Jump to content

இதிகாசப் பெண்கள்- ஒரு பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாம், ஏவாளாய் வாழ்ந்த காலத்தில்,

ஆண்டவன் உனக்குக் கட்டளையிட்டானாம்!

அந்தக் கனியை மட்டும் புசித்து விடாதே, என்று!

ஆசை உன்னை விட்டுவிடவில்லை,

கனியிலேயே உன் கண்ணிருந்தது,

கடவுள் மறைந்ததும் கனி உன்னிடமிருந்தது!


இராமன் ஒரு சிறு குழந்தை,

மண்ணுருட்டி விளையாடுகிறான்,,

உன் கூனல் முதுகில் பட்டு  விட்டது!

உலகமா அழிந்துபோய் விட்டது?

ஓடோடிப்போய் கைகேயிக்கு உருவேற்றினாய்!

காடேகினான் ராமபிரான்,

 

மாயமானாகி மாரீசன் வந்தான்,

மயங்கிப் போய் நின்றாள் சீதாதேவி,

மணாளா, எனக்கு அந்த மான் வேண்டும்,

மானைத் தேடிப்போனவனைக் காணவில்லை,,

காவலிருந்த இலக்குவனைக் கலைத்தாள,

அண்ணன் திரும்பி வருவான், கவலை விடு,

அண்ணன் இறந்து போன பின்னர்,

என்னை அடைய நினைக்கிறாயா, இலக்குமணா?

பேதலித்துப்போன இலக்குவன் போகின்றான்!

இராவணனின் தேர் அவளைத் தேடி வருகிறது!


தக்கன் யாகம் செய்தான்,

தந்தை தானே  அவன் உனக்கு!

ஆனாலும் உனக்கு அழைப்பு வரவில்லை,

அந்தப் பரமசிவனுக்கே அழைப்பில்லையாம்,

உனக்கெப்படி அழைப்பு வரும்?

ஆனாலும் நீ பிடிவாதம் பிடித்தாய்,

தக்கனின் தலையுருவினான், சிவன்!

 

தருமன் சூது விளையாடுகிறான்,

தன்னையிழக்கிறான் முதலில்!

தன்னையிழந்தவன் துரோபதையைப் பணயம் வைக்கிறான்,

தோற்று விடுகிறான்!

துடித்துப் போகின்றாள், துரோபதை,

துகிலுரிகிறான் துச்சாதனன்,

கண்ணபிரானைக் கைகூப்பி அழைக்கிறாள்,

கண்ணன் புடவை தருகின்றான்,

கதை இன்னும் முடிந்து விடவில்லை!

சிதையவிழ்த்து விடுகிறாள், துரோபதை!

துரியோதனன் தொடை பிழந்த இரத்தம்,,

தலைமயிரில் தடவாமல் தலை முடியேன்!

பாவம், அவள் தலைமுடிக்க வேண்டும்,

பாரதயுத்தம் தொடங்குகின்றது!


சூரியனிடம் சோரம் போகிறாள், குந்திதேவி,

பிறக்கும் குழந்தை கங்கையில் மிதக்கிறது,

தேரோட்டியின் மகனாக வளர்கின்றது,

தன்னைப் பெற்றவளைத் தேடித் தவிக்கின்றது,

தாயென்று அரவணைத்துக் களிக்கின்றது,

மகனே, எனக்கு வரங்கள் வேண்டும்,

என்ன வேண்டும் தாயே? கேளுங்கள்,

நாகாஸ்திரத்துக்கு ஒருமுறைக்குப் பின் ஓய்வுகொடு,

உன் தம்பிகளைக் கொல்லக் கூடாது,

கர்ணன் காவியமாகின்றான்!

 

(யாவும் நகைச்சுவை)

Link to comment
Share on other sites

 கவிதைக்கு நன்றி புங்கையூரான். மதுரையையும் கொஞ்சப்பேர் எரித்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?


பதியிருக்க பாதகன்

பாரிஸ் மீது காதல்

பாவை ஹெலனுக்கு - அந்தோ

பாரீர் அழிகிறது ட்ரோய்!

