருத்த வரை, வயோதிகத்தால் ஏற்படும் நினைத் திறன் பாதிப்பைச் சரி செய்துவிட முடியும் என்கிறார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா உயிரி மருத்துவப் பொறியாளரான பெர்ஜர் பல ஆண்டுகளாக மூளையின் செயல்பாடு தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். இவரும் ஒரு சைபோர்க் நம்பிக்கையாளர். அடுத்த 50 ஆண்டுகளில் சைபோர்க் ஆவது மிகவும் இயல்பாக இருக்கும் என்பது இவரது தீர்கதரிசன பார்வை. அல்சைமர்ஸ் போன்ற வயோதிக நோயால் பாதிக்கப் பட்டவர்கள் ஒரு சிப்பை பொருத்திக் கொள்வது மூலம் இழந்த நினைவுகளை மீட்டுக் கொள்வது சாத்தியம் என்கிறார் பெர்ஜர். இது தொடர்பாக எலிகளில் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் மூளையில் மின் கம்பிகளை பொருத்துவது மூலம் நினைவுகளை மீட்க முடிவதை இவர் நிருபித்திருக்கிறார். இதற்காக மூளையில் நீண்டகால நினைவுகளுக்கான நியூரான்கள் மற்றும் குறுகிய கால நினைவுகளுக்கான நியூரான்களை எல்லாம் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்து வருகிறார். ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது போல நினைவுத்திறனுக்கான நியூரான்களின் தகவல் முறையை கண்டறிந்து விட்டால் நினைவுகளை மீட்பது சாத்தியம் என்கிறார். இரு மொழிகளும் தெரியாவிட்டாலும் கூட, அதன் பரிமாற்ற முறையைக் கவனித்து அதைப் போலி செய்வதன் மூலமே மொழி பெயர்த்து விடலாம் என்று கூறும் பெர்ஜர் 
மூளை செயல்பாட்டிலும் இதை உருவாக்க முடியும் என்கிறார். இதற்காக அவர் விளக்கும் விடயங்கள் மிகவும் சிக்கலாக இருக்கலாம். ஆனால் இதன் பலனை சுருக்கமாக 
சொல்வதானால், ஒரு சிப்பை பொருத்திக் கொள்வதன் மூலம் இழந்த நினைவுகளை மீட்கலாம் என்பது தான். ஆக, அல்சைமர்ஸ் நோயாளிகளுக்கு மறதியில் இருந்து மீண்டு வர தேவை எல்லாம் ஒரு சிப் தான். ஆனால் இதில் கடக்க வேண்டிய தடைகள் ஏராளம் இருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் எண்ணம் மூலமே பயோனிக் அங்கங்களை இயக்க வைக்கும் ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

1memory.implantsx455.jpg

அதாவது எண்ண அலைகளை மின் அதிர்வுகளாகக் கிரகித்து அவற்றை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளக் கூடிய டிஜிட்டல் மொழிக்கு மாற்றுவதன் மூலம் செயற்கை அங்கங்களையும், கம்ப்யூட்டர்களையும் இயக்கலாம் என்கின்றனர். மூளையில் குறிப்பிட்ட செயல்களுக்கான நியூரான் மொழியை கண்டறிந்து அதை கம்ப்யூட்டருக்குப் புரியும் டிஜிட்டல் தகவலாக மாற்றுவதன் மூலம், ரோபோடிக் கரம் கொண்டு பொருட்களின் வடிவை உணர்வதும் பொருட்களை இயக்குவதும் கைகூடும் என்கின்றனர். சின்ன சின்ன அளவில் இது இப்போதே சாத்தியமாகத் துவங்கியிருக்கிறது. இந்த முறையை மூளை கணிணி இடைமுகம் என்கிறன்றனர். (brain-machine interfaces). பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முறையின் மூலம் பார்வையாலேயே பொருட்களை இயக்க முடியும். மருத்துவ துறையில் மட்டும் அல்லாமல் நடைமுறை உலகிலும் இந்த நுட்பம் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது மவுஸ் தேவை இல்லாமால் மூளையுடன் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் மூலம் பார்வையாலேயே கர்சரை நகர்த்தலாம் என்கின்றனர். இந்த முறையில் வீடியோ கேம் ஆடக்கூடிய சாதன்ங்கள் சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. புகழ்பெற்ற எழுத்தாளரான மைக்கேல் கிரக்டன் ஒரு நாவலில் எண்ணங்களாலேயே விமானத்தை இயக்குவது பற்றி எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் அறிவியல் புனை கதையாக கருதப்பட்டது எதிர்காலத்தில் நிஜத்திலும் சாத்தியமாகலாம்.

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள ஆய்வாளர் ஒருவரும் பிரான்சில் உள்ள ஒரு ஆய்வாளரும் டெலிபதி மூலம் எண்ண அலைகளை பரிமாறிக்கொண்டதாக செய்தி வெளியானது. தொலைபேசி போன்ற கருவி எதுவும் இல்லாமல் ஒருவர் எண்ணம் வெகு தொலைவில் உள்ள ஒருவருக்கு இணையம் மூலம் சென்றடைந்த இந்த சோதனை முக்கிய மைல்கல்லாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையாக இருப்பதும் மனித கணிணி இடைமுகம் தான் (computer-to-brain interface). எண்ணங்களை கம்ப்யூட்டருக்கு புரியும் டிஜிட்டல் தகவலாக்கி அந்த தகவலை மீண்டும் மூளை எண்ணமாக புரிந்து கொள்ளும் அற்புதம் இது என்கின்றனர் ஆய்வாலர்கள். எதிர்காலும் இன்னும் கூட நம்ப முடியாத அதிசயங்கள் நிகழ காத்திருக்கின்றன.

4தமிழ்மீடியாவுக்காக : சைபர் சிம்மன்

மனித மூளை திட்டம்: https://www.humanbrainproject.eu/

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

-15: உலகமே ஒரு வலைப்பின்னல்

* தேடியந்திரம் என்றதும் கூகிள் தான் நினைவுக்கு வரும். ஆனால் கூகிளை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதாது. கூகிளையும் தவிர உள்ள தேடியந்திரங்களையும் அறிந்திருக்க வேண்டும்.

இவற்றில் ஷோடன் (Shodan) http://www.shodanhq.com/; தேடியந்திரம் முக்கியமானது. ஷோடன் கூகிளுக்கான மாற்று என்றோ ,கூகிளை விட சிறந்த தேடியந்திரம் என்றோ கூற முடியாது. ஷோடன் உண்மையில் வெகுஜனங்களுக்கான தேடியந்திரம் இல்லை. அதில் இணையதளங்களையோ இணைய பக்கங்களையோ தேட முடியாது. எனில் ஷோடன் எதற்காக? ஷோடனில் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாதங்களை எல்லாம் தேடலாம். அதாவது, வெப்கேம், போக்குவரத்து சிக்னல்கள், ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ் ,ரவுட்டர்கள் என்று இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் தேடலாம். இவ்வளவு ஏன்? மின்நிலையங்கள் போன்றவற்றையும் தேடலாம்- அவை இணைக்கப்பட்டிருந்தால்!.

shodan-map.png

தேடுவது என்றால், அந்த சாதனங்களில் பின் வாசல் வழி இருக்கிறதா? என அறிந்து அவற்றுக்குள் நுழைவது சாத்தியமா ? என்று அறிவதும் தான். ஆக, ஒரு சாதனம் இணையத்தில் இணைக்கப்பட்டு, அதில் போதுமான பாதுகாப்பு இல்லாம்அல் இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு இயக்கவும் செய்யலாம். 

இந்த தேடியந்திரம் இரண்டு விஷயங்களை செய்கிறது, இணைய தொடர்பு உள்ள பொருட்களும் சாதனங்களும் உலகில் எங்கெல்லாம் இருக்கிறது என்றும் அவற்றில் பாதுகாப்பு ஓட்டை இருக்கிறதா ? என்றும் காட்டுகிறது. அதனால் தான் ஷோடனை உலகின் திகிலூட்டும் தேடியந்திரம் என சி.என்.என் அறிமுக கட்டுரை வர்ணிக்கிறது. இணைய உலகின் இருண்ட கூகிள் என்றும் இது வர்ணிக்கப்படுகிறது. ஆனால் ஷோடனின் நோக்கம் இணைய களவானிகளுக்கு வழிகாட்டுவது அல்ல, இணைய ஆபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். 

* ஒய்.2.கே -வை நினைவிருக்கிறதா? புத்தாயிரமாவது ஆண்டு பிறக்கும் முன் இணைய உலகமே ஒய்.2.கே பக் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தது. பயந்து கொண்டிருந்தது. 1999 ம் ஆண்டு 2000 மாவது ஆண்டுக்கு மாறுவதை 1900 களுக்கு பழக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் அமைப்புகளின் உள் கடிகாரம் புரியாமல் குழம்பி பெரும் பிரச்சனை ஏற்படலாம் என்று எச்சரிக்கையும் அதனால் உண்டான கில் மற்றும் தயார்படுத்தல்களும் நினைவுக்கு வருகிறதா? ஒய்2கே பூதம் புஸ்வானமாகி இருக்கலாம். அல்லது அடக்கப்பட்டிருக்கலாம். இப்போது இந்த கதை எதற்கு என்று நினைக்கலாம். விஷயம் என்ன என்றால் சில மாதங்களுக்கு முன் இணைய உலகை இதோ போல் ஒரு பூதம் பிடித்தாட்டியது. 512 கே என்று சொல்லப்பட்ட அந்த பூதம் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. இருந்தாலும் என்ன இணைய உலகில் அந்த பூதம் இன்னமும் தூங்கு கொண்டு தான் இருக்கிறது ,எப்போது வேண்டுமானாலும் விழித்துக்கொண்டு தாக்கலாம் என்று சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். எனவே 512 கே பூத்ததை அறிந்திருப்பது நல்லது.

இணையத்திற்கு என்று ஒரு போக்குவரத்து வரைபடம் இருக்கிறது.  ரவுட்டர்களும் , கம்ப்யூட்டர் சாதனங்களும் இணைக்கப்பட்ட பாதைகள் நிரம்பிய வரைபடம் அது. ஒவ்வொரு முறை இணையதில் ஒரு இணைய பக்கத்தை அணுக முற்படும் போது அந்த இணையபக்கத்தில் உள்ள தகவல்கள் இந்த பாதைகளில் ஒன்றை தேர்வு செய்து கொண்டு தான் வந்து சேர்கின்றன. இந்த பாதைகளில் எதை தேர்வு செய்தால் சீக்கிரம் வந்து சேர முடியும் என்ற தேர்வும் நிகழ்கிறது. அதற்கு ஏற்பட ரவுட்டர்களில் திரும்புவது, குறுக்குச்சந்துகளில் பாய்வது போன்ற மாயங்கள் எல்லாம் தானாக நிகழ்கின்றன.

the-internet.jpg

இந்த இணைய போக்குவரத்து நிகழ்வதற்கான பாதைகளும் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 512,000 ! அதாவது 512 கே. இணையத்தில் உள்ள ஒவ்வொரு ரவுட்டரும் இந்த பாதைகள் அனைத்தையும் வரைபடமாக தங்கள் நினைவுத்திறனில் சேமித்து வைத்திருக்கின்றன். இந்த வரைபடத்தை பார்த்து தான் சரியான பாதையை ஒவ்வொரு முறையும் தேர்வு செய்கின்றன. இவை எல்லாம் நமக்கு தேவை இல்லாத விஷயம் என நினைக்கலாம். ஆனால், இந்த பாதைகளின் எண்ணிக்கை 512,000 எனும் வரம்பை கொண்டிருக்கின்றன. தேவை எனில் அவற்றை அதிகமாக்க முடியாது. அப்படியே அதிமாக்கினாலும் , பழைய ரவுட்டர்கள் 512 கேவுக்கு மேல் நினைவுத்திறன் இல்லாதவை . போக்குவரத்து அதிகமானால் தினறி மட்டும் அல்ல குழம்பி போகும்.

சில மாதங்களுக்கு முன் இணையத்தில் இப்படி 512 கேவுக்கும் அதிக பாதைகள் உண்டானதால் பல ரவுட்டர்கள் குழம்பி போய் நின்று முக்கிய இணையதளங்கள் தற்காலிகமாக முடங்கின. இந்த பிரச்சனை சரி ஆனாலும் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க காத்திருக்கின்றன. இணைய போக்குவரத்தில் இணையதளங்களை அடையாளம் காண ஒதுக்கப்படும் ஐபி முகவரி என குறிப்பிடப்படும் இணைய முகவரிகளும் குறிப்பிட்ட வரம்பை கொண்டுள்ளன. அவற்றின் எண்ணிக்கை அதிகமானாலும் இணையவெளியில் பெரும் சிக்கல் தான் என்கின்றனர்.

வெறும் கம்ப்யூட்டர்களும் லாப்டாப்களும் மட்டும் அல்லாமல் இப்போது கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் மூலமும் இணையம் தொடர்பு கொள்ளப்படும் நிலையில் இந்த இரண்டு எண்ணிக்கைகளுமே அதிகரிக்க உள்ளன. ஸ்மார்ட் போன் மட்டுமா, சிப் பொருத்தும் திறன் கொண்ட எண்ணற்ற சாதனங்கள் இணைய நெடுஞ்சாலை பக்கம் வந்து கொண்டிருக்கின்றன.

* கிலவுட் கம்ப்யூட்டிங் பற்றி நிச்சயம் நீங்கள் அறிந்திருக்கலாம். தகவல்களை மைய கம்ப்யூட்டரில் சேமிக்காமல், எண்ணற்ற சர்வர்களின் தொகுப்பான மேக பின்னலில் சேர்த்து வைப்பதை தான் கிலவுன் கம்ப்யூட்டிங் என்று புரிந்து கொள்ளலாம்.  இதே போலவே ஃபாக் கம்ப்யூட்டிங் என்று சொல்லப்படும் நுட்பம் பற்றி தெரியுமா? வலைப்பின்னல் துறை ஜாம்பவான் சிஸ்கோ உருவாக்கியுள்ள பதம் இது. இன்னமும் வெகுஜன பழக்கத்திற்கு வரவில்லை. ஆனால் விரைவில் வரும். 

கிலவுட் கம்ப்யூட்டிங்கின் நீட்டிப்பு அல்லது அடுத்த கட்டம் என்றும் இதனை சொல்லலாம். மேலும் மேலும் அதிகமான சாதனங்களும் சென்சார்களும் இணையத்தில் தொடர்பு கொள்ளும் நிலையில் அவற்றில் இருந்து தகவல்கள் சதா சர்வ நேரமும் கிலவுடிற்கு அதாவது வலைப்பின்னலுக்கு அனுப்ப பட்டுக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கண்காணிப்பு காமிராக்களும், வெப்காமிராக்களும் 24 மணி நேரமும் படம் எடுத்து அந்த விவரத்தை வலைப்பின்னலிடம் அளிக்கிறது.

