Jump to content

Tamil Star News
Photo

சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் காட்டுக்குள் வசிக்கும் முள்ளிக்குளம் மக்கள்

  • Please log in to reply
1 reply to this topic

#1 பிழம்பு

பிழம்பு

    கருடன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,834 posts
  • Gender:Male
  • Location:ஈர்பற்ற திசை
  • Interests:வாழ்தல்

Posted 15 September 2012 - 02:26 AM

சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் காட்டுக்குள் வசிக்கும் முள்ளிக்குளம் மக்கள் Posted Image By Lambert
2012-09-14 15:34:06
தமது சொந்தக் கிராமமான முள்ளிக்குளம் கிராமத்துக்கு சற்றுத் தொலைவில் உள்ள மலங்காடு காட்டுப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்ந்து வரும் முள்ளிக்குளம் பகுதி மக்கள், தாம் மீளக் குடியமர்த்தும் வரை காட்டுக்குள் வாழப்போவதாகத் தெரிவித்தனர்.
Posted Image

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சென்றனர்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இவர்கள் தமது கிராமத்தில் மீள் குடியமரச் சென்றபோது அங்கு நிலை கொண்டிருக்கும் கடற்படையினர் அந்த மக்களை முள்ளிக்குளம் கிராமத்தில் குடியமர அனுமதிக்கவில்லை.

இந்தக் கிராமத்தைக் கடற்படையினர் அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

தமது சொந்தக்கிராமத்தில் மீள் குடியமரும் எண்ணத்துடன் நீண்ட நாள் போராட்டத்தின் மத்தியில் முள்ளிக்குளத்திற்கு சற்றுத் தொலைவில் உள்ள மலங்காடு எனும் காட்டுப்பிரதேசத்தினுள் அடிப்படை வசதிகள் எவையுமற்ற நிலையில்
சுமார் 145 குடும்பங்கள் இவ்வாறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான தண்ணீர்த் தேவைகளுக்கு அருகில் உள்ள குளத்தைப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் குளம் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.

இந்த மக்களுக்கான குடிநீர் இராணுவத்தினரால் வழங்கப்படுகின்ற போதிலும் ஏனைய தேவைகளுக்கு தண்ணீரைப்பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.

அத்துடன் காட்டு யானைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எத்துணை சிரமங்கள் வந்தாலும் தாம் தமது சொந்தக்கிராமத்தில் மீளக்குடியமர்வதில் எந்த மாற்றமும் இல்லை என அந்த மக்கள் தெரிவித்தனர்.
Posted Image
Posted Image
இவர்களுடைய நிலை தொடர்பாக முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,

கடந்த மாதம் 24 ஆம் திகதி இங்கு வருகை தந்த மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர் நிலைமையினை ஆராய்ந்துள்ளனர்.
இந்த மக்கள் தற்போது வசிக்கும் இடத்தில் தொடர்ந்து வசிக்க வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே இவர்கள் தற்போதுள்ள இடத்தில் இருக்க உடன்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Posted Image
Posted Image

http://www.virakesar...cal.php?vid=634

Advert

#2 chinnavan

chinnavan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,069 posts
  • Gender:Male

Posted 15 September 2012 - 05:54 AM

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சென்றனர்.யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இவர்கள் தமது கிராமத்தில் மீள் குடியமரச் சென்றபோது அங்கு நிலை கொண்டிருக்கும் கடற்படையினர் அந்த மக்களை முள்ளிக்குளம் கிராமத்தில் குடியமர அனுமதிக்கவில்லை.
இந்தக் கிராமத்தைக் கடற்படையினர் அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
தமது சொந்தக்கிராமத்தில் மீள் குடியமரும் எண்ணத்துடன் நீண்ட நாள் போராட்டத்தின் மத்தியில் முள்ளிக்குளத்திற்கு சற்றுத் தொலைவில் உள்ள மலங்காடு எனும் காட்டுப்பிரதேசத்தினுள் அடிப்படை வசதிகள் எவையுமற்ற நிலையில்
சுமார் 145 குடும்பங்கள் இவ்வாறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான தண்ணீர்த் தேவைகளுக்கு அருகில் உள்ள குளத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
Posted Image
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் குளம் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.
இந்த மக்களுக்கான குடிநீர் இராணுவத்தினரால் வழங்கப்படுகின்ற போதிலும் ஏனைய தேவைகளுக்கு தண்ணீரைப்பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.
அத்துடன் காட்டு யானைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எத்துணை சிரமங்கள் வந்தாலும் தாம் தமது சொந்தக்கிராமத்தில்குடியமர்வதில் எந்த மாற்றமும் இல்லை என அந்த மக்கள் தெரிவித்தனர்.
Posted Image
http://thaaitamil.com/?p=32163

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!

 http://dinaithal.com

Advert
Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]