Jump to content

தேசிய பிரச்சினை தொடர்பில் தயா மாஸ்ட்டர்

Recommended Posts

[size=4] [/size]

[size=4]தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், அரசாங்கமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாகவே இறுதி தீர்வை எட்ட முடியும்.[/size]

[size=4] [/size]

[size=4]இந்த கருத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயாமாஸ்ட்டர் எனப்படும் தயாநிதி த ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.[/size]

[size=4] [/size]

[size=4]தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக இனி ஒன்றிணைய முடியாது.[/size]

[size=4] [/size]

[size=4]விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக முழுமையாக தோல்வியடைந்துள்ளது.[/size]

[size=4] [/size]

[size=4]எனினும் வெளிநாடுகளில் இருந்து அரசியல் ரீதியான அழுத்தங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.[/size]

http://www.hirunews.lk/tamil/46139

Link to comment
Share on other sites

தயாமாஸ்ட்டரின் இன்றைய அரசியல் நிலைபாடு பற்றி உறுதியாக எதுவும் தெரியாது. ஆனால் வன்னியில் இருந்தபோது மக்கள்மீதும் அறிஞர்கள் கலைஞர்கள் கல்விமான்கள்மீது மிகுந்த கரிசனையும் கருணையும் உள்ளவராக இருந்தார்.

வன்னிக்கு வருகைதரும் மேற்க்கு நாட்டவர்கள் பலரின் நன்மதிப்பு அவருக்கு இருந்தது. வே.பாலகுமாரனைப்போல வன்னியில் சந்தித்த/இருந்த ஒரிரு ராசதந்திரிகளில் அவரும் ஒருவர்.

வன்னிக்கு வெளியில் யாழ்ப்பானத்த்லோ வவுனியாவிலோ கொழும்பிலோ எனக்கு பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என கரிசனையாக இருந்தார். நந்தவனத்தோடான பிரச்சினையிலும் யாழ்ப்பானத்தில் எனக்கு சிக்கல் ஏற்பட்டபோதும் அவர் விரைந்து செயல்ப்பட்டதை இப்பவும் மறக்கவில்லை.

எங்கிருந்தாலும் வாழ்க.

Link to comment
Share on other sites

[size=5]தமிழீழ விடுதலைப் புலிகள் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்களையும், சுயநலவாதிகளையும், சந்தர்பவாத இடைத் தரகர்களையும், எதிரிகளையும், தமிழின விரோதிகளின் கைக்கூலிகளையும், எப்படி கண்ணியமாக நடத்தினார்கள் என்பதற்கு இங்கு சுயபுராணம் பாடும் சிலரின் கருத்துக்களே ஆதாரமாக உள்ளதைக் காணலாம்.

அவர்கள் கவுண்டமணி, செந்தில் போன்ற சில அரசியல் ஜோக்கர்களையும், தம்மைத் தாமே ஆலோசகர்களாக கருதிய அரசியல் அரை வேக்காடுகளையும் பெரிதாக கண்டு கொண்டதில்லை.

எல்லை மீறி புலிகளின் செயற்பாடுக்கு குறுக்கே நின்றவர்களுக்கு சில எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு, அதையும் மீறி துரோகம் செய்ய முற்பட்ட ஒருசிலர் மீது தற்பாதுகாப்புக்காக, தமிழினத்தின் நன்மைக்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.[/size]

Link to comment
Share on other sites

[size=5]இங்கு சுயபுராணம் பாடும் சிலரின் கருத்துக்களே ஆதாரமாக உள்ளதைக் காணலாம். - ஆரா அமுதன்[/size]

சில தீராத மன நோயாளிகள் சர்வரோக சஞ்சீவியை தம் பெயராக வைத்துக்கொண்டு மற்ரவர்களைப் பார்த்துப் பல்லிளிப்பதுபோல என்று சொல்லிறீங்களாக்கும். யாழில் அனுமதிக்கிறார்கள் என்பதற்க்காக முகமூடிக்குள் மறைந்துகொண்டு இப்படி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்று ஒரு பழமொழி இருக்கு.

