Jump to content

Orumanam
Photo

மைத்திரேயியின் சமையல்கட்டு 05

 • Please log in to reply
19 replies to this topic

#1 மைத்திரேயி

மைத்திரேயி

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 332 posts
 • Gender:Female
 • Location:பருத்தித்துறை
 • Interests:சமைப்பது கர்நாடக சங்கீதம் புத்தகம் வாசித்தல்

Posted 16 June 2013 - 08:10 AM

தயிர் சாதம்

Thayir%20Saadham.jpg

என்ன வேணும்???

அரிசி (பஸ்மதி அரிசி ) 2கப் 3 பேருக்கு .

மோர்மிளகாய் 4 .

சின்னவெங்காயம் 6 .

கடுகு தாளிக்க .

இஞ்சி 1 துண்டு .

கஜூ 10 .

உப்பு தேவையான அளவு .

நல்லெண்ணை தேவையான அளவு .

கொத்தமல்லி இலை தேவையான அளவு .

தயிர் ( யோக்கூர்ட் ) 125 கிறாம் , 4 பெட்டி .

கூட்டல் :

ஒரு பானையிலை தண்ணியும் உப்பும் போட்டு தண்ணியை கொதிக்க விடுங்கோ . தண்ணி கொதிச்ச உடனை பஸ்மதி அரிசியை கழுவி போடுங்கோ . சோறு அரை பதத்திலை வெந்த உடனை வடிச்சு இறக்கி அதை ஆற விடுங்கோ . சின்ன வெங்காயம் , இஞ்சியை குறுணியாய் வெட்டுங்கோ . ஒரு தாச்சியை எடுத்து அதிலை கொஞ்சம் நல்லெண்ணை விட்டு , மோர்மிளகாய் ***, கஜூ எல்லாத்தையும் பிறிம்பாய் பொரிச்சு எடுங்கோ . மிஞ்சின எண்ணையிலை கடுகை வெடிக்க விட்டு , ஆறின சோறையும் , பொரிச்ச மோர் மிளகாய் , கஜூவையும் , சின்ன வெங்காயம் , இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு அகப்பையாலை கிண்டுங்கோ . இப்ப நீங்கள் எரியிற நெருப்பை நிப்பாட்டுங்கோ . தயிரையும் ( யோர்கூர்ட் ) போட்டு நல்லாய் கிளறுங்கோ . அடுப்பாலை இறக்கின உடனை கொத்தமல்லி இலையை நுள்ளி தயிர்சாதத்துக்கு மேலை போடுங்கோ . இவ்வளவு தான் .

பி கு : இது வேலைக்கு போட்டுவாற பொம்பிளையளுக்கு ஒரு குறைஞ்சநேரத்திலை செய்யிற சமயல் முறை . இப்ப வெய்யில் தொடங்கினதாலை , உடம்புக்கு சூட்டை குறைக்கிற சாப்பாடு . இதோடை கொஞ்சம் ஊறுகாய் ஏதாவது ஒரு சிப்ஸ் சேத்து சாப்பிடுங்கோ .
 
*** மோர்மிளகாயை பொரிச்சு சின்னத் துண்டாய் நுள்ளி போட்டு கலவுங்கோ .
 
மைத்திரேயி
16/06/2013

Edited by மைத்திரேயி, 29 August 2013 - 09:33 AM.

 • KULAKADDAN, சுபேஸ் and கோமகன் like this

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும் ; நல்ல முத்துச்

சுடர்போலே நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற்பட

வேணும்; என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல்வர வேணும் .

மைத்திரேயி

http://susheelarajarajan.blogspot.fr/

ninaivu-illam

#2 suvy

suvy

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,560 posts
 • Gender:Male
 • Location:France

Posted 16 June 2013 - 11:01 AM

அபாரமான அயிட்டம் ! நன்றி  மைத்ரேயி !!

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!!!

#3 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 30,636 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 16 June 2013 - 02:18 PM

செய்முறைக்கு நன்றி, மைதிரேயி. இந்திய நண்பர்களின் வீட்டில் சாப்பிட்டுள்ளேன். சுவையோ சுவை. உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#4 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,093 posts
 • Gender:Male
 • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
 • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 18 June 2013 - 05:27 PM

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும். 

