Jump to content


Tamil Star News
Photo

கைதிகள் விவகாரம் அரசு விசேட கவனம்; ஐ.நா.குழுவினரிடம் ஹக்கீம்


  • Please log in to reply
1 reply to this topic

#1 பிழம்பு

பிழம்பு

    கருடன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,594 posts
  • Gender:Male
  • Location:ஈர்பற்ற திசை
  • Interests:வாழ்தல்

Posted 22 September 2012 - 04:26 AM

கைதிகள் விவகாரம் அரசு விசேட கவனம்; ஐ.நா.குழுவினரிடம் ஹக்கீம்

Posted Image
தமிழ் சிறைக்கைதிகளுடைய விவகாரம் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணைகளைத்துரிதப் படுத்துவதற்காக அவற்றை நான்கு விசேட மேல் நீதி மன்றங்கள் மேற்கொள்ளு மெனவும் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய,பசுபிக், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க கிளைகளுக்குப் பொறுப்பான ஹன்னி மெகாலியைச் சந்தித்தபோதே அவர் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்துள்ள இந்தக்குழுவினர் நேற்று முன்தினம் மாலை நீதிய மைச்சரை அவரது கொள்ளுப் பிட்டி இல்லத்தில் சந்தித்தனர். இதன்போதே இறுதி யுத்தம் இடம்பெற்ற போது புரியப்பட்டதாகக் கூறப் படும் மனித உரிமை மீறல்கள், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், புதிதாக இயற்றப்படும் குற்றவியல், குடியியல் சட்டங்கள், பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் விவகாரம் போன்றவை குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் ஹன்னி மெகாலி அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

முக்கியத்துவத்தின் அடிப்படையில் விதந்துரைகள் ஒவ்வொன்றாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக ஹக்கீம் பதிலளித்தார். சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டம் மற்றும் வழக்குகளின் போது செய்மதியூடாகவும் காணொலி மூலமான தொடர்பாடல் ஊடாகவும் பெறப்படும் சாட்சியங்களின் முக்கியத்துவம், நம்பகத்தன்மை குறித்து தீர்மானிப்பது பற்றியும் மனித உரிமைக்குழுவினருக்கு ஹக்கீம் விளக்கமளித்தார்.

http://onlineuthayan.com/News_More.php?id=742471449022139427
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்...

Advert

#2 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,041 posts
  • Gender:Male

Posted 22 September 2012 - 11:30 AM

இந்த கக்கீம், ஜெனிவா பிரேரணை நேரம், பிரேரணையை தோற்கடிக்க, இலங்கையால் அங்கே அனுப்பி வைக்கபட்ட முக்கிய பிரச்சார உறுப்பினர் என்பதை தமிழர் தரப்பிலிருந்து தேவையான் NGOகளுக்கும் முடிந்த வரையில் நேராக UN-HRC க்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

கல்வித் துறைக்கொரு பதியுதீன் - நீதி துறைக்கொரு கக்கீம். கல்வியில், சர்வதேச தரத்திலிருந்த இலங்கை தாழத்தொடங்கியது பதியுதீனின் பின். சர்வதேச நியமங்களை கேலிக்கூத்து வடிவங்களில் மற்றி இலங்கையில் நீதில் இல்லாமல் செய்கிறார் கக்கீம்.

எப்படி சகோதரங்களாக இருந்து குமாரசூரியர், துரையப்பா, கதிர்காமர் தமிழரை அழித்தார்களோ அதே மாதிரி சகோதர இனத்திலிருந்து பதியுதீனதும் கக்கீமினதும் நடத்தை இருக்கிறது.

ஒவ்வொரு நிமிடமும் பொய்களை மட்டும் சொல்லும் கக்கீம் தேர்தல் நேரம் உலாமாக்கள் முன் தனது கட்சி உறுப்பினரிடமிருந்து தலைமைக்கு விசுவாசமாக சத்தியம் எடுப்பித்தவர்.

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

 


 

 





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]