மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட ஆனந்தபுரத்தில் மனித எலும்புக் கூடுகளும் எரியுண்ட மனித எச்சங்களும்..
12 செப்டம்பர் 2012
மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் மனித எலும்புக் கூடுகளும் எரியுண்ட நிலையில் மனித எச்சங்களும் பரவலாகக் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாகக் காணப்படும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆனந்தபுரம் பகுதியின் பல இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்கள் இதனை உறுதிப்படுத்தினர் அத்துடன் பல இடங்களில் எரியூட்டப்பட்ட நிலையிலும் எலும்புகள், மனித எச்சங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனந்தபுரம் தமிழ் வித்தியாலத்தின் சகல கட்டடங்களும் அழித்து கற்குவியல்களாக காணப்படுகின்றன. அந்தக் கட்டட இடிபாடுகளுக்குள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்படுகின்றன. அத்துடன் பாடசாலை கட்டடத்தின் இரு இடங்களில் சிதைந்தும் உருக்குலைந்தும் காணப்பட்ட சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் உள்ள காணியொன்றில் குடும்பம் ஒன்று மீளக் குடியேறச்சென்ற போது எரியூட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் குவியலாக காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
http://www.globaltam...IN/article.aspx
மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட ஆனந்தபுரத்தில் மனித எலும்புக் கூடுகளும் எரியுண்ட மனித எச்சங்களும்..
Started by
கறுப்பி
, Sep 12 2012 05:36 AM
2 replies to this topic
#1
Posted 12 September 2012 - 05:36 AM
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#2
Posted 12 September 2012 - 08:22 AM
மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் மனித எலும்புக் கூடுகளும் எரியுண்ட மனித எச்சங்களும் பரவலாக இன்னமும் காணப்படுவதாக மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாகக் காணப்படும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆனந்தபுரம் பகுதியின் பல இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன.
இந்தப் பகுதியில் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்கள் இதனை உறுதிப்படுத்தினர் அத்துடன் பல இடங்களில் எரியூட்டப்பட்ட நிலையிலும் எலும்புகள், மனித எச்சங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனந்தபுரம் தமிழ் வித்தியாலத்தின் சகல கட்டடங்களும் அழித்து கற்குவியல்களாக காணப்படுகின்றன. அந்தக் கட்டட இடிபாடுகளுக்குள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்படுகின்றன. அத்துடன் பாடசாலை கட்டடத்தின் இரு இடங்களில் சிதைந்தும் உருக்குலைந்தும் காணப்பட்ட சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டட இடிபாடுகளுக்குள்ளும், பதுங்குழிகளுக்குள்ளும் புதையுண்ட நிலையில் சடலங்களும் எச்சங்களும் காணப்படுவதாக அங்கு மீளக் குடியமர்ந்த மக்கள் தெரிவித்தனர். அங்கு மனித எச்சங்கள் காணப்படுவதால் மீளக் குடியமர்ந்துள்ள மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
http://www.seithy.co...&language=tamil
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!!
#3
Posted 12 September 2012 - 11:28 AM
தாயகத்தின் ஊடகங்கள் இவற்றை ஆவணப்படுத்தினால் நல்லது..!
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