#5 shanthy

shanthy

  முல்லைமண்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,241 posts
 • Gender:Female
 • Location:Germany

Posted 18 June 2013 - 07:41 PM

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

ஏனப்பு நீங்க அசைவமோ ? :lol:
 
தயிர்சாதம் செய்முறை தந்த மைத்திரேயி அக்காவுக்கு நன்றிகள். நாளைக்கு உங்கள் செய்முறை. ஏதும் பிழைச்சால் பொறுப்பு நான்தான். :D

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com /nesakkaram@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh

உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

http://www.nesakkaram.org

தொழில் நிறுவனம் மூலம்(HAND MADE CREATORS (pvt) Ltd)நீங்களும் உதவலாம் :- http://hmclk.com/

nesakkaram1.gifஎனது வலைப்பூ :- www.mullaimann.blogspot.com முல்லைமண் வலைப்பூ

Facebook :- https://www.facebook.com/rameshsanthi

Nesakkaram facebook :- https://www.facebook.com/pages/Nesakkaram-e-V/131188003615653?ref=hl

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -

#6 suvy

suvy

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,560 posts
 • Gender:Male
 • Location:France

Posted 18 June 2013 - 07:44 PM

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

செய்யலாம், அப்புறம் அது "பசு சாதம்" ஆயிடும்.  தயிரும் அதனுடையதுதானே  அதனால் பரவாயில்லை !

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!!!

#7 மைத்திரேயி

மைத்திரேயி

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 332 posts
 • Gender:Female
 • Location:பருத்தித்துறை
 • Interests:சமைப்பது கர்நாடக சங்கீதம் புத்தகம் வாசித்தல்

Posted 19 June 2013 - 07:28 PM

அபாரமான அயிட்டம் ! நன்றி  மைத்ரேயி !!

உங்கடை அவாவை கொண்டு செய்து சாப்பிடுங்கோ உடம்புக்கு நல்லது . உங்கடை மஃபிளர் இப்பவும் அவர் வைச்சிருக்கிறார் .

 • suvy likes this

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும் ; நல்ல முத்துச்

சுடர்போலே நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற்பட

வேணும்; என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல்வர வேணும் .

மைத்திரேயி

http://susheelarajarajan.blogspot.fr/

#8 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,523 posts
 • Gender:Male

Posted 19 June 2013 - 10:50 PM

வணக்கம், மைத்திரேயி!

உங்களைக் கொஞ்சக் காலம், காணேல்லை எண்டு யோசிச்சுக்கொண்டிருந்த நேரத்தில், உங்களைச் சோத்துப்பானையோட கண்டது சந்தோசம்!

இதுகளெல்லாம் செய்து பாக்க ஆசை தான்!

எண்டாலும் இந்தச் சோறு ஒரு நாளும் நான் நினைக்கிற பதத்தில வாறது குறைவு! :o

எங்கட ஊர் அரிசியளைப் பாவிக்காமல், தாய்லாந்து, வியட்னாம் போன்ற இடங்களில் விளையும் அரிசியைப் பாவித்துப் பார்க்கிறேன். அவை கொஞ்சம், குழைவுத் தன்மை கூடியவை!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com

#9 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,984 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 20 June 2013 - 12:49 PM

உங்கடை அவாவை கொண்டு செய்து சாப்பிடுங்கோ உடம்புக்கு நல்லது . உங்கடை மஃபிளர் இப்பவும் அவர் வைச்சிருக்கிறார் .

நன்றி............

நானும் தான்...

மறக்கமுடியுமே..... :icon_idea:

வந்த அத்தனை பேருக்குமல்லோ

தந்தவர்  சுவி அண்ணா......

 • SUNDHAL likes this

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

http://imageshack.us...es/593/rit.gif/

#10 ஆரதி

ஆரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,395 posts
 • Gender:Not Telling

Posted 20 June 2013 - 01:08 PM

நன்றி மைத்திரேயி. நான் தயிர் சாதம் இன்னும் சமைக்கவில்லை, நல்லாய்த் தான் இருக்கும் போலை. சமைத்துப் பார்த்துவிட்டு எழுதுகின்றேன்.#11 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,906 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 20 June 2013 - 07:54 PM

நன்றி............

நானும் தான்...

மறக்கமுடியுமே..... :icon_idea:

வந்த அத்தனை பேருக்குமல்லோ

தந்தவர்  சுவி அண்ணா......

உங்களது கோப்பி பார்ட்டிக்கு, ஆண்கள் மட்டும் தான்... வந்தவர்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன் விசுகு.

Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#12 சுபேஸ்

சுபேஸ்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,594 posts
 • Gender:Male
 • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 20 June 2013 - 11:34 PM

என்னிடமும் இன்னும் பத்திரமாக இருக்கு சுவி அண்ணா ஞாபகமாகா..நல்ல மனிதர்களை சாகும்வரை மறக்க முடியாது..

வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

Arguing with stupid people is like killing the mosquito on your cheek...... :D 

www.theeraanathi.blogspot.com/

#13 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,984 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 21 June 2013 - 05:14 PM

என்னிடமும் இன்னும் பத்திரமாக இருக்கு சுவி அண்ணா ஞாபகமாகா..நல்ல மனிதர்களை சாகும்வரை மறக்க முடியாது..

நான் 

நீங்கள் 

மற்றும்  கோ

இங்கு உறுதி  செய்யப்பட்டுள்ளது

மற்றது சாத்திரி

இணையவன்.

உங்களது கோப்பி பார்ட்டிக்கு, ஆண்கள் மட்டும் தான்... வந்தவர்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன் விசுகு.

சிறி

நீங்கள் இப்படி எம்மில் சந்தேகப்படக்கூடாது

மைத்திரேயி அவர் என்று குறிப்பிட்டது கோவை  :icon_idea:

 • கோமகன் likes this

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

http://imageshack.us...es/593/rit.gif/

#14 suvy

suvy

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,560 posts
 • Gender:Male
 • Location:France

Posted 21 June 2013 - 05:52 PM

அட  கோவின் கோதையா  மைத்ரேயி , 

குழப்பத்தைத் தீர்த்தத்துக்கு நன்றி விசுகு ! :D

அப்பவும்  யோசிச்சன் :  இணையவனும் , சுபேஸ்சும்  கன்னிக் காங்கேயன் காளைகள் .

திரு, திருமதி விசுவைத் தெரியும் .

திருமதி சாத்திரி  கொஞ்சம் டவுட்டா  இருந்தது .

திருமதி கோ . நோ டவுட் .

சபாஸ் சுவி யு ஆர் 006. :icon_idea:

 • மைத்திரேயி likes this
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!!!

#15 மைத்திரேயி

மைத்திரேயி

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 332 posts
 • Gender:Female
 • Location:பருத்தித்துறை
 • Interests:சமைப்பது கர்நாடக சங்கீதம் புத்தகம் வாசித்தல்

Posted 24 June 2013 - 07:45 AM

செய்முறைக்கு நன்றி, மைதிரேயி. இந்திய நண்பர்களின் வீட்டில் சாப்பிட்டுள்ளேன். சுவையோ சுவை. 

இதுதமிழ்நாட்டு ஆக்களின்ரை சாப்பாட்டு முறைதான் . ஆனால் எங்கடையாக்களும் இப்ப செய்யத்தொடங்கினம் .அதாலைதான் இந்த செய்முறையை தந்தன் . கஸ்ரப்பட்ட ஆக்களின்ரை சாப்பாட்டுமுறை எண்டாலும் வெய்யிலுக்கு இந்த சாப்பாடு  நல்லாயிருக்கும் . உங்கடை கருத்துக்கு நன்றி .
 
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும் ; நல்ல முத்துச்

சுடர்போலே நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற்பட

வேணும்; என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல்வர வேணும் .

மைத்திரேயி

http://susheelarajarajan.blogspot.fr/

#16 மைத்திரேயி

மைத்திரேயி

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 332 posts
 • Gender:Female
 • Location:பருத்தித்துறை
 • Interests:சமைப்பது கர்நாடக சங்கீதம் புத்தகம் வாசித்தல்

Posted 27 June 2013 - 07:40 AM

இணைப்பிற்கு நன்றிகள் ................ :) 

அப்படியே மாமிசம், மச்சம் போட்டு தயிர்சாதத்தை செய்ய முடியாதா ................. :D 

நீங்கள் மியூசிக் போடறனிங்கள் எண்டு வாசிச்சன் . ஒரு ராகம் வரவேணும் எண்டு நினைச்சு " ஸமகசரநி " எண்டு அடிக்கிறதுக்கு பதிலாய் " ஸாகமரசநீ " எண்டு கீ போர்ட்டிலை அடிச்சால் நீங்கள் நினைச்ச ராகம் வருமோ ?? உங்கடை வரவுக்கு நன்றி சொல்லுறன் :) .
 
 • தமிழ்சூரியன் likes this

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும் ; நல்ல முத்துச்

சுடர்போலே நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற்பட

வேணும்; என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல்வர வேணும் .

