Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரும்புலிகள் நாள் 05 -07-2013


Recommended Posts

கரும்புலிகள் நாள்  05 -07-2013
 
391220_119722238170673_53360547_n.jpg1044476_392148047573358_288139189_n.jpg
விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள் தான் July 05 கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.399428_341084635976398_332945535_n.jpg அன்ட்று ஸ்ராலின்1012159_392147247573438_1475995547_n.jpg1000757_392147264240103_1547543057_n.jpg1004075_392147260906770_1023562347_n.jpg1000996_392148054240024_2115138548_n.jpg

http://adangathamilan.blogspot.ca/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

karumpulikal%252B3.jpg

 

தாம் இறப்பது... நிச்சயம் என்று தெரிந்தும்...

தமது இன்னுயிரை, புன் முறுவலுடன் தம் இனத்துக்கு அர்ப்பணித்த...

கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள்.

 

Link to comment
Share on other sites

BlackTigers.jpg
 
 

தமிழீழப் போராட்ட வரலாற்றில் அழுத்தமான முத்திரை பதித்துள்ள கரும்புலிகளை நினைவுகூரும் கரும்புலிகள் தினம் இன்றாகும்.

வீடியோ, படங்கள் தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/archives/20608

Link to comment
Share on other sites

1780 களில்  சிவகங்கையில் வேலுநாச்சியார் தலைமையில் போராடி  வீரச்சாவடைந்த முதல் தமிழ் தற்கொடை போராளி குயிலி க்கும்  வீரவணக்கங்கள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மண்ணுக்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலிகளுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மண்ணுக்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலிகளுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகளுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய் மண்ணுக்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