புலிகலின் உதியோகபூர்வ பேச்சாலர்போல பவுலா காட்டுவதுதானே உங்கள் வலக்கம். அந்த அதிகாரத்தை எங்கிருந்து பெற்றீங்க. முகமூடி போட்டுக்கொண்டு இப்படி பேசயாழில் அனுமதிக்கிறார்களா?

என்னை அழித்துவிடுமாறு ஐரொப்பாவில் இருந்து கோரிக்கைகள் cd க்கள் வருவதாக வன்னியில் சொன்னார்கள். அனுப்பியவர்களை இப்ப ஓரளவு அடையாளம் காணக்கூடியதாக இருக்கு. அரசு கைப்பற்றி வைதிருக்கும் ஆவணங்கலுக்குள் அந்த சிடி யும் இருக்கலாம்

Link to comment
Share on other sites

என்னை அழித்துவிடுமாறு ஐரொப்பாவில் இருந்து கோரிக்கைகள் cd க்கள் வருவதாக வன்னியில் சொன்னார்கள். அனுப்பியவர்களை இப்ப ஓரளவு அடையாளம் காணக்கூடியதாக இருக்கு. அரசு கைப்பற்றி வைதிருக்கும் ஆவணங்கலுக்குள் அந்த சிடி யும் இருக்கலாம்

:lol: :lol: :lol: :lol:

யாழ் களத்திலேயே கனபேருக்கு இனி சங்குதான் :D

Link to comment
Share on other sites

நமது தேசியத்தலைவர் உயிரோடு இல்லை என்று சொன்னவர்தானே .

தான் தப்புவதக்காக இப்படி உளற தேவையில்லை . இவர் சரணடைந்தது புதுமத்தாளன் இல் .

அது நடந்தது 2009 ஏப்ரல் 19 . சண்டை முடிந்தது மே 18 . எப்படி தெரியும் அவருக்கு

என்ன நடந்தது என்று. உண்மையில் ஒருவருக்குமே தெரியாத விடயம்.

[size=1]தணிக்கை: அநாகரிகமான சொற்கள் நீக்கப்பட்டுள்ளன[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வருட சோற்றுக் கடனுக்காக முப்பது ஆண்டுகாலமாக உண்ட இடத்திற்கு வினைவிதைப்பதா?

சிறீலங்கா | ADMIN | OCTOBER 27, 2012 AT 11:37

விடுதலை நோக்கிய போராட்டத்தில் துரோகிகள், சதிகாரர்கள் என ஒற்றன்கள் தோன்றுவதும் பின்னர் இல்லாது போவதும் வரலாறு. அந்த வகையில், விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர், தனது வயிற்றுப் பிழைப்புக்காக, புனிதமான விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவது பச்சத் துரோகத்தனமாகும்.

ஒரு நிமிடத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் சிங்களவன் கொடியவன், கொலைவெறியன், ஈவிரக்கமற்றவன் என பேசியவர் இன்று, பேரினவாதிகளுக்கும் அதனுடன் இணைந்து செயற்படும் படைத்துணைக்குழு அமைப்புக்கும் முண்டு கொடுப்பதை விட ஈழத்திற்காக உயிரை விடுவது மேலான விடயம்.

ஒரு இனத்தின் விடுதலை போராட்ட வரலாற்றில் குறித்த விடயத்தை அடைய வேண்டும் அல்லது மாண்டுவிட வேண்டும் என்பது தாரக மந்திரமாக அனைவராலும் கருதப்படும் நிலையில், போராட்டத்தின் வரலாற்றையும், அதன் நோக்கங்களையும் நன்கு அறிந்தவர்கள் அதுமாத்திரமல்ல, சிங்கள அரசினாலும், அதன் படைகளினாலும் மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான கொடூரங்களையும் கண்டவர்களின் இவ்வாறான கருத்துக்களை மக்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள்.

தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் சுயலாபத்துக்காக தமிழர் விடயத்தை பயன்படுத்திக் கொள்வதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் தயாநிதி தெரிவித்துள்ளார்.

