Jump to content


Orumanam
Photo

ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்! -02.12.2012 முதல் 21.06.2014 வரை


 • Please log in to reply
11 replies to this topic

#1 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,695 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 01 December 2012 - 04:27 PM

ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்!
சனி, 1 டிசம்பர் 2012( 17:57 IST )
02.12.2012 முதல் 21.06.2014 வரை

நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17-ம் நாள் (02.12.2012) ஞாயிற்று கிழமை, கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனும் நிறைந்த சித்தயோகத்தில், சனிபகவான் ஹோரையில், பஞ்ச பட்சியில் ஆந்தை அரசாட்சி செலுத்தும் நேரத்தில் காலை மணி 10.51க்கு (சூரிய உதயம் புக) நாழிகை 12.71/2க்கு விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில் ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சர வீடான மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இந்த சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் தான். எந்த கிரகத்தோடு சேர்கின்றார்களே. எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களே எந்த எந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ அதற்கு தகுந்தாற் போல் ஆனால் அதே நேரத்தில் தனக்கென விதிக்கப்பட்ட பலனை தவறாமல் தருவதில் இவர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை.

ராகுவால் ஏற்பட போகும் பலன்கள்:

வியாபாரச் சின்னமான தராசுக் குறியீடுடைய சுக்ரனின் துலாம் ராசியில் ராகு அமர்வதால் பாரம்பரிய வியாபாரிகள் பாதிப்படைவார்கள். சுதேசிப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை குறையும். உணவு பதுக்கல் அதிகமாகும். விலைவாசி ஏற்றம் கடுமையாக இருக்கும். 7.6.2013 முதல் 11.12.2013 வரை சனியும், ராகுவும் யுத்தம் செய்வதால் விமான விபத்து, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு, விபத்துகள், பூமிக்கு அடியிலிருந்து மீத்தேன், ஈத்தேன், ஆர்கன் போன்ற மந்த வாயுக்கள் வெளிப்பட்டு அதனால் பாதிப்புகள் ஏற்படும். முடி உதிர்வது, நிரைப்பதை தடுக்க புதிய மருந்து கண்டறியப்படும்.

முகச்சீரமைப்பு, இதய அறுவை சிகிச்சை துறை நவீனமயமாகும். மலை மற்றும் கடலோர நகரங்கள் பாதிப்படையும். தங்கத்தின் விலை ஜீன் 2013லிருந்து குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. வலைகுடா நாடுகள் மீது அமெரிக்காவின் பார்வை மீண்டும் திரும்பும். சமூக எதிர் நடவடிக்கை கும்பல்கள் புது தாக்குதலை நடத்தும். போதை மருந்து, தங்கம் கடத்தல் அதிகரிக்கும். வன்முறையாளர்களை தடுக்க கடும் சட்டம் வரும். மத்தியில் கூட்டணி மாறும். எதிர்த்தவர்கள் ஒன்று சேருவார்கள். ஆளுபவர்கள் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

அனைத்து துறைகளிலும் பெண்கள் கை ஓங்கும். பெண் சாதனையாளர்கள் அதிகரிப்பார்கள். மணம் முறிந்தவர்கள், விதவைப் பெண்கள் சமுதாயத்தில் புகழடைவார்கள். ஆனால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கும். பாமர மக்கள் பயனடையும் வகையில் புது சட்ட திட்டங்கள் உருவாகும். சாதாரணமானவர்களும் சாமான்யப் பதவியில் அமருவார்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு மக்கள் அடிமையாவார்கள். உலகப் பொருளாதார நிலை சற்றே உயரும். அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டில் அதிக முதலீடு செய்வார்கள். ஐ.டி. நிறுவனங்கள் சரியும்.

வங்கிகளளில் வராக்கடன் வசூலிக்க சட்டம் கடுமையாகும். அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பங்குகள் தனியார் தாரை வார்க்கப்படும். புதிய கனிம, கரிம வளங்கள் கண்டு பிடிக்கப்படும். ராணுவத்தில் புதிய ஏவுணைகள் சேர்க்கப்படும். காடுகள் சேதமடையும். அயல்நாட்டைப் போலவே இந்தியாவிலும் பல நவீன பெரிய கட்டடங்கள் உருவாகும். பால் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும். கம்பியூட்டர், ஆடியோ, வீடியோ சாதனங்களின் விலை விழும். சங்கல், சிமெண்ட், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயரும்.

பாலியல் கொடுமைகளுக்கு எதிராக சில கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும். ஆனால் புதிதாக பாலியல் சம்பந்தமான நோய்கள் உருவாகும். அதற்கான மருந்துகளும் கண்டறியப்படும். அணைக்கட்டுகள் உடையும். ஷேர் மார்க்கெட், தங்கத்தின் விலையில் ஏற்ற-இற்றம் இருக்கும். வெள்ளி விலை உயரும். தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடு உண்டாகும். முக்கிய தீவிரவாதிகள் பிடிபடுவார்கள். திரைத்துறை வளர்ச்சி அடையும். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக பல நவீன யுக்திகளை கையாண்டு தமிழ்ப் படங்களும் வெளிவரும்.

கேதுவால் ஏற்பட போகும் பலன்கள்:

கேதுபகவான் சுக்ரனின் ஸ்திர வீடான ரிஷப ராசியை விட்டு விலகி சர வீடான மேஷ ராசியில் அமர்வதால் பூமி விலை உயரும். என்றாலும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும்.

ரியல் எஸ்டேட் பாதிப்படையும். நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் வளர்ச்சியடையும். புதிய நகரங்கள் உருவாக்கப்படும். பத்திரப் பதிவுத் துறையில் போலிகளை தடுக்க சட்டம் வரும். சந்தேகத்தால் சகோதரச் சண்டை அதிகரிக்கும். கூட்டுக் குடும்பங்கள் உடையும். மக்கள் மனதில் தன்னம்பிக்கை குறையும். நிம்மதி தேடி மக்கள் புண்ணிய ஸ்தலங்களில் கூட்டம் அதிகரிக்கும். ஆன்மிக தலைவர்கள் குற்றசாட்டுக்கு ஆளாவார்கள். பழைய கோவில்களில் புதையுண்டிருக்கும் மர்மங்கள் வெளி வரும்.

