Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவலைய விடுங்க ஐந்து புதிய கோள்களில் மனிதன் உயிர் வாழலாமாம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

28265102c6b60f7f-9c5a-463b-afc9-c27fbacb

 

பூமியைப் போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

அவுஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக சூரியனைப் போன்ற டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர். 

இதில் 5 கோள்கள் டாவ் செட்டி நட்சத்திரத்தை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள்களில் மிகச்சிறிய கோளானது, பூமியைவிட கிட்டத்தட்ட 2 மடங்கு பெரியதாகும். இந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளன. 

இவை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை வழங்கும். அந்த கோள்கள் மிக தொலைவில் இருக்கின்றன. ஒளியின் வேகத்தில் சென்றால் 12 ஆண்டுகளில் இந்த கோள்களை அடைய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=32478

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 ஒளியின் வேகத்தில் சென்றால் 12 ஆண்டுகளில் இந்த கோள்களை அடைய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கவலைய விடுங்க ஐந்து புதிய கோள்களில் மனிதன் உயிர் வாழலாமாம்!

 

நம்ம கவலையே இது தானே, தமிழரசு!

 

அந்தக் கிரகங்களாவது, மனிதனிடமிருந்து தப்பிப் பிழைக்கட்டும்! :o

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி: 02     மனித சரித்திரத்தில், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப் படு கொலைகள் எவை எவை என்று பார்க்கும் பொழுது, மாயன் நாகரிகம் எம் கண் முன் வருகின்றன. கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு [Spanish] பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது. அத்துடன் நிறுத்தி விடவில்லை.   'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'.   வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத் தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.   யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழு ப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார் என்பதும் குறிப் பிடத்தக்கது . இப்படி ஒன்றையே மாயாக்களுக்கு உதவி செய்யும் அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார்!   இச் சின்னஞ் சிறிய இலங்கை தீவு சில இனக் கலவரங்களைக் கண்டு மனித வளம், பொருளாதார வளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், இவற்றிற் கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது. அதனால் தான் 1983 ஜூலை மாதம் "கறுப்பு ஜூலை' என்று இன்னும் அழைக்கப்படுகிறது. இது 40 / 41 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 24 தொடக்கம் ஜூலை 30, 1983 வரை அரங்கேறியது. இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000 தமிழர் படுகொலை செய்யப்பட்டு முப்பது கோடி டாலர்கள் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல இலட்சம் தமிழர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பாதுகாப்புக்காக சென்றனர். நானும் என் குடும்பமும் உட்பட கப்பலில் யாழ் சென்றோம்.   இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது . ஏன் என்றால் லட்சக் கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார்.   வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக் கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப் பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற , மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? .   இது போலவே இந்தியாவிற்குள் 1700 கி மு,  ஆடு மாடு மேய்த்து வந்த, நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் இங்கே வாழ்ந்த பழங்குடியினரை  திட்டி , கேவலபடுத்தி, பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் என "ரோமேஷ் மஜும்தார்" தமது "பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்" என்ற புத்தாகத்தில் 22 ஆம் பக்கத்தில் கூறுகிறார் . மேலும் ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள் , அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன என Dr ராதாகுமுத முகர்ஜி Phd "இந்து நாகரீகம்" பக்கம் 69 இல் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு மாதிரி எடுத்துக்காட்டாக ஒரு பாடலைக் கிழே தருகிறோம்.     "இந்திரா! ஆந்தையைப் போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் கொல்லவும். நாயைப் போலும் கழுகைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் நசுக்கி ஒழிக்கவும்." மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22     மேலும் இதில் ஒருவர் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், மாயனும் இந்த பழங்குடியினருக்கும் மற்றும் தமிழருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக அறிஞர்கள் இப்ப சான்றுகளுடன் கூறுகிறார்கள்.  ஆகவே இந்த இரு முதன்மை இனப்படு கொலைகளைத் தாண்டித்தான் நாம் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அது மட்டும் அல்ல இக் கொலைகளை /அழிவுகளை புரிந்தோர் இருவரும் ஒரே இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மொழி குடும்பத்திற்குள் உள்ள இந்திய - ஈரானிய மொழி குடும்பத்தில் தான் பல வட இந்தியா மொழியும் உள்ளன என்பதும் கவனிக்கதக்கது.   