Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரங்கசுவாமி ஸ்ரீநிவாசனுக்கு தேசிய விருதை ஒபாமா வழங்கினார்.


akootha

Recommended Posts

02DNRI.jpg

இந்திய அமெரிக்கரான ரங்கசுவாமி ஸ்ரீநிவாசனுக்கு தொழில்நுடப் மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய விருதை அதிபர் பராக் ஒபாமா வழங்கினார்.

 

 

லேசர் துறையில் சிறந்த பணியாற்றியமைக்காக அவருக்கு இவ்விருதுக்கு வழங்கப்பட்டது. சாமுவேல் பிளம் மற்றும் ஜேம்ஸ் வெய்ன் ஆகிய விஞ்ஞானிகளுடன் இணைந்து இவ்விருதைப் பெற்றார் ஸ்ரீநிவாசன்.

தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய விருது, அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்காவின் உயரிய விருதாகும். 1985-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

 

அறவியல் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அறிவியல் துறையில் சாதனைகள் புரிந்த 12 விஞ்ஞானிகளுக்கு ஒபாமா விருது வழங்கினார். விருது பெற்ற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒபாமா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் 1950ஆம் ஆண்டு அறிவியல் பட்ட மேற்படிப்பை முடித்த ஸ்ரீநிவாசன், 1956இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் படிப்பை நிறைவு செய்தார். 2002-ம் ஆண்டு அமெரிக்காவின் கண்டுபிடிப்புக்கான "ஹால் ஆஃப் ஃபேம்' விருதைப் பெற்றார். இவர், தனது 21 கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்க காப்புரிமையைப் பெற்றுள்ளார்.

 

http://dinamani.com/world/article1447602.ece

Link to comment
Share on other sites

  • US President Barack Obama honours NRI scientist Rangaswamy Srinivasan for laying the foundation for PRK and LASIK laser refractive surgical techniques
  • At a glittering function held yesterday at the White House, Obama presented National Medal of Science to 12 eminent scientists while 10 extraordinary inventors received 2011 National Medal of Technology and Innovation, the highest honors bestowed by the United States Government upon scientists, engineers, and inventors.
  • Congratulating scientists and inventors Obama said if there is one idea that sets this country apart, one idea that makes it different from every other nation on Earth, its that here in America, success does not depend on where one is born or what his/ her last name is.

     

    Read more at: http://indiatoday.intoday.in/story/barack-obama-honours-nri-scientist-rangaswamy-srinivasan-laser-treatment/1/248587.html

Link to comment
Share on other sites

அமெரிக்கா உலகிலேயே அதி கூடிய தேசிய உற்பத்தியை ஆரய்ச்சிற்காக செலவழிக்கும் நாடு.
இனம், மதம், பெயர் பாராமல் திறமைகளை அதிகம் மதிக்கும் நாடு.

 

இவ்வாறான தமிழர்கள் பலர் இந்தியாவாலும் சிங்களத்தாலும் புறக்கணிக்கப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.