Jump to content

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவையை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம்


Recommended Posts

" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ????

 

 

நடுவர்கள் கோமகன் , மொசப்பத்தேமியா சுமேரியர்

 

பங்குபற்றுவோர்:

 

"புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ???  என்ற  அணியில் வாதாட,

இசைக்கலைஞன் ( அணித்தலைவர் )


தமிழச்சி

ஜீவா

 

புங்கையூரான்
 

சுபேஸ்
 

அர்ஜுன்

 

யாழ்வாணன்
 

" நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ??? என்ற அணியில் வாதாட  ,
 

யாழ் வாலி ( அணித்தலைவர் )

 

வாத்தியார்
 

பகலவன்
 

சாத்திரி

 

தும்பளையான்
 

கரும்பு

 

குமாரசாமி

********************************************************************

நடுவர்கள் உரை

 

இந்த அரங்கத்தினுள்ளும் வெளியேயும் கூடியிருக்கும் யாழ் இணையத்தின் ரசிகப்பெருமக்களே, உலகின் மூலை முடுக்கெல்லாம் கணணித்திரை முன் எமது பட்டிமன்றத்தை பார்த்துக்கொண்டிருக்கும் கோடானுகோடி தமிழ்மக்களே , பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் யாழ் இணையத்தின் பிதாமகனாகிய திருதிருமதி மோகன் அவர்களே மற்றும் யாழ் களத்தினை செவ்வனே வழிநடாத்த மோகனிற்கு உதவியாக இருக்கும் அவரது தளபதிகள் இணையவன். நிழலி. நியானி  நுணாவிலான் ஆகிய மட்டிறுத்தினர்களே , எல்லோருக்கும் எனது தலை சாய்ந்து வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

திரைகடலோடித் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கு இணங்க தமிழன் கடல்கடந்து தனது தேவைகளை முன்னொருகாலத்தில் பூர்த்தி செய்தான். தமிழன் ஒருகட்டத்தில் தனக்கென கடல் வாணிகப் பாதையை கடாரம் வரை மேற்கொண்டான். அப்பொழுது மூவுடை வேந்தர்களுக்கென்று ஒரு பெரும் நிலப்பரப்பும் நிர்வாகப் பரப்பும் இருந்தன . அன்றையகாலத்தில் தமிழனுடைய புலப்பெயர்வு கௌரவமானதாக இருந்தது . காலம் தனது வில்லங்கமான கடமைகளைச் செய்த பொழுது . வெற்றிக் கொடிகட்டிய தமிழன் தனது பாரம்பரிய நிலப்பரப்பில் இருந்து பிய்த்து எறியப்பட்டு , சொந்த நாட்டிலும் உலகெங்கிலும் அழையா விருந்தாளியாக திலிகள் “ என்ற சிறப்பு அடைமொழியுடன் புலம் பெயர்ந்தான்.அப்பொழுது அவன் ஆற்றொணாத் துயருடன் உறவுகள் குடும்பங்களை விட்டு பிய்த்து எறியப்பட்டான் .

 

யாழ் இணையம் தனது பதினைந்தாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் வேளையிலே கள உறவுகளாகிய நீங்கள் ஓர் அட்டகாசமான பட்டிமன்றத் தலைப்பைத் தந்துள்ளீர்கள் . ஆம்……. " புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? இந்த தலைப்பு ஏறத்தாள சகல அம்சங்களையும் அடக்கிய ஒரு சாம்சுங்கலக்ஸ்சி போல. ஒரு ஜ போனைப்போல அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி வாதப் பிரதிவாதங்களாக கிளம்ப தயாராக இருக்கின்றன .

 

இந்தப் பக்கம் புலம் பெயர்ந்த “ தமிழனின் ஊர் பற்றிய கவலையென்பது வெறும் பிரிவுகளால் வந்த கவலையே “ என்ற அணிக்கு வாதாடவும் அணித்தலைவராகவும் கனடாவின் நகைச்சுவை செம்மல் இசைக்கலைஞன் அமர்ந்திருக்கின்றார் . அவரைத் தொடர்ந்து கனடாவில் இருந்தாலும் பெயரிலேயே தான் தமிழச்சிதான் என்று முழக்கமிடும் தமிழச்சி அமர்ந்திருக்கின்றார் . அவருக்கு அருகே ஜேர்மனியில் இருந்தாலும் அமைதியானவர் வாதத்தில் புயல் ஜீவா அமர்ந்திருக்கின்றார் . அவர் அருகே கங்காரு தேசத்து பல்கலைவித்தகன் புங்கையூரான் அமர்ந்திருக்கின்றார் . அவரைத் தொடர்ந்து கனடாவில் இருந்து யாழின் புதிய வரவும் சிறந்த பேச்சாளருமான யாழ்வாணன் அமர்ந்திருக்கின்றார் . அவரைத் தொடர்ந்து கனடாவில் இருந்து எமது வணங்கமுடி, அஞ்சாநெஞ்சன் ,முற்போக்குச்சிந்தனையாளர் அர்ஜுன் அமர்ந்திருக்கின்றார் . இறுதியாக புரட்சிக்கு முன்னோடியான பிரான்சில் இருந்து முற்போக்கு சிந்தனையாளர் சுபேஸ் அமர்ந்திருக்கின்றார் .

 

மறுபக்கமோ ,"  நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்கிற கவலையே எமக்கு " என்கிற அணிக்கு வாதாடவும் அணித்தலைவராகவும் யாழ் வாலி அமர்ந்திருக்கின்றார் . அவரைத் தொடர்ந்து ஜேர்மனியில் இருந்து கையில் பிரம்புடன் வாத்தியார் அமர்ந்திருக்கின்றார் . அவரைத்தொடர்ந்து நோர்வேயில் இருந்து யாழின் சிறந்த படைப்பாளி பகலவன் அமர்ந்திருக்கின்றார் .  அவரைத்தொடர்ந்து கங்காரு தேசத்தின் கட்டிளம் காளை தும்பளையான் அமர்ந்துள்ளார் .அவரைத் தொடர்ந்து ஜேர்மனியில் இருந்து நகைச்சுவை சிங்கம் குமாரசாமி ஐயா அமர்ந்திருக்கிறார் .அவரைத் தொடர்ந்து கனடாவில் இருந்து கனடாவில் வாழும் பல்முக ஆழுமை கொண்ட சிறந் சிந்தனையாளர் கரும்பு அமர்ந்திருக்கின்றார் .அவரைத்தொடர்ந்து பிரான்சின் தென்கிழக்கு கோடியில் இருந்து யாழின் பல பட்டிமன்றங்களில் வெற்றிக்கொடிகட்டிய ஊடகவியலளாரான சாத்திரி அமர்ந்திருக்கின்றார். . ( நடுவர் செம்பால் தண்ணீர் குடிக்கின்றார் ) .

 

ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை வைத்தவுடன் மற்றைய அணியை சேர்ந்தவர் தனது கருத்தினை வைப்பதற்கான கால எல்லையானது அதிகப்பட்டசம் ஒருகிழமையே . விவாதிப்பவர்கள் தினமும் வாதப்பிரதிவாதங்களை வைப்பதே பொருத்தமானது. இந்தப்பட்டிமன்றத்தின் போக்கினை திசை திரும்பி சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்த்துடன் எமது தேசியப்போராட்டம் மற்றும் தற்கால அரசியில் சம்பந்தமான விவாதங்களை தவிர்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் . இதோ பட்டி மன்றம் ஆரம்பமாகின்றது . "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே??? என்ற அணியின் அணித்தலைவரை தனது குழுவில் உள்ளவரை வாதாட அழைப்பு விடுக்குமாறு வேண்டுகின்றேன் .

 

நேசமுடன் கோமகன்

 

நடுவர்

 

வாழிய தமிழ்!!!!! வாழிய யாழ் இணையம் !!!!!!!!!

 

 

 

*******************************************************************************************************************

 

உங்கள் கருத்துகளைப் பகிர இங்கே அழுத்துங்கள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118693

 

 

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்!

தமிழ் உறவுகளின் பாலமாகி எமது திறமைகள் வெளிப்படக் களம் அமைத்துத் தந்ததோடு மட்டுமல்லாது, தன் பதினைந்தாவது நிறைவை ஒட்டி எமக்கு பட்டிமன்றம் நடாத்த ஊக்கமளித்த  யாழ் இணையத்துக்கும், அதன் நடுவர்களில் ஒருவராக என்னை முன்மொழிந்த சாத்திரி, கோமகன் ஆகியோருக்கும், விரும்பியோ விரும்பாமலோ என்னை  ஏற்றுக்கொண்ட உங்கள்அனைவருக்கும் நன்றி கூறிக் கொண்டு உங்களுடன் இணைகிறேன் .

போர் மற்றும் வேறு காரணிகளால் தமிழர்கள் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழ்கின்றார்கள். புலம்பெயர்ந்த  நாடுகளில் வாழ்வைச் செம்மையாக்கிக் கொண்டு வாழ்வோரும், இன்னும் சீரழிந்து போனோருமாக தமிழ் சமூகம் மூன்றாவது  தலைமுறையுடன் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. 

அப்படி வாழ்வோரில் பலர், தாம் புலம் பெயர்ந்த காரண காரியங்களை மறந்து மகிழ்வாக வாழ்ந்துகொண்டிருப்பினும் உறவுகளை விட்டுப் பிரிந்த வேதனையை இன்னும் தேக்கியபடி வாழ்கின்றனர். இன்னுமொரு பிரிவினர், எம் தேசத்தில் நாம் வாழ்ந்திருந்தால் இன்னும் சீரும் சிறப்புமாக வாழ்ந்திருப்போம்.  புலப்பெயர்வால் எல்லாம் இழந்து வாழ்கின்றோம் என்று புலம்பியபடியே வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.
 

இனி, இப்பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளும் இருஅணியினரும் தத்தமது அணியினைப் பலப்படுத்த எக்கருத்தை முன்வைக்கின்றனர் என்பதைப்  பார்ப்போமா???

 

Link to comment
Share on other sites

நன்றி நடுவர் அவர்களே.. :rolleyes:

 

ஜனநாயக மாண்பைக் கட்டிக்காக்கும் எங்கள் அணியினர் இங்கே கம்பீரமாக அமர்ந்துள்ளார்கள்..! :unsure: அவர்களில் யார் இப்போது பேசப்போகிறார்கள் என்கிற விவரத்தை இப்போது தரப்போகிறேன்.. :o  அதற்கு முன் ஜனநாயக ரீதியில் சிறு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி உங்களுக்கு அதை அறிவிக்க இருக்கிறேன்.. :D

 

எமது அணி உறுப்பினர்கள் சமத்தாக என்னை உடனடியாகத் தொடர்பு கொள்வார்கள் என்கிற மிகுந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. இருக்கிறது.. இருக்கிறது.. :D

 

Link to comment
Share on other sites

நடுவர் அவர்களே..

 

எங்கள் அணியின் சார்பில் முதலாவது வாதத்தை எடுத்துவைக்க கனடாவின் தைரியலக்ஷ்மி.. சிந்தனைச் செல்வி தமிழச்சி அவர்கள் இன்னும் சில மணிநேரங்களில் ஒலிவாங்கி அருகே சமூகமளிப்பார்கள்..! :D

Link to comment
Share on other sites

நடுவர் அவர்களே..

