Jump to content

பராசக்தி - திரைவிமர்சனம்


Recommended Posts

விமர்சனத்துக்கு முன்பான என் குறிப்பு : இந்த விமர்சனத்தை எழுதியவர் சைவப்பெரியார் சூரன்... இவர் என் நண்பர் மயூரியின் பாட்டனார்.... ஈழத்திலே ஜாதி வேறுபாடுகள் களைய போராடியவர்.... ஆலயங்களில் பலிகளைத் தடுக்க தன் தலையையே பலி பீடத்தில் வைத்தவர்.... தனது இலங்கை விஜயத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி இவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்....

பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவரான சூரன் பராசக்திக்கு எழுதிய விமர்சனமே இலங்கையின் முதல் படவிமர்சன நூலாகும்.... ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் அடிப்படைக் கல்வி கற்ற திரு. சூரன் பராசக்தியின் திறனாய்வுக்காக சைவ சித்தாந்த கருத்துக்களை ஆதாரமாக காட்டியிருப்பதே இந்த விமர்சனத்தின் சிறப்பு....

நாத்திகப் படம் என்று பலரால் தூற்றப்பட்ட அல்லது போற்றப்பட்ட பராசக்திக்கு ஒரு பழுத்த ஆத்திகர் அவரது பார்வையில் விமர்சனம் எழுதி இருப்பது கொஞ்சம் வித்தியாசமாவே இருக்கிறது.... சரி விமர்சனத்துக்கு போவோமா? கொஞ்சம் நீண்ட விமர்சனம்.... பொறுமை இருந்தால் மட்டுமே படிக்கவும்.... 1952ஆம் ஆண்டு ஈழத்து எழுத்துத் தமிழை விமர்சனகர்த்தா பயன்படுத்தி இருக்கிறார்....

விதவை கல்யாணிக்கு அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி!

பராசக்தி என்ற பேசும்படம் இந்து சமயத்தை ஏளனஞ் செய்கிறதென்று சிலர் சொல்லக்கேட்டு, நான் அப்படத்தைப் பார்க்க விரும்பவில்லை. தற்செயலாக மேற்படி படக்கதைப் புத்தகமொன்று எனக்குக் கிடைத்தது. அதை வாசித்தேன், அக்கதையிலே சமய தூசணையின்றி எமது சமயச்சார்பான பல இரகசியங்களைக் கண்டேன். அதன்பின் அப்படத்தை இரண்டு முறை பார்த்தேன். படம் பார்ப்பதற்காக நான் கொடுத்த சிறுதொகைப் பணத்தால் சிலைமதிப்பற்ற எமது சமய தத்துவ இரகசியங்கள் பலவற்றை நேரிற் கண்டறிந்தேன்.

அதாவது எமது சமயநூல்கள் உலகியல் அநுபவங்களைப்பற்றி எந்தெந்த விதமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றனவோ அந்தந்த விதமாகவே உலகம் இன்றும் நடைபெற்ற வருதலை நாம் நேருக்கு நேர் காண்கின்றோம். ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்எனையாளும் ஈசன் செயல்இஃது ஒளவைத்திருமகள் வாக்கு. இதன் பொருள் வெளிப்படை, இதன்கண் எடுத்தோதப்பட்ட உண்மைகள், எக்காலத்திலாதல் எவர் அநுபவத்திலாதல் பொய்யாதல் இல்லை. அவ்வுண்மைகளைக் கூறுகூறாக மேற்படி பராசக்திக் கதையோடு சார்த்தி ஆராய்வோம்.

“ஒன்றை நினைக்க வேறொன்று ஆனது"

மாணிக்கம்பிள்ளையின் புதல்வர்களாகிய சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் என்னும் மூவரும் பர்மாதேசத்தில் இருக்கிறார்கள். அவரின் புதல்வி கல்யாணிக்குத் திருமணம் நிச்சயமாகிறது.. தன் விவாகத்திற்குத் தமையன்மார்கள் வரவேண்டுமென்பதைக் கல்யாணி தந்தைக்கு அறிவிக்கிறாள். தங்கையின் கல்யாணத்திற்குப் போக நினைத்த சகோதரர்கள் மூவருக்கும் கப்பல் சீட்டுக் கிடைக்காமையால் இளையோன் குணசேகரனை மட்டும் அனுப்புகிறார்கள். இந்தியா வந்து சேர்ந்த குணசேகரனின் பணப்பெட்டியை ஒரு தாசி அபகரிக்கிறாள். இங்கு கல்யாணி நினைத்தது. முதல் குணசேகரன் பணம் பறிகொடுத்தது ஈறாக அவர்கள் நினைத்தபடி நடவாமல் எல்லாம் வேறாக மாறியே நடந்தன.

