Jump to content

இசைவானில் உயரப்பறக்க முடியாமல் தாழப்பறந்து தரையிறங்கியது மனம். (இசைஞானி கனடா நிகழ்வு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

raja2.jpg


 

இசைவானில் உயரப்பறக்க
முடியாமல் தாழப்பறந்து தரையிறங்கியது மனம்.

 

Trinity Enents, Vijay TV இரண்டும் இணைந்து வழங்கிய “எங்கேயும் எப்போதும் ராஜா” என்ற பிரமாண்டமான இசை நிகழ்வு Rogers Center Torontoவில் அடர்ந்த வெள்ளைப்பூக்களாக அடர்த்தியாக பொழிந்து கொண்டிருக்கும் அந்த மாலை 5 மணிக்கு ஆரம்பமாவதாக கூறியிருந்தார்கள். பனிப்பொழிவின் காரணமாக மிக நேரத்தோதோடே அங்கு சென்று (4.45) எமக்கான இருக்கைக்களில் அமர்ந்து கொண்டோம். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து இசைநிகழ்வு செய்ய வந்திருப்பவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் முதன் மரியாதையாக இருக்கட்டும் என்ற எண்ணமே நேரத்தோடு அங்கு சென்று அமர்வதற்கு காரணி என்பதுதான் உண்மை. சுமார் 5 மணிக்கு ஆரம்பமாகவேண்டிய நிகழ்வு 2 மணிநேரம் தாழ்த்தி 7 மணியின் முன் மணித்துளிகளில் ஆரம்பமாகியது. இரசிகர்களின் வரவு பனிபொழியும் நேரத்தில் தாமதப்பட்டிருப்பினும் இசைஞானியை அவர்கள் ஏமாற்றவில்லை. உரிய நேரத்திற்கு நிகழ்வு ஆரம்பிக்கப்படாமல் 2 மணிநேரம் இரசிகர்களை பலத்த சோதனைக்கு உள்ளாக்கிய பெருமையை இசைஞானி பெற்றுக் கொண்டார். எதிலும் கண்டிப்பு…..கண்டிப்பு என்ற பிடிவாதகுணமுடைய மாபெரும் இசைஞன் இந்தவிடயத்தில் கண்டிப்பைக் கைவிட்டுவிட்டாரா? காலநிலை காரணமாக இருக்கலாம் என்பது நிகழ்வை நடாத்துனர்களின் தெளிவற்ற திட்டமிடலை வெளிப்படுத்தியிருக்கிறது.


தமிழ்தாய் வாழ்த்தையும், கனெயடிதேசிய கீதத்தையும் கனெடிய தமிழ்சமூகத்தைச் சார்ந்த இரு இளம்பெண்கள் இசைத்தனர். உண்மையிலேயே ஏஞ்சல்கள்தான். வாத்தியங்கள் அற்ற இசையால் அந்த அரங்கத்தையே வசீகர்த்துக் கொண்டார்கள் எங்கள் முற்றத்து மல்லிகைகள்.

 

தொடர்ந்து Vijay TV புகழ் கோபிநாத்….பாவம் இவர்… நிகழ்வு தாமதிக்கும் இரண்டு மணிநேரத்தை இவர் துரத்தி தள்ளவேண்டிய நிர்ப்பந்தம். இவரோடு நம்மூர் வானொலி அறிவிப்பாளர் நிதா…..”நீயா நானா” நிகழ்வில் தனக்கெனத் தனியிடத்தைத் தக்கவைத்திருக்கும் சிந்தனையாளன் கோபிநாத் இந்த இசைநிகழ்வின் அரங்கத்தில் மிகவும் திணறிப்போனார். கால்மணிநேரம் , அரைமணிநேரம் என்றால் இலாவகமாகச்
சமாளித்திருப்பார் இரண்டு மணிநேரம்…….. அவருக்கு ஏற்கனவே நிகழ்வு இவ்வளவு நேரம் தாமதமாகும் என்று தெரிந்திருக்கும்போல் மனுசன் சிறிது அச்சத்தோடே பேசிக் கொண்டிருந்தார். அவருடைய அச்சத்தைப் போக்க இணைந்து பணியாற்றிய நிதாவால் முடியவில்லை. மிகவும் அனுபவம், பேச்சாற்றல் அற்ற ஒருவரை கனெடியப் பக்கத்திலிருந்து தெரிவு செய்த ஏற்பாட்டாளர்கள் அதன் மூலமும்  இந்நிகழ்வை அது தாமதமாகும் மணிநேரங்களை கூடியிருந்த இரசிகர்கள் அலுத்துக் கொள்ளச் செய்துவிட்டார்கள். நம்மவர் தகைமைகள் இவ்வளவுதானா என்று நினைக்க வைத்தபெருமையை அந்தச் சின்னவயது வானொலி அறிவிப்பாளர் பெற்றுக் கொண்டார்.


இரண்டுமணிநேர அலுப்பிற்குள் இரசிகர் கூட்டத்திற்குள் அறிவிப்பாளர் நுழைந்து பாடக் கேட்டபோது சிலர் நன்றாகப்பாடினார்கள். அப்படி நன்றாகப் பாடியவர்கள்தான் கோபியையும் நிதாவையும் காப்பாற்றினார்கள் என்று சொல்லவேண்டும். இவ்விடத்தில் இன்னொன்றையும் சொல்லவேண்டும் ஒலிவாங்கி கிடைத்தால் வார்த்தைகள் தெரியாவிட்டாலும் பாடலாம், வரிசைகட்டி பிள்ளைகளை அழைத்துவந்து கெஞ்சிக் கொண்டு நிற்கும் நம்மவர்களையும் பார்க்க முடிந்தது. இவர்களின் இந்நடவடிக்கைகூட அந்த அறிவிப்பாளர்களைச் சங்கடப்படுத்தியிருக்கும் நல்லவேளை கோபிநாத் மேடையைவிட்டு இறங்கி வரவில்லை. அவர் அங்கிருந்து இறங்கியிருந்தால் அவரைச்சுற்றி ஒரு கூட்டம் மொய்த்து முத்தமிட்டிருக்கும். தப்பித்துக் கொண்டார்.