யோகாசனம், மூலிகை மருத்துவம் தழைக்கும். விபத்துகள் அதிகரிக்கும். காலப் புருஷனின் முதல் வீட்டில் கேது அமர்வதால் ஒற்றை தலை வலி, மூளைக் காய்ச்சல் அதிகரிக்கும். விநோதமான முகமைப்பில் உள்ள குழந்தைகள் அதிகம் பிறக்கும். ஈகோ, சந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிவார்கள். விவாகரத்து அதிகரிக்கும். பூமி வெடிப்பால் நிலச்சரிவு அதிகரிக்கும். பாகப்பிரிவினை, சொத்துத் தகராறு அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேர்வு முறைகளில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்படும். கல்வி நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டு தரம் மேம்படுத்தப்படும். நவீன ரக க்ரேன், வாகனங்கள், எலக்ரானி பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். உண்ணா விரதம், கடையடைப்பு, வேலை நிறுத்தம் ஆங்காங்கே அதிகரிக்கும். போக்குவரத்து நெருசலை தடுக்க புதிதாக மேம்பாலம் உதயமாகும்.

ராகு கடந்து செல்லும் பாதை:

02.12.12 - 02.02.13 வரை விசாகம் 3-ல்
03.02.13 - 06.04.13 வரை விசாகம் 2-ல்
07.04.13 - 06.06.13 வரை விசாகம் 1-ல்
07.06.13 - 08.08.13 வரை சுவாதி 4-ல்
09.08.13 - 11.10.13 வரை சுவாதி 3-ல்
12.10.13 - 11.12.13 வரை சுவாதி 2-ல்
12.12.13 - 13.02.14 வரை சுவாதி 1-ல்
14.02.14 - 17.04.14 வரை சித்திரை 4-ல்
18.04.14 - 21.06.14 வரை சித்திரை 3-ல்

கேது கடந்து செல்லும் பாதை:

02.12.12 - 02.02.13 வரை கார்த்திகை 1-ல்
03.02.13 - 06.04.13 வரை பரணி 4-ல்
07.04.13 - 06.06.13 வரை பரணி 3-ல்
07.06.13 - 08.08.13 வரை பரணி 2-ல்
09.08.13 - 11.10.13 வரை பரணி 1-ல்
12.10.13 - 11.12.13 வரை அசுவனி 4-ல்
12.12.13 - 13.02.14 வரை அசுவனி 3-ல்
14.02.14 - 17.04.14 வரை அசுவனி 2-ல்
18.04.14 - 21.06.14 வரை அசுவனி 1-ல்

பரிகாரம்:
மூளை, முயற்சி, முணைப்பு தன்மானம், உணர்ச்சி கிரகமான செவ்வாயின் மேஷ வீட்டில் கேது அமர்வதால் ஜாதி, மாதப் பற்றை விட்டு விட்டு நாட்டுப் பற்று, மொழிப் பற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். உணவு, உடை, உல்லாசம், கலைக்குரிய கிரகமான சுக்ரனின் துலாம் ராசியில் ராகு அமர்வதால் நவீன உடைகளை குறைத்து விட்டு பாரம்பரிய உடைகளை அணிவதுடன் கலப்படமில்லா பாரம்பரிய உணவுகளையும் உட்கொள்வோம்.
முந்தையது|அடுத்தது

http://tamil.webduni...121201034_1.htm
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

ninaivu-illam

#2 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,695 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 01 December 2012 - 04:40 PM

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்க‌ள்!
சனி, 1 டிசம்பர் 2012( 21:24 IST )
நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17-ம் நாள் (02.12.2012) ஞாயிற்று கிழமை, கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனும் நிறைந்த சித்தயோகத்தில், சனிபகவான் ஹோரையில், பஞ்ச பட்சியில் ஆந்தை அரசாட்சி செலுத்தும் நேரத்தில் காலை மணி 10.51க்கு (சூரிய உதயம் புக) நாழிகை 12.71/2க்கு விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில் ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சர வீடான மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: மேஷம்
வெள்ளை மனசுக்காரர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை படாதபாடு படுத்தியெடுத்திக் கொண்டிருந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் திக்கு திசையறிந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். உங்களின் அறிவுத்திறனை மழுங்க வைத்த ராகுபகவான் இப்பொழுது உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வரப்போகிறார். தொட்டதுக்கெல்லாம் வீண் விவாதங்களும், மன உளைச்சலும், டென்ஷனும் தான் மிஞ்சியதே. அவையெல்லாம் இனி விலகும். சின்ன வேலையை கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி உற்சாகத்துடன் அனைத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். கணவன்-மனைவிக்குள் சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் களஸ்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்வதால் மனைவியுடன் சின்ன சின்ன விவாதங்கள் வெடிக்கத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்த வேண்டாம். மனைவிக்கு இரத்த அழுத்தம், கர்ப்பப்பை கோளாறு வந்துப் போகும். மனைவி உங்களிடமிருக்கும் கெட்ட பழக்க வழக்கங்களை சுட்டிக் காட்டுவார். அவற்றையெல்லாம் திருத்திக்கொள்ள பாருங்கள். மனைவிவழி உறவினர்களால் அவ்வப்போது மனஸ்தாபங்கள், கருத்துமோதல்கள் வந்து போகும். காசு பணம் எவ்வளவு இருந்தும் என்ன பிரயோஜனம் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என நெடுங்காலமாக வருந்தினீர்களே, இனி கவலை வேண்டாம். அழகும், அறிவும் மிகுந்த குழந்தை பிறக்கும். அரசு வேலைகள் தடைபட்டிருந்ததே! இனிக் விரைந்து முடியும். குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடனை சிறப்பாக முடிப்பீர்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் யோகாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களைக்கட்டும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதியில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் இருசக்கரவாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கனவுத் தொல்லை வந்துப் போகும். தாழ்வுமனப்பான்மை மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப்பாருங்கள். வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்த்துவிடுங்கள். வாகனம் வாங்குவீர்கள்.

உங்கள் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுங்கள். சகோதர வகையில் சின்ன சின்ன இழப்புகளும், கருத்து மோதல்களும் வந்துப் போகும். வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்க்கவும். சொத்து சேரும். வழக்கில் வெற்றி உண்டு. கௌரவப் பதவிகள் கிடைக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும்.

பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை பெருமைபடுத்துவார்கள். பழைய நண்பர்கள், உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். நிரந்த வேலையின்றி தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிக்கும் அளவிற்கு நேரம் ஒத்துழைக்கும். தாழ்வுமனப்பான்மை, குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். நமக்கு ரொம்ப வேண்டியவர்தானே என்று மற்றவர்களுக்காக ஜாமீன், காரெண்டர் என்று கையெழுத்திட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு மாதவிடாய்க்கோளாறு, மன இறுக்கம் விலகும். மாணவர்களே! விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருங்கள். அரசியல்வாதிகள் தலைமையைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். சகாக்களுடன் அவ்வப்போது மனக்கசப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். 7-ம் வீட்டில் ராகு வந்தமர்தால் கூட்டுத் தொழிலில் குழப்பங்களும், பிரிவுகளும் வரும். பங்குதாரர்களிடம் காரசாரமான விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: ரிஷபம்

கலகலப்பாக பேசி காய்நகர்த்துபவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் உங்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களை திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்தாரே! ஒட்டு உறவில்லாமல் தவித்தீர்களே! உண்மையான பாசமுள்ளவர்களை தேடி அலைந்தீர்களே! திறமைகள் இருந்தும் சாதிக்க முடியாமல் தவித்தீர்களே! சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பில் சிக்கிக் கொண்டீர்களே! எதை எடுத்தாலும் ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் உள்ளுக்குள் அச்சுறுத்தியதே! இப்படி உங்களை பாடாய்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர்கள் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள்.

வீண் சந்தேகத்தால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். தாம்பத்யம் இனிக்கும். மனைவிக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்ததே! இனி ஆரோக்யம் கூடும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். வருமா வராதா என்றிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வந்து சேரும். உங்களால் பலன் அடைந்தவர்களும் உதவுவார்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பழைய நகைகளை மாற்றி புதிய டிசைனில் ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை எதிரியாக நினைத்தவர்கள் கூட இனி உங்களை மதித்துப் பேசுவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். மனைவிவழி உறவினர்களும் உங்களைப் புரிந்துக் கொண்டு உதவிகரமாக இருப்பார்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். ஷேர் மூலம் பணம் வரும்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மாதக் கணக்கில் வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள்.

உங்கள் சப்தம-விரையாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் உண்டு. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரர் உதவுவார். சகோதரிக்கு திருமணம் முடியும்.

பிள்ளைகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். மகளுக்கு நல்ல வரன் அமைய வில்லையே என்று வருந்துனீர்களே! இனி உங்கள் அந்தஸ்துக்குத் தகுந்தாற்போல நல்ல வரன் அமையும். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையாக பாசத்தைப் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறையால் பாதியிலேயே நின்றுபோன கட்டிட பணிகளை, இனி முழுமையாக கட்டி முடிக்கும் அளவிற்கு பணம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். ஒதுங்கிப் போன உறவினர்களும், நண்பர்களும் இனி ஓடிவந்து உதவுவார்கள். குழந்தை இல்லையே என்று வருந்திய தம்பதியர்களுக்கு பிள்ளை பாக்‌கியம் உண்டாகும்.

வேலை இல்லாமல் அலைந்துத் திரிந்தவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கும். திருமணம் தள்ளிக் கொண்டே போன கன்னிப் பெண்களுக்கு இனி கல்யாணம் கூடி வரும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். விடுபட்ட பாடத்தை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மாணவ-மாணவியர்களின் நினைவாற்றல் பெருகும். ஆசிரியரின் ஆதரவு உண்டு. மதிப்பெண் உயரும். நல்ல நட்புச் சூழல் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும், அரவணைப்பும் கிட்டும். என்றாலும் சகாக்களுக்கு மத்தியில் கொஞ்சம் பொறாமை இருக்கத்தான் செய்யும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள்.

பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். கெமிக்கல், எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலையாட்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள். கணினி துறையினர்களுக்கு அயல்நாட்டுத்தொடர்புடைய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களின் கற்பனைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: மிதுனம்

எதையும் திருத்தமாக செய்பவர்களே! 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் சேர்ந்து உங்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணவரவையும், பிரபலங்களின் நட்பையும் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் வீண் அலைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான்! இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல.. என்றாலும் உங்கள் யோகாதிபதி சுக்ரன் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து நல்லதையே செய்வார். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் விவாதம், சண்டை என வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆனாலும் புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் ராகு அமர்வதால் சந்தேகக் கண்ணுடன் எல்லோரையும் பார்ப்பீர்கள்.

இப்படி நடந்திருக்குமோ! அப்படி சொல்லியிருப்பார்களோ! என்றெல்லாம் நினைத்து குழம்புவீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துச் செல்லும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வ கோவிலை புதுப்பிப்பீர்கள். பயணங்களால் ஆதாயமுண்டு. டென்ஷன், முன் கோபம் இருக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் வருங்காலம் கருதி கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். என்றாலும் பிள்ளைகளுடன் அடிக்கடி சண்டை, சச்சரவு வரும்.

உங்களின் குறிக்கோள், கனவுகளை அவர்களிடம் திணிக்க வேண்டாம். அவர்களின் உயர்கல்வி, உத்‌தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். நெடுநாளாக குல தெய்வ கோவிலுக்குப் போக வேண்டுமென சொல்லிக் கொண்டுதானே இருந்தீர்கள். இனி குடும்பத்துடன் சென்று பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தம்-பந்தங்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். அவ்வப்போது பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சொத்து தாமதமாக வந்தாலும், குறைவாக வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். சிலர் சொந்த ஊரை விட்டு விலகி அருகிலிருக்கும் நகரத்திற்கு குடிபெயர்வீர்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சப்தம-தசமஸ்தானாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். கடனாக கொடுத்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அறிஞர்கள்-கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவியுடன் ஈகோ பிரச்னை, அவருக்கு ஹார்மோன் கோளாறு, ஃபைப்ராய்டு வரக்கூடும். உத்யோகத்தில் இடமாற்றங்களும், வேலைச்சுமையும் இருக்கும்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவினங்கள் கூடும். உறவினர்களின் விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நெருங்கிய நண்பரை இழக்க நேரிடும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ஷேர் மூலம் பணம் வரும்.

உங்கள் சஷ்டம-லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் சொத்து வாங்குவது, விற்பதில் இழப்பு வரும். உடன்பிறந்தவர்கள் அதிருப்தி அடைவார்கள். வாகன விபத்துக் ஏற்படக்கூடும். இரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். கமிசன், புரோக்கரேஜ் மூலம் திடீர் பணவரவு உண்டு.

பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கொஞ்சம் கண் காணியுங்கள். நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொடுங்கள். மகனின் கல்வி, வேலை விசயமாக பிரபலங்களின் உதவி நாடி அலைந்தீர்களே! ஒரு பயனும் இல்லையே! ஆனால் இப்பொழுது நல்ல நிறுவனதிலிருந்து வாய்ப்புகள் வரும். ஆன்மீகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் விற்க வேண்டி வரும். பாகப்பிரிவினையில் சிக்கல்கள் வரக்கூடும்.

தாய்மாமன், அத்தை வகையில் பகைமை வெடிக்கும். கலை, இசை இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வேற்று மொழியினாரால் ஆதாயம் உண்டு. கன்னிப்பெண்களே! தள்ளிப் போய்கொண்டிருந்த திருமணம் இனி கூடி வரும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பீர்கள். உயர்கல்வியில் தேர்ச்சியடைவீர்கள். மாணவர்களே! வகுப்பாசியர் பாராட்டுவார். தேர்வில் மதிப்பெண்களை குவிப்பீர்கள். கவிதை, ஓவியம், இசைப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். அரசியல்வாதிகள் எதிர் கட்சியினரை விமர்சித்து பேசவேண்டாம். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அண்டை அயலாருடன் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

Edited by கறுப்பி, 01 December 2012 - 04:41 PM.

kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#3 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,695 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 01 December 2012 - 04:47 PM

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: கடகம்
சொன்ன சொல் தவறாதவர்களே! சாயாகிரகங்களான இந்த ராகுவும், கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து எல்லோரையும் பகையாளியாக்கி பாடாய் படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார். ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் முரட்டுக் குணம் விலகும். இனி உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். அவர்களின் ஆழ்மனதில் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவருவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். இனி மன நிம்மதியை தருவார். பக்குவமாய் பேசி தடைபட்ட காரியங்களையெல்லாம் முடிப்பீர்கள். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் வெடித்ததே! இனி சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த திருமணம் நல்ல விதத்தில் முடியும்.

பலரை நல்லவர்கள் என நம்பி ஏமாந்தீர்களே! இனி தரம் பார்த்து பழகுவீர்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்தவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். விலகிப் போன உறவினர்கள், நண்பர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு ரத்த அழுத்தம், நரம்புக் கோளாறு வரும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். வாகனம் விபத்துக்குள்ளாகும். தலைகவசம், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்க வேண்டாம். வீட்டு பத்திரத்தை அடமானம் வைக்க வேண்டியது வரும்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

சஷ்டம-பாக்யாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் இழுபறியான வேலைகள் உடனே முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் இக்காலகட்டத்தில் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். சின்ன சின்ன விபத்துகள் வந்து போகும். சாலையை கடக்கும் போது கவனம் தேவை. இலவசமாக சில கூடா பழக்கங்கள் உங்களை நெருங்கக்கூடும். புதிய நண்பர்களுடன் கவனமாக இருங்கள். வீடு மாற வேண்டியது வரும்.

உங்களின் பூர்வபுண்ணியாதியும்-தசம ஸ்தானாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். சொத்து வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு. வழக்கு சாதகமாகும்.

சகோதர, சகோதரிகளால் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். இளைய சகோதரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் செய்யுங்கள். கர்ப்பிணிப்பெண்களே! நெடுந்தூர பயணங்கள் வேண்டாமே! லேசாக தலைச்சுற்றல் வரும் என்பதால் மாடிப்படி ஏறி இறங்கும்போது கவனம் தேவை. கன்னிப் பெண்கள் தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வார்கள். காதல் விவகாரத்தில் பெற்றோருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. மாணவர்களுக்கு மறதி, மந்தம் நீங்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூல் செய்யுங்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உணவு, சிமெண்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப்பாருங்கள். உத்‌தியோகத்தில் யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சகஊழியர்களையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். கணினி துறையிலிருப்பவர்களுக்கு அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: சிம்மம்

சோர்ந்து வருபவர்களுக்கு தோல் கொடுப்பவர்களே! உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும், கேதுவும் சேர்ந்து என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், தாயாருடன் மனக்கசப்பையும், வீண் விவாதங்களையும், உடல்நலக்குறைவுகளைவும் கொடுத்து வந்த ராகுபகவான், இப்பொழுது ராசிக்கு 3-ம் வீட்டிற்கு வந்தமருவதால் எதிலும் வெற்றியுண்டாகும். தடைகள் யாவும் நீங்கும். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் ஈகோவால் இருந்த இடைவெளி குறையும். தாம்பத்யம் இனிக்கும்.

நெடுநாளாக வாங்க நினைத்திருந்த நவீன மின்னணு, மின்சார சாதனங்களை வாங்குவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். விரைந்து முடித்து கிரகபிரவேசம் செய்வீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். குழந்தை பாக்‌கியம் கிட்டும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு தள்ளிப் போய் கொண்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு கூடி வரும்.

சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வி.ஐ.பிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என உங்களின் நட்பு வட்டம் இனி விரியும். தாயாருக்கு இருந்து வந்த சர்க்கரை நோய், மூட்டுவலி எல்லாம் குறையும். சோர்ந்த முகம் மலரும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பெரிய நோய் இருக்குமோ என்ற பயம், கனவுத் தொல்லை, தூக்கமின்மை எல்லாம் நீங்கும். இளைய சகோதர வகையில் சில நேரங்களில் மனஸ்தாபங்கள் வந்தாலும் பாசம் குறையாது.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும்-அட்டமாதிபதியுமான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் அடிமனதிலிருந்த பயம், கவலை விலகும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். நிரந்தர வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதுரக வாகனம் வாங்குவீர்கள். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு திருமணம் முடியும்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் ஆதாயமுண்டு. புது முதலீடு செய்து வியாபாரம் தொடங்குவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய பிரச்சனைகள் தீரும்.

உங்கள் சுகாதிபதியும்-பாக்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் குடும்ப வருமானம் உயரும். பழைய சொத்து வந்து சேரும். மீதிப்பணம் தந்து சொத்தை கிரையம் செய்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோக, திருமண முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். புதிய பொறுப்புகள், பதவிகள் வரும்.

வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் ஒருபடி உயரும். வராது என்றிருந்த பணமெல்லாம் வந்து சேரும். இதுவரை தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த அலைச்சல்களும், செலவுகளும் நீங்கும். பேச்சில் தெளிவு பிறக்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீட்டில் பழுதான எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் சாதனங்களை மாற்றிவிட்டு புதுரக சாதனங்களை வாங்குவீர்கள். கன்னிப் பெண்களின் காதல் கனியும். பாதியிலேயே விட்ட படிப்பை மீண்டும் தொடர்வீர்கள். தோல் அலர்ஜி, இரத்தசோகை நீங்கும். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தவிர்ப்பது நல்லது. தலைமை உங்களுக்கு முக்கியத்துவம் தரும்.

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: கன்னி

மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்பவர்களே! உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும், மன தைரியத்தையும், பெரிய மனிதர்களின் நட்பையும் கொடுத்துவந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி தவிர்க்க முடியாத செலவுகளும் அடுத்தடுத்து வரும். சில வேலைகள் தடைபட்டு முடியும். வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டுப் பேசாதீர்கள். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் அதை வேறுவிதமாக சிலர் புரிந்துக் கொள்வார்கள். எனவே பேச்சில் கவனம் தேவை. உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க வேண்டியது வரும்.

கண், காது, பல் வலி அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பாக மற்றொரு மருத்துவரின் கருத்தையும் கேட்டறிந்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் எப்போதும் பிரச்சனை இருப்பது போல தோன்றும். அவ்வப்போது தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள். திடீர் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வரவேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். இளைய சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். சகோதரியின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். உங்களிடம் கடன் வாங்கிய ஏமாற்றியவர்கள் இனி திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்கள் வெகுநாட்களுக்குப் பிறகு உங்களை நாடி வருவார்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சுக-சப்தமாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் தள்ளிப்போன திருமணம் கூடி வரும். ஓரளவு பணம் வரும். கல்யாணம், கிரகபிரவேசம் என வீடு களை கட்டும். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் சொந்த ஊரை விட்டு இடம்பெயர்வீர்கள். கூட்டுத்தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். உத்யோகத்திலும் செல்வாக்கு கூடும்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் ஆரோக்யம் பாதிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கூடா பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். பார்வைக் கோளாறு வந்துபோகும். கடனை நினைத்து சில நேரங்களில் அஞ்சுவீர்கள்.

உங்கள் திருதிய-அஷ்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் நிலம், வீடு வாங்குவது விற்பதில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். நெருப்பு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.

பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகள் திருமணத்தை எப்படி நடத்தி முடிக்கப் போறோமோ என்று நினைத்து வருந்துனீர்களே! இனி கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். நீங்கள் விரும்பியபடி வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் வந்தமையும். மகனின் உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அவ்வப்போது வரும் திடீர் பயணங்களால் லேசாக உடல்நிலை பாதிக்கும். உறவினர்கள் சிலர் உங்களிடம் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. 2-ம் வீட்டில் ராகு நிற்பதால் வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேசவேண்டாம். இடம்பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது.

பத்திரங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு பல முறை படித்துப் பாருங்கள். யாருக்கவும் ஜாமீன் கையெழுத்திடவேண்டாம். வழக்குகளில் இழுபறியான நிலை ஏற்படும். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். கன்னிப்பெண்கள் அலட்சியம், சோம்பல், பயம் இவற்றிலிருந்து விடுபடுவார்கள். தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணமும் சிறப்பாக நடந்து முடியும். தவறானவர்களின் நட்பை ஒதுக்கிவிடுங்கள். விலையுயர்ந்த தங்க நகைகளை கவனமாக கையாளுங்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள்.
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#4 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,695 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 01 December 2012 - 04:55 PM

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: துலாம்
தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுபவர்களே! உங்களுக்கு இராகுவும், கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் உங்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்த ராகு ஏடாகூடமாய் பேச வைத்து எல்லாவற்றிலும் சிக்க வைத்தார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகளால் சேமிப்புகளையும் கரைய வைத்தார். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை குறைத்தார். இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் ஓரளவு பிரச்சனைகள் குறையும். இனி இடம், பொருள் ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள். செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள்.

கௌரவச் செலவுகளையும் குறைப்பீர்கள். பணவரவும் அதிகரிக்கும். அவசர தேவைக்கு வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். ஆனால் ராசிக்குள் ராகு அமர்வதால் ஆரோக்யத்தில் இனி நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியது வரும். உங்கள் ராசிக்குள்ளேயே ஏற்கனவே சனிபகவானும் அமர்ந்து கொண்டிருப்பதால் நீரிழிவு நோய், யூரினரி இன்ஃபெக்சன், ஹார்மோன் கோளாறு மற்றும் தலை, தோள்பட்டையில் வலி வந்து போகும். மருத்துவரின் ஆலோசனையின்படி நடந்து கொள்ளுங்கள்.

போலி மருத்துவரிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். முன்கோபம் அதிகரிக்கும். சின்ன சின்ன வேலைகள் கூட சிக்கலாகி முடியும். என்றாலும் உங்கள் ராசிநாதனான சுக்ரனுக்கு ராகு நட்பு கிரகமாக வருவதால் அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் நூலிழையில் காப்பாற்றப்படுவீர்கள். தண்ணீரை காய்ச்சி குடிக்கவும். வாகன விபத்துகள் நிகழக்கூடும். டென்ஷாக இருக்கும் நாட்களில் வாகனத்தை இயக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் கண்காணியுங்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் திருதிய-சஷ்டமாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் தடைகள் நீங்கும். ஓரளவு பணமும் வரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏமாற்றங்கள், இழப்புகளை சந்திக்க வேண்டியது வரும். வழக்கை சுமுகமாக முடிக்க முயற்சிப்பீர்கள். சிலர் வீடு மாற வேண்டியது வரும். நண்பர், உறவினர்களின் வீட்டு விசேஷங்களை எடுத்து செய்வீர்கள். இளைய சகோதரர் வகையில் அலைச்சல் இருக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு மாற்றுவீர்கள்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்கள் இக்காலகட்டத்தில் புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பிரிவு, விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதி சென்று வருவது நல்லது. வாகனம் வாங்குவீர்கள். பணவரவும் உண்டு. திருமணம் கூடி வரும்.

