Jump to content


Orumanam
Photo

ஆற்றுப்படுத்தப்படாத முன்னாள் போராளிகளின் விகாரமாகும் மன நிலைகள் - கவனம் எடுப்பார்களா உரியவர்கள்


 • Please log in to reply
4 replies to this topic

#1 பிழம்பு

பிழம்பு

  கருடன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,783 posts
 • Gender:Male
 • Location:ஈர்பற்ற திசை
 • Interests:வாழ்தல்

Posted 26 October 2012 - 11:07 AM

காதலியுடன் தன்னை சேர்ச்து வைக்க கோரி துப்பாக்கியுடன் ஆர்ப்பாட்டத்தில் குதித்த இளைஞரொருவர் படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.வறணிப்பகுதியில் வறணி மகா வித்தியாலம் முன்பதாக நேற்றைய தினம் குறித்த நபர் கைகளில் துப்பாக்கியை ஏந்தியவாறு வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்த வண்ணமிருந்த வேளை படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அவர் கொடிகாமம் பொலிஸார் வசம் கையளிக்கப்பட்டிருந்தார்.பொதுமகனான குறித்த நபர் வசம் எவ்வாறு துப்பாக்கி வந்து சேர்ந்ததென்பது தொடர்பினில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பினில் மேலும் தெரியவருகையில் குறித்த இளைஞயன் யுவதியொருத்தியை காதலித்து வந்திருந்த நிலையில் யுவதியின் பெற்றோர் அதற்கு மறுத்து வந்திருந்தனர்.அத்துடன் குறித்த யுவதியினை மறைத்து வைத்தவாறு தகவல்களை வழங்கவும் மறுத்து வந்துள்ளனர்.இதனால் சீற்றமுற்ற குறித்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி சகிதம் யுவதியினது குடும்பத்தவர்களை அச்சுறுத்த முற்பட்டுள்ளார். அவ்வேளையிலேயே அவர்களை மிரட்ட துப்பாக்கியினால் வேட்டுக்களையும் அவர் தீர்த்துள்ளார்.

எனினும் நடுவீதியில் வைத்து துப்பாக்கியினால் ஆட்களை அவர் மிரட்ட முற்பட்ட வேளை அச்சமடைந்த பொதுமக்கள் படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.குறித்த நபர் விடுதலைப்புலிகளது முன்னாள் போராளியெனவும் அவர் பதுக்கி வைத்த துப்பாக்கியினாலேயே எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாகவும் பொலிஸ் தரப்பினால் கூறப்படுகின்றது.இதே வேளை அவரது மனநிலை தொடர்பில் வைத்திய நிபுணர்களது அறிக்கையினை பெற பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

ninaivu-illam

#2 எல்லாள மகாராஜா

எல்லாள மகாராஜா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 476 posts
 • Gender:Male
 • Location:அனுராதபுரம்
 • Interests:கலாய்ப்பதும் கடிப்பதும்

Posted 26 October 2012 - 01:22 PM

புலிகளின் பெயரில் மக்களின் பணத்தைச் சுருட்டி வைத்திருப்பவர்கள் இப்போதாவது இவர் போன்றவர்மீது இரக்கம் கொண்டு ஏதாவது செய்தால் நல்லது
முன்னால் செல்பவனை விட முழுதாய் ஓடி முடிப்பவனே வெற்றியாளன்

#3 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,116 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 26 October 2012 - 02:45 PM

போன வாரம் ஒரு தமிழ்புத்தக கடைக்கு போயிருந்தேன் .அங்கு ஒருவர் ஐயர் கணேசனின் "ஈழபோராட்டத்தில் எனது பதிவை" வாங்கிக்கொண்டு இருந்தார் .அண்மையில் தான் நாட்டில் இருந்து வந்தவர்போல் இருந்தார் .முப்பது வயது மதிக்கலாம் .
"என்ன ஐயரின் புத்தகம் வாங்குகின்றீர்கள் ,நாட்டில் இருந்து கிட்டடியில் தான் வந்தீர்களோ "என்று கேட்டேன் .
"நான் இடைக்கிடை வந்து போகின்றனான் .ஆரம்பத்தில் எமது போராட்டத்தில் என்ன நடந்தது என்று அறியும் ஆவல்தான் " என்றார் .
"இடைக்கிடை வந்து போவதென்றால் ஏதாவது வியாபாரம் செய்கின்றிர்களா என கேட்டேன் '
தான் ஒரு மருத்துவர்(physiatrist).கொன்பிரன்ஸ் இற்கு வந்து போவேன் என்றார் ,லண்டனுக்கும் அடிக்கடி போவதாகவும் சொன்னார் .இப்போ வவுனியா வைத்தியசாலையில் வேலை செய்வதாகவும் தான் முழு பிரச்சனை காலங்களிலும் வன்னியில்தான் இருந்ததாகவும் மக்கள் பட்ட சொல்லி மாளாது என்றார் .தனது ககைளில் மாத்திரம் பல குழந்தைகள் இறந்ததாக சொன்னார் .
தான் முழு முகாம்களுக்கும் சென்று வந்ததாகவும் இப்போதும் செல்வதாகவும் சொன்னார் .பல முன்னாள் புலி போராளிகளை சந்திப்பதாகவும் சொன்னார் .
அங்கு மக்கள் படும்பாடு நினைக்கவே முடியாதது,அங்கு எமது மக்கள் அப்படி ஒரு வாழ்க்கை வாழுகின்றார்கள் என்பதை புலம் பெயர்ந்தவர்கள் கொஞ்சம் கூட உணராமல் இருப்பது தமக்கு பெரும் வியப்பாக இருப்பதாக சொன்னார் .
இணுவிலை சேர்ந்தவர் கொக்குவில் இந்து கல்லூரியில் படித்தவர் .பெயரை எழுதாமல் விடுகின்றேன் .
 • nadodi likes this

#4 nadodi

nadodi

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 113 posts
 • Gender:Male
 • Location:Canada

Posted 26 October 2012 - 08:14 PM

மக்கள் படும் அவலங்களை 5-10 நிமிட ஆவண படமாக எடுத்து இங்கே உள்ள்ளவர்களுக்கு காட்ட வேணும். (இங்கே திரையரங்கில் படம் வெளியிடும் போது இதனை ஒரு trailor மூலம் காட்டலாம்).

புலம் பெயர்ந்த மக்களையும், வன்னியில் கஷ்டப்படும் மக்களையும் இணைக்க எதாவது செய்ய வேண்டும்.

#5 பிரபா

பிரபா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 161 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 26 October 2012 - 08:15 PM

"தான் ஒரு மருத்துவர்(physiatrist).கொன்பிரன்ஸ் இற்கு வந்து போவேன் என்றார் ,லண்டனுக்கும் அடிக்கடி போவதாகவும் சொன்னார் .இப்போ வவுனியா வைத்தியசாலையில் வேலை செய்வதாகவும்"
"இணுவிலை சேர்ந்தவர் கொக்குவில் இந்து கல்லூரியில் படித்தவர்"

>>பெயரை எழுதாமல் விடுகின்றேன்

இதுக்கு மேல் எழுத என்ன இருக்கு?
அன்புடன்,
பிரபா


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]