Jump to content

பொய் சொல்லுவது சுகமோ ??சுமையோ ??


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய் சொல்லுவது சுகமோ ??சுமையோ ??

 

girl-lie415.jpg

 

 

வேலை இடத்திலோ , பொது இடத்திலோ , வீட்டிலோ ஒரு சிலர் கூசமல் பொய் சொல்கிறார்கள் . அதை அவர்கள் ஒரு சாதனையாகவும் எண்ணிக் கொள்கின்றார்கள் . நேற்று இரவு எனது கணவர் ஒரு பட்டிமன்றத்தில் லயித்தபடி இருந்தார் . நானும் அவருடன் சேர்ந்து பார்த்தேன் . அதன் தலைப்பு நடைமுறை வாழ்வில் பொய் சொல்வது சுகமா ??சுமையா ?? எனது கணவர் எப்பொழுதும் நீதி நேர்மைக்கு உயிரை விடுபவர் . இறுதியில் பொய் சொல்லலாம் என்று அந்த பட்டிமன்றம் முடிந்தது . எனது கணவருக்கு ஒரே கடுப்பு . நானும் யோசித்துப் பார்த்தேன் . பொய் சொல்பவர்களுக்குத் தான் இந்த உலகமா ?? நீதி நியாயம் எல்லாம் சும்மா பம்மாத்துக்குத் தானா ?? என்று பலவாறு யோசித்தேன் . எனக்கு ஒன்றுமே புரியவில்லை . எனது கணவரோ , நீங்கள் ஒரு பொய் சொல்ல வெளிக்கிட்டால் பின்பு நீங்கள் சொல்லவாற உண்மையையும் நம்பேலாது என்று சொல்லி விட்டுப் போய்விட்டார் . கள உறவுகளே உங்கள் கருத்துக்களை இதில் பதியுங்கள் . இந்தப்பதிவும் கருத்துக்களும் சிலவேளை படிப்பவர்களுக்கு உதவி செய்யலாம் .

 

மைத்திரேயி

19/02/2013

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய்களிலும் பலவகை உண்டு. பகிடிக்காகப் பொய் சொல்வது. மற்றவர் மனதைப் புண்படுத்தாது இருக்கப் பொய் சொல்வது. இப்பிடி...........ஆனாலும் பொய் சொன்னால் அந்தப் பொய்யை ஞாபகம் வைத்திருக்க வேண்டும். ஒரு பொய்யை மறைக்க மேலும் மேலும் பல பொய் சொல்ல வேண்டும். அதிலும் பார்க்க பொய் சொல்லாது இருப்பது தான் நல்லது. சிலர் தம்மை மறந்து பொய் சொல்லுவர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் காட்டிக் கொடுத்துவிடும். அப்போது அவர்கள் முகத்தில் வழியும் அசடைப் பார்க்க பாவமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான மனச்சாட்சி உள்ளவர்கள் பொய் சொனால் அந்த குடைச்சல் இருகிறதே அது    பொல்லாதது   நடை முறை வாழ்வை வாழ விடாது. மனதைக் குடைந்து கொண்டே இருக்கும்.  வேடிக்கைகாக பொய் சொனால் என்  சிரிப்பே என்னைக் கட்டிக் கொடுத்துவிடும். பொய் சொல்ல  பல முறை தயார் படுத்தத் வேண்டி  இருக்கும்.  சிலர் தாங்கள் தப்ப  பொய் சொல்வார்கள். பொய்யில் கட்டும் கோ புரம் மணல் வீடு போல  தகர்ந்து  விடும். பொய் சொல்லி பிடிபட்டால் பின்பு உண்மை சொன்னாலும் நம்ப மாடார்கள். பொய்க்கு ஆயிரம் சாட்சி  தேவை உண்மைக்கு ஒன்றே ஒன்றுதான். தேவை.

