Jump to content

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுகள் நடத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் - ரொபட் ஓ பிளேக்


Recommended Posts

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுகள் நடத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் - ரொபட் ஓ பிளேக்
                                             cb7821f1-1770-418b-a997-c8f80e124d7a1.jp

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாவதற்கும், மத்தியஸ்தம் வகிப்பதற்கும் உதவ தென்னாபிரிக்காவோ அல்லது ஏனைய மூன்றாம் தரப்போ முன்வருமானால் அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது. அத்துடன், செப்டம்பர் மாதத்துக்குள் வடக்குத் தேர்தலை நடத்தி, அதிகாரங்களைப் பகிர்வது குறித்து கூட்டமைப்புடன் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் கடும்போக்கு குறைக்கப்பட்டது என எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ரொபர்ட் ஒ பிளேக் அடியோடு நிராகரித்துள்ளார்.

இலங்கை தொடர்பான பிரேரணையை ஜெனிவா மனித உரிமைபேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தமக்கு திருப்தியளிக்கக்கூடியதாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=cb7821f1-1770-418b-a997-c8f80e124d7a

Link to comment
Share on other sites

இலங்கை தொடர்பான பிரேரணையை ஜெனிவா மனித உரிமைபேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தமக்கு திருப்தியளிக்கக்கூடியதாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

தீர்வு தேவையான தமிழ் மக்கள் திருப்தி அடையவில்லை. 
 
நடுநிலைமை பற்றி தமிழ் மக்கள் ஏமாற்றமான பல அனுபவங்களை கண்டுள்ளார்கள்.
Link to comment
Share on other sites

இலங்கை சுதந்திரமான விசாரணையை நடாத்த தவறினால் சர்வதேச பொறிமுறை வலியுறுத்தப்படும்! - பிளேக்


[sunday, 2013-03-24 21:20:12]

blake-seithy-20120914-150.jpg

போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத் தன்மையுடைய விசாரணையை இலங்கை நடத்தத் தவறினால், சர்வதேச சமூகம் அங்கு ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தும் என்று அமெரிக்காவின் அரசுத்துறையின் துணைச் செயலர்களில் ஒருவரான றொபர்ட் பிளேக் கூறியுள்ளார். தற்போதைய ஜெனிவா தீர்மானம் ஒரு சுதந்திரமான, நம்பகத்தன்மையுடைய புலன் விசாரணை குறித்து வலியுறுத்துகிறது என்று கூறிய பிளேக், இந்த விடயத்தில் இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்குமென்று தாம் எதிர்பார்ப்பதாகவும், ஆனால் அப்படி அது செய்ய விரும்பா விட்டாலோ அல்லது அதற்கு செய்ய முடியாமல் போனாலோ சர்வதேச சமூகம் ஒரு சர்வதேச பொறிமுறையை அங்கு செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

ஆகவே ஒரு சொந்தமான, சுதந்திரமான, நம்பகத்தன்மையுடைய விசாரணையை தம்மால் நடத்த முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டிய அழுத்தம் இப்போது இலங்கையின் மீது இருக்கிறது என்றும் அவர் கூறினார். மனித உரிமைகள் என்பதைவிட அமெரிக்காவுக்கு இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததில் உள்நோக்கம் இருப்பதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பிளேக் அவர்கள், இலங்கை தீவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும், பொறுப்புக் கூறலையும் கொண்டு வருவதுதான் தங்கள் நோக்கம் என்றும், இலங்கை மக்களுடனான தங்கள் உறவை தொடர்ச்சியாக கட்டியெழுப்புவதும் அதில் அடங்கும் என்றும், அதனை விட தங்களுக்கு வேறு எந்த விதமான நோக்கமும் தங்களுக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