உங்கள் தன-சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். சொத்துப் பிரச்சனையை தீர்க்க புது வழி கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் உதவுவார்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். வீடு கட்டும் முயற்சி பலிதாகும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மனைவிக்கு ரத்த சம்பந்தப்பட்ட நோய் வந்து போகும்.

ராசியில் நிற்கும் ராகு சலிப்பை உண்டாக்குவார். உறவினர்களில் சிலர் உங்களின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்வார்கள். வீண்பகை, மனக்கசப்புகள் வரும். குழந்தை பாக்யம் உண்டாகும். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நேரம் கடந்து சாப்பிட வேண்டாம். சாட்சிக் கையெழுத்துப் போட்டு பலமுறை சிக்கிக்கொண்ட அனுபவம் உங்களுக்கு உண்டு. இனிமேல் ரொம்ப தெரிந்தவாராக இருந்தாலும், அவருக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

சாலைகளில் வாகனத்தை இயக்கும்போது விதிமுறைகளை மீற வேண்டாம். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். கன்னிப்பெண்கள் பெற்றோருடன் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுவது நல்லது. தடைபட்ட கல்யாணம் முடியும். மாணவ-மாணவியர்களுக்கு நினைவாற்றல் கூடும். வகுப்பறையில் முன்வரிசையில் வந்து அமருங்கள். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும். கெட்ட நண்பர்களை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகள் தலைமையைப் பற்றி குறை கூறவேண்டாம். வீண் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: விருச்சிகம்
கனிவான இதயம் இருந்தாலும் கறாராகப் பேசுபவர்களே! உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்து உங்களை வெடித்து சிதற வைத்தார் ராகு பகவான். ஒருநாள் சிரித்தால், மூன்று நாள் அழ வைத்தார். தலை வலி, முதுகு வலி, கால் வலி என சதா சர்வகாலமும் புலம்பித் தவிக்க வைத்தார். எப்போதும் பிரச்னையிலேயே மூழ்கி கிடந்தீர்களே! ராகுபகவான் இப்பொழுது ராசிக்கு பனிரெண்டாம் வீட்டிற்கு வந்தமர்வதால் நோய் நீங்கும். அழகு, இளமைக் கூடும். இனி எப்போதுமே முகத்தில் சந்தோஷம் பொங்கும். மற்றவர்களின் பிரச்சனைகளை கையிலெடுத்து நீங்கள் சிக்கலில் சிக்கித்தவித்தீர்களே! அந்த தர்மசங்கடமான நிலையிலிருந்து விடுபடுவீர்கள். பார்த்தும் பார்க்காமல் போனவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும்.

குடும்பத்தில் எப்போதும் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியதே இனி மகிழ்ச்சிப் பொங்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்பார்கள். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வர வேண்டிய பணம் தாமதம் இல்லாமல் வரும். வீட்டில் சுபகாரியங்கள் தடைபட்டுக் கொண்டிருந்ததே! இனி அடுத்தடுத்து கல்யாணம், காது குத்து என நல்லதெல்லாம் நடந்துக் கொண்டேயிருக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் வெகுநாட்களுக்குப் பிறகு உங்களை தேடி வருவார்கள். ஆன்மீகவாதிகளின் ஆசி கிட்டும். வெளிநாட்டு பயணம் திருப்திகரமாக அமையும். புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அலர்ஜி, தோலில் இருந்த நமைச்சல் நீங்கும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கைக்கு கிடைக்கும்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தன-பூர்வபுண்யாதிபதியான விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள்-. ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். மழலை பாக்யம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை ராகுபகவான் செல்வதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்-. பூர்வீக சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். திடீர் யோகம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். சகோதரங்கள் மனம் விட்டு பேசுவார்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

பிள்ளைகளிடம் வெறுப்பாக பேசாமல் இனி பாசமாக பழகுவீர்கள். அவர்களை உயர்கல்வி, உத்யோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உங்களின் உண்மையான பாசத்தை உடன்பிறந்தவர்கள் இனி உணர்வார்கள். வழக்குகளில் இனி வாய்தா இல்லை, தீர்ப்பு சாதகமாகும். தந்தையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். தாயின் உடல்நிலை சீராகும். குலதெய்வக் கோவிலை எடுத்துக் கட்டுவீர்கள். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். என்றாலும் சின்ன சின்ன விபத்துகள் வரக்கூடும். இயக்கம், சங்கம், டிரஸ்ட் இவற்றிலெல்லாம் கௌரவப் பதவிகள் தேடி வரும். கன்னிப்பெண்களின் மனம் தெளிவாகும். வேலைக் கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். விளையாட்டில் பதக்கம் உண்டு. அரசியல்வாதிகள் தன் பலத்தை நிரூபித்துக் காட்டி தலைமையிடத்தில் நல்ல பெயரெடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அன்பாக பேசுகிறார்கள் என்று குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். விலகிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேர்வார்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். பங்குதாரர்களிடையே நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மாறும். ஏற்றுமதி-இறக்குமதியால் அதிக லாபம் வரும். அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: தனுசு
மனதிற்குள் தோன்றுவதை மறைக்காமல் பேசுபவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் என்ன மாற்றத்தைத் தருவார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்காக பல பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் தந்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் தன்னம்பிக்கையையும், பணவரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். கலகம், கலாட்டாவாக இருந்த குடும்பத்தில் இனி அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் வெடித்ததே! அந்த நிலை மாறும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்‌கியம் கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள்.

பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குல தெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். விழாக்களில் முதல்மரியாதை கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்சனைகள் தீரும். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி உற்சாகமாய் கலந்து கொள்வீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. தூக்கமில்லாமலும், நிம்மதியில்லாமலும், உடலாலும், மனதாலும் நொந்து போயிருந்த நீங்கள் இனி ஆரோக்யமாகவும் அழகாகவும் இருப்பீர்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும்-சுகாதிபதியுமான விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். லோன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தள்ளிப் போன திருமணம் முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் இருந்த மோதல்கள் விலகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை ராகுபகவான் செல்வதால் வழக்கில் வெற்றி உண்டு. சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மூத்த சகோதரர் உதவுவார். ஷேர் மூலம் பணம் வரும்.

விரையாதிபதியும்-பூர்வபுண்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். பழைய கடன் பிரச்னை ஒன்று தீரும். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.