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை அடுத்தவரைப் பாதிக்காத பொய் பேசுவதில் தப்பில்லை என்று படுகிறது. குறிப்பாக ஒரு வீட்டுக்கு இரவு நேரத்தில் செல்ல வேண்டிய அவசியம். அங்கே அவதானித்ததில் உணவு இருப்பில் இல்லை. ஆனால் சாப்பிடுங்கள் என்று கேட்கிறார்கள். ஓம் என்று சொன்னால் இனித் தான் உணவு தயாரிக்க வேண்டும். அல்லது கடையில் சென்று வாங்க வேண்டும். இந்த இடத்தில் நான் சாப்பிட்டு விட்டுது தான் வந்தேன் என்று சொல்வது பொய்யென்றாலும் அதுவே சரியான வழியாயிருக்கும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்பது, உடலை இயக்கும் விசை!

ஒருவர் பொய் சொல்லும்போது, அவர்களது உடலின் மாற்றங்கள், கண், போன்றவை ஒத்துழைக்க மறுக்கும்!

எனவே பொய் கூறுவதென்பது, இயற்கைக்கு ஒவ்வாதது!

பொய்யில் நல்லது, கூடாதது என்று ஒன்று இல்லை! :o

 

முதல் முறை பொய் சொல்லும்போது, உனது மனச்சாட்சி உன்னைக் கடுமையாக எச்சரிக்கும்!

இரண்டாம் முறை, மெதுவாக எச்சரிக்கும்!

மூன்றாவது தடவை, மனச்சாட்சி மௌனமாகி விடும்!

 

     - மகாத்மா காந்தி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை வடிவா யோசித்துச் சொல்லுங்கள். நீங்கள் பொய்யே சொன்னதில்லையா????? இல்லை  உங்கள் பதில் எனில் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று அர்த்தம். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை வடிவா யோசித்துச் சொல்லுங்கள். நீங்கள் பொய்யே சொன்னதில்லையா????? இல்லை  உங்கள் பதில் எனில் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று அர்த்தம். :lol: :lol:

 

நான் அரிச்சந்திரனில்லை, சுமோ! :o

 

கூடியவரைக்கும் அரிச்சந்திரனாக வாழ முயல்பவன் மட்டுமே!

 

$500K  வரைக்கும் பணத்தைக் கணக்கில் விட்டுவிட்டு, வங்கியின் 'கடவுச்சொல்லையும்; தந்து விட்டு முதலாளி, இரண்டுவாரம் விடுமுறையில் போவான் என்றால் பாருங்களேன்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு ஒரு பிர‌ண்ட் இருக்கிறான் அவன் பொய் சொல்லேக்குள்ள இடையில கொஞ்ச‌ம் உண்மையையும் கலந்து தான் சொல்வான்...எது உண்மை? எது பொய் என கண்டு பிடிக்கிறது கஸ்ட‌ம் :lol:
Link to comment
Share on other sites

எனக்கு ஒரு பிர‌ண்ட் இருக்கிறான் அவன் பொய் சொல்லேக்குள்ள இடையில கொஞ்ச‌ம் உண்மையையும் கலந்து தான் சொல்வான்...எது உண்மை? எது பொய் என கண்டு பிடிக்கிறது கஸ்ட‌ம் :lol:

இப்படிஒரு பொய் சொல்லுற ப்ரெண்டை வசிருக்கிறியல்.அப்ப நீங்களும் நல்லா பொய் சொல்லுவியல் போல அக்கா. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய்களிலும் பலவகை உண்டு. பகிடிக்காகப் பொய் சொல்வது. மற்றவர் மனதைப் புண்படுத்தாது இருக்கப் பொய் சொல்வது. இப்பிடி...........ஆனாலும் பொய் சொன்னால் அந்தப் பொய்யை ஞாபகம் வைத்திருக்க வேண்டும். ஒரு பொய்யை மறைக்க மேலும் மேலும் பல பொய் சொல்ல வேண்டும். அதிலும் பார்க்க பொய் சொல்லாது இருப்பது தான் நல்லது. சிலர் தம்மை மறந்து பொய் சொல்லுவர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் காட்டிக் கொடுத்துவிடும். அப்போது அவர்கள் முகத்தில் வழியும் அசடைப் பார்க்க பாவமாக இருக்கும்.