“நினையாதது முன்வந்து நின்றது"

அதன்பின் கல்யாணி பிரசவிக்கிறாள். அதே சமயத்தில் அவளுடைய கணவனும் தந்தையும் அகாலமரணமடைகிறார்கள் பர்மாவிலே யத்தவிமானங்கள் குண்டுமாரி பொழிகின்றன. சந்திரசேகரனும் அவன் மனைவியும், ஞானசேகரனும் பாதசாரிகளாக இந்தியா வருகிறார்கள். குண்டுசீச்சில் அகப்பட்ட அவர்களும் பிரியநேருகிறது. சந்திரசேகரன் ஆஸ்பத்திரியில் ஞானசேகரனைக் காணாமையால் துன்புற்ற அழுகிறான் பணத்தைப் பறி கொடுத்த குணசேகரனோ ஊணுறக்கமின்றி நடைப்பிணமாக அலைந்துலைகிறான். இங்கு அவர்கள் நினையாத காரியங்கள் அவர்கள் முன்வந்து அவர்களை அலைத்து நிற்கின்றன.

“அநுபவிக்கவேண்டிய பிராப்த கன்மவினை"

அப்பால் மாணிக்கம்பிள்ளையின் வீடுவளவு முதலியனவெல்லாம் அவர்பட்ட கடனுக்காக விலைப்படுகின்றன. கல்யாணி திக்கற்றவளாய் வேறிடத்தில் இட்டலி வியாபாரம் செய்து காலம் கழிக்கிறாள். இந்தவிதமாக மாணிக்கம்பிள்ளையின் குடும்பத்துக்கு நேர்ந்த அவகதிக்குக் காரணம் பழைய ஊழ்வினை என்றார் ஒளவைப்பிராட்டியார். “ஆழ அமுக்கி முகக்கினும் அழ்கடல்நீர்நாழி முகவாது நால்நாழி - தோழிநிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்விதியின் பயனே பயன்"என்றபடி அவரவர்கள் செய்த வினையின் பயனை அவரவர்களே அநுபவித்துத் தீர்க்கவேண்டும்.

இதுவே விதியின் முடிபு, “விரவுமிப் பிறப்பிற் பொருந்து வல்வினை உடலுடன் அகலும்"என்ற ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளுக்குச் சிவபெருமான் பரமாசாரிய வடிவத்தில் திருப்பெருந்துறையில் உபதேசித்தருளினார். அதாவது ஒருவர் ப+மியிற் பிறந்தபின் அவருக்கு நியமனமாயிருந்த ப+ர்வகன்ம வினையை அவர் உடல் உள்ளவும் அநுபவித்தே தீரவேண்டும். இங்கு வல்வினை என்றது பிராப்த கன்மவினையை. இந்தவினை குபேரசம்பத்துடன் இன்பத்தையும், அல்லது கொடிய வறுமையுடன் துன்பத்தையும் அநுபவிக்கச் செய்யும். இவை பூர்வத்தில் அவரவர் செய்த நல்வினை தீவினைகளைப் பற்றி நிற்பனவாம்.

“நாழிமுகவாது என்றது, அவரவருக்கு அளந்த அளவை மிஞ்சாது என்றபடி இவற்றைஎண்ணி மனந் தளராது அநுபவிக்கவேண்டிய பல கஸ்டங்களையும் அநுபவித்துச் சன்மார்க்க நெறியாகிய சத்தியம், நீதி, நிலைதிறம்பாமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து, உய்ரையும் பொருட்படுத்தாது ஒரே பிடிவாத வைராக்கிய பக்தியுடன் நிலைநிற்பவரே திருவருட் சக்தியைப் பெறுவர். ஆரம்பமுதற் பல கஸ்டங்களை அநுபவித்தும், மகளிர் குணங்களாகிய மடம், நாணம்,அச்சம், பயிர்ப்புடையளாய்க் கற்பென்னும் திண்மையுடன் விளங்கி, அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியைப் பெற்றவள் இக் கதாநாயகியாகிய கல்யாணியே. இவள் தன் கணவனையும், தாய் தந்தையரையும், வீடுவளவு முதலிய பொருட்களையும் தன் வாலைவயதில் இழந்து, சகோதரர்களையும் பிரிந்து, தன் குழந்தையின் பொருட்டு உயிர் தாங்கி நின்று தெருக்கோடியிலே ஓட்டைக் குடிசை ஒன்றில் இட்டலி அவித்து விற்கிறாள். வேணு என்ற காடையன், அவள் இதயத்தில் கற்பென்னும் அக்கினி இருப்பதை அறியாது, தன்பாவ அழுக்குக் கையால் அவளின் புனிதக் கையைப்பற்றி இழுக்கிறான். உடனே அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி, குணசேகரனை அதிட்டித்து நின்ற வேணு என்ற அம்மனிதக் குரங்குக்குப் போதிய அடி, உதை கொடுத்து ஒடச்செய்கிறது.