11-ல் ராகு இருப்பதால் அரைகுறையாக நின்று போன பல வேலைகள் உடனே முடியும். வழக்குகள் விரைந்து முடியும். வீட்டில் சமையலை, குளியலறையை நவீனமாக்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களில் சிலர் எதிரியாக மாறி, ஏகப்பட்ட தொல்லைகள் தந்தார்களே! அவர்களெல்லாம் இனி பணிந்து வருவார்கள். குலதெய்வத்திடம் குழந்தைக்காக வேண்டிய பிராத்தனையை இன்னும் நிறைவேற்றவில்லையே! உடனடியாக குடும்பத்துடன் பிராத்தனையை நிறைவேற்றுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல், சமயோஜித புத்தியுடன் இனி செயல்படுவீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெறுவார்கள். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் தலைமையிடம் கொண்டு செல்வது நல்லது.
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#5 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,695 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 01 December 2012 - 05:01 PM

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: மகரம்
எதிரிக்கும் உதவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களே! உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பொருள் வரவு, உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு, பிரச்சனைகளை சமாளிக்கும் மன தைரியத்தையும் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமருகிறார். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவிற்கு பணவரவு உண்டு. ஆடம்பரமான பொருட்கள் வீடு வந்து சேரும். இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார்.

உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். உங்களின் நல்ல மனசை புரிந்து கொண்டு சிலர் உங்களுக்கு உதவுவார்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வத்தை மறக்காதீர்கள். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகளின் நட்பு கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் திருதிய ஸ்தானாதிபதியும்-விரையாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் தயக்கம், தடுமாற்றம் நீங்கி தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். தூக்கமின்மை, திடீர் பயணங்கள், சுபச் செலவுகள் வந்துப் போகும்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் உத்யோகத்தில் இடமாற்றம், வேலைச்சுமை இருக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல் சோர்வு, தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்துச் செல்லும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். நெருங்கிய நண்பர், உறவினரின் இழப்பு ஏற்படும்.

சுக-லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் தாயாருக்கு இரத்த அழுத்தம், முதுகு, மூட்டு வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்மாமன், அத்தை வகையில் மனஸ்தாபங்கள் வந்துச் செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். என்றாலும் பணவரவு உண்டு. புது வேலைக் கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள்.

ராகு 10-ல் வருவதால் வெளிவட்டாரத்தில் வி.ஐ.பிகள், கல்வியாளர்கள் அறிமுகமாவார்கள். படபடப்பு, டென்ஷன் விலகும். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். பழைய நண்பர்களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான பிரிஜ், ஏசி வாங்குவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். கன்னிப்பெண்களே! விரக்தி, சோம்பலில் இருந்து மீள்வீர்கள். காதல் கனியும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு கிட்டும். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துப் போவது நல்லது.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் தான் லாபம் கிடைக்கும். தள்ளுபடி விற்பனை மூலம் பழைய சரக்குகளை விற்று முடிப்பீர்கள். பாக்கிகளும் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவும் பெருகும். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ராகு 10-ம் வீட்டிற்கு வருவதால் உத்யோகத்தில் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரும். முக்கிய ஆவணங்களை கையாளும் போது கவனம் தேவை. திடீர் இடமாற்றம் உண்டு. வேலைசுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். கணினி துறையினர்களுக்கு சம்பள உயர்வுடன் பதவியுயர்வும் கிட்டும். கலைஞர்களின் திறமைக்கு பரிசு, பாரட்டு கிட்டும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கதவை தட்டும்.

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: கும்பம்
விழுவதெல்லாம் எழுவதற்கே என நினைப்பவர்களே! உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஒரு வேலையையும் முழுமையாக பார்க்க விடாமல் தடுத்த ராகுபவான் இப்பொழுது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்கிறார். முடியாது என்றிருந்த பல காரியங்களை இனி முடித்துக்காட்டுவீர்கள். பதுங்கியிருந்த நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். குடும்பத்தினருடன் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் என்று சங்கடத்திற்கு ஆளானீர்களே! இனிமேல் உங்களின் ஆலோசனையின்றி ஒன்றும்செய்யமாட்டார்கள்.

கணவன்-மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். குழந்தை இல்லாமல் கோவில், குளமென்றும் என்று சுற்றிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். எவ்வளவோ உழைத்தும் கையில் ஒரு காசு கூட தங்கவில்லையே என வருந்தினீர்களே! இனி நாலுகாசு தங்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அவ்வப்போது தூக்கம் வராமல் அவதிபட்டீர்களே! அந்த நிலை மாறும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தன-லாபாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் கல்யாணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் என வீடு களைக்கட்டும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பதவிகள் தேடி வரும்-. வேலைக் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். புது சொத்து வாங்குவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். சொந்த-பந்தங்கள் மெச்சுவார்கள்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள், செலவினங்கள், இனந்தெரியாத கவலைகள், கனவுத் தொல்லை வந்துச் செல்லும். உடம்பில் இரும்புச் சத்து குறையும். பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள்.

சேவகாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் ஒருவித பயம், படபடப்பு வந்துச் செல்லும். உடன்பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கவலைப்படுவீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.

ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் அப்பாவுக்கு ஆரோக்யம் குறையும். சிலநேரங்களில் அவருடன் கருத்துவேறுபாடுகள் வரும். பேச்சை குறைத்து சண்டைய குறையுங்கள். பூர்வீக சொத்தை விற்று வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். நினைத்தபடி திருமணம் முடியும். பாதியிலேயே விட்ட கல்வியை தொடர்வீர்கள். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். விளையாட்டுப் போட்டியில் பரிசு, பாராட்டு கிட்டும். அரசியல்வாதிகள் சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எனினும் மற்றவர்களை விமர்சித்து பேசவேண்டாம்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை சலுகைகள் மூலம் விற்றுத்தீர்ப்பீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். இரும்பு, பருத்தி, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ரசாயன வகைகள் மூலம் ஆதாயமடைவீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். 10-ம் வீட்டில் இதுவரை ராகு நின்றுகொண்டு உத்யோகத்தில் வீண்பழியையும், வேலைச்சுமையையும் கொடுத்தாறே, இனி 9-ல் நுழைவதால் அந்த நிலை மாறும்.

