Jump to content


Orumanam
Photo

யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் அவதானிப்பு நிலையம்!


 • Please log in to reply
12 replies to this topic

#1 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,691 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 12 September 2012 - 05:41 AM

யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் அவதானிப்பு நிலையம்!
சிறீலங்கா | ADMIN | SEPTEMBER 12, 2012 AT 08:43

இந்தியாவின் பாதுகாப்பு நகர்வுகளை ஒட்டுக்கேட்பதற்காக பாகிஸ்தான் யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையம் ஒன்றை அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் தெ பயனீர் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது
இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளையும் தொலைதொடர்புகளையும் ஒட்டுக்கேட்பதற்காகவே இந்த நிலையத்தை பாகிஸ்தானிய படையினர் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ளதாக இ;ந்திய புலனாய்வுப்பிரிவான ரோ சந்தேகம் வெளியிட்டுள்ளது
கடந்த மூன்று நான்கு மாதங்களாக பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை அதிகப்படு;த்தியுள்ளது
இதன்போதே அந்தப்புலனாய்வுப்பிரிவு யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்கேட்டல் நிலையத்தை அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வுப்பிரிவு சந்தேகம் கொண்டுள்ளது
ரோவின் இந்த விசாரணை அறிக்கையை அடுத்து நேற்று செவ்வாய்கிழமை புதுடில்லியில் கூடிய இந்திய படைத்தரப்பு உயரதிகாரிகள், இந்த விடயத்தை இலங்கையின் உயர்மட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர்
பாகிஸ்தானின் இந்த நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறி;த்து இலங்கை அதிகாரிகள் விசாரணையை நடத்தவேண்டும் என்று கோருவதென்று இந்த சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டது
அத்துடன் ஒரு நாட்டுக்கு எதிராக இன்னும் ஒருநாட்டின் எல்லையை பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது விமர்சனம் முன்வைக்கப்பட்டது
சீனா, ஏற்கனவே அந்தமான் தீவுகளின் கப்பல் நகர்வுகளை அவதானிப்பதற்காக கொக்கோ தீவுகளில் இவ்வாறான அவதானிப்பு நிலையத்தை அமைத்திருந்ததையும் இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்
இந்தநிலையில் இந்திய படைகளின் நகர்வுகளை அவதானிப்பதற்காக பாகிஸ்தானின் புலனாய்வுப்பிரிவினர், யாழ்ப்பாணத்தி;ல் உள்ள இ;;ந்திய கரையோரப்பகுதிகளிலேயே அவதானிப்பு நிலையத்தை அமைத்துள்ளதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்
இதன் மூலம், விசாகப்பட்டிணத்தில் உள்ள ரஸ்யாவின் ஐஎன்எஸ் சக்ரா அணு நீர்மூழ்கி கப்பல் மற்றும் இந்தியாவின் ஏனைய நீர்மூழ்கிக்கப்பல்களின் நகர்வுகளை அவதானிக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொள்கிறது
எனவே இதனை அதியுயர் மட்ட எச்சரிக்கையாக எடு;த்து நடவடிக்கை மேற்கொள்வது என்று இந்திய பாதுகாப்பு தரப்பினர் முடிவெடு;த்துள்ளனர்
http://thaaitamil.com/?p=31896
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

ninaivu-illam

#2 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,877 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 12 September 2012 - 06:15 AM

ஆரம்பத்திலேயே... இந்தியா, ஈழத்தமிழர் பக்கம் நின்றிருந்தால்... இவ்வளவு தலையிடியும், ஏற்பட்டிருக்காது.
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#3 யாழ்அன்பு

யாழ்அன்பு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,420 posts
 • Gender:Male
 • Location:Switzerland
 • Interests:இசை,அரசியல்
  (தமிழினத் துரோகிகளை கருவறுப்போம்)

Posted 12 September 2012 - 10:56 AM

புலிகனின் அருமை இப்ப ஆவது இந்தியாவிற்கு விளங்கட்டும். புலிகள் ஆட்சியில் ஒரு பாகிஸ்தானி ஆவது வந்தான வடக்கு பக்கம்?

#4 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 12 September 2012 - 11:27 AM

அந்தமான் தீவில் இந்திய கடல்படை பெரிய அவதானிப்பு நிலையத்தை நிறுவியுள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து எதையாவது செய்யவேண்டிய தேவையை அது உருவாக்கி விட்டது.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 Aasaan

Aasaan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,052 posts
 • Gender:Male
 • Interests:சமூக சேவை

Posted 12 September 2012 - 11:38 AM

ஹிந்திய - மலையாள காட்டுமிராண்டி கூட்டின் தமிழின விரோத செயற்பாடுகள் இத்தகைய சூழலை மேலும் மேலும் அதிகரிக்கும்.

பாகிஸ்தானை ஆதரிக்கிறார்களோ இல்லையோ, தமிழின படுகொலையை முன்னின்று நடாத்திய காட்டுமிராண்டிக் கூட்டினை ஆதரிக்கும் நிலையில் தமிழர் நிச்சயம் இல்லை.

வினை விதைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அறுவடை செய்தே ஆக வேண்டும்!
எம் இனத்தவரின் மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்து, தவறு என நினைப்பதை பண்புடன் சுட்டிக்காட்டி, எம் இனத்தவர் அனைவரையும் அரவணைத்து, ஓரணியில் திரட்டி, இத் தரணியில் ஓர் இனத்துக்கு இருக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்போம்.

இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!

#6 Iraivan

Iraivan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,881 posts
 • Gender:Male
 • Location:இறைவன்
 • Interests:எல்லாவற்றிலும் கொஞ்சம், கொஞ்சம்.

