Jump to content

ஏழைச்சிறுமி மீதான துஸ்பிரயோகத்தை, பணம், சட்டம், நீதி பொலிஸ் மீண்டும் ஒருமுறை துஸ்பிரயோகம் செய்தன:-


Recommended Posts

வட்டுக் கோட்டைத் தேர்தல் தொகுதியில் ஓர் கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். 23வயதான உ...ர் என்ற இளைஞர் ஒருவர் இந்தச் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியபோது 16 வயதிற்கு உட்பட்ட சிறுமியாக இருந்திருக்கிறார். இப்போ 16 வயதும் சில மாதங்களும் கடந்திருக்கிறன.

குறித்த இளைஞருக்கும் இந்தச் சிறுமிக்கும் ஏற்பட்ட பழக்கம் நெருங்கிய காதல் அகியது. காதலை சாதகமாகக் கொண்டு பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம் உள் நுழைந்த இளைஞர் சிறுமியை தன்வயப்படுத்தியுள்ளார். 'உன்னை நான் தான் திருமணம் செய்யப் போகிறேன் அதனால் எனது விருப்பத்திற்கு உடன்பட வேண்டும் என வற்புறுத்தி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். இதன் ஒரு கட்டத்தில் இந்த மாணவி அழ முற்பட்ட வேளை நீ இந்த விடயத்தை யாருக்காவது சொன்னால் உன்னை திருமணம் செய்ய மாட்டேன் எனக் கூறி மிரட்டி உள்ளார். இவ்வாறே வேறு வேறு சந்தர்ப்பங்களில்  தொடர்ந்து 3 முறை சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இதன் பின் இந்தச் சிறுமியை கைவிட்டு தனது உறவு முறையான 19 வயதுப் பெண்ணை அழைத்துச் சென்று  வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டதனை சிறுமி அறிந்துள்ளார். இதன் போது விரக்த்தியுற்ற சிறுமி வீட்டை விட்டு புறப்பட்டு பெற்றோருக்கு தெரியாமல் வேறு ஒரு வீட்டில் சென்று தங்கியுள்ளார்.

தமது பிள்ளையைக் காணாத  பெற்றோர் வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு உள்ளனர்.  இதனையடுத்து  பொலிசாரின் தேடுதலில் சிறுமி மீட்கப்பட்டதுடன் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

எனினும் இந்த இளைஞர் தனது குற்றத்தில் இருந்து தப்புவதற்கு பணபலத்தை பயன்படுத்தி உள்ளார். வட்டுக் கோட்டடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சத்துரசிங்க உள்ளிட்ட பொலிசாருக்கு லஞ்சம் வழங்கினார் என பொலிஸ்நிலையத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் இந்த வழக்கை திசை திருப்ப இந்த சிறுமியின் வீட்டில் இருந்த இரத்த உறுவுக்காரரான சகோதரன் மீது துஸ்பிரயோக குற்றச்சாட்டை சுமத்த வட்டுக்கோட்டை பொலிஸார் முற்பட்டு உள்ளனர்.

இதற்காக இந்தச் சிறுமியை விசாரணைக்கு அழைத்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து மிரட்டியதுடன், பெண் காஸடபிள் சிறுமியை கன்னத்தில் கிள்ளியும், அடித்தும் உள்ளார். உனது சகோதரன் உன்னுடன் தவறாக பழகினாரா? சேட்டை விட்டாரா? என மிரட்டிக் கேட்டுள்ளார். இதனை அந்தச் சிறுமி மறுத்ததுடன் தனது நெருங்கிய உறவுக்காரரான அவர், தனது சகோதரன் எனக் கூறியுள்ளார். ஆயின் அவர் உன்னைத் தொட்டாரா எனக் கேட்ட போது ஆம் என்று பதில் அளித்த சிறுமி எனது கையடக்கத் தொலைபேசியை எனது இடுப்பில் இருந்து எடுத்தார் அடித்தார் எனக் கூறியுள்ளார். உண்மையில் தனது தங்கை கையடக்கத் தொலைபேசியை மறைத்து வைத்தமையை கண்டித்து அதனை எடுத்து சிறுமியின் பெற்றோரிடம் கொடுத்ததாக சிறுமியின் தரப்பு  கூறுகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு அந்த சகோதரனும் துஸ்பிரயோகம் செய்தார் என முறைப்பாட்டை எழுதியதோடு, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரசிங்க 'வேசை' என பலமுறை  திட்டியுள்ளார். தொடர்ந்து சிறுமியின் வாக்குமூலமாக அவரது சகோதரன் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது வைத்திய அதிகாரி சகோதரன் எந்தத் தவறையும் செய்யவில்லை என உறுதிப்டுத்தி உள்ளார். இதன்போது கூட இஙைரின் தரப்பில் இருந்து வைத்திய அதிகாரிக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு உள்ளது. வைத்திய அதிகாரி அதற்கு உடன்படாமையினால், தவிர்க்க முடியாத நிலையில்,  துஸ்பிரயோகம் செய்த இளைஞரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