 

இவை எல்லாமே பயனுள்ளவை என்று சொல்ல முடியாது. ஆனால் இவற்றை தரம் பிரித்து பகுக்கும் பணி ரவுட்டர்களின் முதுகை ஒடித்து விடலாம் என்று கருதப்படுகிறது. அதனால் தான், எல்லா தகவல்களும் வலைப்பின்னலின் மைய பகுதிக்கு வந்து சேர வேண்டாம் என சிஸ்கோ கருதுகிறது. மாறாக, தகவல்கள் அனுப்படும் முதல் கட்டத்திலேயே ரவுட்டர்களால் அவை தரம் பிரிக்கப்பட்டு வடிக்கப்பட்டு பயனுள்ள தகவல் மற்றும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என சிஸ்கோ சொல்கிறது. இப்படி வலைப்பின்னலின் விளிம்பிலேயே தகவல்கள் வடிகட்டப்படும் ஆற்றல் மற்றும் தேவை தான் ஃபாக் கம்ப்யூட்டங்.

in4.png

* கூகிள் நிறுவனம் சமீபத்தில் பெளதீக வலை (http://google.github.io/physical-web/ ) திட்டத்தை அறிவித்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பெளதீக வலை என்பது ஒரு ஓபன் சோர்ஸ் திட்டம் . இதை கூகிள் முன்னெடுக்கிறது . ஆனால் அதற்கு சொந்தமானதல்ல. இந்த பெளதீக வலை மூலம் பஸ் நிலையங்கள் முதல் பெட்டிக்கடைகள் வரை எல்லாமே அவற்றுக்கான தனி இணைய முகவரியை கொண்டிருக்கும். இந்த இடங்கள் அருகே செல்லும் போது அவற்றுக்கு என தனியே எந்த ஒரு செயலியும் ( ஆப்) இல்லாமலே அவற்றில் இருந்தே தகவல்களை பெறலாம். இப்படி இணைய இணைப்பு கொண்ட ஸ்மார்ட் பொருட்களுன் தொடர்பு கொள்வதை சிக்கல் இல்லாத அனுபவமாக்க ஒரு பொதுவான அமைபை உண்டாக்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

* இணையம் தற்கொலைகளுக்கு அடிகோலியிருக்கிறது . ஆனால் கொலைகளுக்கு நேரடியாக காரணமாக இருந்ததில்லை. இந்த நிலை மாறப்போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் இணைய கொலை இந்த ஆண்டு நிகழலாம் என்று யூரோபோல் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. அதிகரிக்கும் சைபர் குற்றங்களின் விளைவாக இணையம் மூலம் தாக்காளர்கள் உடல்ரீதியான தாக்குதலை நிகழ்த்து உயிரையும் பறிக்கலாம் என இந்த அறிக்கை திகிலூட்டுகிறது. இதுவரை பாஸ்வேர்டு திருட்டு, அடையாள திருட்டு மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் சைபர் குற்றவாளிகள் உயிர் பறிக்கும் தாக்குதலை நிகழ்த்தலாம் எனும் அபாயம் மிரள வைக்கலாம். ஆனால் பேஸ்மேக்கர் போன்ற சாதனங்களும் உடல் இயக்கத்தை கண்காணிக்கும் சென்சார்களும் இணையம் மூலம் கட்டுப்படுத்ததப்படும் போது அவை தாக்காளர்கள் கைகளில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் என்பது புரிந்து கொள்ளக்கூடியது தான்.

இந்த இணைய, தொழில்நுட்ப செய்திகள் சொல்வது என்ன? இணையத்தில் காத்திருக்கும் அபாயங்களும், ஆபத்துகளும் அல்ல. அவை பின்விளைவு அல்லது பக்கவிளைவு. அவை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விழிப்புணர்வு தேவை. தற்காப்பு தேவை. ஆனால் முக்கியமான விஷயம் என்ன என்றால் இணையத்தில் இணைக்கப்படும் சாதனங்களும் பொருட்களும் அதிகமாகி வருவதும், இவை வருங்காலத்தில் மேலும் சகஜமாகி நமது வாழ்க்கை அனுபவத்தையே மாற்ற இருப்பது தான். இணையத்தில் இணைக்கப்படும் இந்த பொருட்கள் - அவை சென்சாராக இருக்கலாம், பிட்னஸ் டிராக்கராக இருக்கலாம், பாதுகாப்பு கருவியாக இருக்கலாம், காட்டில் உலாவும் அரிய ரக மானை கண்காணிக்கும் ரேடியோ அலை டேகாக இருக்கலாம், காற்றில் மாசு உண்டாவதை அளக்கும் சென்சாராக இருக்கலாம் - பொருட்களின் இணையம் என்று பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன. அதாவது இண்டெர்நெட் ஆப் திங்க்ஸ். ('Internet of Things'  ) .  இண்டெர்நெட் ஆப் திங்கிசிற்கு சரியான தமிழ் பதம் காண்பது கொஞ்சம் சிக்கலானது தான். அதே போலவே இந்த பத்திற்கான தெளிவான வரையறையும் கொஞ்சம் சிக்கலானது தான்.

int.jpegஇண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்பது தற்போதுள்ள இணைய உள்கட்டமைப்பில், தனியாக அடையாளம் காணக்கூடிய கம்ப்யூட்டிங் சாதனங்களின் பிணைக்கப்பட்ட வலைப்பினல்” என்று விக்கிபீடியா விளக்கம் சொல்கிறது.; http://en.wikipedia.org/wiki/Internet_of_Things ” இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்பது பொருட்கள், விலங்குகள் அல்லது மனிதர்கள் தனியே அடையாளம் காணக்கூடிய டேக் கொண்டு இருப்பதும் , மனிதர்கள் அல்லது கம்ப்யூட்டர்கள் உதவி இல்லாமல் ,தகவல்களை மைய வலைப்பின்னலுக்கு அனுப்பி வைக்க கூடிய சூழல் என்று வாட் ஈஸ் ( http://whatis.techtarget.com/definition/Internet-of-Things) இணையதளம் விளக்கம் சொல்கிறது.

’” இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்பது தினசரி பெளதீக சாதனங்கள் இணையத்தில் இணைக்கப்பட்டு தங்களை அடையாளம் காட்டும் திறன் கொண்ட எதிர்கால சூழலை விளக்கும் கருத்தாகம்” என்கிறது டெக்கோமீடியா; http://www.techopedia.com/definition/28247/internet-of-things-iot.

இந்த விளக்கங்களில் உள்ள தொழில்நுட்ப விவரிப்புகளில் வேறுபாடுகள் இருந்தாலும் இவை எல்லாம் சுட்டிக்காட்டும் பொதுவான அம்சம் பொருட்களும் சாதனங்களும் இணையத்தில் இணைக்கப்பட்டிருப்பதும் இப்படி இணைக்கப்படும் பொருட்கள் தங்களை அடையாளம் காட்டி தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடியதாக இருப்பதும் தான். லேப்டாப்களும், ஸ்மார்ட்போன்களும் மட்டும் இணைய இணைப்பு பெற்றிருக்கும் நிலை மாறி உலகில் உள்ள எந்த ஒரு பொருளையும் இணையத்துடன் இணைக்கும் சாத்தியமும், இந்த பொருட்களுக்கு டேக் அல்லது சென்சார்கள் மூலம் அடையாளம் கொடுத்து அவை பரஸ்பரம் பேசிக்கொள்ளும் ஆற்றல் உருவாவதும் தான் இதன் அடிப்படை அம்சம். எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த பொருளையும் இணையத்தில் இணைத்துவிடலாம் என்பது தான். அதாவது இணையவசதி கொண்டதாக ஆக்கிவிடலாம். இப்படி அடிபம்பு முதல் மின்விளக்கு வரை, பிரிட்ஜ் முதல் டிவி வரை  எல்லாவற்றையும் இணையத்தில் இணைக்கலாம். அப்போது எல்லாமே வலைப்பின்னலுக்குள் வந்து உலகமே ஒரு வலைப்பின்னலாக இருக்கும்.

இப்படி இணையத்தில் பொருட்கள் இணைவது வெகு வேகமாக நிகழ்ந்து வருகிறது. தற்போது 12 பில்லியன் சாதனங்கள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2020 ம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை 26 மடங்கு அதிகரிக்கும் என்கின்றனர். இப்படி எல்லாம் இணையமயமாகும் தேவை என்ன? இதன் பலன்கள் என்ன? இந்த துறையின் முன்னோடிகள் யார்? அவர்கள் முன்வைக்கும் கோட்பாடுகள் என்ன? அவை நம் வாழ்க்கையை எப்படி மாற்றக்கூடும் என்பது போன்றவற்றை தொடர்ந்து பார்க்கலாம்...

4தமிழ்மீடியாவுக்காக : சைபர் சிம்மன்

வருங்கால தொழில்நுட்பம் 16 : உலகமே ஒரு வலைப்பின்னல்-2

SUNDAY, 19 OCTOBER 2014 11:17

int1.png

(பொருட்களுக்கான இணையம் , நிஜ உலகை கம்ப்யூட்டர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு தரப்படுத்தப்பட்ட முறை நமக்கு தேவை - கெவின் ஆஷ்டன் , இண்டெர்நெட் ஆப் திங்ஸ் முன்னோடி)

எல்லோருக்கும் இணைய இணைப்பு சாத்தியமாகுமா ? பூமியில் உள்ள ஒவ்வொருவரும் இணையவசதியை பயன்படுத்தக்கூடிய நிலை வருமா? இணைக்கப்பட்ட உலகம் என வர்ணிக்கப்படும் நிலையை மீறி இணைய வசதி இல்லாமல் 440 கோடி பேர் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. இந்த நிலையில் உலகில் உள்ள பொருட்களை எல்லாம் இணையத்தில் இணைப்பது தொடர்பான முயற்சி கொஞ்சம் முரண் நகையாக தோன்றலாம். ஆனால், தினசரி பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் இணையத்தில் இணைப்பதன் மூலம் எதிர்காலத்தில் எல்லையில்லா அற்புதங்கள் சாத்தியமாக இருக்கின்றன.

போக்குவரத்து நெரிசலில் துவங்கி, சுற்றுச்சூழல் மாசு வரை, வீட்டில் எரிசக்தி பயன்பாடு முதல் காரில் பெட்ரோல் அளவு கண்காணிப்பு வரை சென்சார்கள் கண்காணித்து உரிய நேரத்தில் இணையம் மூலம் தகவல் அளித்து எல்லாவற்றையும் தானாகவே சரி செய்யும் நிலை வரலாம் என்கின்றனர். இதன் போக்கில் காலம் காலமாக மனித குலத்தை வாட்டிக்கொண்டிருக்கும் ஏழ்மைக்கும், ஏற்றத்தாழ்வுக்கும் தொழில்நுப்டமே தீர்வாகலாம். இந்த நம்பிக்கையோடு இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் பொருட்களின் இணையம் பற்றி பார்க்கலாம்.

தினசரி பொருட்கள் எல்லாம் இணையத்தை தழுவிக்கொள்ளும் வகையில் இணையம் நிஜ உலகிற்குள் விரிவாக்கம் பெறும் கருத்தாக்கமே பொருட்களின் இணையம் என்று குறிப்பிடப்படுகிறது. உள்ளங்கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் இணைய வசதி இருப்பதை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள், வீட்டில் எரியும் மின்விளக்கு முதல் வாசலில் உள்ள அழைப்பு மணி வரை, சூப்பர்மார்க்கெட்டில் அடுக்கப்பட்டுள்ள பொருட்கள் முதல் அலுவலக மேஜை நாற்காலி வரை எல்லா விதமான பொருட்களையும் வலைப்பின்னலில் இணைக்கலாம், பரஸ்பரம் பேசிக்கொள்ள செய்யலாம், இணையத்துக்கு தகவல் தெரிவிக்க வைக்கலாம் என்கிறனர். இவ்வளவு ஏன் வயல்வெளியில் சென்சார்களை தூவி (நன்றாக கவனியுங்கள் தூவி) பயிர்களுக்கு எப்போது தண்ணீர் தேவை என்பதை கூட வலைப்பின்னல் தெரிந்து கொண்டு தானாகவே குறிப்பிட்ட அளவுக்கு நீர் பாய்ச்சுவது சாத்தியமாகலாம் என்கின்றனர்.

தேவையான அளவு நீர் பாய்ந்ததும் தானாக நீர் நிறுத்தப்பட்டுவிடும். வீட்டின் உரிமையாளர் கதவை திறந்து உள்ளே நுழைந்ததுமே மின் விளக்கு தானாக எரியத்துவங்கும். மின்விசிறி அல்லது ஏசி இயங்கும். அதிலும் உரிமையாளர் வழக்கமாக விரும்பும் அளவில் குளிர்ச்சியை கணக்கிட்டு வழங்கும்.

இந்த அதிசயங்களை எல்லாம் ஏதோ சாதாரண நிகழ்வு போல் (இவை சாதாரண நிகழ்வாகும் அளவுக்கு பரவலாகும் காலம் வந்துவிட்டது) சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் நிலையும் உருவாகும் அளவுக்கு கணிணி ஆற்றல் கொண்ட சாதனங்கள் எங்கும் நீக்கமற நிறைய இருக்கின்றன. 

இவை எல்லாம் நிஜத்தில் சாத்தியம் தானா? இத்தகைய அறிவியல் புனைகதை விஷயங்கள் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலக்குமா?

இந்த கேள்விக்கு பதில் அளிக்ககூடிய ஆய்வுகளையும் வர்த்தக முயற்சிகளையும் பார்ப்பதற்கு முன் கம்ப்யூட்டரின் ஆரம்ப காலத்தில் ஐபிஎம் நிறுவன நிறுவனர் தாமஸ் வாட்சன் 1943 ம் ஆண்டில் தெரிவித்த கருத்தை நினைத்துப்பார்க்கலாம். "உலக அளவில் 5 கம்ப்யூட்டர்களுக்கான சந்தை இருக்ககூடும் என நினைக்கிறேன்” என்றும் வாட்சன் அப்போது கூறியிருந்தார்.

பர்சனல் கம்ப்யூட்டர்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகும் நிலை வரும் என்று வாட்சன் அப்போது கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஆனால் வாட்சம் கம்ப்யூட்டருக்கான சந்தையை குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்று நினைப்பதற்கில்லை. ஐபிஎம் நிறுவபட்ட காலம் ஒரு பெரிய அறையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு பிரம்மாண்ட அளவில் இருந்த மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களின் காலம் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்போது கம்ப்யூட்டர்க்ளை இயக்க பிரத்யேக திறன் கொண்டவர்கள் தேவைப்பட்டனர். குறிப்பிட்ட தொழிற்சாலை உற்பத்திக்கே கம்ப்யூட்டர் பயன்பட்டது. எனவே வாட்சன் கணிப்பு அவரது காலத்திற்கு சரியானதே. ஆனால் அதன் பிறகு நிகழ இருந்த தொழில்நுப்டத்தின் பாய்ச்சலை வாட்சன் உட்பட பலரும் எதிர்பார்க்கவில்லை. கம்ப்யூட்டர்கள் அளவில் சுருங்கி ஆற்றலில் பெருகி, பர்சனல் கம்ப்யூட்டராகி, பின்னர் கையடக்க கம்ப்யூட்டராகி இன்று கடுகு அளவுக்கு வந்து விட்டன.

கடுகு அளவுக்கும் இருக்கும் சென்சார்கள் கச்சிதமாக செயல்படக்கூடியவையாக இருக்கின்றன. அழுத்தத்தை உணரும் தன்மை கொண்டவை, இயக்கத்தை உணர்பவை, வெப்பத்தை உணர்பவை என்று சென்சார்களிலும் பல ரகங்கள் இருக்கின்றன. எந்த எந்த பொருட்களில் எல்லாம் முடியுமோ அவற்றின் மீதெல்லாம் இத்தகைய சென்சார்களை பொருத்தி அவற்றை இணையம் எனும் வலைப்பின்னலுக்குள் கொண்டு வரும் முயற்சியை தான் ஆய்வாளர்கள் பலவழிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பொருட்களின் இணையம் தான் இப்போது ஒவ்வொரு துறையிலும் தலைகாட்டத்துவங்கியிருக்கிறது. இது விஸ்வரூபம் எடுத்து எல்லா சாதனங்களும் அனைத்து பொருட்களும் இணையத்தில் இணைந்து உலகமே ஒரு வலைப்பின்னலுக்குள் வரும் நிலையும் உருவாகலாம். ஏற்கனவே நவீன வாழ்வில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்றும், நாம் அதிகமாக நுட்ப சாதனங்களை பயன்படுத்துகிறோம் என்றும் நினைப்பவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் இணையத்துடன் தொடர்பு கொள்ளகூடிய ஆற்றல் கொண்ட அதிநவீன சாதனங்களின் வடிவாகும் என்பதை பார்த்து மிரண்டு போகலாம். ஆனால் இதை தொழில்நுட்ப யதார்த்தம் என்கின்றனர் கெவின் ஆஷ்டன் போன்றவர்கள்.int2.jpg

இன்று தொழில்நுட்ப உலகம் மந்திரம் போல உச்சரித்துக்கொண்டிருக்கும் பொருட்களின் இணையம் (இண்டெர்நெட் ஆப் திங்க்ஸ்) எனும் பத்ததையும் அதன் பின்னே உள்ள கருத்தாக்கத்தையும் முதலில் முன் வைத்தவர்.