 

எங்கள் அணியின் சார்பில் முதலாவது வாதத்தை எடுத்துவைக்க கனடாவின் தைரியலக்ஷ்மி.. சிந்தனைச் செல்வி தமிழச்சி அவர்கள் இன்னும் சில மணிநேரங்களில் ஒலிவாங்கி அருகே சமூகமளிப்பார்கள்..! :D

 

 

வாங்கோ தமிழச்சி   எடுத்து விடுங்கோ உங்கடை வாதத்தை .

Link to comment
Share on other sites

மதிப்பிற்குரிய நடுவர்களே, விசேட சிறப்பு விருந்தினராகச் சமூகமளித்து எமக்குப் பெருமையைச் சேர்க்கும் யாழின் மூலகர்த்தாவாகிய என்றென்றும் என் மதிப்பிற்குரிய மோகன் அண்ணா அவர்களே, சிறப்பு விருந்தினர்களான யாழின் நிர்வாகிகளான இணையவன், நியானி, நுணாவிலான் மற்றும் நிழலி அவர்களே, எம்மிடம் தோற்றுப் போகவிருக்கும் எதிரணியினரே மற்றும் எமக்கு ஊக்கமளிக்கப் போகும் பார்வையாளர்களே! அனைவருக்கும் கனடாவின் தைரியப்புயலின் அன்பு கலந்த வணக்கம்!

 

புலம்பெயர்ந்த தமிழ் மக்களாகிய எமது ஊர் பற்றிய கவலையானது நாம் ஊரைவிட்டுப் பிரிந்திருப்பதே தவிர, சிறந்த வாழ்வியலை இழந்த கவலையல்ல.  நாம் புலம்பெயர்ந்த காரணத்தினாலேயே எமக்கு இவ்வாய்ப்பைத் தந்த யாழ்களமே உருவாகியது.  நாம் ஊரில் இருந்திருந்தால் எம்மில் பலர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வளமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டோம்.  நாங்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் சௌகரியங்களை நாம் அங்கு அனுபவித்திருப்போமா?  எங்கள் பிள்ளைகள் அத்தனை பேரும் கல்வியில் சிறந்து விளங்கியிருப்பார்களா?  இங்கு வளரும் பிள்ளைகளில் அதிகம் பேர் உயர்கல்வியைக் கற்று மிகச் சிறந்த வேலைகளில் அமர்ந்திருக்கிறார்கள்.  அமரப் போகிறார்கள்.  இவை நாம் ஊரிலிருந்திருந்தால் எத்தனை வீதம் சாத்தியப்பட்டிருக்கும்?  ஊரிலிருந்திருந்தால் எம் பிள்ளைகளில் ஒரு பத்து வீதமானோர்தான் பல்கலைக்கழகம்வரை சென்று சிறந்து விளங்கியிருப்பார்கள்.  ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளிலோ அனைத்துப் பிள்ளைகளும் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்புள்ளது.  அப்பிள்ளைகளின் பட்டமளிப்பின்போது பெற்றோர் படும் ஆனந்தம் இருக்கிறதே, அதனை வார்த்தைகளில் வடித்து விட முடியாது நடுவர்களே.  ஆனால், நாட்டில் ஒரு வருடத்தில் ஒவ்வொரு ஊரிலிருந்தும் அல்லது பாடசாலைகளிலிருந்தும் ஆகக்கூடியது பத்து மாணவர்களாவது பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பிருக்கிறதா?  பொதுவாக, தாயகத்தில் ஒரு ஊரிலிருந்து அல்லது பாடசாலையிலிருந்து ஓரிருவர் மட்டுமே பல்கலைக்கழகம் செல்வதைக் கண்டிருக்கிறோம்.  எத்தனை மாணவர்கள் படிப்பில் சுட்டியாக இருந்தாலும் ஓரிரு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வாழ்வியலை இழந்திருக்கிறார்கள்?  அவர்களிடம் திறமைகள் இருந்தாலும், சாதாரண வேலைகளையே செய்யும் நிர்ப்பந்தம் இருக்கிறது.  அப்படிச் சாதாரண வேலையில் அமர்ந்தாலும் தொடர்ந்து அச்சாதாரண வாழ்வியலை வாழும் வாய்ப்பே அங்கு அதிகம்.  மேலதிகமாக முன்னேறுவது கடினம்.  ஆனால், இங்கோ ஒருவர் பல்கலைக்கழகம் செல்லாவிட்டாலும் வேலைத்தளங்கள் வாயிலாகத் தொடர்ந்தும் படித்து வேலையில் உயர்நிலைகளுக்கு வந்திருக்கிறார்கள்.  அங்கு சாதாரண வகுப்போடு படிப்பை முடித்த பலர் புலம்பெயர்ந்த பின்பு இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு பல நல்ல வேலைகளில் இருப்பது கண்கூடு நடுவர்களே.

 

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்வியல் ஏற்றத் தாழ்வின்றி அனைவரும் வளமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  குறைந்தளவு சம்பளத்தைப் பெறுபவர்களும் அனைத்து வசதிகளோடும் வாழும் வாய்ப்பு புலம்பெயர் நாடுகளில் இருக்கிறது.  நாம் கூடியளவு அனைத்துப் பொருட்களையும் நுகர்ந்து எமது வாழ்வை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  உதாரணமாக, இங்கு தொலைக்காட்சிப் பெட்டி முதற்கொண்டு இந்த வருடம் வந்த இலத்திரனியல் பொருட்கள் வரை எம்மவர் வீடுகளில் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.  நடுவர்களே, இது தாயகத்தில் அனைத்து வீடுகளிலும் சாத்தியப்படும் ஒன்றா?


நாம் ஊரில் இருக்கும்போது பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே இருந்த நெருக்கத்தைவிட, இங்கு வாழும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான நெருக்கம் அதிகம் மட்டுமின்றி நெருக்கமாக இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகம்.  நாம் அவர்களோடு அன்னியோன்யமாகப் பழகும் விதமும் இங்கு சிறப்பாகவே இருக்கிறது.  இதனைவிட முக்கியமாகக் கணவன், மனைவி உறவுகள்கூட புலம்பெயர் நாடுகளில் மேம்பட்ட நிலையிலேயே இருக்கிறது.  குடும்பங்களுக்கிடையே நாம் பாராட்டும் அன்பும் நட்பும்கூட புலம்பெயர் நாடுகளில் சிறப்பாகத்தான் இருக்கிறது.  வாழ்க்கையை நாம் அனுபவிக்கக் கற்றுக் கொண்டதே நாம் புலம்பெயர்ந்த பின்புதான் நடுவர்களே. 


நடுவர்களே, இங்கு நாம் அடுக்குமாடிக் கட்டடத்தில் இருந்தாலும் இங்கிருக்கும் சுத்தம், சுகாதாரம் எமக்கு அங்கு இருக்கிறதா?  எமக்கு இங்கிருக்கும் ஆரோக்கியமான வாழ்வு அங்கிருக்கிறதா?  ஒருவர் இறந்து போனால் அதற்கான உரிய காரணம்கூட அறியாத நிலைதான் அங்குண்டு.  இங்கோ, எத்தனை கொடிய நோய் வந்தாலும் குணப்படுத்தக்கூடிய வசதிகள் எமக்கு நிறையவே உண்டு.


அங்கு சிறப்பாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமே.  ஒன்று அது பரம்பரையாக வந்ததாக இருக்கும்.  அடுத்தது சிறந்த கல்வி கற்று அந்த உத்தியோகத்தில் வந்ததாக இருக்கும்.  இன்னொன்று புலம்பெயர் மக்களின் உறவினர்கள்.  அங்கு அதிகம் சலுகைகளைப் பெறுபவர்களும் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களே.  கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறுபவர்களும் அதிகம் இவ்வகையைச் சேர்ந்தவர்களே.  பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு அங்கு முன்னேறும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.  எங்காவது ஓரிரு குடும்பங்களே இவ்வாறு முன்னேறியிருக்கிறார்கள்.  ஆனால், இங்கு நாம் அரச பணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.  அரச பணத்தைப் பெற்று வளர்ந்த பிள்ளைகள் பலர் இப்போது படித்து முன்னேறி நல்ல பதவிகளில் உள்ளார்கள்.  ஊரில் அவ்வாறு முன்னேற முடியுமா நடுவர்களே?

 

இத்தனை சிறப்பாக வாழ்ந்து கொண்டு, அங்கிருந்திருந்தால் சிறப்பாக வாழ்வோமென்ற எதிரணியைப் பார்த்து நான் கேட்கிறேன்.  இத்தனை வசதிகளை அனுபவித்த பின்பு, உங்களால் இப்போது ஊரில் போய் வாழ முடியுமா?  இல்லை ஊரிலிருந்திருந்தால் இவ்வாறான சிறப்புகளைப் பற்றியாவது நாம் இவ்வளவு தூரம் அறிந்திருப்போமா?  புலம்பெயர்ந்திருக்கும் எமக்கான ஒரேயொரு கவலை ஊரில் எஞ்சியிருக்கும் எமது உறவினர்களே தவிர எமது புலம்பெயர் வாழ்வியல் அல்ல.  அவ்வுறவினர்களையும் அடிக்கடி சென்று பார்த்து வரும் வசதிகள் எம்மிடம் உண்டு.  தாயகத்தில், ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குச் செல்வதற்கே கணக்குப் பார்த்து செலவழிக்கும் நிலைதான் இன்றும் பலருக்கு அங்குண்டு.  நாம் புலம்பெயராது இருந்திருந்தால் எம்மில் பலருக்கும் அந்த நிலைதான் இருந்திருக்கும்.  எதிரணியினர், இக்கரைக்கு அக்கரைப் பச்சைகள்தானே தவிர, யதார்த்தத்தை உணர்ந்தவர்களல்ல நடுவர்களே.  இவர்கள் இன்னும் ஊரின் மாயையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நடுவர்களே.  இந்தப் பட்டிமன்றத்தின் பின்னராவது இவர்கள் நிஜ உலகிற்கு வரட்டும் என்று கூறி எனதுரையை முடித்துக் கொள்கிறேன்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தைரியப்புயல் தமிழச்சி தன்பக்க வாதத்தை மிக ஆணித்தரமாக முன்வைத்துள்ளார்.

 

நாம் புலம்பெயர்ந்து வந்தபடியாற்றான் இத்தனை வசதி வாய்ப்புக்களோடு வாழ்கின்றோம் என்றும், எம் தமிழ் பிள்ளைகளில் பெரும்பான்மையானோர் உயர்கல்வி கற்று
சிறந்து விளங்குவதற்கு நாம் புலம்பெயர் தேசத்தில் வாழ்வதே காரணமென்றும், தாய்நாட்டில் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பட்டப்படிப்பு புலம்பெயர் தேசத்தில் வாழ்வதனால் அனைவருக்கும் சாத்தியமாகின்றது என்றும், அங்கு செல்வந்தர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்புக்கள் இங்கு அனைவருக்கும் சமமாகக் கிடைக்கின்றதென்றும், சுத்தம், சுகாதாரம் கூட எமது தேசத்திலும் பார்க்க இங்குதான் அதிகம் என்றும்,எங்கள் தேசத்தில், மக்கள் பொருளாதார வளமற்று வாழ்வதனால் வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவென்றும், புலம்பெயர் தேசத்தில் எம்முன்னே உலகமே பரந்து விரிந்து கிடக்கின்றது. இக்கரைக்கு அக்கரை பச்சையே அன்றி புலம்பெயர்ந்ததனாலேயே எம் வாழ்வு செழுமை பெற்றிருக்கின்றது, அரச உதவித்த தொகை எடுத்தால் என்ன வசதியாகவும் மகிழ்வாகவும்  வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விடுமுறையில் தாயகம் சென்று உறவினர்களையும் பார்த்து வரும் எமக்கு என்ன
குறை?? என்று எதிரணியினரைப் பார்த்து வினா எழுப்புகிறார்.

