Posted 15 September 2012 - 02:56 PM
அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,
துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சு.
அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தற்பொழுது துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியை வகிக்கின்ற அதேநேரத்தில், அத்துறை தொடர்பாகத் தலைசிறந்த அனுபவமும் திறமையும் அவரிடம் உண்டு.
1994ஆம் ஆண்டு அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராகவும் பின்னர் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சராகவும் அவர் செயலாற்றினார். இலங்கையைச் சுற்றியுள்ள சமுத்திரப் பிரதேசத்தில் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய வரையறையற்ற வளங்களைப்பற்றி அவருக்கிருக்கும் அறிவு தேசிய பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்கின்ற முற்போக்கு முயற்சிகள் பலவற்றின் ஆரம்பமாக இருந்தது. சமுத்திரவியல் தொடர்பாகப் பல்கலைக்கழகமொன்றை நிறுவியமை, கரையோரப் பாதுகாப்பு அலகொன்றை ஆரம்பித்தமை என்பவை இவற்றில் தனித்துவமானவையாகும். இந்து சமுத்திரத்தில் சர்வதேசக் கடற்பாதை ஊடாக அமைந்துள்ள உபாய முறையில் முக்கியத்துவம் வாய்ந்த இடமான அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகமொன்றை அமைப்பது அவருடைய கருத்தாகும்.
2004 ஏப்ரில் மாதம் அவர் பிரதம அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டதோடு, அதனோடிணைந்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியையும் வகித்தார்.
2008ஆம் ஆண்டில் அமைச்சர் ஜெயராஜ் பர்னாந்துபுள்ளே மரணமடைந்ததையடுத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியை சனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சீனா, இந்தியா, ஈரான், சவுதிஅரேபியா, கொரியா போன்ற ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரான்சு போன்ற நாடுகளிடமிருந்து துறைமுக, நெடுஞ்சாலைகள் துறைக்காகக் கணிசமானளவு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. சர்வதேச நன்கொடை வழங்கும் நிறுவனமான உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜப்பான் வங்கி போன்ற நிறுவனங்களும் நிதி உதவிகளை வழங்கின.
தென்னிலங்கையில் தோன்றிய மக்கள் தலைவரான சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏழு தசாப்தங்களுக்கும் சில சந்ததிகள் வரையும் விரிவடைந்து செல்கின்ற அரசியல் சந்ததியொன்றின் மரபுரிமை உடையவராவார். தமது தந்தையான டீ.ஏ. ராஜபக்ஷ அவர்களின் பின்னர் 1970ஆம் ஆண்டு பெலிஅத்த தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைப் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்.
சமூக சேவைகள் அமைப்புகள் பலவற்றுக்குத் தலைமை தாங்குகின்ற ஊக்கமிகு சமூக சேவையாளரான சிரந்தி ராஜபக்ஷவைத் திருமணம் புரிந்துள்ளார். முன்பள்ளிச் சிறார்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான விடயங்களில் அவர் பெரிதும் அக்கறை காட்டுகின்றார். பயங்கரவாதத்தின் காரணமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் உதவி உபகாரம் செய்வதற்காக அவர் பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அவர்களுக்கு மூன்று புதல்வர்கள் இருக்கின்றனர். அவர்களில் மூத்தவரான நாமல், 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார். இரண்டாவது புதல்வாரன யொசித்த, ஐக்கிய இராச்சியத்தில் னுயசவஅழரவா ல் பயிற்சி பெற்றதன் பின்னர் இலங்கைக் கடற்படையில் உப லெப்டினனாகச் சேவையாற்றுகின்றார். மூன்றாவது மகனான ரோஹித்த, வான் பயணவியல் மற்றும் விண்வெளி ஆய்வியல் என்பவை தொடர்பாக ஐக்கிய இராச்உpயத்தில் உயர் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார்.
-துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.