அந்த அர்த்தசாம வேளையில் அக்காடையன் கையிலிருந்து கல்யாணி விலகியமை அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியே, அதனையன்றி யாம் சொல்லத்தக்கது வேறுயாது? கல்யாணி குணசேகரனைத் தன் தமையனென்றறியாமல் பைத்தியக்காரனாகவே எண்ணிக் கிறுக்கண்ணா என்றே அழைக்கிறாள். இட்டலி வியாபாரம் தெருக்கோடிச் சோம்பேறிகளைத் தன்பால் வரவழைப்பதாக உணர்ந்த கல்யாணி, தொழிலையும் இடத்தையும் கைவிட்டு அகலுகிறாள். குணசேகரன் அவளைத்தேடி அலைகிறான்.

“குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்நடைமெலிந் தோரும் நண்ணிணும் நண்ணுவர்" என்ற பிரகாரம், முன்னொரு போது செல்வச் சிறப்புடன் வாழ்ந்த கல்யாணி இப்போது தெருநீளம் நடந்து ஊரூராகத் திரிகிறாள்.

“சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்"

கல்யாணி தான் பட்டினி கிடந்தமை காரணமாகக் குழந்தைக்குக் கொடுக்கப் பால் இல்லாமற்போகவே, பிச்சையெடுக்க ஆரம்பிக்கிறாள். இவ்வாறு பசியின் கொடுமையாற் பல இடற்களிலும் பிச்சை கேட்டுச்சென்ற கல்யாணி கள்ளமார்க்கட் வியாபாரி ஒருவனிடம் வீட்டுவேலையாளாக அமருகிறாள். வியாபாரி தன் மனைவியைப் படம் பார்க்க அனுப்புகிறான். அவள் திரும்பி வருவதற்குள் தனது துர்த்தத்தனத்தைக் கல்யாணியிடங்காட்ட நினைத்த வியாபாரி கள்ளமார்க்கட்டில் தான் பதுக்கிவைத்திருக்கும் புளி மூட்டை முதலியவற்றை இழுப்பதுபோல அவள் கையைப்பிடித்து இழுக்கிறான்.

இந்தச் சமயத்திலே கல்யாணியின் இதயக்குரல் கேட்ட அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி வியாபாரியின் மனைவியால் வேகமாகப் பாய்ந்து, படம் பார்த்துக்கொண்டிருந்த குறையில் அவளைக் கறகறவென்று இழுத்துவந்து கல்யாணியின் முன்விட்டு அவள் கற்பைக் காப்பாற்றியது.

அதன்பின் அவ்விடத்திலும் இருக்க விருப்பமற்று வெளியேறிய கல்யாணி சேகரன் என்ற நீதவானைப் பிச்சைகேட்டு அவன் காலில் விழுகிறாள். அவன் தனது சப்பாத்துக்காலால் கல்யாணியையுங் குழந்தையையும் உதைத்து வெருட்டுகிறான். அங்கு நின்ற கல்யாணி குழந்தையுடன் ஒரு காளிகோயிலை அடைகிறாள். அக்கோயிலிலே சமய அறிவும் சன்மார்க்கமும் இல்லாத மூடப்பூசாரி அவளைப் பார்த்து உனைப்போன்ற ஏழைகளுக்கே அம்பாள் நல்லருள் தருவாள் என்றுகூறி அவளை மரியாதையுடன் உள்ளே அனுப்புகிறான். பொய்,களவு, வஞ்சனை, காமம் முதலிய பாதகங்களையெல்லாம் தன்நெஞ்சத்திருத்தி அவைகளைப் பிறர் காணாதவாற விப+தி சந்தணம் உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களைப் புறத்தே அணிந்துநின்ற அப்போலிப் பூசாரியின் சிந்தனை அலைகள் மூன்றாகப் பிரிகின்றன.

உலகம் மாயையின் தோற்றம், மாயை மூன்றுவகைப்படும். பிரகிருதிமாயை, அசுத்தமாயை, சுத்தமாயை என்பனவே அவை. பிரகிருதியாய்நின்ற பூசாரியை மயக்கத்தைச் செய்யும் அசுத்தமாயை கல்யாணியின் மையலில் தூண்டிவிடுகிறது. அறிவுக்க வித்தாகிய சுத்தமாயை தன்வலுவிழந்து பின்செல்லுகிறது. இறைவனுடைய திருவருட்சக்தி பதியப்பெறாத எவரும் இந்த அசுத்தமாயையின் சேட்டையினின்றும் மீள்வதில்லை. ஆகவே சகல அண்டசராசரங்களுடன் கலந்தும் அவற்றைக் கடந்தும் நிற்கும் மெய்ப்பொருளாகிய இறைவசந்நிதானத்தில் தான் செய்யத் துணிந்த துர்க்கிருத்தியத்திற்கப் பெட்டிப் பாம்பு தன்னை ஆட்டுங்குறவன்வழி ஆடுவதுபோல அன்னைபராசக்தியும் தன்வழி நின்று துணைபுரிவாளென மயங்கிய பூசாரி கல்யாணியின் கரத்தைப் பற்றுகிறான்.