எங்கே எதிரணியினர் தமிழிச்சியின் கருத்துக்கு எதிர்க் கருத்து வைப்பதற்குத் தயாராகி விட்டீர்களா?? வாருங்கள் வந்து உங்கள் அணி சார்பாகக் கருத்துக்களை
முன்வையுங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மகளுக்கு இன்று  அகவை பதினைந்தாம், செல்லக் குழந்தையாக எம் உள்ங்களிலெல்லாம் தவழ்ந்திருந்தவள் குமரியாகி பால்போலே பதினாறில் அடியெடுத்து வைக்கின்றாள். தமிழ்கூறும் நல்லுலகம் வாழும்வரை எம் மகளே பொன்மகளே நீ பல்லாண்டு பல்லாண்டு வாழி!

 

இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் திரு. மோகன் அவர்களே, திருமதி. மோகன் அவர்களே, அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய மட்டுறுத்தினர்களே, இப் பட்டிமன்றத்தைச் சிறப்புற ஒழுங்குசெய்த எனது அருமை நண்பர் திரு. சுண்டல் அவர்களே, நடுவர்களாக இங்கு வீற்றிருக்கும் செஞ்சொல் வாணி சுமேரியர் அம்மா அவர்களே, இலக்கியச் செம்மல் கோமகன் அய்யா அவர்களே, எனது அணியில் தமது வாதங்களைத் திறம்பட முன்வைக்க காத்திருக்கும் எனது அணி உறுப்பினர்களே, மறுத்துரைக்க வந்திருக்கும் எதிரணியின் உறுப்பினர்களே, எல்லாவற்றுக்கும் மேலாக எனது அன்புக்கும் பண்புக்குமினிய கள உறுப்பினர்களே, வாசகர்களே உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!

 

நடுவர் அவர்களே, ஒரு புலம்பெயர் தமிழனின் வாழ்கையில் வெறும் பொருளீட்டல், கல்வி, சுகாதார வசதிகள் மட்டும் மகிழ்வைத் தந்து விடமுடியாது. மறாக அவனுடைய மண்ணுக்கே உரியவகையில் அந்த மண்ணுடன் இணைந்த இயல்பான வாழ்க்கைமுறையே முழுமையான மகிழ்வைத் தரும் எண்டு சொல்லிக்கொண்டு, நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலை என்பதை இங்கு ஒரு பட்டிமன்றம் வைத்துத் தான் எதிரணியினருக்கு புரியவைக்க வேண்டியுள்ளது என்பதை நினைத்து மிகவும் கவலையாக உள்ளது.

 

நடுவர் அவர்களே, ஓருமுறை ஒரு காட்டுநாய் இரைதேடி அலைந்து கடைசியில் நாட்டுப் பக்கத்துக்கு வந்திச்சாம். வந்தவழியில் ஒரு வீட்டுநாயைச் சந்திச்சிதாம். இரண்டு நாய்களும் பேசிக்கொள்ளும்போது, வீட்டுநாய் சொல்லிச்சாம். எனக்கு இங்க ஒரு குறையுமில்லை நீயும் இங்கு வந்து விடு, வேளாவேளைக்கு வகைவகையான சாப்பாடு, தினமும் குளிப்பாட்டல், விளையாட்டு, வசிக்கத் தனிக்கூடு இப்படி அப்படி எண்டெல்லாம் புழுகித் தள்ளிச்சாம்.அதெல்லாம் சரி உன் கழுத்தில என்ன ஒரு பட்டி இருக்கு எண்டு காட்டுநாய் கேட்டிச்சாம். அது கூட்டை விட்டுவெளியில வந்தாப் பிறகு என்னைச் சங்கிலி போட்டுக் கட்டி வைப்பார்கள் எண்டிச்சாம் வீட்டுநாய். காட்டுநாய் சொல்லிச்சாம் காட்டில இங்கமாதிரி வசதிகள் இல்லைத்தான் ஆனால் அங்கு நான் சுதந்திரமாக வாழ்கின்றேன். எனக்கு எவரும் தடைபோட முடியாது. மற்றவர்களுக்காக எனது சுயமரியாதையை இழந்து வாழமுடியாது என்று நன்றி வணக்கம் சொல்லிவிட்டு காட்டை நோக்கி ஓடிப்போயிட்டுதாம் என்று சொல்லிக் கொண்டு எனது அணி சார்பாக தமிழச்சிக்கு தனது வாதத்தை முன்வைக்க வருமாறு அஞ்சா நெஞ்சன் வாத்தியார் அவர்களை அழைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

அருமை.......  அருமை.........  இரண்டு இடிகள் இடித்து ஓய்ந்தன ( நடுவர் வெத்திலை போடுகின்றார் ) . காலம் பிந்தினாலும் காரியத்தில் தமிழச்சி கண்ணாக இருந்து புலம் பெயர்ந்த தமிழனின் சுகபோக வாழ்வைப் பட்டியலிட்டு , இது தாய்மண்ணில் கிடைக்குமா ??? என்று ஒரு  பிடி பிடித்தார்  எதிரணியை நோக்கி . எனக்குத் தமிழச்சியின் வாதத்தை பார்த்தபொழுது ஒரு விடையம் நினைவுக்கு வந்தது .  எனது பாட்டன் முப்பாட்டன் எல்லோரும் தாமும் வளர்ந்து , தம்மைச் சார்ந்தவர்களையும் வளர்த்து , உற்றார் சுற்றம் சூள , அன்பும் பாசமும் நிறைந்த வாழ்வை வாழ்ந்தார்கள் . அவர்களுக்கு நீங்கள் சொல்கின்ற எதுவித ஆடம்பர வசதிகளும் இருந்திருக்கவில்லை . ஆனால் வாழ்வை அணுஅணுவாக ருசித்து வாழ்தார்கள் . அப்படியான மனநிறைவு கொண்ட வாழ்வு இன்றைய புலம்பெயர்ந்த தமிழனிடம் உள்ளதா ???  என்கின்ற ஒரு பெரிய கேள்வி எழுகின்றது . இதையே எதிரணித்தலைவர் காவாலி , " காட்டு நாய் "  "வீட்டு நாய் " உருவகக் கதை மூலம் நகைச்சுவையாக வைத்துள்ளார் . எங்கே ஜேர்மனி கண்ட வாத்தியார் வாங்கோ .  பிடியுங்கோ உங்கள் பிடியை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பட்டிமன்றை அரங்கேற்ற இடம் தந்த யாழ் களத்திற்கும்  

யாழின் சிற்பி மோகன் அண்ணா  அவர்களுக்கும்

 

மன்றில் வீற்றிருக்கும் யாழின் வழி நடத்துனர்களுக்கும்

எதிரணியினருக்கும்    எமது அணியினருக்கும்

 

மன்ற அரங்கில் அமர்ந்திருக்கும்  நடுவர்களுக்கும்

 

பட்டிமன்றை உற்று நோக்கிச் செவிமடுத்துக் கொண்டிருக்கும்

ஆயிரம் ஆயிரம் என்ன இனிய மக்களுக்கும்  


எனது வணக்கங்கள்


 

புலம்பெயர்ந்த வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா?


இயந்திர வாழ்க்கை ஐயா


காலையில் கணவன் ஒருபுறமும் மனைவி

இன்னொரு புறமும் வேலைக்குச் சென்றால் இரவு வீடு திரும்பும் வரை

கைத்தொலைபேசியில் தான்  அவர்கள் குடும்பம் நடாத்துகின்றார்கள்

நடுவர்களே.


இன்னும் சிலர் கணவன் இரவு வேலை என்றால் மனைவி பகல் வேலை

என்ற அடிப்படையில் வாரம் முழுவது தலைமறைவு வாழ்க்கை நடத்துகின்றனர்.

இதற்குள்ளே அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் ஆரம்பப் பள்ளிகளிலும்

பள்ளிக்குப் பின் பள்ளி என்றும்  அன்னியரின்  பராமரிப்பிலும் அல்லற்படுகின்றனர்.


 

புலம்பெயர்ந்த தமிழர்கள்  பணம் பணம் என்று அலைந்து ஒன்றுக்கு இரண்டு வேலைகளுக்கு ஆசைப்பட்டு  வேலைச்சுமைகளை சுமந்து வெந்து போய் உண்பதற்கே நேரம் இன்றி உருகி நிற்கின்றனர்.


 

வேலைக்குச் செல்லும் அவதியில் தம் குழந்தைகளைக் கூட கவனிக்க 

முடியாமல்  குழந்தைக் கவனிப்பாளர்களை அணுகுகின்றார்கள்

இப்படியே புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் அனுபவிக்கும் கொடுமைகள்  சொல்லி அடங்காது நடுவர்களே  


சீரும் சிறப்புமாகசொந்த நாட்டில்  வாழ்ந்த ஈழத் தமிழர்கள் இன்று புலம்பெயர்ந்த பின்னர் சீரழிந்து வாழ்கின்றனர்..நாங்கள் புலம்பெயராமல் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திருக்குமா?


 

நடுவர்களே

புலம்பெயர்ந்து இங்கே நாங்கள் சிறப்பாக வாழ்கின்றோம் என்பவர்களைப் பார்த்து  நான் கேட்கின்றேன்

நீங்கள் சுவாசிக்கும் காற்றில் எத்தனை வீதம் விசா வாயுக்கள் கலந்திருக்கின்றது என உங்களுக்குத் தெரியுமா??


இல்லை நீங்கள் தினந்தோறும் உண்ணும் உணவுப் பதார்த்தங்களில் கறிவகைகளில் கீரை வகைகளில் பழவகைகளில் உணவுப் பொதிகளில்  என்ன என்ன விஷம் கலந்த இரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன எனவாவது தெரியுமா ?


எவ்வளவு விரைவாக மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் மாசு படுத்தப்படுகின்றன என்பதையாவது அறிந்து வைத்திருக்கின்றீகளா

அல்லது அந்த இரசாயன் மாசு களால் எத்தனை எத்தனை விதம் விதமான வியாதிகள்

உங்கள் தேக ஆரோக்கியத்துடன் விளையாடுகின்றன என்பதையாவது எண்ணிப் பார்த்தீர்களா?


 

சிறப்பாக வாழ்கின்றோம் என எண்ணிக் கொண்டு புலம்பெயர்ந்து விஞ்ஞானத்துடன்

முட்டி மோதி  வாழும் நாடுகளில் நாங்களும் தேய்ந்து கொண்டு செல்கின்றோம்


சிறப்பாக வாழ்வது என்றால் என்ன என்ற  அர்த்தமே தெரியாமல்  எதிரணி உறுப்பினர் வாதிடுகின்றார் .


காரும் பங்களாவும் கையிலே நோக்கியாவோ இல்லை சம்சுங்கோஎன்ற வாழ்வைத்தான் எதிரணியினர் சிறப்பான வாழ்க்கை என்கின்றார்களா?


