Sep 1, 2012
யாழ்குடாவில் நான்கு தீவுகளுக்கு 2013 இறுதியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை!
கொரிய அரசாங்கத்தின் உதவியுடன் வடபகுதியிலுள்ள நான்கு தீவுகளுக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் மூலம் குறித்து பிரதேசங்களில் வாழ்கின்ற சுமார் இரண்டாயிரத்து 900க்கும் அதிகமான மக்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மண்டைத்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய நான்கு தீவுகளுக்கும் 2013ஆம் ஆண்டின் இறுதியில் மின்சாரம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.pathivu.c...ticle_full.aspx















