Jump to content

முதல்வர் கனவோடுதான் கட்சியை தொடங்கினேன் - சீமான் பேட்டி!


Recommended Posts

முதல்வர் கனவோடுதான் கட்சியை தொடங்கினேன் - சீமான் பேட்டி!

[Tuesday, 2013-05-07 20:58:12]

 

Seeman-070513-758-001.jpg

 

 

ஈழம் தொடர்பான விவகாரங்களில் தொடர்ந்து வேகமாக இயங்கி வரும் தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவர் சீமான். சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்துத் திரும்பியவரை புதிய தரிசனத்திற்காகச் சந்தித்தோம். ஆவேசம், சிரிப்பு, கோபம் என்று பல்வேறு உணர்வுகள் வெளிப்பட்ட அவரின் பதில்கள் உங்கள் பார்வைக்கு..

  

சமீப காலமாக முதலமைச்சர் பதவியைக் குறிவைத்தே உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் இருக்கின்றதே. முதலமைச்சர் கனவோடுதான் கட்சியைத் தொடங்கினீர்களா ?

 

நிச்சயமாக..அதில் என்ன சந்தேகம்.. 'அனைத்துத் துன்பப் பூட்டுகளுக்கான சாவி ஆட்சி அதிகாரம் மட்டுமே� என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுகிறார். என்னால் 4 சீட்டு 5 சீட்டு வாங்கி இங்கே எதையும் சாதிக்க முடியாது.. ஈழ விவகாரத்தில் சரியான பங்களிப்பைச் செய்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. அவருக்குப் பின் வந்த அரசுகள் அனைத்துமே எங்களை ஏமாற்றத்தான் செய்தன. இன்றைக்கு ஈழம் சார்ந்து சிந்திக்கக் கூடிய வைகோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றோரிடம் அதிகார பலம் இல்லை. போர் உச்சத்தில் இருந்த போது எல்லோரும் கருணாநிதியை நம்பியிருந்தோம்.வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் பிரபாகரனே கருணாநிதி நம்மைக் கைவிட மாட்டார் என்று நம்பியிருந்தார்.

காரணம், போரை நிறுத்தும் உயரத்தில் இருந்தவர் கருணாநிதி. அதைப் போராடிச் செய்ய வேண்டிய இடத்தில் இருந்தவர் ஜெயலலிதா. இருவருமே அதைச் செய்யவில்லை. அதிகாரத்தில் இருப்பவனுக்கு நோக்கம் இல்லை. நோக்கம் இருப்பவனுக்கு அதிகாரம் இல்லை. ஆக அந்த அதிகாரத்தை கைப்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இதை பேராசை, கனவு, வெறி என்று எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். நல்லா எழுதுங்கள், நான் முதலமைச்சர் ஆவதற்காகத்தான் கட்சியை ஆரம்பித்தேன்.

முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சொல்கிறீர்கள்.. இந் தியா போன்ற ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரால் மட்டும்

 

எப்படி அந்த மாநிலத்தின் பிரச்சி னைகளுக்கு தீர்வு காண இயலும் என்று நினைக்கிறீர்கள்?

 

முடியும் தானே.. தேசியக்கட்சிகள் இன்றைக்கு தேய்ந்து கொண்டே செல்கின்றன. தேசியக்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட அந்தக் கட்சிகள் அந்த மாநிலம் தொடர்பான பிரச்சினைகளில் மாநிலக் கட்சிகள் போலத்தான் செயல்படுகின்றன. 400 இடங்கள் வரை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசியக் கட்சிகள் இன்றைக்கு சில 100 இடங்களுக்கு பெரும் சிரமப்படுகின்றன. ஆக, மாநிலக் கட்சிகள் வலிமை பெற்றுக் கொண்டிருக்கின்றன. மத்திய ஆட்சியிலும் கூட மாநிலக் கட்சிகளின் செல்வாக்குதான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.. ஆக இந்த நிலை வரும்போது நிச்சயம் நம்மால் மத்திய அரசை வலியுறுத்தி நமக்கான தேவைகளைப் பெற இயலும்.

 

கூடங்குளம் , ஈழம் , முல்லைப் பெரியாறு, காவிரி என்று பல்வேறு பிரச்சினைகளிலும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் பிளவுபட்டு நிற்பது அந்த நோக்கங்களை பலவீனப்படுத்தி விடாதா ?