த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செல்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இது அவர்களின் அரசியல் லாபத்துக்காக மேற்கொள்ளப்படுகின்ற சுயலாப பிரசாரமே தவிர, அதில் உண்மை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

த ஹிந்துப் பத்திரிகையானது ஆரம்ப காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டுவந்த பத்திரிகை, அத்துடன், அது இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான “ரோ”வின் ஒரு பிரதிநிதியாகவும் செயற்படுகின்றமை யாவரும் அறிந்தவிடயம்.

இன்று ஈழத்தமிழர் விடயத்திலும், சிறீலங்காப் படைகளினால் இந்திய தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விடயத்தில் தமிழக அரசியல் தலைமைகள் கட்சி வேறுபாடுயின்றி இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்களை கொடுத்துவருகின்றனர். அதிலும், ஈழத்தமிழர் விடயத்தில் பல்வேறு வகையில் அழுத்தங்களை பிரயோகிப்பதுடன், மீண்டும் ஒரு போராட்டத்திற்கான வழிவகைகள் ஏற்படலாம் என இந்திய மத்திய அரசு நம்புகிறது.

அந்தவகையில், ஈழத்தமிழர் சார்பாக குரல் கொடுக்கும், வைகோ, பழநெடுமாறன், சீமான், தொல்திருமாவளவன் மற்றும் ஈழவாதிகளின் குரல்களை நசுக்க இந்திய மத்திய அரசும், சிறீலங்கா அரசும் சதித் திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத் தான் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பயன்படுத்திவருகின்றனர்.

http://thaaitamil.com/?p=36802

உலக வல்லரசுகளினால் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்ட போது எமது தேசிய தலைவர் அவர்களின் மதிநுட்பத்திற்கு அமைய எமது விடுதலைப் போராட்டம் கைவிடப்படக் கூடாது அதேவேளை, பொதுமக்களின் அழிவையும் தடுக்க வேண்டும் என்பதற்காக ஆயுதப் போராட்டம் தற்காலியமாக மௌனீக்கப்பட்டன.

ஆனால், அதனை சிங்கள அரசாங்கம் தனக்குத் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சமாதானம் நோக்கிப் புறப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை கொன்று குவித்ததுடன், சிங்களத்துடன் இணைந்து செயற்பட சம்மதித்துக் கொண்டவர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இவ்வாறானவர்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் மனங்களில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் ஈழக் கனவை கலைப்பதற்காக குழப்பகரமான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றது.

இதேவேளை ,படை ரீதியாக விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணையும் சாத்தியம் தற்போதைக்கு இல்லை.எனினும் வெளிநாடுகளில் இருந்துக் கொண்டு அரசியல் ரீதியாக அழுத்தங்களை அவர்களால் கொடுக்க முடியும். அத்துடன், வடக்கில் படை பிரசன்னம் அதிகரித்துள்ள என்பதையும் பொய்யான தகவல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இவர் மன நோய்வாய்ப்பட்டுள்ளார். காரணம் இவரால் எவ்விதமான ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு அரச படைகளினாலும், அதன் கூலிப் படைகளினாலும் கண்காணிக்கப்பட்டுவருகின்றார். எனவே, வயிற்றுப் பிழைப்புக்கும் உயிர்ப்பிச்சைக்காகவும் எழுந்தமான கருத்துக்களையும், சிறீலங்கா அரசாங்கத்தினால் சொல்லிக் கொடுக்கும் கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதுதான் இவரின் பணியாக உள்ளதை மக்கள் நன்கு அறிவார்கள்.

http://thaaitamil.com/?p=36802

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கட்டுரை மிகவும் வேதனையாக உள்ளது

"விடுதலை நோக்கிய போராட்டத்தில் துரோகிகள், சதிகாரர்கள் என ஒற்றன்கள் தோன்றுவதும் பின்னர் இல்லாது போவதும் வரலாறு. அந்த வகையில், விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர், தனது வயிற்றுப் பிழைப்புக்காக, புனிதமான விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவது பச்சத் துரோகத்தனமாகும்."