intro.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து ஏதிலியாகச் சென்ற தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை (15) இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டமை இப்ஸ்விச் நகரத்தின் பன்முகத் தன்மையையும், பன்முக கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுவதாக இந்து சமாசத்தின் தலைவர் சச்சின் கராலே கூறியுள்ளார். இதேவேளை இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறான பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/301812
    • நினைவு கூறலை தடுப்பது என்பது பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் adminMay 17, 2024   வடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கையின் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிக்கின்றன என தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு, இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள் வடக்கு – கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்புக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டு நினைவு கூறும் உரிமைகள் மறுக்கப்படும் வன்செயல்கள் அரங்கேறி வருகின்றமையை மாணவர் சமூகமாக கூர்ந்து நோக்குகின்றோம். அண்மையில் திருகோணமலை சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினைப் பரிமாறி போரில் இனப்படுகொலைக்கு உள்ளானவர்களை நினைவு கூர்ந்த மக்கள் சிறிலங்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கிய பொதுமக்கள் சிறிலங்கா காவல்துறையினால் அச்சுறுத்தப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியும் உள்ளன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பென்பது ஆள்புல மற்றும் குடிசன ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகள் சிறிலங்கா படைத்தரப்புக்களினால் கண்காணிப்புக்கள், அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கப்படுவதோடு, அவற்றினைத் தடுக்கும் செயற்பாடுகளில் தீவிரத் தன்மையுடன் ஈடுபடுகின்றமையினை அண்மைக்காலங்களில் நோக்கக் கூடியதாகவுள்ளது. அனைத்துலகச் சமூகத்தில் நினைவு கூறல் என்பது மனித உரிமைகளாக மதிக்கப்படும் நிலையில், 2009 ஆண்டு ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவேந்தும் வகையில் மே 18 – முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களினை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஈழப்போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு முறையான உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தல்களேதும் வழங்கப்படாதவொரு நிலையில் போரின் வடுக்களிலிருந்தும் அதன் கொடூர முகங்களிலிருந்தும் விடுபடுவதற்கான உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கான மாற்றாக நினைவேந்தல் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன. சிறிலங்காவின் படைத்தரப்புகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி என்பது சாத்தியமற்றுப் போய் சிறிலங்கா நீதிக்கட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் அண்மைக்காலங்களில் நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் முன்னெடுப்பவர்களை அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் யாவும் தொடர்ந்தும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை உளநெருக்கடிகளிற்கு உள்ளாக்குகின்றன. நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொதுமக்களை ஆங்காங்கே அச்சுறுத்தித் தடுப்பது மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அப்பாவிப் பொதுமக்கள் மீது பிரயோகிப்பதனூடாக நினைவேந்தல் செயற்பாடுகளிலிருந்து தமிழ் மக்களை விலக வைப்பதற்கு சிறிலங்கா அரசு முழுவீச்சில் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக, மக்களின் நினைவுகளினை அழிப்பதற்கு முயல்வதனால் சிறிலங்கா அரசும் அதன் படைத்தரப்புக்களும் தமிழ் மக்கள் தமது உரிமைகளிற்காக கூட்டுச் சேர்வதனையும் தம்மீது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயன்முறைகளிற்கு எதிரான துலங்கல்களை வெளிப்படுத்தவும் முடியாதவொரு நிலையினை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. தமிழ் மக்களின் வலிகள் கூறும் நினைவுத் தூபிகளை அழித்தல் மற்றும் தமது போர் வெற்றிச் சின்னங்களை நிறுவுவதன் ஊடாக தமிழ் மக்களின் நினைவுகளை அழிப்பதில் பெரிதாக எதையும் சாதித்திராத சிறிலங்கா அரசு, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயலென்பது தமிழ் மக்களிடையே முன்னரை விட எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனைத் தடுப்பதனூடாக தனது ஆக்கிமிப்பை சாதித்து விட முனைகின்றது. இதுபோன்ற நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுவதோடு, சிறிலங்கா அரசின் இதுபோன்ற செயல்கள் யாவும் அனைத்துலகச் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயங்கள், பிரகடனங்களை மீறுவதோடு, சிறிலங்காவின் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிக்கின்றன. – என்றுள்ளது https://globaltamilnews.net/2024/203057/
