Jump to content


Tamil Star News
Photo

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வேண்டும்! எரிக் சொல்ஹெய்ம்


  • Please log in to reply
No replies to this topic

#1 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,603 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 07 October 2012 - 04:34 AM

Posted Image
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வேண்டும்! எரிக் சொல்ஹெய்ம்

October 7, 2012 09:38 am
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வு வழங்க வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

´ஸ்டில் கவுன்டிங் தி டெட்´ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தமிழ் மக்களை அணுக வேண்டுமாயின் நான்கு முக்கிய காரணிகளுக்கு தீர்வு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல், சட்டவிரோத கடத்தல்கள் நிறுத்ததுதல் மற்றும் வடக்கின் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் என்பவற்றிற்குகான தீர்வினை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கு பிரதேசங்கள் சிங்கள மயமாக்கலுக்கு உட்படாது என்பதற்கு இலங்கை அரசு உத்தியோகபூர்வ வாக்குறுதியளிக்க வேண்டும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.

(அத தெரண தமிழ்)

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

Advert



Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]