Jump to content


Orumanam
Photo

இலங்கையின் வட பகுதியை புயல் தாக்கக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்


 • Please log in to reply
5 replies to this topic

#1 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,663 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 29 October 2012 - 08:36 PM

இலங்கையின் வட பகுதியை புயல் தாக்கக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்
29 அக்டோபர் 2012

யாழ்.குடாநாடு மற்றும் முல்லைத்தீவுக்குட்பட்ட கரையோர பகுதிகளை இன்றிரவு புயல் தாக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.தற்போது முல்லைத்தீவு கரையிலிருந்து சுமார் நூறு கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ள மினி புயல் இன்று நள்ளிரவு முல்லைத்தீவு மற்றும் குடாநாட்டு கரைகளை தாண்டி செல்கையில் குறிப்பிடத்தக்க அபாயங்களை விளைவிக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக திருகோணமலையின குச்சவெளி முதல் வடமராட்சியின் முனை வரையான கரையோர கிராமங்களை அது கடக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கின் கரையோர கிராமங்களென பருத்தித்துறை முனை வரையான கரையோரப்பகுதிகளை சேர்ந்த மக்களை சுமார் 500 மீற்றர் தூரம் கடற்கரை பகுதிகளிலிருந்து இடம்பெயருமாறு அரச அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்றிரவு அறிவித்துள்ளது.இதையடுத்து இன்றிரவு தொடர்ச்சியாக கரையோரப்பகுதிகளினில் பதற்றமான நிலையே காணப்பட்டது.பரவலாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகள் மற்றும் தேவாலயங்களினில் தங்கியுள்ளனர்.குறிப்பாக தொடச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக வடமராட்சி கிழக்கினில் மக்கள் இடம்பெயர்ந்துள்ள எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக அண்மைக்காலங்களினில் மக்கள் மீள்குடியமர்ந்த அப்பிரதேசங்களினில் போதிய வீட்டு வசதிகள் ஏற்படுத்தப்படாமையினால் மக்கள் அடை மழை காரணமாக வெளியேறி தேவாலயங்கள் மற்றும் பாடசாலை கட்டிடங்களை அடைக்கலம் புகுந்துள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக குடாநாட்டின் பல பகுதிகளினிலும் மின் துண்டிப்பு அமுலில் இருந்தே வருகின்றது.அதே வேளை அபாய எச்சரிக்கையினையடுத்து மீனவர்கள் எவரும் இப்பகுதிகளினில் கடலுக்கு தொழிலுக்கு சென்றிருக்கவில்லை. தமது படகுகளை கடல் அலைகள் இழுத்து செல்லாதிருப்பதையுறுதிப்படுத்தும் வகையினில் அவற்றை நகர்த்தும் பணிகளிலும் மீனவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.


இலங்கையின் வட பகுதியை புயல் தாக்கக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்
29௰௨012 09.01

இலங்கையின் வட பகுதியை குறைந்தளவு வலுவுடைய புயல் காற்று தாக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவின் கிழக்கு பகுதியை இந்தப் புயல் தாக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை கடற்பரப்பு கடும் சீற்றத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் குச்சவெளி பிரதேசத்தில் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்;றப்பட்டுள்ளனர். குறித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டுள்ளனர். நாளை அதிகாலை 2 மணியளவில் இலங்கையை இந்தப் புயல் ஊடறுத்துச் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் குச்சவெளி கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வங்காள விரிகுடாவில் நிலவி வரும் அசாதாரண நிலைமை காரணமாகவே நாடு முழுவதிலும் கடுமை மழையுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், சொத்துக்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இடைவிடாது மழை பெய்து வருவதனால் சில பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

http://www.globaltam...IN/article.aspx
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

ninaivu-illam

#2 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,085 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 29 October 2012 - 09:59 PM

புயல் காட்டுக்குள் அநாதரவாக விடப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றது. எப்பவுமே மரத்தில் இருந்து வீழ்த்தப்பட்டவர்களைத் தான் மாடேறி மிதிக்கும் போல.

#3 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,085 posts
 • Gender:Male
 • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
 • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 29 October 2012 - 10:58 PM

புயல் காட்டுக்குள் அநாதரவாக விடப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றது. எப்பவுமே மரத்தில் இருந்து வீழ்த்தப்பட்டவர்களைத் தான் மாடேறி மிதிக்கும் போல.


இயற்கையும் எம் இனத்தை தான் எப்போதும் ஏறி மிதிக்க ...நினைக்கும் ..............என்ன சாபக்கேடோ ......

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும். 

                      

         


#4 ஆராவமுதன்

ஆராவமுதன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,494 posts
 • Gender:Male

Posted 30 October 2012 - 01:44 AM

வடக்கு - கிழக்கு கரையோரங்களில் கடுமையான காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது.

சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!! 