    • இதுவரை இரண்டு பேர்தான் போட்டியில் குதித்துள்ளனர்! எங்கே மற்றவர்கள்?
    • கதையின் நோக்கம் மரண தண்டனையின் கொடூரத்தை விபரித்து மரணதண்டனைக்கு எதிரான உணர்வை உருவாக்குவதுதான் என்று இமிழ் பற்றிய நீண்ட கட்டுரையில் ஷோபாசக்தி சொல்லியிருந்தார். ஹமிடாவின் பாரதூரமான குற்றங்களை கதையில் சொல்லாமல் விட்டது ஒரு உத்திதான். ஹமிடாவின் குற்றங்கள் என்ன என்று கேட்பவர்கள்  மரணதண்டனைக்கு உள்ளுறைந்த ஆதரவைக் கொண்டிருப்பவர்கள்!      கண்ணன்.எம் அவர்களின் மேலான கவனத்திற்கு! May 7, 2024  ஷோபாசக்தி 51-வது இலக்கியச் சந்திப்புக் கதைமலர் ‘இமிழ்’ தொகுப்புக்கு கடந்த வாரயிறுதியில் யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் விமர்சனக் கூட்டங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. இரண்டு கூட்டங்களிலும் உரையாற்றிய விமர்சகர்கள் அனைவருமே தொகுப்பை முழுமையாகப் படித்துவிட்டு விரிவாக உரையாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது.  இமிழ் தொகுக்கப்பட்ட முறை குறித்து நேர்மறையான, எதிர்மறையான இரண்டு வகை விமர்சனங்களுமே முன்வைக்கப்பட்டன. இதுவரை உலகத்தில் வெளிவந்துள்ள எல்லாத் தொகுப்புகளையும் போலவே இமிழிலும் விடுபடல்கள் உள்ளன. கதைத் தேர்வுகளைப் பொறுத்தவரை, நான் முன்பே விளக்கியிருப்பதைப் போன்று கதைகளைத் தேர்வு செய்யாமல் எழுத்தாளர்களையே தேர்வு செய்து கதைகளைக் கோரியிருந்தோம். கௌரிபாலன், கலாமோகன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் தொடக்கம், பிரமிளா பிரதீபன் போன்ற இளைய எழுத்தாளர்கள்வரைக்கும் தொகுப்புக்குள் அடக்கவே முயற்சித்துக் கதைகளைக் கோரியிருந்தபோதும், அது நிகழாமல் போனது வருத்தமே. தொகுப்பிலுள்ள கதைகளின் மீதான நேர்மறைக் கருத்துகளை மட்டுமல்லாமல், தொகுப்பிலுள்ள கதைகளின் வகைமை போதாமை, கச்சிதமின்மை, கலையமைதி இன்மை போன்ற எதிர்மறைக் கருத்துகளையும் விமர்சகர்கள் தங்கள் தங்களது பார்வையிலிருந்து முன்வைத்திருக்கிறார்கள். விமர்சனங்களைக் கூர்ந்து கவனித்துக்கொள்வோம். இலக்கிய விமர்சனம் இல்லாமல் இலக்கிய வளர்ச்சி கிடையாது. கதைகள் மீதான விமர்சனங்களைப் பொறுத்தவரை, இலக்கிய விமர்சகர்களின் பாதையில் நான் குறுக்கிடுவதே இல்லை. ஏனெனில் ‘என்னுடைய கதையில் சொல்ல முடியாத எதையுமே கதைக்கு வெளியே என்னால் சொல்லிவிட முடியாது’ என்ற ஜெயகாந்தனின் வாக்கே எனக்கு எப்போதும் முன்மாதிரி. இதை நான் ஏற்கனவே பலதடவைகள் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், பற்றுறுதியோடு கடைப்பிடித்தும் வருகிறேன். எனவே, விமர்சகர்களின் கருத்துகளைக் கூர்ந்து கவனித்து மனதில் பதிய வைத்துக்கொள்கிறேனே தவிர அவற்றுக்குப் பதிலளிப்பதில்லை. அந்த விமர்சனங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டவையின் பிரதிபலிப்பு என்னுடைய அடுத்த கதையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் நான் தவறுவதில்லை.  எனினும், சென்னையில் நிகழ்ந்த விமர்சனக் கூட்டத்தில் உரையாற்றிய ஆய்வாளர் கண்ணன்.எம் (பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்) தனது விமர்சன உரையிலும், தொடர்ந்து நடந்த கலந்துரையாடலிலும் சில கேள்விகளை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல், அதற்கான பதில்களையும் எதிர்பார்க்கிறார். அத்தோடு நிற்காமல், ‘எழுப்பப்படும் கேள்விகளுக்குப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பதிலளிக்காமல் மவுனம் சாதிக்கிறார்கள்’ என்றொரு பதைபதைக்கும் குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார். மவுனம் என்பது சாவுக்குச் சமமல்லவா. இந்தக் குற்றச்சாட்டு புலம்பெயர்ந்த எழுத்தாளன் என்ற முறையில் என்னை நோக்கியும்தானே முன்வைக்கப்படுகிறது. ஆகவே, கண்ணன் அவர்களின் மேலான கவனத்திற்குச் சில குறிப்புகளை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. பத்திரிகை நேர்காணல்களிலும், காட்சி ஊடகங்களிலும், கட்டுரைகளிலும், இலக்கியக் கூட்டங்களிலும், என்னுடைய புத்தக வெளியீடுகளிலும் எப்போதும் நான் ஓயாமல் பதில்களைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன். எனவே, கண்ணனின் ‘மவுனம்’ என்ற குற்றச்சாட்டு எனக்குப் பொருந்தாது. கண்ணன் எழுப்பிய ‘வாழ்பனுபவம்’, ‘இலக்கிய முன்மாதிரி’ போன்ற எல்லாக் கேள்விகளும் ஏற்கனவே கேட்கப்பட்டு என்னால் தமிழ், சிங்களம், மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்டவையே. அந்தப் பதில்களையெல்லாம் நீங்கள் வேறெங்கும் தேடித் திரிய வேண்டியதில்லை. அவற்றில் ஒரு பகுதியை என்னுடைய இதே வலைத்தளத்தில் தொகுத்து வைத்திருக்கிறேன். இங்கிருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட என்னுடைய நேர்காணல்களிலேயே அவற்றைக் கண்டு கொள்ளலாம். அத்தோடு, சமூக வலைத்தளங்களில் இதுவரை குறைந்தபட்சம் ஆயிரம் கேள்விகளுக்காவது பதிலளித்திருப்பேன். இதற்கு மவுனம் என்றா பெயர்? அவதூறுக் கைகளின் ஆயிரம் கேள்விகளுக்கு நான் பதிலளிக்காமல் தவிர்த்திருப்பேன். ஆனால், கண்ணன் போன்ற