Jump to content


Orumanam
Photo

சந்நிதியில் பிச்சை எடுக்க வைத்த சிங்களம்; புரிந்து நடக்கவேண்டிய நிலையில் தமிழினம்!


 • Please log in to reply
1 reply to this topic

#1 கலையழகன்

கலையழகன்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 358 posts
 • Gender:Male

Posted 01 September 2012 - 09:30 PM

தாயக விடுதலைப் போரின் தாக்கத்தில் இருந்து மீளாத தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு அவர்களை கையறு நிலைக்குத் தள்ளும் செயற்பாட்டில் அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகின்றமை தொடர்பிலான தெளிவினை தமிழ் மக்கள் பெற்றிருக்க வேண்டிய புறச்சூழல் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. வடக்கின் வசந்தம், ஆசியாவின் அதிசயம் என சர்வதேச மட்டத்தில் போலிப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்ற அரசாங்கம் தாயகத்தில் இருக்கின்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்யவில்லை என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற செல்லச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழா நிகழ்வில் நடைபெற்ற அவலத்தினைக் குறிப்பிடலாம்.வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பலநூற்றுக்கண்கான பிச்சைக்காரர்கள் திருவிழாவில் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் கையேந்தியிருந்ததாக தெரியவருகின்றது. இளவயதில் கைகளில் குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்களே அதிகம் பிச்சையெடுத்ததாகவும் வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையிலானவர்கள் குறித்த ஆலயத்தில் பிச்சை எடுத்ததை தாம் காணவில்லை என்றும் யாழ்ப்பாணத்தில் முதியவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை அவ்வாறு பிச்சை எடுத்தவர்களில் கண்களை இழந்தவர்கள், கை, கால்களை இழந்தவர்கள் என போரின் வடுக்களைச் சுமந்திருந்தவர்களே பெருமளவில் நின்றிருந்ததாக தெரியவந்திருக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்பில் இருந்து கணவன் மனைவி இருவர் பிச்சை எடுப்பதற்காக வந்திருந்ததாகவும் அவர்களில் கணவன் போரில் தனது இரண்டு கண்களை இழந்திருந்ததாகவும் தமக்கு வேறு வழியில்லாமல் பிச்சை எடுக்க வந்ததாகவும் அந்த இளம் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்திருக்கின்றார்.

போருக்கு பின்னான அபிவிருத்தி மக்களின் வாழ்வியல் மேம்பாடு என்பது பழைய கட்டங்களுக்கு புதிய வர்ணம் தீட்டுவதோ, பாதைகளுக்கு கார்பற் இடுவதோ அல்ல என்பதை அரசாங்கம் மறந்து செயற்படுகின்றதோ அல்லது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக எண்ணிச் செயற்படுகின்றதோ என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை. தமிழினத்தின் மீதான இனச் சுத்திகரிப்புப் போரின் போது விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விதவைகள் தமது பிள்ளைகளின் ஒரு நேர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவோ, கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உதவி செய்யவோ முடிந்த அளவிற்கு வாழ்க்கையோடு போராடவேண்டிய இக்கட்டான நிலை தாயகத்தில் காணப்படுகின்றது. கணவனை இழந்த பெண்களை சமூகம் ஒரு புறம் ஒதுக்கிக்கொள்ள வறுமை மற்றொரு புறம் அவர்களை விரக்தியின் எல்லைவரை தள்ளிச் செல்கின்றது. மக்களை மீட்டெத்திருக்கிறோம், மீள்குடியேற்றம் செய்துவிட்டோம் என்று அடிக்கடி அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை மேம்படுத்த முடியுமா? இதுவரையில் எந்த விதமான ஆரோக்கியமான செயற்றிட்டத்தை முன்வைத்திருக்கிறார்கள்? என்பதை அரச தரப்பினர் வெளிப்படுத்த முடியுமா? போர் மூலம் அழிக்கப்பட்டவைகளின் எஞ்சியவையை போரின் பின்னர் படைகளின் மூலமும் இரும்பு வியாபாரிகள் மூலமும் முற்றுமுழுதாகச் சுரண்டி எடுத்து ஏப்பமிட்டிருக்கின்றது அரசு.

போர் நடைபெற்ற போது வன்னியில் செயற்பட்ட வங்கிகளில் வைப்பிடப்பட்ட நிதி, அடைவு வைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் அதிகார வர்க்கத்தினால் ஏப்பமிடப்பட்டிருக்கின்றன. வன்னியில் செயற்பட்ட அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் செயற்பட்ட தமிழீழ வைப்பகம், கிராமிய அபிவிருத்தி வங்கி என்பவற்றின் நகைகள் மற்றும் பணங்களும் அரச படைகளாலேயே கையகப்படுத்தப்பட்டிருந்தன. இன்றுவரையில் அவற்றினை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் எந்த முனைப்புக்களையும் அதிகாரத் தரப்பு மேற்கொள்ளவில்லை.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புதற்காக ஆரம்பத்தில் இருந்தே செயற்பட வேண்டிய நிலையே உள்ளது. இதன் ஒரு கட்டம் தான் கையறு நிலையில் இருக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் நிலையினை எதிர்கொண்டிருக்கின்றமையாகும். இதன் அடுத்த கட்டமாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு மோகத்தினை ஏற்படுத்தி அவர்களையும் நடுத்தெருவிற்குக் கொண்டு செல்லும் செயற்பாட்டினையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. குறைந்த செலவில் அவுஸ்திரேலியா பயணம் என்ற பிரமாண்ட கற்பனை அனைத்தையும் இழந்த மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றது. மீண்டும் வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு வெளிநாடு தான் சரியான வழி என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதனால் தமது மூதாதையருக்குச் சொந்தமான வீட்டு மனை, காணிகளை அறாவிலைக்கு விற்கின்றனர். சொந்தங்கள் பந்தங்கள் எவருக்கும் சொல்லிக்கொள்ளாமல் நள்ளிரவில் புறப்பட்டு படகில் ஏறும் போதோ, கடலில் வைத்தோ படகில் ஏறு முன்பாகவோ கைது செய்யப்படுகிறார்கள். அவுஸ்திரேலியா செல்ல முற்படுபவர்களிடம் காணிகளை விலை கொடுத்து வாங்கும் நடவடிக்கைகளில் சிங்களவர்களும் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.

