Jump to content


Tamil Star News
Photo

உலகின் 65 நாடுகளில் இலங்கை அகதிகள் - மீள்குடியேற்றத்துறை


  • Please log in to reply
No replies to this topic

#1 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,151 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 01 September 2012 - 02:33 PM

உலகின் 65 நாடுகளில் இலங்கை அகதிகள் - மீள்குடியேற்றத்துறை


தமிழகத்திலும், இந்தியாவின் ஏனைய சில பகுதிகளிலும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் விருப்பத்துடன் இருப்பதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசின் புள்ளி விபரங்களுக்கு அமைய தென்னிந்தியாவின் தமிழகத்தில் மாத்திரம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதில் 68 பேர் வரை இந்திய மத்திய அரசினால் நிர்வகிக்கப்படும் 112 முகாம்களில் தங்கியுள்ளனர். 32 ஆயிரம் பேர் வரை வெளிமாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் நாடுதிரும்பிய இலங்கை அதிகளின் எண்ணிக்கை 5 ஆயிரம் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையகம் தகவல் வெளியிட்டுள்ளது.
உலகின் 65 நாடுகளில் இலங்கை அகதிகள் சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் இருப்பதாக அந்த ஆணையகத்தின் புள்ளிவிபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]