முப்பது வருடங்கள் புலிகளிற்காக உழைத்தவர் என்கிறீர்கள் தற்சமயம் ராணுவத்தின் பிடியில் வாழும் மனிதர் தன் உயிர் பிழைக்க அவர்கள் சொல்லுவதை சொல்லுவதால் அவரை துரோகி என்கிறீர்கள். இதே கட்டுரையை ஈழத்தில் இருந்து உங்கள் உயிரை பணயம் வைத்து உங்களால் எழுத முடியுமா? இவர்களின் இடத்தில நீங்கள் இருந்திருந்தால் அவர்கள் கொன்றால் கொல்லட்டும் என்று உண்மையை மட்டும் பேசுவீர்களா?

இலங்கை அரசு யார்யாரை கைதியாய் வைத்து என்னென்ன பொய் உரைத்தாலும் கேட்பவர்கள் இடம் பொருள் காலம் ஏவல் புரிந்தே எடுத்துகொள்ளுவார்கள். மக்கள் மட்டும் அல்ல வெளிநாடுகளும் தான்.

ங்களை விசுவாசியாக காட்டிக்கொள்ள மற்றவர்களை துரோகிகளாக காட்ட முயற்சிக்க வேண்டாம். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

பின்குறிப்பு: மேற்ட்படி நபர் (தயா மாஸ்டர் ) ரை எனக்கு ஒன்றும் பரிட்சயம் இல்லை.

[size=1]நியானி: [/size]

[size=1]களவிதி: "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.[/size]

Link to comment
Share on other sites

தயா மாஸ்ரர் போன்றவர்கள் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வாழ்பவர்கள். அவர்களால் எதனைப் பேச முடியுமோ, அதைத்தான் பேச முடியும்.

அதை விட அவர் அப்படி என்னதான் தவறாக பேசி விட்டார்?

- தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்கின்ற உண்மையை பேசியிருக்கிறார். (இன்னுமா அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்புகிறீர்கள்?)

- விடுதலைப் புலிகளால் மீள ஒருங்கிணைய முடியாது என்கிறார் (இரண்டு மாவீரார் நாட்கள் நடைபெறுவது வேறு எதைக் காட்டுகிறது?)

அடுத்ததாக அவர் சொன்னதுதான் சர்ச்சைக்குரியது. கூர்ந்த கவனிக்க வேண்டியது. ஆனால் அவற்றை நாம் விட்டு விடுவோம்.

- விடுதலைப் புலிகளால் அரசியல் அழுத்தத்தைதான் வழங்க முடியும் என்கிறார்.

விடுதலைப் புலிகள் ஏதே ஒரு வகையில் செயற்படுகிறார்கள் என்று சொல்கிறார். வெளிநாட்டில் நடக்கின்ற அனைத்துச் செயற்பாடுகளுக்குப் பின்னாலும் விடுதலைப் புலிகள்தான் நிற்கின்றார்கள் என்கிறார். இதிலேதான் நிறைய விடயங்கள் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயா மாஸ்ரர் போன்றவர்கள் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வாழ்பவர்கள். அவர்களால் எதனைப் பேச முடியுமோ, அதைத்தான் பேச முடியும்.

நீங்கள்மேலே எழுதியவற்றை வாசித்து ஏற்றுக்கொண்டால்

அதன்பின்

கூகூகூகூகூகூகூகூகூகூகூகூர்ந்து கவனிக்க

தவறவிடக்கூடாத

நிறையயயயயயயயயயயய விடயங்கள்???

எப்படி இந்த முரண்பாடு தங்கள் எழுத்தில்.........???

அவா விபச்சாரி தான்

ஆனால் கூகூகூகூகூர்ந்து

கவனித்து

தவறவிடக்கூடாத

நிறையயயயயய??? :( :( :(

Link to comment
Share on other sites

தயா மாஸ்டரின் கருத்துக்களை சரியான முறையில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் யாருமே உள்வாங்கவில்லை என்பது இதில் இருந்து புரிகின்றது.

தயா மாஸ்டர் தொடர்பில் அவருடன் பழகிய உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் மட்டுமே தெரியும்.

விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலகட்டத்திலேயே தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களிடம்- எம்மவர்கள் இவ்வாறு எதேச்சதிகாரமாகச் தொடர்ந்து சென்றால் முற்றாக அழிய வேண்டி வரும் என்று தெரிவித்து இருக்கின்றார். (பின்னர் இவரைப் பற்றி தகடு வைத்து பிற்காலத்தில் அமைப்பில் இருந்து ஒதுக்கப்பட்டும் இருந்தார்)

இவர் மட்டும் இவ்வாறு கருத்துக் கூறியவர்கள் பட்டியலில் அன்றைய காலகட்டத்தில் இருந்து இருக்கவில்லை. க.வே.பாலகுமாரன் உள்ளிட்ட பலருமே போரின் போக்கின் உணர்ந்து தலைமைக்கு பின்னர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். (பாலகுமாரனும் பின்னர் சரணடைந்தே இருந்தார்)

இங்கே தயா மாஸ்டர் சரணடைந்தது தொடர்பிலும் விவாதிக்கின்றீர்கள். இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில்- வீணாக நாம் அழிய வேண்டி வரும் என்று பலருக்குத் தெரிந்து இருந்த நிலையில்- தமது குடும்பத்தினைப் பாதுகாக்கும் பொருட்டே அவர்கள் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று இருந்தனர். இதனை தவறு என்று கூறுகின்ற யோக்கியதை புலத்தில் இருந்து கருத்துக்களை எழுதுகின்ற எமக்கு எந்தவித தகுதியும் இல்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் சாவடைந்தது தொடர்பில் தயா மாஸ்டர் கூறித்தான் உலகத்துக்கு தெரிய வேண்டியதில்லையே. அவரின் உடலத்தினையே நேரிடையாக தொலைக்காட்சிகளிலேயே காட்டினார்களே.

ஒருவரின் உடலத்தினை காட்டாமல் விட்டிருந்து- அதனையே தயா மாஸ்டர் அவர் சாவடைந்து விட்டார் என்று கூறி இருந்தால்- அதனை நானும் தவறு என்றே வாதிடுவேன்.

சரி, “விடுதலைப் புலிகளின் தலைவர் நான் இறந்துவிட்டேன்” என்று உங்கள் ஒவ்வொருவரின் கனவிலோ அல்லது ஆவியாகத்தான் வந்து கூறினால்தான் நம்புவீர்களோ?

இங்கே நான் யாரையும் சீண்டுவதற்காக இந்த விடயங்களை முன்வைக்கவில்லை. கருத்துக்களங்களில் உரையாடுகின்ற பெருமளவிலானோர் துரோகி, குள்ளநரி, பச்சோந்தி, எட்டப்பன் போன்ற சொற்பிரயோகங்களை- தங்களை பெரிய நியாயவான்களாகக் கருதி பிறருக்கு மேற்படி பட்டங்களைக் கொடுத்து வருகின்றனர்.

இங்கே பதிவு செய்யப்பட்டு வரும் பிற இணையத்தளங்களின் செய்திகளில் தவறான மொழியாக்கம் இடம்பெற்று வருகின்றன. அவற்றினை எல்லாம் கண்டுபிடிக்காது- இணையத்தளங்கள் தங்கள் விருப்பப்படி எழுதுகின்ற செய்திகளுக்கு எல்லாம் கருத்துக்களை எழுதி வருகின்றீர்கள்.

யாவற்றினையும் தீர ஆராய்ந்து அதற்கு கருத்துக்களை எழுதுங்கள். தயா மாஸ்டரை தூற்றுகின்றவர்கள் முடிந்தால் அந்த மண்ணில் இருந்து நேரிடையாக கருத்துக்களை கூறுங்கள்.