 

யாருக்கு ஒருமித்த கருத்து இருக்குதுனு நினைக்கிறீங்க.. கூடங்குளம் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம் அதை மூடனும் அப்படிங்கறது திருமாவளவனோட கருத்து.

ஆனால் அதைத் திறக்கனும்னு சொல்கின்ற காங்கிரசோடு கூட்டணி வைத்திருந்தார். அதே கருத்துடைய தி.மு.க..வோடு இன்னும் கூட்டணியில் நீடிக்கிறார்.

காலையில் எங்களோடு போராடிவிட்டு மாலையில் இந்தக் கட்சிகளோடு இணக்கமாக இருந்தால் எப்படி நாங்கள் இவர்களோடு இணைந்து செயலாற்ற முடியும். பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உறவு சிங்களர்கள், தமிழர்கள் உறவை விட மோசமாக இருக்கிறது. வைகோ இருக்கிறார். அவரும் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு கட்சியோடு இணைந்து விடுவார். நாங்கள் தனித்து விடப்படுவோம்..அதற்கு இப்பொழுது இருந்தே நாங்கள் தனியாக நிற்பது நலம்.

 

தி.மு.க. காங்கிரசை விட்டு வெளியேறியது குறித்து ?

 

இத எப்ப செய்திருக்கனும்... போர் நடந்த போது செய்திருந்தால் நான் ஒரு கட்சி தொடங்க வேண்டிய தேவையே வந்திருக்காதே.. திருமாவளவனும்,ராமதாசும் சீட்டுக்காக கருணாநிதியின் வீட்டில் நிற்காமல், போராடுவதற்காக ரோட்டில் நின்றிருந்தால் இந்தப் பிரச்சினையே இல்லையே.

 

ஈழ விவகாரத்தில் இத்தனை ஆர்வம் காட்டும் சீமான் இங்கே தலித்துகள் சந்திக்கும் பிரச்சினைகளில் என்ன விதமான பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறதே ?

 

அதற்காக இங்கே நிறைய அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசியலை முன்னெடுக்கிறோம். அவர்களையும் நாங்கள் தமிழ்த் தேசிய இனத்தின் பிள்ளைகளாகத்தான் பார்க்கின்றோம். ஆக இந்த மாதிரியான குற்றச்சாட்டுக்கள் எல்லாம் தலித் அமைப்புகளுக்குள் இருக்கும் தலைவர்களால் சொல்லப்படுவதுதான். அவர்களுக்குப் பயம், எங்கே தங்கள் சமூகத்து இளைஞர்கள் சீமான் பின்னால் சென்று விடுவார்களோ என்று அந்த அச்சத்தின் காரணமாகவே இது போன்ற குற்றச்சாட்டுக்களை பரப்புகிறார்கள். நான் தலித்துகளுக்கு எதிரி என்றால் யார் நண்பன் என்று சொல்லச் சொல்லுங்கள்.

 

ஏற்கெனவே உங்களை ஒரு பெண்ணுடன் சேர்த்து செய்திகள் வெளி வந்த நிலையில் இப்பொழுது மீண்டும் அது போன்ற ஒரு சர்ச்சை எழுந்துள்ளதே?

 

இது போன்ற சர்ச்சைகளைப் பரப்புவது எதிரிகள் அல்ல. துரோகிகளாய் மாறிப்போன நம்மவர்கள்தான். சமீபத்தில் இணையதளத்தில் என்னை ஒரு பெண்ணோடு இணைத்து எழுதுவதற்குக் காரணம் நான் ஐரோப்பிய பயணம் செய்துவிட்டு திரும்பியதால் ஏற்பட்ட அச்சமே. புலம் பெயர் தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதற்காகவே இது போல் செய்கிறார்கள் . சீமான் பணம் வாங்கிவிட்டான், பதவிக்கு ஆசைப்பட்டு விலை போய்விட்டான் என்றெல்லாம் எழுத இயலாது. எனவே இப்படி வதந்தியைப் பரப்புகிறார்கள். அந்த இணையத்தில் என்னோடு சேர்த்து பேசப்பட்ட பெண் என் சகோதரி.