2009 ல் இது பற்றி ஆர்.எப்.ஐ.டி இதழில் எழுதிய கட்டுரையில் ஆஷ்டன் மிகுந்த தயக்கத்துடன் , இண்டெர்நெட் ஆப் திங்ஸ் கருத்தாக்கத்தை முதன் முதலில் தான் முன் வைத்ததை குறிப்பிட்டுள்ளார். "நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் 1999ல் பி அண்ட் ஜி நிறுவனத்திற்காக நாள் அளித்த காட்சி விளக்கத்தில் முதல் முறையாக இண்டெர்நெட் ஆப் திங்க்ஸ் எனும் பதத்தை பயன்படுத்தியிருந்தேன்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளர்.

"அப்போது நான் துணை மேலாளாராக இருந்தேன். ஒருவரும் புரிந்து கொள்ளாத ஒரு எண்ணம் என் மனதில் தோன்றியது” என்று அவர் இண்டெர்நெட் ஆப் திங்ஸ் கருத்தாக்கம் பற்றி வேறு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பவர்பாயிண்ட் விளக்கம் அவரிடமே பல ஆண்டுகள் தங்கியிருந்தது. ஆனால் நல்லவேளையாக அலுப்பூட்டும் பல பவர்பாயிண்ட் விளக்கங்கள் போல அவை மறக்கப்பட்டுவிடவில்லை. உலகை மாற்றக்கூடிய கருத்தாக்கமாக மெல்ல வலுப்பெற்று பிரபலமாகி இப்போது வெகுஜன பயன்பாட்டிற்கு வர தயாராகி உள்ளது.

ஆஷடன் அந்த விளக்கதில் முன் வைத்த எண்ணம், சூப்பர் மார்க்கெட்டின் தலைவலியாக விளங்கும் இருப்பு பிரச்சனைக்கு ஆர்.எப்.ஐ.டி அடையாளம் மூலம் தீர்வு காண்பது. சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கச்செல்லும் போது பல நேரங்களில் நீங்கள் தேடும் பொருள் இருப்பில் இல்லாமல் இருப்பது கண்டு ஏமாறும் அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு தானே. வர்த்தக நிறுவனங்களுக்கு இது தான் மாபெரும் தலைவலி- அதாவது வாடிக்கையாளர்கள் நாடி வரும் பொருள் அங்காடி அலமாரியில் இல்லாமல் போவது. பெரும் செலவில் உற்பத்தி செய்து, விளம்பரமும் செய்துவிட்டு வாடிக்கையாளர் தேடி வரும் நிலையில் அவர்களுக்கான பொருள் இருப்பில் இல்லாமல் போனால் என்ன பயன்? அதே நேரத்தில் ஒருவரும் நாடாத பொருட்கள் அங்காடி அலமாரியில் தூசி படிய காத்திருப்பது இந்த பிரச்சனையின் இன்னொரு பக்கம். நுகர்வோர் நிறுவனங்கள் தீர்க்க விரும்பி ஆனால், ஒருபோதும் முழுவதும் தீர்க்க முடியாத சிக்கலாக இது இருந்தது.

மார்கெட்டிங் துறையில் இருந்த ஆஷ்டன் இந்த பிரச்சனையை உணர்ந்த்தில் வியப்பில்லை. "நான் பி.& ஜியில் இருந்தேன். நாங்கள் புதிய லிப்ஸ்டிக்கை அறிமுகம் செய்திருந்தோம். ஆனால் நுகர்வோர் விரும்பும் லிப்ஸ்டிக் வண்ணம் எப்போதும் இருப்பில் இல்லாமல் இருந்தது” என இது பற்றி ஆஷ்டன் குறிப்பிடுகிறார்.

இந்த பிரச்சனைக்கு தீர்வாக தான், ஆஷ்டன், பொருட்களை எல்லாம் இணையத்தில் இணைத்து அவற்றின் இருப்பை இணையம் மூலமே அறிவதற்கான யோசனையை முன்வைத்தார்.

27 வயதான ஆஷ்டன் முன் வைத்த அந்த யோசனையை பி.& ஜி நிறுவனம் ஏற்றுக்கொண்டது தான் மிகப்பெரிய ஆச்சர்யம். இதற்கான நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் , தனது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக ஆஷ்டன் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாடினார். ஆனால் அவருக்கு கிடைத்த வரவேற்பு உற்சாகமானதாக இல்லை. பல நிறுவனங்கள் இது சாத்தியமில்லை என்று கூறின. இதனையடுத்து ஆய்வு ஒன்றே இதற்கான வழி என்று முடிவு செய்து கல்வி நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியை நாடினார். அவரது அதிர்ஷ்டம் அமெரிக்காவின் எம்.ஐ.டி பல்கலைக்கழகமும் இந்த பிரச்சனைய முக்கியமாக கருதியது. ஆஷ்டன் எம்.ஐ.டி அளித்த வேலை வாய்ப்பை ஏற்றுக்கொண்டு இதற்கான ஆய்வில் ஈடுபட்டார். 4 ஆண்டு போராட்டத்திற்கு பின் ஆர்.எப்.ஐ.டி மூலம் வழியை கண்டுபிடித்தார். இந்த ஆய்வுக்காக அவர் ஆட்டொ-ஐடி செண்டர் எனும் மையத்தையும் நிறுவி இருந்தார்.int4.jpg

ஆஷ்டன் உருவாக்கி தீர்வில் பல அம்சங்களும் , தொழில்நுட்பங்களும் கலந்திருந்தாலும் அதை இப்படி எளிதாக புரிந்து கொள்ளலாம். சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொருட்களுக்கு எல்லாம் ஆர்.எப்.ஐ.டி எனும் ரேடியோ அலை அடையாளத்தை அளிக்க வேண்டும். இந்த ரேடியோ அலை அடையாளங்கள் அந்த பொருளின் தேங்கியிருக்கிறதா அல்லது விற்பனையாகிறதா என்பதை தெரிந்து கொள்ள உதவும். ஒவ்வொரு முறை பொருள் வாங்கப்படும் போதும் அந்த பொருளே அது பற்றி மைய வலைப்பின்னலுக்கு தகவல் அளித்துவிடும். இதன் அடிப்படையில் எந்த பொருட்கள் வேகமாக விற்பனையாகின்றன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப இருப்பை திட்டமிடலாம். இந்த ஆர்.எப்.ஐடி டேக் மூலம் மேலும் பலவிதமான தகவல்களை சேகரிக்க முடியும். (இந்த அம்சம் அந்தரங்க மீறல் அச்சத்தை உண்டாக்கியுள்ளது).

எந்த ஒரு பொருளும் தானாக அடையாளம் காணப்பட்டு அவற்றின் செயல்பாடு பற்றிய தகவலை இணையத்திற்கு தெரிவிப்பது தான் இந்த செயல்பாட்டின் அடிப்படை. கையிருப்பு நிர்வாகத்தில் இது பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என கருதப்பட்டது-படுகிறது.

ஆர்.எப்.ஐ.டி டேக் என்பது வேறு வடிவில் விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பயன்படுத்தப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த கருத்தாக்கத்தை விரிவிபடுத்தி எல்லா துறைகளிலும் பயன்படுத்தலாம் என்பது தான் இண்டெர்நெட் அப் திங்ஸின் கோட்பாடு.

ஆனால் இந்த கருத்தாக்கம் நடைமுறையில் சவால்களையும் சோதனையையும் சந்தித்தே இன்று வெகுஜன பயன்பாட்டின் சாத்தியம் பற்றிய வியப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அனைத்துவிதமான சாதனங்களையும் இணையைத்தில் இணைப்பதன் மூலம் தகவல் சேகரிப்பு மற்றும் அதன் மூலமான புரிதல் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என ஆரூடம் கூறப்பட்டது. இதற்கான அழகான உதாரணம் இணைய பிரிட்ஜ்.

டாட்காம் அலை உச்சத்தில் இருந்த 1990 களின் இறுதியில் இணைய பிரிட்ஜ் அறிமுகமனது. அதாவது இணைய வசதி கொண்ட பிரிட்ஜ். தன்னுள்ளே இருக்கும் பொருட்கள் காலியாவத்தையும் காலாவதியாவதையும் தானாக உணர்ந்து கொண்டு அதற்கேற்ப செயல்படக்கூடிய புத்திசாலித்தனம் மிக்கதாக இவை இருக்கும் என தொழில்நுப்ட வல்லுனர்கள் தெரிவித்தனர். எப்படி தெரியுமா? பிரிட்ஜ் உள்ளே இருக்கும் முட்டைகள் அல்லது பால் பாக்கெட் காலியாகிவிட்டால் அதை தெரிந்து கொண்டு இந்த பிரிட்ஜே இணையம் மூலம் அவற்றை ஆர்டர் செய்து கொள்ளும். முட்டை கெட்டுப்போயிருந்தால் தகவல் சொல்லும். இந்த பிரிட்ஜிலேயே இணையம் மூலம் சமையல் குறிப்புகளை பார்த்துக்கொள்ளலாம். பாட்டு கேட்கலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. எல்ஜி நிறுவனம் இத்தகைய முதல் பிரிட்ஜை அறிமுகம் செய்தது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் மண்ணைக்கவ்வுவது போல இணைய பிரிட்ஜ் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. பொருட்களின் இணையம் எனும் கருத்தாக்கம் இணைய பிரிட்ஜில் கையை நன்றாகவே சுட்டுக்கொண்டது.int5.jpg

இணைய பிரிட்ஜின் தோல்வி அல்லது வரவேற்பின்மை எல்லா பொருட்களுடனும் இணையத்தை இணைப்பதன் அவசியத்தையே கேள்விக்குள்ளாக்கியது. ஆனால் இந்த சந்தேகத்தை மீறி, பொருட்களின் இணையம் கருத்தாக்கம் செல்வாக்கு பெற்று வருகிறது. அடுத்த பத்தாண்டுகளில் காணும் இடங்களில் எல்லாம் இணைய தொடர்பு கொண்ட பொருட்களை பார்க்கலாம் என்கின்றனர். இது மருத்துவம் முதல் விவசாயம் வரை மாற்றத்தை ஏற்படுத்த இருப்பதாகவும் நம்பபடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒருவருமே எதிர்பாராத ஸ்மார்ட்போன்களின் எழுச்சி!. பொருட்களின் இணைய கருத்தாக்கத்தில் ஸ்மார்ட்போன் மையமாகி இருப்பதால் அவற்றின் பயன்பாடும் நடைமுறை சார்ந்த்தாக இருக்கிறது.

பொருட்களின் இணையத்தின் நடைமுறை திட்டங்களை பார்ப்பதற்கு முன் இப்படி இணையத்தில் எல்லா பொருட்களையும் இணைப்பதற்கான அவசியம் தொடர்பான கோட்பாட்டையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களின் தலையீடு இல்லாமல் பொருட்களாளேயே தகவல் சேகரிக்க முடிய வேண்டும் என்கிறார் ஆஷ்டன். இந்த துறையின் மற்றொரு முன்னோடியான நீல் ஜெர்ஷன்பீல்ட் (Neil Gershenfeld) சிந்திக்கும் பொருட்கள் பற்றி வியக்க வைக்கும் சிந்தனையை முன் வைக்கிறார். சயிண்டிபிக் அமெரிக்கன் கட்டுரை ஒன்று கம்ப்யூட்டர்கள் துருத்திக்கொண்டிருக்காமல் பின்னுக்கு சென்று இணைய வலைப்பின்னல் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்கிறது. அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் பூமி முழுவதையும் சென்சார் புழுதிகளால் மூடி தகவல் சேகரிக்கலாம் என்கிறார். இவை பற்றி எல்லாம் தொடர்ந்து பார்க்கலாம்..

 4தமிழ்மீடியாவுக்காக  சைபர் சிம்மன்

வருங்கால தொழில்நுட்பம் 17 : உலகமே ஒரு வலைப்பின்னல்-3

SUNDAY, 26 OCTOBER 2014 13:06

int1.png

(இந்த பொருட்கள் சுற்றுச்சூழலை உணர்ந்து அதற்கு எதிர்வினையும் புரிவதோடு மற்ற பயனாளிகள் அல்லது பொருட்களுடன் தொடர்பு கொள்ளலாம். பொருட்களின் இணையம்(இண்டெர்நெட் ஆப் திங்ஸ் ) தான் அடுத்த சமூக வலைப்பின்னல், அது ஏற்கனவே நிகழத் துவங்கி விட்டது - ரிக்கார்டோ முயுரெர் (Ricardo Murer ), தொழில்நுட்ப வல்லுனர்.)

இணைய பிரிட்ஜ் தனக்குக்குத்தானே சிரித்துக்கொண்டிருக்கலாம். தன்னை குறைந்து மதிப்பிட்டதற்காகவும், தனது தொழில்நுட்பத்திற்கான காலமும் தேவையும் வரவில்லை 

என்று கேலி செய்ததை நினைத்து அது உள்ளூர் நகைத்துக்கொண்டிருக்கலாம். இப்போது பொருட்கள் சிந்திக்க துவங்கும் காலம் நெருங்கிவிட்ட உலகில் பிரிட்ஜ் சிரிப்பது சாத்தியம் தானே!.இணைய பிரிட்ஜ் யோசிக்கிறதோ இல்லையோ அதற்கான காலம் வந்துவிட்டது. இணைய வசதி கொண்ட பிரிட்ஜ் அது அறிமுகமான காலத்தில் பெரும் வரவேற்பை பெறாமல் போயிருக்கலாம். வர்த்தக நோக்கில் அது தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் கருத்தாக்க அளவில் இணைய பிரிட்ஜ் என்பது தனது காலத்தை முந்தைய அற்புதமாகும். அது இரண்டு வருங்கால தொழில்நுட்ப யதார்த்ததை சாத்தியமாக உணர்த்தியது.

பிரிட்ஜின் திரையையே இணையத்துக்கான திரையாக மாற்றிக்கொள்ளலாம் என்பது ஒன்று. எந்த பரப்பையும் டிஜிட்டல் திரையாக்கி இணையத்தை பயன்படுத்தக்கூடிய நிலைக்கான முன்னோட்டம் இது. இதைவிட முக்கியமாக சாதனங்களையும் பொருட்களையும் இணையத்துடன் இணைக்கும் போது ஏற்படக்கூடிய பலன்களை இணைய  பிரிட்ஜ் உணர்த்தியது. பால் பாக்கெட் தீர்ந்து விட்டதையும் தக்காளி அழுகிப்போயிருப்பதையும் சென்சார் மூலம் உணர்ந்து தகவல் சொல்லும் ஆற்றல் கொண்டதாக இணைய பிரிட்ஜ் இருந்தது. சாதங்கள் மட்டும் அல்ல, பலவிதமான பொருட்களும் கூட இணையத்துடன் இணைக்கப்படும் சாத்தியம் கொண்ட வலைப்பின்னல் யுகம் நமக்காக காத்திருக்கிறது.