பாவம் பெனிலொப்பி!
 

Link to comment
Share on other sites

ஆக பெண்டுளை சிண்டு முடிஞ்சிருக்கிறியள் :lol: :lol: :lol: . படைப்பிற்கு பாராட்டுக்கள் புங்கஸ் :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கவிதைக்கு நன்றி புங்கையூரான். மதுரையையும் கொஞ்சப்பேர் எரித்ததாக கேள்விப்பட்டுள்ளேன். :D

 

கோவலனுக்குப் புத்தி வந்தது!

காற்சிலம்பைத் தந்துவிடு,கண்ணகி,

கடை வைத்துத் தருகின்றேன், 

பாண்டிமா தேவியின் காற்சிலம்பில்,

கொல்லனின் கண் விழுகின்றது,

கோவலன் கள்வன் எனக் கோள் சொல்கிறான்,

கண்களில் அக்கினி மூட்டியபடி,

காவலனிடம் ஓடுகிறாள், கண்ணகி,

காவலன் காலில் விழுகிறான்,

கதை முடிந்திருக்கலாம்!

மன்னவன் தவறுக்காக,

மதுரை எரிகிறது!  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அண்ணா..இந்த கவிதையில் மறைந்து நிற்கும் விடயத்தை புரிந்துகொள்கிறேன்..நீங்கள் எல்லாம் கல்யாணம் கட்டி செட்டில் ஆகிவிட்டீர்கள்..அதனால் துணிவாக எழுதுகிறீர்கள்..ஆனால் நான்..அதனால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் வரலாற்றில் வந்துதித்த..நவகால பெண் சத்துருக்கள்...

 

30984-004-9561B010.jpg


Ulaga_Thamilaradchi_001.jpg


அம்மை சிறீமாவோ


சிங்களத்தின்


தலைமகளாய்


தமிழர் நிலமதில்


தமிழாய்ச்சி திடலதில்


தமிழர் இனப்படுகொலை


ஆரம்பித்தே


பெளத்த பேரினத்தின்


பெருமை சேர்த்த


மூத்தமகள்.


chemmani_soilsample.jpg


mahinda-chandrika.jpg


அன்னைக்கு மேவியவள் தான்


மகள் சந்திரிக்கா…


செம்மணியில் அதை


தமிழர் புதைகுழியில்


நிறுவி வைத்தார்..!


பதவி தந்து


அரக்கன் ராஜபக்சவை


இனத்துவேச உருவேற்றி


முள்ளிவாய்க்கால்


இனப்படுகொலையில்


தமிழர்


இரத்த ருசி காண விட்டார்..!


J-Jayalalitha.jpg


அண்டையில்


அம்மணி “ஜெ”


கொடூரன் ராஜீவின் சாவொடு


சத்துருக் கொண்டு…..


விழுப்புண் பட்டு


அடைக்கலம் தேடி


தாய்நிலம் நாடி


வந்த எம் கண்மணிகளை


சயனைட் கடித்து


வாய் நுரை தள்ள


சாகடித்து…


கொன்று புதைத்தார்..!


எத்தனை எம்


விடுதலைச் சிட்டுக்கள்


அநியாயமாய்


வீதியில் கிடந்தார்


பிணங்களாய்..!


அது போதாதென்று


ஆகாய வழி


குண்டு போட புலி வருகுது


கிலி கிளப்பி


புலித் தடையும்


வலுவாக்கி


கொண்டு வந்தார்


இவர்…


புலி வளர்த்த


எம் ஜி ஆரின் வாரிசு..!


ChelvanayagamNAmirthalingam.gif


அம்மையார் என்று மொழிய


அதில் வெட்டிப்


பெருமை வளர்த்த


அமிர்தலிங்கத்தின் பக்கதுணை


மங்கையற்கரசி


அன்றும் இன்றும்


சிங்கள அடிவருடி


புத்தன் கச்சே


சரணமென்று கிடக்கிறார்


துரோகத்தின் முதலாய்..!


n2b.jpg


அணிவகுத்து


ஐயாயிரம் இளைஞர்கள் தாரும்


தமிழீழம் கையில் தருகிறேன்..!!!