7 மணியளவில் வாத்தியக்கலைஞர்கள் மேடைக்கு வந்து அமர்ந்து மிக நேர்த்தியாக, அழகான சிம்பொனி இசையுடன் ஒலியேற்றினார்கள். அதனை  உருவாக்கியது இசைஞானியின் இளையபுதல்வன் கார்த்திக் ராஜா என்று நிகழ்வின் இறுதிக்கணங்களில் இசைஞானி தெரிவித்தார். அந்தச் சிம்பொனியைக் கேட்கும்போது இரண்டுமணிநேர அலுப்பு பறந்ததென்னவோ உண்மைதான். கார்த்திக் ராஜாவுக்கு இவ்விடத்தில் “பலே” சொல்லித்தான் ஆகவேண்டும்.


குரு வணக்கப்பாடல் ஒலித்து முடிய இசைஞானி அவர்கள் அரங்கின் மையப்பகுதிக்கு வந்து தனக்கே உரித்தான தனித்துவத்துடன் “ஜனனி ஜனனி ஜெகன் மாதனுநீ” என்ற பாடலை ஆரம்பித்தபோது மனம் பரவசம் அடைந்தது. தொடர்ந்து பாடகர் கார்த்திக் “ஓம் சிவோகம்” என்ற உக்கிர தாண்டவ இசையுடன் ஒலிக்க உண்மையிலேயே அந்தப்
பிரமாண்டமாக அரங்கம் இசையில் மூழ்கிப்போவதை உணர முடிந்தது. எஸ். பி. பாலா, ஹரிகரன், சித்ரா, மதுபாலகிருஸ்ணன், சாதனா சர்க்கம் போன்றோர் பாடல்களை தொடர்ந்து தந்தவண்ணமிருந்தனர். இடையிடையே சில குறிப்புகளை இசைஞானி கூறிக் கொண்டிருந்தார். இசைஞானி மேடைக்கு வந்த பொழுதே நடிகர் பார்த்தீபனும் மேடையில் நிகழ்வுகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார்.. என் மனதிற்குப் பிடித்தமான அந்தக்கலைஞன் அவ்விடத்தில் சோபிக்கவில்லை. அந்தக் கலைஞனின் இயல்பான குணஇயல்புகளுடன் கூடிய தொகுப்பை அவர் நிகழ்த்தவில்லை. ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வட்டத்தைக்கீறி அதற்குள் நிற்கும்படி அந்தக்கலைஞன் நிறுத்திவைக்கப்பட்டதை உணர முடிந்தது. தான் இசைஞானியின் இரசிகன் என்ற முடிச்சை இறுக்கி தனக்கேயான பிரத்தியேகத் தன்மைகளை ஒடுக்கிவிட்டார்.

 

நிகழ்வின் ஆரம்பம்  கொடுத்த எதிர்பார்ப்பு ஒரு மணி கடக்கும் பொழுதே மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்துவிட்டது. நேரமின்மை காரணமான 2 மணிநேரத்திற்குரியதான பல நிகழ்வுகள் சுருக்கப்பட்டபின்னர் பாடல் தெரிவுகள் இரசிகர்களை ஈர்க்கமுடியாமல் திக்குமுக்காடியது. ஏன் இப்படி ஆனது என்பது நிகழ்வை அரங்கில் நடாத்தியவர்களுக்குத்தான் வெளிச்சம். அத்தோடு இந்நிகழ்வுக்கு வருகை தர இருந்த மேலதிக கலைஞர்கள் சிலர் இந்நிகழ்வுக்கு வரவில்லை என்பதும் இந்நிகழ்வு பற்றிய எம்முடைய எதிர்பார்ப்புக்கு சிறிது ஏமாற்றமாகவும் இருந்த்து.


இங்கு இன்னொரு விடயத்தை கூறவேண்டும் விசில் அடிப்பது பற்றி அது தனக்கு ஒவ்வாமைத் தன்மையைக் கொடுக்கும் என்று இசைஞானி தெரிவித்தார். இருந்தாலும் நம்மவர்கள் விசில் அடிப்பதை நிறுத்தவில்லை. இசையைத் தெய்வீகமாகக்கருதும் ஒரு இசைஞன் அதை பக்தி மார்க்கத்துடன் பூசிக்கும்போது அவ்விசைஞனைப் பொறுத்தவரை அது புனிதம் என்ற நிலையில் நிற்கும்போது அவ்விசைஞனின் வேண்டுகோள் அதுவாக இருக்கும் அதனை நாங்கள் கர்வம் என்று பொருள் கொள்வது தவறு என்றே படுகிறது. இவ்விடத்தில் இவ்விசைஞனும் ஆர்வத்தின் நிமித்தம் இரசிகர்கள் விசில்கள் அடிப்பதை பொறுத்துக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.


பார்த்தீபனின் தொகுப்பைத் தொடர்ந்து நடிகர் விவேக் அதனைத் தொடர்ந்தார் அவரும் கூட இயல்பாய் இல்லை இருந்தாலும் தன்னால் இயன்றவரை இயல்பாய் இருப்பதாய் முயற்சி செய்தார். பார்த்தீபனையும் விவேக்கையும் மந்திரித்துவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றும் அளவுக்கு அமைதியாக இருந்தார்கள். இவர்களின் அமைதி இசைஞானி மீதான பக்தியின் காரணமாக இருக்கலாம் ஆனால் இவ்வளவு தூரம் கடல்கடந்து கண்டங்கள் கடந்து வந்து நிகழ்வை நடத்துபவர்கள் சற்று வெளிப்படையாகக் கலகலத்திருக்கலாம்.