இணைய பொருட்கள் தாமாகவே தகவல் சேகரிக்கும். தங்களுக்குள் பேசிக்கொள்ளும். மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும். மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டி 

இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும். வீட்டின் கதவு, பயணிக்கும் கார், போக்குவரத்து சிகனல், அலுவலக மேஜை என எல்லாமே வலைப் பின்னலில் இணைக்கப் பட்டிருக்கும். இவ்வளவு ஏன் எங்கோ கட்டாந்தரையில் இருக்கும் பாறைக்குள் கூட ஒரு சென்சார் பொருத்தப்பட்டு அதுவும் இணைய வலைக்குள்  இடம் பெற்றிருக்கலாம்.

i1.jpg

காட்னர் (Gartner ) ஆய்வு நிறுவனம் 2020 ம் ஆண்டில் இணையத்துடன் தொடர்பு கொண்டதாக இருக்ககூடியதாக கணித்துள்ள 26 பில்லியன் பொருட்களில் இந்த பாறையும் ஒன்றாக இருக்கலாம். அல்லது காட்னர் கணிப்பில் இல்லாத புதிய வரவாகவும் இருக்கலாம். இப்படி எல்லா பொருட்களையும் ஏன் இணையத்தில் இணைக்க வேண்டும். இதற்கான அவசியம் என்ன? இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன?

இந்த கேள்விகளுக்கான பதிலை பொருட்களின் இணையம் முன்னோடி கெவின் ஆஷ்டன் ஒரு கோட்பாடாகவே முன் வைக்கிறார். அதை பார்க்கும் முன் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணனை நினைத்துப்பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும். கலைவானர் இன்று இருந்திருந்தால் தனது பாணியில் சிரித்துக் கொண்டே , இணையத்தின் பொருட்கள் பற்றி ஒரு பாடல் பாடியிருப்பார். பட்டனை தட்டி விட்டால் ஒரு தட்டில் இரண்டு இட்லியும் சட்னியும் வர வேண்டும் என்று அந்த காலத்திலேயே பாடியவர் அல்லவா? அவரது பாடலில் இருந்த காலத்தை விஞ்சிய கற்பனை இன்று யதார்த்தமாகி கொண்டிருக்கிறது. ஏறக்குறைய இதே நிலை இணைக்கப்பட்ட பொருட்களுக்கு நாளை ஏற்படலாம். இன்று மிகையாக ,மிரட்சியாக ,நம்ப முடியாததாகத் தோன்றலாம், ஆனால் இதுவே வருங்கால யாதார்த்தம். கெவின் ஆஷ்டன் இதை மிகையாகவோ , தேவையில்லாத தொழில்நுட்ப ஆடம்பரமாகவோ பார்க்கவில்லை.

‘இன்று கம்ப்யூட்டர்களும், அதனால் இணையமும் தகவல்களுக்காகம் முழுவதும் மனிதர்களை சார்ந்து இருக்கிறது. இணையத்தில் இருக்கும் ஏறக்குறைய 50 பெட்டாபைட் (ஒரு பெட்டாபைட் என்றால் 1,024 டெராபைட்) முதலில் மனிதர்களால் திரட்டப்பட்டு, உருவாக்கப் பட்டது- டைப் செய்து அல்லது பதிவு பட்டனை அழுத்து அல்லது புகைப்படம் எடுத்து அல்லது பார்கோடை ஸ்கேன் செய்து உருவாக்கப்பட்டவை. இணையத்திற்கான வழக்கமான வரைபடம் சர்வர்களும் ரவ்டர்களும் கொண்டதாக இருக்கின்றன. ஆனால் எண்ணிக்கையில் அதிகமான முக்கியமான ரவுட்டர்களான மனிதர்களை விட்டுவிடுகின்றன. பிரச்சனை என்ன என்றால் மக்களுக்கு குறைவான நேரமும் கவனமும் துல்லியமும் இருப்பது தான். இவற்றின் பொருள் உடனடி உலகம் பற்றிய விவரங்களை சேகரிப்பதில் அவர்கள் சிறந்தவர்கள் அல்ல”. இப்படி சொல்லும் , நான் பெளதீக உலகில் இருப்பதால் இது மிகவும் முக்கியம் என்கிறார். நம்முடைய பொருளாதாரமும் சமூகமும் தகவல் அல்லது கருத்தாக்கம் சார்ந்து இல்லை பொருட்கள் சார்ந்து இருக்கின்றன என்கிறார். 

எண்ணங்களும் தகவல்களும் முக்கியம் தான் என்றாலும் பொருட்கள் அவற்றைவிட முக்கியம் என்று கூறும் ஆஷ்டன் , இன்றைய தகவல் தொழில்நுட்பம் மனிதர்கள் திரட்டிய விவரங்களை அடிப்படையாக கொண்டிருப்பதாக் பொருட்கள் பற்றி அறிந்திருப்பதைவிட கருத்துக்களை அறிந்திருக்கிறது என ஆஷ்டன் குறைப்பட்டுக்கொள்கிறார். என்னடா இது மனிதர்களை குறை சொல்கிறாரே என்று நினைக்க வேண்டாம். ஆஷ்டனின் சிந்தனை போக்கின் தொடர்ச்சி உங்களை வியக்க வைக்கும். ‘பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் அறிந்த கம்ப்யூட்டர்கள் இருந்தால் - அதாவது நமது உதவி இல்லாமல் சேகரித்த தகவல்களை அவற்றால் பயன்படுத்த முடிந்தால்- நம்மால் எல்லாவற்றையும் பின் தொடர்ந்து கணக்கிட முடியும், வீணாவதை தடுக்க முடியும், செலவையும் இழப்பையும் குறைக்க முடியும். பொருட்களுக்கு எப்போது மாற்று தேவை, பழுது பார்ப்பது தேவை ,அவை காலாவதியாகி விட்டனவா என்று தெரிந்து கொள்ள முடியும்” ஆஷ்டன் என்ன சொல்ல வருகிறார் என்பது இப்போது புரிந்திருக்கும். மனிதர்களின் தலையீடு இல்லாமலே பொருட்களால் புத்திசாலித்தனமாக சுற்றுப்புறத்தில் இருந்து தகவல்களை சேகரித்து இணையத்தில் பதிவேற்ற முடிந்தால் ,தங்களுக்கும் பரிமாறிக்கொள்ள முடிந்தால் அற்புதமாக இருக்கும் என்பது தான் ஆஷ்டனின் சிந்தனை விரிவாக்கம்.

i3.jpg

இதைத் தான் இணைக்கப்பட்ட பொருட்கள் சாத்தியமாக்குகின்றன. உலகை தாங்களே புரிந்து கொள்ளகூடிய அளவுக்கு கம்ப்யூட்டர்கள் தகவல்களை தாமாக சேகரிக்கும் ஆற்றலை வழங்க வேண்டும் என்கிறார் அவர். கம்ப்யூட்டர் என்பது இங்கு பிரிட்ஜ் , வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களையும் குறிக்கும், சிறிய சென்சார்களையும் குறிக்கும். பொருட்களின் இணையம் பற்றி சயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் வெளியான கட்டுரை, கம்ப்யூட்டர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு எங்கும் நிறைந்திருக்கும் நிலை வர வேண்டும் என்கிறது. அதாவது கம்ப்யூட்டர்கள் செயல்படுவதையும் அவை தகவல் சேகரிப்பதையும் நாம் உணராத அளவுக்கு அவை பரவலாகி சகஜமாக வேண்டும் என்கிறது.

i5.jpg

எந்தத் தொழில்நுட்பமும் அவை பயன்படுத்தப்படுவதே தெரியாத அளவுக்கு வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்தால் தான் அவற்றால் முழு பயன் ஏற்படும் என்றும் இந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. ரேடியோ அலை மூலம் அடையாளம் காணும் ஆர்.எப்.ஐ.டி மற்றும் பொருட்களின் விலை சொல்லும் பார்கோடு போன்ற தொழில்நுட்பங்கள் அறிமுகமான போதே இதற்கான 

சாத்தியம் உண்டாகி விட்டது. இணையம் எனும் வலைப்பின்னல் உருவான பிறகு சென்சார்கள் மூலம் பொருட்களை இணைப்பது பற்றிய சிந்தனையும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்ப காலத்தில் இவை கருத்தாக்க அளவிலேயே இருந்தாலும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பாய்ச்சலும் , குறைந்த செலவில் பல வகையான சென்சார்களை தயாருக்கும் சாத்தியமும் இதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன.

ஆக, பொருட்களின் இணைப்பின் அடிப்படை கருத்தாக்கமான , எந்த ஒரு பொருளும் தானாகவே  தகவலை சேகரித்து , தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு இணையம் 

எனும் வலைப்பின்னலில் அதை பகிர்ந்து கொள்வது சாத்தியமாகத் துவங்கியிருக்கிறது.

அது மட்டும் அல்லாமல் ஸ்மார்ட்போன்களி எழுப்பு இணையத்தில் தொடர்புடைய பொருட்கள் அளிக்கும் தகவலை பெறுவதில் புரிந்து கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனால் என்ன பயன் என்று கேட்பதைவிட என்ன சாத்தியமில்லை என்று கேட்பதே சரியாக இருக்கும். சில அழகான உதாரணங்களை பார்க்கலாம்; ஒருவர் படுக்கையில் படுத்து தூங்கி கொண்டிருக்கிறார். காலை அவர் கண் விழிக்க வேண்டிய நேரத்தை அலாரம் 

நினைவூட்டுகிறது. எப்படி தெரியுமா? இணையத்துடன் இணைக்கப்பட்ட அந்த அலாரம் அவரது கூகிள் நாட்காட்டியில் அன்றைய தினம் காலையே அவருக்கு ஒரு முக்கிய சந்திப்பு இருப்பதை தெரிந்து கொண்டு, அரை மணி நேரம் முன்னதாகவே எழுப்பி விடும். அவர் படுக்கையில் இருந்து எழுத்துமே பத்து நிமிட இடைவெளியில் கெய்சர் தானாக ஆன் ஆகி வெந்நீர் தயார் செய்யும். அதற்கு முன்னர் காபி இயந்திரம் அவருக்காக காபியை தயார் செய்து வைத்திருக்கும். சரியான நேரத்தில் புறப்பட்டு செல்லும் போது அவர் காரிலேயே முக்கிய இமெயில்களை படித்துக்கொள்ளலாம். இன்னொரு நாள், அவர் இரவு சரியாக தூங்கியிருக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். படுக்கையில் உள்ள சென்சார் இதை புரிந்து கொண்டு அவருக்கு கூடுதல் தூக்கம் தேவை என்று உணர்ந்து அலாரத்துக்கு தகவல் தெரிவித்து விடும். அலாரம் வழக்கமான நேரத்தில் விழிக்கச்செய்யாமால் அரை மணி நேரம் கழித்து எழுப்பிவிடும். அதற்கு முன்னர் அன்றைய தினத்திற்கான அவரது நிகழ்ச்சி நிரலையும் அலசி ஆராய்ந்து பார்த்துவிடும். இப்போதே கூட அறையின் வெப்பம் அறிந்து குளுமையை கூட்டி குறைத்துக்கொள்ளும் நவீன ஏசி மிஷின்கள் இருக்கின்றன. இது போன்ற சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டு தேவையான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும் போது தினசரி வாழ்க்கையின் பல சிக்கல்களுக்கு தானாக தீர்வு உண்டாகும்.

i2.jpg

தேடியந்திர நிறுவனமான கூகிள் வாங்கியுள்ள தர்மேஸ்டாட் நிறுவனமான நெஸ்ட் வீடுகளில் எரிசக்தி பயன்பாட்டை இப்படி தான் தேவைக்கு ஏற்ப அழகாக கண்காணித்து நிர்வகிக்கிறது.

அதே போல நெடுஞ்சாலையில் காரில் போய்க்கொண்டிருக்கும் போது அடுத்த முக்கிய சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படப்போகிறது என்றால் கார் அதை தானாக அறிந்து கொண்டு அலுவலகத்திற்கு விரைவாக செல்லக்கூடிய மாற்று பாதையை தானாக தேர்வு செய்து கொள்ளும். தானியங்கி கார் மற்ற தானியங்கி காருடன் தொடர்பு கொள்ளகூடியதாக இருக்கும் என்பதால் எந்த சாலையில் நெரிசல் குறைவு என்பதை தெரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் கொண்டதாக இருக்கும்.

இன்னொரு உதாரணம் பார்க்கலாம்; ஒருவர் வீட்டில் தீப்பிடித்துக்கொள்கிறது. உடனே சென்சார் புகை நெடியை உணர்ந்து அபாய மணி ஒலிக்கச்செய்கிறது. ஆனால் வீட்டில் 

இருப்பவரோ அயர்ந்த தூக்கத்தில் இருக்கிறார். சென்சார் அசைவு இல்லாமல் இருப்பது புரிந்து கொண்டு அவசர உதவிக்கு தகவல் அனுப்புகிறது. வீட்டில் இருந்து புறப்படும் போது கதவை மூடுகிறீர்கள். ஆனால் கதவு தாளிட்டுக்கொள்ளாமல், சாவி உள்ளேயே இருக்கிறது என்ன செய்ய என்று கேட்டு எச்சரிக்கலாம். இப்படி தொழில்நுட்ப வல்லுனர்கள் பல உதாரணங்களை முன் வைக்கின்றனர். சில இப்போதே சாத்தியமாகி இருக்கின்றன. வீட்டிலும் அலுவலகத்திலும் மட்டும் அல்ல, வேளாண்மை சுற்றுசூழல் என எல்லாவற்றிலும் இதே போன்ற அற்புதங்கள் சாத்தியம். அமெரிக்காவில் பெர்க்லி பல்கலைக்கழக பேராசிரியரான கிறிஸ் பிஸ்டர் (Kris Pister,) பூமி முழுவதும் சின்னஞ்சிறிய சென்சார்களை தூவி காற்று முதல் வெப்பம் வரை 

எல்லாவற்றையும் கண்காணிக்கலாம் என்கிறார். இதை அவர் ஸ்மார்ட் டஸ்ட் என்று குறிப்பிடுகிறார்.

மின்னணு நரம்பு மண்டலம் போல செயல்படக்கூடிய இந்த சென்சார் வலைப்பின்னல் இயற்கை சூழல் உட்பட எல்லாவற்றையும் அவை நிகழும் நேரத்திலேயே கண்காணித்து அதற்கேற்ப செயல்படும். வயலில் உள்ள ஈரப்பதம், உணவின் தேவை போன்றவற்றை சென்சார்களே கண்காணித்து நீர்பாய்ச்சவோ உரம் போடவோ ஏற்பாடு செய்யும். ஒரு காலகட்டத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் பொருட்களை விற்பனை செய்வதை விட நிலத்தில் இருந்து திரட்டப்படும் தகவல்களை விற்பது லாபகரமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் தகவல்கள் சிறந்த தகவல்கள் என்கிறார் பேராசிரியர் பிஸ்டர். சென்சார்கள் மூலம் மண் வளத்தை மேம்படுத்தி வளங்கள் வீணாவதையும் கட்டுப்படுத்தலாம் என்கிறார் அவர். அமெரிக்காவில் ஸ்டீரிட்லைன் எனும் நிறுவனம் பார்கிங் இடங்களில் சென்சார்களை பொருத்து பார்கிங் சேவியை திறம்பட நிர்வகிக்கிறது. எதிர்காலத்தில் காரோட்டி செல்லும் போது , ஜிபிஎஸ் மூலம் கார்கள் தானாகவே பார்கிங் இடத்தை தேடிக் கொள்ளும்.

i6.jpg

அதனால் தான் காட்னர் நிறுவனம் 26 பில்லியன் சாதங்கள் இணைய வலைப்பின்னலில் இணைய இருப்பதாக கணித்துள்ளது. இவற்றால் எல்லையில்லா அற்புதங்கள் நிகழ இருக்கின்றன. எதிர்பாராத ஆபத்துகளும் காத்திருக்கின்றன. இணையத்தில் பொருட்கள் இணைக்கப்படும் போது அவை தாக்காளர்களால் தாக்கப்படும் ஆபத்து இருக்கிறது. தொழில்நுட்பம் எல்லா அம்சக்களிலும் நுழையும் போது அந்தரங்கம் பாதிக்கப்படலாம். தேவையை பூர்த்தி செய்வது மட்டும் அல்ல ஒருவரது தனிப்பட்ட தன்மையை புரிந்து கொண்டு விளம்பர உலகமும் குறி வைத்து செயல்படலாம். இந்த கட்டுரையின் முதல் பகுதி துவக்கத்தில் குறிப்பிட்ட ஷோடன் தேடியந்திரத்தை ஒரு முறை நினைத்து பார்ப்பதும் சரியாக இருக்கும்.