அக்கணமே அன்னை பராசக்தியின் திருவருட்சக்திக் கண்ணினின்றும் சிறுபொறிகள் சிதறிச்சென்று அப்பூசாரியின் பண்ப்யாளாகிய குப்பன்பாற் புகுந்து அவனை நித்திரை விட்டெழச்செய்து மணியை அடிப்பிக்கிறது. மணியோசை கேட்டுத் திடுக்கிட்ட பூசாரி கல்யாணியின் கையை மெல்லவிட்டு விடுகிறான. கல்யாணி வெளியேறுகிறாள்.

இறுதியில் தானுந் தன்குழந்தையும் உயிர்விடுத்தே விமோசனத்துக்கு வழியெனக் கருதிய கல்யாணி ஓர் ஆற்றின் பாலத்தின்மேல் நின்றுகொண்டு குழந்தையை ஆற்றிலே எறிந்துவிட்டுத் தானும் விழுந்துமடிய எத்தனிக்கையில் அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியானது அந்த ஆற்றிலே படகோட்டிக்கொண்டு நின்ற விமலா என்னும் ஒரு யுவதியின் மடியிலே குழந்தை விழுமாறும் கல்யாணியைப் பொலீசார் கண்டு தடுத்து நிறுத்துமாறும் செய்தது. இந்த இடத்தில் நாம் அறியவேண்டியது கடவுள் தோன்றாத் துணையிருந்து அருள்புரியும் திறனாகும்.

திருநாவுக்கரசு சுவாமிகளைச் சமணர்கள் கல்லோடு சேர்த்துக்கட்டிக் கடலிலே விட்டபோது அக்கல்லே, தெப்பமாக மிதந்து சென்று திருப்பாதிரிப்புலிய+ரில் சுவாமிகளைக் கரையேற்றியது. அப்பொழுது சுவாமிகள் “ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினாய் என்னும் தேவாரத்தைத் திருவாய்மலர்ந்தருளினார். அது தேவாரத்தின் இறுதியடி. “தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யேங்களுக்கே என்பது.

இறைவிபக்தியிற் சிறந்த கல்யாணி பல கஸ்டங்களுக்குட்பட்டும் வைராக்கிய திடசித்தத்துடன் கற்புநெறிநின்று ஒழுக்கங்காத்தமையால் அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி அவளை நிழல்போலத் தொடர்ந்துசென்று வேண்டிய சமயங்களிலே தோன்றாத்துணை புரிந்து வந்தது. திருவருள் தோன்றாத்துணை அளிப்பதுபோலவே தோன்றாத் தண்டனையும் அளிப்பதுண்டு. கள்ளமார்க்கட் வியாபாரி கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பி வீட்டுக்கு வருகிறான். அவனுடைய வேலைக்காரன் கொடுத்த பாதித் தேங்காயைப் பிச்சைக்காரனிடமிருந்து பறித்துவிடுகிறான். இதுகண்ட குணசேகரன் அன்னை பராசக்தியின் அதிட்டிப்பால் வியாபாரியிடமிருந்த பிரசாதம் முழுவதையும் தட்டுடன் பறித்துப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்துவிட்டு வியாபாரியை நையப்புடைத்து உதைத்து ஓடச்செய்கிறான். வியாபாரிக்க இங்கு கிடைத்த தண்டனை கல்யாணியைத் தொட்ட பாவத்தின் வினையென்பதை யாருமறியார். இதுவே தோன்றாத் தண்டனையாம்.

கல்யாணி கொலைக் குற்றவாளியாகக் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறாள். விசாரணை நடத்திய சேகர் என்னும் நீதிபதி அவளுடைய பூர்வீக வாழ்க்கை வரலாற்றை அவள் கூறக்கேட்டு அவளே தன்னிடம் பிச்சைகேட்க வந்து, தன் சப்பாத்துக் காலால் இடறுண்டு போனவள் என்றும், அவளே தன்தங்கை கல்யாணி என்றும் அறிந்து தலை சுழன்று கீழே விழுகிறார். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பைத்தியக்காரன்போற் கிடந்து “கல்யாணி! என் கல்யாணி! என்று பிதற்றுகிறார்.