 

நீண்ட காலமாக இந்த விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண். அவளின் கணவர் என் மீது உயிராய் இருக்கிறார். இந்தச் செய்தியை லண்டனிலுள்ள இதயச்சந்திரனின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து அவருடைய கடவுச்சொல்லைத் திருடி அனுப்பியிருக்கிறார்கள். அவர் என் அண்ணன். அவர் என்னுடைய கடைசி நம்பிக்கை சீமான்தான் என்கிறார். ஆக இவை அனைத்தையும் சிதைக்கனும் என்ற நோக்கத்துடனேயே இந்தக் காரியம் செய்யப்பட்டுள்ளது. இதை காலில் பட்ட மலமாக எண்ணி புறந்தள்ளி விட்டுச் செல்வது மட்டுமே சிறந்த வழி.

 

தமிழ்த்தேசியம் என்ற பெயரில் தந்தை பெரியாரைக் கூட கடுமையாக விமர்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளதே... இது ஆரோக்கியமானதா ?

 

பெரியாரை யாரும் இங்கே விமர்சிக்க வில்லை.. தமிழர் களம் மாதிரியான அமைப்புகள் இங்கே பெரியாரை விமர்சிக்கிறார்கள். ஆனால் நாங்கள் பெரியாரை அப்படிப் பார்க்கவில்லை.அவருடைய பகுத்தறிவுக் கொள்கைகளையும், பெண் விடுதலைக்கான அவரது முயற்சிகளையும் நாங்கள் போற்றுகிறோம். அதே சமயம் பெரியாரின் மொழிக்கொள்கையை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது. பெரியார் மட்டுமில்லை.

அம்பேத்கர், மார்க்ஸ், ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அத்தனை பேரையும் நாங்கள் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தலைவன் என்பவன் வேறு. தகப்பன் என்றால் பெற்றவனாக இருக்க வேண்டும். தலைவன் என்றால் ரத்தமாக இருக்க வேண்டும். ஆக தகப்பனையும் தலைவனையும் கடன் வாங்க முடியாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் எதிர்ப்பது திராவிடத்தைத்தான். திராவிடத்தின் பெயரால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்களைத்தான். காரணம் அரை நூற்றாண்டு காலமாக இந்த மண்ணை ஆண்டது அவர்கள்தான் அவர்களால் இந்த இனத்திற்கு எந்த நன்மையும் இதுவரை இல்லை.. என் மொழி சிதைந்து , என் இனம் அழிந்து, என் உரிமைகள் பறிபோனது இவர்களால்தானே..அப்படி இருக்கையில் எப்படி இவர்களை ஆதரிக்க இயலும்.?

 

நாங்கள் பெரியாரை கடைப்பிடிப்பவர்களாக இருக்கிறோம்..இங்கே சிலர் பெரியாரை காப்பியடிப்பவர்களாக இருக்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்ள இயலாது.. பெரியாரை நாங்கள் தமிழ்த் தேசியத்தின் எதிரியாக பார்க்கவில்லை. அதே சமயம் அவரை தமிழ்த் தேசியத்தின் தலைவராகவும் ஏற்றுக் கொள்ள இயலாது. மற்றொன்று எல்லாவற்றையும் பகுப்பாய்ந்து பார்க்க வேண்டும் விமர்சிக்க வேண்டும் என்பதே பெரியாரின் கொள்கை. ஆக பெரியாரை விமர்சிக்கவே கூடாது என்பது அடிப்படை மதவாதம் போல் ஆகிவிடும்.

 

ஈழம் போன்ற பிரச்சினைகளில் கருணாநிதியை விமர்சிக்கும் அளவிற்கு யாரும் ஜெயலலிதாவை விமர்சிப்பதில்லையே நீங்கள் உட்பட. ஏன் பயமா?

 

அப்படி எல்லாம் கிடையாது. இந்தக் கேள்விகளைக் கேட்பதே கருணாநிதியின் அருகில் இருப்பவர்கள்தான். ஈழ விவகாரத்தில் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் கருணாநிதியின் செயல்பாடுகளை விட பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும். இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று கூறியது, இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு தடை போட்டது, மூவர் தூக்கு நேரத்தில் அவரின் நடவடிக்கைகள், என அனைத்துமே கருணாநிதியை விட பரவாயில்லை என்றே தோன்ற வைத்தது. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஈழத்திற்கு ஆதரவாக எங்களால் போராட்டம் நடத்தக் கூட இயலவில்லையே.