ஒருவரின் ஒரேயொரு கேள்விக்குக் கூட நான் பதிலளிக்காமல் விட்டதில்லை. இதைக் கண்ணன் கவனத்தில் குறித்துக்கொள்ள வேண்டும். நிறுவனங்களின் கோட்டை மதில்களுக்குள் அமர்ந்திருந்து எப்போதாவது ஒருமுறை பொதுவெளியில் வாய் திறக்கும் கண்ணன் போன்ற ஆய்வாளர்களுக்கு, காலம் முழுவதும் எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் பொதுச் சமூகத்திடம் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் குரல் ‘மவுனம்’ என்பதாகத் தெரிகிறதென்றால் இதெல்லாம் ‘எலிட்’ மனநிலைக் கோளாறு என்பதாக மட்டுமே என்னால் பொருள்கொள்ள முடியும். தன்னுடைய உரையில் என்னை நோக்கி அப்படி என்னதான் கண்ணன் புதுமையான கேள்விகளைக் கேட்டுவிட்டார்? தொகுப்பில் இடம்பெற்றுள்ள என்னுடைய ‘மரச் சிற்பம்‘ கதையில் என்னுடைய வாழ்பனுவம் எங்கேயிருக்கிறது என்ற அவருடைய கேள்வியைப் பரிசீலித்துவிடலாம்.  கண்ணன் தன்னுடைய உரையை ‘வாழ்பனுபவம் மட்டும்தான் இலக்கியமாக மாற முடியும்’ என்று அழுத்தமாகச் சொல்லியே ஆரம்பிக்கிறார். இலக்கியம் குறித்த இவரது இந்தப் புரிதலே அடிப்படையில் தவறானது என்று நான் கருதுகிறேன். கண்ணன் தன்னுடைய உரையில் சிறப்பான கதைக்கு உதாரணமாகச் சுட்டும் ‘சிற்பியின் நரகம்’ கதையில் புதுமைப்பித்தனின் வாழ்பனுபவமா பதிவாகியிருக்கிறது? ‘பரபாஸ்’ நாவலை எழுதிய பெர் லாகர்குவிஸ்ட் ஈராயிரம் வருடங்களுக்கு முன்பு ஜெருசலேமில் வாழ்ந்த வாழ்பனுவத்தால் அந்த நாவலை எழுதினாரா? சமகாலத்தில் எழுதப்பட்ட மைக்கல் ஒந்தாச்சி, அனுக் அருட்பிரகாசம் ஆகியோருடைய நாவல்கள் அவர்களது சொந்த வாழ்பனுபவமா? அவ்வளவு ஏன், கண்ணன்.எம் பிரெஞ்சு மொழியில் பதிப்பித்த ‘வாடிவாசல்’ நாவலை எழுதிய சி.சு. செல்லப்பா எந்த ஜல்லிக்கட்டில் இறங்கி மாடு பிடித்தார்? அவர் மாடு பிடிக்கும் வீரராக அல்லாமல், வத்தலகுண்டு பார்ப்பன சங்கத்தின் தலைவராக இருந்தவர். அந்த வாழ்பனுபவமா வாடி வாசல்? வாழ்பனுபவங்களின் வழியே எழுதப்படும் புனைவுப் பிரதிகள் அதற்கான வலிமையையும் பெறுமதியையும் கொண்டுள்ளன என்பது உண்மைதான். அதேவேளையில் வாழ்பனுபவத்தை மட்டும் நம்பியே எழுதப்படும் கதைகள் இலக்கியரீதியாகத் தோல்வியுறுவதுமுண்டு. நாஸிப் பிரதிகளாக மாறுவதுண்டு. ஈழத்துச் சூழலிலேயே கூட இவ்வாறு மோசமான எழுத்துகளுண்டு. அது குறித்து நான் எழுதிய கட்டுரைகளும் என்னுடைய இதே வலைத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. படித்துக்கொள்ளலாம். நேரடியான வாழ்பனுபவம் இல்லாவிட்டாலும் தேடுதல் – அறிதல் மூலம் எழுதப்படும் பிரதிகளும், முற்று முழுவதுமாகக் கற்பனையால் மட்டுமே உருவாக்கப்படும் பிரதிகளும் கூட மிகச் சிறப்பான இலக்கியப் பிரதிகளாக மிளிரக்கூடும் என்பதற்குத் தமிழிலிருந்தும் உலக இலக்கியங்களிலிருந்தும் எஸ்.பொன்னுத்துரை, மகாஸ்வேதா தேவி, ஜோர்ஜ் ஆர்வெல் என என்னால் ஆயிரம் உதாரணங்களைச் சொல்ல முடியும். இமிழ் தொகுப்பிலுள்ள கதைகள் எவற்றிலும் இரத்தமும் சதையுமான வாழ்பனுபமே இல்லை என்று கண்ணன் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை. போர் நிலத்தில் முப்பது வருடங்களாகச் சிக்குண்டு வாழ்ந்தவர்கள் போரைப் பற்றி எழுதியிருப்பதும், முஸ்லீம் எழுத்தாளர்கள் தங்களது சமூகத்தை, பண்பாட்டு வாழ்க்கையைக் குறித்து எழுதியிருக்கும் கதைகளும், தமிழகத்தில் ஈழ அகதி வாழ்க்கை குறித்து தொ.பத்திநாதனும் செந்தூரனும் எழுதியிருப்பதும் வாழ்பனுபவம் இல்லாவிட்டால் எதுதான் இரத்தமும் சதையுமான வாழ்பனுபவம்? சி.சு. செல்லப்பா மாடு பிடிப்பதா? ஜி. நாகராஜன் அவ்வப்போது சென்றுவந்த குறத்தி முடுக்கா? இமிழ் தொகுப்பிலுள்ள ‘மரச் சிற்பம்’ கதையில் ஷோபாசக்தியின் வாழ்பனுபவம் எங்கேயிருக்கிறது என்று கேட்டால், அவர் தன்னுடைய இலங்கை வாழ்பனுவத்தை ‘கொரில்லா’ என்று எழுதத் தொடங்கி பிரான்ஸ் வாழ்பனுபவத்தை ‘ஸலாம் அலைக்’ வரை பக்கம் பக்கமாக எழுதிக் கொட்டிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது முற்றுமுழுதாகக் கற்பனையின் வழியே அவர் அந்திக் கிறிஸ்து, அரம்பை, யாழ்ப்பாணச் சாமி போன்ற கதைகளையும் எழுதியிருக்கிறார். ‘இச்சா’ நாவலில் கற்பனையாக ஒரு நாட்டை மட்டுமல்லாமல் ‘உரோவன்’ என்ற மொழியையும் உருவாக்கியிருக்கிறார். ஓர் எழுத்தாளர் எவ்வளவு வீச்சாக மூச்சடக்கிக் கற்பனைக் கடலில் மூழ்கினாலும், மூச்சுவிட மேலே வரும்போது வெளிப்படும் மூச்சுக்காற்று வாழ்பனுபவத்தின் கீற்றாகவே இருக்கும். அதனால்தான் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கற்பனைகளும் தம்மளவில் வேறுபடுகின்றன. அவர்களது அக்கறைகளும் வேறுபடுகின்றன. வாழ்பனுபவம் என்பது சாக்கு மூட்டையல்ல சுமந்து செல்வதற்கு. ஒருவருக்கு வாழ்க்கையின் ஒவ்வொருநொடியும் வாழ்பனுபவங்களே. எழுத்தாளருக்கு உறக்கத்தில் வரும் கனவும் வாழ்பனுபவமே. அதை இலக்கியமாக மாற்ற அவருக்குத் தெரியும். என்னுடைய ‘மரச் சிற்பம்’ சிறுகதை மரணதண்டனையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு கதை. ‘மரணதண்டனையோடு உனக்கு வாழ்பனுபவம் இருக்கிறதா?’ என்று கண்ணன் கறாராக என்னை நோக்கிக் கேள்வி கேட்காததற்கு அவரது கருணையுள்ளம் மட்டுமே காரணமாக இருக்கும் என நம்புகிறேன். எனினும், என்னுடைய பிரான்ஸ் வாழ்பனுபவம் ஏன் கதைகளாக மாறவில்லை என்று கண்ணன் கேட்கிறார். அதெல்லாம் நிறையவே எழுதியிருக்கிறேன் என்று சொல்லி என்னால் தப்பிக்க முடியாது போலிருக்கிறது. ஏனெனில், பிரெஞ்சு மொழிக்கும் மனிதர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் என்ன? பிரெஞ்சுப் பண்பாட்டின் செழுமையை நான் உள்வாங்கியிருக்கிறேனா? என்று கண்ணன் கேள்விமேல் கேள்வியாகக் கேட்கிறார். இவையும் எனக்குப் புதிய கேள்விகளல்ல. அய்ந்து வருடங்களுக்கு முன்பாக பிரெஞ்சுக் குடியுரிமை கேட்டு நான் விண்ணப்பிக்கும்போது, திரும்பத் திரும்ப இதே கேள்விகளைத்தான் (பிரெஞ்சு பண்பாடு, பிரெஞ்சு மொழி) என்னிடம் காவற்துறை அதிகாரி கேட்டார். ‘ஒரு பண்பாட்டுச் செழுமை மயிரும் என் கண்களுக்குத் தெரியவில்லை அய்யா, நான் பிரெஞ்சுச் சமூகத்தில் மனிதர்களுடன் கலந்துவிடத் தயாராகவேயுள்ளேன்… ஆனால், அவர்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளத் தயாரில்லை’ என்று நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டாலும், பிரஞ்சுப் பண்பாட்டுச் செழுமை குறித்துப் பத்து நிமிடங்கள் நான் உரையாற்றி வெற்றிகரமாகத் தேர்வை முடித்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கேயும் என் கற்பனைத் திறன் என்னைக் கைவிடவில்லை. கண்ணன் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் முக்கியமான பதவியிலிருப்பவர். இதன் வழியாக அவர் பிரெஞ்சுப் பண்பாட்டுச் செழுமை குறித்து அறிந்திருக்கலாம். பிரெஞ்சு மனிதர்கள் குறித்து அறிந்திருக்கலாம். நானோ பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு, போலிப் பாஸ்போர்ட்டில் இலக்கில்லாமல் தற்செயலாகப் பிரான்ஸை சென்றடைந்த அரசியல் அகதி. என்னை விமான நிலையத்தில் பிரெஞ்சுப் பண்பாடு அடித்து உதைத்தே வரவேற்றது. அகதியாகத் தெருவில் விட்டது. இன்றுவரை அந்நியனாக வைத்திருக்கிறது. நிற வேற்றுமை பாராட்டுகிறது. எந்த நேரத்திலும் குடியுரிமையைப் பறித்துவிட்டு திரும்பவும் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பலாம் என்ற சட்டக் கத்தி தலைக்கு மேல் தொங்குகிறது. எனவே பிரெஞ்சுப் பண்பாடு பற்றிய எனது பார்வையும் வாழ்பனுபவமும் பிரெஞ்சு நிறுவன ஆய்வாளர் கண்ணனின் பார்வையும் ஒன்றாக இருக்க வாய்ப்பேயில்லை. இதையெல்லாம் ஏதோ ஒரு இதுக்காக நான் இட்டுக்கட்டிச் சொல்கிறேன் என நினைத்துவிடாதீர்கள். பிரெஞ்சு மொழியில் வெளியான எனது சுயசரிதை Shoba – Itinéraire d’un réfugiéநூலில் இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக விபரித்துள்ளேன். பிரான்ஸின் முக்கிய பதிப்பகமான Le livre de poche வெளியிட்டுள்ளது. அடுத்ததாக ஆட்சிக்கு வெள்ளை இனவாதியான மரி லூபென் வந்தால் வழக்கு வரவும் எல்லா வாய்ப்புகளுமுள்ளன. அவர் ஆட்சிக்கு வருவது சாத்தியமற்ற ஒன்றல்ல. ஏற்கனவே மாகாண அளவில் ஆட்சியிலிருக்கிறார். கடந்த தேர்தலில் பிரெஞ்சுப் பண்பாட்டுச் செழுமையின் வழியே 35 விழுக்காடு மக்கள் அவருக்கு வாக்களித்திருந்தார்கள். மிகுதிப் பண்பாடு கடைந்தெடுத்த வலதுசாரி இம்மனுவல் மக்ரோனுக்கு வாக்களித்து இடதுசாரிகளை செயின் நதியில் தள்ளிச் சமாதி கட்டியது. அகதிகள், வெளிநாட்டவர்கள் மீது போடப்பட்டுக்கொண்டேயிருக்கும் புதிய சட்டங்கள், குடியேறும் வெள்ளையர்களற்ற மனிதர்கள் நாய் போல தெருக்களில் அவ்வப்போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுவது, புதிய அகதிகளுக்குக் கதவடைப்பு, கடல் கடந்த மாகாணங்கள் (France d’outre-mer) என்ற பெயரால் இன்றுவரை காலனிகளை வைத்திருப்பது என்று பிரஞ்சின் பண்பாட்டுக் கதவுகள் மூடப்பட்டுக்கொண்டே வருகின்றன. அந்தக் கதவில் இறுகிய பூட்டைப் போடுவதற்கு வெள்ளை இனவாதிகள் காத்திருக்கிறார்கள். ஓர் அகதி மனிதனாக எனக்கு இது ஆபத்தான பண்பாடு. பிரெஞ்சுச் சமூகத்தில் கலக்காமல் அகதிகள் தனித்த தீவாக இருக்கிறோமா?  அப்படியெல்லாம் இருந்து என்னதான் சாதிக்கப் போகிறோம்! எங்களுக்குப் பிரெஞ்சுச் சமூகத்தில் கலக்க ஆசையில்லையா என்ன? என்னைப் பொறுத்தவரை அதற்கான எல்லா முயற்சிகளும் எடுத்திருக்கிறேன். அவர்களுடன்தான் வேலை செய்கிறேன். அவர்களுடன்தான் சினிமாக்களில் நடிக்கிறேன். அவர்களுடன்தான் தேசிய நாடக அரங்கத்தில் பிரெஞ்சு மொழியில் நாடகம் நடிக்கிறேன். என்னுடைய புத்தகங்களை மொழிபெயர்ப்பில் அவர்களுக்குக் கொடுக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்காக நடத்தப்படும் கூட்டங்களில் முகம் சுழியாது கலந்துகொண்டு, பிரெஞ்சுப் பண்பாட்டின் வழியே புன்னகையுடன் குரல் உயர்த்தாமல் பொறுமையாகக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். ஆனால், இங்கே நான் அந்நியன்தான். பிரெஞ்சுச் சமூகம் தன்னுள்ளே நுழைய என்னை அனுமதிக்கவில்லை. ஓர் அகதியாக, முன்னாள் போராளியாக என்னுடைய அனுபவங்களும் ஒரு கலைஞனாக என்னுடைய திறனும் மட்டுமே அவர்களுக்குப் போதுமானது. பிரான்ஸில் வாழும் வெள்ளையரல்லாத எந்த எழுத்தாளரிடமும் கலைஞரிடமும் வந்து கேட்டாலும் நான் சொல்வதையே சொல்வார்கள். இதுதான் எங்களின் வாழ்பனுபவம். வெள்ளை