பூசாரியின் அடாத செயலுக்குத் தோன்றாத்தண்டனை புரியச் சங்கற்பஞ்செய்த அன்னை பராசக்தியின் திருவருட்சக்தி, பூசாரியின் பணியாளாகிய குப்பன் வாயிலாக கோயிலில் நடந்த சம்பவத்தைக் குணசேகரன் கோயிலுக்குச் சென்று ப+சாரிக்குக் கத்தியால் வெட்டுகிறான். பொலீசார் கைதுசெய்து கோட்டிலே நிறுத்துகிறார்கள். சேகருக்குப் பதிலாக வேறொரு நீதிபதி கல்யாணியின் விசாரணையைத் தொடர்ந்து நடத்துகிறார். அங்க குணசேகரன் தன்னை வஞ்சித்துப் பணத்தை அபகரித்த தாசி, கல்யாணியின் கற்பைச் சூறையாடச் சூழ்ச்சிசெய்த வேணு, கள்ளமார்க்கட் வியாபாரி, பூசாரி என்பவர்களைக் குறிப்பிட்டுக் காட்டி முன்நடந்த சம்பவங்களையெல்லாம் பிரஸ்தாபித்து வாதாடுகிறான்.

கல்யாணி தன் தங்கை என்றும், அவள் நிரபராதி என்றும் எடுத்துக்காட்டி அவளை விடுதலை செய்யுமாறும் தனக்குத் தண்டனை விதிக்குமாறும் கோட்டாரை வேண்டுகிறான். நீதிபதியோ கல்யாணி கொலைக்குற்றவாளியென்றே சாதிக்கிறார். அப்பொழுது அன்னை பராசக்தியின் திருவருட்சக்தியால் உந்தப்பட்டு “கல்யாணி குற்றவாளி இல்லை இதோ கல்யாணியின் குழந்தை என்ற கூறிக்கொண்டு குழந்தையுடன் விமலா கோட்டிலே பிரசன்னமாகிறாள்.

அரவு தீண்டி இறந்த தேவதாசன் உயிர்பெற்றெழுந்தபோது சந்திரமதி அடைந்த பெருமகிழ்ச்சிபோல கல்யாணியம் ஆற்றில் எறியப்பட்டு மாண்டுபோன தன் குழந்தை மீண்டுவந்தமைகண்டு குதுஸகலித்து விமலாவிடமிருந்து குழந்தையை வாரியெடுத்தணைத்து முத்தமிடுகிறாள். நீதிபதி விமலாவைப் பார்த்து, அக்குழந்தை உயிருடன் அவள் கையில் எவ்வாறு எறியப்பட்டதென வினாவ, அவளும் தான் நிலாக்காலங்களில் வழக்கமாக வள்ளத்திலே உலாவப் போவதென்றும், அன்றும் அப்படியே போய்க்கொண்டிருக்கையிற் தன்படகிலே அக்குழந்தை விழுந்ததென்றம் சொல்லி மேலும் நடந்தவற்றைப் பிரஸ்தாபிக்கிறாள். அவ்வளவிற் கல்யாணி நிரபராதியென விடுதலையாகிறாள்.

குணசேகரன் பூசாரியை வெட்டியது தற்பாதுகாப்பின் பொருட்டென உணர்ந்த நீதிபதி அவனுக்கும் விடுதலையளிக்கிறார். எல்லோரும் சந்திரசேகரன் வீட்டிற்குப் போகிறார்கள். பிச்சைக்காரர் மாகாநாடு கூட்டுவதில் பணிசெய்துகொண்டு திரிந்த ஞானசேகரனும் அங்கு வந்து சேருகிறான்.

“ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம்"

இதுவரை மாணிக்கம்பிள்ளையின் குடும்பத்தை அல்லோலகல்லோலப்படுத்திய பிராப்த கன்மவினை முற்றாக அநுபவித்துத் தீர்ந்துபோகவே அவர்களின் நல்லூழ் ஒன்று கூட்டியது. இதற்கு முன்பும் அவர்கள் எல்லோரும் ஓரூரில் இருந்தும் ஒருவரையொருவர் சந்தித்தும் “ ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம்" என்றபடி ஒருவரையொருவர் அறிந்து சேர்ந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சந்திப்பிற்குப் பின், ஆடம்பர வாழ்க்கைச் சிகரத்தில் நின்ற சந்திரசேகரனும், ஒருவேளைக் கஞ்சிக்காகப் படாதபாடெல்லாம்பட்ட கல்யாணி - குணசேகரன் என்பவர்களும் பிச்சைக்காரர் முன்னேற்றத்துக்காக இரவுபகல் பணியாற்றி வந்த ஞானசேகரனும் அவனை அடுத்திருந்த பிச்சைக்காரர்களும் “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேஅல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே"என்ற தாயுமானார் வாக்கின்படி எல்லோரும் வாழவேண்டும் என்பதற்காகச் சாந்தநாயகி அனாதைவிடுதி அமைத்து அமைதியாகத் தொண்டாற்றுகிறார்கள்.இவ்வளவோ

Link to comment
Share on other sites

அரஹரநமப் பார்வதே பதி...