மைத்திரேயி

http://susheelarajarajan.blogspot.fr/

#17 மெசொபொத்தேமியா சுமேரியர்

மெசொபொத்தேமியா சுமேரியர்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,346 posts
 • Gender:Female
 • Location:மெசொப்பொத்தேமியா
 • Interests:எதைச் சொல்லுறது

Posted 27 June 2013 - 10:45 AM

இதைப் பார்க்க வெண்பொங்கல் போலலோ இருக்கு. ஏனெனில் வெங்காயத்தைத் தாளித்துச் செய்யும்போது இப்படி வெள்ளை வெளேர் என வராதே மைத்திரேயி.

ஊரோடும் உறவோடும் உயிரிற்கு மேலான மண்வாசனையோடும் உறவாட

http://poongkaadu.blogspot.uk/

#18 மைத்திரேயி

மைத்திரேயி

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 332 posts
 • Gender:Female
 • Location:பருத்தித்துறை
 • Interests:சமைப்பது கர்நாடக சங்கீதம் புத்தகம் வாசித்தல்

Posted 06 November 2013 - 05:51 PM

வணக்கம், மைத்திரேயி!

உங்களைக் கொஞ்சக் காலம், காணேல்லை எண்டு யோசிச்சுக்கொண்டிருந்த நேரத்தில், உங்களைச் சோத்துப்பானையோட கண்டது சந்தோசம்!

இதுகளெல்லாம் செய்து பாக்க ஆசை தான்!

எண்டாலும் இந்தச் சோறு ஒரு நாளும் நான் நினைக்கிற பதத்தில வாறது குறைவு! :o

எங்கட ஊர் அரிசியளைப் பாவிக்காமல், தாய்லாந்து, வியட்னாம் போன்ற இடங்களில் விளையும் அரிசியைப் பாவித்துப் பார்க்கிறேன். அவை கொஞ்சம், குழைவுத் தன்மை கூடியவை!

நீங்கள் எந்த முறையிலை சோறு போடுறியள் ??? றைஸ் குக்கறிலை போட்டால் நீங்கள் நினைச்ச பதத்திலை வாறது குறைவு . நான் எப்பவும் பானையிலை தண்ணியை கொதிக்கவிட்டு அரிசி போடிறனான் ( ஊரிலை அரிசி போடிறது மாதிரி ) .எந்த அரிசி சோறுக்கும்  பதம் ஒருக்காலும் பிழைக்காது . நீங்களும் செய்து பாருங்கோ . நீங்கள் கருத்து சொன்னதுக்கு நன்றி சொல்லிறன் .
 
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும் ; நல்ல முத்துச்

சுடர்போலே நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற்பட

வேணும்; என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல்வர வேணும் .

மைத்திரேயி

http://susheelarajarajan.blogspot.fr/

#19 sOliyAn

sOliyAn

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,996 posts
 • Gender:Male
 • Location:பிறேமன், ஜேர்மனி
 • Interests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?! :)

Posted 06 November 2013 - 11:19 PM

இந்த தயிர் சாதத்துக்கு கத்தரிக்காய் அல்லது வெண்டிக்காயை பொரிச்சுப்போட்டு கலக்கினால் நன்றாக இருக்குமா? ஏன் என்றால் வெறும் சோறையும் தயிரையும் சாப்பிடுறதை நினைக்க ஒருமாதிரி இருக்கு.

சமையல் குறிப்புக்கு நன்றி.  :)

பழையன அறிந்து புதியன புகுவோம்.

#20 மைத்திரேயி

மைத்திரேயி

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 332 posts
 • Gender:Female
 • Location:பருத்தித்துறை
 • Interests:சமைப்பது கர்நாடக சங்கீதம் புத்தகம் வாசித்தல்

Posted 13 November 2013 - 12:09 PM

இந்த தயிர் சாதத்துக்கு கத்தரிக்காய் அல்லது வெண்டிக்காயை பொரிச்சுப்போட்டு கலக்கினால் நன்றாக இருக்குமா? ஏன் என்றால் வெறும் சோறையும் தயிரையும் சாப்பிடுறதை நினைக்க ஒருமாதிரி இருக்கு.

சமையல் குறிப்புக்கு நன்றி.  :)

அதை குழை சாதம் எண்டு சொல்லுறவை .
 
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும் ; நல்ல முத்துச்

சுடர்போலே நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற்பட

வேணும்; என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல்வர வேணும் .

மைத்திரேயி

http://susheelarajarajan.blogspot.fr/யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]