இயற்கை தந்த கொடைகளை ரசித்து வாழ்வதும் சிறப்பான வாழ்க்கை  தான் நடுவர்களே


சொந்த ஊரில் வீசும் தென்றல் காற்றைப் பற்றி எதிரணிக்குத் தெரியுமா


நடுவர்களே

அங்கே காலைச் சூரியனின் ஒளி தேகத்தில் படும்போது

ஏற்படும் புத்துணர்ச்சியை அவர்கள் அறிவார்களா நடுவர்களே

எம் சொந்த மண்ணில் ஆழ மர  நிழலிலோ அல்லது ஆற்றங்கரையிலோ


அல்லது கேணிக்கட்டுகளிலோ அமர்ந்து நண்பர்கள் அடிக்கும் அரட்டை யின் 

சுகம் தெரியுமா எதிரணியினருக்கு நடுவர்களே


 

நச்சுக் காற்றைத் தினம் தினம் உள்வாங்கிச் சிறப்பாக வாழ்வதாக

எண்ணும் பேதமையை என்னவென்பது?  


நான்கு சுவர்களுக்கே முடங்கி  நாட்கள் செல்வதையே அறியாமல்

நாசமாகிப் போகின்றது புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்க்கை.


 

சுற்றமே  இல்லாமல் தனிமரங்களாக இரண்டு வசனங்கள்

சொந்த மொழியில் பேச ஆளில்லாமல் சோகமாகப் போகின்றது

புலம்பெயர்ந்தவனின்  வாழ்க்கை.


 

அன்னை தந்தையை அகதிக்  காசிற்காகப்  புலம் பெயர்த்துக்

 காற்றில்லாத நிலக்கீழ் அறையில் அடைத்து வைத்து

அவர்கள் நிம்மதியக் குலைக்கின்றது புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்க்கை.


 

அடுத்தவன் வீட்டில் பென்ஸ் கார்

அதற்கடுத்தவன் வீட்டில் நீச்சல் தடாகம்

முன் வீட்டில் பெரிய  தோட்டம் பக்கத்து

 வீட்டிலோ  பெரிய தொலைக் காட்சி


என் வீட்டிலும் இவை உண்டு

ஆனால் என் வீட்டிற்கு மட்டும் தினமும்

வங்கியிலிருந்து எச்சரிக்கைக் கடிதம் வரும்


இதுதான் புலம்பெயர்ந்தவனின் சிறப்பான வாழ்க்கையா நடுவர்களே


பணம் மட்டும் தான் வாழ்க்கையின் குறியாக  நினைத்து வாழும்

இந்த பாழாகிப் போன புலம்பெயர்ந்தவனின் வாழக்கை செயற்கையின்

ஆழுமைக்கு அடிமையாகி தேடிவரும் வியாதிகளுக்கே அந்தப்

பணத்தைத் தாரை வார்ப்பதை என்னவென்பது நடுவர்களே


குழந்தைப் பருவத்தில் கூடி விளையாட யாருமற்ற நிலையில்

கணணியில் அனாதையாகி எங்கள் குழந்தைகளின் குருதியோட்டம்

கேள்விக்குறியாகின்றது  நடுவர்களே  

 

கல்வி கல்வி என்று தான் காணாத கல்வியைப் புலம்பெயர்ந்தவன்

தன்  குழந்தைக்கு கடமையாக்க


பொது அறிவு என்றால் பொருளே தெரியாமல்

அக்குழந்தை தவிக்கின்றது

தன்  கலாச்சாரம் தெரியாமல் அவதிப்படுகின்றது


 

 இத்தனை கவலைகளும் இல்லாமல் நாங்கள் சொந்த ஊரில்  சிறப்பாக நாம் வாழ்ந்திருப்போம்

 

நடுவர்களே

 

புலம்பெயர்ந்த வாழ்க்கை சிறப்பான வாழக்கை என நினைத்து பகட்டு வாழ்விற்காகத் தம் பணத்தை அள்ளித் தெளிக்கும் புலம் பெயர்ந்த தமிழனை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் எனத் தாழ்மையாக வேண்டி விடைபெறுகின்றேன்


 

நன்றி வணக்கம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு எதிரணியினர் வருமுன்னர் வந்திருந்தாலும், பிரம்போடு நின்றாலும் வாத்தியாரின் வாதங்கள் அனல் பறக்கின்றன. புலம்பெயர் வாழ்வு எம்மை எங்கே கொண்டு சென்றிருக்கிறது என்பது அவர் வாதத்திலிருந்து தெரிகிறது. சிறந்த வாழ்வு என்பது வசதியான வீடுகளில் வசிப்பதும் விலையுயர்ந்த வாகனங்களில் செல்வதும் நவீன தொலைபேசியும் தொழில் நுட்பங்களுடனும் ஆடம்பரமாக வாழ்வதல்லஎன்று வாத்தியார் கூறுவது  நிதர்சனமான உண்மைகள்.

 

வேலைப் பளுவால் குடும்பத்துடன் கூடி வாழ முடியாமல், இரவும் பகலும் உழைத்து உழைத்து ஓடாய்த்
தேய்ந்து நோய்க்கு ஆளாகி ஆரோக்கியமான உணவைக் கூட உண்ண  முடியாது வாழும் எம் அவல நிலையையும் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார். வேதியற்  பொருட்களால் சுற்றுச் சூழல் மட்டுமல்ல அவற்றை உண்பதால் நாமும் மாசடைகிறோம் என அழுத்தமாக முன்வைத்துள்ளார் தன் வாதத்தை.

பணம் இருப்பதனால் அதை அள்ளித் தெளித்து கல்வியைத் திணிக்கின்றோமே அன்றி எம் சிறார்களை  இயற்கையோடு இயல்பாக வாழவிடாது, இயற்கையால் கிடைக்கும் அறிவைப் பெற விடாது செயற்கையாகத் திணிக்கின்றோம் என்று மிக அழகாகக் கூறிச் சென்றார்.

சரி இவர் முன்வைத்த வாதங்களை எதிரணியினர் எப்படி முறியடிக்கின்றனர் என்று பார்ப்போம். அடுத்ததாக உங்கள் அணியில் இருந்து யார் வரப் போகின்றார் தலைவர் இசைக்கலைஞன் அவர்களே!

Link to comment
Share on other sites

அடிச்சாலும் அடி சும்மா கில்லி அடி   . வாத்தியார் இங்கு பலவிடையங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறார் . முக்கியமாக புலம்பெயர் வாழ்வின் அவலங்கள் ,சுற்றுச்சூழல் மாசடைந்ததுடனான வாழ்க்கை முறைகள் ,  இளயபரம்பரையின் செயற்கைத்தனமான வளர்ப்புமுறை என்று எதையுமே விட்டுவைக்காது , வாத்தியார் விரல் மொழியில் அடித்தே பாடம் சொல்லியிருக்கின்றார் . வாத்தியாரின் வாதத்தைப் பார்த்தபொழுது இரண்டு கவிவரிகள் எனது மண்டையில் உதித்தன . எனது ஆதர்ச கவிஞன் இவ்வாறு தனது வாழ்வு எப்படியிருக்க வேண்டும் என்று சொல்ல விழைகின்றான் ,

" பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும் ; நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற்பட வேணும்; என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல்வர வேணும் " .

இன்னும்  ஒரு கவிஞனோ ஒருபடிமேல் போய் ,

 

" சொர்க்கமே என்றாலும் அட நம்மூரு போலவருமா ??? "

 

என்று வினா எழுப்புகின்றான் . இதையே வாத்தியாரின் வாதமும் உறைக்குமால் போல் சொல்லி நிற்கின்றது . ம்........ ம் ....... அணித்தலைவர் இசைக்கலைஞனைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கின்றது . பாவம் மனிதர் இந்த முழி முழிக்கின்றார் . அவர்களும் இலேசுப்பட்டவர்கள் இல்லை .  எங்கே இசைக்கலைஞன் அழையுங்கள் உங்கள் உடைவாள் ஒன்றை..............

Link to comment
Share on other sites

நன்றி நடுவர் அவர்களே.. அந்தப் பக்கம் அடுத்த பேச்சாளர் யாரென்று காதோரமா சொன்னேன்.. கேட்கவில்லையா? :lol:

 

சரி.. சரி. எமது அணி சார்பாக சீறும் சிங்கம்.. அஞ்சாத காளை தனது உரையுடன் தயாராக உள்ளார்.. ஆனால் ஏழு நாள் கணக்கு கவனத்தில் இருக்கட்டும் நடுவர்வாள்! :D :icon_mrgreen:
 



அந்த அஞ்சாத காளை யாரெனச் சொல்லாது விட்டுவிட்டேன்.. :wub: ஜீவா.. ஜீவா.. ஜீவா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் காதுக்குள் குசுகுசுக்கும் வேலையெல்லாம் வேண்டாம் இசைக்கலைஞன் அவர்களே!   நீங்கள் இப்படிச் செய்தால் நாம் உங்களுக்கு உதவி
செய்கிறோம் என்று எதிரணியினர் தவறாக எண்ணப் போகின்றனர்.

அஞ்சாத சிங்கம் தயாராக இருக்கிறார் எனில், பிறகெதற்கு எழு நாள் கணக்கு?? தண்ணீர்ப் போத்தல் ஒன்றைக் குடிக்கக் கொடுத்து விரைவாக அனுப்புங்கள் சீறும் காளையை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆணா,பெண்ணா என்ற அலசல்களுக்கும், அமளி துமளிகளுக்கும் மத்தியில் பெண் தான் என்று  எம்மை எல்லாம் "அன்னையாய்" சுமக்கும் யாழ் இணையத்திற்கும், அதன் ஆரம்ப கர்த்தா திரு.மோகன் அண்ணாவிற்கும், செவ்வனே சீரும் சிறப்புடனும் இருக்க அதை சிறப்பாய் நிர்வகிக்கும் நிழலி அண்ணா, இணையவன் அண்ணா, நுணாவிலான் அண்ணா, நியானி அண்ணா அவர்களுக்கும், முகம் காணவிடினும் அன்பிற்கும், நட்பிற்கும் அடிநாதமாய் விளங்கும் கருத்துக்கள உறவுகளுக்கும், வாசகர் பெருமக்களுக்கும், பட்டி மன்றத்தை சிறப்புற நடத்திக்கொண்டிருக்கும் நடுவர்கள் திரு. கோமகன் அண்ணாவிற்கும்,சுமோ அக்காவுக்கும், எனது கட்சிக்காரர்களுக்கும் , எதிர்க்கட்சிக் காரர்களுக்கும் மற்றும் முன்னாள்,இன்னாள் காதலிகள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு

 

" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ???

என்று பேச வந்துள்ளேன்.

 

எதிரணியில் பேசிய அணித்தலைவர் காவாலி அண்ணா; இப்ப யாழ்வாலி என்ன சொல்கிறார் என்றால் மண்ணுக்கே உரிய இயல்பான வாழ்வு தான் மகிழ்வைத்தரும் என்று. நான் கேட்கிறேன் அப்படியென்றால் நீங்கள் எல்லாம் எதற்குப் புலம்பெயர்ந்து வந்தீர்கள் என்று? நாட்டின் இனப்பிரச்சனை மட்டும் என்று சொல்லி எத்தனை காலம் தப்பிவிடப்பார்ப்பீர்கள்?  அதுவல்ல காரணம். புலம்பெயர் வாழ்வின் சுகபோகங்களைத் திறக்க விரும்பவில்லை என்பது தான் அடிப்படைக்காரணம். பிஸ்ஸாவும்,பேகரும் தின்ற வாய்க்கு ஒரு மாறுதலுக்கு கூழ்குடித்ததும் ஊர் நினைப்பு வந்து விட்டது என்று பீற்றித்திரியும் சாதாரணக் கவலை தான் என்பது நான் சொல்லாமலே அனைவருக்கும் தெரியும்.