உங்களுக்கு வசதி வாய்ப்புக்கள் கிடைத்தபடியால்தான் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றீர்கள். தயா மாஸ்டருக்கோ அல்லது பிற போராளிகளுக்கோ அந்த வாய்ப்புக்கள் கிடைத்து இருந்தால்- விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு செல்லாது வெளிநாடுகளில் வந்து வாழ்ந்து இருப்பார்கள் அல்லவா? வசதி வாய்ப்புக்கள் கிடைக்காதபடியால் போராடச் சென்று இன்று உங்களின் வசைபாடுகளை வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.

தமது இளமைக்காலங்களை தமிழீழ இலட்சியத்துக்காக செலவிட்டு பின்னர் அது பிழைத்தவுடன் இன்று ஒதுங்கி தமது வாழ்க்கையைப் பார்க்கின்றனர். ஆனால், நாம் எமது இளமைக்காலங்களை வெளிநாடுகளில் கழித்துக் கொண்டு அங்குள்ளவர்கள் போராடி தமிழீழம் பெற வேண்டும் என்று கனவு உலகில் அல்லவா சஞ்சாரித்துக் கொண்டு இருக்கின்றோம். எங்களை விட தயா மாஸ்டர் போன்றவர்கள் எவ்வளவோ மேல்.

Link to comment
Share on other sites

விசுகு,

அவர் சொன்ன விடயங்களில் கூர்ந்து கவனிக்க வேண்டியவையாக நான் குறிப்பிட்டவையும் அவருடைய கருத்து என்று சொல்லவில்லை. அதை சொன்னதன் பின்னணியிலும் சிறிலங்கா அரசு இருக்கும்.

அவர் சொன்னது ஒரு பாரதூரமான விடயம். புலம்பெயர் மக்களின் போராட்டத்தை ஒரு தடை செய்யப்பட்ட இயக்கின் போராட்டமாக காட்டுகின்ற நகர்வு அதில் இருக்கிறது.

நான் அவற்றை சுட்டிக் காட்டினால், நீங்கள் அவசரப்பட்டு ஏதோ எழுதுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

குப்பி கடித்து மாண்டவர்களின் தயவில் இருந்தவருக்கு, இறுதி நேரத்தில் ஏன் குப்பி அடிக்கத் தெரியவில்லை.

காற்றுள்ள போதே தூற்றிக் கொல்லும் கலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குப்பி கடித்து மாண்டவர்களின் தயவில் இருந்தவருக்கு, இறுதி நேரத்தில் ஏன் குப்பி அடிக்கத் தெரியவில்லை.

காற்றுள்ள போதே தூற்றிக் கொல்லும் கலை.

அப்படித்தான் நினைக்கவேண்டி உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னது ஒரு பாரதூரமான விடயம். புலம்பெயர் மக்களின் போராட்டத்தை ஒரு தடை செய்யப்பட்ட இயக்கின் போராட்டமாக காட்டுகின்ற நகர்வு அதில் இருக்கிறது.

நான் அவற்றை சுட்டிக் காட்டினால், நீங்கள் அவசரப்பட்டு ஏதோ எழுதுகிறீர்கள்.

இவரது நகர்வை தற்பொழுது எவர் கருத்திலெடுப்பர் என்றும் சொல்லாமே.......???

அவர்

தன்னை அழித்திருக்கணும் என்று சொல்ல எனக்கு உரிமையில்லை. வெளியிலிருந்து லட்சக்கணக்கில் அதை எடுத்தனுப்பியவரே அதை பாவிக்கவில்லை.

அவரது தற்போதைய வாழ்க்கை அவரது தனிப்பட்ட சுதந்திரம். அதை எவரும் மறுக்கமுடியாது.

அவர் அறிக்கை விடுவதும் அவரது இயலாமை. அதையும் அவரோ நாமோ தடுத்துவிட முடியாது.

அதை கணக்கிலெடுக்காமல் இருக்க எனது தனி மனித சுதந்திரத்தில் இடமுண்டல்லாவ??

Link to comment
Share on other sites

யாவற்றினையும் தீர ஆராய்ந்து அதற்கு கருத்துக்களை எழுதுங்கள். தயா மாஸ்டரை தூற்றுகின்றவர்கள் முடிந்தால் அந்த மண்ணில் இருந்து நேரிடையாக கருத்துக்களை கூறுங்கள்.