இசைஞானியின் வாத்தியக்கலைஞர்கள் அவர்கள் திறமை அபாரம், அவர்களின் வாசிப்புகள் அற்புதம். கோரசிற்காக அழைத்துவரப்பட்டவர்கள் அதிகமோ என்று தோன்றுகிறது. ஒருவர் பாடலை இன்னொருவர் பாடியபோது ஒட்டாத மாதிரி கேட்க அந்தரமாக இருந்தது. கடைசி மணித்துளிகளில் பிரசன்னமான பிரசன்னா சினேகா ஜோடி இரசிகர்களை ஆக்கிரமிக்கவில்லை அந்த இடத்தில் அவர்களுக்கான முக்கியத்துவம் எதுவுமில்லை.  கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்பதை அந்த நிமிடங்கள் அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். இசைஞானியின் புதல்வர்கள் யுவன், கார்த்திக் இருவரும் அரங்கில் தோன்றியிருந்தாலும் அவர்களிடம் பேச்சு வன்மை சிறிதளவும் இல்லை யுவன் ஓரளவு தேறினாலும் கார்த்திக் வெளியுலம் தொடர்பாக அதிகம் வளரவேண்டியவராகத் தென்படுகிறார்.


இசைஞானியின் மெருகேற்றலில் உருவாக்கப்பட்ட திருவாசகம் மட்டுப்படுத்தப்பட்ட குறுகிய அறிமுகத்துடன் முற்றுப் பெற்றுவிட்டது. இன்னொரு விடயத்தை அதிகமாக ஆழமாகக் கவனித்தேன். அது இசைஞானி மீதான அவர் குண இயல்பு மீதானதொரு குற்றச்சாட்டு. அவர் மிகவும் தலைக்கனம் பிடித்தவர் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக அவருடைய வார்த்தைப்பிரயோகங்களை அவதானித்தேன். அவர் அவராகவே இருக்கிறார் என்பது புலனாகிறது பலருக்கு அவர் பேச்சு எடுத்தெறிவதுபோல் தோன்றுகிறது. அவ்விடத்தில்தான் அவர் தன் இயல்வை இழக்காத ஒருவராகத் தென்படுகிறார். அவர் இசையைப் போலவே அவரும் வாழ்கிறார். பூசி மெழுகாத கிராமிய இசையைப்போல்தான் அவருடைய பேச்சும் எனக்குத் தோன்றுகிறது. கூழைக்கும்பிடு போடத்தெரியாத உலகை ஈர்க்கும் கிராமத்துப் பெருங்கலைஞன்.


இந்நிகழ்வில் கனெடிய அரசியல் பிரமுகர்களும் கலந்து அவர்கள் கட்சி சார்பாக சான்றிதழ்களை இசைஞானிக்கு வழங்கியதுடன் தமிழர்களின் கனெடிய பாராளுமன்ற பிரதிநிதியான ராதிகா ஒரு படி முன்னே சென்று கனெடியதேசியக் கொடியை இசைஞானிக்குப் போர்த்தியது அதிக பிரசங்கித்தனமாக படுகிறது. ஒருவரை மதிப்பளிப்பதற்காக ஒரு நாட்டின் தேசியக் கொடியை போர்த்தியது தவறாகப்படுகிறது. அத்தேசியக் கொடியை இசைஞானியின் கரங்களில் கொடுத்து மதிப்பளித்திருக்கவேண்டும். ராதிகாவின் இச்செயலை மனம் ஏற்றுக் கொள்ள
மறுக்கிறது. தேசியக் கொடியை எங்கு போர்த்துவது என்பதை ராதிகா நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.

 

தொழிவளமுள்ள இளையவர்கள் குழுமம் முன்னெடுத்த இந்நிகழ்வின் அரங்க அமைப்பு பிரமாண்டமாகவும் கச்சிதமாகவும் இருந்தது. அதே நேரத்தில் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து விஜபி வரிசையில் இருந்தவர்களின் இருக்கைகளைக்
கவனிக்கத் தவறிவிட்டது. தொழிலதிபர்கள் வர்த்தகர்கள் என்று பெரும்பணத்தைத் தந்து ஊக்கப்படுத்தியவர் வெறுமனே ஒட்டுக்களில் குந்தியருப்பவர்கள்போல் 6 மணிநேரம் வசதியற்ற இருக்கைகளில் அமர்ந்து உடல் நோவைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதை குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். ஆகக் குறைந்தளவிலாவது மடிக்கும் இருக்கைகளில் குசன் வசதியைப் பேணியிருக்கலாம் பலத்த ஏமாற்றம் எல்லோரையும் ஆட்கொண்டிருந்தது.


Trinity Enents  நடாத்திய இந்நிகழ்வில் ரொரன்டோ காலத்துறைக்கு 10 ஆயிரம் டொலர்கள் வழங்கப்படுவதாக அறிவித்து காவல்த்துறை சார்ந்தவர்கறை அழைத்துக்கொடுக்கப்பட்டது. அத்தோடு வேறு 3 பொது நிறுவனங்களுக்கு காசோலைகள் வழங்குவதாக அறிவித்தார்கள். தொகை பற்றி எக்குறிப்பிடல்களும் அவ்வறிவிப்பில் இடம்பெறவில்லை சிக் கிட்ஸ் ஒட்டிசம் சார்ந்த உதவி நிறுவனம் மற்றும் தாயக மருத்துவம் சார்ந்த அமைப்பு பெயர் சரியாக ஞாபகத்தில் வரவில்லை மற்றையதையும் சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது. அங்கு வழங்குவதாக குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு காசோலைகள் 10 டொலரிலா  10 ஆயிரம் டொலரிலா வழங்கப்பட்டது என்ற விபரங்கள் தெரியவில்லை இவ்விடயம் தொடர்பாக தொடர்பு பட்ட நிறுவனங்கள் நன்றி அறிக்கைகளை வெளியிடும்போதுதான் கொடுக்கப்பட்ட தொகையை நாம் அறிய முடியும்.