அப்படி இல்லாது விடின் உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காய் ஊரில் இருக்கும் இளைஞர்,யுவதிகளை வெளிநாட்டுக்கு கூப்பிடும் எம்மவர்களை என்ன சொல்ல??? "அங்கு இல்லாத ஏதோ ஒன்று இங்கு இருப்பதனால் தானே அனேக வீடுகளில் வீட்டிற்கு ஒருவராவது வெளிநாட்டில் வசிக்கிறார்கள்? இதிலேயே அவர்களின் ஒட்டு மொத்த வாதமும் அடிபட்டுப் போய் விடுகிறதே நடுவர் அவர்களே..!

 

அடுத்து வாத்தியார் அண்ணா, "ஊரில் இருந்தால் இயற்கை வனப்பை ரசித்துக் கொண்டு நிம்மதியாய் இருந்திருக்கலாம், புலம்பெயர் வாழ்வின் கஸ்டங்களைச் சொல்லிப் பச்சைகளை அள்ளிக் கொண்டு போனார்."

ஐயா ..!! தெரியாமல் தான் கேட்கிறேன் நீங்கள் எந்த ஊரிலையப்பா இருக்கிறியள்? நீங்கள் இருந்த காலத்திலை இருந்த மாதிரியா ஊர் இருக்கிறது? அண்மையில் பத்திரிகைகளிலே வந்த செய்திகள் கூடச் சாட்சி பச்சை நிறத்தில்.மஞ்சள் நிறத்தில்,சிவப்பு நிறத்தில் மழை பெய்கிறது என்று காரணம் என்ன வழி மண்டலத்தில் இருக்கும் அமீபாக்கள் நிறத்திற்குக் காரணமாகவும், அமில மழையும் பெய்யும் போது புலம்பெயர் தேசங்களில் மட்டும் தான் என்பது போலப் பேசுவது வேடிக்கையாய் இல்லை?

அதை விட இயற்கையாய்க் கிடைக்கும் உணவுகள் என்று கதை விடுகிறார்.. :rolleyes:

களை நாசினி, கிருமி நாசினி என்று எத்தனை விதமான மருந்துகளை அடிக்கிறோம் என்று எல்லாருக்கும் தெரியும்.

ஏன் இங்கு மட்டும் இல்லையா இங்கும் தான் "பியோ" என்று சொல்லி தரமான காய்கறிகள் விற்கிறார்கள் காசு அதிகம், அல்லது அது பற்றி அதிகம் தெரியாமல் வாங்காமல் விட்டுவிட்டு குறை சொல்லுவது என்ன நியாயம்??? இருக்க..

 

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது ஆன்றோர் வாக்கு.

நியாயமான முறைகளில் பொருள் ஈட்டுவது என்பது தேவையான ஒன்றே, ஏறக்குறைய ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித இனம் ஆபிரிக்கக் கண்டத்தில் தோன்றிய போதே அது இடம்பெயரத் தொடங்கிவிட்டது. "தக்கன பிழைக்கும்" என்ற "டாவின்சியின் கூர்ப்புக் கொள்கைக்கு அமைய" மனித இனமும் அந்தத்தக் காலத்திற்குரிய தேவைகளை நிறைவெற்றிக் கொள்வதற்காக நாடோடி வாழ்க்கை தான் வாழ்ந்தார்கள் அப்படித்தான் அங்கிருந்து உலகின் அனைத்துக் கண்டங்களுக்கும் பரவலானார்கள், அதே போலத்தான் ஈழத் தமிழினமும் இனப்பிரச்சனை காரண்மாகப் புலம்பெயர்ந்தாலும் தம் இருப்பைத் தக்க வைக்க வேண்டியாயிற்று.

 

நாம் புலம்பெயராது விட்டால் உலகமே போற்றும் முப்படைகளை வைத்திருந்த இராணுவம் அல்லா அமைப்பை தமிழரால் உருவாக்கியிருக்க முடியுமா? அல்லது போர்க்குற்றவாளிகளையாவது இனங்காட்ட முடிந்திருக்குமா?

ஏன் முக்கியமாக சமூக ஏற்றத்தாழ்வுகளையாவது கட்டுப்படுத்தியிருக்க முடியுமா?

குறிப்பாக சாதீயம்.. சாதீயத்திலேயே ஊறிப்போன தாயகத்திற்கும், சாதீயம் பற்றியே தெரியாத அடுத்தடுத்த சந்ததிகள் வளர்வதற்கும் புலம்பெயர் வாழ்க்கை தானே காரணம். அதை விட நாற்பது வயதிலும் திருமணம் செய்ய வரன் கிடைக்கிறது என்றாலும் புலம்பெயர் வாழ்க்கை தான் காரணம். அதே போல காதலிச்ச பிகரைக் கைப்பிடிக்கவும் மேலதிக காரணமாய் புலம்பெயர் வாழ்வு தானே காரணம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் நடுவரே..!!

 

எந்த ஒரு சமூகமாக இருந்தாலும் அதன் நிலைப்புக்கும்,சமூக முன்னேற்றத்திற்கும் காரணம் கல்வியும், பொருளாதர வசதிகளுமே. அது புலம்பெயர் நாடுகளில் அதிகமாகவே அனைவருக்கும் கிடைக்கிறது.

அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப கல்வியும், வேலை வாய்ப்புகளும், மருத்துவ வசதிகளும்,காப்புறுதிகளும், பாதுகாப்பான வாழ்வும் அங்கு கிடைக்குமா? எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு குறை சொல்லுவதே ஃபேஷன் ஆகிட்டுது நடுவர் அவர்களே..!!

 

அதை விட உலகமயமாக்கலின் பின் பொறுளாதார மேம்பாடுகள், சிக்கல்களுக்காக ஆண்,பெண் இருவரும் வேலை பார்ப்பதென்பது இன்றியமையாத சூழ்நிலையில் புலம்பெயராது இருந்தால் நல்லா இருக்கலாம் என்பது அபத்தமான ஒரு வாதம். புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்ல புலம்பெயராது இருந்தால் கூட கணவன்,மனைவி,பிள்ளைகள் என்று வேலைக்குப் போகுமளவுக்கு வாழ்க்கைச் செலவு எல்லா இடமும் தான் அதிகரித்துள்ளது.

 

நுகர்வுக் கலாச்சாரத்தில் தேவைகள் அதிகரிக்கும் போது அவற்றை வாங்க சம்பாதிக்கவும் வேண்டுமே.

பேராசையால் ஊணுறக்கம் இன்றி அலைவது அவரவர் செய்கைகளே அன்றி புலம்பெயர்வாழ்வின் அவலமல்லவே நடுவர் அவர்களே.

 

இப்படி ஆயிரக்கணக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம். அடுத்து வரும் பேச்சாளருக்கு வழி விட்டு

 

" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? முதலைக் கண்ணீர் என்று சொல்லி..

 

பேச வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி விடை பெறுகின்றேன்.

நன்றி.. வணக்கம். :)

 

 

 

 

Link to comment
Share on other sites

ஜீவா சிங்கம் தான் நான் ஏற்றுக்கொள்கின்றேன் . ஏனேனில் வாதத்தை வைத்த இடம் அப்படி  .

 

" நுகர்வுக் கலாச்சாரத்தில் தேவைகள் அதிகரிக்கும் போது அவற்றை வாங்க சம்பாதிக்கவும் வேண்டுமே. பேராசையால் ஊணுறக்கம் இன்றி அலைவது அவரவர் செய்கைகளே அன்றி புலம்பெயர்வாழ்வின் அவலமல்லவே "

 

என்று எதிரணியை கதிகலங்க வைத்து விட்டார் . அத்துடன் முக்கியமான விடையத்தை தொட்டார் . உலகமயமாக்கலின் பிடியில் தாயகமே சிக்கியபோது ,அங்கே எப்படி ஒரு சந்தோசம் வரும் ??? என்று ஒரு நியாயமான கேள்வியினால் திணறடித்து விட்டார் .  எங்கே யாழ்வாலி அழையுங்கள் ஓர் அங்கதனை ..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர் அவர்களே!

 

நமது அணி சார்பில் அடுத்து அறியாமை இருள்நீக்கி கங்குல் தனிலும் ஒளிவீசும் பகுத்தறிவுப் பகலவன் அவர்கள் பேசுவார்.

Link to comment
Share on other sites

இரவிலே சூரியன் கண்டவனாம் . சிரிக்க சிரிக்க பேசுபவனாம் . பகலவனே வருக . எரிப்பீரா ???????  இல்லை !!!!!!!!!!!

Link to comment
Share on other sites

முதலில் தமிழர்கள் சுதந்திரத்துடன் நிம்மதியாக சிறப்பாக தங்கள் தாய்நாட்டில் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக தங்களின் இன்னுயிரை அர்ப்பணித்த அனைத்து விடுதலை போராளிகளுக்கும், அந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் ஒரு நிமிடம் தலைசாய்த்து மௌன அஞ்சலியை தெரிவித்துகொள்கிறேன்.

.................

நன்றி.

புலம்பெயர்ந்து தொலைச்சதாலே இவங்கட கண்ட கண்ட பேச்செல்லாம் கேட்கவேண்டி இருக்குதே என்று காதை பொத்தி கொண்டு படுத்திருக்கும் ஐயா கோமகன் அவர்களே,

எதிரணியினர் பேசும்போது குறட்டை விட்டு தூங்கிவிட்டு இப்போ பேந்த பேந்த விழிக்கும் அம்மணி சுமே அவர்களே,

யாழ்கள நிர்வாகிகளே,

ஏன்டா பேச வந்தோம் இதுக்கு பேசாமல் அவங்கட தலைப்புக்கு பேரை குடுத்திருக்கலாமோ என்று ஆரம்பத்திலே இருந்தே, காதல் பட கிளைமாக்ஸில் வரும் பரத் போல தலையை சொறிந்து கொண்டிருக்கும் எதிரணி தலைவர் அவர்களே,

அவர்களின் உறுப்பினர்களின் பேச்சுக்கே காதால் இரத்தம் வழிவது கூட தெரியாமல் பேசிவிட்டு அமர்ந்த பேச்சாளர்களே, தோற்க போறமே என்று எந்த கவலையும் இல்லாமல் சிரிச்சு கொண்டு இருக்கும் எதிரணி தோழர்களே,

வெற்றி எங்களுக்கு தான் என்று தெரிந்தும் எந்த வித கர்வமும் இல்லாமல், இயல்பாகவே இருக்கும் எனது அணியை சேர்ந்த சகோதரர்களே,

இதிலென்ன சந்தேகம் ஊரிலே இருந்தால் இதை விட எவ்வளவோ சிறப்பாகவும் சந்தோசமாகவும் இருந்திருக்கலாம். இங்கே வந்து தொலைச்சதாலே இவங்கடை அறுவைகளுக்கு கூட பார்த்து கைதட்ட வேண்டி இருக்கே என்று காத்திருக்கும் பட்டிமன்ற ரசிக பெருமக்களே,

உங்கள் அனைவருக்கும் இந்த பகலவனின் இனிய மாலை வணக்கங்கள்.