மேலும் ஒரு கடைசி உதாரணமாக எமது பார்வையை மகாபாரதம் அல்லது விஸ்ணு புராணம் பக்கம் திருப்புவோம். விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என கருதப்படும் பரசுராமரை இங்கு சந்திக்கிறோம். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார்.   ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன் [சத்திரியன் / க்ஷத்ரியர்] ஜமதக்கினி முனிவரின் காமதேனு பசுவை கடத்தி சென்று விட்டான், இதை அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார். ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தார்கள். அங்கு பரசுராமர் இல்லாததால், அவனின் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை பலிக்கு பலி வெட்டினர். தாயின் அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அப்பொழுதே இந்தக் க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார் பரசுராமர். அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். இரத்த ஆறு ஓடியது. குருக்ஷேத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. இதை அடுத்து கொடிய கொலைக்காரனாக மாறி பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் இல்லாமல் போகும்படி இருபத் தொரு திக்விஜயம் செய்து, இருபத் தொரு தலை முறையை வேரறுத்தார் என கூறுகிறது. இவர் தனி மனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான் [mongolian king genghis khan], ஹிட்லர் [Adolf Hitler], ஸ்டாலின் [Joseph Stalin], முசோலினி [Benito Amilcare Andrea Mussolini], மாசேதுங் [Mao Zedong ] இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளை விட மிக மிக அதிகம். சத்திரியர் குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர் போலும்.   என்றாலும் க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பும் அந்த வம்சத்தை தழைக்கச் செய்தான் மூலகன். சூர்ய குலத்தில் பிறந்தவன் இந்த அரசன். இராமாயண ராமன் இவனது எட்டாவது தலை முறையாகும். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.   ஆகவே பொதுவாக விவேகமும் வீரமும் ஆற்றலும் கொண்ட ஒரு இனத்தை முழுமையாக தடை செய்யவோ அழிக்கவோ முடியாது என்பது கண்கூடு எப்படி என்றாலும் ஒரு இனப்படு கொலை நடை பெறும் போது ஒரு தற்காலிக பின்னடைவு நிகழ்கிறது. அதனால் தான் பொதுவாக எல்லோரும் அறிய விரும்புவது :   *உண்மையில் என்ன நடந்தது ? *இது ஏன் நடந்தது ? *இதற்கு யார் பொறுப்பு ? *இந்த அட்டூழியத்திற்கு யார் யார் உடந்தையாக பின் புறத்தில் இருந்தவர்கள் ? *நாம் யாரை குற்றம் சுமத்த வேண்டும் ? இதனால் தான் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவரும் ,தனது திருக்குறள் 548 இல்:   "எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்."   என்று கூறுகிறார். அதாவது, நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பல வகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான் என்கிறார்.   இப்படியான கேள்விகளுக்கான உண்மையான, ஆக்கபூர்வமான, பக்க சார்பு அற்ற, பதில்களையே இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆகவே இந்த நேர்மையான கோரிக்கைகள் சிக்கலான ஒன்று அல்ல. மிக மிக இலகுவான ஒன்றே !!   *"உண்மைகளை வெளிபடுத்துவது" *"நேரடியாகவோ மறைமுகமாவோ இதில் ஈடு பட்டவர்களை அல்லது குழுக்களை பகிரங்கமாக தண்டிப்பது" *"இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கும் உணர்த்துவது"   அப்படி என்றால் இவை மேலும் தொடராமல் தடுக்கலாம். அடுத்த பரம்பரைக்கும் தொடராமல் இருக்க. அது மட்டும் அல்ல பரசுராமர் போல் பரம்பரை பரம்பரையாக அழிப்பதை நேரத்துடன் தடுக்கலாம் என்பதாலும். இன்னும் ஒரு மூலகன் வரும்வரை இருபத்தி ஒரு தலை முறைக்கு காத்திருக்க தேவை இல்லை என்பதாலும் ஆகும் .     "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்-   வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்-   கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்-   நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்-   வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்-   அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்-   இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்-   விசாரணை எடு- உண்மையை நிறுத்து கூடுங்கள்,ஒன்றாய் உண்மையை உரையுங்கள்-   படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    முடிவுற்றது        
    • 🤣......... தேவாலயங்களைத் (வேதக் கோவில்கள்) தவிர மற்ற எல்லா இடங்களிலும் ஏதோ ஒன்றாவது சொன்னார்கள். ஆனால் எவரையும், எதையும் நேருக்கு நேர் தட்டிக் கேட்க முடியுமா என்று தெரியவில்லை. சுத்தமாக அந்த துணிவு எனக்கில்லை, பலருக்கும் இருக்காது.......   👍.... சொல்லிப் பார்த்தேன், கேட்பது போல தெரியவில்லை.......... மிகுதியை கடைசியில் நோர்தேர்ண் ஹாஸ்பிட்டலில் வைத்துத் தான் சொல்ல வேண்டும் போல......🤣. அந்த தனியார் மருத்துவமனையை பற்றி எழுதுவதற்கும் சில விடயங்கள் இருக்கின்றன.
