Jump to content

இனிமேல் உங்களுக்கு பாடம் எடுக்க மாட்டன்.


Recommended Posts

அது ஒரு தனியார் கல்வி நிறுவனம். நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். முதல் வாங்கில் இருக்கும் கூட்டத்தில் நானும் அடக்கம். வாத்தியார்மார் முன்னுக்கு இருகிற படிக்கிற பிள்ளையள் என்று ஒரு நல்லெண்ணத்தில இருக்க, நாங்கள் நசுக்கிடாமல் நல்லாச்சுத்து மாத்து விடுவம்.
 
தமிழ் படிப்பித்த ஆசிரியை திடீர் என்று நின்று விட்டார். அன்று புதுசாக யாரோ தமிழுக்கு வரபோகினம் என்று எல்லாருக்கும் டென்சன். அதிபருடன் மெல்லிதாக கருப்பாக  கிட்டத்தட்ட நடிகர் நாகேஷ் கருப்பாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவர்.
இவர்தான் இனி உங்கள் தமிழ் ஆசிரியர் என்று அறிமுகம் செய்து விட்டு அதிபர் போய்விட்டார். 
வந்த உடனே "வேற்றுமை " என்று கரும்பலகையில் எழுதி விட்டு முதலாம் வேற்றுமையில் தொடங்கி முழங்கத் தொடங்கினாரே பார்க்கலாம், வகுப்பு முழுவதும் சும்மா அதிர் அதிர் என்று அதிர்ந்ததது. 
காத்து கன்னமெல்லாம் புளிச்சு முன் இரண்டு வாங்குக் காரருக்கும் ஒரு பத்துப் பதினஞ்சு நிமிடத்தில தலை விண் விண் என்று இடிக்கத்தொடங்கி விட்டது. 
எவளவு தூரம் அதிருது என்று நானும் எனது நண்பிகளும் கொம்பாஸ் பெட்டியில் கையை வைத்து முதல் பரீட்சித்துப் பார்த்தோம். பிறகு வேறு வேறு பொருட்கள். இதற்கிடையில் இவர்கள் பாடத்தை கவனிக்காமல் எதோ பின்னணியில் பினைபடுகிரார்கள் என்று சந்தேகம் வர, என்னை எழுப்பிவிட்டு வாத்தியார் இதுவரை படிப்பித்த வேற்றுமையில் கேள்விகளை சுழடிச் சுழடிக் கேட்க, நானும் திருவிளையாடல் சிவபெருமான் போல் பட்டுப் பட்டென்று பதில் சொல்லி அசத்திப் போட்டன். மொத்ததில நாங்கள் அந்த ஆசிரியரை பற்றி ஒரு முடிவுக்கு வர முதலே, அவரிண்ட மனசில முதல் மாணாக்கராக ஒரு முத்திரையை பதிச்சாச்சு.
பயங்கர தலைவலியோடை முதல் வகுப்பு முடிஞ்சுது.
 
அடுத்த தமிழ் வகுப்பு, நான் கொம்பாசில் கையை வைத்துக் கொண்டு, எங்கை இன்னும் ஓணானை காணேலை என்று அருகில் இருந்த நண்பியிடம் கேட்டேன். ஓணான் என்பது முதல் வகுப்பில் வாத்தியாரின் கணீர் குரலால் வந்த தலையிடி காரணமாக என் தலைமையில் நாங்கள் தமிழா சிரியருக்கு இட்ட செல்லப் பெயர். முன் இரண்டு வாங்குகளும் வெறிச்சோடிக்கிடந்தது. முதலே வந்து நாங்கள் மூன்றாம் வாங்கில் இடம் பிடித்து விட்டம். நான் கொம்பாசில் கையை வைத்துக் கொண்டு, இங்கயும் அதிருதோ என்று பரிசோதிக்க ஆயத்தமாக இருந்தேன்.
  தொடரும்....
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 
குழப்படி விட்டாலும் காரியத்தில கண்தான். தொடர்ந்தும் அனுபவங்களைப் பதியுங்கோ.

Link to comment
Share on other sites

நீதிமதி, பள்ளி அனுபவங்கள் ஒரு தனி சுவை. நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

வாசித்து கருதெழுதிய  சுமே அக்கா, சாந்தி அக்கா, கோமகன், மற்றும் பகலவனுக்கு நன்றி.



நீதிமதி, பள்ளி அனுபவங்கள் ஒரு தனி சுவை. நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

நன்றி பகலவன் இது சுகமான அல்ல, சுமையான அனுபவம்.இந்த ஆசிரியர் அப்பொழுதுதான் கற்பிக்கத் தொடங்கிய ஆசிரியர் ஆதலால் அவளவு பிரபல்யம் ஆனவர் இல்லை. பெயர் திருஞானசேகரம்.