ஆணையிட்டே


ஆள் எஸ்கேப்பான


யோகேஸ்வரனின் உற்றதுணை


அரியாசனத்து ஆசையில்


தமிழர்  தீரத்தைக்


காட்டிக்கொடுத்தே


துரோகி சறோஜினியாய்


பரலோகம்


போய்ச் சேர்ந்தார்..!


susi.jpg


ஈழத்தமிழர்


உள்ளமதில்


அன்னை என்று


நின்ற மகள் இந்திராவின்


மருமகள்..


தமிழினக் கொலைஞனின்


தாலி தரித்தவள்..


இத்தாலி வெள்ளைக்காரி


எடுத்தாளே ஓர் சபதம்


ஆடினாளே ஒரு சதிராட்டம்


சரிந்ததுவே


ஈழத்தமிழர்


ஒட்டுமொத்த


வரலாறும் வாழ்வும்..!


 


அழிவில் இருந்து


மீளத்துடிக்கும்


தமிழர் வாழ்வில்


இன்னும் நீளுது


பெண்


சத்துருக்கள் விளையாட்டு.


சதாப்தங்கள்  பல கடந்தும்


விடுதலையும்


சுக வாழ்வும்


தாமதித்து


வீணடிக்கப்படுகுது..!

 

[உங்கள் ஆக்கத்திற்கும் பாராட்டுக்கள் புங்கையூரன்.]

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று - இத்தனையும் கேடுகெட்ட ஆண்களால் எழுதப்பட்ட இலக்கியங்கள்.
இரண்டு - அத்தனை பெண்களும், கேடுகெட்டு பெண்ணிடம் எல்லாம் துறந்த, கேவலம்கெட்ட, அறிவற்ற ஆண்களின் பெண்டிர்.

இதில் பெண்களின் தவறு எங்கே????????? :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று - இத்தனையும் கேடுகெட்ட ஆண்களால் எழுதப்பட்ட இலக்கியங்கள்.

இரண்டு - அத்தனை பெண்களும், கேடுகெட்டு பெண்ணிடம் எல்லாம் துறந்த, கேவலம்கெட்ட, அறிவற்ற ஆண்களின் பெண்டிர்.

இதில் பெண்களின் தவறு எங்கே????????? :lol: :lol:

ஐயோ, அபச்சாரம்! அபச்சாரம்! :o

 

இதையெல்லாம், காது கொடுத்துக்கேட்க வேண்டிய காலம் வந்துவிட்டதே! :icon_mrgreen:

 

கலி பிறந்து விட்டது, என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? :wub:

 

சீதாதேவி, பூமாதேவியின் மகளல்லவா? பொறுமைக்கு உதாரணம், பூமித்தாயல்லவா? அக்கினிப் பரீட்சையின் பின்பும், அழகு குன்றாத கற்புக்கரசி அல்லவா? :D

 

உமாதேவி யார்? உலகமாதாவல்லவா? சர்வேசுவரனின் மனைவியல்லவா?

அர்த்தநாரீஸ்வரி அல்லவா, அவள்? அவளின்றி ஒரு அணுவும் அசையாது, என்பது நீங்கள் அறியாததா? :D

 

குந்திதேவி 'ராஜமாதா' அல்லவா? அந்தக் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் அத்தையல்லவா, அவர்?

வில்லுக்கு விஜயன், மல்லுக்கு வீமன், சொல்லுக்குத் தருமன், சாச்திரத்துக்குச் சகாதேவன், அஸ்வத்துக்கு நகுலன், என்று ஐந்து வீரர்களின் தாயல்லவா? :D

 

திரௌபதை யார்? பஞ்ச பாண்டவர்களின் மனைவியல்லவா? உப பாண்டவர்களின் தாயல்லவா, அவள்? திஷ்டதுய்மனின்,சகோதரியும், பாஞ்சாலதேசத்து மன்னனின் மகளல்லவா அவள்? :D

 

கண்ணகி யார்? கண்கண்டதெய்வமல்லவா அவள்? கற்புக்கு உதாரணமல்லவா அவள்? ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான, சிலப்பதிகாரத்தின் நாயகியல்லவா அவள்? :D

 

சுமோ, இதைப் பெண்ணினத்தைச் சீண்டும் எண்ணத்துடன் நான் எழுதவில்லை!