அரஹர மகா தேவா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Mokka post pottu mokkaiya time pass pannalam vaanga frds  ·  Rejoindre   Selva Rajan  ·   ·  பத்து புள்ள தங்கச்சிக்கு... பொறக்கணும்... நான் பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்... மாமான்னு சொல்லணும்... மழலை எல்லாம் கேட்கணும்... முத்தமிட்டு மடியிலே... கொஞ்சணும்... பால் கொடுப்பேன்... தேன் கொடுப்பேன்... நான் பாட்டு பாடி தூங்க... வைப்பேன்..........!
    • Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 11:08 AM   காசாவில் செயற்படும் ஒரேயொரு மருத்துவமனைக்குள் சிக்குண்டுள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்,  அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கிருந்து தன்னையும் தனது குழுவினரையும் வெளியேற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் மருத்துவமனைக்கு மருந்துபொருட்களை அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் கான் யூனிசில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்குள் சிட்னியை சேர்ந்த மருத்துவர் மோதர் அல்பெருட்டி உட்பட 16 மருத்துவர்களும் மருத்துவசுகாதார பணியாளர்களும் சிக்குண்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் அவுஸ்திரேலிய மனிதாபிமான பணியாளர் கொல்லப்பட்டது போன்ற நிலை எங்களிற்கு ஏற்படுவதற்கு முன்னர் எங்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள் என்பதே எங்கள் செய்தி என அவர் கார்டியன் அவுஸ்திரேலியாவிற்கு தெரிவித்துள்ளார். காசா மனிதாபிமான பொருட்கள் மருத்துவ பணியாளர்களை பெறுவதற்காக எல்லையை திறக்குமாறு அழுத்தங்களை கொடுங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அல்பெருட்டி மே மாதம் முதலாம் திகதி பாலஸ்தீன அமெரிக்க மருத்துவ குழுவுடன் காசாவிற்கு சென்றார். நாங்கள் 13 ம் திகதி அங்கிருந்து வெளியேற திட்டமிட்டிருந்தோம் எனினும் ஏழாம் திகதி இஸ்ரேலிய படையினர் ரபாவை கைப்பற்றியதால் எங்களை அங்கிருந்து வெளியேறமுடியவில்லை சர்வதேச மனிதாபிமான பணியாளர்களிற்கான ஒரேயொரு பாதையையும் அவர்கள் மூடிவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் பணியை  ஒருவாரத்திற்கு முன்னரே பூர்த்தி செய்துவிட்டோம்; எங்கள் குடும்பத்தவர்கள் கவலையடைந்துவிட்டனர் அவர்களிடமிருந்து அழுத்தங்களை எதிர்கொள்கின்றோம் மூன்றுவாரங்களின் பின்னர் நாங்கள் களைத்துப்போய்விட்டோம் எனவும் அவுஸ்திரேலிய மருத்துவர் தெரிவித்துள்ளார். அல்பேருட்டி குழுவினர் காசாவிற்குள் மருந்துகள் மருத்துவம பொருட்களை எடுத்துச்சென்றனர் ஆனால் அவைமுடிவடையும் நிலையில் உள்ளன எனவும் அவர்தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/184117
    • ஹெலிகாப்டர் விபத்து: இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது? இஸ்ரேலில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY 37 நிமிடங்களுக்கு முன்னர் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி வெளியானதும் இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் வரத் தொடங்கின. இந்த ஹெலிகாப்டர் விபத்து ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் திங்கள் கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின்னர் ஹெலிகாப்டரில் யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் இல்லை என இரான் நாட்டு ஊடகம் தெரிவித்தது. ரைசியின் மரணம் உறுதி செய்யப்பட்டதும் இஸ்ரேல் சமூக ஊடகங்களில் மேலும் தீவிரமாக எதிர்வினைகள் வரத் தொடங்கின. இரானிலும் ரைசியின் திடீர் மரணம் குறித்து சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஏற்பட்டது. முதலாவதாக, சிரியாவில் உள்ள இரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலடியாக ஏப்ரல் 2024இல், இஸ்ரேலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கியது இரான்.   