 

இப்பொழுது கூட மாணவர்கள் போராட்டம் வீரியத்தோடு நடைபெற்றதற்கு மாநில அரசின் அணுகுமுறையும் ஒரு காரணம் தானே..தனி ஈழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியது முதல் எத்தனையோ விசயங்களை அவர் செய்திருக்கிறார். இது போன்ற விசயங்களைக் கூட கருணாநிதி செய்யவில்லையே. அதற்காக ஜெயலலிதாவை விமர்சிக்காமலே இல்லையே. பரமக்குடி துப்பாக்கிச் சூடு, கூடங்குளம் போராட்டத்தில் அவரின் நிலைப்பாடு போன்றவற்றை நாங்கள் கண்டிக்கின்றோம். எங்களுக்குப் பயமில்லை.. கடந்த தி.மு.க.ஆட்சியில் தொடர்ந்து சிறையில் அடைத்தார்களே அப்பொழுது என்ன பயந்து பேசுவதை நிறுத்தவா செய்தோம். நாங்கள் மக்களுக்கானவர்கள். தொடர்ந்து போராடத் தயாராகவே இருக்கின்றோம்.

 

ஈழம் தொடர்பான போராட்டங்களில் கருணாநிதியை விட ஜெயலலிதாவே பரவாயில்லை என்கிறீர்கள்... ஆனால் 'போர் என்றால் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது� என்றும், 'பிரபாகரனை கைது செய்ய வேண்டும்' என்றும் பேசியவர்தான் ஜெயலலிதா. அதை இவர்கள் ஏன் மறைக்கிறார்கள் என்று ஒரு விமர்சனம் உங்கள் மீது வைக்கப்படுகிறதே ?

 

 

ஜெயலலிதா தனி ஈழம் பெற்றுத் தருவார் என்று நாங்கள் ஒரு போதும் நினைக்கவில்லை. எங்களிடம் இன்று ஆட்சி அதிகாரம் இல்லை... நிச்சயம் ஒரு நாள் அது வரும். அப்பொழுது தனி ஈழத்தை நாங்கள் பெற்றுக் கொள்ளுவோம். இது ஒரு புறம் இருக்கட்டும்.. பிரபாகரனைத் தூக்கிலிடச் சொன்னார். ஜெயலலிதா என்றெல்லாம் பேசும் தி.மு.க.வினரைப் பார்த்துக் கேட்கின்றேன். 91 ல் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு மாநிலங்களவையில் பேசிய முரசொலி மாறன் ராஜீவ்காந்தியைக் கொன்றது பிரபாகரன்தான் என்றால் அவரைப் பிடித்து தூக்கில் போடுங்கள் என்று பேசினாரே, அதற்கு தி.மு.க.வினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?

இன்றைக்கு இதுபோன்ற பிரச்சினைகளைக் கிளப்பி விடும் தி.மு.க.அன்று ஜெயலலிதா பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சொன்னபோது எதிர்ப்பு தெரிவித்ததா...? இல்லையே, நடுநிலைதானே வகித்தது ? 'போர் என்றால் பொதுமக்கள் சாவது இயற்கைதானே� என்று சொன்ன ஜெயலலிதாவிற்கும், 'போர் முடிந்து விட்டது' என்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாகச் சொன்னீர்களே... ஆனால் இன்னும் அங்கு மக்கள் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது �மழை விட்டாலும் தூவானம் விடாது' என்று சொன்ன கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஆக இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுமே என் இனத்தை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம்.

 

வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரசை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்யும் திட்டம் ஏதும் இருக்கிறதா ?

 

(சிரித்துக் கொண்டே தொடங்குகிறார் ). எதிர்க்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் தற்போது இல்லை. காலம் கடந்து விட்டாலும் கூட சமீப காலமாக ஐயா ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் எல்லாம் ஓரளவிற்காவது தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் குரல் கொடுத்து வருகிறார்கள். ப.சிதம்பரம் மட்டும்தான் எதையும் பேச மறுக்கிறார். தமிழகத்தில் யாரும் காங்கிரசுடன் கூட்டணி வைக்காத பட்சத்தில் அதை எதிர்க்க வேண்டிய தேவையே இங்கு இருக்காது என்றே தோன்றுகிறது..அவர்கள் ஏற்கெனவே பலவீனப்பட்டுப் போய்தான் இருக்கின்றனர்.