அண்ணே சாத்திரி அண்ணே..

எழும்புங்கோ அண்ணே...

அவங்கள் பேசி முடிஞ்சுது...

எனக்கு தலைப்பை ஒருக்கா சொல்லுங்கோ...

சாத்திரி : "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? அல்லது நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ????

ஏன்டா தலைப்பு கூட தெரியாமலா பேச எழும்பி நிக்கிறாய். கிழிஞ்சுது போ..

அது சரி அண்ணே ... மொத்தத்திலே ஊரை பற்றி கவலைபடுகிற புலம்பெயர்ந்த தமிழனை பற்றி தானே தலைப்பு.

அம்மணி தமிழச்சி என்னடா என்றால் ஊரைப்பற்றி ஒரு கவலையில்லை, அங்கே இருக்கிற ஆட்களை பற்றிய ஒரு கவலை இல்லை, இங்கே எல்லாமே கிடைக்குது என்று சந்தோசத்திலே பேசுறா, தம்பி ஜீவா என்னடா என்றால் நாங்கள் இல்லை என்றால் அங்கே முப்படையும் இல்லை என்று பேசுறார். இவர்கள் இருவருக்கும் ஊரின் பிரிவை பற்றி எள்ளளவும் கவலையே இல்லை, ஆனால் கவலையை பற்றி பேசுகிறார்கள். அடுத்து வாற ஆட்களாவது எங்களுக்கு கவலை இருக்கு, அது பிரிஞ்சு வந்திட்டோம் என்ற கவலை என்ற தலைப்பிலே பேச முயற்சி செய்யுங்கவன் பிளீஸ்..

சரி நான் என்ர முறியடிப்பு வாதத்துக்கு வாறன்.

அம்மணி தமிழிச்சி, உங்கட முதலாவது வாதத்துக்கு வாறன்,

உங்களிடம் சில கேள்விகள்

தாயகத்தின் கல்வியறிவு வீதம் எவ்வளவு.?

தாயகத்தில் உயர்தரம் ஏன் பல்கலைகழகம் வரை உங்களுக்கான கல்விச்செலவு எவ்வளவு.? (டியுசன், டொனேசன் கணக்குகளை இதுக்குள்ளே சேர்க்காதீர்கள்)

வேலைவாய்ப்பு இன்மை எத்தனை வீதம்..?

புலம்பெயர்ந்த நாட்டிலே எல்லாமே வியாபாரம் கல்வி உட்பட. நீங்கள் பொருளாதார ஏற்ற தாழ்வு அற்ற நாடுகள் என்று சொல்ல படுகின்ற நாடுகளில் நிற ஏற்ற தாழ்வு இல்லை என்று அடித்து கூற முடியுமா. அவன் சோமாலி, இவன் இந்தியன் என்று எத்தனயோ வேலைவாய்ப்புகள் மறைமுகமாக தடுக்கபடுவது உங்களுக்கு தெரிவதில்லையா. இல்லை கண்ணை மூடி கொண்டு உலகம் இருட்டு என்று சொல்கிற பூனை வகையா நீங்கள்.

பொருளாதார ஏற்ற தாழ்வு புலம்பெயர் நாடுகளில் இல்லையா... உண்மையா அம்மணி நீங்கள் சீரியஸாக பேசுறீங்களா காமடியாக பேசுறீங்களா..

சில ஏரியாக்களில் வீடு வாங்கவே முடியாது. உங்களுக்கு வெளியிலே பார்க்கும் போது தான் ஏற்ற தாழ்வு தெரியாது, உள்ளுக்குள்ளே நிலைமை வேற. டென்மார்க்கில் ஒரு இரவு நேர விடுதிக்குள் கறுப்பர்கள் நுழைய தடை. அம்மணி ஒருக்கா காரை விட்டு இரங்கி தெருவிலே நடவுங்கள் பாதி பிரச்சனை தெரியட்டும்.

இங்கே அரச பணத்தை நேர்வழிகளில் பெறுபவர்கள் எத்தனை பேர். மற்றவர்களின் உழைப்பு சுரண்டல்கள் தான் இங்கே அதிகம்.

மற்றது என்ன சொன்னீங்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நெருக்கம் அதிகமா... அம்மணி நீங்கள் செய்திகளே படிப்பதில்லையா. அடிக்கடி யாழுக்கு வந்து ஊர்புதினத்திலே இருக்கும் செய்திகள் கொஞ்சமாவது படியுங்கள். ச்சே.. இந்த புலம்பெயர் தேசம் அம்மணிக்கு காசு கொடுத்த அளவுக்கு நேரத்தை கொடுக்கவில்லை செய்தி படிக்க.

நோர்வேயில் பெற்றோர் பிள்ளைகளை சரியாக கவனிப்பதில்லை என்று பிள்ளைகள் காப்பகம் பிள்ளைகளை கையகபடுத்துகிறது என்று உண்ணாவிரதம் இருந்த பெற்றோர். இப்போது நடைபெறும் ஐ நா மனித உரிமை விதாதத்தில் கூட விவாதிக்கபடுகிறது.

பிள்ளைகளை கேட்டால் நாங்கள் இரண்டு கலாச்சாரத்தில் வாழ வேண்டி இருக்கு. வீட்டிலேயே அம்மா அப்பாவுக்காக ஒரு நடிப்பு, வெளியிலே கலாச்சாரத்தில் தோற்றவர்கள் என்ற பெயர் வரக்கூடாது என்று ஒரு நடிப்பு, இப்படி போலி வாழ்கையில் தான் பிள்ளைகளின் காலம் ஓடுகிறது.

சரி எங்களை பார்த்து ஒரு கேள்வி கேட்டீர்கள், இவ்வளவு சிறப்பையும் அனுபவித்த பிறகு நீங்கள் ஊரில் போய் வாழுவீர்களா என்று. பதில் நிச்சயமாக எங்கட ஊரிலே சுதந்திரமாக உரிமையுடன் வாழக்கூடிய அரசிய சூழல் ஏற்பட்டால் நான் அங்கே போய் வாழுவேன். அது என் மனைவிக்கு சொல்லி தான் அவளை கல்யாணம் கட்டினேன்.

சுயமரியாதை இல்லாத, மனசிலே ஒரு நிம்மதி இல்லாத இயந்திரத்தனமான புலம்பெயர் வாழ்கையை விட கஞ்சியை குடிச்சாலும் எங்கட ஊர் வாழ்க்கை இதை விட எவ்வளவோ மேல்..

சப்பா இப்பவே கண்ணை கட்டுதே...

நடுவர் அவர்களே தொண்டை வறண்டு போட்டுது.. கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு எங்கட தம்பி ஜீவாவுக்கான முறியடிப்பு விவாதத்துக்கு வாறன்.

தொடரும் ..

(ஏழு நாள் நேரம் இருக்கு தானே..)

நிறம் மாற்றுவதற்காக திருத்தம் செய்யபட்டது

தம்பி ஜீவாவின் வாதத்துக்கு வாறன்.

ஜீவா சொல்லுகிறார் இனப்பிரச்சனை என்று காரணம் காட்டி ஊருக்கு போகாமல் இருப்பதெல்லாம் சுத்துமாத்து என்று. ஜீவாவுக்கு தெரியுமா புலம்பெயர்ந்து இன்னும் அகதி அந்தஸ்து கூட கிடைக்காமல், கருப்பிலே வேலை கூட கிடைக்காமல் ஊருக்கும் போகமுடியாமல் தெருத்தெருவாக அலையும் எம் சகோதரர்கள் எத்தனை பேர் என்று. நாட்டிலே போராடின ஒரே காரணுத்துக்காக கட்டிய மனைவி, பிள்ளைகளை கூட தவிக்கவிட்டு, தாய் தந்தையரை பார்க்காமல் வேலையும் கிடைக்காமல் இரவுகளை தூக்கமின்றி கழிக்கும் போராடிய போராட்டத்துக்கு துணைபோனவர்கள் புலம்பெயர் நாடுகளில் லைவது உங்களுக்கு தெரிவதில்லையா ஜீவா.

காசுக்காக மட்டுமே வெளிநாட்டுக்கு வந்தவர்கள் எத்தனை பேர் ஜீவா. படிப்பு, திருமணம் , அரசியல் காரணங்கள் காரணமாக வந்தவர்கள் எத்தனை பேர். அன்றைய நாட்களில் ஊரில் இருந்த சீதனகொடுமைக்காக வெளிநாடுகளுக்கு உழைப்பு தேடி வந்தார்கள் . ஆனால் அவர்களுக்கு ஊரை பற்றிய கவலை வெறும் பிரிவுகளின் கவலையா.... பனியிலே வேலை செய்து மொட்டை விழுந்து உடம்பு கலைத்து வயோதிப தோற்றத்தில் ஊரிலே பொண்ணு பார்க்கும் போது, மாப்பிள்ளை ஊரிலே இல்லை என்று தட்டுப்படும் கல்யாணங்களால் வேதனைபடும் இளைஞர்களை நீங்கள் கண்டதில்லையா.

இங்கே இரவு பகல் பாராது வேலை செய்பவர்களை பேராசையால் அலைபவர்கள் என்று ஒற்றை சொல்லி சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது. ஊரிலே இருந்து வந்த காசு கொடுக்க வேண்டும், இன்னும் ஊரிலே இருக்கும் தங்கச்சிமாரை கட்டிவைக்கவும் மூன்று ஷிப்ட் இல் வேலை செய்பவர்கள் எல்லாம் பேராசைகாரர் என்றால் உங்கள் வாதம் உங்களுக்கே நியாயமாகபடுகிறதா.

ஒரு உண்மையை சொல்லட்டுமா ஜீவா. அங்கே இருந்து இங்கு வருபவர்கள் எல்லாம் ஒரு கனவுடன் தான் வருகிறார்கள். இங்கு வந்ததும் தான் அவர்களுக்கு யதார்த்தம் புரிகிறது. திரும்ப போகவேணும் என்ற ஆசை தான் , ஆனால் பட்ட கடனுக்காக ஐந்து வருஷம், திரும்ப பொய் வாழ்வதற்கு என்று உழைக்க ஐந்து வருஷம், அவனது இளமை எல்லாம் இங்கேயே போய்விடுகிறது. பின்னல் இங்கே இருக்கும் மாத இறுதியில் வரும் invoices, Direct Debit எல்லாமே அவர்களை திரும்ப போவதை தடுத்துவிடும். அதைவிடவும் அவர்களின் பிள்ளைகளின் கல்வி, பழக்கவழக்கங்கள் எல்லாமே அவர்களை ஊரில் இருந்து தள்ளிவைத்துவிடும். ஆனால் மனசாட்சியை கேட்டுபாருங்கள் அவர்களுக்கு ஊரில் போய் வாழவேண்டும் என்ற ஆசை சாகுமட்டும் இருக்கும்.

சரி நான் இனி எனது வாதத்துக்கு வாறன்.