 

ஆனால் பொய் சொல்லாமல் எப்பிடி இருக்கேலும் ??? ஒருத்தரிட்ரை ஏதாவது அலுவல் பாக்கவேணும் எண்டால் அவரைப்பத்தி இல்லாததை எல்லாம் அவரை சந்தோசப்படுத்த சொல்லுகினம் . அலுவலும் ஈசியா முடியுது . நீதி நேர்மை எண்டு போறவைக்கு ஆயிரம் கேள்வியள் கேப்பினம் . உங்கடை கருத்துக்கு நன்றி மொசப்பத்தேமியா சுமேரியர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரேயி நான் பொதுவாத்தான் பொய் சொல்லாதிருப்பது நல்லது என்று சொன்னேன்.
நானும் அப்பப்ப பொய் சொல்வதுதான். பொய் சொல்லாது உலகில் ஒருவரும் இருக்க
முடியாது. ஆனால் தேவையற்ற, மற்றவரைப் பாதிக்காத பொய்களைச் சொல்வதில்
தவறில்லை. அப்படிப் பொய்யே சொல்லாமல் வாழவேண்டும் என்றால் எம்மை ஓட்டாண்டி
ஆக்கி கந்தல் ஆடையுடன் பிச்சை எடுக்க வைத்துவிடுவர். :D

Link to comment
Share on other sites

ஒரு பொய் சொன்னதாலை நடந்த விளைவுகளை பாரதம் சொன்னது . ஒருவர் பொய் சொல்லலாம் என்றால் எதுவரை பொய்சொல்லாம் என்ற கேள்வி எழுகின்றது ???  பொய்யும் புழுகும் நான்கு நாளைக்கு என்பார்கள் . பொய்களை பேசுபவர்கள் என்றுமே பதட்டத்துடன் இருப்பார்கள் .  இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது . எனவே பொய் பேசாது உண்மையாக வாழ்வது சிறப்பானது . உண்மை ஒருவேளை தோற்றது போலக்காட்சி தந்நு உண்மை பேசுபவர்களை மனச்சோர்வடையச் செய்யலாம் ஆனால் அது நிரந்தரமானது இல்லை . இதையே ஐயன் இவ்வாறு கூறுகின்றார் :

 

புறந்தூய்மை நீரால் அமையும்;
அகம்தூய்மை  வாய்மையால் காணப் படும். 298

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குக் குறள் நினைவில்லை கோ, அதே வள்ளுவர் தான் தேவை ஏற்படின் பொய் சொல்லலாம் என்றும் கூறியுள்ளாரே??
.

Link to comment
Share on other sites

எனக்குக் குரல் நினைவில்லை கோ, அதே வள்ளுவர் தான் தேவை ஏற்படின் பொய் சொல்லலாம் என்றும் கூறியுள்ளாரே??

.

இதைத்தானே சொல்லுறியள் :lol: . இதாலைதான் எனக்கும் ஐயனுக்கும்  நெடுக கொழுவல்  :D .  ஐயனுக்கு பொய்யாமொழிப் புலவர் எண்ட பேரும் இருக்கு சுமே :lol: :lol: :icon_idea: .

பொய்ம்மையும் வாய்மை யிடத்த;

புரைதீர்ந்த  நன்மை பயக்கும் எனின். 292

 

Link to comment
Share on other sites

சிலவேளை பொய் சொல்லியிருக்கிறேன். அவைகள் பின்னுக்கு சங்கடத்தையும் கவலையையும் தந்தது. கூடியளவு பொய் சொல்வதைத் தவிர்த்து வருகிறேன். எப்பவும் நேர்மையாக இருப்பது உத்தமம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.அப்ப இங்கை ஒருத்தரும் காதலிக்கவில்லைப் போலும்... :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பே  தப்பு

பொய் சொல்வது எப்படி சுகமாக  இருக்கமுடியும்????

 

நான்  அறிந்து   பொய் சொன்னதில்லை.