இந்த மோதல் சம்பவங்களுக்கு மத்தியில் ரைசியும் இரானின் வெளியுறவு அமைச்சரும் திடீரென மரணமடைந்தது இஸ்ரேல் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரைசியின் மரணத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது. செய்தி முகமை ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, பெயர் கூற விரும்பாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, “ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குப் பின்னால் இஸ்ரேல் இல்லை.” என்று கூறியுள்ளார். எனினும் இஸ்ரேல் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்டது தொடர்பாக இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து எழும் கேள்விகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இரானிய செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ கூற்றுப்படி, இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு இரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே காரணம் என்று இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து முகமது ஜவாத் கூறியதாவது, ‘‘இதயத்தை உலுக்கும் இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவும் ஒரு காரணம். விமானப் போக்குவரத்துத் துறை இரானுக்கு எதையும் விற்கக் கூடாது என்று அமெரிக்கா தடை விதித்தது. இந்த காரணத்திற்காக அதிபரும் அவரது தோழர்களும் உயிர் தியாகம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் இந்த குற்றம் இரானிய மக்களின் நினைவிலும் சரித்திரத்திலும் பதிவாகியிருக்கும். இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது இரான் அமெரிக்காவிடம் உதவி கோரியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கா உதவி செய்யவில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் திங்களன்று, “இரான் அரசாங்கம் எங்களிடம் உதவி கேட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் எந்த வெளிநாட்டு அரசும் உதவி கேட்டாலும் நாங்கள் உதவ தயாராக உள்ளோம் என்று இரான் அரசிடம் தெரிவித்தோம். ஆனால் இறுதியில் தளவாட பிரச்னை காரணமாக (logistical reasons) எங்களால் உதவ முடியவில்லை.” என்றார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினிடம் இந்த விவகாரத்தில் இரான் அமெரிக்காவை குற்றம் சாட்டக்கூடும் என்று கவலைப்படுகிறீர்களா? என்று கேள்வியெழுப்பட்டது. "இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் பதிலளித்தார். அமெரிக்க செனட்டர் சக் ஷுமர் திங்களன்று, "அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் அதிகாரிகள் உடனான உரையாடல்களின் அடிப்படையில், இரான் அதிபர் மரணத்தில் சதி இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்.   இஸ்ரேல் ஊடகங்களின் எதிர்வினை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. `டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ என்னும் தளத்தில், ரைசியின் ஹெலிகாப்டர் விபத்திற்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு அதிகாரி கூறிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி அறிக்கையின்படி, இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன், "ரைசியின் மரணம் இஸ்ரேல் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது. அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ரைசியின் மரண செய்தி எங்களுக்கு முக்கியமில்லை. இது இஸ்ரேலின் நிலைப்பாட்டை எந்த விதத்திலும் பாதிக்காது. இரானின் கொள்கைகளை உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி தீர்மானிக்கிறார். ரைசி ஒரு கொடூரமான மனிதர் என்பதில் சந்தேகமில்லை. அவரது மரணத்துக்கு கண்ணீர் வடிக்க மாட்டோம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த செய்தி அறிக்கையில், பிரதமர் அலுவலக துணை அமைச்சர் அவி மாவோஸின் கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது, “ஒரு மாதத்திற்கு முன்பு ரைசி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், பிழைக்க மாட்டீர்கள் என்று மிரட்டல் விடுத்தார். ஆனால் இப்போது அவரே உயிருடன் இல்லை.” என்று பேசியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தியில், இந்த கருத்துகளை மேற்கோள் காட்டி, ரைசியின் மரணத்தை இஸ்ரேலுக்கு ஒரு நல்ல செய்தி என்று விவரித்துள்ளனர். ரைசி மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேலிய நகரமான பேட் யாமில் உள்ள ஒரு மதத் தலைவர் தனது மாணவர்களிடம் வார நாட்களில் யூதர்கள் ஓதும் பிரார்த்தனையை தவிர்க்கச் சொல்லி இருக்கிறார். பொதுவாக இந்த பிரார்த்தனைகள் பண்டிகை சமயங்களில் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி அறிக்கையில், ரைசியின் மரணத்திற்குப் பிறகு கொண்டாட்டம், நடனம் போன்ற விஷயங்களும் சில இடங்களில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது. "தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்” பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இப்ராஹிம் ரைசி இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் எழுச்சி குறித்து `யாய் நெட்’ செய்தி