Posted 13 September 2012 - 06:12 AM

பங்களாதேஷ் அடுத்த கண்காணிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும்.
இறைவன்

#7 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 15,999 posts
 • Gender:Male
 • Location:கனடா
 • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 13 September 2012 - 11:06 AM

தமிழக மீனவர்களுக்கு இந்தியாவால் கொடுக்க முடியாத பாதுகாப்பை பாகிஸ்தான் கொடுக்க நினைக்குதாம்.. :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#8 பகலவன்

பகலவன்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 945 posts
 • Gender:Male
 • Location:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு
 • Interests:கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,ஒரே மகன்.

Posted 13 September 2012 - 11:29 AM

ISI இல் சேரும் விண்ணப்ப படிவம், யாழ்பாணத்தில் எங்கே விற்கிறது என்று கேட்டு சொல்லுங்கோப்பா. நானும் சேர வேணும்.
பூபாலசிங்கம் புத்தக கடையில கேட்டு பார்த்தனான், அவை வழக்கமா சொல்லுற மாதிரி,

இன்னும்வரவில்லை. வந்தால் எங்களுக்கு தான் முதல்ல வரும் என்று சொன்னவை

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின்  தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "


#9 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,691 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 13 September 2012 - 01:34 PM

யாழ்பாணத்திலிருந்து இந்தியகடற்படையின் தகவல் பரிமாற்றத்தை ஒட்டுக்கேட்கும் பாகிஸ்தான் - RAW எச்சரிக்கை

13 செப்டம்பர் 2012

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவின் கிழக்குக் கடலோர கடற்படை தளமான விசாகப்பட்டினத்தை இலக்கு வைத்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ கண்காணிப்பு நிலையம் அமைக்க மகிந்த ராஜபக்ஸ அனுமதி கொடுத்திருக்கிறார்.

மத்திய அரசுக்கு அண்மையில் வெளிநாட்டுக்க்கான உளவு அமைப்பான 'ரோ' அமைப்பு அனுப்பிய சுறறிக்கையில், யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதாக எச்சரித்திருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய கடற்படைத் தளமான அந்தமான் தீவுகளை ஏற்கெனவே பர்மாவின் கொக்கோ தீவில் இருந்தும் வங்கதேசத்தின் சிட்டகாங்க் துறைமுகத்தில் இருந்தும் சீனா கண்காணித்து வருகிறது.

வங்கக் கடலில் இந்தியா அமைத்திருக்கும் மற்றொரு முக்கிய கடற்படை தளம் விசாகப்பட்டினம். இங்குதான் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நடமாட்ட்ம் அதிகம். தற்போது யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைக்கும் கண்காணிப்பு நிலையம் இந்த விசாகப்பட்டினம் கடற்படை தளத்தை இலக்கு வைத்திருக்கிறது, இந்த நிலையத்தில் இருந்து இந்திய கடற்படையினரின் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து ஒட்டுக் கேட்கவும் முடியுமாம்.

டெல்லியில் நேற்று முன் தினம் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்புத் துறை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக இலங்கை அரசை இந்தியா எச்சரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
http://www.globaltam...IN/article.aspx
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#10 காரணிகன்

காரணிகன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,987 posts
 • Gender:Male

Posted 13 September 2012 - 01:56 PM

தமிழ் ஈழம்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பானது என தமிழர்தரப்பு சொல்லியவடயத்தை
விளங்கிக்கொள்ளாத கிந்தியாவுக்கு ஆதாரத்துடன் விளக்கிச் சொல்கிறது பக்கத்த நாடு

#11 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 30,600 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 13 September 2012 - 02:14 PM

இந்தியாவை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#12 மல்லையூரன்

மல்லையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 10,827 posts
 • Gender:Male

Posted 13 September 2012 - 02:58 PM

இலங்கையில் ஜனநாயகத்திற்கான பற்றாக்குறையை தான் காணவில்லை என பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கூறியுள்ளார்.கிந்திய திருடர் கூட்டம் தமிழ்மக்களை பொறுத்தவரை நிம்மதியாக தூங்கும் பிள்ளையையும் கிள்ளிவிட்டு வந்துதான் தொட்டிலை ஆட்டுகிறார்கள்.

ரோவின் இந்த விசாரணை அறிக்கையை அடுத்து நேற்று செவ்வாய்கிழமை புதுடில்லியில் கூடிய இந்திய படைத்தரப்பு உயரதிகாரிகள், இந்த விடயத்தை இலங்கையின் உயர்மட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர்சிவசங்கர் மேனனுக்கு இன்னொரு வரவேற்பு. அவ்வளவுதானே. பல சீனா மந்திரிகள், இராணுவ அதிகாரிகள் என்று இலங்கை வரவேற்புகளை நிகழ்த்திவிட்டது. அவற்றில் மலையாளிகளுக்கு கொடுப்பதற்காக சீனாவால் கொடுக்கப்பட்டிருக்கும் லஞ்சப் பணத்தை வந்து வாங்கிக்கொண்டு போக துடிக்கிறார்கள்.
"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.

#13 கிளியவன்

கிளியவன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,756 posts
 • Gender:Male

Posted 13 September 2012 - 04:26 PM

ஆப்பு மேல ஆப்பு வந்து எமமைச் சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் சேனியாவைச் சேரும்.
அழிக இந்தியா. எழுக தமி்ழ் ஈழம்.

தமிழன் சிங்களவனுக்காக போரடுவதை நிறுத்தி.தமிழன் ஈழத்தமிழனாய் ஒன்றிணைந்து தமிழ் ஈழத்திற்காக போராடினால் தமிழீழம் வெகு தொலைவில் இல்லை
நட்புடன் கிளியவன்.

 

detailsr.gif

 

 

 யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]