 

ப.சிதம்பரம் போன்றவர்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மட்டுமல்ல பொது மக்களின் மனநிலையே அப்படித்தான் இருக்கின்றது. அதனால் பெரிதாக அவர்களுக்கு எதிராக இம்முறை பணியாற்றும் தேவை இருக்காது என்றே தோன்றுகிறது..ஒரு வேளை அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் நிச்சயம் அதைச் செய்வோம். ஆனால் நாங்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

 

 

பொன்.மூர்த்தி

 

 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் இலட்சியம் நிறைவேற வாழ்த்துகள்

 

நாம் தமிழர் கட்சி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்

அதி உச்சக் கவனம் அவசியம்  

 

Link to comment
Share on other sites

காலில் பட்ட மலமாக எண்ணி புறந்தள்ளி விட்டுச் செல்வது மட்டுமே சிறந்த வழி.

 

 

 

 

 

 
 
சிங்க நடைக்கு வைச்சானய்யா ஆப்பு.  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

தமிழிழ கனவு, தமிழக முதல்வர் கனவு ,ஏனப்பா எல்லாரும் பகல் கனவு காண்கின்றார்கள் .

Link to comment
Share on other sites

விடிய 9 மணிக்கு (கனடிய நேரம்) வரும் கனவு பகல் கனவாக தான் இருக்க வேண்டும். :)  :)

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா சொல்வது கசப்பாக இருந்தாலும் அதைச் சொல்லும் உரிமை அவருக்கே அதிகம் உண்டு.. "24 மணிநேரத்தில் தமிழீழம்" என்கிற உன்னதமான பகற்கனவுடன் போராடப்போனவர் அல்லவா? :D

Link to comment
Share on other sites

நாங்கள் போனது "அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய " :icon_mrgreen:.

அதில் ஓரளவு வெற்றிதான் .

Link to comment
Share on other sites

நாங்கள் போனது "அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய " :icon_mrgreen:

 

 

உமாவை அனாதரவாக விட்டது இந்த  சாதனைக்குள் அடங்குகிறதா??  :D  :D

Link to comment
Share on other sites

நாங்கள் போனது "அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய " :icon_mrgreen:.

அதில் ஓரளவு வெற்றிதான் .

 

நீங்கள் சொல்லாமே தெரியும் தானே. விடுதலைக்காக போராட போனவர்களை அழித்த வெற்றி உங்களதுதான் என்பது பலதவை சொல்லிவிட்டீர்களே.

அண்மையில் யாழில் பிரபல்ய பட்ட பெண்ணின் கதை சில வெற்றி வீறாப்பு பேசுபவர்களின் கதையைவிட நல்லது. அவள் தன் தந்தை தன் காதலர்களில் ஒருவரை கண்டித்தார் என்பதற்காக கண்ணைதோண்டுவித்து கொலை செய்வித்தாள். இவர்கள் காலர்களையும் கண்ணைத்தோண்டி கொலை செய்து, தந்தையையும் கொலை செய்ததாக வீறாப்பு பேசுபவர்கள்.

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா "அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய" என்று புறப்பட்டபோது ஜே.ஆரின் ஆட்சிக்காலம்.. அதை ஒப்பிடும்பொழுது மகிந்தரின் அடக்குமுறை குறைவானது என்பதால் அர்ஜுன் அண்ணாவுக்கு ஓரளவு வெற்றிதான்.. :D

Link to comment
Share on other sites

இன்னொரு புலிகள் உருவாகக்கூடாது என்பதில் அப்பவே மிக தெளிவாக இருந்தோம் .

அனைத்து அடக்குமுறைகள் என்றால் அதற்குள் சிங்கள அரசுகளும் அடங்கும் .

 

Link to comment
Share on other sites

இன்னொரு புலிகள் உருவாகக்கூடாது என்பதில் அப்பவே மிக தெளிவாக இருந்தோம் .

அனைத்து அடக்குமுறைகள் என்றால் அதற்குள் சிங்கள அரசுகளும் அடங்கும் .

 

 

தெளிவாக இருந்து உங்களுக்குள் அடிபட்டு இறந்தீர்கள்.
 