ஒரு மனிதன் இந்த உலகில் பிறக்கும்போது அவனது அடையாளமாக அவனது பெற்றோர் மட்டுமல்ல அவனது பிறந்த மண்ணும் ஒட்டிகொள்கிறது. எந்த ஒருத்தனுமே நான் இந்த மண்ணில் பிறந்தேன் என்று பெருமையுடன் சொல்ல வேண்டிய இடமாக அவனது தாயகம் மாறிவிடுகிறது. அதற்காக தங்களின் உயிரை கூட கொடுக்க கூடிய உணர்வுமிக்க இடமாக அது மாறுகிறது.

தம்பி ஜீவா ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தார் புலம்பெயர் மக்களால் தான் ஒரு அரச இராணுவம் அல்லாத அமைப்பு முப்படைகளையும் வைத்திருந்தது என்று. நானும் ஒத்துகொள்கிறேன். ஆனால் நாங்கள் புலம்பெயராமல் அவைகள் கூட இருந்தோ தோளோடு தோள் கொடுத்து போராடி இருந்தோம் என்றால், முப்படைகள் இல்லவடினும் எங்களுக்கு என்று ஒரு நாடு இருந்திருக்கும் என்பதை வேதனையுடன் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது.

ஒரு மனிதனுக்கு அடுத்ததாக தேவைபடுவது சுயமரியாதை. நாங்கள் எண்களின் தாய்நாட்டை விட்டு இன்னொரு நாடுக்கு எப்போ பிழைக்க வாறோமோ என்றே எங்களின் சுயமரியாதையை இழக்கிறோம். கூனி குறுகி அடிமையாக எத்தனை நாட்கள் வேலை செய்திருப்போம். ஊரிலே பொறியியல் படித்துவிட்டு இங்கே எத்தனை கக்கூஸ் கழுவி இருப்போம். எங்களுக்கு பக்கத்தில் வந்து அமர கூட மாட்டார்கள்.

ஒரு சாராசரி மனிதனுக்கு தர வேண்டிய மரியாதையைவிட கீழ்த்தரமாக எவ்வளவு இடங்களில் நடத்தி இருப்பார்கள். இப்போது குறைந்துவிட்டாலும், நேருக்கு நேராக காட்டாவிட்டாலும் நிற வெறி அவர்களின் மனசில் இருந்து அகற்ற முடிவதில்லை.

நாங்கள் எவ்வளவு தான் உழைச்சாலும் கடைசியாக தேடி போவது நிம்மதியை. அதை நீங்கள் சொல்லும் இலத்திரனியல் உபகரணங்களோ, மாடி வீடுகளோ வசதி வாய்ப்புகளோ தரப்போவது இல்லை. காசு இருந்தும் நிம்மதி இல்லை என்று தங்களை வாயாலேயே சொன்ன எத்தனை பேரை நீங்கள் நாளாந்தம் காணுகிறீர்கள். எண்ட கட்டை ஊரில் தான் வேக வேணும் என்று ஆசைபடும் எத்தனை முதியவர்களை நாங்கள் இங்கே காணுகின்றோம்.

நாங்கள் இங்கே வந்து தேடி கொண்டது மன உளைச்சலை தான்.பக்கத்து வீட்டு காரனை கூட ஒரு கிழமைக்கு ஒருக்கா தான் காண முடியும். கண்டால் கூட ஒரு செயற்கையான புன்னகை. இது தான் வாழ்க்கையா.சொந்தங்களை ஒரு விருந்தில் கண்டால் தான் உண்டு. எனது diary எடுத்து பார்த்தால், காலியில் எழும்பி வேலை, பினனர் வீடு, TV , நித்திரை வேலை.. சனி ஞாயிறு விருந்து. இதை அபப்டியே 52 வாரங்கள் எழுதினால் இதுதான் எனது உங்களது வருட diary பக்கங்கள். இயந்திர தனமான ஒரு வாழ்க்கை. இதனால் வரும் மன உளைச்சல் இவை தான் நாங்கள் இங்கே தேடி கொண்டது.

ஊரிலே காசு இல்லாவிட்டாலும், நாலு நண்பர்கள், யார் எண்டு தெரியாவிட்டாலும் உதவி செய்யும் மக்கள், சனசமூக நிலையம், அடிக்கும் தென்றல் காற்று, கோயில் என்று எங்களுக்கு மன அமைதியும் மகிழ்வையும் கொண்ட ஒரு சிறப்பான வாழ்க்கை இருந்திருக்கும்.

எனக்கு தெரிய கடந்த ஒரு ஒருவருடத்தில் 17 மணமுறிவுகள். இவர்களுக்கு 10 - 12 வயதில் பிள்ளைகள் கூட இருக்கிறார்கள். கேட்டால் எங்களின் உரிமை என்பார்கள். முழுக்க சுயநலம். தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கூட கணக்கில் எடுக்காமல் பிரியும் இந்த தைரியத்தை கொடுத்தது இந்த புலம்பெயர் நாடு. ஊரிலும் மணமுறிவுகள் உண்டு ஆனால் இங்கே நடக்கும் அளவுக்கு இல்லை.

சரி இனி பொதுவான ஒரு விடயத்துக்கு வாறன், உலகெல்லாம் அலைந்து திரிந்த யூத இனம், அங்கே பணம் கிடைகிறது, வசதியாக வாழலாம் என்று இருந்திருக்கலாம் தானே எதுக்கு தங்களுக்கு என்று ஒரு நாடு அமைச்சு அங்கெ போய் இருக்கிறார்கள். ஏனென்றால் அது தான் அவர்களின் மண். அங்கெ வாழ்வது தான் அவர்களுக்கு நிம்மதி.

ஏன் கனக்க போவான் உங்கட நாட்டிலே இருக்கும் வெள்ளை காரனை கேளுங்கள் இங்கே விட அதிக சம்பளம் தாறான் என்று இன்னொரு நாட்டுக்கு போக சொல்லி முடியாது என்று தான் சொல்லுவான்.

உண்மையை சொன்னால்,

ஊரிலே பெடல் கழற கழற கல்லை எடுத்து குத்தி குத்தி ஓடிய சைக்கிளின் சுகம் எனக்கு புலம்பெயர் பென்ஸ் கார் கொடுக்கவில்லை.

ஊரிலே ஒரு எண்ணெய் தோசைக்காக அம்மாவிடம் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்ட நிம்மதி எனக்கு வீட்டு வாசல் கொண்டு வந்து தரும் பிஸ்ஸாவில் கிடைக்கவில்லை.

பிள்ளையார் கோயில் அரச மரத்துக்கு கீழே கிடைக்கும் அந்த தேறல் காற்றின் சுகம் மால்டாவில் 5 ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கவில்லை.

வெறும் தரையில் காலை நீட்டி படுத்த போது வந்த நித்திரை, ஹீட்டர் போட்டு போர்வையால் queen Bed இல் படுத்த போது எனக்கு கிடைக்கவில்லை.

ஓட்டை பஸ்லே foot போர்டில் பயணம் செய்த சுகம் விரைவு புகையிரதம் எனக்கு கொடுக்கவில்லை.

நீங்களே சொல்லுங்கள். இந்த வாழ்கையை விட ஊரிலே வாழ்ந்திருந்தால் காசு இல்லாவிட்டால் கூட சுயமரியாதையுடன் நிம்மதியாக சந்தோசமாக வாழ்திருப்போம் இல்லையா.

சரி நடுவர்களே. கடைசியாக ஒரு குட்டி கதையை மட்டும் சொல்லி எனது உரையை முடித்து கொள்கிறேன்.

யாழ்பாணத்திலே ஒரு கிராமத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களான பெற்றோருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். சிறுவயது முதலே பணத்துக்கு பஞ்சமில்லாமல் உயர்தர வர்க்கமாக வாழ்ந்து வந்தார்கள். பூர்வீக சொத்துகள் இரண்டு வீடுகள், ஏக்கர் கணக்கில் காணிகள் அவர்களுக்கு சிறுவயது முதலே கேட்டதெல்லாம் கிடைக்கும். பெற்றோர் சிறுவயதிலேயே அவர்களை பொறியியலாளர்கள் அல்லது மருத்துவர்கள் ஆக்க வேண்டும் என்று கல்வி புகட்டினார்கள். அவர்களும் பெற்றோருக்கு குறைவைக்காமல் யாழ் நகரிலேயே சிறந்த பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகளை ஈட்டி கொண்டிருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக, ஊரிலே பெருமைபடும் அளவுக்கு வாழ்ந்தது அந்த குடும்பம்.

95 ஆம் ஆண்டின் ஒரு நாள் திடீர் என்று இரண்டாவது மகன் காணமால் போவிட்டான். எப்படியும் பொறியியலாளனாக வருவான் என்று நம்பி இருந்த அந்த தாய்க்கு இடியென இறங்கியது அந்த செய்தி. பின்னர் அந்த குடுபத்தில் சந்தோசம் என்றதே இருக்கவில்லை. பின்னர் இடபெயர்வுகள், மூத்த மகன் பொறியியல் துறைக்கு தெரிவாகி இலத்திரனியல் பொறியியலாளனாக கல்வியை தொடர்ந்தான். 99 ஆம் ஆண்டின் நடுபகுதியில் விடுதலை போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்ட மூன்றாவது மகன் மறைமுக வேலைகளை செய்தபடி கல்வியை தொடர்ந்து, மருத்துவ படிப்புக்கு தெரிவானான். அதுமட்டுமல்ல அந்த குடும்பத்தின் தந்தையும் போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

சமாதான காலபகுதியில் ஒரு நாள் 2005 ஆம் ஆண்டு காணமால் போன இரண்டாவது மகன் 10 வருடங்களுக்கு பிறகு வீடு திரும்பி இருந்தான் ஒரு கணினி பொறியியலாளனாக தாயின் கனவை நிறைவேற்றியதாக குறிப்பிட்டான். வெளி நாடு ஒன்றில் முதுமாணி படிப்பை தொலைதொடர்பு துறையில் செய்தும் இருந்தான். அந்த குடும்பம் அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை.

மூத்த மகன் , இரண்டாவது மகன் பொறியியலாளர்கள், மூன்றாவது மகன் மருத்துவர், மகள் பட்டபடிப்பை முடித்து அரசாங்க உத்தியோகத்தர். இதைவிட அந்த குடும்பத்துக்கு வேறு எந்த தேவையும் இருக்கவில்லை.

சில நாட்கள் மட்டுமே தங்கி இருந்த இரண்டாவது மகன் மீண்டும் காணமால் போனான். அவன் போன சில நாட்களில் அவனது தந்தை நாட்டுக்காக தன்னுயிரை கொடுக்க குடும்பம் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தது. அடுத்த வருடத்திலே மூன்றாவது மகனும் எதிர்பாராத ஒரு மோதலில் சாவை தழுவ குடும்பம் துன்பத்தின் எல்லைக்கே சென்றது. இது போதாது என்று கொழும்பிலே வேலை செய்துகொண்டிருந்த மூத்த புதல்வனை எல்லாளன் படைநடவடிக்கைக்கு உதவியதாக நாலாம் மாடியில் இருந்து வந்தவர்கள் கொண்டு செல்ல அவனும் காணமல் போனான். இரண்டாவது மகனை முள்ளிவாய்காலில் கண்டதாக சிலர் அந்த தாயிடம் கூறினார்கள்.

இப்போது அந்த தாயும் மகளும் மட்டுமே அவர்களது ஊரில் அவர்களது வீட்டில் தனியே வாழ்ந்து வந்தார்கள். அந்த மகளுக்கு வயதாகியும் எந்த வரனும் அமையவில்லை. குடும்பத்தில் போராட்டத்துக்காக இறந்தவர்களையும் காணமல் போனவர்களையும் காரணம் காட்டி யாருமே தங்களின் பிள்ளைகளை கொடுக்கவில்லை.