 சில வாரங்களில் தமிழ் ஆசிரியரின் ஓங்கி ஒலித்த குரல் எங்களுக்குப்பழக்கப்பட்டு விட்டது. தமிழை விரும்பி, ரசித்து, ஒரு ஈடுபாட்டோடு கற்பிப்பார்.  அன்பிற்குரிய மதிப்பிற்குரிய, ஆசானாக, நண்பனாக, சகோதரனாக, என்மனதில் இடம்பிடித்து விட்டார் என் ஆசான். 
           அநேகமான தமிழ் வகுப்புகளில் அரைவாசி நேரம்தான் புத்தகப்பாடம், மிகுதி நேரம் ஏதாவது ஒரு விடையத்தை பற்றி விவாதம்தான். ஆனால் ஒவ்வொன்றும் ஆரோக்கியமான விவாதங்கள், சாதி, சமயம், மதமாற்றம், விடுதலை, நாட்டுப்பற்று, என்று நிறைய.  
           ஒவொரு விடயத்தையும் தானாக எதோ ஒரு நூலிலையில் தொடங்கி விடுவார், பின்னர் தான் அதற்கு எதிரானவர் போல் கதைக்கத் தொடங்க, நாங்கள் வரிந்து காட்டிக்கொண்டு பட்டிமன்றம் தொடங்கிவிடுவோம். கிட்டத்தட்ட ஒரு சண்டை போல இருக்கும். ஒரு சிலர் தான் களத்தில், மற்றவர்கள் சத்தமில்லாமல் அவதானித்துக் கொண்டிருப்பார்கள். 
          சிரித்துச்சிரித்து எங்களுக்கு எதிராக கருத்துகளை சொல்லிக் கிண்டி விட்டுக்கொண்டிருபார் ஆசிரியர்.
           ஒருநாள், இப்படித்தான் விவாதம் நடந்துகொண்டிருக்க பாட நேரமும் முடிந்து விட, "நீங்கள் பொல்லாத ஆக்கள் இனிமேல் நான் உங்களுக்கு பாடம் எடுக்க மாட்டன் " என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.
         அது உண்மைதான் என்று,  இரண்டு நாட்களின்பின் பேரிடிபோல் காதில் விழுந்த செய்தி சொன்னது. ஆம், இந்தியன் ஆமியின் தமிழீழ நண்பர்கள் எங்கள் ஆசானை விசாரணை என்ற பெயரில் வீதியில் வைத்து அழைத்துச்சென்று அடித்தே கொன்று விட்டார்கள். தமிழை நேசித்து நல்லவர்கள் பக்கம் நின்றதுதான் என் ஆசான் செய்த குற்றம்.
         என்னை விக்கி விக்கி அழ வைத்த முதல் மரணவீடு. கழுத்து முறிக்கப்பட்டு திரும்பிய தலையுடன் என் ஆசிரியரின் கடைசித்தோற்றம்..... எழுத முடியவில்லை. இந்த விசைப் பலகை என்னை பரிதாபமாகப் பார்கின்றது.
முற்றும்.
  • Sad 2
Link to comment
Share on other sites

சோகமான மனதை வலிக்க செய்யும் முடிவு.

இந்திய இராணுவம் எம் மனங்களில் ஆறாவடுவை ஏற்படுத்தி விட்டது. அது இன்றுவரை இந்தியாவை எங்களது நட்பு நாடாக பார்க்க விடாது தடுக்கிறது.

 

தமிழ்நாட்டையும் எங்கள் தொப்பிள் கோடி உறவுகளையும் ஏற்று கொண்டாலும் இந்தியாவை ஏற்று கொள்ள மறுக்கிறது மனம். என்றோ ஒரு நாள் இந்தியா எங்களுக்கு செய்த கொடுமைகளுக்காக வருந்தும். அந்த நாள் கூடிய விரைவில் வரவேண்டும் என்பதே எனது அவா.

 

பகிர்வுக்கு நன்றிகள் நீதி.

Link to comment
Share on other sites

இவ்வளவு சோகமாய் கதையை முடிச்சுப்போட்டியல்.

Link to comment
Share on other sites

இறுதியில் மிகுந்த சோகத்தை தருவித்துவிட்டீர்கள்.. எனக்குக் கணிதம் கற்பித்த ஒரு ஆசிரியரும் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிந்தேன். பெயர் அம்பலவாணர்.. உண்மை நிலவரம் தெரியவில்லை.

