Jump to content


Tamil Star News
Photo

அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது


  • Please log in to reply
6 replies to this topic

#1 கறுப்பி

கறுப்பி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 26,407 posts
  • Gender:Not Telling
  • Location:London

Posted 11 September 2012 - 05:44 AM

அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

11 செப்டம்பர் 2012
Posted Image

அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பிரேரணை இந்த வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளக ரீதியான புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் என்பவற்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தொடர்பான இந்தப் பிரேரணை சில நேரங்களில் நிறைவேற்றப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

புனர்வாழ்வு, புனரமைப்பு, இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், வடக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போன்ற விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றமடைந்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், இலங்கையில் ஆணைக்குழுக்கள் நிறுவப்படுதலும் அதன் மூலம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமையும் மிக நீண்ட காலமாக தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதனை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அரசாங்கப் படையினர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கள் முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படக் கூடிய பின்னணியை அரசாங்கம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் மூலம் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உத்தேச தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.globaltam...IN/article.aspx
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 11 September 2012 - 10:22 AM

நேற்று கோசவா ஒரு முழு சுதந்திர நாடாக அமெரிக்க தலைமயிலான மேற்கு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. அமெரிக்காவால் மட்டுமே ஒரு நிலையான நியாயமான தீர்வை இலங்கை தீவில் கொண்டுவரலாம்.
  • யாழ்அன்பு likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 Aasaan

Aasaan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,052 posts
  • Gender:Male
  • Interests:சமூக சேவை

Posted 11 September 2012 - 02:35 PM

நேற்று கோசவா ஒரு முழு சுதந்திர நாடாக அமெரிக்க தலைமயிலான மேற்கு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. அமெரிக்காவால் மட்டுமே ஒரு நிலையான நியாயமான தீர்வை இலங்கை தீவில் கொண்டுவரலாம்.


இந்த விடயத்தில் தெற்காசிய காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளை முற்றிலும் அந்நியப்படுத்தும் வரை அமெரிக்காவின் முயற்சி பயனற்றதாகவே இருக்கும்!
  • ஆராவமுதன் likes this
எம் இனத்தவரின் மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்து, தவறு என நினைப்பதை பண்புடன் சுட்டிக்காட்டி, எம் இனத்தவர் அனைவரையும் அரவணைத்து, ஓரணியில் திரட்டி, இத் தரணியில் ஓர் இனத்துக்கு இருக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்போம்.

இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!

#4 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 11 September 2012 - 07:48 PM


அணைச்சிட்டு வாழந்ததான் வாழ்கை இல்ல, நெனச்சிட்டு வாழந்தாலும் வாழ்க்கைதான்.



தயவு செய்து இந்த புகைப்படத்தை பகிர்ந்துகொள்ளவும் .....

வரும் 26 ஜெனீவாவில் UNO கூட்டத்தில் ஐக்கிய அமெரிக்க இலங்கை மீதான யுத்த குற்றங்கள் தாக்கல் செய்ய போகிறது.....

இது மேலும் நடவடிக்கை எடுக்க உதவும்.....


Posted Image


முகநூல் ஊடாக

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 யாழ்அன்பு

யாழ்அன்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,181 posts
  • Gender:Male
  • Location:Switzerland
  • Interests:Music

Posted 12 September 2012 - 11:19 AM

ஆசிய பயங்கர வாதிகளிடம் இருந்து தமிழர்களை ஐநாவோ அமெரிக்காவோ காப்பாத்த வேண்டும்

#6 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 12 September 2012 - 05:10 PM

சிங்களம் மீது சர்வதேச, குறிப்பாக மேற்குலக அழுத்தங்கள் அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளன:( முகநூலில் பதியுங்கள்)

http://www.colombote...hres177-SUS.pdf

Edited by akootha, 12 September 2012 - 05:11 PM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#7 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 12 September 2012 - 06:04 PM

முள்ளிவாய்க்கால் படங்கள் (கூகிள்)

Posted Image

Posted Image

http://groundviews.o...y-google-earth/

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]