Jump to content

13ம் திருத்தச்சட்டம் நீக்கப்படும் நிலையில், எவ்வாறு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைவது?: சம்பந்தன்


Recommended Posts

Era_sampanthan150news.jpg

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றம் பசில் ராஜபக்ச உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் 13ம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போது, எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைவது என்று இரா. சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்..

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலெயே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தினை அடிப்படையாக கொண்டே தீர்வு வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரி வருகிறது. இந்தியாவும் இதனையே வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் அரசாங்கத்தின் பல்வேறு உறுப்பினர்கள் இதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.தமிழ் மக்களுக்கான தீர்வுக்கு ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்ச போன்றோர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் 19 அரசாங்க உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கட்சிகளின் சார்பில் 12 உறுபினர்களை இணைத்துக் கொள்ளப்படுவர்.

இதிலும் அரசாங்கமே பெரும்பான்மை வகிக்கிறது.இவ்வாறான ஒரு குழுவில் அரசாங்கத்தின் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும்.இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைவதில் சாத்தியம் இல்லை என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தீர்வுத் திட்டத்தை எழுத்து மூலம் சமர்ப்பித்திருப்பதாகவும், கடந்த ஒரு வருடமாக அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு கோருகின்ற போதும், அதனை இன்னும் அரசாங்கம் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாது போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

http://www.seithy.co...&language=tamil

'13வது திருத்தத்தை ரத்து செய்வது அரசியல் ரீதியாக தவறாக இருக்கும் '

120729173123_rajiv_jayawardane_304x171_dbsjeyaraj_nocredit.jpg

இந்திய இலங்கை ஒப்பந்தம் -- சர்ச்சை தொடர்கிறது

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் இலங்கையில் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இதை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு ஒருக்கால் 13வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்யுமானால் அது அரசியல் ரீதியாக பிழையான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என இலங்கை-இந்திய உறவுகள் குறித்து கவனம் செலுத்திவரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் கூறுகிறார்.

சஹாதேவன் பேட்டி

இறையாண்மை பெற்ற ஒரு நாடு என்ற வகையில் எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றும் உரிமை இலங்கைக்கு உண்டு , எனவே இந்த சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மூலமாக அது ரத்து செய்வது என்பது சட்டப்படி சாத்தியமே என்றாலும் அது அரசியல் ரீதியில் தவறான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என அவர் கூறினார்.

ஏனென்றால், இந்த சட்டத்திருத்தம் இலங்கையின் மற்ற சட்டத்திருத்தங்களைப் போன்றதல்ல. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட ஒரு நடவடிக்கை. இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும், தமிழ்ச் சிறுபான்மையினருக்கு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை தர அரசு முன்வரவில்லை என்ற கருத்து சர்வதேசத்தில் மேலோங்கியிருக்கும் நிலையில், இவ்வாறான நடவடிக்கை, இலங்கை மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றார் சஹாதேவன்.

இந்தியா இந்த நடவடிக்கையைத் தடுக்குமோ இல்லையோ , ஆனால் நிச்சயம் வரவேற்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த சட்டத் திருத்தம் இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்டது என்ற கருத்து தவறானது என்று கூறிய சஹாதேவன், இலங்கையில், இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை அடுத்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் அரசுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றங்களை ஒட்டியே இந்த சட்டத்திருத்தம் வந்தது என்று சமீபத்தில் இந்தியா வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பில் கூறியதை சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத்திருத்தம் வெளிநாட்டினால் திணிக்கப்பட்டதல்ல, உள்நாட்டு வழிமுறையிலேயே உருவானது என்று அவர் கூறினார்.

http://www.bbc.co.uk...hsrilanka.shtml

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயமாக அப்படிச் சொல்லவில்லை: உண்மையில் "கோத்தா தாமதமாக நாணய நிதியத்தை நாடினார், அதனால் பேரிழப்பு" என்று கூட அனுர கூறியிருந்தார். இதைத் தான் மேலே குறிப்பிட்டிருந்தேன் "மக்கள் ஆணைக்கு ஏற்ப இருக்கும் IMF நிபந்தனைகளை மட்டும் தான் ஏற்றுக் கொள்வோம்" என்பது NPP யின் தற்போதைய நிலைப்பாடு. சர்வதேச நாணய நிதியம் எப்படி இயங்குகிறது என்பதை அறிந்தவர்கள், மக்கள் ஆணையை விட போட்ட காசு இழக்காமல் இருக்க வேணும் என்ற கொள்கையில் அவர்கள் இயங்குவதை அறிவார்கள். NPP இனை ஆதரிக்கும் மக்கள், பெரும்பாலும் IMF இன் கசப்பு மாத்திரைகளை விழுங்க விரும்பாத மக்களாகவும் இருக்கும் போது, முடிவு எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. இப்படி நாணய நிதியம் விலக வேண்டிய ஒரு நிலை வரும் போது, மேற்கின் ஏஜெண்டான ஜப்பானிடமோ, அயல் நாடான இந்தியாவிடமோ  ஒரு எதிர்கால NPP அரசு போகாது. சீனா தான் சரணாகதி.
    • 🤦‍♂️ எத்தேனும் சீரியலில் வந்த சீனை ரிகிரியேட் பண்ணி இருப்பா🤣
    • "படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" / "The corpse that oppose the 'Genocide' is asking"       "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன   நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க   வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்- விசாரணை எடு - உண்மையை நிறுத்து கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள்- படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது"     கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,  அத்தியடி, யாழ்ப்பாணம்       "I am not able to sleep Somebody Please help me When I close my eyes Only many corpses come And unable to answer the questions arise by the corpses that come I am not able to sleep Those who have the answers Please help   To bury the innocent corpses within my eyes Is an impossible task for me. I leave this to you, itself. One by one all the Corpses…   Look closely the tongue of one has been sliced away For having told the truth For another the breast has been sliced off For refused to make love with notorious groups The corpses that come Every one of them Scream with questions   In the line of these corpses , I found many kids The voices of those Who became corpses by fighting against 'Genocide' Are destroying My sleep ‘Bring the truth. expose the truth. Take action ... Now… Now…’ From now I cannot sleep Those with answers Come and Help me "     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]      
    • பொது வேட்பாளர் என்பது ஒரு யுக்தி.  இன பிரச்சனை தீர்வுக்கு இந்த யுத்தி எந்த பலனையும் கொடுக்காது என்பதையே பொதுவான  கருத்தாக பலரால்  தெரிவிக்கப்பட்டது.  அது ஏற்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம்.  ஆனால்,  யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டியது ஆட்சி மாற்றத்தின் விளைவுகளை அனுபவிக்கப்போகும், வாக்களிக்கவிருக்கும் மக்களே. பல ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில்  இருக்கும் எம்மால் அதை எப்படிக் கூற முடியும்.   ஆட்சி மாற்றத்தினால் வரும் விளைவுகளை எதிர் கொள்ள தயார் அற்ற  வேடிக்கை மட்டும் பார்கக இருக்கும் நானோ நீங்களோ  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்யலாம்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.