பனி பொழியும் காலத்தில் எத்தனையோ தேவைகளை இடர்களை புறந்தள்ளிவிட்டு இசைஞானியின் இந்நிகழ்வில் இதயங்களை இசையால் நனைக்கச் சென்றவர்களுக்கு இசையில் நனையவும் மிதக்கவும் முடியாமல்.. தெரிவு செய்யப்பட்ட பாடல்கள், குரல் மாற்றிப்பாடியவர்கள் என்று ஏகப்பட்ட கலங்கல்கள். இசைஞானியின் பூரணத்தை
தரிசிக்கமுடியாத குறையோடு வீடு திரும்பினோம்.

 

இசைஞானியிடம் குவிந்திருக்கும் பரி பூரணத்தை எதிர்வரும் காலத்தில்தன்னும் தரிசிக்க வாய்ப்புக் கிடைத்தால் அந்த இசை வெள்ளத்தில் அள்ளுண்டு காணாமல்போகவும் காத்திருக்கிறோம் என்பதைத் தெரிவித்து இசைவானில்
பறக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் தரையிறங்கிய கவலையுடன் இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு.. ஏறக்குறைய எல்லாவற்றுடனும் உடன்பட முடிகிறது.

 

காலதாமதத்திற்கு விழா ஏற்பாட்டாளர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும். ரொராண்டோ நகரத்திற்குள் போக்குவரத்து எப்படிப்பட்டது என்பதை இசைஞானியைவிட ஏற்பாட்டாளர்கள்தான் கூடுதலாக அறிந்திருக்க வேண்டும். பொதுவில் போக்குவரத்தை விருந்தாளிகள் ஏற்பாடு செய்வதில்லை. விழா ஏற்பாட்டாளர்களே இதனைக் கவனித்துக் கொள்வார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அருமையான நேர்முக வர்ணனைக்கு, நன்றிகள், வல்வை!

 

இந்த 'இங்கிதமில்லாத' மனுசரால நான் கோவில்களுக்குக் கூட, வெள்ளிக்கிழமைகளிலோ அல்லது விசேட நாட்களிலோ போவதில்லை.

 

ஒரு முறை ஒரு பத்துவயதுச் சிறுமி (புலத்தில் பிறந்து வளர்ந்தது) கோவிலில் வீணை வாசித்தது! மிகவும் ஆர்வமாக அந்தக் குழந்தை அந்தக் கச்சேரியைச் செய்தது!

 

ஆனால், எங்கட சனம் அதைக் கேக்கவிட்டாதானே? :wub:

 

வடை வாங்கிறதும், மரக்கறி றோல்ஸ் வாங்கிறதும், தங்கட ஊர் வியாக்கியானங்களைக் கதைக்கிறதுமாக, கோவில் மண்டபம் முழுதும் ஒரு இரைச்சல்.

 

அந்தக் குழந்தையும் கொஞ்சநேரம் வாசித்திவிட்டு, நிறுத்திவிட்டது.

Link to comment
Share on other sites

உங்கள் சிந்தனைகளுக்கு மிக்க நன்றி வல்வை சகாறா .  என்மனதில் உதித்ததை நீங்கள் மனதில் எடுக்காவிட்டால் சொல்கின்றேன் . ஓர் பிறவிக் கலைஞனை எவ்வளவுதூரத்திற்கு பொதுவாழ்கையில் அவமானப்படுத்தமுடியுமோ , அவ்வளவையும் செய்து விட்டு அவரை இதயசுத்தியுடன் உனது இசைவெள்ளத்தை எங்களுக்குத்தா என்று கேட்பது எந்தவிதத்தில் நியாயம் ??????? ஒருவனை துரோகியாக்கி , தமழினவிரோதியாக்கி , நீ இன்ன நாளில்தான் இங்கு வரவேண்டும் என்று எமது மன அரிப்புகளை கொட்டியாகி விட்டது . அந்த உன்னத கலைஞன் இவர்களையெல்லாம் மன்னித்து கனடாவிற்கு வந்ததே பெரியவிடையம் . அவரை குறைசொல்வதில் எதுவித பிரையோசனமும் இல்லை . முதலில் எமது அறிவாளிகள் திருந்தவேண்டும் மீண்டும் . உங்கள்  அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா தனது இசையை உலகமெல்லாம் பரப்பக் கனடா வரவில்லை தான் உழைக்கவும் தன்னை வைத்து மற்றவர்கள் உழைக்கவும் தான் அவர் கனடா வந்தார். அவர் ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டு காசை அள்ளிக் கொடுக்க முன்வந்தால் அவர் வாயில் அவலைப் போட்டு மென்றாலும் அது ரசிகர்களுக்கு இசையாகத் தான் தெரியும். மற்றும்படி ரசிகர்களைக் கனடாவில் ஏமாற்றிவிட்டார் என்பது ரசிகர்களின் எழுத்தால் வரும்போது எனக்கு அது ஒரு உண்மையான விமர்சனமாகத் தான் தெரிகின்றது. பாடல்களை ரசியுங்கள் ஆனால் பாடகர்களையோ இசையமைப்பாளர்களையோ தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவது கொஞ்சம் அதிகம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமோதிக்கின்றேன் வாத்தியார்.....இசையை..கலையை ..ரசிக்கலாம் போற்றலாம்...அதன் குறை நிறைகளையும் சொல்லலாம்...வல்வை சகாறா சொன்னதில்  தவறில்லை..வாத்தியார் சொன்னதிலும் தப்பில்லை....இவைதான் வாழ்க்கை என்று தலையில் தூக்கிவைத்து கொண்டாட தமிழகமுமில்லை...ஒரு சிலர் இங்கு இருக்கிறார்கள்......இசையை ரசித்தோம் ...அதில் உள்ள குறை நிறையை சொன்னோம்......இதற்காக எமது விடுதலை உணர்வுகளை சீண்டிப் பார்த்து கருத்தை வைப்பது அழகல்ல...

