நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் இராணுவப் புலனாய்வு மற்றும் துணை இராணுவக் குழு உறுப்பினர்களால் தாக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச்' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் கொக்குவில் பொற்பதிக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த எஸ் வசந்தகுமாரை வழிமறித்த இனம்தெரியாதநபர்கள் அவர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவர் காணம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை பலாத்காரமாக ஆக்கிரமித்துள்ள படையினர் அங்கே படைமுகாமை அமைப்பதற்கு எதிராக நாளை வழக்குத் தாக்கல் செய்வதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு இருந்த நிலையிலேயே நல்லூர் பிரதேச சபைத் தலைவர எஸ் வசந்தகுமார் இன்று தாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தனது சட்டத்தரணியுடன் கலந்தாலோசித்த பின் காவல் நிலையத்திலும் முறைப்பாடொன்றை தெரிவிக்கச் சென்று திரும்பி செல்லும் வேளையிலேயே தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் படையினரின் பலாத்கார காணிப் பறிப்பிற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டங்களையும் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே படைப் புலனாய்வுப் பிரிவினரும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
thx
குளோபல் தமிழ்ச்' செய்தி






.jpg)
.jpg)
.jpg)