எனினும் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞரின் குடும்பம் பணபலம், தகப்பனாரின் சமூக செல்வாக்கு, வைத்திய துறையோடு தொடர்புடைய தொழில் உள்ளிட்ட காரணத்தால் இந்த சாதாரண ஏளைக் குடும்பச் சிறுமி மீதான துஸ்பிரயோகத்தை மூடி மறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் சங்கானைப் பிரதேச விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதுமட்டும் அன்றி  பாதிக்கப்பட்ட குடும்பத்தை மேலும் அவமானப்படுத்த சத்துரசிங்கவின் தலைமையிலான வட்டுக்கோட்டை பொலிசார் பொலிஸ வாகனத்தில் சிறுமியின் வீட்டுக்கு பலமுறை சென்றுள்ளனர். ஒவ்வொரு முறை செல்லும் போதும்,; வீட்டிற்கு அருகில் சென்று துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் வீடு எது என அயலவர்களை விசாரிப்பதாகவும் இதனால் மற்றய சகோதரி அவமானத்தால் பாடசாலை செல்ல மாட்டேன் எனக் கூறுவதோடு குடும்பத்தவர்களும் வெட்கத்தால் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வகையில் பண பலம் படைத்த இளைஞரால் பாதிக்கப்பட்ட இந்த ஏழைச் சிறுமியை லஞ்சத்தினால் வஞ்சித்த காவல் துறையோடு நீதித் துறையும் கைகோர்த்துள்ளது என்பது அதி உச்ச அபத்தமாக உள்ளது.

இந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கை விசாரணை செய்யும் மல்லாகம் நீதிமன்ற நீதவான் '16 வயதே நிரம்பிய சிறுமியை திறந்த நீதிமன்ற விசாரணைக் கூட்டில் ஏற்றி நீ நடத்தை கெட்டநீ என் ஏசியிருக்கிறார்... பெற்றோரைப் பார்த்து நீங்களும் உங்கள் மகளை கூட்டிக் கொடுக்கிறீர்களா? வாய் திறக்கக் கூடாது திறந்தால் உங்களையும் உள்ளே போடுவேன் எனத் திட்டியுள்ளார்.'

இநத் அதிஉத்தம நீதவானின் தீர்ப்புக்கு அமைவாக பாதிக்கப்பட்ட சிறுமி சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். இதில் வியப்பாக உள்ள விடயம் இலங்கையில் சிறுவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களின் நலன்களைப் பேணும் சிறுவர் நன்னடத்தை அதிகார சபை நேரடியாகத் தலையிடுவது வழமை. ஆனால் நீதித்துறை, சட்டம், சட்டத்தின் பாதுகாவலர்களான பொலிஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பண பலம், அதிகார பலத்தால் சூழப்பட்டு உள்ளதால் ஏழைச் சிறுமியின் பக்கமான நியாயம் அழிக்கப்படுகிறது. அதனால் வட்டுக்கோட்டைப் பகுதிக்குரிய சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவரப்படாமலேயே பொலிசும் நீதிமன்றமும் இந்த விடயத்தை கையாழுகின்றன.

குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஆயின் அவர்களுடன் தொடர்புடைய குற்றங்கள் பொறுப்புடன் விசாரிக்கப்பட வேண்டும் என்ற வரன் முறைகள் மீறப்பட்டுள்ளன. சிறுவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களுக்கான பொலிஸ் பிரிவுகள் மற்றும் நீதிமன்றங்கள் தனியாக செயற்படுகின்ற போதும,; வயது வந்த கிருமினல் குற்றங்கள் புரிந்தவர்களை கையாளுவதனைப் போல் சிறுமி விசாரிக்கப்பட்டு உள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையிலான குடும்ப தகராறுகள், விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்படும் போது கூட திறந்த விசாரனைக் கூட்டில் நீதவான் விசாரிப்பது இல்லை. ஆப்படி இருக்க இந்தச் சிறுமியின் வழக்கு ஏனைய வழக்குகளுக்கு சமூகமளித்திருந்த அனைவர் முன்னிலையிலும் விசாரிக்கப்பட்டது மட்டும் அன்றி ' நீ ஒரு நடத்தை கெட்ட நீ என நீதவானே திட்டி உள்ளார். நீங்கள் கூட்டிக் கொடுக்கிறீர்களா என பிள்ளையின் முன்னிலையில் பெற்றோரைப் பார்த்து நீதவான் கேட்டுள்ளார். தவிரவும் 18 வயதிற்கு குறைந்த சிறுவர்களை அவர்கள் விரும்பினால்கூட 23 வயதான இளைஞர் துஸ்பிரயோகம் செய்தால் குற்றவாளி இளைஞரே என்பது கூட பொலிசாருக்கும் நீதவானுக்கும் தெரியாமல் அந்தச் சிறுமியை மானபங்கப்படுத்தி உள்ளனர்.

30 வருட யுத்தத்தில் ஒரு சமூகம் தோற்றுப் போய், நலிவடைந்துவிட்டால் அனாதைச் சமூகம் என நினைத்து, யார் வேண்டுமானாலும் என்னவும் செய்யலாம் என்ற நிலை வடக்கு கிழக்கில் தாண்டவமாடுகிறது.

இந்த விடயம் பற்றி யாழ்ப்பாணத்தில் இயங்கும் பெண்கள் சிறுவர்கள் உரிமைகள் அமைப்புகளோ, அரசாங்க அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை சிறுமியை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொறுப்பதிகாரி சத்துரசிங்க உள்ட்ட பொலிசாரும் பெண் கான்டபிளும் பேசிய ஒலிப்பதிவு,  நீதவானின் பெயர் உள்ளிட்ட பல விடயங்களை தற்போது குளோபல் தமிழ்ச் செய்திகள் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமிகான நியாயம்  பணபலத்தாலும், சட்டத்துறை நிர்வாகத்துறை, நீதித்துறையாதலும் மறுக்கப்படுமாயின் அவை அனைத்தும் சமூக நலன் கருதி வெளியிடப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிளோம்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105991/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.