- 4தமிழ்மீடியாவுக்காக  சைபர் சிம்மன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுகளுக்கு நன்றிகள்

தொடருங்கள்

நேரம் கிடைக்கும்  போது ஆறுதலாக வாசிக்கணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால தொழில்நுட்பம் 18 : ஜடப்பொருட்கள் பேசக் கேட்போம், எதிர்கால யதார்த்தம்!

MONDAY, 03 NOVEMBER 2014 18:16
 

future%2Btech%2B18.jpg

வாழ்க்கையில் அலுப்பில்லாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இப்போதுள்ள பொருட்கள் எல்லாம் மேலும் மேம்பட்டு அவற்றின் பயன்பாடு கூடினால் எப்படி இருக்கும்?

நான் உலகை பார்க்கும் விதமே முற்றிலுமாக மாறினால் எப்படி இருக்கும்? முக்கண்ணன் சிவனைப் போல மூன்றாவது கண் நமக்கு பின் தலையில் முளைத்தால் எப்படி இருக்கும்? நாம் தகவல்களை பெறும் விதமும் மாறி சிலைகளும் , சாலையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளும் நம்முடன் பேசினால் எப்படி இருக்கும்? ஞானக்கண் போல எங்கோ நடக்கும் நிகழ்வுகளை கண் முன்னே பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? 

இவை போன்ற கேள்விகளுக்கும் எல்லாம் தொழில்நுட்பம் பதிலாக அமையப்போகிறது என்று சொன்னால் எப்படி இருக்கும்? அமையப் போகிறது என்ன? இவற்றில் சில இப்போதே அமைந்து கொண்டிருக்கிறது. சந்தேகம் இருந்தால் கியூஆர் கோட் குறியீட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்து பாருங்கள் !

ar5.jpg

ஒரு சில மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பத்திரிகை விளம்பரங்களில் இத்தகைய குறியீடுகளை இடம் பெற வைக்கின்றன. அதை ஸ்மார்ட் போனால் ஸ்கேன் செய்தால் கூடுதல் தகவல்களோ அல்லது வீடியோவோ தோன்றலாம். இது ஒரு சின்ன உதாரணம் தான். இது போல இன்னும் எண்ணற்ற அற்புதங்கள், மாயங்கள் சாத்தியமாகத் துவங்கியிருக்கின்றன. இவை இப்போது, வியக்க வைக்கலாம், மலைக்க வைக்கலாம். பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம்.

ஆனால் இவை வருங்கால யதாரத்தம். வந்து விட்ட மேம்பட்ட யதார்த்தம்! அதாவது ஆக்மெண்டெட் ரியாலிட்டி (augmented reality ). பல தொழில்நுட்பங்களின் கலைவையான இந்த நுட்பம் பல வடிவம் எடுத்து அன்றாட வாழ்க்கையில் , புற உல்கை நாம் பார்க்கும் வித்தையும் எதிர்கொள்ளும் வித்ததையும் மேம்படுத்த இருக்கிறது. அடுத்த பெரிய தொழில்நுட்பம் என்று இது வர்ணிக்கப்படுகிறது. விளம்பரம் முதல் சுற்றுலா வரை, மார்க்கெட்டிங் முதல் பாதுகாப்பு போர் வரை, நுண்கலை முதல் பொழுதுபோக்கு வரை என எல்லாத் துறைகளிலும் இந்த மேம்பட்ட தன்மையை உணரலாம். காற்றில் தோன்றும் திரை முதல் ஹெல்மெட்டில் தெரியும் காட்சிகள், கண்ணாடி வழியிலான உலகம் என பலவிதங்களில் உலகுடன் தொடர்பு கொள்ளலாம். 

அணி கணிணி முன்னோடி ஸ்டீவ் மன் சொல்வது போல , ஆக்மெண்டெட் யதார்த்தம் மக்கள் மேலும் சிறப்பாக பார்க்க உதவும். இந்த மேலும் என்பது தான் இந்த நுட்பத்தின் ஆதார அம்சம். தற்போதுள்ள பொருட்களையும், சேவைகளையும் கூடுதல் அம்சங்கள் கொண்டதாக்கி யதார்த்ததை மேம்படுத்துவது இவற்றின் சிறப்பம்சம். மனித வாழ்க்கை அனுபவமே மேம்பட இருக்கிறது. ஆக்மெண்டெட் ரியாலிட்டியை வரையறுப்பதோ விளக்குவதோ சிக்கலானது என்று சொல்லும் அளவுக்கு அதன் எல்லைகளும் சாத்தியங்களும் பரந்து விரிந்தது. 
அதென்ன ஆக்மெண்டெட் ரியாலிட்டி? வர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் உலகிற்கும் இதற்கும் தொடர்பு உண்டா? இரண்டும் ஒன்றா? வேறுபட்டவையா? இவற்றுக்கும் அணி கணிகளுக்கும் என்ன தொடர்பு? இல்லை இவையும் பொருட்களை இணையத்தில் இணைத்து வலைப்பின்னலுக்குள் கொண்டு வரும் பொருட்களின் இணையமான இண்டெர்நெட் ஆப் திங்சின் அங்கமா?

ஆக்மெண்டெட் ரியாலிட்டியை புரிந்து கொள்ள முற்படும் போது இந்த கேள்விகள் எல்லாம் மனதில் அலை மோதும். இந்த மாய நுட்பத்தை புரிந்து கொள்ளவும் இந்த கேள்விகள் உதவும்.
ஆக்மெண்டெட் ரியாலிட்டியை நிஜ உலகும் மெய்நிகர் உலகும் சங்கமிக்கும் கலவை எனலாம். பொதுவாக புற உலகில் உள்ள பெளதீகப் பொருட்கள் மீது கம்ப்யூட்டரால் உருவாக்கப் பட்ட உருவத்தை பரவச் செய்வது என்பதே இதன் அடிப்படையாக இருக்கிறது. இப்படித் தகவல்கள், ஆடியோ,வீடியோ, வரைபடம், காட்சிகள் என பலவற்றை பொருட்கள் மீது படர அல்லது பரவச் செய்யலாம். இதன் மூலம் அந்த பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கச்செய்து நம்முடைய புரிதல் அனுபவத்தையும் செழுமையாக்குவதால் இந்த நுட்பம் ஆக்மெண்டெட் ரியாலிட்டி என்று அழைக்கப்படுகிறது.

ar2.jpg

தமிழில் மேம்பட்ட யதார்த்தம் என்று பொருள் கொள்ளலாம். ஒருவிதத்தில் மெய்நிகர் தன்மை என்று சொல்லப்படும் வர்ச்சுவல் ரியாலிட்டியுடன் இது தொடர்புடையது. இரண்டுமே கம்ப்யூட்டர் கொண்டு உருவாக்கப்படும் இரண்டாம் அல்லது இன்னொரு யதார்த்தம் தான். ஆனால் இரண்டுக்கும் நுட்பமான வேறுபாடு இருக்கிறது. மெய்நிகர் உலகம் என்பது நிஜ உலகின் இன்னொரு வடிவம் அல்லது உருவாக்கம் . அதில் பயனாளிகள் அப்படியே ஆழ்ந்து போய்விடலாம். ஏதோ ஒரு மாய உலகில் இருப்பது போன்ற தன்மையை மெய்நிகர் தன்மை அளிக்கும். ஆனால் , மேம்பட்ட யதார்த்தத்தில் இரண்டு உலகமும் சந்தித்துக்கொள்கின்றன. அல்லது பின்னிப் பினைகின்றன. அதாவது புறப்பொருள் ஒன்றின் மீது உருவங்களும் தகவல்களும் ஒன்று கலக்கின்றன. இவை அந்த பொருள் சார்ந்த கூடுதல் தகவல்களாக இருப்பதால் அவற்றின் பயன்பாட்டை ஒருபடி உயர்த்தி விடுகின்றன. மெய்நிகர் தன்மையை விட இது நிஜ உலகுடன் நெருங்கிய தொடர்பு உடையது. மெய்நிகர் தன்மையை பல நேரங்களில் நிஜ உலகிற்கு மாற்றாக அமைகிறது. மெய்நிகர் தன்மை கொண்ட வீடியோ கேம் விளையாடும் போது முற்றிலும் வேறு உலகிற்குள் போய் வரலாம். மருத்துவ உலகில் மெய்நிகர் தன்மை என்பது பயிற்சிக்கான மாற்று களமாக இருக்கலாம். விமானங்களை இயக்கும் அனுபவத்தை கூட இப்படி மாற்று உலகமாக கருதலாம். மெய்நிகர் தன்மை என்பது உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு விடுவது. ஆனால் மேம்பட்ட யதார்த்தம் என்பது நிஜ உலகுடன் இணைந்தது. நிஜ உலக பொருட்களை சார்ந்து உயிர் பெறுபவை. நிஜ உலக சூழலில் தகவல்களையும் வரை கலைகளையும் ,காட்சிகளையும் ஒன்றிணைத்து அதை மேம்படுத்தக் கூடியது.

கொஞ்சம் தாமதமாக நடைமுறை பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நுட்பம் இது என்றாலும் இதற்கான கருத்தாக்கம் பல ஆண்டுகளுக்கு முன்னரே விதைக்கப் பட்டு விட்டது. 1901 ல் எழுத்தாளரான பிரான்க் பவும் என்பவர் மனிதர்கள் மீது தகவல்களை படிய வைக்கும் மின்னணு டிஸ்பிலே பற்றி எழுதினார். அநேகமாக இது தான் சிந்தனை நோக்கிலான துவக்கப்புள்ளி என்கின்றனர்.  பின்னர், 1945 ல் வானேவர் புஷ் (Vannevar Bush. ) எழுதிய ‘நாம் யோசித்துப் பார்க்கும் போது’ (As We May Think” ) எனும் தலைப்பிலான புகழ்பெற்ற கட்டுரையில் இதற்கான கருத்து கீற்றுகளை காணலாம் என்கின்றனர். இன்றைய இணையத்துக்கான அடிப்படைக் கருத்தாக்கம் கொண்ட முன்னோடி கட்டுரை எனப் போற்றி புகழப்படும் இதில் வானேவர் புஷ் மெமெக்ஸ் எனும் சாதனம் பற்றி குறிப்பிடுகிறார். ” தனிப்பட்ட பயன்பாட்டிற்கான ஒரு எதிர்கால சாதனத்தை நினைத்துப் பாருங்கள். அது ஒரு இயந்திர மயமான கோப்பு காப்பகம் மற்றும் நூலகம். மெமெக்ஸ் என்பது தனிநபர் தனது புத்தகங்கள் , ஆவணங்கள், தகவல் தொடர்பு என எல்லாவற்றையும் சேமித்து வைத்து கொள்வது. அது இயந்திரமயமானதால் விரைவாகவும் எளிதாகவும் எப்போது வேண்டுமானாலும் அணுகக்கூடியது”.

ar5.jpg

வானேவர் 1945 ல் இப்படி கற்பனை கண்டது நேற்றைய கம்ப்யூட்டரோ இன்றைய டெப்லெட்டோ தான்.  இந்த கட்டுரையில் அவர் குறிப்பிட்ட பல தொழில்நுட்ப சித்தாந்தங்கள் தான் டிஜிட்டல் யுகக் கண்டுபடிப்புகள் மற்றும் இணையத்துக்கான அடிப்படை. இந்த தொழில்நுட்பத்தின் அடுத்ததடுத்த பாய்ச்சலாக இன்று பெளதீகப் பொருட்களுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சங்கமிக்கச் செய்யும் நிலைக்கு வந்துள்ளோம். இதனிடயே ஸ்டீப் மன் அணி கணிணி முன்னோடிகள் காமிரா பொருத்தப்பட்ட கண்ணாடிகளை அணிந்து அதன் வழியே காட்சிகள் பெற்று நவீன தொழில்நுட்பத்தை தினசரி வாழ்க்கைக்குள் கொண்டு வருவதற்கான தொலை நோக்கு பரிசோதனைகளில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப சாதனங்கள் தனித்தோ விலகியோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனும் ஸ்டீவ் மன் போன்றோரின் சிந்தனையே அணி கணிணி யுகத்திற்கான அடித்தளம். ஸ்டீவ் மண் அணிந்த கண்ணாடி காமிராவின் நவீன வடிவமே இன்றைய கூகிள் கிளாஸ். இது அணிகணிணியாக மட்டும் அல்லாமல் மேம்பட்ட யதார்த்தம் வழங்கும் சாதனமாகவும் இருக்கிறது. மேம்பட்ட யதார்த்தத்தின் இன்னொரு முக்கிய அம்சமாக சொல்லப்படுது தலையில் அணிந்த டிஸ்பிளே. அதாவது டிஜிட்டல் தகவல்களை தலையில் பொருத்திக்கொள்ளும் சாதன திரையில் பார்த்துக்கொள்ளலாம் எனும் கருத்தாக்கம். ஆக்மெனெட் நுட்பத்தின் அதிசயமாக சொல்லப்படும் நவீன ஹெல்மெட்டின் துவக்கப்புள்ளி இது தான்.

இவான் சதர்லாண்ட் (Ivan Edward Sutherland ) எனும் இணைய முன்னோடி தான் இதற்கான சிந்தனையை 1965 ல் முன்வைத்தவர். வெள்ளி முலாம் பூசிய கண்ணாடியில் புற உலகக் காட்சி ஊடே டிஜிட்டல் காட்சிகளை பார்க்கலாம் என அவர் உணர்த்தினார். ஒரு வித்ததில் ஸ்டீவ் மன்னுக்கு முன்னோடி இவர். 1990 ல் டாம் காடெல் (Tom Caudell ) எனும் போயிங் நிறுவன ஆய்வாளர் ஆக்மெண்டெட் ரியாலிட்டி எனும் பெயரை சூட்டினார். பின்னர் 1992 ல் லூயிஸ் ரோசன்பர்க் (Louis Rosenberg ) என்பவர் இந்த நுட்பத்தில் செயல்படும் முதல் சாதனத்தை உருவாக்கினார்.  1990 களிலும் 2000 களின் துவக்கத்திலும் பெரும்பாலும் ஆய்வு நிலையிலும் சோதனை முயற்சியுமாகவே நீடித்த இந்த தொழில்நுட்பம் இப்போது நடைமுறை பயன்பாட்டிற்கு வரத் துவங்கியிருக்கிறது. ஆனால் மேம்பட்ட யதார்த்த்தை உருவாக்க தேவைப்படு ம் கம்ப்யூட்டர் சாதனங்கள், காமிரா ,சென்சார்கள் ஆகியவற்றி செயல்திறன் அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செலவு குறைவு ஆகியவற்றின் காரணமாகவும் இவற்றின் தரம் மற்றும் துல்லியம் அதிகரித்திருப்பதாலும் பெளதீக பொருட்களுடன் டிஜிட்டல் பரப்பை இணைப்பது சாத்தியமாகத் துவங்கியிருக்கிறது.