சிங்கள இனவாத ஜே.வி.யுடன் சேர்ந்து முழு இலங்கைக்கும் ஒரு தீர்வு எடுக்கலாம் என இருக்க சுனாமிக்கு வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட பணத்தையே கொடுக்க விடாமல் அரும்பாடு பட்டு அப்பணத்தை நிறுத்தியது.
 
என்ன ஒரு தீக்கதரிதன பார்வை. உங்களை தவிர யாராலும் இப்படி சிந்தித்து செயலாற்ற முடியாது.
Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா "அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய" என்று புறப்பட்டபோது ஜே.ஆரின் ஆட்சிக்காலம்.. அதை ஒப்பிடும்பொழுது மகிந்தரின் அடக்குமுறை குறைவானது என்பதால் அர்ஜுன் அண்ணாவுக்கு ஓரளவு வெற்றிதான்.. :D

 

அவர் முதலில் சொன்னது, அரசின் வெற்றியை தாங்கள் தான் புலிகளை வென்றதாக காட்டவே. அடக்குமுறையாளர் என்று நசூக்காக புலிகளைத்தான் எழுதினார்.  ஏன் எனில் முள்ளளிவாய்க்காலில் வெல்லபட்டது புலிகளை மட்டும்தான்.  வென்றது அடக்குமுறையாளரான அரசுதான். ஆனால் அரசுக்குக்கு கூட ஒரளவு வெற்றியே என்பதும், போராட்டம் தொடர்வதால் அரசு இப்போது தளம்புகிறது என்பதையும் அவர் மறக்காததால் "ஓரளவு வெற்றி" என்றும் அதையும் நசூக்காகவே முடித்திருந்தார்.  தந்தையை கொன்றமகளின் கதையை எழுதியவுடன புலிகளைத்தான் அழித்தனாங்கள் ஆனல் அரசும் அடங்கும் என்று மாற்றுகிறார். இப்படி வெறும் சொல் மாயா ஜாலம் காட்ட முயல்கிறார்.

 

புலிகளின் அடக்குமுறை வெல்ல என்று ஆரம்பித்த POLTE ஆக இருந்திருந்தால் அது சகோதர போட்டி இயக்கமாக வரமுடியாது என்றதை அவர் உணராதபடியால் தான் அடக்குமுறையை சிலேடையாக அரசுக்கும் புலிகளுக்கும் பாவித்தாதாக மாற்றுகிறார். இப்போது குழம்பியிருப்பத்தால்  மொத்தத்தில் POLTE  புலிகளுடன் போட்டி இயக்கமாக இருக்கவில்லை என்கிறார். 

 

அடக்குமுறையை குறைவானது என்றஸ்நினைத்து சற்று உயர்வான அடிமைச்சாசனம் எழுதிக்கொண்டு சிதார்த்தன் அடிமையாக அரசுகளின் காலடியில் விழுந்தது PLOTE என்ற போராட்ட அமைப்பு நிர்மூலமான பின்னராகும் . அடிமையான  பின்னர் என்றுமே PLOTE அடக்குமுறையை பற்றி  அலட்டிக்கொள்ளவில்லை. இந்தக்காலங்களில் அர்ச்சுன் தான் PLOTE யைபோட்டுக்கொடுத்துவிட்டு வெளிநாடுகளுக்கு வந்து விட்டதாக எழுதுகிறார்.

 

இப்போது PLOTE என்பது நிர்மூலமான பின்னர் அரசு பெற்ற வெற்றியை, அடக்குமுறைக்கு எதிரான புலிகளின் மீதான வெற்றியாகவும்,  அதை   ஆரம்ப காலம் முதல் கொள்கை வகுத்து  POLTE பெற்றுக்கொண்டதாக சொல்கிறார்.

