Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .
Posted 06 October 2012 - 04:50 PM
இலங்கையின் பாரம்பரிய தொழில்கள் துறை மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் கடந்த 1986ம் ஆண்டு சென்னையில் இருந்தபோது, ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இது தொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவரை கைது செய்ய சென்னை செசன்ஸ் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் இலங்கைக்கு சென்றுவிட்டதால் அவரை கைது செய்ய முடியவில்லை.
இதையடுத்து 1996-ல் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவையடுத்து டக்ளஸ் தேவானந்தா சார்பில் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததை ரத்துசெய்ய வேண்டும் என்றும், கொலை வழக்கு தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயார் என்றும் டக்ளஸ் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் 12ம் தேதி தொடங்கும் என்று 4-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிதிப ராஜகோபாலன் தெரிவித்தார்.
தமிழ் நாட்டுக்கு வந்தால் தனது உயிருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், தனது வருகையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், இதன் காரணமாகவே கோர்ட்டில் நேரில் ஆஜராவதை தவித்து வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!!
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]