ஒரு பொய்க்காக பல பொய்களைச்சொல்பவர்களைக்கண்டுள்ளேன்.  பாவமாக  இருக்கும்.  ஒன்றுமில்லாத விடயத்துக்கு பொய் சொல்லிவிட்டு அதைச்சமாளிக்க படும் பாட்டைப்பார்க்க கோபம் வரும்.

 

வீட்டில் பொய் சொல்வது முற்றுமுழுவதுமாக தடை.

 

பொய்  என்பது பல பக்கவிழைவுகளைக்கொண்டது

1-  நம்பிக்கை தகரும்

2-  உங்கள் சொல்லுக்கான வலு பாதிக்கப்படும்

3-  உங்களது எல்லா செயல்களுமே சந்தேகத்துக்கு உள்ளாகும்

4-  அவமானப்படவேண்டிவரும்

5-   உங்கள் எதிர்கால சந்ததிக்கும் பிழையான மாதிரியைக்காட்டும்

 

போன கிழமை கூட எனது சிறிய  மகள் என்னிடம் இது பற்றி  சில கேள்விகளை  எழுப்பினாள்.

 

ஒரு நண்பியைக்காப்பாத்த பொய் சொல்லலாமா அப்பா என்று கேட்டாள்.

இல்லை

அவருக்கு நீ  நன்மை செய்யவில்லை

பொய்  சொல்வதன்மூலம் அவரை மேலும் இக்கட்டில் மாட்டுகிறாய்.

அப்படி உன்னால் அவருக்கு உதவத்தான் வேண்டுமென்றால் மௌனமாக இருந்துவிடு என்றேன்.

 

அதன் பின் இப்படியும் கேட்டாள்

ஒரு இடத்தில் பொய் சொல்லியே  ஆக வேண்டும்

உண்மை சொன்னால் என் படிப்பு வாழ்வு அடிபட்டுப்போய்விடும் என்ற நிலை வந்தால் என்று.

அப்படி ஒரு நிலை வந்தால் உன் தாய் தகப்பன் சகோதரர்களுடன்  முதலில் இது பற்றி பேசு என்றேன்.

தனியே   முடிவெடுக்காதே.

அது மெலும் உன்னை சிக்கலில் மாட்டிவிடும் என்றேன்.

(இது பற்றி  காலம்வரும்பொது இங்கு பதியலாம் என்றிருந்தேன்.  இந்த திரி அது பற்றியது என்பதால் இங்கு பதிகின்றேன்.)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சொல்வதால் மற்றவருக்குப் பாதிப்பு வரும்போது

பொய் ஒன்றைக் கூறுவதில் என்ன தப்பு  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தேவை ஏற்பட்டால் பொய் சொல்லலாம் ஆனால் அந்தப் பொய் சொல்லும் பழக்கத்தை குழந்தைகளுக்கோ அல்லது அவர்களுக்கு முன்னாலோ அல்லது அவர்களுக்கு தெரியக் கூடியவாறாக சொல்லக் கூடாது 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே சொல்லுறியள் :lol: . இதாலைதான் எனக்கும் ஐயனுக்கும்  நெடுக கொழுவல்  :D .  ஐயனுக்கு பொய்யாமொழிப் புலவர் எண்ட பேரும் இருக்கு சுமே :lol: :lol: :icon_idea: .

பொய்ம்மையும் வாய்மை யிடத்த;

புரைதீர்ந்த  நன்மை பயக்கும் எனின். 292

 

கோமகன்,

'களவுமகத்து மற'  என்ற ஒரு தமிழ்ச் சொல்லாடல், மருவிப்போய்க் 'களவும் கற்று மற' என்று வந்தது, அதன் கருத்தையே மாற்றிவிட்டது.

 

நீங்கள் கூறும் வள்ளுவனின் குறளில், வள்ளுவன் எங்களைக் குழப்பவில்லை. நாங்கள் தான் குழம்புகின்றோம்!

 

பரிமேலழகரின் உரையில், பின்வருமாறு விளக்குகின்றார்!

 

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் 

தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின் , பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் 

சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம். (குற்றம் தீர்ந்த நன்மை : அறம். 

அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், 

அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், 

நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. 

இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் 

நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு

பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் 

கூறப்பட்டது.).

