Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .
Posted 13 September 2012 - 10:26 PM
அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது கடந்த ஆண்டு மே மாதம் 1-ந்தேதி அமெரிக்க படைகளால் சுட்டு கொல்லப்பட்டார். அபோதாபாத்தில் தங்கியிருந்த அவரை அமெரிக்க படைகள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக நோ ஈசி டே என்ற புத்தகத்தை ராணுவ அதிகாரி மாட்பிசோநட் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ஹெலிகாப்டர் எங்கிருந்து புறப்பட்டு அபோதாபாத்தை சென்றடைந்தது என்ற விவரத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலலாபாத்திலிருந்து புறப்பட்டு இந்தியா வழியாக பாகிஸ்தானின் கிழக்கு பகுதிக்குள் நுழைந்து அபோதாபாத் சென்றடைந்ததாக கூறியுள்ளார். இந்தியா வழியாக வெளிநாட்டு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதாக இருந்தால் அதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் பறக்கும் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தும். எனவே அமெரிக்கா முன்கூட்டியே இந்தியாவுக்கு தெரிவித்துவிட்டுதான், ஹெலிகாப்டர்களை இயக்கி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே பின்லேடனை வேட்டையாடபோவது முன்கூட்டியே இந்தியாவிற்கு தெரிந்திருக்கும் என்று கருத்து வெளியாகி உள்ளது. இதுபற்றி இந்தியா தரப்பில் கேட்டபோது இது அனுமானமான தகவல். இதற்கு பதில் சொல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.co...&language=tamil
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!!
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]