மேலும் ஸ்மார்ட்போன் பரவலாக துவங்கியிருப்பது மற்றும் அவை எல்லாவற்றின் மையமாகி இருப்பது புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளன. விளைவு அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல அனுபவங்கள் புதுமையான மாற்றத்திற்கு காத்திருக்கின்றன.
சில உதாரணங்கள்;

சாலையோர விளம்பர பலகைகள், ஒளிவிளக்குகள், மாறும் காட்சிகள் என நவீனமயமாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் தெரியுமா? விளம்பர பலகை கொஞ்சம் புத்திசாலித்தனமாக மாறிவிடும். அவை வாகன்ங்கள் அல்லது மனித நடமாட்டம் இருக்கும் போது மட்டுமே வாசகங்களை மின்னச்செய்யும் .சாலை அமைதியாக இருக்கும் போது அவையும் மவுனமாக இருக்கும். அதே போல கையில் இருக்கும் செல்போனை அவற்றை நோக்கி காண்பித்தால் , தொடர்புடைய நிறுவனத்தின் இணையதளம், விக்கிபீடியா பக்கம், வீடியோ காட்சிகள் போன்றவற்றை எல்லாம் கூட திரையில் தோன்றச் செய்யும்.

ar3.jpg

இன்னொரு உதாரணம், நம் நாட்டு கலாச்சாரமான சிலைகள் சார்ந்தது. தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிலைகளை நிறுவுகிறோம். ஆனால் அவற்றை முறையாக பராமரிப்பதும் இல்லை. அதோடு இந்த சிலைகளை பார்த்து தலைவர்கள் பற்றி என்ன தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். அடிகல்லில் உள்ள சில வரிகள் தவிர ஒன்றும் அறிய முடியாது. ஆனால் இந்த சிலையின் மீதி டிஜிட்டல் தகவல்களை சங்கமிக்க செய்தால், அந்த தலைவர் பற்றி அறிய விரும்பும் எவரும் ஸ்மார்ட்போனை நீட்டினால் போதும், அவரது வாழ்க்கை வரலாறு, பேச்சுக்களின் ஆடியோ வடிவம், வீடியோ காட்சி போன்ற தகவல்களைப் பெற முடியும். அருங் காட்சியகங்களிலும் இதே போலவே பொருட்களின் பெயர் குறிப்பை மட்டும் படிக்க முடிவதற்கு பதிலாக , அந்த பொருள் கண்டெடுக்கப் பட்ட இடம் , அதன் முக்கியத்துவம் , கண்டுபிடிப்பாளரின் விளக்கம் எல்லாவற்றையும் ஸ்மார்ட்போனில் பார்க்கலாம். இல்லை கண் முன் ஒரு திரை போல தோன்றச்செய்யலாம். அந்த பொருட்கள்: அருகிலேயே வண்ண குமிழாக இந்த விவரங்கள் தோன்றலாம்.

ar6.jpg

விலங்கியல் பூங்கா செல்கிறீர்களா? அனகோண்டா பாம்பையோ , சிறுத்தைப் புலியையோ பார்க்கும் போது அருகிலேயே அவற்றின் இருப்பிடங்களில் அவை எப்படி உலாவிக் கொண்டிருக்கின்றன எனும் காட்சியை காணலாம். கூடவே விலங்கியல் நிபுணர் ஒருவர் தரும் விளக்கத்தையும் வீடியோவாக பார்க்கலாம். சிறுத்தை புலி தலைக்கு அருகே இத்தகைய டிஸ்பிலே தோன்றினால் எப்படி இருக்கும்? புறப்பொருள் மீது டிஜிட்டல் ஸ்டிக்கர் போன்ற ஒன்றை ஒட்டி அதை ஸ்கேன் செய்தால் கூடுதல் விவரங்களைத் தோன்றச் செய்யும் எளிய முறையில் துவங்கி, வீடியோ,வரைகலை, உடனடித் தகவல் ஒலிபரப்பு ஆகியவற்றை அவற்றுக்கேற்ற அமைப்பில் காணச் செய்யும் சிக்கலான முறை வரை பலவிதங்களில் மேம்பட்ட யதார்த்தம் நுட்பத்தை பயன்படுத்தலாம்.

இவை உதாரணங்கள் தான். மருத்துவம் ,கல்வி என பலதுறைகளில் இவற்றின் பயன்பாடு மகத்தானதாக இருக்கும். மேலும் பல பின்பக்கம் பார்க்க கூடிய ஹெல்மெட் உள்ளிட்ட நவீன சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தன்மை கொண்ட பிரத்யேக செயலிகளும் குவியத் துவங்கியுள்ளன. இலக்கியத்திலும் இவை வாசிப்பு அனுபவத்தை நிகழ்கலை அளவுக்கு உயர்த்திச் செல்லக் கூடியதாக இருக்கிறது. இவை தொடர்பான முயற்சிகளையும், இன்னும் வியக்க வைக்கும் பயன்பாட்டையும் தொடர்ந்து பார்ப்போம்.

- 4தமிழ்மீடியாவுக்காக  சைபர் சிம்மன்


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால தொழில்நுட்பம் 18 : ஜடப்பொருட்கள் பேசக் கேட்போம், எதிர்கால யதார்த்தம்!

MONDAY, 03 NOVEMBER 2014 18:16
 

future%2Btech%2B18.jpg

வாழ்க்கையில் அலுப்பில்லாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இப்போதுள்ள பொருட்கள் எல்லாம் மேலும் மேம்பட்டு அவற்றின் பயன்பாடு கூடினால் எப்படி இருக்கும்?

நான் உலகை பார்க்கும் விதமே முற்றிலுமாக மாறினால் எப்படி இருக்கும்? முக்கண்ணன் சிவனைப் போல மூன்றாவது கண் நமக்கு பின் தலையில் முளைத்தால் எப்படி இருக்கும்? நாம் தகவல்களை பெறும் விதமும் மாறி சிலைகளும் , சாலையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளும் நம்முடன் பேசினால் எப்படி இருக்கும்? ஞானக்கண் போல எங்கோ நடக்கும் நிகழ்வுகளை கண் முன்னே பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? 

இவை போன்ற கேள்விகளுக்கும் எல்லாம் தொழில்நுட்பம் பதிலாக அமையப்போகிறது என்று சொன்னால் எப்படி இருக்கும்? அமையப் போகிறது என்ன? இவற்றில் சில இப்போதே அமைந்து கொண்டிருக்கிறது. சந்தேகம் இருந்தால் கியூஆர் கோட் குறியீட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்து பாருங்கள் !

ar5.jpg

ஒரு சில மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பத்திரிகை விளம்பரங்களில் இத்தகைய குறியீடுகளை இடம் பெற வைக்கின்றன. அதை ஸ்மார்ட் போனால் ஸ்கேன் செய்தால் கூடுதல் தகவல்களோ அல்லது வீடியோவோ தோன்றலாம். இது ஒரு சின்ன உதாரணம் தான். இது போல இன்னும் எண்ணற்ற அற்புதங்கள், மாயங்கள் சாத்தியமாகத் துவங்கியிருக்கின்றன. இவை இப்போது, வியக்க வைக்கலாம், மலைக்க வைக்கலாம். பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம்.

ஆனால் இவை வருங்கால யதாரத்தம். வந்து விட்ட மேம்பட்ட யதார்த்தம்! அதாவது ஆக்மெண்டெட் ரியாலிட்டி (augmented reality ). பல தொழில்நுட்பங்களின் கலைவையான இந்த நுட்பம் பல வடிவம் எடுத்து அன்றாட வாழ்க்கையில் , புற உல்கை நாம் பார்க்கும் வித்தையும் எதிர்கொள்ளும் வித்ததையும் மேம்படுத்த இருக்கிறது. அடுத்த பெரிய தொழில்நுட்பம் என்று இது வர்ணிக்கப்படுகிறது. விளம்பரம் முதல் சுற்றுலா வரை, மார்க்கெட்டிங் முதல் பாதுகாப்பு போர் வரை, நுண்கலை முதல் பொழுதுபோக்கு வரை என எல்லாத் துறைகளிலும் இந்த மேம்பட்ட தன்மையை உணரலாம். காற்றில் தோன்றும் திரை முதல் ஹெல்மெட்டில் தெரியும் காட்சிகள், கண்ணாடி வழியிலான உலகம் என பலவிதங்களில் உலகுடன் தொடர்பு கொள்ளலாம். 

அணி கணிணி முன்னோடி ஸ்டீவ் மன் சொல்வது போல , ஆக்மெண்டெட் யதார்த்தம் மக்கள் மேலும் சிறப்பாக பார்க்க உதவும். இந்த மேலும் என்பது தான் இந்த நுட்பத்தின் ஆதார அம்சம். தற்போதுள்ள பொருட்களையும், சேவைகளையும் கூடுதல் அம்சங்கள் கொண்டதாக்கி யதார்த்ததை மேம்படுத்துவது இவற்றின் சிறப்பம்சம். மனித வாழ்க்கை அனுபவமே மேம்பட இருக்கிறது. ஆக்மெண்டெட் ரியாலிட்டியை வரையறுப்பதோ விளக்குவதோ சிக்கலானது என்று சொல்லும் அளவுக்கு அதன் எல்லைகளும் சாத்தியங்களும் பரந்து விரிந்தது. 

அதென்ன ஆக்மெண்டெட் ரியாலிட்டி? வர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் உலகிற்கும் இதற்கும் தொடர்பு உண்டா? இரண்டும் ஒன்றா? வேறுபட்டவையா? இவற்றுக்கும் அணி கணிகளுக்கும் என்ன தொடர்பு? இல்லை இவையும் பொருட்களை இணையத்தில் இணைத்து வலைப்பின்னலுக்குள் கொண்டு வரும் பொருட்களின் இணையமான இண்டெர்நெட் ஆப் திங்சின் அங்கமா?

ஆக்மெண்டெட் ரியாலிட்டியை புரிந்து கொள்ள முற்படும் போது இந்த கேள்விகள் எல்லாம் மனதில் அலை மோதும். இந்த மாய நுட்பத்தை புரிந்து கொள்ளவும் இந்த கேள்விகள் உதவும்.

ஆக்மெண்டெட் ரியாலிட்டியை நிஜ உலகும் மெய்நிகர் உலகும் சங்கமிக்கும் கலவை எனலாம். பொதுவாக புற உலகில் உள்ள பெளதீகப் பொருட்கள் மீது கம்ப்யூட்டரால் உருவாக்கப் பட்ட உருவத்தை பரவச் செய்வது என்பதே இதன் அடிப்படையாக இருக்கிறது. இப்படித் தகவல்கள், ஆடியோ,வீடியோ, வரைபடம், காட்சிகள் என பலவற்றை பொருட்கள் மீது படர அல்லது பரவச் செய்யலாம். இதன் மூலம் அந்த பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கச்செய்து நம்முடைய புரிதல் அனுபவத்தையும் செழுமையாக்குவதால் இந்த நுட்பம் ஆக்மெண்டெட் ரியாலிட்டி என்று அழைக்கப்படுகிறது.

ar2.jpg

தமிழில் மேம்பட்ட யதார்த்தம் என்று பொருள் கொள்ளலாம். ஒருவிதத்தில் மெய்நிகர் தன்மை என்று சொல்லப்படும் வர்ச்சுவல் ரியாலிட்டியுடன் இது தொடர்புடையது. இரண்டுமே கம்ப்யூட்டர் கொண்டு உருவாக்கப்படும் இரண்டாம் அல்லது இன்னொரு யதார்த்தம் தான். ஆனால் இரண்டுக்கும் நுட்பமான வேறுபாடு இருக்கிறது. மெய்நிகர் உலகம் என்பது நிஜ உலகின் இன்னொரு வடிவம் அல்லது உருவாக்கம் . அதில் பயனாளிகள் அப்படியே ஆழ்ந்து போய்விடலாம். ஏதோ ஒரு மாய உலகில் இருப்பது போன்ற தன்மையை மெய்நிகர் தன்மை அளிக்கும். ஆனால் , மேம்பட்ட யதார்த்தத்தில் இரண்டு உலகமும் சந்தித்துக்கொள்கின்றன. அல்லது பின்னிப் பினைகின்றன. அதாவது புறப்பொருள் ஒன்றின் மீது உருவங்களும் தகவல்களும் ஒன்று கலக்கின்றன. இவை அந்த பொருள் சார்ந்த கூடுதல் தகவல்களாக இருப்பதால் அவற்றின் பயன்பாட்டை ஒருபடி உயர்த்தி விடுகின்றன. மெய்நிகர் தன்மையை விட இது நிஜ உலகுடன் நெருங்கிய தொடர்பு உடையது. மெய்நிகர் தன்மையை பல நேரங்களில் நிஜ உலகிற்கு மாற்றாக அமைகிறது. மெய்நிகர் தன்மை கொண்ட வீடியோ கேம் விளையாடும் போது முற்றிலும் வேறு உலகிற்குள் போய் வரலாம். மருத்துவ உலகில் மெய்நிகர் தன்மை என்பது பயிற்சிக்கான மாற்று களமாக இருக்கலாம். விமானங்களை இயக்கும் அனுபவத்தை கூட இப்படி மாற்று உலகமாக கருதலாம். மெய்நிகர் தன்மை என்பது உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு விடுவது. ஆனால் மேம்பட்ட யதார்த்தம் என்பது நிஜ உலகுடன் இணைந்தது. நிஜ உலக பொருட்களை சார்ந்து உயிர் பெறுபவை. நிஜ உலக சூழலில் தகவல்களையும் வரை கலைகளையும் ,காட்சிகளையும் ஒன்றிணைத்து அதை மேம்படுத்தக் கூடியது.