தாயகத்தில் இருந்து மக்களை அவுஸ்திரேலியா அனுப்பும் சதி நடவடிக்கையின் பின்னணியில் மஹிந்தராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவே ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை இந்த இடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது. போர்க்காலத்தில் இருந்த நிலையிமையிலும் பார்க்க திடீரென்று அதிக அளவிலான அவுஸ்திரேலியா நோக்கிய பயணங்கள் இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் முன்னெடுக்கப்படுகின்ற நிலையினை வைத்துப் பார்க்கும் போது இயல்பாகவே இந்த விடயங்கள் தொடர்பில் புரிந்துகொள்ளமுடியும். அதேவேளை அந்த முயற்சிகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து மக்களே கைது செய்யப்படுகின்றனரே தவிர மிகத் திறமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகின்ற இலங்கைப் புலனாய்வு அமைப்பினால் குறித்த ஆட்கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்த தகவல்களை இதுவரையில் ஏன் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது இலங்கை அரசாங்கம். அப்பாவிகளை மீண்டும் மீண்டும் அவலத்தில் தள்ளுவதன் மூலம் எதனைச் சாதிக்க முற்படுகிறது சிங்களம்?

இலங்கை அரசாங்கம் இவ்வாறான திட்டமிட்ட சதி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் தெளிவான புரிதலினை கொண்டிருக்கவேண்டும். அனைத்தையும் தொலைத்து எஞ்சியவையையும் தொலைத்து சிறைக்கம்பிகளுக்குள் காலங்களைக் கடத்த வேண்டிய நிலையினை எவரும் விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடாது. அரசாங்கமே திட்டமிட்டு ஏற்பாடுகளை மேற்கொண்டு தனது கடற்படை மற்றும் பொலிஸ் மூலமே மக்களை கைது செய்யும் நடவடிக்கையினையும் மேற்கொள்கின்றது. இதனைவிடவும் இலங்கைக் கடற்பரப்பில் இருந்து வெளியேறினாலும் கூட ஆழ்கடல் பயணங்களின் போது சந்திக்கின்ற அவலங்கள் என்பவை அளவிடமுடியாதவை என்பதையும் அப்பாவி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். எஞ்சியிருக்கும் வாழ்க்கைப் பயணத்தினை எதிர்கொண்டு மீண்டும் எம் இனம் நிமிர்ந்து நிற்பதற்கு முடிந்த அளவிற்கு போராடியே ஆகவேண்டி நிர்பந்தம் எம்மினத்தின் மீது திணக்கப்பட்டிருக்கின்றது. மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருப்பதால் எஞ்சியிருக்கின்ற வாழ்க்கையினையே தொலைக்க முடியுமே தவிர மாற்றீடாக வசந்தம் வந்துவிடப் போவதில்லை.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்
http://tamilleader.c...1-21-04-57.html
 • akootha likes this

“பொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடத்தப்படுகின்ற சிங்களத்தின் விசமத்தனமான கருத்துப் போரை முறியடிப்பதே இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் முக்கியமான சவாலாகும்!. எமது இயக்கத்தின் வெகுசன ஊடகங்களே இந்தப் பெரும் பணியைச் செய்ய வேண்டும்!”

-தமிழீழத் தேசியத் தலைவர்

 

BlackHeader_v4.png


ninaivu-illam

#2 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 02 September 2012 - 01:48 AM

இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது இலங்கை அரசாங்கம். அப்பாவிகளை மீண்டும் மீண்டும் அவலத்தில் தள்ளுவதன் மூலம் எதனைச் சாதிக்க முற்படுகிறது சிங்களம்?

இலங்கை அரசாங்கம் இவ்வாறான திட்டமிட்ட சதி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் தெளிவான புரிதலினை கொண்டிருக்கவேண்டும்.விடுதலைப்புலிகளுக்கு பின்னரான தமிழர்களை சிங்களம் வெற்றி கொள்ளப்படவர்களாகவே பார்க்கின்றது. சர்வதேசம் தந்த ஆதரவை அது தமிழின அழிப்பிற்கு தந்த அங்கீகாரமாக இன்றுவரை பார்கின்றது.

தாயகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள பிரச்சாரத்தின் பிடியில் அகப்பட்டு 'ஆகா அங்கு போய் வாருங்கள் பாருங்கள்' என கூச்சலிடுபவர்களும் கூட புரியவேண்டும்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]