லண்டனில் உள்ள, உலகப் புகழ் பெற்ற மணிக்கூண்டு கட்டிடமான, "பிக் பென்'னுக்கு அரசி, எலிசபெத் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசி எலிசபெத், அரியணையில் அமர்ந்து, 60 ஆண்டு ஆகிறது. இதை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும், பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பார்லிமென்டில் உள்ள, உலகப் புகழ் பெற்ற, "பிக் பென்' கட்டிடத்துக்கு, ராணி எலிசபெத்தின் பெயர், நேற்று, சூட்டப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஜான் பெர்கோ, ராணி எலிசபெத் பெயர் பொறித்த பலகையை திறந்து வைத்தார்.
உலகப் புகழ் பெயர் பெற்ற, இந்த மணி கூண்டு கட்டிடம், கடந்த, 1858ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நான்கு புறமும், நேரத்தை காட்டும் வகையில் அமைந்தது. இதில் உள்ள மணி, 13 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்டது.
கட்டிடத்தின் மொத்த உயரம் 315 அடி. இது 200 அடி வரை செங்கல்லால் கட்டப்பட்டது. மணல் நிறத்திலான, சுண்ணாம்புக்கல் மேற்புறம் பூச்சு வேலை செய்யப்பட்டது.
http://www.thedipaar...ws.php?id=51971
லண்டனில் உள்ள, உலகப் புகழ் பெற்ற மணிக்கூண்டு கட்டிடமான, "பிக் பென்'னுக்கு அரசி, எலிசபெத் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Started by
யாயினி
, Sep 14 2012 10:16 AM
1 reply to this topic
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]

