 

யச்சீர் அரபாத் இலங்கை வந்த போது சித்தார்தன் அரசுக்காக கேள்வி கேட்க போயிருந்தார். அப்போது PLO உலகத்தில் பயங்கரவாத்தை பரப்புவதாக குற்றம் சாட்டினார். அதை யச்சீர் அரபாத் மறுத்தார். உடனே சித்தார்தான் "நான் கூட வந்து உங்களிடம்  பயங்கரவாதம் கற்றிருந்தேனே" என்றார். வாயடைத்துப்போய்விட்டார் அரபாத். பழக்கி விட்ட அரபாத்தை தலைவன் போட்டுக்கொடுத்த பாணியிலேயே அர்ச்சுன் தானும் PLOTE ன் தலைமையையே போட்டுக்கொடுத்ததாக கூறுவார்ர. (சிதார்தன் இப்படி செய்தும் அவருக்கு ஒரு அரசும் மந்திரிப்பதவி கொடுக்க வில்லை- ஆனால் செயலாளர் நாயகத்துக்கு கொடுத்தார்கள்) போட்டுகொடுப்பது தான் தலையில் இருந்து தொண்டர் வரைக்கும், அன்றிலிருந்து இன்று வரைக்கும் PLOTE ன் கொள்கையாக இருந்ததே அல்லாமல் அடக்குமுறையை அறுப்பது என்று அவர்களிடம் இருக்கவில்லை.

 

இப்படியேதான்  PLOTE  எப்போதும் செய்தது கேணைத்தன பழி வாங்கல்களே. PLOTEன் சரிந்திரத்தை யாரவது இழுத்துவிட்டால் அர்ச்சுன் அதுதான் அவர்களை போட்டுக்கொடுத்தேன் என்பார்.  அது இல்லாத நேரம் புலிகளை போட்டு கொடுத்தோம் என்பார். இப்போதோ புலிகள் ஆரம்பமானகாலத்திலேயே புலிகள் மாதிரி இன்னொரு இயக்கம் உருவாகாமல் தடுக்க முடிவெடுத்திருந்தோம் எங்கிறார். அப்பாவித்தனமாக  இப்படி கண்டபடி எல்லாம் வாயில் வந்த படி எழுதி தனக்கு  PLOTE ன் கொள்கைகளில் ஒரு விளக்கம் இருக்கவில்லை என்பதை மட்டும் அல்ல PLOTE க்கும் எப்பவுமே சொல்லத்தக்கதாக எந்த கொள்கையும் இருக்கவில்லை என்கிறார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி அர்சுண், தாங்கள் யாழ்களத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தியள் எண்பதுகளின் பிற்பகுதியிலேயே நாட்டை விட்டு வெளிநாடு போய்விட்டதாகளிந்த லட்சணத்தில் எப்போது தாங்கள் அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடினானீங்கள்! கனடா போய் அசைலம் அடிச்சால் வதிவிட அனுமதி கிடைக்கவேணும் என்பதற்கான அனுபவமும் சம்பவங்களையும் கணக்குப்பண்ணிப் போராடினீங்களோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியம்.. திமுக.. அதிமுக நிலைப்பாடுகள்.. ஈழ ஆதரவு.. தலித்து நிலைப்பாடு.. பெரியார்.. திராவிடம்.. தலைவன்.. தகப்பன்.. கருணாநிதி.. ஜெயலலிதா.. காங்கிரஸ்.. திருமா.. வைகோ.. பெண்.. இணையம்.. என்று தன்னை நோக்கி வைக்கப்படும் அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் நேர்த்தியான பதில் அளித்துள்ள இந்த தெளிவு தான் சீமானை மக்கள் முன் வழிநடத்துகிறது.

 

நன்றி அண்ணன் சீமான். இதே தெளிவோடு முன்னேறிச் செல்லுங்கள். மக்கள் பலத்தோடு வெல்வீர்கள்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

கனவோடு தானே. அப்ப பரவாயில்லை தாயாக கனவுடன் சாவினை தழுவியவர்கள் பல்லாயிரம். இவர் முதல்வர் கனவோடு வந்திருக்கிறார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு புலிகள் உருவாகக்கூடாது என்பதில் அப்பவே மிக தெளிவாக இருந்தோம் .

அனைத்து அடக்குமுறைகள் என்றால் அதற்குள் சிங்கள அரசுகளும் அடங்கும் .

 

புலியை... சிங்களவனுக்கு,  காட்டிக் கொடுத்து நாலு வருடம் கடந்து விட்டது.

இப்போ.... என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள். சிங்களவனை தட்டிக் கேட்க உங்களால் முடியுமா?

விசர்க்கதைகள் தொடர்ந்தும்... கதைப்பதை நிறுத்துங்கள்.

