Jump to content


Photo

மன்னார் மரைக்கார் நகர் கிராமத்தில் உள்ள வீடுகளை கடற்படையினர் தீ வைத்து கொழுத்தினர்.


 • Please log in to reply
2 replies to this topic

#1 chinnavan

chinnavan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,399 posts
 • Gender:Male

Posted 04 September 2012 - 06:38 AM

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறுச்சிக்கட்டி மரைக்கார் நகர் கிராமத்தில் உள்ள மீள்குடியேறியுள்ள முஸ்ஸிம் மக்களின் தற்காலிக கொட்டில்களை கடற்படையினர் எறியூட்டியுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து சென்ற முஸ்ஸிம் மக்கள் மீண்டும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 43 குடும்பங்கள் உள்ள மரைக்கார் நகர் கிராமத்தில் கடற்படையினர் இருந்த நிலையில் அவர்களை வெளியேற்றிய நிலையில் குறித்த மக்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை (3-09-2012) இரவு 8 மணியளவில் கடற்படையினர் குறித்த மக்களுடன் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் அந்த மக்களின் தற்காலிக குடிசைகளுக்கு தீ வைத்து கொழுத்தியுள்ளதோடு பல வீடுகளை உடைத்து கொண்டு சென்றுள்ளனர். தீயில் சுமார் 20 வீடுகள் வரை எரிந்து சம்பலாகியுள்ளது.
தற்போது குறித்த கிராமத்தில் இருந்து மக்களை வெளியே செல்ல கடற்படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என அணைவரும் வீதியில் தஞ்சமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted ImagePosted Image
http://thaaitamil.com/?p=31106

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!
 


#2 மல்லையூரன்

மல்லையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 10,797 posts
 • Gender:Male

Posted 04 September 2012 - 01:58 PM

இது கில்லாடி பதியுதின் சேர்ந்து செய்கிற வேலை. இவன் தமிழ் மக்களில் பழியை போட்டு கிழக்கில் கூட்டமைப்பின் வெற்றியை குழப்ப செய்கிற சதி. இந்த விபரங்களை கூட்டமைப்பு நேரத்திற்கே கிழக்கு மாகாண மக்களுக்கு அறியத்தரவேண்டும்.
"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.

#3 கந்தப்பு

கந்தப்பு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 11,610 posts

Posted 05 September 2012 - 12:03 AM

புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் இலங்கையில் பிறந்த சில மூஸ்லீம் இனத்தவர்கள் அந்த நாடுகளில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பின் போது சிறிலங்காவில் சிங்கள அரசினால் தங்களுக்கு பிரச்சனையில்லை என்று சொல்லிவருகிறார்கள். இனியாவது சிங்களத்தின் கொடுமைகளை சொல்லுவார்களா?
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]