Jump to content


Tamil Star News
Photo

யாழ் மாவட்டத்தில் வருடாந்தம் புதிதாக ஐயாயிரம் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்; சுகாதார அமைச்சு தகவல்


  • Please log in to reply
No replies to this topic

#1 பிழம்பு

பிழம்பு

    கருடன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,594 posts
  • Gender:Male
  • Location:ஈர்பற்ற திசை
  • Interests:வாழ்தல்

Posted 22 September 2012 - 04:28 AM

யாழ் மாவட்டத்தில் வருடாந்தம் புதிதாக ஐயாயிரம் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்; சுகாதார அமைச்சு தகவல்
Posted Image
யாழ் மாவட்டத்தில் வருடாந்தம் புதிதாக ஐயாயிரம் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நோயாளர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான வசதிகளுடன் கூடிய பிரிவு வட மாகாணத்தில் இல்லாததால் அவர்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்ல நேரிடுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் புதிதாக புற்றுநோய் சிகிச்சை பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்காக நிதி திரட்டும் வகையில் சுகாதார அமைச்சு, தெற்கிலிருந்து வடக்கு வரையான நடைபவனியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்மூலம் 180 மில்லியன் ரூபா நிதி திரப்பட்டதாகவும், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 30 மில்லியன் ரூபா கிடைத்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

260 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வைத்தியசாலையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சரிடம் நேற்று 100 மில்லியன் ரூபாவுக்கான காசோலை கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வருடாந்தம் 20 ஆயிரம் புற்றுநோயாளர்கள் புதிதாக இனங்காணப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு நோயளர்களுக்கான சிகிச்சைகளுக்காக அரசாங்கம் 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை வருடாந்தம் செலவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=631011448322573191
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்...

Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]