கொஞ்சம் தாமதமாக நடைமுறை பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நுட்பம் இது என்றாலும் இதற்கான கருத்தாக்கம் பல ஆண்டுகளுக்கு முன்னரே விதைக்கப் பட்டு விட்டது. 1901 ல் எழுத்தாளரான பிரான்க் பவும் என்பவர் மனிதர்கள் மீது தகவல்களை படிய வைக்கும் மின்னணு டிஸ்பிலே பற்றி எழுதினார். அநேகமாக இது தான் சிந்தனை நோக்கிலான துவக்கப்புள்ளி என்கின்றனர்.  பின்னர், 1945 ல் வானேவர் புஷ் (Vannevar Bush. ) எழுதிய ‘நாம் யோசித்துப் பார்க்கும் போது’ (As We May Think” ) எனும் தலைப்பிலான புகழ்பெற்ற கட்டுரையில் இதற்கான கருத்து கீற்றுகளை காணலாம் என்கின்றனர். இன்றைய இணையத்துக்கான அடிப்படைக் கருத்தாக்கம் கொண்ட முன்னோடி கட்டுரை எனப் போற்றி புகழப்படும் இதில் வானேவர் புஷ் மெமெக்ஸ் எனும் சாதனம் பற்றி குறிப்பிடுகிறார். ” தனிப்பட்ட பயன்பாட்டிற்கான ஒரு எதிர்கால சாதனத்தை நினைத்துப் பாருங்கள். அது ஒரு இயந்திர மயமான கோப்பு காப்பகம் மற்றும் நூலகம். மெமெக்ஸ் என்பது தனிநபர் தனது புத்தகங்கள் , ஆவணங்கள், தகவல் தொடர்பு என எல்லாவற்றையும் சேமித்து வைத்து கொள்வது. அது இயந்திரமயமானதால் விரைவாகவும் எளிதாகவும் எப்போது வேண்டுமானாலும் அணுகக்கூடியது”.

ar5.jpg

வானேவர் 1945 ல் இப்படி கற்பனை கண்டது நேற்றைய கம்ப்யூட்டரோ இன்றைய டெப்லெட்டோ தான்.  இந்த கட்டுரையில் அவர் குறிப்பிட்ட பல தொழில்நுட்ப சித்தாந்தங்கள் தான் டிஜிட்டல் யுகக் கண்டுபடிப்புகள் மற்றும் இணையத்துக்கான அடிப்படை. இந்த தொழில்நுட்பத்தின் அடுத்ததடுத்த பாய்ச்சலாக இன்று பெளதீகப் பொருட்களுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சங்கமிக்கச் செய்யும் நிலைக்கு வந்துள்ளோம். இதனிடயே ஸ்டீப் மன் அணி கணிணி முன்னோடிகள் காமிரா பொருத்தப்பட்ட கண்ணாடிகளை அணிந்து அதன் வழியே காட்சிகள் பெற்று நவீன தொழில்நுட்பத்தை தினசரி வாழ்க்கைக்குள் கொண்டு வருவதற்கான தொலை நோக்கு பரிசோதனைகளில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப சாதனங்கள் தனித்தோ விலகியோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனும் ஸ்டீவ் மன் போன்றோரின் சிந்தனையே அணி கணிணி யுகத்திற்கான அடித்தளம். ஸ்டீவ் மண் அணிந்த கண்ணாடி காமிராவின் நவீன வடிவமே இன்றைய கூகிள் கிளாஸ். இது அணிகணிணியாக மட்டும் அல்லாமல் மேம்பட்ட யதார்த்தம் வழங்கும் சாதனமாகவும் இருக்கிறது. மேம்பட்ட யதார்த்தத்தின் இன்னொரு முக்கிய அம்சமாக சொல்லப்படுது தலையில் அணிந்த டிஸ்பிளே. அதாவது டிஜிட்டல் தகவல்களை தலையில் பொருத்திக்கொள்ளும் சாதன திரையில் பார்த்துக்கொள்ளலாம் எனும் கருத்தாக்கம். ஆக்மெனெட் நுட்பத்தின் அதிசயமாக சொல்லப்படும் நவீன ஹெல்மெட்டின் துவக்கப்புள்ளி இது தான்.

இவான் சதர்லாண்ட் (Ivan Edward Sutherland ) எனும் இணைய முன்னோடி தான் இதற்கான சிந்தனையை 1965 ல் முன்வைத்தவர். வெள்ளி முலாம் பூசிய கண்ணாடியில் புற உலகக் காட்சி ஊடே டிஜிட்டல் காட்சிகளை பார்க்கலாம் என அவர் உணர்த்தினார். ஒரு வித்ததில் ஸ்டீவ் மன்னுக்கு முன்னோடி இவர். 1990 ல் டாம் காடெல் (Tom Caudell ) எனும் போயிங் நிறுவன ஆய்வாளர் ஆக்மெண்டெட் ரியாலிட்டி எனும் பெயரை சூட்டினார். பின்னர் 1992 ல் லூயிஸ் ரோசன்பர்க் (Louis Rosenberg ) என்பவர் இந்த நுட்பத்தில் செயல்படும் முதல் சாதனத்தை உருவாக்கினார்.  1990 களிலும் 2000 களின் துவக்கத்திலும் பெரும்பாலும் ஆய்வு நிலையிலும் சோதனை முயற்சியுமாகவே நீடித்த இந்த தொழில்நுட்பம் இப்போது நடைமுறை பயன்பாட்டிற்கு வரத் துவங்கியிருக்கிறது. ஆனால் மேம்பட்ட யதார்த்த்தை உருவாக்க தேவைப்படு ம் கம்ப்யூட்டர் சாதனங்கள், காமிரா ,சென்சார்கள் ஆகியவற்றி செயல்திறன் அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செலவு குறைவு ஆகியவற்றின் காரணமாகவும் இவற்றின் தரம் மற்றும் துல்லியம் அதிகரித்திருப்பதாலும் பெளதீக பொருட்களுடன் டிஜிட்டல் பரப்பை இணைப்பது சாத்தியமாகத் துவங்கியிருக்கிறது.

மேலும் ஸ்மார்ட்போன் பரவலாக துவங்கியிருப்பது மற்றும் அவை எல்லாவற்றின் மையமாகி இருப்பது புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளன. விளைவு அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல அனுபவங்கள் புதுமையான மாற்றத்திற்கு காத்திருக்கின்றன.

சில உதாரணங்கள்;

சாலையோர விளம்பர பலகைகள், ஒளிவிளக்குகள், மாறும் காட்சிகள் என நவீனமயமாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் தெரியுமா? விளம்பர பலகை கொஞ்சம் புத்திசாலித்தனமாக மாறிவிடும். அவை வாகன்ங்கள் அல்லது மனித நடமாட்டம் இருக்கும் போது மட்டுமே வாசகங்களை மின்னச்செய்யும் .சாலை அமைதியாக இருக்கும் போது அவையும் மவுனமாக இருக்கும். அதே போல கையில் இருக்கும் செல்போனை அவற்றை நோக்கி காண்பித்தால் , தொடர்புடைய நிறுவனத்தின் இணையதளம், விக்கிபீடியா பக்கம், வீடியோ காட்சிகள் போன்றவற்றை எல்லாம் கூட திரையில் தோன்றச் செய்யும்.

ar3.jpg

இன்னொரு உதாரணம், நம் நாட்டு கலாச்சாரமான சிலைகள் சார்ந்தது. தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிலைகளை நிறுவுகிறோம். ஆனால் அவற்றை முறையாக பராமரிப்பதும் இல்லை. அதோடு இந்த சிலைகளை பார்த்து தலைவர்கள் பற்றி என்ன தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். அடிகல்லில் உள்ள சில வரிகள் தவிர ஒன்றும் அறிய முடியாது. ஆனால் இந்த சிலையின் மீதி டிஜிட்டல் தகவல்களை சங்கமிக்க செய்தால், அந்த தலைவர் பற்றி அறிய விரும்பும் எவரும் ஸ்மார்ட்போனை நீட்டினால் போதும், அவரது வாழ்க்கை வரலாறு, பேச்சுக்களின் ஆடியோ வடிவம், வீடியோ காட்சி போன்ற தகவல்களைப் பெற முடியும். அருங் காட்சியகங்களிலும் இதே போலவே பொருட்களின் பெயர் குறிப்பை மட்டும் படிக்க முடிவதற்கு பதிலாக , அந்த பொருள் கண்டெடுக்கப் பட்ட இடம் , அதன் முக்கியத்துவம் , கண்டுபிடிப்பாளரின் விளக்கம் எல்லாவற்றையும் ஸ்மார்ட்போனில் பார்க்கலாம். இல்லை கண் முன் ஒரு திரை போல தோன்றச்செய்யலாம். அந்த பொருட்கள்: அருகிலேயே வண்ண குமிழாக இந்த விவரங்கள் தோன்றலாம்.

ar6.jpg

விலங்கியல் பூங்கா செல்கிறீர்களா? அனகோண்டா பாம்பையோ , சிறுத்தைப் புலியையோ பார்க்கும் போது அருகிலேயே அவற்றின் இருப்பிடங்களில் அவை எப்படி உலாவிக் கொண்டிருக்கின்றன எனும் காட்சியை காணலாம். கூடவே விலங்கியல் நிபுணர் ஒருவர் தரும் விளக்கத்தையும் வீடியோவாக பார்க்கலாம். சிறுத்தை புலி தலைக்கு அருகே இத்தகைய டிஸ்பிலே தோன்றினால் எப்படி இருக்கும்? புறப்பொருள் மீது டிஜிட்டல் ஸ்டிக்கர் போன்ற ஒன்றை ஒட்டி அதை ஸ்கேன் செய்தால் கூடுதல் விவரங்களைத் தோன்றச் செய்யும் எளிய முறையில் துவங்கி, வீடியோ,வரைகலை, உடனடித் தகவல் ஒலிபரப்பு ஆகியவற்றை அவற்றுக்கேற்ற அமைப்பில் காணச் செய்யும் சிக்கலான முறை வரை பலவிதங்களில் மேம்பட்ட யதார்த்தம் நுட்பத்தை பயன்படுத்தலாம்.

இவை உதாரணங்கள் தான். மருத்துவம் ,கல்வி என பலதுறைகளில் இவற்றின் பயன்பாடு மகத்தானதாக இருக்கும். மேலும் பல பின்பக்கம் பார்க்க கூடிய ஹெல்மெட் உள்ளிட்ட நவீன சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தன்மை கொண்ட பிரத்யேக செயலிகளும் குவியத் துவங்கியுள்ளன. இலக்கியத்திலும் இவை வாசிப்பு அனுபவத்தை நிகழ்கலை அளவுக்கு உயர்த்திச் செல்லக் கூடியதாக இருக்கிறது. இவை தொடர்பான முயற்சிகளையும், இன்னும் வியக்க வைக்கும் பயன்பாட்டையும் தொடர்ந்து பார்ப்போம்.

- 4தமிழ்மீடியாவுக்காக  சைபர் சிம்மன்

 

வருங்கால தொழில்நுட்பம் 19 : பேசும் சிலைகளும், எதிர்கால யதார்த்தமும்!

TUESDAY, 11 NOVEMBER 2014 18:16
 

a2.jpg

( உங்கள் கண் முன் குமிழ்கள் மிதப்பதையும் அதில் தெருவில் நீங்கள் பார்க்கும் பொருட்கள் பற்றிய பயனுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் நிறைந்திருப்பதையும் கற்பனை செய்து பாருங்கள். இது அறிவியல் புனைகதை என்று நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. இது தான் மேம் படுத்தப்பட்ட யதார்த்தம். ஒரு நாள் இது இணையத்தில் உலாவுவது போல வழக்கமானதாகலாம் - மேம்படுத்தப்பட்ட யதார்த்தம் பற்றிய நேஷனல் ஜியாக்ரபிக் கட்டுரையின் அறிமுகம்)

வெற்றிலையில் மை போட்டுப் பார்க்கும் மாயா ஜால கதைக் கற்பனைக்கு பின்னே தொழில்நுட்ப தீர்க்க தரிசனம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் வெற்றிலையை ஒரு பரப்பாக கொண்டு அதன் மீது எங்கோ நடக்கும் காட்சிகளை டிஜிட்டல் தகவலாக இடம் பெற வைத்தால் அது தான் தொழில்நுட்ப உலகில் ஆக்மெண்டட் ரியாலிட்டி எனப் பிரபலமாக குறிப்பிடப்படும் மேம்பட்ட யதார்த்தம்.

அதே போல ஒரு காலத்தில் அருங்காட்சியகத்தை செத்த காலேஜ் என்று கொச்சையாக குறிப்பிடும் கிராமத்து மக்களின் வழக்கத்தையும் இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கலாம். ஏனெனில் ஒரு விதத்தில் அவர்களின் வர்ணனை சரி தான். அருங்காட்சியகத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாம் அசையா பொருட்கள் தானே. அவை உயிரற்று மட்டுமா இருக்கின்றன!. அலுப்பூட்டவும் அல்லவா செய்கின்றன? ஆனால் அருங்காட்சியப் பொருட்களைப் பேசவும், பார்வையாளர்களோடு தொடர்பு கொள்ளவும் வைத்தால் எப்படி இருக்கும்? இந்த சாத்தியமும் மேம்பட்ட யதார்த்தம் கீழ் தான் வருகிறது.

மேம்பட்ட யதார்த்தம் என்றால் தினசரி பார்க்கும் பொருட்களையும், காட்சிகளையும் மேலும் செறிவூட்டுவது. இதற்கு தொழிநுட்பம் கைகொடுக்கிறது. டிஜிட்டல் தகவல்களையும் காட்சிகளையும் எந்த பொருளின் மீதும் படரச் செய்வதற்கான வாய்ப்பு பொருட்கள் தொடர்புடைய விவரங்களோடு டிஜிட்டல் அவதாரம் எடுக்க வைக்கிறது.

ஆய்வு நோக்கிலான இந்த தொழில்நுட்பத்தை வர்த்தக நிறுவனங்கள் புதுமையான சேவைகள் மூலம் நடைமுறைக்கு கொண்டுவரத் துவங்கியுள்ளன. இதற்கு பல துறைகளில் எண்ணற்ற உதாரணங்கள் இருந்தாலும், ஹெல்மெட்டில் இருந்து துவங்குவது பொருத்தமாகவும் இருக்கும், அதைவிட சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஹெல்மெட் என்பது அடிப்படையில் தலைக் கவசம் தான். அது அந்த காலத்திலும் இருந்தது. போர் முனையில் வீரர்கள் எதிரிகளின் அம்பு மற்றும் ஈட்டிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இரும்பால் ஆன தலைக் கவசம் அணிந்தனர். பின்னர் குதிரைகளுக்கு பதில் இயந்திர வாகனங்கள் வந்த பிறகு பைக் ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வடிவில் தலைகவசம் தேவைப்படுகிறது. தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் தேவைப்படுகிறது. ஹெல்மெட்டின் பணி பாதுக்காப்பு அளிப்பது தான் என்றாலும் கூட அந்த ஒற்றைப் பயனைத்தவிர அது பெரிய அளவில் மேம்படாமல் இருக்கிறது. சுரங்கங்களில் பணி புரிபவர்களுக்கு ஹெல்மெட்டிலேயே ஒளிவிளக்கும் பொருத்தப்பட்டிருப்பது கூட ஒரு மேம்பாடு தான். ஆனால் வருங்கால ஹெல்மெட்கள் நேவிகேஷன் தன்மையோடு முழு வழிகாட்டும் திறனோடு முற்றிலும் நவீன வசதிகளுடன் வியக்க வைக்க கூடியவையாக இருக்கும்: இதற்கான நடைமுறை உதாரணம் ஸ்கெல்லி ஹெல்மெட்.

a6.jpg

இப்போது வரும் கார்களில் எல்லாம் பெரும்பாலும் வரைபடம் மூலம் வழிகாட்டும் வசதி இருக்கிறது. ஸ்கெல்லி இந்த வசதியை பைக் ஓட்டிகளுக்கும் கொண்டு வந்திருக்கிறது. ஸகெல்லி ஹெல்மெட்டில் இருக்கும் கண்ணாடி வழியே முன்னால் உள்ள சாலையையும் பார்க்கலாம். அப்படியே வலது பக்கத்தில் சின்னதாக வரை படத்தையும் பார்க்கலாம். அடுத்ததாக வலது பக்கம் திரும்ப வேண்டுமா? அல்லது இன்னும் சற்றுத் தொலைவு நேராக சென்று இடப் பக்கமாக திரும்ப வேண்டுமா? என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ஆபத்தான வளைவுகள் முன்னால் இருந்தால் அது பற்றிய எச்சரிக்கையையும் வரைபடத்திலேயே பார்த்து விடலாம். ஆக, சாலையில் ஒரு கண் வைத்துக் கொண்டே வரைபடத்தில் வழியையும் பார்த்துக் கொள்ளலாம். வானிலை விவரங்களையும் கூட இந்த குட்டித் திரையிலேயே தெரிந்து கொள்ளலாம். கண்ணைக் கூச வைக்கும் சூரிய வெளிச்சத்திலும் சரி, கண்ணை மறைக்கக் கூடிய பனி மூட்டத்திலும் சரி சாலையை தெளிவாக பார்க்கலாம். புளுடூத் வசதி கொண்டது என்பதால் அப்படியே பாட்டு கேட்கலாம், ஸ்மார்ட் போனில் வரும் அழைப்புகளுக்குப் பதில் சொல்லலாம். அது மட்டுமா? ஸ்கெல்லி ( Skully ) மூலம் பின்பக்கமும் பார்க்கலாம். ஸ்கெல்லி நடுவே உள்ள காமிரா 180 டிகிரி கோணத்தில் காட்சிகளை படம் பிடித்து ஓட வைக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் சாலையின் முன் பக்கத்தில் வைத்த கண்களை விலக்கமாலே பின்னால் உள்ள காட்சியை கச்சிதமாகக் காண முடியும். இவற்றோடு இணைய இணைப்பும் இருப்பதை சொல்லவே வேண்டாம். 