 

ஒரு நகைச்சுவைப் பதிவாகவே பதிந்தேன்! அதை, இந்தப் பதிவின் கீழ் பெரிய எழுத்துக்களில் போட்டும், உள்ளேன்! :icon_idea:

தங்கள் கருத்துக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்களைத் திட்டவே இல்லையே :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்களைத் திட்டவே இல்லையே :lol: :lol: :lol:

 

யாரையோ திட்டி இருக்கீங்க என்றதை ஒப்புக் கொண்டிருக்கீங்க.. அது யாரு என்பது தான் கேள்வி. :)

 

எங்களைன்னா.. பார்த்து.. நாங்க திட்ட வெளிக்கிட்டம்.. அப்புற யாழ் எந்தப் பக்கம்.. அந்தப் பக்கம் நான் வரல்லப்பா என்று.. நீங்க ஓட வேண்டிய நிலை தான் வரும்..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கவிதைக்கு நன்றி புங்கையூரான். மதுரையையும் கொஞ்சப்பேர் எரித்ததாக கேள்விப்பட்டுள்ளேன். :D

நன்றிகள், நுணா!

 

ஏற்கனவே கொஞ்சம் ஓவராக் கடிச்சுப் போட்டன் போல கிடக்கு!  :o

 

எண்டாலும், உங்களுக்கில்லாமலா? :D

மேலே இணைத்துள்ளேன்!

பெண்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?

பதியிருக்க பாதகன்

பாரிஸ் மீது காதல்

பாவை ஹெலனுக்கு - அந்தோ

பாரீர் அழிகிறது ட்ரோய்!

பாவம் பெனிலொப்பி!

 

கவிதை அழகு,யாழ்வாலி! :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக பெண்டுளை சிண்டு முடிஞ்சிருக்கிறியள் :lol: :lol: :lol: . படைப்பிற்கு பாராட்டுக்கள் புங்கஸ் :) :) .

 

இந்தக்கேள்விகள் கனகாலமாக, அடிமனத்தில் ஒருவிதமான 'அழுத்தத்தை' ஏற்படுத்துக் கொண்டிருந்தன. சும்மா மேலோட்டாமாக எழுதிப் பாத்தன்! :D  

 

ஆனால், கையைக் கொஞ்சம் சுட்டுப்போட்டுது போல கிடக்கு! :o

 

அக்கா, தங்கச்சிமாரிட்டை, அடிவாங்கிற போது, எனக்கு வலிக்கிறதே இல்லை! :D

 

அக்கா, அடிக்கடி சொல்லுவா, உனக்கு அடிச்சு என்ரை கை தான் நோகுது, எருமை மாடு என்று! எனக்கு அது தான் அந்தக் காலத்தில, 'திருப்பள்ளியெழுச்சி! :icon_idea:

 

நன்றிகள், கோமகன்!

Link to comment
Share on other sites

தலைப்பு
 

இதிகாசப் பெண்கள்- ஒரு பார்வை

 

அரசியலாக்காமல் இலக்கியமாக போகவிட நெடுக்கு முடியவில்லை. :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு

 

இதிகாசப் பெண்கள்- ஒரு பார்வை

 

அரசியலாக்காமல் இலக்கியமாக போகவிட நெடுக்கு முடியவில்லை. :(

 

உறைக்கிறமாதிரிச் சொல்லுங்கோ மல்லை உந்தப் பொடியனுக்கு. :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதாம், ஏவாளாய் வாழ்ந்த காலத்தில்,

ஆண்டவன் உனக்குக் கட்டளையிட்டானாம்!