Link to comment
Share on other sites

இளையராஜா தனது இசையை உலகமெல்லாம் பரப்பக் கனடா வரவில்லை தான் உழைக்கவும் தன்னை வைத்து மற்றவர்கள் உழைக்கவும் தான் அவர் கனடா வந்தார். அவர் ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டு காசை அள்ளிக் கொடுக்க முன்வந்தால் அவர் வாயில் அவலைப் போட்டு மென்றாலும் அது ரசிகர்களுக்கு இசையாகத் தான் தெரியும். மற்றும்படி ரசிகர்களைக் கனடாவில் ஏமாற்றிவிட்டார் என்பது ரசிகர்களின் எழுத்தால் வரும்போது எனக்கு அது ஒரு உண்மையான விமர்சனமாகத் தான் தெரிகின்றது. பாடல்களை ரசியுங்கள் ஆனால் பாடகர்களையோ இசையமைப்பாளர்களையோ தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவது கொஞ்சம் அதிகம் .

நன்றி சகாறா ,அருமையான விமர்சனம் .

வாத்தியாருக்கு இளையராஜாவை தெரியாது என நினைக்கின்றேன் .இளையராஜா பணம் பண்ண எத்தனையோ வழிகள் இருக்கு அமிதாபச்சனே சென்னை தேடிவந்து இசையமைக்க கேட்ட இசைஅமைப்பாளர் இளையராஜா .உலகம் முழுக்க எந்த கலைஞனும் பணம் வாங்கிக்கொண்டுதான் இசை நிகழ்ச்சி நடாத்துகின்றான் ,அது மைக்கல் ஜாக்சன் ஆகட்டும் BOB DYLAN ஆகட்டும் .அவருக்கு ஒரு செருக்கு ,கிறுக்கு தனம் எல்லாம் இருக்கு ஆனால் ஒரு மாபெரும் கலைஞன் என்பது மறுக்கமுடியாத உண்மை .இளையராஜாவின் இசை ஞானத்திற்கு முன்னால் மற்ற எவையும் சிறு தூசுகள் தான் . சகாறா எழுதியது போல கூழைகும்பிடு போட தெரியாதா ஒரு அபூர்வ தமிழ் நாட்டு தமிழன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலமும் கூப்பிட்டு விட்டு  புறணி பாடக்கூடாது. பிழைகளை, பிழைவிட்டவர்களை இனங்காணவேண்டும். நானும் இளையராஜாவின் எத்தனையோ இசைநிகழ்ச்சிகளை கணணிமூலம்,தொலைக்காட்சிமூலம் பார்த்திருக்கின்றேன்.அத்தனையும் அருமையாகவே இருந்தது.

Link to comment
Share on other sites

From twitter:

 

Engeyum Eppodhum Raja - #Ilayaraja Toronto Show review - Feb 16, 2013 

- Ravi Natarajan

I was pretty mixed up about going to the Raja show in Toronto, due to several reasons. I have watched every Raja performance that was telecasted since 2005. So, I was not sure, what would be a new experience going for this one. Besides, I have heard SPB, Chitra, Hari or Karthik on concerts. Hari on concerts is an oxymoron, as I consider him a good studio artiste and a bad live performer with his crazy improvising. Lastly, why venture out at -15 degrees on a Saturday night. However, I have heard from a number of friends about hearing the Raja orchestra live and no recording technology till date has effectively captured it. A number of live shows of Raja on TV did sound not so great compared to the CDs that I have. Well, I yielded to the temptation and decided to go for the show in a day that was not just cold, but also very clumsy with light snow and slippery roads.

In this post, I will focus strictly on what attracts me the most of Raja – his music. I will leave out stuff related to compeering and other frills. Particularly, I will focus on his orchestra and will also point out the ones that turned out great and the ones that did not. I was glad to see the usual Raja orchestra in full strength – a number of familiar ones included Prabhakar (conductor), Sada (lead guitar), Bharani (keys), Prasad, Jayacha (percussion), Napoleon (Flute), Pt. Balesh (Shehnai), Sashi (bass guitar), Sekar (cello). Raja introduced a few others at the end – Kumar (drums), and folks on the veena, sitar, horns. Apart from this, Raja had some fantastic choir singers. They were the true icing (why the hell do we need that in CanadaJ) on the cake. While there are so many techniques that are hard to reproduce on a stage compared to the facilities in a studio, my commentary will highlight some of the places where it showed from a listener’s POV.

1. Introductory music – Unfortunately, I missed this as I was stuck on a coffee lineup. I did not find it appealing when I heard it remotely. Raja said that this was composed by Karthik Raja.