அந்தப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் குறித்து தங்களுக்கு அக்கறை, ஆர்வம் உள்ளது என்றும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, கடற்போக்குவரத்து பாதுகாப்பு, அதுபோன்ற பல விடயங்கள் குறித்தும் அந்தப் பிராந்தியத்தில் தங்களுக்கு அக்கறை உள்ளது என்றும் அவர் கூறினார். இலங்கையை, அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம், இந்தத் தீர்மானத்தின் மூலம் பிளவுபடுத்த முயற்சிப்பதாக இலங்கை அரசாங்க தரப்பினரால் குற்றஞ்சாட்டப்படுவதை பிளேக் மறுத்துள்ளார். அமெரிக்காவும் , சர்வதேச சமூகமும் இலங்கையை மீண்டும் ஒன்றுபடுத்த விளைவதாகவே தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=78900&category=TamilNews&language=tamil

 

பிளேக் பல மாதங்களின் பின்னர் இலங்கையின் இனப்பிரசனையை பற்றி ஆர்வமாக கருத்துக்கள் கூறியிருகிறார். ஆனால் அவர் அந்த பதவியில் தொடந்தும் இருப்பாரோவும் தெரியாது.  அந்த நிலையில் அவர் செய்வது Too little; too late

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுகள் நடத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் - ரொபட் ஓ பிளேக்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு

இலங்கை அரசுக்கும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில்

மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாவதற்கும்,

மத்தியஸ்தம் வகிப்பதற்கும் உதவ தென்னாபிரிக்காவோ அல்லது ஏனைய மூன்றாம் தரப்போ முன்வருமானால்

அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

 

இனபிரச்சனைக்கு தீர்வை எட்ட .................

ஆகா பயங்கரவாதம் இதை கடந்தும் அங்கு பிரச்சனை இருக்கிறது என்பதை இவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இனப்பிரச்சனையால் தமிழர்கள் அழியும்போது அதைப்பற்றி எந்த அக்கறையும் அமெரிக்கவிற்கு இல்லை என்று மறைமுகமாக சொல்கிறார்.
 
பிரச்னைக்கு உரிய பகுதிகள் =இலங்கை சிங்கள அரசு +தமிழ் தேசியம் 
 
மத்தியஸ்தம் = தென்னாபிரிக்க அல்லது வேறு ஒரு நாடு.
 
இந்த ஆதரவு தாரது இது என்ன? ஒரு ஜெனநாயக நாட்டில் பிரச்சனை என்றால் தீர்வு நீதிமன்றில் கிடைக்கும்.
அங்கே குற்றவாளி  (அவருக்காக வாதட ஒரு வக்கீல்)
பாதிக்க பட்ட தரப்பு (அவர்களுக்கு வாதாட ஒரு வக்கீல் )
ஒரு நீதிபதி (அல்லது நடுநிலமையாளர். மத்தியஸ்தர் )
 
இதில ஆதரவு தராது என்பது எதற்கு?
யாருக்கு?
 
இந்த குறளி  வித்தை விசுக்கோத்து இப்படியான விசர் பிடித்த கதைகளைத்தான் எப்போதும் காவி வருகிறது .
 
என்னால் முடிந்த அளவிற்கு இங்கு உள்ள செனட்டர் மார்க்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி வருகிறேன். 
இதை ஒட்டுமொத்த தமிழர்களும் தட்டி கேட்க தொடங்க வேண்டும்.
 
சிங்களவர்கள் மனிதாபிமானம் அற்று தமிழர்களை கொல்வதை  அமெரிக்கா ஏற்கிறதா இல்லையா?
அப்படி கொல்வதற்கு  ஆதாரம் அமெரிக்கர்களே தருகிறார்கள். ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை ?
Link to comment
Share on other sites