 

இங்கு வள்ளுவன் வேறொரு கருத்தைக் கூறுகின்றாரே ஒழிய, வாய்மையைக் குறைக்கவில்லை.!

 

நன்மை பயக்காதாயின், வாய்மையினாலும், பொய்மையினாலும் பயனில்லை என்று தான் கூறுகின்றார்!

Link to comment
Share on other sites

கோமகன்,

'களவுமகத்து மற'  என்ற ஒரு தமிழ்ச் சொல்லாடல், மருவிப்போய்க் 'களவும் கற்று மற' என்று வந்தது, அதன் கருத்தையே மாற்றிவிட்டது.

 

நீங்கள் கூறும் வள்ளுவனின் குறளில், வள்ளுவன் எங்களைக் குழப்பவில்லை. நாங்கள் தான் குழம்புகின்றோம்!

 

பரிமேலழகரின் உரையில், பின்வருமாறு விளக்குகின்றார்!

 

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் 

தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின் , பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் 

சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம். (குற்றம் தீர்ந்த நன்மை : அறம். 

அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், 

அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், 

நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. 

இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் 

நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு

பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் 

கூறப்பட்டது.).

 

இங்கு வள்ளுவன் வேறொரு கருத்தைக் கூறுகின்றாரே ஒழிய, வாய்மையைக் குறைக்கவில்லை.!

 

நன்மை பயக்காதாயின், வாய்மையினாலும், பொய்மையினாலும் பயனில்லை என்று தான் கூறுகின்றார்!

 

இதுசம்பந்தமான விவாதத்தை வாழ்வியல் கருவூலத்தில் வைத்தால் சிறப்பாக இருக்கும் புங்ஸ் :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

பொய்யா  அப்படியென்றால் என்ன?? :rolleyes:பொய்யா மொழி என்பவரா? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவயசிலை உள்ள பொய்யெல்லாம் சொல்லி பந்தா,பரிகாசம் காட்டினவையெல்லாம்.....இப்ப வயதுபோகப்போக கனவிசயத்திலை தள்ளாடினம்....அதுதான் நாங்கள் ஊரிலை அந்தமாதிரி....என்ரை படிப்பென்ன,குலமென்ன கோத்திரமென்ன....மனுசி கொழும்பிலை பெரிய வேலையென்ன.....நாங்கள் குனிஞ்சு தும்பெடுக்காத பரம்பரையெல்லே......   எண்டு பைம்பல் அடிச்ச  கூட்டம் அப்ப சொன்ன பொய்களை இப்ப காப்பாத்தேலாமல் திரியினம். பொய் சொன்னால் வாழ்க்கை முழுக்க ரெஞ்சன்......உண்மை சொல்லி வாழ்ந்தால் நிம்மதியான வாழ்க்கை.......இதை நாங்கள் எல்லாஇடத்திலையும் காணலாம். :)

 

நல்லதொரு திரி இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான மனச்சாட்சி உள்ளவர்கள் பொய் சொனால் அந்த குடைச்சல் இருகிறதே அது    பொல்லாதது   நடை முறை வாழ்வை வாழ விடாது. மனதைக் குடைந்து கொண்டே இருக்கும்.  வேடிக்கைகாக பொய் சொனால் என்  சிரிப்பே என்னைக் கட்டிக் கொடுத்துவிடும். பொய் சொல்ல  பல முறை தயார் படுத்தத் வேண்டி  இருக்கும்.  சிலர் தாங்கள் தப்ப  பொய் சொல்வார்கள். பொய்யில் கட்டும் கோ புரம் மணல் வீடு போல  தகர்ந்து  விடும். பொய் சொல்லி பிடிபட்டால் பின்பு உண்மை சொன்னாலும் நம்ப மாடார்கள். பொய்க்கு ஆயிரம் சாட்சி  தேவை உண்மைக்கு ஒன்றே ஒன்றுதான். தேவை.