இணையதளத்தில் கட்டுரையாக பகிரப்பட்டுள்ளது. அந்த கட்டுரைக்கு 'தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு செய்தி இணையதளம், `இரானின் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதனின் மரணம்’ என்ற தலைப்பை வழங்கியுள்ளது. ரைசியின் மரணத்துக்கு கண்டிப்பாக கண்ணீர் வராது என்று எழுதப்பட்டுள்ளது. இரான்-இராக் போரின் போது நடந்த படுகொலைகளால், அங்குள்ள மூத்த குடிமக்களின் மனதில் ரைசி குறித்து ஒருவித பயம் நிலவுகிறது. ஹிஜாப் தொடர்பான கண்டிப்பு காரணமாக, பெண்கள் ரைசியை வெறுக்கிறார்கள் என்றும், இரானின் புரட்சிகர காவலர்களும் அவரிடமிருந்து தள்ளி இருந்ததாக அந்த செய்தி அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நீதித்துறையில் பணியாற்றத் தொடங்கிய ரைசி, பல நகரங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் நீதிபதியாகவும் ஆனார். ரைசி 1988 இல் உருவாக்கப்பட்ட உளவுத்துறை நீதிமன்றத்தில் சேர்ந்தார், அது 'மரணக் குழு' என்று பலரால் அழைக்கப்பட்டது. ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளிடம் இந்த நீதிமன்றங்கள் மீண்டும் விசாரணை செய்தன. இந்த நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் மனித உரிமை அமைப்புகள் அவர்களில் சுமார் 5,000 ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்று கூறுகின்றனர். தூக்கிலிடப்பட்ட பின்னர், அவர்கள் அனைவரும் வெளியுலகிற்கு தெரியாத பெரிய புதைகுழிகளில் புதைக்கப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறுகின்றனர். இந்த குற்றங்களில் தனக்கு பங்கில்லை என இப்ராஹிம் ரைசி மறுத்தார். ஆனால் அவர் ஒரு முறை இரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி ஃபத்வாவின் படி, இந்த தண்டனை 'பொருத்தமானது' என்று கூறினார். ரைசியின் உடல் தெஹ்ரானுக்கு கொண்டு வரப்படும் போது, யாரும் உண்மையாக கண்ணீர் சிந்தமாட்டார்கள் என்று `யாய் நெட்’ தெரிவிக்கிறது. `ஜெருசலேம் போஸ்ட்’ செய்தி அறிக்கை ரைசியின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் நடந்து வரும் பரபரப்பை பற்றி குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது? இஸ்ரேலில் சில சமூக ஊடக கணக்குகளில் இருந்து ரைசியின் மரணம் குறித்த மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன. சிலர் ரைசியின் ஹெலிகாப்டரை `எலி காப்டர்’ என்ற மொசாட் ஏஜென்ட் ஓட்டிச் சென்றதாக கிண்டலாக பகிர்ந்துள்ளனர். எலி கோஹன் என்பவர் இஸ்ரேலின் உளவாளி. இஸ்லாமில் `கமில்’ (Kamil) நிலையை எட்டியதன் மூலம், கோஹன் சிரியா அதிபருடன் மிகவும் நெருக்கமாகி விட்டார், அவர் சிரியாவின் துணை பாதுகாப்பு அமைச்சராக ஆகும் நிலையில் இருந்தார். 1967 அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேலின் வெற்றியில் கோஹன் சேகரித்த உளவுத்துறை தகவல் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் `எலி காப்டர்’ என்ற பெயர் எலி கோஹனின் பெயருடன் இணைக்கப்பட்டு பேசப்படுகிறது. இஸ்ரேலின் பிரெஞ்சு மொழி செய்தி சேனலின் (I-24) நிருபரான டேனியல் ஹைக், `எல்லி காப்டர்’ நகைச்சுவை பற்றி செய்தியாக வெளியிட்டார். இருப்பினும், மக்கள் இதை விமர்சித்ததால், சேனல் தரப்பு மன்னிப்பு கேட்டது.   பட மூலாதாரம்,BBC/PUNEET KUMAR படக்குறிப்பு,எலியாஹு பென் ஷால் கோஹன் அல்லது `எலி கோஹன்' ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடினார்களா? ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடியதாக துருக்கிய செய்தி நிறுவனம் அனடோலு (Anadolu) தெரிவித்துள்ளது. கலாசார அமைச்சர் அமிச்சாய் எலியாஹு ஒரு கோப்பையில் ஒயின் இருக்கும் படத்தை X தளத்தில் இல் வெளியிட்டு, `சியர்ஸ்’ என்று பகிர்ந்துள்ளார். அவர் மற்றொரு ட்வீட் பதிவில், "நேற்றிரவு வரை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணத்தை விரும்பிய இந்த பைத்தியக்காரர்களும், வலதுசாரி மக்களும், இரான் கொலையாளியின் மரணத்தை நாம் கொண்டாட வேண்டாம் என்று விரும்புகிறார்கள்.” என்று பதிவிட்டுள்ளார். சில இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் இந்த செய்தி அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் ரைசியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டாம் என்றும், ரைசியின் பழைய அறிக்கைகளை மேற்கோள் காட்டியும் பதிவிட்டுள்ளனர். இப்ராஹிம் ரைசியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. https://www.bbc.com/tamil/articles/c10049qge74o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.