கடைசியாக ஒரு போராட்ட விரும்பி, அந்த குடும்பத்தை நன்கு அறிந்த ஒரு நல்லவன் அந்த மகளுக்கு வாழ்க்கை கொடுத்தான்.

சரி இந்த கதைக்கும் பட்டிமன்றத்துக்கும் என்ன சம்பந்தம்.

இந்த கதையில் வரும் இரண்டாவது மகன் தான் இந்த பகலவன்.

கடந்த எட்டு வருசமாக என் தாயை தங்கையை சாவடைந்த தம்பியை காணமால் போன அண்ணாவை நேரிலே காணவில்லை. இங்கே வந்து பனி அள்ளி, கக்கூஸ் கழுவி தான் இப்போ ஒரு நல்ல தொழில் செய்கிறேன். எனக்கு என் நாட்டில் போய் வாழ வேண்டும் என்று ஆசை. என் மண்ணை முத்தமிட வேண்டும் என்று ஆசை. என் அம்மாவின் மடியில் படுத்திருந்து நான் திரும்ப வந்துவிட்டேன் இனி உங்களுடன் தான் இருப்பேன் என்று கத்தி சொல்ல வேண்டும் என்று ஆசை.

என்னை மாதிரி எத்தனையோ பகலவன்கள் ..இந்த ஆசைகளோடு உங்கள் முன் அலைகிறார்கள். நாங்கள் வெளியிலே தான் சிரிக்கிறோம், மற்றவர்களை சிரிக்க வைக்கிறோம் உள்ளுக்குள்ளே எவ்வளவு அழுகிறோம் என்று உங்களால் உணரமுடியுமா.

நாங்கள் எங்கட மண்ணிலே போய் இதைவிட சிறப்பாக எங்கட அம்மா தங்கச்சியுடன் வாழ வேண்டும். நீங்கள் எல்லாரும் ஒற்றுமையாக போராடுங்கள் எனக்கு என் நாட்டை மீட்டு தாருங்கள்.

வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சத்தம் கேட்கிது. ஓ இவன்பாவி வந்தாச்சே மேடைக்கு. இனி நித்திரை தூங்காமல் ஒழுங்கா இருந்து என்ன சொல்லுறான்  எண்டு கேட்பம் (மனதுக்குள் முனுமுனுகிறார்)
பகலவன் பேசி முடிந்ததும்......

பகுத்தறிவுப் பகலவன் ஏன் இடையில் நிறுத்திவிட்டீர்கள்!  நீங்கள் கருத்து வைக்கும் கால இடைவெளிதான் ஒரு வாரம் என்று நாம் கூறினோமே தவிர ஒரு வாரத்துக்குள் கால்வாசி, அரைவாசி என நீங்கள் வந்து  கருத்துக்களை பிய்த்துப் பிய்த்து வைத்துக்கொண்டிருந்தால் நாம் எல்லோரும் எப்போ நீங்கள் இனி
வருவீர்கள்? கருத்தை வைப்பீர்கள் ? என்று காவலிருப்பதா????

எவ்வளவு விரைவாக மிகுதிக் கருத்துக்களை வைக்க முடியுமோ வையுங்கள். களைப்பு மிகுதியானால் குளுக்கோஸ் போட்டு நீரருந்துங்கள் உடனே தெம்பு வந்துவிடும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் குளுக்கோஸ் தான் குடிக்கச் சொன்னேன் பகலவன் அதிலும் விட நல்ல மருந்து
குடித்துவிட்டு காலையிலேயே உற்சாகமாக வந்திருக்கிறார் பாராட்டுக்கள்.

நாமெல்லாம் எம் தேசத்தை விட்டுப் புலம்பெயர்ந்தது எம் வறுமையின் நிமித்தம் பொருள் தேடவும் அங்குள்ள சீதனக் கொடுமையின் நிமித்தம் கூடிப் பிறந்தவரை கரைசேர்க்கும் நோக்கிலும் எம் தரத்தை உயர்த்த நினைத்துமேதான். அப்படி வந்தவர்களின் நிலை இன்னும் கூட நிமிர முடியாது சீரழிந்து கொண்டுதான் இருக்கின்றது என்று அவர் கூறுவது நியாயம் தான்.

இங்குமட்டும் நாம் என்ன நிமதியாகவா வாழ்கின்றோம்? வேற்றின மக்களால் உதாசீனப் படுத்தப்படுவதும், வெள்ளை இனத்தவர்களால் ஓரங்கட்டப் படுவதும் நிற வேற்றுமை கருதி எம் தகுதிகள் நிராகரிப்பதும் இங்கும் நடைபெறுகின்றனவே. அங்கு எதுவும் பேசாது அடங்கி இருந்தது போல்தான் இங்கும் அடக்கு முறைகளுக்கு ஆட்பட்டிருந்தாலும் வசதி வாய்புக்கழுக்காக எதையும் நீங்கள் கண்டு கொள்வதில்லை என கூறுவது கேட்கிறது.

எம் தேசத்தில் நாம் நின்மதியாய் வாழ வழி இருந்தால் நிட்சயமாக இந்த வசதிகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டுப் போகவும் தயார் என்று மறைமுகமாகச் சொல்கிறது அவரது வாதம்.

 

எங்கே பகலவனின் வாதத்தை தவிடுபோடியாக்குவோம் என்று எதிரணியிலிருந்து குரல்கள் வருகின்றன. தம்பி இசை அனுப்புங்கோ உங்கள் அணியினரை.

Link to comment
Share on other sites

நன்றி நடுவர் அவர்களே..!

 

மெகாசீரியல் மாதிரி எதிரணியினர் பேசிவிட்டுக் கொண்டே சென்றதால் முடிவு தெரியாமல் தவிக்கும் ஒரு நிலைக்குப் போனோம் நடுவர் அவர்களே..! :D

 

எது எவ்வாறெனினும், எமது அணியின் சார்பில அடுத்ததாக தனது அடுக்கடுக்கான வாதங்களை எடுத்து வைக்கக் காத்திருப்பவர்...

 

இன்றைய இளையோரின் முகத்திரை, தன்னம்பிக்கையின் சின்னம், ஒப்பற்ற தமிழ்மகன் சுபேஸ் அவர்கள் பேசுவதற்குத் தயாராக உள்ளார் நடுவர்களே..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளை அனுப்புங்கோ என்று கூறி எவ்வளவு நேரமாச்சு. தயார் தயார் என்று சொல்லுகிறீர்களே ஒழிய ஆளை அனுப்புவதைக் காணவில்லை. எங்கே தன்னம்பிக்கைக் கிண்ணம் சுபேஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்



 

பகலவனின் வாதங்கள் மிக அருமையாக உள்ளன. மனதைக்  கனக்க வைத்து விட்டது பகலவன் உங்கள் கதை. உறவுகளைப் பிரிந்து வாழ்வது எத்தனை துயரமானது என்பதை நீங்கள் கூறி நிற்கிறீர்கள். ஒருவரின்
துன்பத்தை எவ்வளவுதான் கூறினாலும் மற்றவரால் முழுவதும் உணர முடியாது என்பதை என் விளையாட்டுத்தனமான எழுத்துகள் எனக்கே கூறுகின்றன.

பகலவன் போல் உள்ளே சோகம்  சுமந்து வெளியே சிரித்துப் பேசித் தம் துன்பம் தெரியாது வாழ்கின்றனர் பலர் என்பதை அழகாகக் கூறியுள்ளார். பாராட்ட வார்த்தைகள் வரவில்லை.

அவரின் வாதத் திறமையைக் கண்டு அஞ்சாது, மேடைக்கு வரச் சுணக்கம் காட்டும் சுபேசை, விரைந்து வரவேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன்.
 

Link to comment
Share on other sites

இன்று பாரிஸ் கடும்பனிப்பொழிவில் சிக்கி அல்லோலகல்லோலப்பட , இங்கே 42 c யில் இரவுச்சூரியன் கத்தரிவெய்யிலாகத் தகித்தது " புலம் பெயர்ந்த தமிழனுக்கு ஆணிவேராக இருந்த தாயகத்தைப்பற்றிக் கவலையில்லை ஆனால் கவலையைப்பற்றிப் பேசுகின்றான் என்று எதிரணியைக் கிடுக்கிப்பிடியினுள் கொண்டு வந்தார் . எதிரணியில் பேச வந்த இருவரையும் பெட்டி போட்டு அடித்தார் பகலவன் . புலம்பெயர் தமிழனே !!!!!!!!! உனது பிள்ளைகளை வளர்பதற்கே அல்லல்படுகின்றாயே ?? குழந்தைகள் காப்பகம் அல்லவா உனது குழந்தைகளை கையகப்படுத்துகின்றன . இதிலா உனது சந்தோசம் உள்ளது ??? என்று எதிரணியை திணறடித்தார் பகலவன் . அதே வேளை இன்னுமொரு விவாத்ததிற்கு உரிய  கேள்வியை எம்முன் வைத்தார் ,

 

"  புலம்பெயர் தமிழனே உனது குழந்தைகளை தாயகத்திலே இனமானமுள்ளவர்களாக வளர்க்கப் போகின்றாயா  ??? இல்லை புலம்பெயர் சூழலிலே அவர்களை " ஜிப்சிகளாக " வளர்க்கப்போகின்றாயா ??? என்று எதிரணி கலங்கித்தான் போய்விட்டது . இறுதி முத்தாய்பாக தனது வாதத்தை வலுசேர்க்க ,

ஊரிலே பெடல் கழற கழற கல்லை எடுத்து குத்தி குத்தி ஓடிய சைக்கிளின் சுகம் எனக்கு புலம்பெயர் பென்ஸ் கார் கொடுக்கவில்லை.

ஊரிலே ஒரு எண்ணெய்  தோசைக்காக அம்மாவிடம் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்ட நிம்மதி எனக்கு வீட்டு வாசல்  கொண்டு வந்து தரும் பிஸ்ஸாவில் கிடைக்கவில்லை.

பிள்ளையார் கோயில் அரச மரத்துக்கு கீழே கிடைக்கும் அந்த தேறல் காற்றின் சுகம் மால்டாவில் 5 ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கவில்லை.

வெறும் தரையில் காலை நீட்டி படுத்த போது வந்த நித்திரை, ஹீட்டர் போட்டு போர்வையால் queen Bed இல் படுத்த போது எனக்கு கிடைக்கவில்லை.

ஓட்டை பஸ்லே foot போர்டில் பயணம் செய்த சுகம் விரைவு புகையிரதம் எனக்கு கொடுக்கவில்லை.


என்று அழகாக சொன்னார் பகலவன் . அதேவேளையில் தனது வாத்தை நிறுத்தி நிறுத்தி அழகாகவே தனது வாதத்தை நிறைவு செய்தார் இதில் பட்டிமன்ற விதிகள் மீறப்பட்டதாக நான் நினைக்கவில்லை .

 

எங்கே.............  போர்குணாம்சம் உடைய பிரென்ஜ் " கலுவாஸ் "  பரம்பரையிலே வந்த முற்போக்கு சிந்தனையாளரான  சுபேஸ் வாங்கோ . உங்கள் சிந்தனை எப்படி என்று பார்ப்போம் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.