#5 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,663 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 30 October 2012 - 05:55 AM

வடக்கு,கிழக்கில் சூறாவளி அபாயம் ௲ நேற்றிரவு ஆயிரக்கணக்கான கரையோர மக்களை வெளியேற்றியது சிறிலங்கா அரசு.
சிறீலங்கா | ADMIN | OCTOBER 30, 2012 AT 08:43


சிறிலங்காவின் வடக்குப் பகுதி ஊடாக சிறியளவிலான சூறாவளி இன்று அதிகாலை கரையைக் கடக்கும் என்பதால், நேற்றிரவு அவசர அவசரமாக ஆயிரக்கணக்கான கரையோரப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர வேண்டுகோளை அடுத்து, குச்சவெளி தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோரப்பகுதி மக்கள் நேற்றிரவு 10.30 மணி தொடக்கம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
கரையோரத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையான பகுதிகளில் வசித்த மக்களே வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பொதுமக்களை வெளியேற்றும் இந்த அவசர நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம், காவல்துறை, மற்றும் தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

http://thaaitamil.com/?p=37010
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#6 கிருபன்

கிருபன்

  வலைப்போக்கன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,002 posts
 • Gender:Male
 • Location:முடிவிலி வளையம்
 • Interests:போஜனம், சயனம்

Posted 30 October 2012 - 08:52 AM

4ம்இணைப்பு - முல்லைத்தீவில் கடும் காற்றினால் பறந்தன தறப்பாள் குடிசைகள்30 அக்டோபர் 2012

முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களின் குடிசைகள் நேற்று பகல் வீசிய காற்றினால் தூக்கி வீசப்பட்டன. தங்குவதற்கு பொதுக் கட்டடங்கள் கூட இல்லாத நிலையில் அந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது.


இதேவேளை, கடலோரப் பகுதியில் சூறாவளி மற்றும் சுனாமி ஏற்படலாம் என இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இரவோடிரவாக மக்கள் இடம்பெயர்ந்து இரணைப்பாலை பற்றிமா தேவாலயம் மற்றும் இரணைப்பாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை என்பவற்றில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

புதுமாத்தளன், பழையமாத்தளன், அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களில் இருந்து நேற்று இரவு 9.30 மணிவரை 100 இற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைப்பாலைக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இந்தத் தகவலை இரணைப்பாலை பங்குத் தந்தை அருட்செல்வன் அடிகளார் உறுதிப்படுத்தினார். மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவளை முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்து 25 வரையான குடும்பங்கள் இடம் யெர்ந்து முள்ளிவாய்க்கால் அ.த.க. பாடசாலையில் தஞ்சம் புகுந்துந்துள்ளன.

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் தறப்பாள் கொட்டகைகள் பல தூக்கி வீசப்பட்ட நிலையிலேயே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 2 மணியிலிருந்து காற்று பலமாக வீசியதுடன் கடும் மழையும் பெய்துள்ளது. சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து வீசிய காற்றால் முள்ளிவாய்க்கால் அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், ஆனந்தபுரம், சிவநகர் போன்ற பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தறப்பாள் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மக்கள் இல்லிட நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளனர். இதேவேளை அந்தப் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்குவதற்கு பொது கட்டடங்கள் இல்லாத நிலையில் தொடர்ந்தும் அவர்கள் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி உள்ளது.

காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்தப் பகுதிகளில் மேலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய காற்றுடன் கூடிய மழை அவற்றின் சேதம் தொடர்பில் முல்லைத்தீவு அரச அதிபர் கூறுகையில், 'நேற்றுப் பிற்பகலில் இருந்து பலத்த காற்றுடன் கூடிய மழை காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி உள்ளோம்.

இதுவரைக்கும் மக்களுக்கு பலத்த சேதம் எதுவும் ஏற்பட்டதாக தரவுகள் இல்லை. காற்றுடன் மழை தொடர்வதால் சேத விவரம் குறித்து தற்போது கூறமுடியாது' என்றார்.

முல்லைத்தீவு கடலுக்குக் கிழக்காக 100 கிலோ மீற்றர் தொலைவில் புயல் மையங்கொண்டு நகர்ந்து வருவதால் அது கரையை எட்டும்போது சூறாவளி ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று மதியம் புயல் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் - வளிமண்டலவியல் திணைக்களம்


இன்று மதியம் புயல் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. முல்லைத்திவிற்கு கிழக்கே 100 கிலோ மீற்றர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயல் மேல் மற்றும் வடமேல் பகுதியாக நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறெனினும், புயல் அபாயம் இன்னமும் குறைவயவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வட, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய மலை நாடு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மழை வெள்ளம் காரணமாக நாடு முழுவதிலும் 100000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.


http://www.globaltam...IN/article.aspx

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]