2. Janani Janani (Thai Moogambigai - 1982) – As usual, this was the opening song in this concert too. The support singers and Raja did a good job though he had some starting problems

3. Om Sivoham (Naan Kadavul – 2009) - As in the film and the CD, this was thundering and Karthik sang the original Vijay Prakash song. Good rendition by Karthik and supported ably by Satyan. The percussion ensemble was unfortunately did not sound as the original and I felt that the rhythm arrangement was simplified for a stage performance. However, attempting this on stage was hard enough, and turned out to be a first good performance of the evening

4. Isaiyil Thodangudhamma (Hey Ram 2000) - Hariharan was asked to perform the Ajoy Chakraborthy song. I was hearing Ajoy saab’s music on my way to the Rogers center and did not expect this song to be performed. Hari’s sangathis were effortless and he did a good job. His Tamil limitations did not show up as the original was sang by Ajoy. The orchestra was trying to match the studio recording with a sarangi playing its part in the BGM well. I am used to instruments getting replaced with keyboard and this was nice to hear the original instrument. However, the orchestra was somehow muted and did not bring the same level of performance in the original recording

5. Annakili Unnai Thedudhe (Annakili 1976) – Chitra took on the Janaki song and sang well. However, the percussion sounded loud and jarring. The violins came alive with the cellos and boy, that was sweeping for the first time in the evening

6. Madai Thirandhu (Nizhalgal 1980) – SPB started off with a grand orchestration that goes with this tune. God bless this man – he clearly shows what a veteran performer that he is. Along with Sashi, Sada, Sekar, Kumar and the entire violin section, they blew my socks away. The choir of this song was rendered beautifully by the team and this song sounded that the evening was worth it. There is no way that something like this can be experienced on TV or even a well cut CD. Hats off to Balu and the orchestra – I got 25% of my money’s worth already!

7. Pattu Solli (Azhagi 2001) – Sadhana Sargam sang her favorite Raja song. The prelude was nicely done with a real nadaswaram (I forgot the name of the player, Raja mentioned). On the orchestration side, I found that this song, especially its charanam was a bit muted with the bass missing. Sadhana has performed this number better in the earlier Raja shows. This was an average performance compared to her earlier ones

8. Idhayam Oru Kovil (Uyarndha Ullam 1985) Raja sang his first song as a poet and did a good job, The highlight of the song - the second interlude was performed by the orchestra (violins/flutes/cello/DB) very well. I got another 25% of the money’s worth!

9. En Iniya Pon Nilave (Moodu Pani 1980) – Karthik sang the Yesudas song and Sada’s guitar was outstanding as usual. The choir and the violins were fantastic in the first interlude. The second interlude has an electric guitar piece (sounds like veena) that sounded muted. Karthik sang out of turn before the interlude ended in the first charanam. Overall, the orchestra did much better

10. Nee Partha Paarvai (Hey Ram 2000) – Hari and Sadhana sang the song originally rendered by Hari and Asha. This is the only Hari song of the evening that Hari sang! The keys prelude was very poorly reproduced. The initial humming was missed and Raja got them to redo it. The intro keys were still not up to the mark. Hari did sing this song well. The orchestra was too loud and this was one of the below average renditions of the evening.

11. Koondhalile (Bala Nagamma 1981) – Madhu Balakrishnan performed this Yesudas one. For some reason, though Madhu sang this song well, a number of supporting elements did not turn out to be great. Firstly, the solo violin that is part of the first interlude was very muted. Normally, Prabhakar takes on those. I heard the veena also, very suppressed. Finally, Anita who did the humming was not able to do justice to Shailaja’s original rendering and she sounded muted too. The 2nd interlude was a wash too.

12. Naan Thedum Sevvanthi Poovidhu (Dharma Pathini 1986) – Raja and Chitra performed this song. The rhythm arrangement for the pallavi sounded different from the original song. It was nice to hear the drone of the instruments before Raja begins the humming in this song. Raja did sing out of turn on occasions though Chitra accommodated him. He was not very focused on singing this song and somehow multi-tasking between orchestration and singing

13. A medley of 4 songs followed. The first in the medley was Azhagu malarada (Validehi Kaathirundaal - 1984 – sang by Janaki) sang by Hari and Surmukhi – this was nicely conceived and poorly executed. Raja took the nice bass lines of Naan Thedum Sevvanthi and merged it into this track with a drums support instead of the original tabla. There was a bit of a screwup and this followed by Naanaga Naan Illai Thaaye by SPB (Thoongathe Thambhi Thoongathe - 1983). Pt. Balesh’s shehnai could be clearly heard in the introductory parts (SPB started off with the charanam). This was completed with the song of Malaysia Vasudevan (Manipur Maamiyar – 1979) where he sang like CS Jayaraman. I can’t recollect the name of the artise who sang this song along with Priya Himesh. However, both of them sang extremely well. Priya has a bright career ahead of her. I did not realize till I heard this song on how beautiful he strings of this song are. Poor quality recordings floating on the internet has to be blamed!

14. Raathiriyil Poothirukkum (Thanga Magan 1983) – SPB and Priya sang this number originally rendered by Balu and Janaki. The keys , flute, choir, violins, the singers – they just did a splendid job. Both the interludes were executed to perfection. Needless to say, SPB was in top form. But Priya was able to match him very well. I got another 25% of my money’s worth.

15. Manjolai Kilithano (Kizhakke Pogum Rayil 1978) – Hari was turned into Jayachandran for the evening. The rhythm section rocked – Napolean added spice with his flute. The sitar came out nicely, and Hari sang this song not badly. His Tamil is still a problem. While Hari made decent attempts to sing most of the Jayachandran numbers, he is no match to JC’s diction. He floats over Tamil sounds as though he is rendering a ghazal!

16. Nama Shiva Vaazhga (TIS 2005) – Vivek presented the 4 forms of this chant from a Thiruvasagam track and demonstrated the genius behind the composition. This was not performed, just demonstrated with the CD being played.

17. Pottu Vaitha Kadhal Thittam (Singaravelan 1992) Karthik and Yuvan sang the original Kamal song. Both of them did a good job and surprisingly Yuvan had practiced his lines well as he did not slip. The drummer was brilliant and synthesizers took care of the rest. Another high point of the evening.