    • Published By: RAJEEBAN 15 MAY, 2024 | 01:00 PM   நாங்கள் இரண்டாவது நக்பாவை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவிக்கும் பாலஸ்தீனியர்கள் எனினும் இம்முறை தனித்து விடப்பட்டுள்ளதாகவும் தனியாக அதனை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பாலஸ்தீனியர்கள் 1948 ம்ஆண்டு பலவந்தமாக இடம்பெயரச்செய்ப்பட்டு இன்றுடன் 76 ஆண்டுகள்பூர்த்தியாகியுள்ளன. எனினும் அன்று இஸ்ரேலிற்கு எதிராக அராபிய நாடுகள் ஒரணியில்காணப்பட்டன. எனினும் காசாவில் இடம்பெறும் யுத்தங்களும் மேற்குகரையில் இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பும் இரண்டாவது நக்பா அரங்கேறுகின்றது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் என தெரிவித்துள்ள பாலஸ்தீன மக்கள் ஆனால் இம்முறை நாங்கள் அதனை தனியாக எதிர்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர். சிலர் 1948ம் ஆண்டுஅராபிய இஸ்ரேலிய யுத்தத்தைநினைவுகூர்ந்துள்ளதுடன்  சமூகத்தின் அனைத்துர தரப்பினரும் பாலஸ்தீனத்திற்காக போரடி உயிர்நீத்தனர் என சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த யுத்தத்தில் சியோனிஸ்ட்களிற்கு எதிராக பாலஸ்தீனியர்களுடன் இணைந்து ஈராக்கிய படையினர் போரிட்டனர் என அடிப் நசல் என்பவர் தெரிவித்துள்ளார். தற்போது அராபிய இராணுவம் என்பதே இல்லை அனைவரும் தங்கள் சொந்த நலன்களை பாதுகாக்க விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183601
    • Published By: DIGITAL DESK 3    15 MAY, 2024 | 11:04 AM கனடாவின் எண்ணெய் வளம் மிக்க போர்ட் மெக்முரே பகுதியில் (Fort McMurray) பாரிய காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக நான்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுமார் 6,000 மக்களை  வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. வரட்சி மற்றும் பலத்த காற்றினால் ஆல்பர்ட்டாவின் மேற்கு மாகாணத்தில் கடந்த வாரம் முதல் காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளது. தற்போது காட்டுத் தீ தென்மேற்கே சுமார் 13 கிலோ மீற்றர் (8 மைல்) தொலைவில் உள்ளது. அங்கு மணிக்கு 40 கிலோ மீற்றர் (24.8 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளது. பலத்த காற்று வீசுவது துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு சாதகமானதாக இல்லை.  காற்றின் வேகம் குறையும் வரை காட்டு தீ நகரத்தை நோக்கி தொடர்ந்து பரவி வரும் என  ஆல்பர்ட்டா காட்டுத் தீ தகவல் தொடர்பு அதிகாரி ஜோசி செயின்ட்-ஓங்கே தெரிவித்துள்ளார். காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளதால் வானம் புகையால் சூழப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தீயணைப்பு வீரர்கள் தீ பரவும்  பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 10,000 ஹெக்டயர் பரப்பிலான வனப்பகுதிகளில் தீ பற்றி எரிந்து வருகிறது. அபாசண்ட், பீக்கன் ஹில், ப்ரேரி க்ரீக் மற்றும் கிரேலிங் ஆகிய பகுதிகளிர் வசிப்பவர்கள் மாலை 4 மணிக்குள் வெளியேற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், போர்ட் மெக்முரேயில் பரவி பாரிய காட்டுத்தீ 90,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தியது.  ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/183580
    • தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன், ஒரு நாள் மனைவியுடன் நடந்த சண்டையில் குர்குரே வாங்கி வர மறந்து விட்டார். இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் நொறுக்குதீனியாக குர்குரே(கார முறுக்கு) உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக இது தயாராகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறிவந்தாலும் அதிகமானோர் இதை விரும்பி உண்ணப்படும் பண்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கணவன் கார முறுக்கு வாங்கித் தராததால் மனைவி அவரைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கார முறுக்கு சாப்பிடுவதில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. கிட்டத்தட்ட கார முறுக்குக்கு அடிமையான அப் பெண் தனக்கு தினமும் 5 ரூபாய் பாக்கெட்கார முறுக்கு வாங்கித்தர வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி தினமும் மனைவிக்காக கார முறுக்கு வாங்கி வந்துகொண்டிருந்த கணவன் ஒரு நாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் கார முறுக்கு வாங்கி வர மறந்துவிட்டார். இதனால் கணவரைப் பிரிய முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண், அவருடைய பெற்றோர் வீட்டில் போய் தங்கியுள்ளார். பின்னர் விவாகரத்து கோரியுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் பொலிஸ் நிலையத்துக்கு செல்ல, அவர்கள் இருவரையும் அழைத்து பொலிஸார் விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பெண், கார முறுக்கு விவகாரத்தை மறைத்து, தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கணவர் அதை மறுத்துள்ளார். குடும்பநல ஆலோசனை மையத்துக்கு இருவரும் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு, இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பின்னர், சில நாட்கள் கழித்து இருவரும் மீண்டும் ஆலோசனைக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் பல அமர்வுகளில் தொடர்ந்து பேசிய ஆலோசகர் தெரிவிக்கையில், அப்பெண்ணுக்கு கார முறுக்கு மீது இருந்த அதீத ஆர்வமே அவர் கணவரைப் பிரிய காரணம் என்று தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/301643
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.