Jump to content

பான் கீ மூன் - மஹிந்த கூட்டறிக்கைக்கு என்ன நடந்தது?


Recommended Posts

[size=4]ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து வெளியிட்ட ஐ.நா - இலங்கை அதிகாரப்பூர்வ கூட்டறிக்கையில், பதின்மூன்றாம் திருத்தத்தை அமுலாக்குவதாகவும், தமிழ் கட்சிகள் உட்பட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதின்மூன்றாம் திருத்தத்தை மேலும் அபிவிருத்தி செய்வதாகவும் மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கை மூலம் உலக பொது மன்றத்தின் பொது செயலாளருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நடந்தது? இன்று இதை அமுல் செய்து, பதின்மூன்றுக்கு மேலே செல்லாமல், இருப்பதையும் பறித்து கொண்டால் அதற்கு யார் பொறுப்பு? ஐ.நா சபையா? இலங்கை அரசாங்கமா?' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போண்து அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'2009, மே 19ஆம் திகதி கோரப்போரின் நிறைவை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அறிவித்தார். அதன்போது நானும் சபையில் இருந்தேன். அதையடுத்து இலங்கைக்கு அவசர விஜயம் செய்த ஐ.நா செயலர் பான் கீ மூன், போர் நடந்த பகுதிகளை பார்வையிட்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர் ஊர் திரும்ப முன் 2009 மே 26ஆம் திகதி இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அத்துடன், இந்திய பிரதமருக்கு உறுதி அளித்தார், இந்திய ஊடகங்களுக்கு சொன்னார், தமிழ் தலைவர்களுக்கு சத்தியம் செய்தார் என்பதை எல்லாம் விடுங்களேன். உலகத்தின் அதி உயர் மாமன்றமான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில்தான், ஜானாதிபதி இதை சொல்லியுள்ளார். இந்நிலையில், இங்கே வந்து நீங்கள் பதின்மூன்றும் இல்லை, ஒன்றும் இல்லை என கூச்சல் எழுப்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

அரசியல் அமைப்பின் அங்கமான பதின்மூன்றாம் திருத்தம், இதே அரசியலமைப்புக்கு முரணானது என்று சொல்கிறீர்கள். அப்படியானால், இதை உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லுங்கள். விமல் வீரவன்ச இது தொடர்பில் உயர் நீதிமன்றம் செல்வேன் என்று சொல்லி விட்டு பின் ஏன் பின்வாங்கினார்.

திவிநேகும சட்டமூலத்துக்கு நீதிமன்றம் சென்றதைப்போல, இதற்கும் நாம் தயாராகத்தான் இருந்தோம். நீங்கள் ஏன் நீதிமன்றத்துக்கு போகவில்லை? நீங்கள் இது தொடர்பில் வழக்குகள் போடுவீர்களானால் உங்கள் அரசாங்கத்துக்குத்தான் அரசியல் நெருக்கடிகள் அதிகரிக்கும். முடிந்தால் அதை செய்யுங்கள்.

இந்த திருத்தம் இந்தியாவின் அழுத்தத்தால், அவசர, அவசரமாக கொண்டுவரப்பட்டது என சொல்கிறீர்கள். அழுத்தம் ஏற்பட நீங்கள் தமிழர்களை நடத்திய விதம்தான் காரணம். இன்றும் அதேதான் காரணம். இனிமேலும் அதுதான் நடக்கும். ஆனால், பதின்மூன்றும், மாகாணசபைகளும் அவசர, அவசரமாக கொண்டு வரப்பட்டன என சொல்லாதீர்கள். அது தவறு.

திம்பு பேச்சுவார்த்தை, பெங்களுர் பேச்சுவார்த்தை, உள்நாட்டில் அரசு-அன்றைய தமிழர் விடுதலை கூட்டணி பேச்சுவார்த்தைகள் என நடைபெற்றுதான் இந்த திருத்தம் அரசியலமைப்புக்குள் இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து உங்களுக்கு மொழி, மதம், கலை, கலாச்சாரம் எல்லாம் வந்தது. அன்று விஜயனில் இருந்து இன்று ஷாருக்கான் வரை எல்லாம் இந்தியாத்தான். ஆனால், அங்கு நிலவுகின்ற மொழிவாரி மாநில ஆட்சிமுறையிலான அதிகாரப்பிரிவினை மாத்திரம் வேண்டாம். நல்ல கதை இது.

அன்று 1987ல் இந்திய பிரதமர் ராஜீவ், ஜே.ஆர்.ஜெயவர்தனவை மிரட்டி பணியவைத்து பதின்மூன்றாம் திருத்தத்தை கொண்டு வந்தார் எனவும், அதேபோல் 2009இல், ஐ.நா செயலாளர் பான் கீ மூனும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழுத்தம் கொடுத்து பணிய வைத்து இந்த கூட்டறிக்கையை வெளியிட வைத்தார் எனவும், எனக்கு முன் பேசிய ஜாதிக ஹெல உறுமயவின் நண்பர் நிஷாந்த வணசிங்க சொல்கிறார்.

இது உங்களது வழமையான பல்லவி. ஆனால், இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கம் இல்லையா? இந்த நாட்டில், சிங்கள பௌத்த சகோதர இனத்து மக்களை தவிர வேறு எவரும் வாழமுடியாது என்றும், வாழ்ந்தால் அடிபணிந்துதான் வாழ வேண்டும் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள்.

அதனால்தான், எந்தவித அதிகாரபிரிவினையையும் எதிர்க்கிறீர்கள். அதிகாரப்பிரிவினை என்ற கொள்கையை, இந்த நாட்டுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிமுகப்படுத்தவில்லை. 1987இல் ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்தவில்லை. அது 1940 களிலேயே கண்டிய சிங்கள தலைவர்களினாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகாரப் பிரிவினையின் மூலமாக நாட்டுப்பிரிவினையை தவிர்ப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் நாம் செயல்படுகிறோம். அதன்மூலம், சிங்கள, தமிழ், முஸ்லிம், பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களை ஒன்று சேர்ப்போம்.

உலக சூழல் மாறி வருகிறது. உலகத்துக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு நீங்கள் இனிமேலும் தப்ப முடியாது. 2009 மே 26ஆம் கொழும்பில் வெளியிடப்பட்ட பான்கிமூன் - மந்த கூட்டறிக்கையையும், அதில் தெளிவாக சொல்லப்பட்ட 'பதின்மூன்று அமுலாக்கப்படும்' என்ற விடயத்தையும், 'தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதின்மூன்று மேலும் அபிவிருத்தி செய்யப்படும்' என்பதையும் நாம் எமது போராட்டத்தின் மையகருத்தாகவும், பேசுபொருளாகவும் உலகளவில் ஏற்படுத்துவோம்' என்றார். [/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53082-2012-11-20-07-51-40.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.