18. Agaya Vennilave (Arangetra Velai – 1990) – Madhu and Anitha sang this song of Yesudas and Uma. Madhu was in his elements and the song turned out to be honest to its original. Somehow, in a live performance, the 1st interlude’s counter melody does not get surfaced as well as the studio recoding. However, both the signers did a good job.

19. Kadhalin Deepam (Thambikku Endha Ooru -1984) – One of the all time SPB’s favorite. The orchestra did a great job and one could experience the double bass, violins (the rush of them in the second interlude). While Balu did a good job, he was a bit slow and the rhythm was a bit louder.

20. Yamunai Aatrile (Dhalapathy 1991) – I can’t recollect the name of the lady who sang this on stage originally sang by Mitalee. She did a fine job and was a very short song. The rhythm section was truly irritating

21. Tham Thananam – (Puthiya Vaarpugal 1979). This song was rendered by Chitra and Sadhana originally rendered by Jensi and Vasantha. Raja reorchestrated this track for his performance, and boy, it sounded fantastic. The violins were a real treat and along with the bass, the arrangement reminded me of the JW style of grandeur. Every second of this was rendered perfectly by the singers and the string ensemble. Overall, this song got me another 50% of my money’s worth! This one track was good for a slide back and forth through the clumsy cold white stuff!

22. Etho Mogam (Kozhi Koovuthu 1982). Karthik and Surmukhi sang this song originally rendered by Krishnachander and Janaki. I rate this as one of the best preludes ever created and the orchestra did full justice to the original. Napoleon and the choir did a splendid job. Raja, stopped the violins in the second interlude and asked them to redo the cannon perfectly.

23. Nenjukulle (Ponnumani 1993) – SPB and Chitra rendered the original by Balu and Janaki. The ghatam (Jayacha) came out and there was no faking. The flute in the second interlude by Napolean was perfect. Another 25% of the money’s worth.

24. Rasathi Unnai (Vaidehi Kaathirunthaal – 1984) Hari, the JC of the evening, floated over the lyrics and stayed on the tune. The orchestra was brilliant. The cello, double bass, violins just weaved the magic in its entire splendor. Though I have heard this song a thousand times, hearing it in its original form was exhilarating. Technology has to go a long way to capture such splendor. Prasad was his usual self on the table for this track.

25. Naan Porandhu Vandhadhu (Maya Bazaar 1995). A capella in Indian film music is rare. Doing a full song with just human voices means that you need to master western harmony to the highest level. Performing this on stage – only Raja and his choir team can do this. Outstanding choir team – hats off to them. They meticulously reproduced the laughs at the end of track done honoring the harmony rules, brilliantly on stage. It is sad that most audiences did not appreciate this track as much till SPB explained the genius behind the work. Raja and his team should not take such feedback from the audience and start dropping such tracks from their performances. Raja’s job is to elevate listening and many of his other popular songs will more than compensate for such brilliant experimentation. In other words, he should continue with full steam! It was fitting to listen to this, as I have been publishing my research on Raja’s choir for the past 2 years in my blog and I rate this track as a true showcase of his genius, along with Eriyile Elandha Maram. He stands well above all Indian composers on several grounds, vocal harmony being one of the tall grounds! This track alone got 100% of the money’s worth.

26. Valli Valli Ena (Deiva Vaaku 1992) Raja sang this track (originally with Janaki) and was nicely supported by the Flute, guitar and claves. It was nice to see claves being performed live as these days, orchestras simply rely on synthpads and they sound so unreal.

27. Ninaivo Oru Paravai (Sigappu Rojakkal 1978). Yuvan and NSK Ramya sang this song originally sang by Kamal and Janaki. Surprisingly, Yuvan did sing this song very well. Ramya’s humming in this song was outstanding measuring up to the original Janaki. The orchestra simply took off and did a splendid job. Sashi’s bass was very nicely supportive and the violins were just splendid. There is no recorded version that can scale up to the ‘real’ sound of this song. I got another 25% of my money’s worth.

28. Ananda Raagam (Paneer Pushpangal 1981). Sadhana sang this song originally rendered by Uma Ramanan. The orchestra was the star of the song. Sadhana, did sing this song to the best of her ability, but could not measure up to Uma or Shreya who have sang the old and the new versions. The strings came out so well and the experience of going to a Raja concert was fulfilled. The DB, cello support along with Balesh’s shehnai reproduced the original in better splendor as the recorded versions are of poor quality. Raja dismissed this song as an exercise in Simmendramadhyamam. He told the audience that it is not any great composition.

29. Sundari Kannal ( Dhalapathy 1991) – SPB and Chitra sang the song that was sung originally by Balu and Janaki. I have heard the string tremolo at the beginning of this track a hundred times, but must be experienced live to understand it. When SPB said in one of the concerts that the musicians who played it originally, put their instruments down, stood up and clapped in ovation, it was just information. You could hear the place tremble when the violins play the introductory score and you start understanding what he is talking about. Raja calls this as a ‘true composition’. I don’t blame him. The horns came out very well. The choir in this track – hats off to Raja’s choir team – both male and female. Splendid job. The violins (there were about 20 of them) managed to reproduce the original war setting very well along with the horns. Another 25% of the money’s worth! It was a moment worth savoring for a very long time. I do not think, that this orchestral brilliance can be experienced in any other form other than a live orchestra like Raja’s. The normal Western string movements will struggle to keep you as engaged. He does all this magic in less than 5 minutes. Unfortunately, there is no alternative to experiencing this song truly other than listening to the Raja orchestra live!