இனவாதிகள் திரும்பவும் நாஸி காலத்திற்குத் திரும்பிச் செல்லத் தீவிரமாக முயற்சிக்கிறார்கள். இதன் வழியாகத்தான் என்னுடைய ‘மரச் சிற்பம்’ கதை உருவாகியது. இந்த வாழ்பனுபவம் போதுமானதா இல்லையா? சொல்வதற்கு இன்னும் நிறையவே உள்ளன. ‘மரச் சிற்பம்’ கதை நிகழும் காலம் 1977. அப்போது நான் பிரான்ஸுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கதையில் இடம்பெறும் சம்பவத்தில் எனக்கு நேரடியாக அனுபவம் கிடையாது. எனக்கு மட்டுமல்ல, அந்த மரணதண்டனை இரத்தச் சடங்கு நிகழ்த்தப்பட்ட முறை குறித்து அந்தக் கொடிய சடங்கில் கலந்துகொண்ட முப்பது பேர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. பிரெஞ்சுப் பண்பாட்டை விளங்கிக்கொண்ட, விளங்கிக்கொள்ளாத யாருக்குமே தெரியாது. இந்த மரணதண்டனை நிகழ்ந்து 36 வருடங்களுக்குப் பின்புதான், எவ்வாறு கொடிய முறையில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது சடங்கை முன்நின்று நடத்திய நீதிபதியின் இரண்டு பக்கக் கடிதம் வழியாக 2013-ல் பிரெஞ்சு பொதுச் சமூகத்திற்குத் தெரிய வந்தது. நல்லவேளையாக அப்போது நான் பிரான்ஸில் இருந்தேன். அந்த இரண்டு பக்கக் கடிதம் எனக்குள் ஏற்படுத்திய உணர்வும், தற்கால பிரெஞ்சு அரசியல் செல்நெறியும்தான் எனது இருபது பக்கக் கதை உருவாகக் காரணமாக இருந்தன. ஆனால் ‘விக்கிபீடியாவில் ஒரு சொடுக்குச் சொடுக்கினால் இந்தக் கதை தெரிந்துவிடும்’ என்கிறார் ஆய்வாளர் கண்ணன். விக்கிபீடியாவில் சொடுக்கினால் எதுதான் தெரியாது? எல்லாமேதான் உள்ளன. விக்கிபீடியாவில் புத்தரைப் பற்றி ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தத் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஹேர்மன் ஹெசேயின் ‘சித்தார்த்தா’ போன்றதொரு நாவலை எழுதிவிட முடியுமா என்ன! ஆய்வுக் குறிப்புகளும், தேடுதல்களும் கூட முழுமையாக உதவப் போவதில்லை. இந்தத் தரவுகளின் மேல் கட்டி எழுப்பப்படும் கற்பனையும் உணர்ச்சிகரமான சித்திரிப்புமே புனைவுப் பிரதிக்கு மிக அடிப்படையானது.  ‘மரச் சிற்பம்’ கதையில் கில்லட்டினால் தலை வெட்டப்படுபவன் ஒரு துனிஷியா நாட்டு இளைஞன். அவன் தன்னுடைய பிரெஞ்சுக் காதலியைக் கொன்றதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. அவன் குற்றவாளி என்று அழுத்தமாகவே நான் கதையில் குறிப்பிடுகிறேன். ஆனால் ‘கொலையுண்ட பெண்ணுக்குக் கதையில் ஏன் இடமில்லை?’ என்ற கேள்வியைக் கண்ணன் எழுப்பியிருக்கிறார். இந்தக் கேள்விதான் ஓர் ஆய்வாளருக்கும் ஓர் எழுத்துக் கலைஞனுக்குமுள்ள இடைவெளியின் தூரமோ என்று எனக்கு அய்யம் ஏற்படுகிறது. நான் நூற்றுக்கணக்கான மரணதண்டனைகளை என் தாய்நிலத்தில் பார்த்துவிட்டு, போரிலிருந்து தப்பித்து பிரான்சுக்கு வந்தவன். எனக்குள் மரணதண்டனை குறித்த கேள்வி எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். என்னுடைய பல கதைகளிலும் நாவல்களிலும் கட்டுரைகளிலும் இது குறித்து நான் விசாரணை செய்துகொண்டேயிருப்பவன். பிரான்ஸில் 1977-ம் வருடம் வரை கில்லட்டின் கொலைக் கலாசாரம் நீதியின் பெயரால் சட்டமாக இருந்ததை அறிய வந்தபோது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்தச் செய்தியை அறிந்ததிலிருந்து என்னுடைய பல பிரெஞ்சு நண்பர்களிடம் இது குறித்து விசாரித்தேன். எல்லோருமே அறிவுத்துறை சார்ந்த நண்பர்கள்தான். ஒரேயொருவருக்கு மட்டுமே 1970-கள் வரை கில்லட்டின் கலாசாரம் பிரான்ஸில் நடைமுறையில் இருந்தது தெரிந்திருந்தது. அவருக்கும் அதற்கு மேல் விபரங்கள் தெரியவில்லை. பிரான்ஸில் நிகழ்ந்த அந்தக் கடைசி கில்லட்டின் கொலை குறித்து பிரெஞ்சு இலக்கியங்களில் ஏதும் பதிவிருப்பதாகத் தெரியவில்லை. அநேகமாக அந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதப்பட்ட முதலாவது சிறுகதை என்னுடைய கதையாகத்தான் இருக்கும். இனி இந்தக் கதை பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானால்தான், பிரெஞ்சுப் பண்பாடு தன்னுடைய கடைசி மரணதண்டனையின் கொடூரச் சித்திரம் குறித்துத் தெரிந்துகொள்ளும் என்றே நினைக்கிறேன். ‘குற்றத்தை விடத் தண்டனையே வெறுக்கத்தக்கது’ என்ற ஒற்றை வாக்கியத்தில்தான் என்னுடைய கதை கட்டியெழுப்பப்பட்டது. இந்த வாக்கியத்தைச் சொன்னவர் விக்டர் ஹியூகோவா, அல்பேர் கமுயுவா அல்லது வேறொருவரா என்பது என் ஞாபகத்திலில்லை. ஆனால், அந்த வாக்கியம் மட்டும் என் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ளது. ‘காந்தியாரின் கொலையைக் கண்டிக்கும் அதே வேளையில், கோட்சேக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனையையும் நாம் கண்டிக்க வேண்டும்’ என்று அ.மார்க்ஸ் ஒருமுறை எழுதினார். மேற்கண்ட இந்தக் கருத்துநிலைகளில் நின்று எழுதப்பட்டதுதான் ‘மரச் சிற்பம்’. குற்றவாளியால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஏன் கதையில் இடமில்லை? ஏனெனில், இது அவரைப் பற்றிய கதையில்லை. அவரைப் பற்றி இன்னொரு கதையில் எழுதலாம். இந்தக் கதையோ ‘குற்றத்தைவிடத் தண்டனையே வெறுக்கத்தக்கது’ என்பதைச் சொல்ல எழுதப்பட்ட கதை. கண்ணனைப் போல் இன்னொரு ஆய்வாளர் ‘கில்லட்டினை இயக்கிய தொழிலாளியின் மனநிலை ஏன் கதையில் பதிவாகவில்லை?’ என்றும் கேட்கலாம். அதற்கு மேலுமொரு கதை எழுதவேண்டும். ஒரே கதையில் எல்லாக் குரல்களும் பதிவாகவில்லை என்றால் அது மற்றைய குரல்களை நிராகரிப்பதாக அர்த்தமாகாது. அந்தக் குரல்களுக்கு இன்னொரு கதையில் இடமிருக்கும். அந்தப் பெண்ணைப் போல சித்திரவதை செய்து கொல்லப்பட்ட எத்தனையெத்தனையோ பெண்களை எனது கதைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். குறிப்பாக, ‘ஆலா’வை மறந்திருக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஆய்வாளர்கள் வேண்டுமானால் ஒரு சிறுகதைக்குள்ளேயே அனைத்துக் குரல்களையும் தரிசிக்க ஆசைப்படலாம். அது இலக்கிய வடிவரீதியாக எழுத்துக் கலைஞருக்குச் சாத்தியப்படாது. அவ்வாறு சாத்தியப்பட்டதொரு சிறுகதை இதுவரை உலகில் எங்கும் எழுதப்பட்டதில்லை. மரண தண்டனையின் கொடூரத்தைப் பேசும் போது, ‘குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பார்க்க வேண்டாமா?’ என்ற கேள்விகளை நாம் கடந்த காலங்களில் அதிகமாக எதிர்கொண்டிருக்கிறோம் அல்லவா. குறிப்பாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்தக் குரல்கள் அதிகமாகக் கேட்டன. மரண தண்டனை விஷயத்தைப் பொறுத்தவரை இந்த வகைக் கேள்விகளில் உள்ளுறைந்திருப்பது மரண தண்டனை ஆதரவே. அதற்காக கண்ணன் மரண தண்டனை ஆதரவாளர் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால், அவரது கேள்வியின் தொனி இந்த இடத்திற்குத்தான் அவரை இழுத்து வருகிறது. ‘இந்தக் கதையை கேள்வி அனுபவத்தால் எழுதினால் ஆயிற்றா? இதில் எங்கேயிருக்கிறது ஷோபாசக்தியின் வாழ்பனுபவம்?’ என்ற கண்ணனின் கேள்விக்கு இலக்கிய உலகத்திலே ஏதாவது பொருளிருக்கிறதா எனத் தெரியவில்லை. அவர் கதைகளை அல்லாமல் சுயசரிதைகளையே இலக்கியம் என்று நம்பிக்கொண்டிருக்கிறரா? ஓர் உதாரணத்தால் இதற்குப் பதிலளிக்கலாம் என நினைக்கிறேன்.  கவிஞர் பப்லோ நெருடா இலங்கையில், சிலி நாட்டின் ‘கொன்ஸலேட்’ அலுவலகத்தில் பிரதிநிதியாக இருந்த காலத்தில், அவரது வீட்டில் பணி செய்த ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தார். இது நாற்பத்து மூன்று வருடங்களுக்குப் பின்பு, 1974-ல் பப்லோ நெருடாவின் சுயசரிதை வெளியாகும்வரை வெளியுலகத்திற்குத் தெரியாது. சுயசரிதை நூலில் கூட அரைப் பக்க அளவுக்குத்தான் இது குறித்து நெருடா எழுதியிருப்பார். அந்தப் பெண்ணின் பெயர், ஊர் விபரங்கள் எல்லாம் அந்தக் குறிப்பில் கிடையாது. இந்த அரைப் பக்கக் குறிப்பை வைத்துக்கொண்டே சிங்களத்தில் ஒரு சிறுகதை எழுதப்பட்டது. இதை வேறொரு கோணத்தில் அணுகிய இயக்குனர் அசோக ஹந்தகம ‘அல்போராடா’ என்றொரு திரைப்படத்தை எடுத்தார். இவை இரண்டுமல்லாத இன்னொரு பார்வையில் நான் கருங்குயில்என்றொரு கதையை எழுதினேன். எங்கள் மூவரிடமுமிருந்தது பப்லோ நெருடா எழுதிய வெறும் அரைப் பக்கக் குறிப்புத்தான். என்னுடைய தேடுதல் வழியாக, அந்தப் பெண் பழைய டச்சுக் கால்வாய்க்கு அருகேயிருந்த ‘பம்பலவத்த’ என்ற குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்திருக்கிறார், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர், பேராசிரியர் க. கைலாசபதி வெள்ளவத்தையில் குடியிருந்த வீட்டுக்கு அருகிலிருந்த வீட்டில்தான் பப்லோ நெருடா வசித்திருக்கிறார் போன்ற குறைந்தபட்சத் தகவல்களே எனக்குக் கிடைத்தன. அதற்கு மேல் கற்பனையால்தான் நான் கதையை வளர்த்துச் சென்றேன். இந்தக் கதையைப் பொறுத்தளவில் சிங்களத்தில் கதையெழுதிய திஸ்ஸ தேவேந்திராவுக்கோ திரைப்படமெடுத்த அசோக ஹந்தகமவுக்கோ எனக்கோ சுத்தமாக வாழ்பனுபவம் கிடையாதுதான். ஆனால், இவ்வாறு குறிப்புகள், வாய்வழிச் செய்திகள் வழியாக அறிந்து எழுதப்படும் கதைகளுக்கு இலக்கியத்தில் இடமில்லையா என்ன! உலக இலக்கியம் முழுவதிலுமே இவ்வகையாக எழுதப்படும் கதைகள் உள்ளன. இவ்வகையாக உருவாக்கப்படும் நாடகங்களும், திரைப்படங்களும் உள்ளன. பிரசன்ன விதானகேயின் Death on a Full Moon Day திரைப்படம் கூட இதற்குச் சிறந்த உதாரணம். ஒரு துண்டுப் பத்திரிகைச் செய்தியிலிருந்து அவர் ஆகச் சிறந்த திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். உங்களுக்குப் போரைப் பற்றி என்ன தெரியும்? நீங்கள் இராணுவத்தில் இருந்தீர்களா? வாழ்பனுபவம் இல்லாமல் எப்படி உங்களால் படம் எடுக்க முடியும்? என்றெல்லாம் பிரசன்ன விதானகேயிடம் கோணல்தனமாகக் கேட்டால் ‘கட்ட வாப்பாங்’ என்றுதான் அவர் சொல்வார். ‘இமிழ் தொகுப்பில் எழுதியிருப்பவர்கள் எல்லோருமே பாப்புலர் நடையில் எழுதும் சுஜாதாவையும் சுந்தர ராமசாமியையும் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையுமே பின்பற்றியிருக்கிறார்கள்’ என்று கண்ணன் ஒற்றை வார்த்தையில் சொல்லிச் செல்வதெல்லாம் இலக்கியத் திறனாய்வு கிடையாது. சுஜாதாவின் எழுத்துநடை பாப்புலர் நடை என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்காது. ஆனால், மற்றைய மூவரையும் பாப்புலர் நடையில் எழுதுபவர்கள் எனச் சொல்வதெல்லாம் வெறும் சீண்டலே தவிர திறனாய்வு கிடையாது. அதேவேளையில் ‘பாப்புலர் நடையை நான் குறைத்து மதிப்பிடவில்லை’ என்று வேறு கண்ணன் தன்னுடைய உரையில் சொல்கிறார். அந்த