 

சரி இப்பிடி வைப்பம் . உங்களுக்கு ஒரு 55 வயசு என வைப்பம் ( கற்பனைக்கு ) . உங்கடை வீட்டுக்கு நான் வாறன் . நீங்கள் எனக்கு ரீ தாறிங்கள் . உங்கடை ரீ வாயிலை வைக்க முடியாது .  அப்ப நான் உள்ளதை உங்களுக்கு சொன்னால் சந்தோசப்படுவங்களா ?? இல்லை நான் அக்கா உங்கடை ரீ அந்தமதிரி எண்டு சொன்னால் சந்தோசப்படுவிங்களா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது  பொய் இல்லை முகமன் கூறுதல் . சுவை ஒவ்வொர்வ்ருக்கு ஒவ வோரு மாதிரி  என்ன  tea அக்கா  போடுற நீங்கள்  அவ்வளவு  நல்லாய் இல்லை ..இந்த   brandவாங்கி போடுங்கலேன்று .  சொல்வேன்.

 

 

கனடவில் இஞ்சினியார் என்று பொய் சொல்லி கலியாணம்  செய்து  பின் பிள்ளை  இங்கு வந்து பார்த் பின் அவர் சாதாரன வே லை என்றால் அது பொய் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது! பிரித்தானியாவில் 86 ஆண்டுகளாக வெளியாகிய ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை, இனி வெளியாகாது என அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் (Eva Mackevic) தெரிவித்துள்ளார். நிதிநெருக்கடி காரணமாக ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) பதிப்பினை இத்துடன் முடித்துக் கொள்வதாக, இவா மெக்கெவிக் (Eva Mackevic) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது பதிவில், துரதிர்ஷ்டவசமாக நிதிசார்ந்த பிரச்னைகளை நிறுவனத்தால் தாங்க முடியவில்லை என்பதால் பதிப்பினை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. தனது சக ஊழியர்களுக்கும், பத்திரிகையின் எழுத்தாளர்களுக்கும், பல ஆண்டுகளாக ஒத்துழைத்த பிரதிநிதிகளுக்கும் மற்றும் நட்பு நிறுவனங்களுக்கும் நன்றி” என தனது வருத்தத்தினையும் அவர் தெரிவித்துள்ளார். ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) 1922 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டெவிட் வாலஸ் மற்றும் அவரது மனைவி லிலா பெல் வாலஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. சிறிது காலத்திலேயே புகழ் பெற்ற ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) 1929 ஆம் ஆண்டுகளில், இது கணிசமான வாசகர்களையும் கணிசமான வருவாயையும் பெற்றிருந்தது. 1929 இல் 2 இலட்சத்து 90 ஆயிரம் வாசகர்களைப் பெற்ற readers digest சஞ்சிகை அந்த ஆண்டில், 9 இலட்சம் அமெரிக்க டொலர் வருமானத்தையும் ஈட்டியது. அதில், சுகாதார ஆலோசனைகள், நிதி ஆலோசனைகள் மற்றும் சமையல் குறிப்புகள் போன்றவை இடம்பெற்றிருந்தன. ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் உலகளாவிய பதிப்புகள் 70க்கும் அதிகமான 21 மொழிகளில் 49 பதிப்புகளோடு, கூடுதலாக 40 மில்லியன் மக்களைச் சென்றடைந்தது. ஒரு காலகட்டத்தில் இவ்விதழ் உலகின் 10.5 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனையைக் கொண்டிருந்தது. இது உலகின் மிகப்பெரிய அளவிலான விற்பனையாகும் இதழாக இருந்தது. அத்துடன் readers digest சஞ்சிகை சீனா, மெக்ஸிகோ, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பெரு போன்ற நாடுகளில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி கொண்டிருந்த இதழாகவும் விளங்கியது. மொத்தம் 23 மில்லியன் பதிப்புகளுடன் சர்வதேச அளவிலான விற்பனையை கொண்டிருந்த readers digest சஞ்சிகை, பிரித்தானியாவில் தனது முதல் வெளியீட்டை 1938 இல் ஆரம்பித்திருந்தது. 2000 ஆம் ஆண்டில் மாதத்திற்கு சுமார் ஒரு மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டதென்றும், அதன்பின்னர் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, கடும் நிதிநெருக்கடி காரணமாக, தன் பிரிட்டிஷ் பதிப்புக்கள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1382884
    • அகதியாக வந்து நகர முதல்வர் ஆகிய இளங்கோ இளவழகனுக்கு வாழ்த்துக்கள். அவரின் பெயரும் அழகான தமிழ்ப் பெயராக உள்ளது.
    • இன்றைய நாளில் மிகவும் தேவையான நல்ல செய்தி. வாழ்த்துக்கள். 