Link to comment
Share on other sites

புலியை... சிங்களவனுக்கு,  காட்டிக் கொடுத்து நாலு வருடம் கடந்து விட்டது.

இப்போ.... என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள். சிங்களவனை தட்டிக் கேட்க உங்களால் முடியுமா?

விசர்க்கதைகள் தொடர்ந்தும்... கதைப்பதை நிறுத்துங்கள்.

 

இரத்தத்துடன் ஊறிவிட்டது, மாற்றுவது கஷ்டம்

Link to comment
Share on other sites

கனவோடு தானே. அப்ப பரவாயில்லை தாயாக கனவுடன் சாவினை தழுவியவர்கள் பல்லாயிரம். இவர் முதல்வர் கனவோடு வந்திருக்கிறார். :)

 

இதில் உங்கள் விக்கல் நன்றாக தெரிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பத் தொடங்கீட்டாங்கையா ஐயோ ஐயோ :o :o

 

Link to comment
Share on other sites

சீமான் அண்ணா நீங்கள் முன்னேறி செல்ல வாழ்த்துகள். :)

 

இது மே 6 ஆம் திகதி தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதான படங்கள்.

 

321319_520509207984865_346245263_n.jpg

 

215280_520509307984855_828162592_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் சீமான் முதல்வராக சீக்கிரம் வரோணும் என்று தான் ஆசை :D அதற்கு பின்னராவது அவருடைய உண்மையான முகத்தை புலம் பெயர் தமிழர் புரிந்து கொள்ளட்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு இருக்கிறது ஒரு முகம் தான்... அவர பற்றி தெரியாத ஆக்கள் தான் அவருக்கு பல முகம் என்று சொல்லுவினம்...

Link to comment
Share on other sites

இதில் புலம் பெயர் தமிழருக்கு என்ன இருக்கிறது என்பதை புரியாதவர்கள் எழுதும் அரசியல் தான் அது.

 

தமிழகத் தமிழர் எந்த நாளிலும் முள்ளிவாய்க்காலில் வந்து இராசயனக் குண்டு போடவில்லை. கருணாநிதி போல கேவலக் கெட்ட துரோக கும்பல் கூட அதைச் செய்ய வில்லை.  கருணாநிதி கூடகிந்திய இராணுவத்தை வரவேற்கத்தான் மறுத்தவர். மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டி அவர்களை சிங்கள அரசு நாடுகடத்தும் போது  வடக்கு-கிழக்குத்  தமிழர் அரசை காப்பாற்றியது மாதிரியா இன்னொருதடவை கிந்திய அரசு முள்ளிவாய்க்காலில் வந்து இரசாயனக்குண்டு போட்டால்  சீமான் கிந்திய அரசைக்காப்பற்றிவிடுவார். 

 

இதில் எப்படி சீமானின் உண்மை முகத்தைபுலம் பெயர் தமிழ் காணப்போகிறார்கள் என்று ஒற்றை வரி எதிர்வு கூறுகிறார்கள்? ஒற்றை வரிக்கு மேலே போகமுடியாத அரசியல் அறிவு. அதை வைத்து  எதிர்வு கூறல். இந்த எதிர்வு கூறல்கள் தமிழரை அழிக்கும் ஆற்றல் கிந்தியனின் இரசாயனக் குண்டுகளுக்கு கூட இருக்க முடியாது.

 

இன்று வடக்கு கிழக்கு தமிழருக்கு தேவையானது, இன்றைய கிந்திய அரசின் முகமூடியை கிழித்து, அதன் ஆதரவாளர்களை விழுத்தி, ஐ.நா வரும் பிரேரணைகளில், பொது நலவாயக்கூட்டங்களில் கிந்திய அரசின் தமிழர் எதிர்ப்பு வினைகளை தகர்ப்பதாகும். இதையேதான்  சீமான். செய்கிறார். இதில் என்னது புதிய முகம் பார்க்க இருக்கு? இதை விட்டு விட்டு தமிழருக்குள்ளேயே  ஒட்டி இருந்து கொண்டு தமிழரையே அழிக்கும் சக்திகள் தாம் இன்று செய்து கொண்டிருப்பதை நாளைய சீமானின் பெறுப்பேறாக இருக்கபோவத்தாக  காட்டும் எதிர்வு கூறல்களை பற்றி யாருக்கு என்ன?.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.