அவர் அறிக்கை விடுவதும் அவரது இயலாமை. அதையும் அவரோ நாமோ தடுத்துவிட முடியாது
Link to comment
Share on other sites

தயா மாஸ்டரின் கருத்துக்களை சரியான முறையில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் யாருமே உள்வாங்கவில்லை என்பது இதில் இருந்து புரிகின்றது.

தயா மாஸ்டர் தொடர்பில் அவருடன் பழகிய உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் மட்டுமே தெரியும்.

விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலகட்டத்திலேயே தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களிடம்- எம்மவர்கள் இவ்வாறு எதேச்சதிகாரமாகச் தொடர்ந்து சென்றால் முற்றாக அழிய வேண்டி வரும் என்று தெரிவித்து இருக்கின்றார். (பின்னர் இவரைப் பற்றி தகடு வைத்து பிற்காலத்தில் அமைப்பில் இருந்து ஒதுக்கப்பட்டும் இருந்தார்)

இவர் மட்டும் இவ்வாறு கருத்துக் கூறியவர்கள் பட்டியலில் அன்றைய காலகட்டத்தில் இருந்து இருக்கவில்லை. க.வே.பாலகுமாரன் உள்ளிட்ட பலருமே போரின் போக்கின் உணர்ந்து தலைமைக்கு பின்னர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். (பாலகுமாரனும் பின்னர் சரணடைந்தே இருந்தார்)

இங்கே தயா மாஸ்டர் சரணடைந்தது தொடர்பிலும் விவாதிக்கின்றீர்கள். இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில்- வீணாக நாம் அழிய வேண்டி வரும் என்று பலருக்குத் தெரிந்து இருந்த நிலையில்- தமது குடும்பத்தினைப் பாதுகாக்கும் பொருட்டே அவர்கள் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று இருந்தனர். இதனை தவறு என்று கூறுகின்ற யோக்கியதை புலத்தில் இருந்து கருத்துக்களை எழுதுகின்ற எமக்கு எந்தவித தகுதியும் இல்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் சாவடைந்தது தொடர்பில் தயா மாஸ்டர் கூறித்தான் உலகத்துக்கு தெரிய வேண்டியதில்லையே. அவரின் உடலத்தினையே நேரிடையாக தொலைக்காட்சிகளிலேயே காட்டினார்களே.

ஒருவரின் உடலத்தினை காட்டாமல் விட்டிருந்து- அதனையே தயா மாஸ்டர் அவர் சாவடைந்து விட்டார் என்று கூறி இருந்தால்- அதனை நானும் தவறு என்றே வாதிடுவேன்.

சரி, “விடுதலைப் புலிகளின் தலைவர் நான் இறந்துவிட்டேன்” என்று உங்கள் ஒவ்வொருவரின் கனவிலோ அல்லது ஆவியாகத்தான் வந்து கூறினால்தான் நம்புவீர்களோ?

இங்கே நான் யாரையும் சீண்டுவதற்காக இந்த விடயங்களை முன்வைக்கவில்லை. கருத்துக்களங்களில் உரையாடுகின்ற பெருமளவிலானோர் துரோகி, குள்ளநரி, பச்சோந்தி, எட்டப்பன் போன்ற சொற்பிரயோகங்களை- தங்களை பெரிய நியாயவான்களாகக் கருதி பிறருக்கு மேற்படி பட்டங்களைக் கொடுத்து வருகின்றனர்.

இங்கே பதிவு செய்யப்பட்டு வரும் பிற இணையத்தளங்களின் செய்திகளில் தவறான மொழியாக்கம் இடம்பெற்று வருகின்றன. அவற்றினை எல்லாம் கண்டுபிடிக்காது- இணையத்தளங்கள் தங்கள் விருப்பப்படி எழுதுகின்ற செய்திகளுக்கு எல்லாம் கருத்துக்களை எழுதி வருகின்றீர்கள்.