 

நல்ல அனுபவப் பகிர்வுக்கு நன்றி நீதிமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்வுக்கு நன்றி நீதிமதி.அதுசரி நீங்கள் புத்தூர் பக்கமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் விருப்பமான ஆசிரியரின் மரணத்தைக் கண்ட அனுபவம் உண்டு. எக்காலத்திலும் அதை மறக்க முடியாது. இத்ததனை விரைவாகக் கதை முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

நீதிமதி

 

உங்கள் பதிவு எனது பழைய நினைவுகளை கிளறிவிட்டது. நானும் திரு. திருஞானசேகரம் அவர்களின் மாணவந்தான். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவர் எமது தமிழாசிரியராக டியூசன் வகுப்பு எடுக்க வந்திருந்தார். புத்தூரை பிறப்பிடமாக கொண்டவர். மிக நல்ல ஆசிரியர்.

 

”புத்தெழில்” எனும் சஞ்சிகையை அவர் வெளியிட்டு வந்தார். வகுப்பு முதன்மாணவனை “மொனிட்டர்” என கூப்பிடாமல் “மோட்டர்” என்று கூப்பிடுவார்.

 

என் தமிழ்ப் பற்றுக்கு காரணமான இனிய நண்பர். அவரின் இறுதி ஊர்வலத்தை பல இன்னல்களுக்கு மத்தியில் மாணவர்களாகிய நாம் நடாத்தினோம்.

 

:( :(

  • Thanks 1
Link to comment
Share on other sites

நீதிமதி

 

உங்கள் பதிவு எனது பழைய நினைவுகளை கிளறிவிட்டது. நானும் திரு. திருஞானசேகரம் அவர்களின் மாணவந்தான். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவர் எமது தமிழாசிரியராக டியூசன் வகுப்பு எடுக்க வந்திருந்தார். புத்தூரை பிறப்பிடமாக கொண்டவர். மிக நல்ல ஆசிரியர்.

 

”புத்தெழில்” எனும் சஞ்சிகையை அவர் வெளியிட்டு வந்தார். வகுப்பு முதன்மாணவனை “மொனிட்டர்” என கூப்பிடாமல் “மோட்டர்” என்று கூப்பிடுவார்.

 

என் தமிழ்ப் பற்றுக்கு காரணமான இனிய நண்பர். அவரின் இறுதி ஊர்வலத்தை பல இன்னல்களுக்கு மத்தியில் மாணவர்களாகிய நாம் நடாத்தினோம்.

 

:( :(

”புத்தெழில்” சஞ்சிகையை முதல் பதிப்பிலிருந்து  இறுதிப்பதிப்பு வரை நானும் வாங்கினேன். எங்கள் ஆசிடியர் பாவம்,  முன்னேறத் துடித்த ஒரு அப்பாவி இளைஞ்ஞர்  :( 

எனக்கும் விருப்பமான ஆசிரியரின் மரணத்தைக் கண்ட அனுபவம் உண்டு. எக்காலத்திலும் அதை மறக்க முடியாது. இத்ததனை விரைவாகக் கதை முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

நானும் நீளமாக எழுதத்தான் தொடங்கினேன், என் ஆசிரியர் அநியாயமாக கொல்லப்பட்ட ஆதங்கம் என்றுமே என் மனதில் இருப்பதால் அதை நீளமாக கொண்டு செல்லும் பொறுமை வரவில்லை.

அனுபவ பகிர்வுக்கு நன்றி நீதிமதி.அதுசரி நீங்கள் புத்தூர் பக்கமோ?

புத்தூர் பக்கம் இல்லை கல்வியங்காடுப் பக்கம். 

இறுதியில் மிகுந்த சோகத்தை தருவித்துவிட்டீர்கள்.. எனக்குக் கணிதம் கற்பித்த ஒரு ஆசிரியரும் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிந்தேன். பெயர் அம்பலவாணர்.. உண்மை நிலவரம் தெரியவில்லை.

 

நல்ல அனுபவப் பகிர்வுக்கு நன்றி நீதிமதி.

வரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

இவ்வளவு சோகமாய் கதையை முடிச்சுப்போட்டியல்.

இது சோகமான முடிவுகொண்ட உண்மைதான். :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் கலங்கின

 

எத்தனை  எத்தனை  இழப்புக்கள்

இருந்தும் அதே  கொடூர  முகத்துடன் இந்தியா................

 

நெஞ்சில் வாழும் அவர்களை எம்மிடமிருந்து பிரிக்கமுடியுமா???

 

 

இவை பதியப்படணும்

வரும் காலம அவரை மனதில் வைக்கணும்

நன்றி  வரலாற்றுப்பதிவுக்கு...

Link to comment
Share on other sites

சோகமான முடிவு.இன்றைய விவாதத்தில் நாங்கள் தலையில் வைத்து கொண்டாடிய பார்த்தசாரதி இலங்கைக்கு அமைதி காக்கப்போன இந்திய இராணுவத்தை புலிகள் தான் கொன்றார்கள் என வாய் கூசாமல் கூறுகிறார். 
 
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.