சாலையில் பார்க்க கூடிய காட்சிகளையும் தகவல்களையும் ஹெல்மெட் திரை மீது பார்க்கக் கூடிய இந்த வசதி மேம் படுத்தப் பட்ட யதார்த்ததிற்கு அழகான உதாரணம். இந்த வகை ஹெல்மெட்களால் பின்பக்கம் பார்க்கும் கண்ணாடிகளுக்கு வேலை இல்லை என்பதோடு பைக் ஓட்டும் அனுபவம் இன்னும் கூட சுகமானதாகும் என்கின்றனர்.

a7.jpg

ஸ்கெல்லி தற்போது முன்னோட்ட வடிவில் இருக்கிறது. விரைவில் விற்பனைக்கு வருகிறது. ஹெல்மெட் வழியே பார்ப்பதும் பாட்டு கேட்பதும் , கவனச் சிதறலுக்கு வழி வகுக்கும் என்று தோன்றினாலும், சரியான வழிகாட்டல் மற்றும் அபாய இடங்கள் பற்றிய எச்சரிக்கை மூலம் விபத்து ஏற்படும் சூழலை குறைக்கும் என்கின்றனர். ஸ்கெல்லியின் நிறுவனரான மார்கஸ் வெல்லர் (Marcus Weller), வாகனங்களுடன் வாகனங்கள் தொடர்பு கொள்ளும் (vehicle-to-vehicle (V2V) ) தொழில்நுட்பம் மூலம் கார்கள் பைக்கள் இருப்பு பற்றி அறிந்து கொண்டு தானாக விலகிச் செல்லும் என்கிறார்.

a5.jpg

இதே போல அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த டாக்ரி (http://daqri.com/) நிறுவனம் தொழிற்சாலை பயன் பாட்டிற்கான ஸ்மார்ட் ஹெல்மெட்டை உருவாக்கி இருக்கிறது. பார்பதற்கு நவீன தொப்பி போல இருக்கும் இதில் விஷேச லென்ஸ்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்த லென்ஸ்கள் காமிராவாக செயல்பட்டு சுற்றுப்புற காட்சிகளை படம்பிடித்து கண் முன்னால் காட்சிப் படுத்தக் கூடியது. இதில் உள்ள சென்சார்கள் ஆலைகளில் உள்ள பல வகையான மீட்டர்களில் பதிவாகும் விவரங்களை கண்காணித்து அவற்றில் பொருத்தமானதை கண்ணாடி மீது காட்ட வல்லது. இவற்றின் பயன்பாடு வியக்க வைக்கும். உதாரணத்திற்கு கட்டடத்தின் வரைபடத்தை ஓர் கண்ணால் பார்த்தபடி, அதில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிடலாம். ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தாலும் கச்சிதமாக கண்டறிந்து சரியான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

வரைபடம் போன்றவற்றை கையில் விரித்து வைத்துக்கொண்டு கட்டிட பணிகளை திட்டமிடுவதை விட , ஹெல்மெட்டில் ஓரு ஓரத்தில் வரைபட விவரம் இருக்க, அதை பார்த்தபடியே கட்டிடத்தின் மீது கவனத்தை செலுத்தும் போது வேலை இருமடங்கு வேகத்தில் நடக்கும். கையில் லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் சுமை கூட இல்லை. ஹெல்மெட்டே வழிகாட்டும். இன்னொரு அழகான உதாரணம் , நுட்பமான இயந்திரங்கள் கொண்ட ஆலையில் , ஏதேனும் பழுது ஏற்பட்டால் அந்த இயந்திரத்தை சரி செய்ய முற்படும் போது அதன் விளக்க குறிப்புகளையும் ஹெல்மெட் திரையில் பார்த்து கொண்டே செயல்படலாம். அதில் இருக்கும் ஸ்குருவை இடப்பக்கமா அல்லது வலப்பக்கமா? எந்த பக்கம் திரும்புவது என்பதை கூட திரையில் அம்புகுறி மூலம் காட்டப்படுவதை பார்க்கலாம்.

ஹெல்மெட்டில் முகத்தின் முன் கவிழக்கூடிய கண்ணாடியை டிஜிட்டல் தகவல்களுக்கான பரப்பாக்கி அவற்றின் செயல்பாட்டு தன்மையையும் அதிகரிக்கலாம், பயன்பாட்டையும் அதிகரிக்கலாம். ஆக்மெண்டெட் ரியாலிட்டிக்கான பிரபலமான உதாரணமாக சொல்லப்படும் கூகிள் கிளாஸ் கேட்ஜெட் எனப்படும் தொழில்நுட்ப சாதனங்களின் கீழ் வந்து விடுவதால் அதன் நவீன தன்மை அத்தனை வியக்க வைப்பதில்லை. ஆனால் இத்தகைய ஹெல்மெட்கள் வியக்க மட்டும் அல்ல நம்ப முடியாத உணர்வையும் அளிக்கலாம். ஆனால் இந்த மேம்பாடு என்பது ஒரு விதத்தில் மிகவும் இயல்பான வளர்ச்சி தான். பொருட்களின் மீது விலையை குறிப்பதற்கான சின்ன காகித வில்லையை ஒட்டுவதை எடுத்துக் கொள்வோம். பார்கோடு தொழில்நுட்பம் வெறும் காகித லேபிளை கம்ப்யூட்டரோடு பேசும் தன்மை பெற வைத்து, விலை போடுவதையும், இருப்பு மேலாண்மையையும் எளிதாக்கியது. இதன் அடுத்த கட்டமாக , பெயர் வில்லைகள் கியூஆர் கோட் அடையாளத்துடன் உருவாக்கப் படுகின்றன. இந்த குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் அவை தொடர்பான இணையதள விவரங்களையும் வீடியோக்களயும் ஓட விடக் கூடியதாக இருக்கிறது. நாளிதழ், பத்திரிகை கட்டுரைகளிலும் விளம்பரங்களிலும் இந்த வசதி கூடுதல் தகவல்களை அளிக்கின்றன.

நாளிதழ் விளம்பரத்தை ஸ்கேன் செய்தால் அதற்காக என்று உருவாக்கப் பட்டுள்ள செயலியில், தொடர்புடைய வீடியோ காட்சியையும் பார்க்கலாம். இதே நுட்பம் மூலம் சாலையோர விளம்பர பலகைகளையும் சிலைகளையும் பேச வைக்க முடியும்.

a1.jpg

விளம்பரங்கள் நோக்கி ஸ்மார்ட் போனை காட்டினால் போதும் , அந்த விளம்பரத்தில் உள்ள நிறுவன ஷோரூமை பார்க்கலாம். அதில் இடம்பெறும் நடிகை அல்லது மாடல் அழகியின் பிரத்யேக வீடியோ செய்தியை கேட்கலாம். அவருடன் கலந்துரையாடலாம். தலைவர்களின் சிலைக்காக என்று உருவாக்கப்பட்ட செயலி மூலம் அவரது புகழ்பெற்ற உரைகளின் ஆடியோ வீடியோ வடிவை அணுகலாம். தமிழகத்தில் குமரி முனையில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையை இந்த வசதி கொண்டு மேம்படுத்தினால், வள்ளுவர் சிலையை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவரது கையில் உள்ள ஓலைச்சுவடியில் 1330 குறட்பாக்களையும் லேசர் எழுத்து வடிவில் பார்க்கலாம். படிக்கலாம். அப்படியே வள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றுக்கான விக்கிபீடியா பக்கத்தையும் பார்க்கலாம். நினைவுச் சின்னமாக நிற்கும் தலைவர்களின் சிலைகளுக்கு டிஜிட்டல் முறையில் உயிர் கொடுத்து அவர்கள் நினைவுகளை இன்னும் சிறப்பாக போற்றலாம்.

அந்த காலத்து காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் அருங்காட்சியகத்திலும் அதன் அருகே இடம் பெற்றிருக்கும் பெயர் குறிப்பை தாண்டி அவை பற்றிய அரிய தகவல்களை ஹெட்போனில் ஆடியோ வடிவிலோ அல்லது கூகிள் கிளாஸ் போன்றவற்றின் திரையில் காட்சி வடிவிலோ காணலாம். அருங் காட்சியகத்தில் இருக்கும் பொருட்கள் இனியும் ஜடப் பொருளாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை. அவை டிஜிட்டல் வடிவில் இயக்கம் பெறும். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் அருங் காட்சியகங்கள் சார்ந்த செயலிகளை உருவாக்கி அவற்றை வலம் வருவதையே ஒரு செறிவான அனுபவமாக்கி உள்ளனர். அருங்காட்சிய மேஜையில் கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் வரலாற்றுப்பொருளை பார்க்கும் போதே ,அதன் காலம், கண்டெக்கப்பட்ட விதம், அதன் முக்கியத்துவம் , பண்பாட்டு சிறப்பு உள்ளிட்ட விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ளலாம். பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் சிறுவர்களுக்கு அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்ப்பதில் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இந்த அனுபவத்தை செயலி வடிவில் ஒரு விளையாட்டாக உருவாக்கியுள்ளனர். சிறுவர்கள் கேமை ஆடியபடி முன்னேறிச் சென்று அதற்கான பரிசாக அருங்காட்சியக பொருட்களின் வரலாற்றை விளையாட்டு போலவே அறிந்து கொண்டு விடலாம்.

a3.jpg

இந்த நுட்பம் மூலம் கட்டிடங்களும் பேசும். ஆம், ஒரு ரெஸ்டாரண்டின் முன் நின்றிருக்கும் போது அதை நோக்கி ஸ்மார்ட் போனை காண்பித்தால் அதன் உணவு மெனுவை அப்படியே திரையில் பார்க்கலாம். அந்த ரெஸ்டாரண்டின் இணைய முகவரியை டைப் செய்து பின்னர் அதில் உணவு பகுதியை தேடி கிளிக் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் , நமக்கு விருப்பம் தோன்றியதுமே அதற்கான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.  காமிரா, புரஜெக்டர்கள் போன்ற சாதனங்கள் மூலம் புளுடூத் அல்லது இணையம் மூலம் திரட்டப்பட்ட தகவல்களையும் காட்சி விளக்கத்தையும் எந்த ஒரு பொருளின் மீதும் படரச்செய்யும் திறனால் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இன்னும் எல்லையற்றதாக இருக்கின்றன.

ஏற்கனவே விளம்பரம் மற்றும் மார்கெட்டிங்கில் இவை பயன்பாட்டிற்கு வந்து விட்டன. பிரபல பர்னீச்சர் தயாரிப்பு நிறுவனமான ஐகியா உருவாக்கியுள்ள மேம் படுத்தப் பட்ட யதார்த்தம் கொண்ட பொருட்களின் காட்சி அட்டவணை மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்வு செய்ய உள்ள பர்னீச்சர், வீட்டில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் எப்படி காட்சி அளிக்கும் என்பதை அந்த சூழலில் பொருத்திப் பார்க்கும் வசதியை அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு அறையை ஸ்மார்ட் போனில் படம் பிடித்துக்கொண்டு நிறுவன அட்டவணையை ஸ்கேன் செய்வதன் மூலம் தேர்வு செய்யும் பரினிச்சரை அந்த அறையில் பொருத்திப் பார்க்கலாம். இதே முறையில் ரியல் எஸ்டேட் துறைக்கான செயலிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மூக்கு கண்ணாடி வாங்கும் போது, ஒருவர் தனது முகத்தை வெப்கேமில் படம்பிடித்து அதன் மீது ஒவ்வொரு மூக்கு கண்ணாடியாக பொருத்தி எது கச்சிதமாக இருக்கிறது என பார்க்கலாம்.

மருத்துவ துறையில், போர்க்களத்தில் என பல்வேறு துறைகளில் இது போன்ற பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அறுவைச் சிகிச்சைக்கு தயாராகும் நோயாளி தனது உடலில் மேற்கொள்ளப்பட இருக்கும் சிகிச்சைக்கான பாதை மற்றும் விவரங்களை சிமுலேஷன் மூலம் தெரிந்து கொண்டு, தேவையில்லாத பயத்தில் இருந்து விடுபடலாம். போர்க்களத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வரைபடத்தின் மீது பொருத்தி எதிரியின் நடமாட்டத்தை துல்லியமாக கணித்து செயல்படலாம். மேம்பட்ட யதார்த்தத்தின் சாத்தியங்கள் பற்றி விவாதிக்க அமெரிக்காவில் கடந்த ஆண்டு தொழில் நுட்ப மாநாடு நடைபெற்றது.

இதில் ஸ்டீவ் மன் உள்ளிட்ட வல்லுனர்கள் இந்த துறையின் போக்கு மற்றும் வாய்ப்புகள் குறித்து பேசினர். அடுத்த சில ஆண்டுகளில் திரைப்பட காட்சி தரத்திலான பிம்பங்களை நிஜ உலகப் பொருட்கள் மீது நிழலாகப் படர வைக்க முடியும். அப்போது அந்த பிம்பத்தை விலக்கி விட்டு உண்மையில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கும் நிலை வரலாம் என்கிறார்.

மற்றொரு வல்லுனரான வில் ரைட் (பிரபலமான சிம்ஸ் வீடியோ கேமை உருவாக்கியவர்) இந்த தொழில்நுப்டம் யதார்த்தத்தை மேம்படுத்துவது மட்டும் அல்ல, அதை மேலும் சீராக்கி தகவல்களையும் விவரங்களையும் வடிகட்டித்தரும் என்கிறார். இந்திய அமெரிக்கரான பிரனவ் மிஸ்ட்ரி, டிஜிட்டல் தகவல்களை நிஜ உலகுடன் ஒருங்கிணைப்பது பற்றி சிக்ஸ்த் சென்ஸ் எனும் பரிசோதனை திட்டம் மூலம் உணர்த்தியிருக்கிறார். சின்ன காமிரா, புரஜெக்டர் மற்றும் ஸ்மார்ட் போன் உதவியோடு எந்த ஒரு பரப்பையும் டிஜிட்டல் டச் ஸ்கிரினாக்கி அதனுடன் தொடர்பு கொள்ளலாம் என்கிறார். உள்ளங்கையே கூட இத்தகைய டச் ஸ்கிரினாக்க முடியும் என்பது அவரது கருத்து.

a4.jpg

இது வரை ஐம்புலன்களால் உலகில் உள்ள பொருட்களுடன் உறவு கொள்கிறோம் ஆனால் முக்கிய முடிவுகளை எடுக்க இவை மட்டும் போதாது, ஆறாவது உணர்வு தேவை என்கிறார் மிஸ்ட்ரி. ஆறாவது உணர்வு என்று மிஸ்ட்ரி சொல்வது தரவுகளை.! நிஜ உலக பொருட்களுடன் தரவுகள் மற்றும் தகவல்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆறாவது உண்ரவோடு செயல்படலாம் என்கிறார் மிஸ்ட்ரி. ஜடப் பொருட்கள் டிஜிட்டல் உலகின் தன்மையை பெற்று பேசத் துவங்கும் போது ஆறாம் அறிவும் சாத்தியம் தான் என்கிறது தொழில்நுட்பம்.

- 4தமிழ்மீடியாவுக்காக  சைபர் சிம்மன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.