யாவற்றினையும் தீர ஆராய்ந்து அதற்கு கருத்துக்களை எழுதுங்கள். தயா மாஸ்டரை தூற்றுகின்றவர்கள் முடிந்தால் அந்த மண்ணில் இருந்து நேரிடையாக கருத்துக்களை கூறுங்கள்.

உங்களுக்கு வசதி வாய்ப்புக்கள் கிடைத்தபடியால்தான் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றீர்கள். தயா மாஸ்டருக்கோ அல்லது பிற போராளிகளுக்கோ அந்த வாய்ப்புக்கள் கிடைத்து இருந்தால்- விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு செல்லாது வெளிநாடுகளில் வந்து வாழ்ந்து இருப்பார்கள் அல்லவா? வசதி வாய்ப்புக்கள் கிடைக்காதபடியால் போராடச் சென்று இன்று உங்களின் வசைபாடுகளை வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.

தமது இளமைக்காலங்களை தமிழீழ இலட்சியத்துக்காக செலவிட்டு பின்னர் அது பிழைத்தவுடன் இன்று ஒதுங்கி தமது வாழ்க்கையைப் பார்க்கின்றனர். ஆனால், நாம் எமது இளமைக்காலங்களை வெளிநாடுகளில் கழித்துக் கொண்டு அங்குள்ளவர்கள் போராடி தமிழீழம் பெற வேண்டும் என்று கனவு உலகில் அல்லவா சஞ்சாரித்துக் கொண்டு இருக்கின்றோம். எங்களை விட தயா மாஸ்டர் போன்றவர்கள் எவ்வளவோ மேல்.

2009 மாசியில புலிகளின் பக்கம் நின்று கதை விட்ட தயா மாஸ்டர், இப்ப இயலாமையால் மற்றப் பக்கம் இருந்து சொல்லுவதை எல்லோரும் நம்ப வேண்டும்.

அது அவருக்குப் பிழைப்பாய் இருக்கலாம். பிள்ளைகளையும் வாழ்க்கையையும் இழந்தவர்களுக்கு அல்ல.

தலைமை நிர்வாகத்தோடு இருந்த இந்த இராசதந்திரி அப்போது என்ன புடுங்கினார்?

இவர்கள் போராளிகள் அல்ல. வெல்லும் பக்கம் இருக்கும் சாணக்கியர்கள். நாளை காட்சி மாறினால் இந்திய / புலம்பெயர்ந்த அமைப்பின் பேச்சாளராகவும் மாறக் கூடும்.

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குப்பி கடித்து மாண்டவர்களின் தயவில் இருந்தவருக்கு, இறுதி நேரத்தில் ஏன் குப்பி அடிக்கத் தெரியவில்லை.

காற்றுள்ள போதே தூற்றிக் கொல்லும் கலை.

புலத்து தேசியவாதிகள் அனைவரும் கரும்புலிகளாகச் செல்ல தயாராகவே இருக்கின்றோம் .என்பதை இத்தால் அறியத்தருகிறோம்

Link to comment
Share on other sites

புலத்து தேசியவாதிகள் அனைவரும் கரும்புலிகளாகச் செல்ல தயாராகவே இருக்கின்றோம் .என்பதை இத்தால் அறியத்தருகிறோம்

இல்லை.

இங்கு கதைப்பது கூட இருந்து மற்றவர்களின் பிள்ளைகளை கரும்புலிகளாய் அனுப்பி விட்டு, காலத்திற்கேற்ப மற்றப் பக்கம் நின்று கதைப்பவர்களை.

Link to comment
Share on other sites

கேனல் ராம், K.P. , தயா மாஸ்டர் போன்றோர் தமிழ் ஈழம் கிடைத்தால் நிச்சயம் அங்கே வந்து சேர்வார்கள். நிர்மலன், அரசாங்க பக்க விடயம் தெரிந்த மனிதன், அவரே அந்த மண்ணில் இருக்கும் போது அவர் அப்படித்தானே பேசவேண்டும் என்கிறார்.

ஐ.நா. கைதிகள் பாதுகாப்பு, சாட்சியங்கள் பாதுகாப்பு செய்த்துவிட்டு இவர்களை வந்து பேச சொல்லுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.