அமெரிக்கா விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்குப் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்   போர் நிறைவுற்று 15 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படாத நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தாலும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசுக்கு பன்னாட்டுச் சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். -இவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:- திருகோணமலை சேனையூரில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைப் பொலிஸாரின் இந்த அத்துமீறல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடாத்தாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உரிமையை வேண்டிப் போராடிய ஓர் இனத்தின்மீது இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய இனவழிப்பால் இறுதி எட்டு மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசாலும் அரச படைகளாலும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கைவைத்துள்ளது. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை பன்னாட்டுச் சமூகம்  கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் வழங்க வேண்டும் - என்றுள்ளது. (ச) https://newuthayan.com/article/தமிழரின்_உரிமை_பறிப்பு_சர்வதேசமே_தலையிடுக! கிளர்ந்தெழ வைக்கும் அடக்குமுறைகள். உயிரிழந்த தனது உரித்துடையோரை நினைவேந்துவது ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமை ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டம் கொடூரமான முறையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு பலநாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து 15 ஆண்டுகள் கடந்துபோயுள்ளன. போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளை அஞ்சலித்து நினைவேந்துவதற்கு வழியின்றியே இலங்கையில் தமிழினம் இன்னமும் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நல்லிணக்கம் ஒற்றுமை என்று பேசும் இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கத் தயாராக இல்லை. போரில் இறந்த தங்கள் உரித்துடையவர்களை அஞ்சலிப்பதற்கு நினைவில் கொள்வதற்கு தமிழ் மக்களின் முன்னெடுப்புகள் அரசின் ஆதரவுடனேயே அடக்கி ஒடுக்கப்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்தவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டிக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலர் அச்சுறுத்தப்படுகின்றனர். பதவி கைக்கு வந்ததும் மக்கள் தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை உள்ளது என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மௌனமாக இருக்கின்றார். உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் உரிமையை மறுத்து -அதைத் தடுத்து விட்டால், தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடலாம் என்ற பிற்போக் குத்தனமான - அடக்குமுறைச் சிந்தனையுட னேயே தற்போதைய ரணில் அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கைத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அனைத்து மக்களும் தங்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறான நிலை பெரும்பான்மை மக்களின் எண்ணப்போக்கிலேயே வாழவேண்டும் என்ற மேலாதிக்கச் சிந்தனை தொடர்ந்தால் ஒருபோதும் இந்தத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. பெரும்பான்மையினரின் இந்த மேலாதிக்கச் சிந்தனையே பல தசாப்த காலப் போரை ஏற்படுத்தியது. அந்தப் பட்டறிவின் பின்னரும் பெரும்பான்மையினரின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படாதது இந்தத் தீவின் சாபம் என்றே கூறவேண்டும். அடக்கு முறைகளின் மூலம் மக்களின் உணர்வுகளை மழுங் சுடித்துவிடலாம் என்று மேலாதிக்க ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சும். தொடர்ச்சியான அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும்மக்கள் கிளர்ந்தெழுந்த வரலாறே உலகம் முழுவதும் உள்ளது. சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் அம்மக்களை கிளர்ந்தெழவே வைக்கும். அந்த நிலைமை இலங்கையை மீண்டும் பின்னோக்கியே இழுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். https://newuthayan.com/article/கிளர்ந்தெழ_வைக்கும்_அடக்குமுறைகள்
    • ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு – ஆய்விதழில் தகவல்! 17 MAY, 2024 | 10:08 AM   கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.  வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50% பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வளரிளம் பருவத்தைச் சோ்ந்தவர்களில் 10.5% பேருக்கு தோல் சார்ந்த பிரச்னைகளும், 10.2% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகளும், 4.7% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8.9% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகள், 5.5% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. 5.8% பேர் தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் குருத்தெலும்பு மண்டலம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7% பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6% பேருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183749
    • அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தெரிவித்துள்ளார். தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திடம் அடகு வைக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சிக்குள் வலுவான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கட்சிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசாங்க உரிமை உள்ளதால், எந்த நேரத்திலும் அரசாங்கத்திற்கு தனது கருத்தை தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகுவீர்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயார் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/301842
    • ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடத் தொகுதி Published By: DIGITAL DESK 7   17 MAY, 2024 | 11:15 AM   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக்கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித்தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கு குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார். இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன. இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபா செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டடிப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் கட்டிடத் தொகுதி இதுவரை நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183751
    • இன்றுவரை இந்தியா தான் செய்த தவறினை திருத்த கூட தயார் இல்லை. அந்தளவுக்கு எங்களது தேசியத்தலைவரின் ஆத்மாவிலும் கூட பயம் கொண்டுள்ளது. தான் எவ்வள்வு முயன்றும் தன்னால் அவரின் கால் ..... கூட தொடமுடியவில்லை என்ற தோல்விதான் இந்த தடையின் தொடர்ச்சி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.