அந்தக் கனியை மட்டும் புசித்து விடாதே, என்று!

ஆசை உன்னை விட்டுவிடவில்லை,

கனியிலேயே உன் கண்ணிருந்தது,

கடவுள் மறைந்ததும் கனி உன்னிடமிருந்தது!

இராமன் ஒரு சிறு குழந்தை,

மண்ணுருட்டி விளையாடுகிறான்,,

உன் கூனல் முதுகில் பட்டு  விட்டது!

உலகமா அழிந்துபோய் விட்டது?

ஓடோடிப்போய் கைகேயிக்கு உருவேற்றினாய்!

காடேகினான் ராமபிரான்,

 

மாயமானாகி மாரீசன் வந்தான்,

மயங்கிப் போய் நின்றாள் சீதாதேவி,

மணாளா, எனக்கு அந்த மான் வேண்டும்,

மானைத் தேடிப்போனவனைக் காணவில்லை,,

காவலிருந்த இலக்குவனைக் கலைத்தாள,

அண்ணன் திரும்பி வருவான், கவலை விடு,

அண்ணன் இறந்து போன பின்னர்,

என்னை அடைய நினைக்கிறாயா, இலக்குமணா?

பேதலித்துப்போன இலக்குவன் போகின்றான்!

இராவணனின் தேர் அவளைத் தேடி வருகிறது!

தக்கன் யாகம் செய்தான்,

தந்தை தானே  அவன் உனக்கு!

ஆனாலும் உனக்கு அழைப்பு வரவில்லை,

அந்தப் பரமசிவனுக்கே அழைப்பில்லையாம்,

உனக்கெப்படி அழைப்பு வரும்?

ஆனாலும் நீ பிடிவாதம் பிடித்தாய்,

தக்கனின் தலையுருவினான், சிவன்!

 

தருமன் சூது விளையாடுகிறான்,

தன்னையிழக்கிறான் முதலில்!

தன்னையிழந்தவன் துரோபதையைப் பணயம் வைக்கிறான்,

தோற்று விடுகிறான்!

துடித்துப் போகின்றாள், துரோபதை,

துகிலுரிகிறான் துச்சாதனன்,

கண்ணபிரானைக் கைகூப்பி அழைக்கிறாள்,

கண்ணன் புடவை தருகின்றான்,

கதை இன்னும் முடிந்து விடவில்லை!

சிதையவிழ்த்து விடுகிறாள், துரோபதை!

துரியோதனன் தொடை பிழந்த இரத்தம்,,

தலைமயிரில் தடவாமல் தலை முடியேன்!

பாவம், அவள் தலைமுடிக்க வேண்டும்,

பாரதயுத்தம் தொடங்குகின்றது!

சூரியனிடம் சோரம் போகிறாள், குந்திதேவி,

பிறக்கும் குழந்தை கங்கையில் மிதக்கிறது,

தேரோட்டியின் மகனாக வளர்கின்றது,

தன்னைப் பெற்றவளைத் தேடித் தவிக்கின்றது,

தாயென்று அரவணைத்துக் களிக்கின்றது,

மகனே, எனக்கு வரங்கள் வேண்டும்,

என்ன வேண்டும் தாயே? கேளுங்கள்,

நாகாஸ்திரத்துக்கு ஒருமுறைக்குப் பின் ஓய்வுகொடு,

உன் தம்பிகளைக் கொல்லக் கூடாது,

கர்ணன் காவியமாகின்றான்!

 

(யாவும் நகைச்சுவை)

 

இதுகளெல்லாம் உங்களைப் போலை ஆக்கள் தங்கடை முதுகை சொறியிறத்துக்கு எழுதினவை . பொம்பிளையளை அண்டைக்கு தொடக்கம் இண்டைக்குவரை எப்ப ஒரு உயிராய் பாத்தியள் ? இதிலை வேறை யாவும் நகைச்சுவையே எண்டு போடிறியள் . எண்டாலும் உங்கடை கவிதைக்கு வாழ்த்து சொல்லிறன் :)  :) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.