    • Published By: RAJEEBAN   18 MAY, 2024 | 08:35 AM   ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர். தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ்; உறுப்பினர்கள் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமான தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தினை நினைவேந்துவதற்கு உலகம்எங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் தயாராகிவந்த நிலையிலேயே இந்த தீர்மானம்  அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்மானம் இழப்பை நினைகூருகின்றது ஆனால் தமிழர்களை எதிர்கால வன்முறைகள் பாரபட்சங்களில் இருந்து பாதுகாக்க முயல்கின்றது என தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்த சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர் வில்லே நிக்கல் தெரிவித்தார். எனது தீர்மானம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அங்கீகரிக்கின்றது, ஜனநாயக வழிமுறைகள் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான தமிழர்களின் உரிமையை வலியுறுத்துகின்றது என தெரிவித்த அவர் இலங்கையில் தொடரும் பதற்றங்களிற்கு அமைதியான ஜனநாயக தீர்வுகள் அவசியம் என்பதை தீர்மானம் வலியுறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார். இந்த தீர்மானம் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை முன்வைக்கின்றது. இவ்வாறான அணுகுமுறை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இலங்கையின் வரலாற்றின் இருள்படிந்த அத்தியாயங்களின் முடிவை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் எதிர்காலத்தை நோக்கியும் சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்ட வில்லியம் நிக்கெல் இந்த எதிர்காலம் அனைத்து மக்களினதும் உரிமைகளும் கௌரவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். எங்களால் இதனை செய்ய முடியும் நாங்கள் இணைந்து நிற்போம் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிப்பதற்கு தமிழர்களிற்கு உள்ள உரிமையை மதிக்கும் ஜனநாயக அமைதி தீர்விற்காக பரப்புரை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கான ஆதரவு மெதுவாக ஆனால் நிச்சயமாக அதிகரிப்பதை நாங்கள் காணமுடிகின்றது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்  ஈழத்தமிழர்கள் விவகாரத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளினதும் ஆதரவு உள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்த முக்கியமான தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள எனது சகாக்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்த அவர் இது முன்னுதாரணத்தின் மூலம் தலைமை வகிப்பதற்கான சிறந்த உதாரணம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்கான தமிழ்மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டார். இலங்கை தமிழர்களின் கதை போராட்டங்களின் கதைகளில் ஒன்று என தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் டொம் டேவிஸ் எங்கு அநீதி நிலவினாலும் அது நீதிக்கு அச்சுறுத்தலே என மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்ததை நினைவுபடுத்துகின்றேன் எனவும் தெரிவித்தார். தமிழர்களிற்கு எதிரான அநீதி உலகில் நீதிக்கான அச்சுறுத்தல் என குறிப்பிட்ட அவர் 2009 இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற துயரமான சம்பவங்கள் பாராபட்சத்தின் கொடுமைகளை நினைவுபடுத்துகின்றன எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/183839
    • புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா் May 18, 2024     அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தின் பெறுமதி 4 கோடியே 51 இலட்சத்து 5,064 ரூபா) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 எழுத்தாளர்களுக்கும் 12,500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்பெற்றுள்ளது. இதேவேளை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக சுகி கணேசானந்தன் தனது நாவலில் தெரிவித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு பிறந்த சுகி கணேசானந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஊடகவியலாளரும் ஆவார். கிராண்டா, தி அட்லாண்டிக் மந்த்லி மற்றும் த வோசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.ilakku.org/புனைகதைக்கான-கரோல்-ஷீல்ட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.