Jump to content


Tamil Star News
Photo

iPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா!


  • Please log in to reply
1 reply to this topic

#1 வினவு

வினவு

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 374 posts
  • Gender:Male
  • Location:தமிழ் நாடு

Posted 14 September 2012 - 07:17 AM

iPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா!

ப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஐஃபோன்5 உற்பத்தியில் வேலை செய்யுமாறு சீன மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மறுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் பெறத் தேவையான மதிப்பெண்கள் மறுக்கப்படும் என்று அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐஃபோன் கருவிகளை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்காக $210 மில்லியன் (சுமார் 1,200கோடி ரூபாய்) முதலீடு செய்து சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் ஹூய்ஆன் நகரில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதியரக ஐஃபோன்5 சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்க வேண்டுமானால், அமெரிக்க பரிசு பொருட்களின் காலமான கிருஸ்துமசை ஒட்டி அதை சந்தைப்படுத்த வேண்டும். அதனால் செப்டம்பர் 21 அன்று புதிய ரக ஐஃபோன் கருவிகளின் விற்பனையை ஆரம்பிக்க ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக உள்ளது.

இதனால் ‘பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளதாகவும், வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் குறைவாக இருப்பதாகவும், கோடை விடுமுறை பணிகளை முடித்து விட்டு பலர் விலகியதால் வேலை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை அதிமாகியிருப்பதாகவும்’ பெயர் வெளியிட விரும்பாத பாக்ஸ்கான் தொழிற்சாலையின் மனிதவளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐபோன் சந்தை தேவையை பூர்த்தி செய்யுமளவு பாக்ஸ்கானில் போதுமான தொழிலாளர்கள் இல்லாததால் மாணவர்களை நவீன கொத்தடிமைகளாக பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது நிறுவனம்.

ஹூய்ஆன் நகரில் பல கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு மாணவர்களை ஐபோன் தயரிப்பு பிரிவில் வேலைக்கு வரச் செய்ய ஏற்பாடு செய்துள்ளது பாக்ஸ்கான். பல மாணவர்கள் பாக்ஸ்கானில் வேலை செய்ய விரும்பா விட்டாலும் ஆசிரியர்களின் வற்புறுத்தலால் வேலைக்கு சென்றுள்ளன்ர். உணவு அறிவியல், நிதிநிர்வாகம் போன்ற துறைகள் உட்பட நகரத்தைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளும் மாணவர்களை பாக்ஸ்கானில் வேலை செய்ய அனுப்பியிருக்கின்றன.
ஹூய்ஆன் திறந்தநிலை பல்கலைக் கழக மாணவி சொங், ‘வேலைக்கு போக மறுத்தால் படிப்பை முடிப்பதற்கு தேவையான மதிப்பெண்கள் கிடைக்காது’ என்றார். அவரது பல்கலைக் கழகம் மட்டும் 3,000 மாணவர்களை பாக்ஸ்கானுக்கு அனுப்பியிருந்தது.

மாணவர்களுக்கு 1,550 யுவான் ($244) மாதச் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. ‘ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் வேலை, இலக்கை முடிக்கா விட்டால் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும்’ என்று முறையான தொழிலாளர்களை போல வேலை வாங்கப்பட்டுள்ளனர் அந்த மாணவர்கள். ‘மாணவர்கள் பழகுனர்களாக வேலைக்கு போகலாம் என்று சீன சட்டம் சொன்னாலும் வழிகாட்டி யாரும் உடன் இல்லாமல் குறைந்தது 8 மணி நேர வேலை செய்வது இந்த சட்டத்திற்குட்படாது’ என்கிறார் யூ என்ற வழக்கறிஞர்.
பாக்ஸ்கானின் சட்ட விரோத செயலைப் பற்றிய விரிவான கட்டுரை சீனா டெய்லி பத்திரிகையில் வந்தவுடன் அவசரமாக சீன தொழிலாளர் நல வாரியம் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டது பாக்ஸ்கான். சீன தொழிலாளர் நல கமிட்டி உறுப்பினர்கள் நடத்திய சோதனையில் ஒரு மாணவர்கூட தொழிற்சாலையில் வேலை செய்யவில்லை என்று அந்த அறிக்கை தெரிவிப்பதாக பாக்ஸ்கான் மார் தட்டியதுது.

ஆனால், பாக்ஸ்கான் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் ‘மாணவர்கள் தொழில்நுட்பத்தையும், கார்ப்ரெட் வேலை கலாச்சரத்தையும் கற்கவே தங்கள் நிறுவனம் உதவியதாகவும் மாணவர்களை கட்டாயப் படுத்தவில்லையென்றும் மாணவர்களுக்கு விருப்பமில்லை என்றால், வேலைக்கு வர வேண்டாம்’ என்றும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் தென் சீனாவில் இருக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 16 முதல் 18 மணி நேர வேலை, குறைந்த கூலி, இரவு பகல் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற சூழலில் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு சமூகத்தை சுரண்டும் மனிதத் தன்மையற்ற முதலாளிகளை எதிர்த்து போராடுவதற்கு சீன இளைஞர்கள் மாவோ தலைமையில் இருந்த அன்றைய கம்யூனிசக் கட்சியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தக் கொத்தடிமைக்கு துணை போகும் இன்றைய போலிக் கம்யூனிஸ்ட்டுகளை முறியடிக்க முடியும்.

தொடர்புடைய பதிவுகள்:Tags: ஃபாக்ஸ்கான், அமெரிக்கா, அரசியல், ஆப்பிள், ஆப்பிள் நிறுவனம், உலக செய்தி, ஐ போன் 5, சீனத் தொழிலாளர்கள், சீனா, சுரண்டல், தொழிலாளிகள், பொருளாதாரம், மாக் புக், ஸ்டீவ் ஜாப்ஸ், ஹூய்ஆன்

Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 14 September 2012 - 10:39 AM

சீன சோஷலிச அரசு உண்மையில் மக்களின் நலத்தை விரும்பினால் பொக்ச்கோம் உட்பட்ட அனைத்து மேற்குலக நுகர்வோர் தயாரிப்புக்களையும் நிறுத்தவேண்டும்.

இல்லை பணம் சம்பாதிக்க விருப்பம் என்றால் இவ்வாறான 'அடக்குமுறைகளை' தவிர்க்கமுடியாது.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]