30. Saindhu Saindhu (Neethane Enthan Pon Vasantham – 2012). Yuvan and Ramya sang this song. The electric guitar was played very well. However, the strings sounded very muted and nowhere near the original. The drumming and sax were nicely played. Not a concert highpoint

31. Orampo (Ponnu Oorukku Pudhusu – 1979). Raja and chorus performed this song. Not much to write about it as I never liked the original song

32. Idhu Namma Veetu Kalyanam (Annakili 1976) – Surmukhi and chorus performed the Janaki song. The percussion and the strings were nice in this song and it never came out that way in the mono recording of the movie sound track. Somehow, the brush strokes on the drums (to simulate a sieve) did not turn out great.

33. Nila Adhu Vanathu Mele & Thenpadi Cheemaiyile (Nayakan 1987) – Raja performed these two tracks and explained how the former was meant to be the later.

In all, it was not only money’s worth (much more than that), but also a few things that must be pointed out. Raja’s greatest strength is not just his genius, but his brilliant choir and orchestra. These folks have practiced very hard and recreate his magic. His team works so sincerely with him that he is lucky to have the best working for him. There were few mistakes and even Hariharan sang without monkeying around. While the present generation may not like the discipline and lack of ‘fun’ element to music, they must understand that everlasting music is created this way.

Specifically, the outstanding performers of the evening were SPB, the choir team, violins in that order. Priya also did a good job.

In all, despite the bitterly cold and slushy weather, I am glad I listened to friends who told me that you need to experience Raja ‘live’ – he was electric, though I wasn’t shocked!


Cheers

Ravi Natarajan
Mississauga, ON, Canada

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா தனது இசையை உலகமெல்லாம் பரப்பக் கனடா வரவில்லை தான் உழைக்கவும் தன்னை வைத்து மற்றவர்கள் உழைக்கவும் தான் அவர் கனடா வந்தார். அவர் ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டு காசை அள்ளிக் கொடுக்க முன்வந்தால் அவர் வாயில் அவலைப் போட்டு மென்றாலும் அது ரசிகர்களுக்கு இசையாகத் தான் தெரியும். மற்றும்படி ரசிகர்களைக் கனடாவில் ஏமாற்றிவிட்டார் என்பது ரசிகர்களின் எழுத்தால் வரும்போது எனக்கு அது ஒரு உண்மையான விமர்சனமாகத் தான் தெரிகின்றது. பாடல்களை ரசியுங்கள் ஆனால் பாடகர்களையோ இசையமைப்பாளர்களையோ தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவது கொஞ்சம் அதிகம் .

 

தென்னிந்திய சினிமா உலகம் பற்றி நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்கிறீங்க வாத்தியார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனி பொழியும் காலத்தில் எத்தனையோ தேவைகளை இடர்களை புறந்தள்ளிவிட்டு இசைஞானியின் இந்நிகழ்வில் இதயங்களை இசையால் நனைக்கச் சென்றவர்களுக்கு இசையில் நனையவும் மிதக்கவும் முடியாமல்.. தெரிவு செய்யப்பட்ட பாடல்கள்,

குரல் மாற்றிப்பாடியவர்கள் என்று ஏகப்பட்ட கலங்கல்கள். இசைஞானியின் பூரணத்தை தரிசிக்கமுடியாத குறையோடு வீடு திரும்பினோம்.

 

 

வல்வை அக்கா நீண்ட எதிர்பார்ப்பை இந்த இசை நிகழ்ச்சி மீது வைத்திருந்து காத்திருந்த.. பலரில் ஒருவர். அவாவிடம் இருந்தும் ஏமாற்றங்கள் கலந்த இந்த ஆக்கம் வருமென்று இன்னுமொருவனின் பதிவைப் படித்ததுமே தெரிந்து கொண்டிருந்தோம்.

 

தேற்றிக் கொள்ளுங்கோ அக்கா. என்ன செய்யுறது. எல்லாமே நாங்க நினைக்கிற மாதிரி நடந்திட்டா.. வாழ்க்கை சுவாரசியமாவா இருக்கும்...??! :):icon_idea:

Link to comment
Share on other sites

ஒரு நிகழ்ச்சி  இரண்டு மணித்தியாலம் தாமதமாகத் தொடங்குவது என்பது கொடுமையான விடயம். ஏற்கனவே நிறுத்தப்பட்டதால் மிக எதிர்பார்ப்பு இருந்திருக்கும். பனிப் பொழிவு வேறு. இசைநிகழ்ச்சி தொடங்க முதலே சனங்களை 'கடுப்பு' நிலைக்கு தயார்படுத்தி வைத்துள்ளார்கள். போதாததிற்கு பாடல் தெரிவும் நல்லமில்லை போல தெரிகிறது.

தரத்தில் எந்தவித விட்டுக் கொடுப்புகளும் இல்லாமல் மிகக் கண்டிப்பாக இருப்பதால், இளையராஜாவின் இசைநிகழ்ச்சிகள் நன்றாக இருக்கும். அண்மைய உதாரணம் 'என்றென்றும் ராஜா'. இங்கு என்ன நடந்ததோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் இப்பதிவை இணைக்க முடியவில்லை ஏன் என்று யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

முகப்புத்தகத்தில் இப்பதிவை இணைக்க முடியவில்லை ஏன் என்று யாருக்காவது தெரியுமா?

 

சில நேரங்களில் சில செய்திகளை இணைக்க முடியாமல் போவதுண்டு . இப்படியான நேரங்களில் இணைப்பை கொடுத்து விட்டு (URL மட்டும்) அதன் Preview இனை அகற்றி விட்டு பாருங்கள். அல்லது No thumbnail எனும் தெரிவை பயன்படுத்திப் பாருங்கள். இந்த இரண்டில் ஒன்றாவது கண்டிப்பாக வேலை செய்யும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.