Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .
Posted 29 October 2012 - 10:59 AM
சிறீலங்காவில் நாளொன்றுக்கு 40-50 பேர் பாரிசவாதம் காரணமாக உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகரில் நூறு பேருக்கு ஒருவர் என்ற கணக்கில் பாரிசவாத நோய்க்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது. அத்துடன் வைத்திய சாலைகளில் இடம்பெறுகின்ற மரணங்களுக்குத் துணைபுரியும் நான்காவது காரணியாக பாரிசவாதம் விளங்குகின்றது.
நாட்டில் பாரிசவாதத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு தசாப்தமும் இருமடங்குகள் அதிகரித்து வருவதாகவும்.
அதிலும் 25 சதவீதத்தினர் 65 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இந் நாட்டில் 15-59 வயதுக்கு இடைப்பட் டோரின் மரணத்திற்கு துணைபுரியும் காரணிகளில் பாரிசவாதம் 5 வது இடத்தில் உள்ளது என்பதும் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது.
உலகில் வருடத்திற்கு 15 மில்லியன் பேர் பாரிசவாதத்திற்கு உள்ளாவதுடன் இவர்களில் 6 மில்லியன் பேர் உயிரி ழக்கின்றனர். இம்மரணங்களில் 80 % வறிய மற்றும் வளர்முக நாடுகளிலேயே இடம்பெறுகின்றன என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் மதுப்பாவனை, புகை பிடித்தல் பாவனை தவிர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு உப்பு பாவனையைக் குறைப்ப துடன் மரக்கறி மற்றும் பழ வகைகளை அதிகளவில் உட்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளது.
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!!
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]