13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் - கோதபாய ராஜபக்ஷ
14 அக்டோபர் 2012
13ம் திருத்தச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அல்லது காலசூழ்நிலைகளுக்கு அமைவாக திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமேன அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்கு 13ம் திருத்தச் சட்டம் பாரிய தடையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை சீர்குலைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு இடமளிக்க முடியாது என அவா குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்காகவோ அல்லது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்காகவோ பேசவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 2001ம் ஆண்டு டிசம்பர் தேர்தல்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகப் பிரதிநிதிகளாக அறிவித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் பெற்றுக்கொள்ள முடியாதவற்றை கூட்டமைப்பு வேறும் வழிகளில் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவத்தினர் முற்று முழுதாக இல்லாதொழித்திருக்காவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைகளுக்கும், சாதாரண தமிழ் பொதுமக்களின் தேவைகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் போராளிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும், மாற்று அரசியல் கருத்துக்களை உடையவர்களின் அரசியல் நடவடிக்கைளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதாவது புலிகளிடம் கோரியிருக்கின்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்களை அறிந்து கொண்டு அரசாங்கம் செயற்படத் தவறினால் அது தேசியப் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.globaltam...IN/article.aspx
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் - கோதபாய ராஜபக்ஷ
Started by
கறுப்பி
, Oct 14 2012 05:09 AM
2 replies to this topic
#1
Posted 14 October 2012 - 05:09 AM
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#2
Posted 14 October 2012 - 04:54 PM
19ஆவது திருத்தச் சட்டத்தை சமர்ப்பிக்க தயராகிறது அரசு
அரசமைப்பில் திருத் தங்களைச் செய்ய அரச உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசுக்கும், நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கும் இடையில் தற் போது நிலவி வரும் முரண் பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கும் நோக்கில் அரச மைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
19ஆவது திருத்தச் சட்ட மொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அரசஆயத் தமாகி வருவதாகக் குறிப் பிடப்படுகிறது. நீதிச் சேவை ஆணைக் குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தை ஜனா திபதிக்கு வழங்கும் வகை யில் இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
17ஆவது திருத்தச் சட்டத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவுக்கு ஜனாதிபதியின் அனுமதி தேவைப்பட்ட போதிலும், 18ஆவது திருத்தச் சட்டத்தில் அவ்வாறு அனுமதி அவசியமில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி, மீண்டும் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
http://onlineuthayan...521512814895527

Edited by akootha, 14 October 2012 - 04:55 PM.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 14 October 2012 - 08:06 PM
20:சிராணி தீர்ப்பு வழங்க முன் ஜனாதிபதியின் அனுமதியை எழுத்து மூலம் பெற வேண்டும்.
21: நிவித்தியும் சந்திரிக்காவும் இலங்கை வருவது தேசதுரோகம்.
22: ரணில் ஸ்ரீகோத்தாவில் கூட்டங்கள் கூட்டுவது தேசதுரோகம்.
23: அனோமா நாட்டைவிட்டு வெளியேறுவது தேசத்துரோகம்.
24: ரில்வின் சில்வா பேச்சுகளை தணிக்கை குழுவிடம் காட்டி அனுமதி பெற வேண்டும்.
25 சரத் சில்லா பத்திரிக்கைகளுக்கு அறிக்கைவிட முன் ஜனாதிபதியின் அனுமதியை பெற வேண்டும்.
......................
..........................
.....................

Edited by மல்லையூரான், 14 October 2012 - 08:07 PM.
சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]