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: மீனம்!
பரந்த அறிவு கொண்டவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள். என்பதை பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான் இப்பொழுது எட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல் பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். திக்குமுக்காடிக் கொண்டிந்த நீங்கள் இனி திசையறிந்து பயணிப்பீர்கள். தடைபட்ட காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த தந்தையின் உடல் நலம் சீராகும்.

தந்தைவழி சொத்தில் இருந்த சிக்கல் தீரும். ஆனால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உங்களை சிலர் குறைத்து மதிப்பீடார்களே! இப்பொழுது அவர்கள் ஆச்சர்யப்படும்படி பல விதங்களில் சாதிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ராகு 8-ல் அமர்வதால் மனைவிக்கு மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்துநீங்கும். கொஞ்சம் பாசமாக நடந்து கொள்ளுங்கள். சிலரின் ஆலோசனையை கேட்டு தவறான பாதையில் சென்று பலவிதங்களிலும் சிக்கித்தவித்தீர்களே, இனி நேர்பாதையில் பயணிப்பீர்கள்.

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் தோற்றப் பொலிவுக் கூடும். பணம் வரும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். என்றாலும் அலைச்சல், செலவுகள், வாகன விபத்துகள், மறைமுக விமர்சனங்கள் வந்துச் செல்லும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம் உண்டு.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் எளிதாக முடிய விஷங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக் கூடும். எவ்வளவு தான் உழைத்தாலும் கெட்ட பெயர் தான் மிஞ்சிகிறது என்றெல்லாம் அலுத்துக் கொள்வீர்கள். யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பித்தத்தால் தலைச்சுற்றல், வயிற்று வலி, வலிப்பு வந்துச் செல்லும்.

உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதரி உங்களைப் புரிந்துக் கொள்வார். சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். தந்தையின் ஆரோக்யம் சீராகும். பேச்சால் பிரச்னை, சிறுசிறு நெருப்பு காயங்கள், பிறர் மீது நம்பிக்கையின்மை, பிதுர்வழி சொத்துப் பிரச்னை, பகை, ஏமாற்றம் வந்துப் போகும்.

பிள்ளைகளின் பழக்க வழக்கங்களைக் கண்டு வருந்தினீர்களே! இனி வருந்தவேண்டாம். குடும்ப சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வார்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள். மகளுக்கு நல்ல மாப்பிள்ளை வந்தமைவார். புது வீடு மாறுவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை சிலர் விமர்சனம் செய்வார்கள். கவலை வேண்டாம். அதனால் உங்கள் புகழ் கூடத்தான் செய்யும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளப்பாருங்கள். தங்க ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். வெளியூர் செல்லும்போது வீட்டை பாதுகாப்பாக பூட்டியிருக்கோமா என்று ஒருதடவைக்கு இருதடவை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உணவு விஷயங்களில் கொஞ்சம் கட்டுபாடு தேவை. முடிந்த வரையில் வறுத்த, பொறித்த உணவு வகைகளை தவிர்த்துவிடுங்கள். காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். திருமணம் தடைபட்டுப் போய்க் கிடந்த கன்னிப்பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் வந்துசேரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ-மாணவிகள், உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விடைகளையும் எழுதி பாருங்கள். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். விட்டுக் கொடுத்து போங்கள். அரசியல்வாதிகள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

http://tamil.webduni...121201048_1.htm
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#6 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,695 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 02 December 2012 - 01:56 PM


kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#7 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,695 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 02 December 2012 - 02:05 PM


kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#8 SUNDHAL

SUNDHAL

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 12,161 posts
 • Gender:Male
 • Location:Australia

Posted 02 December 2012 - 04:15 PM

கன்னி ராசிக்கு கூடாது போல......
:(
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#9 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,522 posts
 • Gender:Male

Posted 03 December 2012 - 02:12 AM

கன்னி ராசிக்கு கூடாது போல......
:(

 

 

 

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும், மன தைரியத்தையும், பெரிய மனிதர்களின் நட்பையும் கொடுத்துவந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி தவிர்க்க முடியாத செலவுகளும் அடுத்தடுத்து வரும். சில வேலைகள் தடைபட்டு முடியும். வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டுப் பேசாதீர்கள். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் அதை வேறுவிதமாக சிலர் புரிந்துக் கொள்வார்கள். எனவே பேச்சில் கவனம் தேவை.

கன்னி ராசிப்பலனைப்பாக்க, எனக்கே கண் கலங்குது! :huh:


Edited by புங்கையூரன், 03 December 2012 - 02:53 AM.

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#10 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,894 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 03 December 2012 - 05:20 AM

கன்னி ராசிப்பலனைப்பாக்க, எனக்கே கண் கலங்குது! :huh:


Edited by தமிழ் சிறி, 03 December 2012 - 05:21 AM.

Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#11 வந்தியதேவன்

வந்தியதேவன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,907 posts
 • Gender:Male
 • Interests:மாற்றங்கள்....

Posted 03 December 2012 - 08:28 AM

நல்ல காலம் பிறக்குது


மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல; எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது. - தமிழீழ தேசியத் தலைவர் 

 


#12 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,088 posts
 • Gender:Male
 • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
 • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 03 December 2012 - 12:43 PM

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: துலாம்
தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுபவர்களே! உங்களுக்கு இராகுவும், கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் உங்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்த ராகு ஏடாகூடமாய் பேச வைத்து எல்லாவற்றிலும் சிக்க வைத்தார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகளால் சேமிப்புகளையும் கரைய வைத்தார். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை குறைத்தார். இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் ஓரளவு பிரச்சனைகள் குறையும். இனி இடம், பொருள் ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள். செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள்.

கௌரவச் செலவுகளையும் குறைப்பீர்கள். பணவரவும் அதிகரிக்கும். அவசர தேவைக்கு வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். ஆனால் ராசிக்குள் ராகு அமர்வதால் ஆரோக்யத்தில் இனி நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியது வரும். உங்கள் ராசிக்குள்ளேயே ஏற்கனவே சனிபகவானும் அமர்ந்து கொண்டிருப்பதால் நீரிழிவு நோய், யூரினரி இன்ஃபெக்சன், ஹார்மோன் கோளாறு மற்றும் தலை, தோள்பட்டையில் வலி வந்து போகும். மருத்துவரின் ஆலோசனையின்படி நடந்து கொள்ளுங்கள்


தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும். 

                      

         யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]