நடை இலக்கியத்திற்கு ஆகாது என்றும் சொல்கிறார். ஒரு குழப்பமான உரைதான் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். கண்ணனுடைய உரையைத் தொடர்ந்த கேள்வி -பதில் நிகழ்வில் ‘இலங்கைத் தமிழர்கள் சாதி குறித்துப் பேசவே மறுக்கிறார்கள்’ என்று கூடுதலாக ஒரு குற்றச்சாட்டையும் கண்ணன் வைத்திருந்தார். அதாவது, அவரது ஆய்வு நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைப் பேராளர்கள் சாதி குறித்துப் பேசவே மறுத்ததாக ஆதாரமும் சொன்னார். இது ஆய்வு நிறுவனத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும் கிணற்றுத் தவளைப் பார்வை. கொஞ்சம் வெளியே வந்தும் கண்ணன் கண்திறந்து பார்க்க வேண்டும். இலங்கையிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வெளியான சிறுபத்திரிகைகளைக் கண்ணன் படித்ததில்லையா என்ன? சாதியக் கொடுமை குறித்து எழுதப்பட்ட நூல்களை, தன்வரலாறுகளைப் படித்ததில்லையா? கதைகளைப் படித்ததில்லையா? புலம்பெயர் நாடுகளில் ‘தலித் மாநாடுகள்’ நடத்தப்பட்டது அவருக்குத் தெரியுமா தெரியாதா? சாதியப் பிரச்சினைகளை முன்வைத்து ‘இருள்வெளி’, ‘சனதருமபோதினி’, ‘கறுப்பு’ போன்ற இலக்கியத் தொகுப்புகள் வந்ததை அவர் அறியமாட்டாரா? பிரான்ஸில் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ என்றொரு அமைப்பு பல வருடங்களாக இயங்கிவருவதை அவர் அறியவில்லையா? ஒவ்வொரு இலக்கியச் சந்திப்பிலும் முக்கிய நிகழ்வாக ‘சாதிய விடுதலை’ குறித்த அமர்வு நிகழ்வதை அறியாரா? இமிழ் வௌியிடப்பட்ட 51-வது இலக்கியச் சந்திப்பில் கூட ‘இலங்கையில் சாதியம்’ என்றொரு அமர்வு நடத்தப்பட்டதே. இதையெல்லாம் கண்டுகொள்ளாமலிருக்குமாறு அவரது ஆய்வுக் கண்கள் எந்த வன்மத்தால் கட்டப்பட்டிருக்கின்றன? இறுதியாக, என்னுடைய எழுத்துநடை சுஜாதாவைப் பின்பற்றிய பாப்புலர் நடை என்றொரு கண்டுபிடிப்பை கண்ணன் வெளியிட்டிருக்கிறார். கடந்த முப்பது வருடங்களாக யாருமே செய்யாத ஆய்வுக் கண்டுபிடிப்பு இது. அதாவது கண்ணனின் கூற்றுப்படி, பாப்புலர் நடையென்றால் கதையை வாசகனுக்கு விரிவாகப் புகட்டும் நடையாம். இந்த விமர்சனம் என்னைக் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டியது உண்மையே. நான் எப்போதுமே கதைகளை மிக விரிவான சித்திரிப்புகளோடும் தரவுகளோடும் எழுதுபவன். கண்ணனுக்கு முன்பாக, இதே கூட்டத்தில் உரையாற்றிய அழகியபெரியவன் எனது இந்த அம்சத்தை எனது எழுத்தின் சிறப்பாகக் குறிப்பிட்டார். ஆனால், இதே அம்சம் கண்ணனுக்குக் குறையாகத் தெரிகிறது. இதைப் பாப்புலர் நடை என்கிறார். இந்த முறையில் எழுதுவது உள்ளே விசயங்களைப் பொதிந்து வைக்காது என்கிறார். உள்ளே பொதிந்து வைக்க நான் என்ன கள்ளக் கடத்தலா செய்கிறேன்? என்னுடைய ஒவ்வொரு சொல்லும் உணர்வும் வாசகர்களுக்குச் சிறு சேதமுமில்லாமல் கடத்தப்பட வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். ஆரம்ப காலங்களில் சில இருண்மையான கதைகளை எழுதியிருந்தாலும், இப்போது மிக விரிவாகவும் தெளிவாகவும் எழுதவே நான் விரும்புகிறேன். ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் தான் நூல்களை மொழிபெயர்த்திருப்பதின் அனுபவத்தின் வாயிலாகத் தன்னுடைய கருத்தைச் சொல்வதாகக் கண்ணன் குறிப்பிட்டார். அதே மொழிகளில் என்னுடைய நூல்களும் கதைகளும் வெளியாகியிருக்கும் அனுபவம் என்னுடைய எழுத்துநடை பிசகற்றது என்று எனக்குச் சொல்கிறது.  பொதிந்து வைத்து எழுதாமல் விரித்து எழுதுவதால் என்னுடைய எழுத்துகளில் வாசகருக்கு இடமில்லை என்று கண்ணன் சொல்கிறார். பொடி வைத்து எழுதுவதால், பொதிந்து வைத்து எழுதுவதால், திருகி எழுதுவதால்தான் கதையில் வாசகருக்கு இடமிருக்கிறது என்று நான் நம்பவில்லை. என்னுடைய உணர்ச்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு முற்று முழுதாக வாசகரிடம் தெளிவாகக் கடத்திவிடுதாலேயே கதையில் வாசகருக்கு இடம் கிடைக்கிறது, கதை முடிந்த பின்பும் அவர் அதைத் தொடர்ந்து சென்றபடியிருக்கிறார் என்பதே எனது நம்பிக்கை.  எழுத வந்த நாளிலிருந்தே ‘என்னுடைய கதைகள் அளவில் பெரிதான அரசியல் துண்டுப் பிரசுரங்களே’ எனப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்து எழுதிக்கொண்டிருப்பவன் நான். இதுவரை பேசப்படாத – சிக்கலான விடயங்களை எழுதுபவன். சமூகத்தின் கூட்டு நம்பிக்கைகளுக்கு எதிரான நிலையில் நின்று உண்மைகளைச் சொல்பவன். எனவே, என்னுடைய இந்தத் தெள்ளத் தெளிவான வெளிச்சமிடும் மொழிநடையே, எனது நோக்கத்தை எட்டுவதற்கான கூர்மையான கருவியாக எனக்குக் கைகொடுக்கிறது.  இமிழ் விமர்சனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியதற்காக தொகுப்பின் பதிப்பாசிரியர் என்ற முறையில் கண்ணன். எம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு இங்கே நிறுத்திக்கொள்கிறேன். கண்ணன் விரும்பினால் தொடர்ந்து உரையாட நான் தயாராகவேயுள்ளேன். https://www.shobasakthi.com/shobasakthi/2024/05/07/கண்ணன்-எம்-அவர்களின்-மேல/
    • அறியாமை கூட ஒரு அழகுதான்....... அறிவு வந்ததால் அழகியலை இழந்து விட்டோமே .......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.